Wednesday, 3 September 2014

கனவுகளின் நிலைகள்





முதல் நிலையின்போது தூக்கம் கண்ணை சொக்கும். அதாவது உறங்கு வீர்கள்.. திடீரென விழித்துப் பார்ப்பீர்கள். இது முதலாவது நிலை.

இரண்டாவது நிலையின்போது நன்றாக ஆழ்ந்து உறங்கி விடுவீர்கள். மூடிய இமைகளுக்குள் விழிகள் உருண்டு கொண்டிருக்கும். இந்த நிலையில்தான் உங்களுக்கு கனவுகள் வந்துகொண்டி ருக்கும். அதாவது கண்ணில் காட்சிகள் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும்.
மூன்றாம் நிலை உறக்கத்தின்போது பக்கத்தில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல் தூங்கிக்கொண்டிருப்பீர்கள்.

நான்காம் நிலை மிக ஆழ்ந்த உறக்கம். இந்த உறக்கத்தின் போதுதான் கனவுகள் மாறி மாறிவரும். அதாவது கனவுலகில் முழுவதுமாக திளைத்திருப்பீர்கள்.

ஆழ்ந்த உறக்கத்தின் போதும், கண் அசைவு தூக்கத்தின் போதும்தான் உறுப்புகள் புத்துணர்ச்சி பெறுகின்றன. மூளை வளர்ச்சியடைவது இந்த நேரத்தில் தான். உடலுக்குள் செல்களின் வளர்ச்சியின் போது தேவையற்ற செல்களை நீக்கி புதுச்செல்களை உருவாக்குவதும் செல்களை சீர் செய்வதும் இந்த நேரத்தில்தான்.

தூக்கத்தின்போது வேகமாக கண் அசைந்தால் கனவு காண்பதாகப்பொருள் என்று சொன்னேன் அல்லவா?
குழந்தைகள் தூக்கத்தில் மூன்றில் ஒரு பங்கு கண்களை அசைத்து தூங்குவார்கள். இது அவர்கள் வளர வளர சரியாகிவிடும்.

ஒரு இரவில் ஒரே ஒரு கனவுதான் காண்போமா என்றால், இல்லை. பல முறை கனவு காண்போம். இந்தக் கனவுகள் நான்கு நிமிடம் முதல் சுமார் ஒன்னரை மணி நேரம்வரை கூட நீடிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இப்படிப்பட்ட கனவுகள் மன நிலைகளாலும் வருகின்றன.

மனம் என்பது மூளையிலா? இதயத்திலா என்று விவாதிக்காதீர்கள். மனம் இதயத்தில் இல்லை. அது மூளையில் உள்ளது. இது மூளையின் தனிப்பட்ட பகுதியல்ல. மூளையில் உள்ள பல்வேறு பகுதிகளை கட்டுப்படுத்தும் பகுதிகளின் ஒரு கூட்டுத்தொகுதி அல்லது அமைப்பு தான்மனம். ஆக, எந்தெந்த பகுதிகளின் பணிகள் மூளையில் பதிவு செய்யப்பட்டுள்ளனவோ அவையெல்லாம் விழி நரம்புகளில் அதிர்வுகளாகத் தெரிக்கும். இந்த நேரத்தில்தான் அவை சார்ந்த கனவு கள் வருகின்றன.

மனஇறுக்கம், நோய்கள், கவலை, கோபம், சந்தேகம் போன்ற உணர்வுகளின் வெளிப்பாடுகளும் கனவுகளாக வரும். இந்த கனவுக ளின் மூலம் மன இறுக்கம், மன அழுத்தம், ஆசை, துக்கம், கோபம் அன்பு போன்ற அனைத்துக்கும் வடிகால் ஏற்பட்டு மனம் நிம்மதி பெறுகிறது. தூங்கும் முன்பு குழப்பத்தில் இருந்தவர்கள் விழித்தபின் தெளிவடைவது இதனால் தான்.

நிகழ்ச்சிகள்மட்டுமின்றி உணவு முறைகளும்கூட கனவுகளுக்குக் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஜிரணிக்கப்படாத உணவுகள், கண்ட கண்ட உணவுகளை உண்பதுகூட திகில் கனவுகளுக்குக் காரணம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

சில கனவுகள் பலித்துவிடுகின்றனவே என்பார்கள். பறப்பது போல கனவு கண்டால் சிந்தனையில் பறக்கலாமே தவிர உடலால் பறக்க முடியாது. அதைப் போல கைலாயத்தில் சிவனோடு பேசிக் கொண்டி ருப்பதைப்போல கனவு கண்டால் அந்த இடத்திற்குப் போக முடியாது. கனவு நம் எண்ணத்தின் ஓட்டம், மனதில் ஏற்படும் பிரச் சினைகளின் அறிகுறி என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்.

அடிக்கடி வரும் திகில் கனவுகள் கண்டிப்பாக மனநோயின் விளை வாக இருக்கக்கூடும். மன நல மருத்துவரை அணுகவேண்டும்.
இப்படிப்பட்ட தொல்லைகள் வரக்கூடாது என்பதால்தான் இரவில் அதிகமாக, கண்டதை சாப்பிடாமல் குறைவாக, மித உணவாக சாப்பிட்டு, மனதை இளகு வாக்கி படுக்கச்செல்லவேண்டும் மனதை அமைதியாக வைத்துக்கொண்டு படுக்க வேண்டும். உறங்கும் முன் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள் பெரியோர்.

No comments:

Post a Comment