கோவில் அல்லது துறவிகள் இருக்கும் மடாலயம் செல்கிறோம்;நமது கஷ்டங்கள் தீர அவர்களின் ஆசியை வாங்குகிறோம்;அப்போது நாம் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம்: துறவி/ஆன்மீக குருவின் காலில் விழுந்து வணங்கும்போது நமது கைகளோ,கை விரல்களோ ஒருபோது குருவின்/துறவியின் கால்கள் மீது படவே கூடாது.ஏனெனில்,அவர்களின் ஆத்ம சக்தி அளவற்று இருக்கும்;நாமே சராசரி மனித வாழ்க்கையாக இல்லறவாழ்க்கை வாழ்ந்து வருகிறோம்.நமது கையோ,கைவிரல்களோ அவரது கால்கள் மீது படும்போது அவரது ஆத்மசக்தி நமது உடலுக்குள் உடனே புகுந்துவிடும்;ஆனால்,அது நமக்கு ஏற்புடையதல்ல;%%%%%%
பரிகாரங்களில் பல வகைகள் உண்டு;சில பரிகாரங்களை நாம் மட்டுமே செய்ய வேண்டும்;அவ்வாறு நாம் மட்டுமே செய்தால் மட்டுமே நமது தோஷம் அல்லது கர்மா நம்மை விட்டு நீங்கும்;அதுவும் எப்போது நீங்கும்? அந்த தோஷத்தைப் பற்றி முழுமையாக அறிந்துகொண்டு,அதற்குரிய பரிகாரம் இதுதானா என்பதை உறுதி செய்து கொண்டு,நமது மனப்பூர்வமாகச் செய்ய வேண்டும்;அவ்வாறு செய்தால் மட்டுமே பலன் தரும்.உதாரணமாக,பித்ரு தோஷம் இருந்தால்,அதை நாம் மட்டுமே நேரடியாக வந்து தகுந்த குரு/ஜோதிடர் மூலமாக அதற்குரிய பரிகாரத்தைச் செய்ய வேண்டும்.
திருமணம் ஆகாத ஆண்/பெண்ணாக இருந்தால் பெற்றோருடன் வந்து பித்ரு தோஷ நிவாரணமான நவகலசயாகம் செய்யலாம்;ஒருவேளை பெற்றோருக்கு இதில் உடன்பாடு இல்லையெனில்,நமது சகோதர,சகோதரியுடன் வந்து நவகலசயாகம் செய்யலாம்;அவர்களுக்கும் உடன்பாடு இல்லை என்றோ நம்முடன் உடன்பிறந்தவர்கள் யாரும் இல்லையென்று இருந்தாலோ நாம் மட்டுமே வந்து செய்யலாம்;
மணமானவர்களாக இருந்தால் தனது வாழ்க்கைத்துணையுடன் மட்டுமே பரிகாரம் செய்ய வேண்டும்.தனியாகச் செய்யும் பரிகாரம் பலன்களைத் தராது.இதிலும் சில விதிவிலக்குகள் உண்டு.பிரிந்திருக்கும் தனது வாழ்க்கைத்துணை தன்னோடு சேர தனியாகத் தான் பரிகாரம் செய்ய வேண்டும்.சிலருடைய வாழ்க்கைத் துணைகள் நோயாலோ வேறு பல காரணங்களாலோ பரிகாரம் செய்யக்கூடிய இடத்திற்கு வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கும்.அப்போது மட்டும் தனியாக செய்யலாம்;அப்போதும் தனது வாழ்க்கைத்துணையின் பெயரைச் சொல்லி சங்கல்பம் செய்த பின்னரே பரிகாரம் செய்ய வேண்டும்.வெகு அபூர்வமாக ஒரு சில தம்பதிகளுக்கு மட்டும் தனியாக கணவன் மட்டும் அல்லது மனைவி மட்டும் பரிகாரம் செய்யும் பாக்கியமும் உண்டு.*********
நீங்கள் பெறும் ஆன்மீக முன்னேற்றம் பற்றியோ,பரவசநிலையைப் பற்றியோ அல்லது ஆன்மீக முன்னேற்றத்தின் விளைவாக உங்களுக்குக் கிடைத்த சில அபூர்வ சக்திகள் அல்லது அனுபவங்களை உங்களது ஆன்மீக குருவைத் தவிர வேறு எவரிடமும் எப்போதும் பகிர்ந்து கொள்ளக் கூடாது;அதை பெருமையாக நினைத்தாலே அடுத்த கட்ட ஆன்மீக முன்னேற்றத்துக்குச் செல்ல முடியாமல் போய்விடும்;ஆனால்,நடைமுறையில் பலர் தமது ஆன்மீக முன்னேற்றத்தை பத்திரிகைகளிலும்,வலைப்பூக்களிலும் எழுதிக்குவிக்கிறார்கள்;அதை வாசிக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக அதை ‘எடுத்து’க்கொள்வதால்,கேலி மற்றும் கிண்டலான காமெண்டுகளை எதிர்கொள்கிறார்கள்;#############
ஆன்மீகக்கடல் துவங்கி ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டன;இதுவரை சுமாராக 3500 பதிவுகள் வெளியிட்டிருக்கிறோம்.இதில் தாற்காலிகப்பதிவுகள் மட்டுமே 1000 வரும்;இந்த தாற்காலிகப் பதிவுகள் குறைந்தது ஒரு வாரம் முதல் அதிகபட்சமாக ஒரு மாதம் வரை மட்டுமே வெளியிடப்பட்டு பிறகு நீக்கப்பட்டிருக்கிறது.புதிய ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகள் சில பதிவுகளை மட்டும் வாசித்துவிட்டு உடனே ஐயாவுக்கு போன் செய்கிறார்கள்;அவர்கள் கேட்கும் ஆன்மீகம் தொடர்பான சந்தேகங்களுக்கு,பைரவர் தொடர்பான சந்தேகங்களுக்கு ஏற்கனவே பதிவுகளாக வெளியிட்டுவிட்டோம்;அதை வாசிக்கும் வரை பொறுமையில்லை;உடனே சந்தேகம் நிவர்த்தியாகும் விதமாக கேள்விகளை செல்போன் மூலமாக கேட்டுவிடுகிறார்கள்.வலைப்பூ நடத்தும் பலருக்கும் இதே சூழ்நிலைதான்!
பல பழமையான ஆன்மீக சுவடிகள்,ஆன்மீக வெளியீடுகள்,ஆண்டு மலர்கள்,புத்தகங்கள் என்று தேனீ போலத்தேடி தேடி அவைகளை வகுத்து,எளிமைப்படுத்தி வைக்கிறோம்.பிறகு,நமது ஐயா சகஸ்ரவடுகர் அவர்களிடம் அது தொடர்பான சந்தேகங்களை கேட்டு மேலும் எளிமைப்படுத்தி அனைவருக்கும் புரியும் விதமாக பதிவுகளை வெளியிட்டு வருகிறோம்.நீங்கள் ஆன்மீகக்கடல் பதிவுகளை வாசித்துவிட்டு,உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரே ஒரு பதிவின் படி பின்பற்றினாலே போதும்;உங்களுடைய எப்பேர்ப்பட்ட சிரமங்களும்,கஷ்டங்களும்,அவமானங்களும் உங்களை விட்டு படிப்படியாக நீங்கி நிம்மதியான,வளமான வாழ்க்கையைப் பெறுவீர்கள். ஆன்மீகக்கடல் பதிவுகள் அனைத்தையும் வாசித்துவிட்டு,அதன்பிறகு சந்தேகங்கள் கேட்கும்படி வேண்டுகிறோம்.^^^^^^^
ஒருவர் இந்து தர்மத்திலிருந்து வேறு மதத்திற்கு மாறிவிட்டால்,இந்துக்களின் ஜனத்தொகை ஒன்று குறைந்துவிட்டதாக அர்த்தம் அல்ல;இந்து தர்மத்தை,இந்து தர்மத்தின் பெருமைகளை,இந்து தர்மத்தின் சாதனைகளை கெடுக்க ஒரு எதிரி அதிகமாகிவிட்டதாக அர்த்தம்.மதமாற்றம் மூலமாக பல நாடுகள் தனது தனித்தன்மையையும்,பண்பாட்டையும் இழந்துவிட்டன;பல நாட்டு அப்பாவி மக்கள் நிம்மதியான மற்றும் அமைதியான வாழ்க்கையை இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளாக இழந்துவிட்டனர்; ஆங்கில மீடியம் பள்ளியில் படிக்கும் குழந்தைகளும்,மிஷனரி பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளும் தாமாகவே நமது இந்து தர்மத்தின் அடிச்சுவட்டிலிருந்து விலக்கப்படுகிறார்கள்.இதனால்,வெறும் எழுபது ஆண்டுகளில் இந்தியாவிலேயே இந்து தர்மத்தை அழித்தொழிக்கும் வேலையை இந்தியர்களே செய்யத் துவங்குவார்கள்;இதை 1890 களிலேயே திரும்பத் திரும்பச் சொன்னவர் சுவாமி விவேகானந்தர்!!!
.
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ
No comments:
Post a Comment