நிஜமான நட்பு என்பது எது? சாணக்கியர் தனது அர்த்த சாஸ்திரத்தில் விவரித்திருக்கிறார்: தம்மோடு பழகுபவரின் வீட்டு திருமணம்,பூப்புனித நீராட்டுவிழா நிகழ்ச்சிக்கு ஒரு நட்பு வந்தாலும்,வராவிட்டாலும்,துக்கத்திற்கு வருகை தந்து மயானம் வரை வந்தால் மட்டுமே அது நிஜமான நட்பு ஆகும்.
நிஜமான நட்பு,தனது நட்பின் குறைகளை தனியே கண்டிக்கும்;ஆபத்துக்களில் இருந்து காப்பாற்றும்;தேவைப்படும் போது தன்னையே பலிகொடுத்து,பழிகளில் இருந்து பாதுகாக்கும்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
எழுதப்படாத வரலாற்றுக்கு முன்பிருந்தே நமது இந்துதர்மம் உலகம் முழுவதும் பரவி இருந்தது.இன்றும் உலகின் பல நாடுகளில் சிவலிங்கங்கள்,விநாயகர் சிலைகள் பூமியைத் தோண்டும்போது கிடைத்துக் கொண்டே இருக்கின்றன;இதுவே நேரடி ஆதாரம் ஆகும்.இந்து தர்மத்தின் பெருமைகள் இன்று பள்ளி,கல்லூரி பாடத்திட்டங்களில் இல்லை;ஆனால்,மேல்நாடுகளின் நாகரீகம்,அவர்களின் கண்டுபிடிப்புகள் பற்றிய வரலாறு போன்றவை பாடத்திட்டத்தில் இருக்கின்றன;
ஒவ்வொரு கல்வியாண்டு முடிந்து,அடுத்த கல்வியாண்டு துவங்கும்போது பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின்றன;இவ்வாறு வெளியானதும்,தமிழ்நாடு முழுவதும் சுமாராக பத்தாயிரம் மாணவ,மாணவிகள் தற்கொலைக்கு முயற்சி செய்கின்றனர்;அதில் குறிப்பிட்ட சதவீதம் பேர்கள் தற்கொலை செய்து இறந்தும் போகின்றனர்.அவர்களை பெற்ற பெற்றோர்களும்,உடன் படித்தவர்களும் அந்த இழப்பை ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றனர்;இதற்கெல்லாம் ஒரே ஒரு காரணமே:
நமது முன்னோர்களின் சாதனைகள் பருவ வயதில் தமிழ்நாட்டின் எதிர்கால சந்ததிக்குத் தெரியாமல் போவதே!
நமது முன்னோர்கள்,உலகின் மூத்த இனத்தைச் சேர்ந்தவர்கள்;ஆம்! உலக வரலாற்றில் குரங்கிலிருந்து மனிதன் நாகரீகமடையத் துவங்கியது தமிழ்நாட்டில் தான்.தமிழ்பேசும் மக்கள் இன்றைய சென்னையிலிருந்து தமிழ்நாடு முழுவதும்,இலங்கை முழுவதும்,இலங்கைக்கு தெற்கே இரண்டாயிரம் சதுர கி.மீ.தூரம் வரை பரவியிருந்த குமரிக்கண்டம் முழுவதும் வாழ்ந்து வருகின்றனர்.எவ்வளவு காலம் தெரியுமா? சுமாராக இருபது லட்சம் ஆண்டுகளாக! உலகில் வேறு எந்த நிலப்பகுதியிலும் இவ்வளவு காலமாக மனித இனம் வாழ்ந்து வந்ததில்லை;
வானியல்,மருத்துவம்,யோகா,அரசியல்,அரசுநிர்வாகம்,தியானம், ஆரோக்கியம்,ஜோதிடம்,நீர் மேலாண்மை,சுற்றுச் சூழல்,அணுசக்தி,விண்வெளிப் பயணம்,கிரகங்களின் சுபாவங்கள்,மூலிகைகளின் மருத்துவ குணங்கள்,வேதியியல்,இயற்பியல்,விலங்கு மனோதத்துவம்,மக்களாட்சி என்று நமது தமிழ் முன்னோர்கள் சாதிக்காத துறைகளே இல்லை;ஒவ்வொரு துறையிலும் இவர்கள் கண்டுபிடித்த அளவுக்கு இன்னும் மேல்நாடுகள் கண்டறியவில்லை;
நமது முன்னோர்களின் சாதனைகள் பருவ வயதில் தெரிந்தால் தான் தன்னம்பிக்கை மனதில் உருவாகும்;தன்னம்பிக்கை உண்டானால் தான் தற்கொலை எண்ணம் தோன்றாது;ஒரு பாடத்தில் ஒரு மார்க்கில் தோல்வி,இரு மார்க்கில் தோல்வி என்பதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு அடுத்ததேர்வில் ஜெயிக்க முயற்சிக்க ஆரம்பிப்பார்கள்;
ஆனால்,இன்று நடப்பது என்ன?
நமது பெற்றோர்கள் முட்டாள்கள்,நமது தாத்தா பாட்டி அப்பாவிகள்,நமது பரம்பரையே அறிவிலிகள் பரம்பரை என்பதை மெக்காலே கல்வித் திட்டத்தில் பயிலும் நமது குழந்தைகள் உணருகிறார்கள்;ஆங்கில வழிக் கல்வி மூலமாக நமது தமிழ்ப் பண்பாட்டிலிருந்தும்,இந்துப்பண்பாட்டிலிருந்து வேரோடு பிடுங்கப்பட்டு மேல்நாட்டு நாகரீகமே உயர்ந்தது என்ற மாய நாகரீகம் தமிழ்நாட்டை ஆட்சி புரிந்து கொண்டிருக்கிறது.ஆங்கில வழிக்கல்வி பயின்றால் தான் தரமான கல்வி பயில்வதாக அர்த்தம் என்ற மாயை தமிழ்நாட்டின் மரபாகிவிட்டது;
இந்த மரபினை உருவாக்கியவர்கள் அரசுப் பள்ளியில் பணிபுரியும் பெரும்பாலான ஆசிரியர்,ஆசிரியைகளே! இவர்கள் தமது குழந்தைகளை மெட்ரிக் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைப்பதைக் கவனித்து கிராமத்து பெற்றோர்களும் தமது குழந்தைகளுக்கு டை,ஷீ,பெல்ட் கட்டி பள்ளிக்கு அனுப்பத் துவங்கி இருபத்தைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன;உலக வரலாற்றில் தாய் மொழியே தெரியாமல் இரண்டு தலைமுறையினர் உருவாகிவிட்டனர்;
இந்து தர்மம் மற்றும் தமிழ்ப்பண்பாடுகளில் நான் அனுபவ பூர்வமாக உணர்ந்தவைகளில் பாதியைக் கூட இன்னும் ஆன்மீகக்கடலில் தொகுத்து வெளியிடவில்லை;இதுவே வாசகர்களாகிய உங்களுக்கு பிரமிப்பைத் தருகிறது;ஒரே ஒரு ஆன்மீகக்கடல் பதிவுகளே பிரமிப்பைத் தருகிறது எனில்,நமது முன்னோர்கள் எப்பேர்ப்பட்ட திறமைசாலிகள் என்பதை நான் மட்டும் உணர்ந்தால் போதுமா? ஒட்டு மொத்த நமது முன்னோர்களின் சாதனைகளையும் நீங்கள் ஒவ்வொருவரும் அறிந்து கொண்டால்,
1.இந்தியாவில்,தமிழ்நாட்டில் ஒருவர் கூட மதம் மாற மாட்டார்கள்.
2.இந்தியாவில்.தமிழ்நாட்டில் ஒருவர் கூட வறுமையில் வாட மாட்டார்கள்.
3.தமிழ்நாட்டில் ஒருவர் கூட நாத்திகத்தைப் பின்பற்ற மாட்டார்கள்.
4.தமிழ்நாட்டில் ஒருவர் கூட கம்யூனிஸத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
5.தமிழ்நாட்டில் பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகள் ஒருவர் கூட தற்கொலை முயற்சி கூட செய்ய மாட்டார்கள்.
6.தமிழ்நாட்டில் இந்து தர்மத்துக்கு எதிராக எந்த ஒரு அமைப்பும்,கட்சியும்,இயக்கமும் செயல்படாமல் போய்விடும்.
7.தமிழ்நாட்டில் ஒரு அரசியல்வாதிகூட கோவில் சொத்துக்களையும்,அரசாங்க சொத்துக்களையும் திருட/தனது பெயருக்கு மாற்றிட நினைக்க மாட்டார்கள்.
8.தமிழ்நாட்டின் சுயமரியாதையோடு அண்டை மாநிலங்கள் போட்டி போடாது;
9.உலகிற்கே வழிகாட்டும் நாடாக இந்தியா உயர்ந்துவிடும்.
10.இந்தியாவுக்கும்,தமிழ்நாட்டிற்கும்,இந்து தர்மத்துக்கும்,தமிழ் மொழிக்கும் எதிராக எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் உருவாகாது.
11.ஒவ்வொரு தமிழ்க் குடும்பமும் சுயச் சார்போடு செயல்படும்;கட்டைப் பஞ்சாயத்து,அரசியல் அராஜகம் இராது.
12.நோக்கு வர்மம்,சித்த மருத்துவம்,சிலம்பாட்டம்,கபடி,பாண்டி ஆட்டம்,வர்மக்கலை போன்றவைகளைக் கற்றுக் கொள்ள உலக நாடுகளில் இருந்து பல லட்சம் மாணவ,மாணவியர் தமிழ்நாட்டுக்கு வர ஆரம்பிப்பார்கள்;இந்த கலைகள் பி.டெக்கிற்குச் சமமாக நமது தமிழ்நாட்டுக் கல்லூரி,பல்கலைக் கழகங்களில் போதிக்கப்படும்.
எனக்கு நமது முன்னோர்களின் சாதனைகளை போதித்தது ஒரு ஆன்மீக அமைப்பு ஆகும்.இந்த அமைப்பு போலவே,மேலும் சில அமைப்புகளும் அடிக்கடி இளைஞர் பயிற்சி முகாம்,இளம்பெண்களுக்கான பயிற்சி முகாம்,சிறுவர்சிறுமியர் பயிற்சி முகாம்களை நடத்திவருகின்றன.அவைகள் அனைத்திலும் அடிக்கடி நமது குழந்தைகள் கலந்து கொண்டால் அவர்கள் பள்ளிப்படிப்பில் இன்னும் அக்கறையோடும்,சிரத்தையோடும்,திறமையோடும் கவனம் செலுத்தி படிப்பிலும்,வாழ்க்கையிலும் சாதனைகள் படைப்பார்கள்;
ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ
No comments:
Post a Comment