நம்மில் பலர் கோவில் கும்பாபிஷேகம்,புனர்நிர்மாணம் செய்வதைப் புண்ணியமாக நினைக்கிறோம்.அது உண்மைதான்.இருப்பினும்,ஒரு சிலர் மட்டுமே கோவில் கும்பாபிஷேகம்,புனர்நிர்மாணத்தில் ஈடுபட்டப் பின்னர் தொழில் வளர்ச்சியையும்,பெரும் செல்வ வளத்தையும் அடைகின்றனர்.பலர் தொழிலில் வீழ்ச்சியையும்,மகத்தான கஷ்டத்தையும் அடைகின்றனர்.இதற்கான காரணம் என்ன?
கோவில் கும்பாபிஷேகம்,புனர்நிர்மாணம் செய்யும் தகுதி நமக்கு உண்டா? இந்தக் கோவிலுக்குச் செய்யும் சானித்தியம்(ஆன்மீகத்தகுதி) நம்மிடம் இருக்கிறதா? என்பதை தகுந்த நபர்களை வைத்து பிரசன்னம் பார்க்க வேண்டும்.அதில் தகுதி இருக்கிறது என்று வந்தால் மட்டுமே செய்ய வேண்டும்.இது குடும்பஸ்தர்களுக்கு மட்டுமே பொருந்தும்.துறவிகளுக்கும்,சாதுக்களுக்கும் பொருந்தாது.
நாம் பல ஜோதிடர்களைப் பார்க்கிறோம்.அவர்கள் சொல்லும் அத்தனை பரிகாரங்களையும் செய்து கொண்டே வருகிறோம்.ஆனால்,ஒரு சில மட்டுமே பலனளிக்கின்றன.ஏன்?
யார் பயபக்தியோடும்,ரகசியமாகவும்(நமது நட்புவட்டம்,உறவு வட்டம்-இவர்களுக்குக் கூடத் தெரியாமல்) பரிகாரம் செய்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே பலனளிக்கும்.பல பேர்கள் கவுரவத்தாலும்,பணத்திமிராலும் தம்மிடம் பணிபுரியும் வேலைக்காரர்கள் மூலம் பரிகாரங்களைச் செய்து வருகின்றனர்.இதனால்,அந்த வேலைக்காரர்கள் பணக்காரர்கள் ஆகிவிடுகின்றனர்.பரிகாரம் செய்யச் சொன்ன பணக்காரர்கள் வேலைக்காரர்களாக மாறிவிடுகின்றனர்.சைவ உணவு பழக்கத்துக்கு வந்தப் பின்னரே நாம் செய்யும் எந்த ஒரு சிறு பரிகாரமும் பலனளிக்கிறது என்பது அனுபவ உண்மை.
*888888888888888888888888888888888888888888888888888888888*
ஐரோப்பாவில் மனோத்தத்துவம் மற்றும் அதீத உளவியல் விஞ்ஞானிகள் ஒரு ஆராய்ச்சி செய்தனர்.அதன்படி,ஒரு அறையின் நான்கு பக்கமும் கண்ணாடியால் சுவற்றை உருவாக்கினர்.மேற்கூரையிலும் கண்ணாடியை மாட்டினர்.அறை முழுவதும் ஒளியைப் பாய்ச்சினர்.அந்த அறையின் நடுவே ஒருவரை நின்றவாரே சுமாராக ஒன்பது முறை பிரதட்சணம் செய்ய வைத்தனர்.(அறைக்கு உள்ளே நடக்க வைத்தனர்)அதன் பிறகு,அந்த நபரின் சூட்சும உடலை கிர்லியன் கேமிராவால் ஆராய்ந்து பார்த்தனர்.அவரது உடலில் பயோ மின் சக்தியும்,பயோ காந்த சக்தியும் அதிகரித்தைக் கண்டறிந்தனர்.கூடவே,அவரது உடலில் பட்டிருந்த நெகடிவ் எண்ணங்கள் நீங்கிவிடுவதை திரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்த்ததில் கண்டறிந்தனர்.உடலுக்குள் இருக்கும் ஆல்பா மற்றும் பீட்டாக் கதிர்களின் சக்தி அதிகரித்து மனத் தடைகள் நீங்குவதையும் கண்டனர்.பேய் பிடித்தவர்களால் அதிக நேரம் கண்ணாடி முன்னால் நிற்க முடியாது.
விருதுநகர் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்தூரில் அருள் மிகு நாச்சியார் அம்மன் திருக்கோவிலுக்குள்ளே கண்ணாடி மாளிகை அமைந்திருக்கிறது.ஏகாதசி திதி வரும் நாளன்று நாம் நேராக அருள்மிகு நாச்சியாரம்மன் திருக்கோவிலுக்கு வர வேண்டும்.நாச்சியாரம்மன் சன்னதியில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.பூசாரிக்கு நம்மால் முடிந்த அளவு தட்சிணை தர வேண்டும்;
பிறகு,கண்ணாடி மாளிகைக்கு நுழைவுச் சீட்டு எடுத்துக் கொண்டு உள்ளே சென்றால்,64 ரூபங்களாக நாம் காட்சியளிப்போம்.உள்ளே நுழைந்ததும்,இடது பக்க(தென் மேற்கு) ஓரத்தில் நின்று மனதார வணங்கிவிட்டு,மெதுவாக கண்ணாடியில் நமது உருவங்களைப் பார்த்தவாறு நடந்து சென்று வடமேற்கு ஓரத்தில் ஒரு நிமிடம் நிற்க வேண்டும்.பிறகு நடந்து சென்று வடகிழக்கு ஓரத்தில் ஒரு நிமிடம் நிற்க வேண்டும்;பிறகு மீண்டும் நடந்து சென்று தென்கிழக்கு ஓரத்தில் ஒரு நிமிடம் வரை நிற்க வேண்டும்.இதுவே ஒரு சுற்று ஆகும்.இப்படி ஒன்பது சுற்றுக்கள் மெதுவாகச் சுற்ற வேண்டும்.பிறகு நேராக நமது வீட்டிற்குச் செல்ல வேண்டும்.ஏகாதசியில் துவங்கி ஒவ்வொரு நாளும் அல்லது வாரம் ஒரு நாள் அல்லது மாதம் ஒரு நாள் வீதம் ஒன்பது நாட்கள் சுற்றி முடித்தால் நம்மைப் பிடித்திருக்கும் பீடைகள்,கண் திருஷ்டிகள்,பேய்,பிசாசு ஓடிவிடும்.வேலையில் இருந்து வரும் மந்தநிலை ஓடிவிடும்;பணம் சார்ந்த பிரச்னைகள் வேகமாகத் தீர்ந்துவிடும்.
இந்த தெய்வீக ரகசியத்தை நமக்கு அருளிய நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வோம்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இனி ஒரு மனிதப்பிறவி வேண்டாம்.போதும் என்ற அளவுக்கு வேதனைகளையும்,அவமானங்களையும் பட்டுவிட்டீர்களா? இனிமேல் அவமானப்படுவதற்கும்,வேதனைப்படுவதற்கும் ஒன்றுமே இல்லை;அமைதியான அதே சமயம் நிம்மதியான வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறீர்களா? ஆம் எனில்,நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்:=
தினமும் பிரம்ம முகூர்த்த நேரமான அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் வீட்டில் ஸ்ரீகால பைரவப் பெருமானின் பைரவ சஷ்டிக்கவசம் மனதுக்குள் பாட வேண்டும்.பைரவ சஷ்டிக்கவசம் ஒருமுறை பாடி முடிக்க நாற்பது முதல் ஐம்பது நிமிடங்கள் வரை ஆகும்.கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து நமது வீட்டின் பூஜை அறையில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரையிலும் பாட வேண்டும்.
அல்லது
தினமும் பிரம்ம முகூர்த்த நேரமான அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் ஸ்ரீகாலபைரவப் பெருமானின் காலபைரவர் 108 போற்றி அல்லது ஸ்ரீகால பைரவப் பெருமானின் 1008 போற்றியை நமது வீட்டில் பாட வேண்டும்.108 போற்றியை ஒருமுறை பாட எட்டு நிமிடங்கள் ஆகும்;அதுவே 1008 போற்றியைப் பாட முப்பது முதல் நாற்பத்தைந்து நிமிடங்கள் வரை ஆகும்.இந்த போற்றிகளை குறைந்தது மூன்று ஆண்டுகள் வரையிலும் ஒரு நாள் விடாமல் பாட வேண்டும்.
இந்த பாடல்களைப் பாடுவதற்கு ஒரே ஒரு நிபந்தனைதான்:அது அசைவம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்த வேண்டும்.அப்படி நிறுத்தியப்பின்னரே தினமும் பாடத் துவங்க வேண்டும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
செல்போன் நம்மிடையே படுவேகமான தகவல் பரிமாற்றத்திற்கு காரணமாக அமைந்திருக்கிறது.செல்போன் சேவை நிறுவனங்கள் நமது பேச்சின் மூலமாகவே கோடிகளை சம்பாதித்துக்கொண்டே இருக்கின்றன;ஒரு சர்வேப்படி,இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அதிகமாக செல்போன் மூலம் பேசும் மக்கள் நம் தமிழ்நாட்டு மக்கள் என்ற பெருமை(அல்லது சிறுமை)யைப் பெற்றிருக்கிறது.செல்போனைப் பயன்படுத்தி தம்மை வளப்படுத்திக் கொண்டவர்களை விடவும்,தனது நட்புவட்டத்தினை குறைத்துக்கொண்டவர்களே அதிகம்.கோபத்தை நேரில் காட்டும்வரை பலருக்குப் பொறுமை இல்லை;மேலும்,எந்த ஒரு சிந்தனையையும் முழுமைபெறாமல் பார்த்துக் கொள்வதில் செல்போன் முக்கியப் பங்கு வகிக்கிறது.எனவே,செல்போன் சமுதாயத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு பரவலாக்கப்படவில்லை;பன்னாட்டு நிறுவனங்கள் மென்மேலும் லாபம் குவிக்கவே பரவலாக்கப்பட்டுவிட்டது.இதுவும் ஒருவிதத்தில் முதலாளித்துவமயமாக்கலே!!!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஒருவர் தனது குடும்பத்தோடு வாடகைவீட்டில் குடியிருந்து வருகிறார்;அவர் வேறு ஒரு இடத்திற்கு இடம் பெயர இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்;மாநகரங்கள் மட்டுமல்ல;வளர்ந்துவரும் நகரங்களில் கூட அவர் வீடு மாறப்போகிறார் என்ற செய்தி வதந்தியாகப் பரவினாலே அந்த வீட்டிற்கு வாடகைக்கு வர பலர் போட்டிபோட்டுக் கொண்டு முன்பணத்தால் முன்பதிவு செய்துவிடுகின்றனர்.இது வரவேற்கத்தக்க விஷயமே!
இந்த வரவேற்கத் தக்கவிஷயம் இப்போது அடுத்தக் கட்டத்தை நோக்கி ‘முன்னேறி’விட்டது.ஒருவர் தமது வாடகைக் குடித்தனத்தைக் காலி செய்து புறப்படும் முன்பே,அடுத்து அந்த வீட்டிற்கு வாடகைக்கு வர இருப்பவர் அந்த வீட்டிற்கு வந்து பால் காய்ச்சக் கூடாது;ஆனால்,அப்படித் தான் செய்கிறார்கள்.அவ்வாறு செய்வதால்,அந்த வீட்டில் வாடகைக்கு இருப்பவரின் குடும்பம் கடுமையாக பாதிக்கப்படும்;அடுத்து,அந்த வீட்டிற்கு வாடகைக்கு வர இருப்பவரின் குடும்பமும்,அந்த வீட்டை வாடகைக்கு விட்டவரின் குடும்பமும் வாஸ்து சாபத்துக்கு ஆளாகிறது.
புதிதாக வீடு கட்டுபவர்கள்,வீட்டை முழுமையாகக் கட்டி முடிக்காமல்(பூச்சுவேலை முடித்து,தச்சுக் கழிக்க வேண்டும்;வீடு கட்டிமுடித்ததன் அடையாளமே அதுதான்!) பால் காய்ச்சும் வழக்கமும் இருக்கிறது.இப்படிச் செய்வதால்,பால் காய்ச்சியவரின் குடும்பத்தில் ஏதாவது ஒரு குறை அல்லது சிரமம் பாடாய் படுத்திக் கொண்டே இருக்கும்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
திருமணம் முதலான நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது செருப்பு திருடுவது சகஜமாக இருக்கிறது.ஒரே மாதிரியான செருப்பை அருகருகே விட்டுச் செல்வதால் குழப்பம் ஏற்பட்டு,தனது செருப்பில் ஒன்றையும்,வேறு ஒருவரின் செருப்பில் ஒன்றையும் அணிந்துகொண்டு புறப்பட்டுவிடுகின்றனர்.இந்தக் குழப்பமும் நடைபெறத்தான் செய்கிறது.இவ்வாறு ஒருவர் பயன்படுத்திய செருப்பை நமது ஒரு காலுக்குப் பயன்படுத்துவதால்,அவரது கர்மா நம்மைப் பிடிக்கும்;நமது வழக்கமான வேலைகளில் குழப்பம் ஏற்படும்;எனவே,நமது இரண்டு செருப்புகளை மட்டுமே நாம் அணிய வேண்டும்;
பெரும்பாலான கோவில்களில் மூலவர் கிழக்கு நோக்கி அமைந்திருக்கும்;அங்கே ஆண்கள் வடக்கு நோக்கி நின்றே இறைவழிபாடு செய்ய வேண்டும்;பெண்கள் தெற்கு நோக்கி நின்றவாறு இறைவழிபாடு செய்ய வேண்டும்;
சில கோவில்களில் மூலவர் வடக்கு நோக்கி அமைக்கப்பட்டிருக்கும்;அங்கே ஆண்கள் கிழக்கு நோக்கியும்,பெண்கள் மேற்கு நோக்கியும் நின்றவாறு இறைவழிபாடு செய்ய வேண்டும்;
)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
இன்றைய இந்திய அரசு சட்டப்படியான சூதாட்டத்தை ஊக்குவிக்கிறது.இந்த சட்டப்படியான சூதாட்டம் ஆன்லைன் டிரேடிங்,ஆன்லைன் ஷேர்மார்கெட்,ஆன்லைன் பணவர்த்தகம்,முன்பேரவர்த்தகம் என்ற Future Trading என்று பல பெயர்களில் இந்தியா முழுவதும் ஏராளமானவர்கள் செய்து வருகிறார்கள்.யாருடைய பிறந்த ஜாதகத்தில் ராகு பகவான் லக்னத்துக்கு ஒன்பதாமிடம்,அல்லது பதினோராமிடத்தில் அமர்ந்து ராகு மஹாதிசை ஒரு குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்படுகிறதோ அவர்களுக்கு மட்டுமே இந்த சட்டபூர்வமான சூதாட்டம் கோடிகளை சம்பாதிக்க கைகொடுக்கும்;மற்றவர்களுக்கு ஆரம்பத்தில் லாபம் மட்டும் வரும் விதமாக அமைந்துவிட்டு,பெருமளவு கையிருப்பை முதலீடு செய்ய வைத்து,மொத்தத்தையும் நஷ்டப்பட வைக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.இதைப் புரிந்தாலும்,பலர் ஏற்றுக்கொள்வதில்லை;உழைத்துச் சம்பாதிக்கும் பணத்தையே நம்மால் சேமிக்க முடியாமல் தவிக்கிறோம்;சூதாட்டத்தில் சம்பாதிப்பது நிலைக்குமா?
பெரும்பாலானவர்கள் போட்ட பணம் வந்தால் போதும் என்றும்,தினமும் ரூ.500/- அல்லது ரூ.1000/- கிடைத்தால் போதும் என்றுமே உள்ளே நுழைகிறார்கள்.பலருக்கு அது கிடைத்ததும்,இன்றைக்கு இது போதும் என்றும் நினைக்கிறார்கள்.ஆனால்,மனம் எப்போது நமது கடன்களை அடைப்பது? என்ற வேகத்தில் இது தொடர்பான நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு கையிருப்பையும் கரைத்துவிடுகிறார்கள்.இந்த சட்டபூர்வமான சூதாட்டத்தை இந்தியாவின் மத்திய அரசு கொண்டு வந்ததன் நோக்கமே மேற்கு நாடுகள் சுலபமாக இந்தியாவின் சட்டதிட்டங்களையும் மீறி இந்தியச் செல்வ வளத்தை சுரண்டுவதற்காகவே!!! இந்திய மக்களின் நலன்களில் அக்கறை இருந்தால் இதற்கு வருமான வரி போட்டிருக்க வேண்டுமே? ஏன் போடவில்லை?!!!அவ்வாறு வருமான வரிக்குள் இந்த சட்டபூர்வமான சூதாட்டத்தைக் கொண்டு வந்தால்,இதைச் செயல்படுத்தும் நிறுவனங்களின் அனைத்து பண நடவடிக்கைகளையும் மத்திய அரசின் நிதி அமைச்சகம் கண்காணிக்க முடியுமே!
இப்படி கண்காணிக்காமல் செய்ததன் மூலமாக வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் மேல்நாட்டுப்பொருளாதாரம் மற்றும் அமெரிக்கப்பொருளாதாரத்தை தாங்கிப் பிடிக்கவே இந்தியர்களின் உழைப்பை இப்படி மறைமுகமாகச் சுரண்டிட அனுமதித்திருக்கிறது இன்றைய மத்திய அரசு. . . . என்ற சந்தேகம் எழுகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களை அடிக்கடி நேரில் சந்தித்து, அவரிடம் ஆன்மீகம் தொடர்பான சராசரி மனிதர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைக் கேட்டு அதற்குரிய விளக்கங்களை முறையாகப் பெற்று நமது ஆன்மீகக்கடலில் வெளியிட்டு வருகிறோம்.இந்த சந்தேக நிவர்த்திக்கான பதிவுகள் மட்டுமே சுமாராக ஆயிரம் வெளியிட்டிருக்கிறோம்.2010 முதல் இப்படிப்பட்ட பதிவுகளை நாம் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறோம்.இதன் மூலமாக பக்தியை தமிழ் சகோதர,சகோதரிகளின் மனதில் விதைப்பதும்,தூண்டுவதுமே நமது நோக்கம்.ஆன்மீகக்கடலை வாசிக்கும் பலர்,ஆன்மீகக்கடலின் அனைத்துப் பதிவுகளையும் வாசிக்காமலேயே நமது ஆன்மீக குருவுடன் போன் பேசிவிடுகின்றனர்;அவர்கள் கேட்கும் அத்தனை சந்தேகங்களுக்கும் உரிய விளக்கங்களை ஆன்மீகக்கடலில் பதிவுகளாக வெளியிட்டுவிட்டோம்;இன்னும் நிறைய வெளியிடுவோம்;எனவே,புதிய ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகள் ஆன்மீகக்கடலின் அனைத்துப் பதிவுகளையும் வாசித்துவிட்டு அதன் பிறகு நமது ஐயா சகஸ்ரவடுகர் அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
64 வித பைரவர்களில் வீட்டில் வழிபட ஏற்றவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் மட்டுமே! கோவில் வழிபட ஏற்றவர் ஸ்ரீகால பைரவரும் மற்ற பைரவர்களுமே! ஸ்ரீகால பைரவ மந்திரத்தை வீட்டிலும்,கோவிலிலும் ஜபிக்கலாம்;ஸ்ரீகால பைரவர் போட்டோவை வீட்டில் வைத்து வழிபடக் கூடாது.(இதைத் தான் ஏற்கனவே எழுதிவிட்டீர்களே? என்று பழைய வாசகர்கள் நினைப்பது கேட்கிறது;என்ன செய்ய? பைரவ வழிபாட்டிற்கு எதிராக இணையத்தில் ஒரு பெரிய பிரச்சாரம் நடைபெறுகிறது.அதற்காகவே மறுபடியும் வெளியிட வேண்டியிருக்கிறது)
யார் முற்பிறவியில் சித்தரின் சீடராக இருந்தாரோ அவரே இப்பிறவியில் தொடர்ந்து பைரவ வழிபாடு செய்வார்;யார் முற்பிறவியில் (குறைந்த பட்சம்)ஒரு பிறவி முழுக்க பழுத்த சிவனடியாராக இருந்தாரோ அவரே இப்பிறவியில் பைரவ வழிபாடு செய்வார்;இந்தக் கருத்தை நமக்கு ஆராய்ந்து தெரிவித்த சித்தர் ஸ்ரீகாகபுஜண்டர் ஆவர்.
மறுபிறவியில்லாத நிலையை எட்டிட ஸ்ரீகால பைரவ வழிபாடு செய்ய வேண்டும்.சித்தர்கள் அனைவருமே தொடர்ந்து வழிபடுவது ஸ்ரீபைரவப் பெருமானையே!இந்த உலகம் ஆறுமுறை அழிக்கப்பட்டிருக்கிறது என்று ஒரு வேதநூலில் குறிப்பு இருக்கிறது.அந்தக் குறிப்பினைத் தெரிவித்தவர் ஸ்ரீகாகபுஜண்டர் சித்தர் ஆவார்.ஆக,என்றும் அழியாமல் இருக்கும் ஒரே சித்தர் ஸ்ரீகாகபுஜண்டர் என்பதை இதன் மூலம் உணரலாம்;அந்த அழியாத நிலையை எட்டி,இந்த பிரபஞ்சத்தில் நிகழும் அனைத்துக்கும் சாட்சியாக இருக்கும் ஒரே சித்தர் ஸ்ரீகாகபுஜண்டர் சித்தர் மட்டுமே! ஸ்ரீகால பைரவ உபாசனை செய்தமையால் தான் ஸ்ரீகாகபுஜண்டரால் இந்த நிலையை எட்டிட முடிந்தது.
பெண்களும்,கோழைகளும் பைரவ வழிபாடு செய்யக் கூடாது என்று ஒரு கருத்து இருக்கிறது.இந்தக் கருத்து பொய்யானது;ஏனெனில்,நம் ஒவ்வொருவருக்கும் துணிச்சல் என்ற உணர்வைத் தருபவரே ஸ்ரீகால பைரவப் பெருமான் தான்!பெண்களும் பைரவ வழிபாடு செய்யலாம்;எந்த பைரவரை எனில்,வீட்டில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரையும்,கோவிலில் ஸ்ரீகால பைரவரையும் வழிபாடு செய்ய வேண்டும்;
சிவபெருமானும்,ஸ்ரீகால பைரவப் பெருமானும் வேறுவேறு அல்லர்;ஒருவரே! அதே போல,நமது கர்மவினைகளைத் தீர்க்கும் சக்தி,நாம் தொடர்ந்து ஸ்ரீகால பைரவ வழிபாடு அல்லது ஸ்ரீகாலபைரவர் 108 போற்றி தினமும் பாடுதல் அல்லது ஸ்ரீகால பைரவர் 1008 போற்றி தினமும் பாடுதல் அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 108 போற்றி பாடுதல் அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 1008 போற்றி பாடுதல் அல்லது பைரவ சஷ்டிக் கவசம் பாடுதல் அல்லது தேய்பிறை அஷ்டமி வரும் நாட்களில் ஸ்ரீகால பைரவ பூஜையில் கலந்து கொள்ளுதல் அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ பூஜையில் கலந்து கொள்ளுதல் அல்லது ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ தினமும் 108 முறை எழுதி வருதல் அல்லது இவைகளில் ஏதாவது ஒன்றிரண்டையோ/அனைத்தையுமோ செய்வதன் மூலமாக நமக்குக் கிடைக்கும்;இதை கடந்த மூன்று ஆண்டுகளில் பல ஆன்மீகக்கடல் வாசகர்கள்,வாசகிகள் உணர்ந்திருக்கிறார்கள்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
எதற்கெடுத்தாலும் மேல்நாடுகளைக் காப்பியடிக்கும் அடிமைப்புத்தி இன்றும் நம்மிடையே இருக்கிறது.இதுவும் ஏற்கனவே எழுதியதுதான்! பல பெண்கள் தமது பெயருக்குப் பின்னால் தனது கணவர் பெயரைச் சேர்த்து அறிமுகம் செய்கின்றனர்.சிலர் தமது பெயருக்குப்பின்னால்,தனது அப்பாவின் பெயரைச் சேர்த்து எழுதவும்,அறிமுகம் செய்யவும் செய்கின்றனர்.இந்த முறை முற்றிலும் தவறானது.நூறு ஆண்டுகளுக்கு முன்பு தனது பெயரை மட்டும் சொல்லி அறிமுகப்படுத்துவதில்லை;தனது முன்னோர்களின் பெயர்களையும் சேர்த்தே சொல்வது வழக்கம்;
உதாரணமாக,நாராயண,சங்கரமஹாலிங்க,கையிலாயநாத,சிவசுந்தர,மணிகண்டன் என்று தன்னை எங்கும் அறிமுகப்படுத்தும் வழக்கம் நம்மிடையே இருந்திருக்கிறது.இதில் மணிகண்டன் என்பவர் தனது பெயரை இவ்வாறு சொல்கிறார் என்பதும்,சிவசுந்தரம் என்பது அவரது அப்பாவின் பெயர்;கையிலாயநாதன் என்பது அவரது தாத்தாவின் பெயர்;சங்கரமஹாலிங்கம் என்பது அவரது தாத்தாவின் அப்பாவின் பெயர்;நாராயணன் என்பது அவரது தாத்தாவின் தாத்தா பெயர்.இன்றும் இதே நடைமுறையைப் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை;
ஆனால்,மேல்நாட்டில் பெண்கள் எப்படி தமது பெயரைச் சொல்லி அறிமுகப் படுத்துகின்றனர் என்பதைக் கவனிக்க வேண்டும்;உதாரணமாக,எலிசபெத் டெய்லர் என்று ஒரு மேல்நாட்டுப் பெண்மணி தனது பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்தினால்,அந்த எலிசபெத் என்ற பெண்,டெய்லர் என்ற ஆணின் மனைவியாக இப்போது வாழ்ந்துவருகிறார் என்று அர்த்தம்.இதையே தமிழ்நாட்டிலும் பின்பற்றி தனது பெயருடன் தனது கணவர் பெயரைச் சேர்த்து எழுதலாமா? அறிமுகப்படுத்தலாமா?
சாப்பிடும் போதும்,சாப்பிட்ட பத்துநிமிடங்கள் வரையிலும் ஒரு போதும் பேசக் கூடாது;சாப்பிடும்போது டிவி பார்ப்பதும்,புத்தகம் படிப்பதும் தவறு.அவ்வாறு செய்வதால் உடலுக்குள் இருக்கும் ஜீரணமண்டலத்தில் நுட்பமான கோளாறுகள் ஏற்படும்.சாப்பிடும் போது ஒரு போதும் பதட்டத்துடனோ,வேகவேகமாகவோ சாப்பிடக்கூடாது.முழுக் கவனத்தையும் சாப்பாட்டின் மீது இருக்க வேண்டும்.வேறு எந்தக் கவனமும் இருக்கக் கூடாது;
பிறர் சாப்பிடும்போது நாம் அவர்களை ஒருபோதும் திட்டக்கூடாது;அதைவிட மகா பாவம் எதுவும் இல்லை;
சாப்பிடும்போது ஒரு போதும் வடக்கு நோக்கி அமர்ந்து சாப்பிடக் கூடாது;அவ்வாறு சில மாதங்கள் வடக்கு நோக்கி அமர்ந்து சாப்பிடால் புதிய நோய்கள் உருவாகும்;மேலும் ஏற்கனவே ஆரம்ப நிலையில் இருக்கும் நோய்கள் வேகமாக வளரக் காரணமாகிவிடும்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
இந்தியா வல்லரசாக நாம் ஒவ்வொருவருமே உழைக்க வேண்டும்;நாம் செய்ய வேண்டியது= முதலில் நம் நாட்டுத் தயாரிப்புக்களை மட்டுமே வாங்க வேண்டும்;இரண்டாவது சீனத் தயாரிப்புக்களை ஒருபோதும் வாங்கக்கூடாது;வெறும் ஒரே ஒரு வருடம் மட்டும் சீனத் தயாரிப்புக்களை நாம் வாங்குவதைத் தவிர்த்தாலே,இப்போது நம்மிடம் போரிடத் துடிக்கும் சீனா,நிச்சயமாக நம்மிடம் மண்டியிட்டுவிடும்;
போட்டி நிறைந்த இந்தக் கால கட்டத்தில் நமது இந்தியா இன்னும் வல்லரசாகாமல் இருப்பதற்கு பொதுமக்களாகிய நாம் மட்டுமே காரணம்! நமது நாட்டையும்,நாட்டின் பொருளாதாரத்தையும் நாம் வலுப்படுத்திட,சுதேசிப் பொருட்களை இன்று முதல் வாங்குவோம்;இதை மட்டும் செய்தாலே உலக நாடுகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து நம்மை எதிர்த்தாலும்,பொருளாதாரத் தடைவிதித்தாலும் நாம் 120 கோடி இந்தியர்கள் இந்தியன் என்ற தேசபக்தியோடு சில வருடங்கள் இருந்தாலே போதும்;உலகின் ஒரே வல்லரசாக உயர்ந்துவிடமுடியும்.அதற்குரிய தகுதி இந்த உலகில் இருக்கும் 220 நாடுகளில் நம் இந்தியாவுக்கு மட்டுமே இருக்கிறது.
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ
No comments:
Post a Comment