இந்த எண்ணப்பரவலால் ஒன்றாம் வகுப்பில் இருந்தே ஆங்கில மொழியில் கல்வி கற்பது பெருமை என்ற முடிவுக்கு நாம் அனைவருமே வந்துவிட்டோம்;நமது குழந்தைகள் படிக்கும் ஆசிரியர்,ஆசிரியைகளின் மகனும்,மகளும் படிப்பது ஆங்கில வழிப் பள்ளி என்பதை நாம் அறியும் போது நமது குழந்தைக்கு தரமான கல்வியைத் தரவில்லையோ? என்று நாம் வருத்தப்படுகிறோம்;ஆறாம் வகுப்பு வரை நன்றாக படித்து வரும் நமது மகன்/மகளை வம்படியாக ஆங்கில மீடியப் பள்ளியில் சேர்க்கிறோம்;ஒரே வருடத்தில் அவனது/அவளது படைப்பாற்றலும் படிப்புத்திறனும் சிதறியதும் மீண்டும் அவனை/அவளை தமிழ் மீடியத்திற்கு மாற்றியும் விடுகிறோம்;
ஒவ்வொருமுறையும் பத்தாம் வகுப்புபொதுத் தேர்வு முடிவுகள் வெளிவரும் போதும் தமிழ்நாட்டில் மட்டும் 10,000 மாணவ,மாணவிகள் தற்கொலைக்கு முயற்சி செய்கின்றனர்;எந்த பிரச்னையையும் எதிர்கொள்ளும் திறன் அவர்களுக்கு கல்வி மூலமாக ஊட்டப்படவில்லை;
திரைப்படங்களில் காட்டப்படும் மிகைப்படுத்தப்பட்ட கேலி,கிண்டல்களை நம்பி மாணவ,மாணவிகளே அடுத்தவர்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் விதமாக ஆடை அணியத் துவங்கிவிட்டனர்;இன்று திரைப்படங்கள் மற்றும் டிவி பரவலால் தமிழ்நாட்டில் தாவணி உடுத்துவதும்,வேட்டி கட்டுவதும் காணாமல் போய்விட்டன;(தமிழுணர்வு பற்றி மேடைகளில் கத்தும் தமிழ் அரசியல்வியாதிகள் இதைப்பற்றி மூச்சுவிடுவதில்லை;)ஆங்கிலம் பேசுவதே மரியாதை! என்ற கோமாளித்தனத்தை நாம் ஏற்றுக்கொண்டுவிட்டோம்;
தம்பதிகளிடையே உணர்வு பூர்வமான ஒற்றுமை ஏற்படுவதில்லை;அவள் முதலில் மன்னிப்பு கேட்கட்டும்;அதன் பிறகு நான் இறங்கி வருகிறேன் என்று கணவனும்,அவன் என்ன யோக்கியமா? என்று மனைவியும் மாறி மாறி புகார் சொல்லி பிரிந்து செல்லவே தயாராக இருக்கிறார்கள்.ஆமாம்,மெக்காலே கல்வித் திட்டமானது ஈகோ நிறைந்த மனிதர்களை இந்திய சமுதாயத்திற்கு உற்பத்தி செய்து கொண்டே இருக்கிறது.ஈகோ நிறைந்த மனிதர்கள் திமிர் பிடித்த குழந்தைகளை உருவாக்குகிறார்கள்;திமிர் பிடித்த குழந்தைகளால் யாரையும்,எப்போதும்,எதற்காகவும் மதிக்காத தலைமுறைகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன;இதனால்,ஜால்ரா அடிப்பவர்களும்,இழிவான செயல்கள் செய்பவர்களும் நம்மை ஆளும் பொறுப்புகளுக்கு(மந்திரி,மாவட்ட,மாநில,தேசிய அளவிலான அதிகாரிகள் பதவிகள்) வந்துவிடுகிறார்கள்.அவ்வாறு வரும்போது அவர்கள் மனித நேயம் பார்த்து செயல்படுவதில்லை;பணம் சம்பாதிக்கும் வழியாகவும்,ஜாதி வெறியாளர்களாகவுமே செயல்பட்டுவருகிறார்கள்.இதன் இறுதிகட்ட வடிவமே,இன்றைய தேசிய அரசியலில் வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது.நமது பிரதமர் எடுத்த ஒரு கொள்கை முடிவால் சில லட்சம் கோடி ரூபாய்கள் ஊழல் உருவாகிவிட்டது.அந்த ஊழலின் முழுப்பரிமாணம் வெளிப்பட்டதும்,தான் அதற்குப் பொறுப்பேற்காமல் அந்தப் பழியை தன்னோடு அப்போது பணிபுரிந்த ஐ.ஏ.எஸ்.அதிகாரி மீது போடுகிறார்.ஏனெனில்,இவர் மேல்படிப்பு படித்தது ஐரோப்பிய,அமெரிக்க நாடுகளின் பல்கலைக்கழகங்களில்!!(சுதந்திரம் வாங்கிய முதல் 30 வருடங்களில் நமது அரசியல் தலைவர்கள் தாம் செய்யாதத் தவறை மட்டுமல்ல;தமது அமைச்சரவை சகா ஒருவர் தவறு செய்திருந்தாலோ அல்லது குற்றச்சாட்டுக்கு ஆளானாலோ தாமே அதற்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்துள்ளனர்;இதுவே முறையான இந்து தர்மம் ஆகும்.அவ்வாறு ராஜினாமா செய்தவர்கள் பெரும்பாலும் நமது நாட்டில் படிப்பு படித்தவர்களாக இருந்திருக்கிறார்கள்;)
கடந்த நூற்றாண்டில் இங்கிலாந்து உலகின் அனைத்து கண்டங்களிலும் தனது காலனி ஆதிக்கத்தை விரிவு படுத்தியது.எல்லா நாட்டின் பண்பாட்டையும் சுலமாக அழித்தது;அந்த நாடுகளின் செல்வ வளங்களை எளிதாகச் சுரண்டியது;
ஆனால்,இந்தியாவில் மட்டும் இங்கிலாந்து தான் நினைத்த ஒவ்வொன்றையும் சுலபமாக செயல்படுத்த முடியாமல் தவித்தது;எனவே,தான் நினைத்ததைச் சாதிக்க பல சதிவேலைகளைச் செய்தது;அந்தச் சதி வேலைகளில் மிக முக்கியமானது தான் நமது அற்புதமான குருகுலக் கல்வித்திட்டத்தை அழித்தது; 1850 களில் இந்தியா முழுவதும் 3,75,000 திண்ணைப்பள்ளிக்கூடங்கள் இருந்தன;20 வயது நிரம்பும் ஒவ்வொரு இந்தியனும் இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் 16 மொழிகளில் சுலபமாகப் பேசவும்,எழுதவும் தேர்ச்சி பெற்றிருந்தான்;(இன்று நாம் ஸ்போகன் இங்கிலீஷ் பேசவே திணறிக்கொண்டிருக்கிறோம்)யோகாசனம்,ஜோதிடம்,மந்திரப் பிரயோகம்,வாஸ்து,தியானம்,வாசி யோகம் என அனைத்திலும் தேர்ச்சி பெற்றதால்,எந்த நேரத்தில் தனது மனைவியோடு தாம்பத்தியம் கொண்டால் யோகங்கள் நிறைந்த குழந்தை பிறக்கும் என்பதைக்கூட அறிந்து வைத்திருந்தான்;காட்டுப்பாதை வழியாக தனியாகச் சென்றாலும்,அங்கே எதிர்ப்படும் எந்த மிருகமும் இவனை எதுவும் செய்யாது;மிருகங்களை கட்டுப்போடும்/வசியம் செய்யும் மந்திரமும் அறிந்திருந்தான்.நேர்மையாக நம் நாட்டின் அனைத்து பிரஜைகளும் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்தனர்;திருடுவதைக் கூட ஒரு நாகரீகக் கலையாக வைத்திருந்தனர்;
இங்கிலாந்து தனது ஒவ்வொரு சதித்திட்டத்தையும் மதக் கண்ணோட்டத்தோடு செயல்படுத்தியது;இந்து தர்மத்தின் பெருமைகளை நாசமாக்கி,அதன் பெருமைகள் எதிர்கால இந்துக்கள் அறியாத விதமாக மெக்காலே கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தது;இந்த மெக்காலே கல்வித் திட்டத்தினால் நாம் நமது வேர்களை இழந்தோம்,அதை இன்றும் நம்மில் பெரும்பாலானவர்கள் உணரவே இல்லை;எப்படியெல்லாம் இழந்தோம்? எதையெல்லாம் இழந்தோம்? என்பதை அறிய ஓஷோ எழுதிய மறைந்திருக்கும் உண்மைகள் என்ற புத்தகத்தை வாசித்துப் பாருங்கள்;ஓரளவு புரியும்.இந்த சதித்திட்டம் நடைமுறைக்கு வந்து,இந்தியா முழுவதும் பரவியதால் தான் நேர்மையாளர்களால் வேலை,தொழில்,சேவை,கோவில்பணி என எதிலும் தாக்குப்பிடிக்கமுடியாமல் திணறிவருகிறார்கள்.இதன் இறுதி கட்டமே தனக்குத் தண்டனை கொடுத்த கல்லூரி முதல்வரை வெட்டிக்கொலை செய்யுமளவுக்கு ஒரு மாணவனின் நடத்தை கொடூரமாகிவிட்டது.(அக்டோபர் 2013 தூத்துக்குடி மாவட்டம்)
இன்றும் நமது பாரதநாடும்,நாட்டுமக்களும் மேல்நாட்டினரைப் போல ஒழுக்கமின்றியும்,பொறுப்பின்றியும் மாறிட பல்வேறு சர்வதேச சதிகள் நடைபெற்றுவருகின்றன;(ஹாலிவுட் திரைப்படங்களில் தாறுமாறாக வண்டி ஓட்டுவது;நடு ரோட்டில் குறுக்காக காரை நிறுத்தி வைத்து வெட்டிப் பேச்சு பேசுவது;அல்லது முத்தம் கொடுப்பது,ஓடும்போது அடுத்தவன் செல்போனை தட்டிப்பறித்துக் கொண்டு ஓடுவது-ஓடிக்கொண்டே யாருக்கோ போன் செய்துவிட்டு அதை வீசி எறிவது)
நிஜமான உதாரணம் ஒன்றைப் பார்ப்போம்:-மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை மாநிலங்களின் கல்வித்துறைக்கு ஒரு உத்தரவை அனுப்பியிருக்கிறது.அதில்,பள்ளி மாணவர்களை அடிக்கக் கூடாது;பரீட்சையில் பெயில் ஆக்கக் கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறது.இது தொடர்பாக தனிப்பதிவு விரைவில் வெளிவரும்.இந்த உத்தரவால்,பொறுப்பற்ற இந்திய இளைய சமுதாயத்தை உருவாக்கும் வேலையை மனிதவள மேம்பாட்டுத்துறை துவங்கியிருக்கிறது.இந்த உத்தரவுக்குப் பின்னால் சர்வதேச சதி இருக்கிறது.மனிதவளமேம்பாட்டுத்துறை,இந்திய மனிதவளச் சிதைப்புத் துறையாக மாறியிருக்கிறது.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இந்த உலகத்தில் எந்த ஒரு நாடும்,எப்பேர்ப்பட்ட டெக்னாலஜி கண்டுபிடித்திருந்தாலும் அது அந்த நாட்டு குடிமகனது சொந்த அறிவாற்றலால் கண்டுபிடித்திருக்கவே முடியாது;அந்த கண்டுபிடிப்பு/டெக்னாலஜியைக் கண்டுபிடிக்க ஒரு இந்தியரின் உழைப்பு அல்லது ஒரு இந்திய அறிவுக்களஞ்சியத்தில்(வேதங்கள்,உபநிஷத்துக்கள்,சித்தர்களின் பாடல்கள்) இருந்து எடுக்கப்பட்ட முக்கிய குறிப்பு மட்டுமே காரணமாக இருக்கும்;இந்தக் கருத்தின் அடிப்படையில் ஒரு லட்சம் பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகமே எழுத முடியும்.இருப்பினும்,இந்த உண்மையை நமது நாட்டின் ஆளும் அரசுகள் மாணவர்களிடம் பரப்புவதில்லை;மாறாக மறைக்கவே செய்கிறது.இது நியாயமா?
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ நாம் பயிலும் மெக்காலே கல்வித் திட்டத்தால்,பள்ளி/பாலிடெக்னிக்/கல்லூரி/பொறியியல் படிப்பு படித்து முடிக்கும் ஒரு மாணவன்/மாணவியின் மனதில் என்ன உருவாகிறது தெரியுமா? நமது அம்மா,அப்பா ஒரு முட்டாள் தம்பதி.நமது தாத்தா பாட்டி அடிமுட்டாள்கள்; நாம் பிறந்திருப்பது ஒரு உருப்படாத வம்சத்தில்! என்ற எண்ணமே தோன்றுகிறது.
ஆனால்,நிஜத்தில் இது முழுப்பொய்.நமது பெற்றோர்கள் மிகுந்த திறமைசாலிகள்;நாம் இந்த உலகிற்கே வழிகாட்டும் திறமையும்,சாமர்த்தியமும் நிரம்பிய வம்சாவழியைச் சேர்ந்தவர்கள்.இந்த உண்மையை எதிர்கால இளம் இந்தியர்கள் உணர்ந்துவிட்டால் ஊழல் செய்யும் எந்த ஒரு கட்சியும் ஆட்சிக்கு வரமுடியாது.ஜாதி வெறி,மத வெறியை ஆதரிக்கும் எந்த அரசியல்வாதியும் அரசியல் செய்ய முடியாது.இதை உணர்ந்தே காங்கிரஸ் கட்சியானது இந்தியாவில் இந்துக்களின் 20,00,000 வருட பெருமைகளை பாடத்திட்டத்தில் சேர்க்காமல் தடுக்கிறது.ஜாதி ஒற்றுமை,மத ஒற்றுமை,மாநில ஒற்றுமை ஏற்படாமல் பிரிவினையை தனது அரசியல் செல்வாக்காக வளர்க்கிறது; தாம் நிரந்தரமாக அதிகாரத்திற்கு வருவதற்காக,இப்பேர்ப்பட்ட காரியங்களை கடந்த 100 ஆண்டுகளாகச் செய்துவருகிறது.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
உலகிலேயே நமது நாட்டு மக்களுக்கு மட்டுமே தேசபக்தியும் தெய்வபக்தியும் சேர்ந்தே தேவைப்படுகிறது.வெறும் தெய்வபக்தி இருந்ததால் தான் இன்று நாம் வெளிநாட்டு மதங்களை வளர அனுமதித்துக் கொண்டிருக்கிறோம்;அதனால் ஏற்பட்டிருக்கும் சமுதாயப் பிரச்னைகளை,ஜாதிமோதல்களை எழுத ஒரு லட்சம் வலைப்பூக்கள் போதாது;(அப்படி எழுத எவரும் தயாராக இல்லை;மீறி எழுதினால் அவர்கள் உள்ளே போக வேண்டி வரும்)வெறும் தேசபக்தி இருந்தால் ஒரே நேரத்தில் நாம் நமது அண்டை நாடுகளுடன் எப்போதும் போரிட்டுக்கொண்டே இருப்போம்;இரண்டும் சேர்ந்தே இருந்தால் மட்டுமே இந்தியா உலகின் ஒரே வல்லரசாக உயரும்.இந்த நூற்றாண்டே இந்து நூற்றாண்டாக மாறிவிடும்.இனிவரும் அனைத்து நூற்றாண்டுகளுமே இந்து நூற்றாண்டாகவும் மாறிவிடும்.
நாம் வாரம்/மாதம் ஒருமுறை குடும்பத்தோடு கோவிலுக்குச் செல்கிறோமா? மூன்று மாதங்களுக்கு ஒருமுறை குடும்பத்தோடு அல்லது நாம் மட்டுமாவது குலதெய்வக் கோவிலுக்குச் செல்கிறோமா?குலதெய்வம் கோவிலில் ஒரு மாதத்திற்கு நைவேத்தியத்திற்கு ஆகும் அரிசியை நாம் வாங்கித் தருகிறோமா?இதைச் செய்தாலே போதும்;நமது தேசத்துக்கு எதிராக சதி செய்யும் அத்தனை சர்வதேச சதிகளும் சிதைந்து சின்னாபின்னமாகிவிடும்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
எந்த ஒரு நாடாக இருந்தாலும் தனது இறையாண்மையையும்,சுய மரியாதையையும் பாதுகாக்க கல்வித்துறை,ராணுவம்,பத்திரிகைத்துறை,தொலைத் தொடர்புத்துறை இவைகளை மட்டுமாவது தனது முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்;பெரும்பாலான வெளிநாடுகள் உணவு உற்பத்தி மற்றும் பகிர்ந்து வழங்கும் துறையையும் தனது சொந்தக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன;இந்த ஐந்து துறைகளிலும் கொள்கைரீதியாகக் கூட வெளிநாட்டினர் ஊடுருவாமல் கண்கொத்திப்பாம்பாக பார்த்துக் கொள்வர்;(இதில் கோட்டை விட்டதால் தான் சோவியத் யூனியன் தனது வல்லரசு அந்தஸ்தை இழந்து,பல நாடுகளாகச் சிதறியது)
ஆனால்,நமது இந்தியாவில்?
இந்த ஐந்து துறைகளையும் அமெரிக்காவுக்கும்,ஐரோப்பாவுக்கும் ஒப்பனாகவே இந்த காங்கிரஸ் அரசு தாரைவார்த்துவிட்டது.
அமெரிக்கப்பல்கலைக்கழகங்கள் இந்தியாவுக்கு வர இருப்பதால்,இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்களை மூட வைத்துவிட்டார் நம்ம கபில்சிபில்! என்ன ஒரு அமெரிக்கவிசுவாசம்!
மேல்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவுக்கு வந்தால்,மாணவர் விடுதி,மாணவியர் விடுதி என்று தனித்தனியாக இருக்காதாம்;எப்படி? வெளிநாட்டுப்பல்கலைக் கழகங்கள் கல்வியையா வளர்க்கும்? கல்வி என்பது நமது நாட்டில் சேவையாக கருதப்படுகிறது.ஆனால்,இவை சம்பாதிக்கவே வரும்;சேவை செய்யவா வரும்?
இதற்கு ஓடோடிப் போய் சிகப்புக் கம்பளம் விரிக்கிறது இந்தியாவின் மத்திய கல்வித்துறையும்,மனிதவள மேம்பாட்டுத்துறையும்! இதைவிடக் கேவலம் உலகத்தில் ஏதும் உண்டா?
ராணுவத்துறையில் அந்நிய முதலீட்டை 51%க்கும் அதிகரித்துவிட்டது.இதனால்,நமது ராணுவத்துக்குத் தேவையான ஆயுதங்களை வெளிநாடுகள் மட்டுமே சப்ளை செய்யும்.51% ஆக்கும் முன்பே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தரமற்ற ஆயுதங்களையே சப்ளை செய்திருக்கின்றன.ஒரு போர் என்று வரும்போது ஆயுதங்களின் தரம் மிகவும் முக்கியம்;வீர தீரம் மிக்க நமது ராணுவ வீரர்கள் எவ்வளவு அவமானப்பட போகிறார்களோ?
பத்திரிகைத் துறையில் சில மாதங்களுக்கு முன்பு 71% வரை அந்நிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கிவிட்டது இந்த திமிர் பிடித்த காங்கிரஸ் அரசு.ஏற்கனவே,பெரும்பாலான இந்தியப் பத்திரிகைகளில் இருக்கும் எடிட்டோரியல்களில் இந்தியாவுக்கு எதிரான சிந்தனை உள்ளவர்கள் தான் பணிபுரிகின்றனர்.தேசபக்தியைத் தூண்டும் விதமான செய்திகள் தனது பத்திரிகைகளில் வராமல் பார்த்துக்கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர்.இந்தியர்களின் மனதில் அவநம்பிக்கையை விதைப்பதில் சூரர்களாக இருக்கிறார்கள்.(உதாரணம்:ஹிந்துவில் கடந்த 30 ஆண்டுகளாக பணிபுரிந்த என்.ராம்;தற்போது மத்திய உளவுத்துறையின் நிர்ப்பந்தத்தால் பணியிலிருந்து வெளியேற்றப்பட்டார்)இந்த சூழலில்,இனி ஹிந்து,ஹிந்துஸ்தான் என்ற பெயரில் பலவிதமான பத்திரிகைகள் வெளிநாட்டினரால் துவங்கப்படும்;பெயரில் மட்டும் தேசபக்தியும்,தெய்வபக்தியும் இருக்கும்;ஆனால்,செய்திகள் மட்டும் இந்தியாவிற்குள்ளேயே இந்தியாவை கேவலப்படுத்தும் விதமாகவும்,வெளிநாடுகளை புகழ்ந்து தள்ளும் விதமாகவும் செய்திகள் வரும்;நமது வீட்டுக்குள்ளேயே (நாட்டுக்குள்ளேயே)வந்து,நமது வீட்டினரை இழிவுபடுத்த நாமே(காங்கிரஸ்) அனுமதியளித்திருப்பது அதன் முட்டாள்த்தனத்தையே காட்டுகிறது.
தொலைத்தொடர்புத்துறையில் பல செல்போன் சேவை நிறுவனங்கள் இந்தியாவில் செயல்படுகின்றன.இதைமட்டுமே நாம் கவனிக்கிறோம்; வெளிநாட்டு உளவுநிறுவனங்களின் பினாமிகள் இந்தியாவுக்குள் செல்போன் சேவை நிறுவனங்களைத் துவக்கிவிட்டால்,இந்தியாவைப்பற்றிய அனைத்து ரகசியங்களையும் சுலபமாகத் திருடிவிடலாம்;2ஜி,3ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று நமது நாட்டின் தொலைத்தொடர்புத்துறையே ஊழலில் சர்வதேச அளவில் பெயர் கெட்டுப்போய்விட்டது.இதுவும் சேர்ந்து கொண்டால்?
உணவுத்துறையை எடுத்துக் கொண்டால்,உணவு உற்பத்தியில் தன்னிறைவை எட்ட வேண்டும் என்ற எண்ணம் நம்மை ஆள்பவர்களுக்கு சிறிதாவது இருக்கிறதா?வெளிநாட்டு உணவுகளின் விலை(பிஸ்ஸா,பர்கர்) இந்தியாவில் மிகக் குறைவாகவும்,நமது நாட்டு உணவுகளின் விலை மிக அதிகமாகவும் இருக்கிறது.இதன் பின்னாலும் சர்வதேசச் சதி இருக்குமோ? என்று தோன்றுகிறது.
பெரும்பாலான வெளிநாடுகள் இந்த நான்குத் துறைகளையும் அளவற்றதேசபக்தியோடும்,அக்கறையோடும் தனது சொந்தக் குழந்தையைப் போல கவனித்து வருகின்றன.ஏனெனில்,எந்த ஒரு நாட்டுக்கும் சுயமரியாதையும்,சுய கவுரவமும் ரொம்ப முக்கியம்.
தனி மனிதர்களின் நிலை உயர்த்தப்பட்டால்,அவர்களின் செயல்பாடுகளால் அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களின் தரம் உயரும்;நிறுவனங்களின் செயல்பாடுகளின் தரம் உயர்ந்தால் நாட்டின் நிலை உயரும் என்று சுவாமி விவேகானந்தர் 100 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டார்.ஆனால்,கடந்த ஒன்பது ஆண்டுகளில் குடும்ப அமைப்பைச் சிதைக்கும் விதமாகவும்,தனி மனிதர்கள் சீரழியும் விதமாகவும் ஏராளமான சட்டங்களை இப்போதைய அரசாங்கம் கொண்டு வந்திருக்கிறது;தினமும் பெட்ரோல்,டீசல் விலையை உயர்த்துகிறது.சர்வாதிகாரி போல நடந்துகொண்டு குடும்ப அமைப்பை ஒழித்துக் கட்டுவதில் படுமும்முரமாக இருக்கிறது.
நமக்கோ இதைப் பற்றி சிந்திக்கக் கூட நேரமில்லாமல் பணம் சம்பாதிக்க தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கிறோம்.
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ
No comments:
Post a Comment