மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ராதாநாத் சித்தா என்பவர் தான் இந்தியாவில் முதல் நில அளவை(சர்வே) செய்தார்.செயிண்ட் தாமஸ் மலையில் பணி தொடங்கியது.இமயமலையை அளந்தததும் ராதாநாத் சித்தா தான்.இமயமலையைச் சரியாக அளந்து உலகிலேயே மிக உயரமான சிகரம் இதுதான் என்று தனது உயரதிகாரிக்குச் சொன்னார்.
அந்த பிரிட்டிஷ் தலைமை அதிகாரி ஜார்ஜ் எவரெஸ்ட் இந்தத் தகவலை இங்கிலாந்து அரசுக்குத் தெரிவித்தார்.அரசாங்கம் அந்த அதிகாரியின் பெயரையே மலைக்குச் சூட்டி எவரெஸ்ட் என்று அழைக்கத் துவங்கியது.இதற்காக முழுமையாக உழைத்த ராதாநாத்தின் பெயர் இன்று நம்மில் பலருக்குத் தெரியாது.இப்படித்தான் வரலாறுகள் சாமானிய மக்களின் உழைப்பை மூடி மறைக்கப்பட்டது.
நேரு குடும்பத்திற்கும் காந்தி குடும்பத்திற்கும் ஒரு தொடர்பும் கிடையாது.ஆனால்,இந்தியாவை ஆள்பவர்கள் தனது பெயருக்குப் பின்னால் காந்தி என்ற பெயரை வைத்துக் கொள்வது வழக்கமாகிவிட்டது.வெளிநாட்டினர் மட்டுமல்ல;நம் நாட்டினருமே காந்தி குடும்பத்தார்தான் இந்தியாவை ஆள்கின்றனர் என்று நம்பி வருகின்றனர்.
மும்பையைச் சேர்ந்தவர் உஷா மேத்தா,பிரிட்டிஷ் ஆட்சியை அதிரவைத்தவர்.ஆஸாத் ரேடியோ இவரது தயாரிப்பு.ஆங்கிலேயரை எதிர்த்து பாரத சுதந்திரத்திற்காக தினமும் இரவு 7 மணிக்கு மட்டும் ஒலிபரப்பாகும் ஒரு பண்பலையை தனியாக நின்று நடத்தினார் உஷாமேத்தா.அந்த ரேடியோ நிலையம் எங்கிருந்து செயல்படுகிறது என்பதை கண்டுபிடிக்க முடியாமல் கிறிஸ்தவ ஆங்கிலேய அரசு திணறியது.பல வருடங்களாக நீண்டத் தேடலுக்குப் பின்னர் உஷா மேத்தாவை ஆதாரங்களுடன் கிறிஸ்தவ பிரிட்டன் கைது செய்தது. அவரது கைகளை கொதிக்கும் வெந்நீரில் முக்கி எடுத்து சித்ரவதை செய்தது.இந்த வரலாறு மறைக்கப்பட்டது.
அன்று கிறிஸ்தவ பிரிட்டன் செய்ததையே இன்று ஆளும் இந்திய அரசு விடாமல் செய்து வருகிறது.
நன்றி:ஜீனியர் விகடன்,தமிழ் மண்ணே வணக்கம் பகுதி,பக்கம்25,வெளியீடு 3.11.2013
No comments:
Post a Comment