Tuesday, 7 October 2014

புலிப்பாணி ஜோதிடம் - கேது மகாதிசை பலன்கள்

கேது மகாதிசைகேது புத்திப் பலன்கள்

கேது பகவானின் திசை வருடம் 7 ஆகும்இதில் இவரது சுய புத்தியானஆதிக்க காலம் 4 மாதம் 27 நாள்களாகும்இக்காலகட்டத்தில் இவர் நிகழ்த்தும்பலன்களாவன இவை தான் என்று சொல்வோம்நன்கு கவனித்துகேட்பாயாகபுகழ் மிக்க அரசரது படையாலும் ஆயுதங்களாலும் பீடைகள்ஏற்படும்வலிய பகைவரால் பலவகைத் தொந்தரவுகளும் அதனால்வியாதியும் நேரும்பெரும் பொருட்சேதமும் அங்கத்தில்குறையுண்டாதலும் தானாகவே வந்துசேரும்தான்வசிக்கும் நகரத்தில்பலவகைச் சூனியங்களும் உருவாகும்நாட்டுமக்கள் எல்லாரும் பகையாகித்துன்பம் தருவதால் நன்மை நேராது என்று போகர் அருளால் புலிப்பாணிகூறினேன்.இப்பாடலில் கேது மகாதிசையில் கேது புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


கேது மகாதிசைசுக்கிர புத்திப் பலன்கள்

கேது மகாதிசையில் சுக்கிரபகவானின் ஆதிக்க காலம் 1 வருடம் 2மாதங்களாகும்இக்கால கட்டத்தில் இவரால் நிகழ்த்தப்பெறும் பலன்களைக்கூறுகிறேன்கேட்பாயாககுறைதல் இல்லாத பகைவரால் விலங்குபூணுதல் நேரும்பலவகையான பொன்னாபரணங்களும் விரயங்களாகும்.மனைவிக்கும் இச்சாதகனுக்கும் அபமிருந்து தோடம் காணும்எனினும்தன்மையுள்ள அரச சகாயத்தால் மனத்தில் மகிழ்ச்சியுண்டாகி மனைவிமக்களுடன் சுகித்து வாழ்வான் என போகர் அருளால் புலிப்பாணி பாடினேன்.இப்பாடலில் கேது மகாதிசையில் சுக்கிர புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


கேது மகாதிசைசூரிய புத்திப் பலன்கள்

கேது மகாதிசையில் சூரிய பகவானின் ஆதிக்க காலம் 4 மாதம் 6நாள்களாகும்இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களைக் கூறுகிறேன்.கேட்பாயாகமனம் ஒவ்வாத பகைவரால் துன்பம் நேரும்அக்கினி பயமும்பேய்பிசாசுகளினால் மிகுந்த பயமும் சேர்ந்து இச்சாதகனைக் கொல்லும்.இவர்க்கு உறுதுணையாக நின்ற தந்தைக்கும்குருநாதர்க்கும் மரணம்ஏற்படும்வீணான தண்டச் செலவுகளால் இச்சாதகன் துறவு பூணுவான் எனப்போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.இப்பாடலில் கேது மகாதிசையில் சூரிய புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


கேது மகாதிசைசந்திர புத்திப் பலன்கள்


இக்கேது மகாதிசையில் சந்திர பகவானின் ஆதிக்க காலம் 7 மாதங்களாகும்.இக்கால கட்டத்தில் இவர் நிகழ்த்தும் பலன்களாவன இவைதான் எனக்கூறுவோம்கவனித்துக் கேட்பாயாகமனைவியானவள் , இச்சாதகனுடன்மனம் வேறுபட்டு விலகி நிற்பாள்அதர்மம் நேரும்மனைவி மக்கள்பாழடைவர்மிகப் பலவாகிப் பல்கி இருந்து பெரும் பொருள்கள்சேதமடைதலும் நேரும்தனது மனைவி தண்ணீரில் வீழ்ந்து தற்கொலைசெய்து கொள்ளும் நலமில்லாத துர்ப்பலன் நிகழும்இது கண்டு இச்சாதகன்நாணுவான் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.இப்பாடலில் கேது மகாதிசையில் சந்திர புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


கேது மகாதிசைசெவ்வாய் புத்திப் பலன்கள்

இனி இக்கேது பகவானின் திசையில் செவ்வாயின் ஆதிக்க காலம் 4 மாதம் 27நாள்களாகும்இக்காலகட்டத்தில் இவரால் நிகழ்த்தப் பெறும் பலன்களைக்கூறுவோம்கவனமாகக் கேட்பாயாகவலிமையுள்ள இனஜன பந்துக்களும்தாமறியாதவாறே சத்துருக்களாக மாறிப் போவர்மனையில் சிலர் கோள்சொல்லுதலால் குடும்பம் பாழாகும்பெண்களால் குல நாசம் ஏற்படும்.நிதானித்துத் திரட்டிய வெகுதனமும் விரயமாகிப்போகும்சகோதரவிரோதம் உண்டாகி அதனால் தீமை மிக்க பலனே நேரும் எனப் போகர்அருளால் புலிப்பாணி கூறினேன்.இப்பாடலில் கேது மகாதிசையில் செவ்வாய் புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


கேது மகாதிசைஇராகு புத்திப் பலன்கள்

கேது மகாதிசையில் இராகுபகவானின் ஆதிக்க காலம் 1 வருடம் 18நாள்களாகும்நன்மை தராத அக்கால கட்டத்தில் இவர் நிகழ்த்தும்பலன்களைக் கூறுவோம்கவனமாய்க் கேட்பாயாகபகைவராலும்,திருடர்களாலும் மிகு பயம் ஏற்படும்சந்தேகம் கொண்ட மனைவியினால்குடும்பத்தில் வீண் கலகம் ஏற்படும்தேகத்தில் வியாதி காணும்,இச்சாதகனின் குலதெய்வமானது இவன் மனையில் தங்காது குடியோடிப்போகும் என்று போகமா முனிவர் அருளால் புலிப்பாணி கூறினேன்.இப்பாடலில் கேது மகாதிசையில் இராகு புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


கேது மகாதிசைவியாழன் புத்திப் பலன்கள்

கேது மகாதிசையில் வியாழ பகவானின் ஆதிக்க காலம் 11 மாதம் 6 நாட்கள்ஆகும்இக்கால கட்டத்தில் புத்திரனால் வெகுதனம் உண்டாகும்மனம்விரும்பிய மனைவி மகிழ்ச்சிக் கூத்தாடும் வண்ணம் மனையில் மகிழ்ச்சிபொங்கும்பூமிதனில் விளைச்சல் மிகுந்து வெகு லாபம் தன்னிறைவாகவந்தடையும்வெகுவான அரசாங்க நன்மைகளும் உதவிகளும் சேர்ந்துமனச்சோர்வகற்றும்பலவகையிலும் சகாயங்கள் நேர்ந்து யோகத்தைச்செய்யும் என்று போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.இப்பாடலில் கேது மகாதிசையில் வியாழன் புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


கேது மகாதிசைசனி புத்திப் பலன்கள்

கேது மகாதிசையில் சனிபகவானின் ஆதிக்க காலம் 1 வருடம் 1 மாதம் 9நாள்களாகும்இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களைக் தெளிவாகக்கூறுவோம்கவனமாகக் கேட்பாயாகவானளாவிய செல்வமும்பெரும்பொருளும் சேதம் அடையும்நன்மையையே விரும்பிச் செய்யும் மனைவிமக்கள் கை விட்டுப் போதலும் நேரும்மூன்று மாத கால அளவில்மரணமும் நேரும்மிகுதியான மனக் கவலையால் பீடித்த இச்சாதகனுக்குமரணம் நேர்தலும் உண்டு என்று போகமா முனிவரின் பேரருளால்புலிப்பாணி கூறினேன்.இப்பாடலில் கேது மகாதிசையில் சனி புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


கேது மகாதிசைபுதன் புத்திப் பலன்கள்

கேது மகாதிசையில் புதன் பகவானின் ஆதிக்க காலம் 11 மாதம் 27நாள்களாகும்நன்மை தரும் இக்காலகட்டத்தில் நிகழும் பலன்களைக்கூறுகிறேன்கவனமாகக் கேட்பாய்இதுவரை பற்பல இன்பங்களில்வயப்பட்டு மயங்கிய நிலை மாறி இந்நிலவுலகில் இச்சாதகனை எல்லாரும்ஒரு சிறந்த மனிதன் என்று கூறத்தக்க நிலை உண்டாகும்திருமகள் இவன்மனையை விரும்பிச் சேர்வாள்எனவே தீங்கொன்றும் நேராது எவ்விதமனக்கவலையும் இல்லாதொழியும் எனப் போகமா முனிவர் பேரருளால்புலிப்பாணி பாடினேன்.இப்பாடலில் கேது மகாதிசையில் புதன் புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment