Sunday, 12 October 2014

விரும்பியதைக் கொடுக்கும் பைரவ வழிபாடு



1.அசிதாங்க பைரவர்





2.ருரு பைரவர்






3. சண்ட பைரவர்






4. குரோத பைரவர்



5. உன்மத்த பைரவர்





6. கபால பைரவர்




7. பீஷண பைரவர்




8. சம்ஹார பைரவர்







என்பனவர்களாம்.








விரும்பியதைக் கொடுக்கும் பைரவ வழிபாடு :




இத்தகைய ஸ்தோத்திரங்களினால் நம் தீராத வினைகள் எல்லாம் தீர்ந்து நன்மை விளையும் என்பது ஐதீகம். கொடிய வல்வினைகளையும் நொடியில் போக்கும் தன்மை கொண்டவை இந்த ஸ்தோத்திரங்கள். ஆனால் இவற்றைத் துதிக்கும் முன் கீழ்கண்டவை சரியாக இருந்தால்தான் பூரண பலன் கிட்டும்.
1. இவற்றைத் துதிப்பவர்கள் சைவ உணவுப் பழக்கம் கொண்டவராக இருத்தல் வேண்டும்.
2. தினம்தோறும் குளித்து முடித்து விட்டு பக்தியுடனும் ஆச்சாரத்துடனும் இந்த ஸ்தோத்திரங்களைச் சொல்லி இறைவனைத் தொழ வேண்டும்.
3. புறதூய்மையோடு அகத்தூய்மையும் மிக அவசியம்.
4. தொடர்ந்து 48 நாட்கள் தடையில்லாமல் நம்பிக்கையோடு சொல்லி வர பலன் நிச்சயம்.
5. மந்திரங்களை சரியாக உச்சரிக்க இயலாதவர்கள் குருமார்கள் மூலம் சரியான உச்சரிப்பைக் கேட்டறிந்து  அதன் படி பாராயணம் செய்யவும்.




எட்டாவது திதிநாள் எனப்படும் வளர்பிறையிலும் தேய்பிறையிலும் வரும் எட்டாவது திதிநாட்கள் பைரவ வழிபாட்டிற்குரியவை.

இவ்விரு அஷ்டமிகளில் தேய்பிறை அஷ்டமி விரதம் இருந்து சிவனை வழிபடுவதற்குரிய நாள். ஆடித்தேய்பிறை அஷ்டமிக்கு நீலகண்ட அஷ்டமி என்ற பெயரும் உண்டு.  இந்த நாளில் பழங்கள் மட்டுமே உண்டு அர்ச்சிக்க வேண்டும். தட்சிணாமூர்த்தியை மேட்கொண்டு நடத்தும் விரதம் இது.  ஞாயிறு பைரவ வழிபாட்டிற்கு உகந்த நாள். திரிபுவனம் ஸ்ரீ சரபர் - திருவிசலூர் சதுர்கால பைரவர் அல்லது அருகில் இருக்கும் ஆலயத்து பைரவரை வழிபடலாம்.

நவக்கிரக தோஷங்கள் நீங்க சதுர்கால பைரவருக்கு செவ்வரளி பூவால் 9 வாரங்கள் ஸ்கஸ்ரநாமா அர்ச்சனை செய்ய வேண்டும்.

குழந்தைப்பேறு கிட்ட தம்பதியர் ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் சிவப்பு நிறப் பூக்களால் ஸ்கஸ்ரநாமா அர்ச்சனை செய்ய வேண்டும்.

வறுமை நீங்க வளர்பிறை அஷ்டமிகளில்  மாலை நேரத்தில் வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அஷ்டோத்திரமே ஸ்கஸ்ரநாமமோ அர்ச்சனை செய்யது 11 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். அஷ்டமிகளில் தொடர்ந்து வழிபடவேண்டும்.

இழந்த சொத்தைத் திரும்பப் பெற 11 அஷ்டமிகள் பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும் மிளகை சிறு மூட்டையாகக் கட்டி நெய் அல்லதி நல்லெண்ணை இட்டு தீபம் ஏற்றுவது பைரவ தீபமாகும்.

சனி தோஷம் நீங்க பைரவருக்கு 9 சனிக்கிழமைகள் சிவப்பு நிறப் பூக்களால்அர்ச்சனை செய்யது 4 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும்.

திருமணத் தடை நீங்க ஞாயிறு இராகு காலத்தில் திருநீறு அபிஷேகம் செய்து மிளகு வடை மாலை சாத்தி அர்ச்சனை செய்ய வேண்டும்.

பகைபயம் நீங்க 9 முறை பைரவருக்கு அர்ச்சனை செய்யது வசதிக்கு ஏற்ப நிவேதனங்கள் செய்ய வேண்டும். இப்படி 9 கிழமைகள் செய்தால் வியாபார நஷ்டம் விலகும், எல்லாத் தொல்லைகளும் அகலும்.

தீராத் நோய்கள் தீர பைரவ ஹோமமும், அபிஷேகமும் செய்ய வேண்டும். அந்த அபிஷேக தீர்த்தத்தை உட்கொள்ள பிணிகள் தீரும்.

செல்வம் செழிக்க வளர்பிறை அஷ்டமிகளில் சதுர்கால பைரவருக்கு சொர்ணபுஷ்பம் அல்லது 108 காசுகளால் அர்ச்சிக்க வேண்டும். அந்தக்காசுகளை அலுவலகம் அல்லது வீட்டில் பணப் பெட்டியில் வைக்க செல்வம் செழிக்கும்.

.


1. ஆதி சங்கரர் அருளிய கால பைரவாஷ்டகம்
தேவராஜஸேவ்யமானபாவனாம்க்ரிபங்கஜம்
வ்யாலயக்யஸுஉத்ரமின்துஷேகரம் க்ருபாகரம் .
நாரதாதியோகிவ்ரு‍ந்தவந்திதம் திகம்பரம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..        

பானுகோடிபாஸ்வரம் பவாப்திதாரகம் பரம்
நீலகண்டமீப்ஸிதார்ததாயகம் த்ரிலோசனம் .
காலகாலமம்புஜாக்ஷமக்ஷஷுஉலமக்ஷரம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..        

ஷூலடம்கபாஷதண்டபாணிமாதிகாரணம்
ஷ்யாமகாயமாதிதேவமக்ஷரம் நிராமயம் .
பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ரதாண்டவப்ரியம்
காஷிகாபுராதிநாதகாலபைரவம் பஜே ..        

புக்திமுக்திதாயகம் ப்ரஷஸ்தசாருவிக்ரஹம்
பக்தவத்ஸலம் ஸ்திதம் ஸமஸ்தலோகவிக்ரஹம் .
வினிக்வணன்மனோக்யஹேம கிங்கிணீலஸத்கடிம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..        

தர்மஸேதுபாலகம் த்வதர்மமார்கனாஷனம்
கர்மபாஷமோசகம் ஸுஷர்மதாயகம் விபும் .
ஸ்வர்ணவர்ணஷேஷ்ஹபாஷஷோபிதாம் கமண்டலம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..        

ரத்னபாதுகாப்ரபாபிராமபாதயுக்மகம்
நித்யமத்விதியமிஷ்டதைவதம் நிரம்ஜனம் .
ம்ரு‍த்யுதர்பனாஷனம் கராலதம்ஷ்ட்ரமோக்ஷணம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..        

அட்டஹாஸபின்னபத்மஜாண்டகோஷஸம்ததிம்
த்ரு‍ஷ்டிபாத்தனஷ்டபாபஜாலமுக்ரஷாஸனம் .
அஷ்டஸித்திதாயகம் கபாலமாலிகாதரம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..        

பூதஸம்கனாயகம் விஷாலகீர்திதாயகம்
காஷிவாஸலோகபுண்யபாபஷோதகம் விபும் .
நீதிமார்ககோவிதம் புராதனம் ஜகத்பதிம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..        

          பல ச்ருதி ..
காலபைரவாஷ்டகம் படம்தி யே மனோஹரம்
க்யானமுக்திஸாதனம் விசித்ரபுண்யவர்தனம் .
ஷோகமோஹதைன்யலோபகோபதாபனாஷனம்
ப்ரயான்தி காலபைரவாம்க்ரிஸன்னிதிம் நரா த்ருவம்

இதி ஸ்ரீமத் சங்கராசார்ய விரசிதம்
ஸ்ரீ காலபைரவாஷ்டகம் சம்பூர்ணம் ..

2. ஸ்ரீ பைரவர் காயத்ரி மந்திரங்கள்
ஒம் ஷ்வானத் வஜாய வித்மஹே !
சூல ஹஸ்தாய தீமஹி !
தன்னோ பைரவ : ப்ரசோதயாத் !!

ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே
ஸ்வாந வாஹாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்

ஓம் திகம்பராய வித்மஹே
தீர்கதிஷணாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்

3. சொர்ணாகர்ஷண பைரவ மந்திரம்


தினந்தோறும் காலையில் " ஓம் ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷணபைரவாய நமஹ " என்று ஜெபிப்பது நல்லது
ஓம் ஏம் க்லாம் க்லீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம்
ஹ்ரூம்ஸக: வம் ஆபத்துத்தாரணாய
அஜாமிலா பத்தாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய
மம தாரித்தர்ய வித்வேஷணாய
ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நம:

4.ஸ்ரீ பைரவ த்யானம்

ரக்த ஜுவால ஜடாதரம் சசிதரம்
ரக்தாங்க தேஜோமயம்
ஹஸ்தே சூலகபால பாச டமரும்
லோகஸ்ய ரக்ஷா கரம்
நிர்வாணம் ஸுநவாகனம்
திரிநயனஞ்ச அனந்த கோலாகலம்
வந்தே பூத பிசாச நாதவடுகம்
ஷேத்ரஷ்ய பாலம்சிவம் .

எதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்யும் தன்மை மிக்க ஸ்ரீ பைரவரை முறைப்படித் தொழுது வணங்க நம் தீரா வினைகள் அனைத்தும் தீரும்.

No comments:

Post a Comment