ரிஷபம் , கார்த்திகை 2,3,4, ரோகினி, மிருக சீரிஷம் 1,2ம் பாதம்
தியாக மனப்பான்மையும் சுயநலமில்லாத குணமும், பெருந்தன்மையும் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே! ஒரு ராசியில் அதிக காலம் தங்கக் கூடிய கிரகமான சனி பகவான் வரும் 16.12.2014 முதல் 19.12.2017 வரை உங்கள் ஜென்ம ராசிக்கு 7 ஆம் வீட்டில் சஞ்சரிக்கவுள்ளார். சனி 7 இல் சஞ்சரிப்பது கண்ட சனியாகும்.
இக்காலங்களில் உங்கள் ஜென்ம ராசியையும், சுகஸ்தானமான 4 ஆம் வீட்டையும், பாக்கிய ஸ்தானமான 9 ஆம் வீட்டையும் பார்வை செய்கிறார். சனி 7 ல் சஞ்சரிப்பது கண்டச் சனி அமைப்பு என்பதால் சற்று ஏற்ற இறக்கமான பலன்களைப் பெறுவீர்கள். கூட்டுத் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்காது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. 4,9 ஆகிய ஸ்தானங்களை பார்வை செய்வதால் எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாதபடி சுகவாழ்வு, சொகுசு வாழ்வில் பாதிப்பு உண்டாகும். பொருளாதார நிலையிலும் இடைய+றுகள் உண்டாகும். அசையும் அசையா சொத்துகளால் சிறு சிறு விரயங்கள் ஏற்படும். சனி உங்கள் இராசிக்கு தர்மகர்மாதிபதி என்பதால் பெரிய கெடுதிகளை செய்ய மாட்டார். வீடுமனை, வண்டி வாகனங்களால் சுப செலவுகள் ஏற்படும். அடிக்கடி தூர பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும்.
சனி 7 இல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஆண்டுகோள் என வர்ணிக்கப்படும் குருபகவான் 05.07.2015 வரை 3 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் சற்று அலைச்சல்கள், நெருக்கடிகள் உண்டாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும் 05.07.2015 முதல் 02.08.2016 வரை சுகஸ்தானமான 4 ஆம் வீட்டில் குரு சந்திப்பது அவ்வளவு சிறப்பான அமைப்பு என்று கூறமுடியாது. அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் தேவையற்ற அலைச்சல்கள் சுக வாழ்வில் பாதிப்புகள் ஏற்படும். 02.08.2016 முதல் 02.09.2017 வரை பஞ்சம ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சாரம் செய்யவிருப்பது அற்புதமான அமைப்பாகும். இக்காலத்தில் தொழில் பொருளாதார ரீதியாக மேன்மை, குடும்பத்தில் திருமண சுப காரியங்கள் கைகூடும் வாய்ப்பு, கணவன் மனைவியிடையே ஒற்றுமை, புத்திர சிறப்பு, யாவும் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் சேரும். கடன்கள் குறையும்.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியமானது ஒரளவுக்கு சுமாராக இருக்கும். ஜென்ம ராசிக்கு 7 இல் சனி சஞ்சரித்து ஜென்ம ராசியைப் பார்வை செய்வது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இது கண்டச் சனி அமைப்பாகும். இதனால் உடல் நிலையில் சோர்வு கை, கால் மூட்டுகளில் வலி, எதிலும் விரைந்து செயல்பட முடியாத அளவிற்கு மந்த நிலை ஏற்படும். மனைவியின் உடல் நிலையிலும் பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவினை ஏற்படுத்தும் முன் கோபத்தைக் குறைத்து பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது.
குடும்பம் பொருளாதார நிலை
சனி ஜென்ம ராசிக்கு 7 இல் சஞ்சரிப்பதால் கணவன் மனைவியிடையே ஒற்றுமைக் குறைவு ஏற்படும்.; பணவரவுகள் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சி அளிக்கும். ஆடம்பர செலவுகளைக் குறைப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் சற்று அனுகூலப்பலனை அடைய முடியும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். அசையும் அசையா சொத்துகளால் சிறு சிறு விரயங்கள் தோன்றும். புத்திரவழியில் சிறுசிறு மனசஞ்சலங் கள் தோன்றி மறையும்.
உத்தியோகம்
ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானாதிபதி சனி 7 இல் சஞ்சரிப்பதால் உத்தியோக ரீதியாக எதிர் பார்க்கும் உயர்வுகள் சற்று தடைகளுக்குப் பின் கிட்டும். நீங்கள் நல்ல உழைப்பாற்றல் கொண்டவர்கள் என்பதால் எந்தவித பிரச்சினைகளையும் சமாளித்து திறமைகளை வெளிப்படுத்தி உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். உடன் பணி புரிபவர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் உங்களுக்குள்ள வேலைப்பளு குறையும். பிறர் விஷயங்களில் தேவையின்றி தலையீடு செய்வதைக் தவிர்ப்பது நல்லது.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்களும் எதிர் நீச்சல் போட்டாவது ஏற்றத்தைப் பெற முடியும். வரவேண்டிய நல்ல வாய்ப்புகள் சில நேரங்களில் தட்டிச் சென்றாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தடையின்றிக் கிடைக்கும். கூட்டாளிகளிடமும் உழைப்பாளிகளிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சிறு சிறு அலைச்சல்களை சந்தித்தாலும் லாபங்கள் குறையாது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களை சற்று தள்ளி வைப்பது நல்லது. அதிக உழைப்பு உடல் சோர்வை உண்டாக்கும் என்பதால் கவனம் தேவை.
பெண்கள்
பெண்களுக்கு உடல் நிலையானது சற்று சோர்வுடன் இருந்தாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடனேயே செயல்படுவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பணவரவுகளும் தேவைக்கேற்றபடியே இருக்கும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். பணி புரியும் பெண்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது.
கொடுக்கல் வாங்கல்
பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. கொடுத்த கடன்களைத் திரும்பப் பெறுவதில் சில சிக்கல்களை சந்திப்பீர்கள். கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளிலிருப்போர் சிறு சிறு விரயங்களையும் தேவையற்ற அலைச்சல்களையும் எதிர் கொள்ள நேரிடும்.
அரசியல்
மக்கள் செல்வாக்கிற்கு காரகனான சனி சமசப்தம ஸ்தானமான 7ல் சஞ்சரிப்பதால் மக்களின் ஆதரவு எப்பொழுதும் உண்டு என்றாலும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவது நல்லது. உடனிருப்பவர்களால் சில மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். எடுக்கும் முயற்சிகளை எதிர் நீச்சல் போட்டே முடிக்க வேண்டி வரும். எதிலும் சற்று கவனமுடன் செயல்பட்டால் நற்பலனைப் பெற முடியும்.
விவசாயிகள்
மகசூல் சிறப்பாக இருக்கும். உங்களின் உழைப்பிற்கேற்ற பலனை அடைவீர்கள். காய், கனி, ப+ போன்றவற்றாலும் லாபம் கிட்டும். கால் நடைகளால் சிறு சிறு விரயங்களும் நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வீண் வம்பு வழக்குகளும் ஏற்பட்டாலும் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றலும் உண்டாகும். புதிய நவீனகரமான உபகரணங்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். வேலையாட்கள் அனுசரித்துச் செல்வது நல்லது.
மாணவ மாணவியர்
கல்வியில் சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிர் பார்த்த இலக்கை அடைவதுடன் பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டுதல்களையும் பெறுவீர்கள். நண்பர்களின் உதவி சிறப்பாக இருக்கும் என்றாலும் நல்ல நட்புகளை தேர்ந்தெடுத்துப் பழகுவது நல்லது. விளையாட்டுப் போட்டிகளின் போது சிறு சிறு காயங்கள் ஏற்படும் என்பதால் எதிலும் கவனம் தேவை.
சனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 16.12.2014 முதல் 24.01.2015 வரை
உங்கள் இராசிக்கு 8,11 இக்கு அதிபதியான குருவின் நட்சத்திரத்தில் சனி 7 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகளும் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளும் ஏற்படும். குரு 3 இல் வக்ர கதியிலும். கேது 11 லும் சஞ்சரிப்பதால் திருமண சுப காரியங்கள் தடைகளுக்கு பின் நிறைவேறும். ராகு 5 இல் சஞ்சரிப்பதால் புத்திர வழியில் நிம்மதி குறைவு, ப+ர்வீக சொத்துக்களால் வீண் செலவுகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும் என்றாலும் ஒற்றுமை குறையாது. உற்றார்,உறவினர்களை சற்றே அனுசரித்து செல்வது நல்லது. செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் அமையும் என்றாலும் கூட்டாளிகளால் சற்று நிம்மதி குறைவு ஏற்படும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறு சுறுப்புடன் செயல் பட முடியும்.
சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 14.03.2015 வரை
தனது சொந்த நட்சத்திரத்தில் சனி 7 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் குரு வக்ர கதியிலும், 11 இல் கேது இருப்பதாலும் பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்றாலும் ஒற்றுமை குறையாது. பேச்சில் நிதானத்தை கடை பிடிப்பதும் உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதும் மிகவும் நல்லது. செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் அமையும். வெளிய+ர் வெளிநாட்டு தொடர்புடையவைகளாலும் அனுகூலம் கிட்டும். உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை தவிர்க்கவும்.தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும்.
சனிபகவான் வக்ரகதியில் 15.03.2015 முதல் 30.07.2015 வரை
சமசப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியிலும் கேது 11 லும்; சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். மறைமுக எதிர்ப்புகளை வெல்லக் கூடிய ஆற்றல் உண்டாகும.; சற்றே அலைச்சல்கள், சுகவாழ்வில் சோதனைகள் ஏற்பட்டாலும் பண வரவுகள் தேவைக்கேற்றபடி அமையும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப் பின் கிட்டும்.கடன்கள் குறையும்.
சனிபகவான் துலா இராசியில் விசாகம் நட்சத்திரத்தில் 31.07.2015 முதல் 05.09.2015 வரை
உங்கள் இராசிக்கு 7 இல் சஞ்சரித்த சனி இக்காலத்தில் பின்னோக்கி 6 இல் சஞ்சரிக்க இருப்பதும் 11 இல் கேது சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பாகும். இதனால் பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். ப+ர்வீக சொத்துக்களால் சிறு சிறு விரயங்கள் உண்டாகும். புத்திர வழியிலும் மனக் கவலைகள் ஏற்படும். பொருளாதார மேன்மை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் ப+ர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபங்கள் அமையும். புதிய கூட்டாளிகள் சேருவார்கள். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். வெளிய+ர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரியும் வாய்ப்பும் கிட்டும்.
சனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 06.09.2015 முதல் 18.10.2015 வரை
உங்கள் இராசிக்கு 8.11 இக்கு அதிபதியான குருவின் நட்சத்திரத்தில் சனி 7 இல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் குருபகவான் 4ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும்;. குடும்பத்தில் தடைபட்டுக் கொண்டிருந்த திருமண சுப காரியங்கள்தடைகளுக்கு பின்; கை கூடி மகிழ்ச்சியளிக்கும். சொந்த ப+மி, வண்டி வாகனம் போன்றவை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. ப+ர்வீக சொத்துக்களால் ஒரளவுக்கு லாபம் கிட்டும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறுவீர்கள.; தேவையற்ற அலைச்சல்கள் ஏற்பட கூடிய காலம் என்பதால் பயணங்களைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்திலும் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் அமையும். கூட்டாளிகளிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர் பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும்.
சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 19.10.2015 முதல் 26.03.2016 வரை
உங்கள் இராசிக்கு தர்மகர்மாதிபதியான சனிபகவான் தனது சுய நட்சத்திரத்தில் 7 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் குரு 4 ம் வீட்டிலும், 11 இல் கேதுவும் சஞ்சரிப்பதால் பண வரவுகளில் சரளமான நிலை உண்டாகும். பல்வேறு பொதுக் காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். குரு 4ஆம் வீட்டிலும் சனி 7லும் சஞ்சாரம் செய்வது சற்று சாதகமற்று அமைப்பு என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் சிறு சிறுப்பிரச்சனைகள் தோன்றும் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது செல்லவும். புத்திர வழியில் மனக் கவலைகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் நடந்து கொண்டால் அன்றாட பணிகளில் சுறு சுறுப்பாக ஈடுபட முடியும். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். செய்யும் தொழில் வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபத்தினைப் பெற முடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு பாராட்டுதல்களை பெறமுடியும்.
சனிபகவான் வக்ரகதியில் 27.03.2016 முதல் 11.08.2016 வரை
உங்கள் இராசிக்கு 7 இல் சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பண வரவுகளில் சிறு சிறு நெருக்கடிகள் நிலவினாலும் செலவுகள் கட்டுக்குள் தான் இருக்கும். எடுக்கும் காரியங்களில் தடைகளுக்குப் பின்பு வெற்றி கிட்டும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். திருமண சுப காரியங்களில் தாமத நிலை உண்டாகும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. புத்திர வழியில் மன சஞ்சலங்கள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கப் பெறும். உடன் பணிபுரிபவரை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் சற்று மந்தமாக இருந்தாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகவே ஈடுபட முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்றே மந்த நிலையை சந்திக்க நேர்ந்தாலும் தேக்க நிலை ஏற்படாது.
சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 12.08.2016 முதல் 18.11.2016 வரை
சனிபகவான் தனது சுய நட்சத்திரத்தில் 7 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் குரு 5 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் கடந்த காலங்களில் இருந்த தேவையற்ற பிரச்சினைகள் குறையும். பண வரவுகளும் திருப்தியளிப்பதாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக் கூடிய சுப சம்பவங்கள் நடைபெறும். புத்திர வழியில் பூரிப்பு, கணவன் மனைவியிடையே ஒற்றுமை உண்டாகும். கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றினாலும் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. தொழில் வியாபாரத்திலும் ஏற்றம் மிகுந்த பலன்களை அடைய முடியும். பொன் பொருள் சேரும். முன் கோபத்தை குறைத்து பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்பட்டால் எல்லா வகையிலும் அனுகூலமான பலனைப் பெற முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. எதிரிகளின் பலம் குறைந்து உங்களின் பலம் அதிகரிக்கும்.
சனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 19.11.2016 முதல் 08.04.2017வரை
உங்கள் இராசிக்கு 2.5 இக்கு அதிபதியான யோககாரகன் புதனின் நட்சத்திரத்தி;;ல் சனியும், 5 இல் குருவும் சஞ்சரிக்கும் இக்காலத்தில் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். பணவரவில் நெருக்கடிகள் விலகும்.பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். புத்திரவழியில் பூரிப்பு உண்டாகும்.திருமண சுபகாரியங்களை நிறைவேற்றும் வாய்ப்பும் அமையும். நெருங்கியவர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. தாராள தனவரவுகள் உண்டாகும். குடும்பத்தில் திருமணம் போன்ற மங்களகரமான சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாவதற்கான அறிகுறிகள் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான லாபத்தினை பெறுவர். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராத உயர்வுகளை பெறுவர்.
சனிபகவான் வக்ரகதியில் 09.04.2017 முதல் 04.08.2017 வரை
உங்கள் இராசிக்கு 7 இல் சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியிலும். குரு 5 லும் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதியில்லை. பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு இருந்த வேலைப் பளு குறையும். குடும்பத்திலும் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். புத்திர வழியில் பூரிப்பு மகிழ்ச்சி கொடுக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் மட்டும் கூட்டாளிகளை சற்று அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்களும் எதிர்பார்த்த உயர்வுகளை அடைய முடியும். சிலருக்கு வீடு மனை, வண்டி, வாகனங்கள் வாங்கும்; யோகம் உண்டாகும்.
சனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 05.08.2017 முதல் 19.12.2017 வரை
சனி தனக்கு நட்பு கிரகமான புதன் நட்சத்திரத்தில் 7 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் இராகு 3 இல் சஞ்சரிப்பதால் இக்காலங்களில் ஏற்ற இறக்கம் நிறைந்ததாகவே இருக்கும்.பண வரவுகளும் திருப்தியளிப்பதாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக் கூடிய சுப சம்பவங்கள் நடைபெறும். புத்திர வழியில் பூரிப்பு, கணவன் மனைவியிடையே ஒற்றுமை உண்டாகும். கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றினாலும் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. தொழில் வியாபாரத்திலும் ஏற்றம் மிகுந்த பலன்களை அடைய முடியும். எடுக்கும் காரியங்களில் சில தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு சாதகமானப் பலனை பெற முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் மறைந்து மந்த நிலை விலகும். 02.09.2017 இல் ஏற்படவிருக்கும் குரு மாற்றத்தின் மூலம் குரு 6 இல் சஞ்சரிக்க இருப்பதால் நீங்கள் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவதே நல்லது. தேவையற்ற பிரச்சனைகளால் குழப்பங்கள்; உண்டாகும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
மற்றவர்களின் மனதை துல்லியமாக எடைபோட்டுப் பழகக் கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு தர்மகர்மாதிபதியான சனி பகவான் சம சப்தம ஸ்தானமான 7ஆம் வீட்டில் சஞ்சரிக்கவுள்ளதால் எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள், கணவன் மனைவியிடையே ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றியினை அடைவீர்கள். பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். தேவையற்ற ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினை பெற முடியும்.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
கடுமைனான உழைப்பாற்றலும் நல்ல பண்புகளையும் கொண்ட உங்களுக்கு சனி 7ல் சஞ்சரிப்பதால் கண்டச் சனி நடைபெறுகிறது. இக்காலங்களில் ஏற்ற இறக்கமான பலன்களைப் பெற முடியும் என்றாலும் உங்கள் ராசியாதிபதிசுக்கிரனுக்கு சனி நட்பு கிரகம் என்பதால் தேவையற்ற வீண் பிரச்சனைகளை சமாளிக்க முடியும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமையும். கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.
மிருகசீரிஷம் 1,2ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு
நல்ல பொறுமையும், எதிலும் திறமையுடன் செயல்படும் ஆற்றலும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 7இல் சனி சஞ்சரிப்பது சாதகமான அமைப்பல்ல. இதனால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மறையும். பொருளாதாரநிலை தேவைக்கேற்றபடி இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சில காலம் தள்ளி வைப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றிக் கிட்டும். வேலைப் பளுவும் அதிகரிக்கும்.
அதிர்ஷ்டம் தருபவை
தேதி : 5,6,7,8,14,15,16
கிழமை : வெள்ளி, புதன்
நிறம் : வெள்ளை, பச்சை
கல் : வைரம்
திசை : தென்கிழக்கு
தெய்வம் : லட்சுமி
No comments:
Post a Comment