Tuesday, 7 October 2014

புலிப்பாணி ஜோதிடம் - சந்திர மகாதிசை பலன்கள்

சந்திர மகாதிசைசந்திர புத்திப் பலன்கள்

இனிசந்திர மகாதிசையில் சந்திர பகவானின் சுயபுத்தி 10, மாதங்களாகும்இவ்னது பொசிப்புக் காலத்தில் ஏற்படும் பலன்களாவனதன்னிகரில்லாமன்னருடன் மகிழ்வுடன் நட்புக் கொள்ளச் செய்யும்சொல்லுதற்கரியசுயம்வரங்களை கூட்டி வைத்து கல்யாண வைபோகத்தை நிறைவு செய்துமகிழ்ச்சி கொள்ளச் செய்யும்சத்துருக்களை வென்று வெற்றி வாகை சூடச்செய்யும்வேண்டிய தனலாபங்களையும் பொருட் சேர்க்கையையும்ஏற்படுத்தி மகிழ்வுதரும் என்று போகர் அருளால் புலிபாணி கூறினேன்.இப்பாடலில் சந்திர மகாதிசையில் சந்திர புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.

சந்திர மகாதிசைசெவ்வாய் புத்திப் பலன்கள்

அடுத்துசந்திர மகாதிசையில் செவ்வாய் புத்தி ஏழு மாதங்களாகும்இவைஅசுபபலன் தருபவையேஅவையாவனவாதநோய்பித்தத்தால் ஏற்படும்வாந்திபேதிமற்றும் வாயுவால் ஏற்படும் வியாதிகளை உண்டு பண்ணும்.வெகுபலவான கள்ளர்களின் கோபத்திற்கு உள்ளாகச் செய்யும்.இச்சைக்குகந்த பெண்களால் வெகு துக்கத்தை ஏற்படுத்தலும்வெகுபலமான அப்பெண்களாலும் அவர்களது சகோதரர்களாலும் கொடுமைகள்உண்டுஎனினும் தீர்க்கமாய் ஆராய்ந்து பலன் கூறுக என்று போகர் அருளால்புலிப்பாணி கூறினேன்.இப்பாடலில் சந்திர மகாதிசையில் செவ்வாய் புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.



சந்திர மகாதிசைஇராகு புத்திப் பலன்கள்

இதற்கு மேல் நான் ஒன்றையும் உனக்குச் சொல்வேன்அதையும் நீகவனமாகக் கேட்பாயாகசந்திர மகாதிசையில் ராகுபுத்திபகையானதேயாகும்இச்சந்திர மகாதிசையில் ராகுவின் பொசிப்புக் காலம்பகையான தென்றாலும் நீண்ட 18 மாதங்களைக் கொண்டதாகும்இக்காலகட்டத்தில் இதற்கு ஏற்படும் சோதனையான பலன்களை நீ விவரமாகக்கேட்பாயாகஎதற்கும் அடங்காத இவர்களது சத்துருவால் இவர்களுக்குதனநஷ்டம் ஏற்படும் என்பதையும் அறிந்து கொள்கபல விதமானவியாதிகளும் ஏற்படும்காலம் எல்லாம் விதியானது உள்ளளவும் மந்தம்உடையதும் மத்திமமான புத்தியுள்ளதும் நாசம் செய்வதுமாக அமையும்.மேலும் களத்திலுள்ள விவசாயிகளுடன் கன்று காலிகளும் மடிதல் நேரும்.தங்க ஆபரணங்கள் செலவாதலும் உண்டாகும் என உணர்ந்து கிரகபலம்தன்னையும் அறிந்து கூறுக எனப் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.இப்பாடலில் சந்திர மகாதிசையில் இராகு புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


சந்திர மகாதிசைவியாழன் புத்திப் பலன்கள்

இப்படிப்பட்ட பெருமைக்குரிய சந்திர திசையில் வியாழபுத்தியின் பொசிப்புக்காலம் 16 மாதங்களாகும்அந்தக் காலகட்டத்தில் ஏற்படும் பலன்களை நன்குஅறிந்து கேட்பாயாகநல்ல மணமகளுடன் சுபசோபனம் உண்டாகும்.அதனால் பெருத்த லாபமும் உண்டாகும்சென்னல் முதலிய விளைவயலில்விளைவாகும்மிகுந்த செல்வம் சேரும்எத்தகைய வியாதியாய்இருந்தபோதும் நிவர்த்தியாகும்எதற்கும் தலைமை தாங்கும் பண்புஏற்படுவதோடு பூர்வ ஜென்ம வினையும் அகலும் என்பதை நீ நன்குஉணர்வாயாக என்று போகரது கருணையால் புலிப்பாணி கூறினேன்.இப்பாடலில் சந்திர மகாதிசையில் வியாழன் புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


சந்திர மகாதிசைசனி புத்திப் பலன்கள்


மேலும் இச்சந்திரதிசையில் சனிபகவானின் பொசிப்புக்காலம் 19 மாதமாகும்.இக்காலகட்டத்தில் அவனது பலத்தையும் புலிப்பாணியாகிய நான் போகரதுகருணையினால் கூறுவேன் அதையும் தேர்ந்து அறிவாயாகமனம் விரும்பிஇச்சாதகனை மணந்த ஜாதகி மரணமெய்த நேரும்அதனால் ஜாதகனுக்குஇதய நோய் ஏற்படும்பல விதத் தங்க ஆபரணங்களும் விரயமாகும்கள்ளர்பயமும் ஏற்படும்சத்துரு உபாதையும் உண்டுபலவித சஞ்சலங்கள்ஏற்பட்டு இதுவரை அனுபவித்த இன்பங்களும் பாழாகும்மணமிக்க சந்தனம்முதலியகந்தப் பொருள்களை அணிவான்கல்யாணம் முதலியசுபகாரியங்கள் நிகழும்.இப்பாடலில் சந்திர மகாதிசையில் சனி புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.

சந்திர மகாதிசைபுதன் புத்திப் பலன்கள்
மேலும் வேறுபாடில்லாத சந்திர திசையில் புதனின் பொசிப்புக்காலம் 17மாதங்களேயாகும்அந்தக் கிரகத்தின் பலன்களை நன்கு அறிந்துகூறுவாயாகஏனெனில் குணமுள்ள மாதர்களால் அச்சாதகனுக்குமனமகிழ்ச்சியுண்டாகும்திடுமென்று திருமணம் நிகழ்தலும் உண்டு.நிறைந்த பாக்கியங்களும் நிகழும்நவதானிய வகைகள் சேரும்தேனிலுள்ளவாசத்தைக் கலக்கும் வண்டென இச்சாதனைகளைத் தெரிவையர்கள் என்றவயதான மங்கையர்கள் தெளிந்து நிற்பார்கள் என்று போகரது கருணையால்புலிப்பாணி பாடினேன்.இப்பாடலில் சந்திர மகாதிசையில் புதன் புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.

சந்திர மகாதிசைகேது புத்திப் பலன்கள்

மேலும்இச்சந்திர மகாதிசையில் கேது புத்தியானதுமிகவும் கலக்கத்தைச்செய்வதேயாகும்இக்கேதுவின் பொசிப்புக்காலம் ஏழு மாதம் என்பதையும்உணருகஇக்காலகட்டத்தில் ஏற்படும் பலன்களாவனபுகழ்தற்குரியபெருத்த மார்பகத்தில் பிணியேற்படுதலும்இவர்களுக்காகப் பரிந்து நின்றபெண்களுக்குப் பகைவர்களால் பெருநாசமும் விளைவதாகும்மேலும்,பெற்ற தாய்தந்தை மற்றும் பிறந்த மகன் முதலியோரின் மரணமும் நேரும்.அதிகப்பட்டுப்போன வியாதி பெருத்த விரயத்தை உண்டு பண்ணும்.இச்சாதகன் காரணமின்றியே தேசாந்தரம் சென்றலைவான் என்று போகரதுகருணையினால் புலிப்பாணி பாடினேன்.இப்பாடலில் சந்திர மகாதிசையில் கேது புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.

சந்திர மகாதிசைசுக்கிர புத்திப் பலன்கள்


இன்னும் ஒரு கருத்தைச் சொல்லுகிறேன்கேள்சந்திர மகாதிசையில்சுக்கிரனது பொசிப்புக் காலம் 1 வருடம் 8 மாதமாகும்அவனது பொசிப்புக்காலத்தில் ஏற்படும் பலன்களைக் கூறுகிறேன் கேள்மகாலட்சுமியானவள்அவனது மனையில் சுகித்துத் தங்கிருப்பாள்வாகன யோகம் உண்டாகும்.பொன்னாபரண சேர்க்கையும் முத்தாபரண சேர்க்கையும் இதமான பல்வேறுபூஷணங்களும் இணையற்றதாக இச்சாதகனுக்கு வாய்க்கும் என்று வகைதொகை அறிந்து கூறுக என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.இப்பாடலில் சந்திர மகாதிசையில் சுக்கிர புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.

சந்திர மகாதிசைசூரிய புத்திப் பலன்கள்

மற்றுமொரு கருத்தினை என்னன்பிற்குரிய மானே கேட்பாயாகசந்திரமகாதிசையின் இறுதி புத்தியாகிய சூரியனின் பொசிப்புக் காலம் ஆறுமாதகாலமேயாகும்இக்காலகட்டத்தில் ஏற்படும் பலன்களைக் கூறுகிறேன்.நன்கு கேட்பாயாகசத்துரு பயமும்அக்கினி பயமும் ஏற்படும்ஜுரதோடம்உண்டாகும்அதிகமான ஜுரத்தால் ஜன்னி காணுதலும் ஏற்படும்.மதுவினால் மயக்கமடைதலும் தேகம் இருளடைதலும் நேரும்இலக்குமிதேவியானவள் அவனது தேகத்தை விட்டுச் சென்றுவிடுவாள்அதனால்திரவிய நஷ்டமும் சிசு நஷ்டமும் ஏற்படும் என்று போகர் அருளால்புலிப்பாணி புகன்றேன்.இப்பாடலில் சந்திர மகாதிசையில் சூரிய புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment