Monday, 27 October 2014

சனி பெயர்ச்சி பலன்கள் கடகம் 2014 -2017

கடகம்: புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்

உயர்ந்த லட்சியங்களைக் கொண்டு விடா முயற்சியுடன் செயல்படக்கூடிய ஆற்றல் கொண்ட கடக ராசி அன்பர்களே! இது நாள் வரை 4 ஆம் வீட்டில் சனி சஞ்சரித்ததால் உங்களுக்கு நடைபெற்று வந்த அர்;த்தாஷ்டம சனியானது வரும் 16.12.2014 இல் ஏற்படவுள்ள சனி மாற்றத்தால் முடிவடைந்து வரும் 19.12.2017 வரை சனிபகவான் பஞ்சம ஸ்தானமான 5 ஆம் வீட்டில் சஞ்சரிக்கவுள்ளார். இதனால் கடந்தகாலப் பிரச்சினைகள் விலகும். புத்திர வழியில் சிறுசிறு கவலைகளும் ப+ர்வீக சொத்துகளால் வீண் விரயங்களும் உண்டாகும் என்றாலும் எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் அனுகூலமான பலனைப் பெறமுடியும். கடந்தகாலப் பிரச்சினைகளும் அலைச்சல்களும் படிப்படியாகக் குறையும். உடல் ஆரோக்கியம் ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற முடியும். கூட்டாளிகளை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத வகையில் உயர்வுகள் உண்டாவதுடன் கௌரவமான நிலைகளும் ஏற்படும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களையும் பெறுவர். நினைத்ததெல்லாம் நிறைவேறும். கடந்த காலங்களிலிருந்த அலைச்சல் டென்ஷன் குறையும். அசையா சொத்துகளிலிருந்த பிரச்சினைகள் விலகி பூமி மனை வாங்கக் கூடிய யோகமும் உண்டாகும். குடும்பத்திலும் ஒற்றுமை மேலோங்கும்.
சனி 5 இல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் 05.07.2015 வரை ஜென்ம ராசியில் குரு சஞ்சரிக்க இருப்பது சாதமற்ற அமைப்பு என்பதால் பண விஷயங்களில் மிகவும் கவனமுடன் நடந்துகொள்வது நல்லது. 05.07.2015 முதல் 02.08.2016 வரை குரு தனஸ்தானமான 2 ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் உங்கள் வாழ்வில் வசந்தம் வீசும் குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் அனைத்தும் விலகி மங்களகரமான சுபகாரியங்கள் நடைபெறும்;. எதிர்பாராத திடீர் தன வரவுகளும் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் அமையும்.  02.08.2016 முதல் 02.09.2017 வரை குரு 3 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவுள்ள காலத்தில் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும்.

உடல் ஆரோக்கியம்
     உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவினை உண்டாக்கும் என்றாலும் அன்றாடப் பணிகளில் திறம்படவே செயல்படுவீர்கள். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். புத்திர வழியில் மனக் கவலைகள் உண்டாகும் என்றாலும், பெரிய கெடுதிகள் ஏற்படாது. உற்றார் உறவினர்களால் மன சங்கடங்கள், வீண் பிரச்சனைகள் தோன்றி மறையும். எதிலும் கவனமுடனிருப்பது நல்லது.

குடும்பம் பொருளாதார நிலை
     கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பிள்ளைகளால் மனக் கவலைகள் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. ப+ர்வீக சொத்து விவகாரங்களிலுள்ள வம்பு வழக்குகள் இழுபறி நிலையிலேயே இருக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். பொருளாதார நிலை உயர்வாக இருப்பதால் பொன், பொருள் சேரும். புதிய வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். நினைத்த காரியங்களை நிறைவேற்ற முடியும். பங்காளிகளை அனுசரித்து நடப்பது நன்மையளிக்கும் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையிடாதிருப்பது ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது.

உத்தியோகம்
     உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் தடையின்றிக் கிட்டும். சில நேரங்களில் வேலைப் பளு அதிகரித்து நிறைய நேரம் உழைக்க வேண்டியிருந்தாலும் அதனால் அடைய வேண்டிய லாபத்தையும் அடைய முடியும். விரும்பிய இட மாற்றங்களும் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். திறமைகளை வெளிபடுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் அமையப் பெற்று உயரதிகாரிகளின் பாராட்டுதல்களையும் பெற முடியும். வெளிய+ர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பம். சில தடைகளுக்குப் பின் நிறைவேறும் பயணங்களால் சிறுசிறு அலைச்சல்களும் அதிகரிக்கும்.

தொழில் வியாபாரம்
     தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். உழைப்பிற்கேற்ற லாபத்தினை தடையின்றிப் பெறுவீர்கள். தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் எதிர்பார்த்த அனுகூலத்தினைப் பெற முடியும். வெளியுர் வெளிநாட்டுத் தொடர்புகளாலும் லாபம் கிட்டும். கூட்டாளிகளிடம் சிறுசிறு மன சஞ்சலங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தியும் பெருகும். புதிய நவீனகரமான பொருட்களையும் வாங்கிச் சேர்ப்பீர்கள். போட்டி பொறாமைகளை சமாளிக்க கூடிய வலிமையும் வல்லமையும் உண்டாகும்.

பெண்கள்
     உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். பிள்ளைகளிடம் சற்று அனுசரித்து செல்வது நல்லது. அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்கள் ஏற்படும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் இனிதே நிறைவேறும் பொருளாதார நிலையும் சிறப்பாக அமையும். பணிபுரிபவர்களுக்கு உயர்வுகள் கிடைக்கும்.

கொடுக்கல் வாங்கல்
     பண வரவுகள் ஏற்ற இறக்கமான இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது. பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது மட்டும் சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் துறையிலிருப்போர்களுக்கும் ஏற்ற இறக்கமான பலன்களே உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும்.

அரசியல்
     அரசியல்வாதிகள் தங்களது பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ள மக்களின் தேவையறிந்து செயல்படுவது நல்லது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் நிறைவேற்றுவதில் சில தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும். கட்சிப் பணிகளுக்காக செலவுகளும் செய்வீர்கள். வெளிய+ர் வெளிநாடுகளுக்குச் சென்று வரக்கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். எதிர்பாராத திடீர் பதவி உயர்வுகளும் கிடைக்கப் பெறும்.

விவசாயிகள்
     பயிர் விளைச்சல் சுமாராக இருந்தாலும் சந்தையில் நல்ல விலைக்கு விற்று பட்ட பாட்டிற்கான பலனை அடைந்து விடுவீர்கள். வங்கியிலிருந்தும் எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். பழம்,  பூ காய் போன்றவற்றாலும் கால்நடைகளாலும் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். வாய்க்கால் வரப்பு பிரச்சனைகளால் தேவையற்ற வம்பு வழக்குகளையும் சந்திக்க நேரிடும்.

மாணவ மாணவியர்
     கல்வியில் சற்று மந்த நிலை, ஞாபகமறதி ஏற்படக் கூடிய காலம் என்பதால் முழு முயற்சியுடன் பாடுபடுவது நல்லது. தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையும் பொழுது போக்கும் உங்கள் வாழ்க்கையை திசை மாற்றும் என்பதால் பெற்றோர் ஆசிரியர்களின் அறிவுரைப்படி நடப்பது நல்லது. விளையாட்டுப் போட்டிகளில் போட்டி, பொறாமைகள் அதிகரிக்கும்.

சனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 16.12.2014 முதல் 24.01.2015 வரை
உங்கள் இராசிக்கு நட்பு கிரகமான குருவின் நட்சத்திரத்தில் சனி 5 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் ஜென்ம இராசியில் குரு வக்ர கதியிலும். 3 இல் இராகுவும் இருப்பதால்  பணவரவுகள் சிறப்பாகவே இருக்கும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். கொடுக்கல் வாங்கலும் லாபமளிக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள். தொழில் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் லாபமும் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைப்பது மூலம் கடன்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வெளிய+ர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் அனுகூலப் பலனை பெறுவீர்கள். பயணங்களால் நற்பலன்கள் அமையும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் அபிவிருத்தியும் பெருகும்.

சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 14.03.2015 வரை
தனது சுய நட்சத்திரத்தில் சனி 5 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில்; குரு வக்ர கதியிலும், 3 இல் இராகுவும் இருப்பது அற்புதமான அமைப்பாகும். குடும்பத்தில் சிறுசிறு வாக்குவாதங்கள், பிள்ளைகளால் மனசஞ்சலங்கள் ஏற்படும் என்றாலும், எதையும் சமாளிக்க கூடிய ஆற்றலும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களும் பணியில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் எதிர்பாராத வீண் விரயங்களை சந்திக்க வேண்டி வரும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகளும் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர் பாராத இடமாற்றங்கள் ஏற்படும். வேலை பளுவும் சற்று அதிகரிக்கும். சனிக்கும் குருபார்வை இருப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும்.. அலைச்சல் டென்ஷன் குறையும். அசையும் அசையா சொத்துகளாலும் 

சனிபகவான் வக்ரகதியில் 15.03.2015 முதல் 30.07.2015 வரை
பஞ்சம ஸ்தானத்தில்  சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும்.  எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டே வெற்றி பெற வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்திலும் பாதிப்புகள் உண்டாவதால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களாலும் அலைச்சல்கள் உண்டாகும். பிள்ளைகளால் மனசஞ்சலங்களாலும் ஏற்படும். எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவி எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்பட்டாலும் நண்பர்களின் உதவியும் திடீர் தன வரவுகளும் உண்டாவதால் நிலைமையை சமாளிக்க முடியும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் சற்று நெருக்கடிகளை சந்திப்பீர்கள் என்றாலும் இராகு 3 இல் இருப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். எதிலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.

சனிபகவான் துலா இராசியில் விசாகம் நட்சத்திரத்தில் 31.07.2015 முதல் 05.09.2015 வரை
உங்கள் இராசிக்கு  5 இல் சஞ்சரித்த சனி இக்காலத்தில்  பின்னோக்கி 4 இல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு மீன்டும் அர்த்தாஷ்டம சனி நடைபெறவுள்ளது சாதகமற்ற அமைப்பு என்றாலும் குரு தன ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும், முன்கோபத்தைக் குறைப்பதும் நல்லது. பொன், பொருள் சேரும். கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று கவனமுடனிருப்பது நல்லது.குடும்பத்தில் திருமணம் போன்ற மங்கள கரமான சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்து வதை தவிர்த்து கையிலிருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது. 

சனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 06.09.2015 முதல் 18.10.2015 வரை
உங்கள் இராசிக்கு 6,9 இக்கு அதிபதியான குருவின் நட்சத்திரத்தில் சனி 5 லும். குரு 2 லும், ராகு 3 லும் சஞ்சரிப்பதால் எதையும் சாதிக்கும் ஆற்றல் உண்டாகும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகக் கூடிய காலம் என்பதால் சற்றே கவனம் தேவை. உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் சிறப்பாக அமையும். பிரிந்தவர்களும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். குடும்பத்தில் தடைபட்ட மங்கள கரமான சுபகாரியங்கள் தடை விலகி தட புடலாக கை கூடும். சிலருக்கு பூமி மனை வாங்கும் யோகமும் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருக்கும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள்.  கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். கணவன் மனைவியிடையேயும் ஒற்றுமை நிலவும். மற்றவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்து பாராட்டுதல்களை பெறுவீர்கள.;; தொழில் வியாபாரம் போன்றவற்றிலும் மறைமுக எதிர்ப்புகள் விலகி புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 19.10.2015 முதல் 26.03.2016 வரை
சனிபகவான் தனது சுய நட்சத்திரத்தில் 5 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் குரு  2 ஆம் வீட்டில், சஞ்சரிப்பது ஓரளவுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். சிலருக்கு நினைத்தவரையே கை பிடிக்கும் யோகம் அமையும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்கள் ஒற்றுமையுடன் செயல் படுவார்கள். சிலருக்கு ப+ர்வீக சொத்துக்களால் சிறு சிறு விரயங்கள் உண்டாகும். பங்காளிகளை அனுசரித்து செல்வது மூலம் ஓரளவுக்கு சாதகப்பலனைப் பெற முடியும். பண வரவுகள் சரளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். நல்ல வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல நிர்வாகத் திறனும் திறமைக்கேற்ற பதவி உயர்வுகளும் கிட்டும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல் குறையும்.

சனிபகவான் வக்ரகதியில் 27.03.2016 முதல் 11.08.2016 வரை
உங்கள் இராசிக்கு 5 இல்  சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியில் சஞ்சரித்தாலும் குரு 2 இல் சஞ்சரிப்பதால் எடுக்கும் காரியங்களை   சில தடைகளுக்குப்பின் நிறைவேற்ற முடியும்.  பணவரவுகள் சிறப்பாகவே இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும்;. திருமணம் போன்ற மங்கள கரமான சுபகாரியங்கள் கைகூடும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சிறப்பான வரன்கள் தேடி வரும். கடன் பிரச்சனை படிப்படியாகக் குறையும். வம்பு வழக்குகளில் இழூபறியான நிலை இருக்கும்.  கொடுக்கல் வாங்கல் லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். இக்காலங்களில் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் உண்டாக கூடும் என்பதால் முடிந்தவரை பயணங்களை தவிர்க்கவும். கடன்கள் படிப்படியாக குறையும். 8.1.2016 முதல் இராகு 2 லும் கேது 8 லும் சஞ்சரிப்பதால் கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதம் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே அனுகூலமான பலன்களை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறைந்து லாபம் பெருகும்.

சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 12.08.2016 முதல் 18.11.2016 வரை
பஞ்சம ஸ்தானத்தில் சனியும், 3 இல் குருவும் சஞ்சரிப்பதால் எதிலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். சர்ப கிரகங்களான ராகு 2 லும், கேது 8 லும் சஞ்சரிக்க இருப்பதும் சாதகமற்ற அமைப்பாகும். இதனால் தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகும். அசையும் அசையா சொத்துகளால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். பணவரவுகள் ஏற்ற இறக்க மாகத்தான் இருக்கும். ஆடம்பரமாக செலவுகள் செய்வதை சற்றே தவிர்க்கவும்;. கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்ற கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்;து நடப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை சந்று தள்ளி வைக்கவும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல்பட்டால் வீண் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். தொழில்; வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. வெளிவட்டாரத் தொடர்புகளால் ஓரளவுக்கு நற்பலன் அமையும்.

சனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 19.11.2016 முதல் 08.04.2017வரை
உங்கள் இராசிக்கு 3,12 இக்கு அதிபதியான புதன் சாரத்தில் சனியும், 3 இல் குருவும் சஞ்சரிப்பதால்; பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பிறரை நம்பி வாக்குறுதிகள் கொடுத்தால் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து லாபம் காண்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயர்வுகளை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதும் நல்லது. மாணவர்கள் கல்வியில் சற்று ஈடுபாடுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற பொழுது போக்குகளை  தவிர்ப்பது நல்லது.

சனிபகவான் வக்ரகதியில் 09.04.2017 முதல் 04.08.2017 வரை
உங்கள் இராசிக்கு 5 இல்  சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியிலும் 2 இல் இராகு, 8 இல் கேது  சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். நெருக்கியவர்களிடையே வீண் வாக்குவாதங்களும் தேவையற்ற பகைமையுணர்வும் உண்டாகும். குடும்பத் தேவைகளை ப+ர்த்தி செய்ய முடியும். திருமண சுப காரிய முயற்சிகளில் தடைகள் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. ப+ர்வீக சொத்துக்களால் அனுகூலங்கள் ஒரளவுக்கு கிடைக்கும். உற்றார் உறவினர்களால் சில மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். எந்தவொரு விஷயத்திலும் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளாலும் சற்றே மருத்துவ செலவுகள் கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணி புரிபவர்களின் ஆதரவுகளால் எதையும் சமாளித்து விடுவீர்கள். பொருளாதார நிலையும் ஏற்றத்தாழ்வுடன் அமைவதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. 

சனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 05.08.2017 முதல் 19.12.2017 வரை
சனி தனக்கு நட்பு கிரகமான புதன் நட்சத்திரத்தில் 5 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் 4 இல் குரு சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் நல்லது. பண வரவுகள் தேவைக்கேற்ற படி இருந்தாலும் வீண் செலவுகளை குறைப்பது உத்தமம். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற முடியும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை நிலவும். வேலையாட்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. வெளிய+ர் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் கௌரவமான உயர்வுகளைப் பெறுவார்கள். கடன்கள் குறைந்து மனநிம்மதி உண்டாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். பேச்சில் நிதானத்தை கடை பிடிப்பது, உற்றார் உறவினர்களையும், குடும்பத்திலுள்ளவர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ தரிசனங்களுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள்

புனர்பூச 4ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு
     கூர்மையான அறிவுத்திறனும் தான தர்மம் செய்யும் பண்பும் கொண்ட உங்களுக்கு சனி பகவான் 5 ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது ஏற்ற இறக்கமான பலன்களை ஏற்படுத்தும். பண வரவுகள் தேவைக் கேற்றபடியிருக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நன்மையளிக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்லவும். புதிய ப+மி மனை வாங்கும் விஷயங்களில் சற்று கவனம் தேவை. பணம் கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். எதிலும் சிந்தித்துக் செயல்பட்டால் நற்பலனை அடையலாம்.

பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
     தன்னடக்கமும், ஒழுக்கமும், சந்தோஷமான வாழ்வும் ஒருங்கே அமையப் பெற்ற உங்களுக்கு சனி 5 இல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத்திலுள்ள வர்களையும் உற்றார் உறவினர்களையும் சற்று அனுசரித்து நடப்பது நல்லது. தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருந்தாலே வாழ்வில் பல முன்னேற்றங்களைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதால் வீண் பழிச்சொற்களைத் தவிர்க்கலாம். தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் அலைச்சல்கள் உண்டாகும்.

ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
     நல்ல பேச்சாற்றலும், கலை, இசை, போன்றவற்றில் ஆர்வமும் கொண்ட, உங்களுக்கு சனி பகவான் 5 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால்  நன்மை தீமை கலந்த பலன்களே உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருப்பதால் குடும்பத் தேவைகளும் ப+ர்த்தியாகும். கடன்கள் குறையும். எந்தவொரு காரியத்திலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது கவனமுடனிருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் தேக்கம் அடையாது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும்.

அதிர்ஷ்டம் தருபவை

தேதி : 1,2,3,9,10,11, 12
கிழமை  : திங்கள், செவ்வாய்
நிறம் : சிவப்பு, வெள்ளை
கல் :         முத்து
திசை : வடகிழக்கு
தெய்வம் : வெங்கடாசலபதி

No comments:

Post a Comment