‘‘ஓம் வஜ்ர நாகாய வித்மஹே
தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி;
தந்நோ நரசிம்ஹ ப்ரசோதயாத்’’
என்ற சொர்ண லட்சுமி நரசிம்மரின் காயத்ரி மந்திரத்தைத் தினமும் 12 முறை சொல்லி வந்தால் பதவி உயர்வும் சகல நலன்களும் உண்டாகும்.
ஈரோடு மாவட்டம், பவானி வட்டத்தில், குருவரெட்டியூர் அருகே அமைந்திருக்கும் கோனார் பாளையத்தில் மேற்கு முகமாக வீற்றிருக்கும் சொர்ண நரசிம்மருக்கு சுவாதி நட்சத்திரத்தன்று பானகம் கரைத்து நிவேதித்து, இங்கு வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்தால் எண்ணிய காரியங்கள் உடனே கைகூம் என்பது நம்பிக்கை ...
டு
கோனார்பாளையம் சொர்ண நரசிம்மர் ஆலயத்தில் அனுமனுக்கும் தனி சந்நதி அமைந்துள்ளது.
ஐந்து முகங்களை கொண்ட ருத்ரனுடைய அவதாரமாக தோன்றிய அனுமனை ஐந்து முகங்களுடன் வழிபடுகிறோம்.
கிழக்கு பக்கம் அனுமன் முகம்,
மேற்கில் கருடன்,
வடக்கில் வராகம்,
தெற்கில் நரசிம்மம்,
மேல்நோக்கி குதிரை முகம்
என்று ஐந்து முகங்களுடன் கோயிலின் கோபுரத்தில் தரிசிக்கலாம்
வேண்டுதல்கள் நிறைவேற வெள்ளை காகிதத்தில் ‘ஸ்ரீ ராமஜெயம்’ என்ற ராம மந்திரத்தை எழுதி, அதனுடன் தேங்காய் ஒன்றையும் சேர்த்து கோயில் அர்ச்சகரிடம் கொடுக்கின்றனர். அவற்றை ஆஞ்சநேயரின் பாதங்களில் வைத்துப் பூஜை செய்வதன் மூலம் பக்தர்களின் வேண்டுகோள் நிறைவேறுகிறது
மிக நீண்ட பிராகாரம் பலவிதமான தெய்வ சந்நதிகளோடு திகழ்கிறது ...
சொர்ண நரசிம்மரின் ஆலயத்தில் அனைத்து தெய்வங்களையும் ஒருசேர வழிபட்டு மனநிம்மதி பெறலாம்.
கிருஷ்ணருக்கு கருவறைக் கோபுரத்தோடு கூடிய தனி சந்நதி விசாலமாக அமைந்துள்ளது.
கோயிலின் இடதுபுறத்தில் நந்தவனத்தில் கோபியர் புடை சூழ கோபால கிருஷ்ணனின் அற்புதமான வண்ணச் சிலை கருத்தைக்கவருகிறது.
வெளிப் பிராகாரத்தைச் சுற்றி வந்தால் ராகு-கேது, சப்த மாதாக்கள், விநாயகர், முருகர் மற்றும் நவகிரகங்கள் ஆங்காங்கே அருள்பாலித்துக் கொண்டிருப்பதைக் காணலாம்.
கருப்பண்ண சுவாமி மிகுந்த சக்தி வாய்ந்த தெய்வமாக இங்கே கருதப்படுகிறார்.
இவர் முன்னிலையில் பக்தர்கள் தங்களுக்குள் ஏற்படும் வம்பு, வழக்குகளைச் சுமுகமாகப் பேசித் தீர்த்துக் கொள்வதைக் காணலாம்.
கருப்பண்ண சுவாமிக்கு உகந்த நைவேத்தியம், சர்க்கரைப் பொங்கல்.
உகந்த காணிக்கை குதிரைச் சிலையும் அரிவாள், ஈட்டி, மணி போன்றவையும் ஆகும்.
இவருக்குப் பொங்கல் படைக்கும்போது, இங்குள்ள ஏழு கன்னிமார்களுக்கும் சேர்த்துப் படைக்க வேண்டும்.
ஆடி அமாவாசை, ஆடிப்பதினெட்டு ஆகிய தினங்கள் கருப்பண்ண சுவாமிக்கு மிகவும் உகந்த நாட்கள்.
இந்த தினங்களில் பக்தர்கள் வேண்டிக்கொண்டு நேர்ச்சை வைத்தால், அடுத்த ஆண்டில் அதே நாளுக்குள் வேண்டுதல் நிறைவேறி விடும் என்று சொல்கிறார்கள்.
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர், யதகிரிகுட்டா.
No comments:
Post a Comment