Monday, 27 October 2014

சனி பெயர்ச்சி பலன்கள் மிதுனம்: (2014 -2017)

மிதுனம்: மிருகசீரிஷம் 3,4 திருவாதிரை, புனர்பூசம் 1,2,3

நல்ல அறிவாற்றலும் பேச்சாற்றலும் கொண்டு அனைவரிடமும் அன்பாகப் பழக்கக்கூடிய சுபாவம் கொண்ட மிதுன ராசி அன்பர்களே! உங்கள் இராசி அதிபதி புதனுக்கு நட்பு கிரகமான சனி பகவான் வரும் 16.12.2014 முதல் 19.12.2017 வரை ருண, ரோக ஸ்தானமான 6 ஆம் வீட்டில் சஞ்சரிக்கவுள்ளது  அதிர்ஷ்டங்களை அள்ளித்தரக் கூடிய அமைப்பாகும். இதனால் உங்களின் உடல் ஆரோக்கியமானது சுறுசுறுப்புடன் அமைந்து எல்லா பணிகளையும் திறம்படச் செய்து முடிப்பீர்கள். சனி பார்வை  3,8,12 ஆம் வீடுகளுக்கு இருப்பதால் சிறுசிறு இடைய+றுகளைச் சந்திக்க நேர்ந்தாலும் எதையும் சமாளித்து வெற்றி நடைபோடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். இது வரை இருந்த வந்த மறைமுக எதிர்ப்புகள் யாவும் இருந்த இடம் தெரியாமல் ஒடும் எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவிகள் கிடைக்கப் பெற்று அவர்களின் திறமைகளும் வெளிப்படும். குடும்பத்தில் சுபிட்சம், மகிழ்ச்சி, எடுக்கும் காரியங்களில் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும் அமைப்பு, உங்களுக்கு இருந்து வந்த வம்பு,வழக்குகள் யாவும் மறைந்து உங்கள் பலமும் வளமும் கூடும். நீண்ட நாட்களாக நீங்கள் கண்ட கனவுகள் கூட அனைத்தும் நினைவாகும். வரும் நாட்கள் ஒரு பொற்காலமாக இருக்கும். 

சனி 6 இல் பலமாக சஞ்சரிக்கும் இக்காலங்களில் 05.07.2015 வரை குரு பகவான் தன ஸ்தானமான 2 ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருக்கும் காலங்களில் சனியும் சாதகமாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்வுகள் நடைபெறும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை, வீடு மனை வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் போன்ற யாவும் உண்டாகும். 05.07.2015 முதல் 02.08.2016 வரை குரு முயற்சி ஸ்தானமான 3 இல் சஞ்சாரம் செய்யவிருப்பதால் கொடுக்கல் வாங்கல் போன்ற விஷயங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. எடுக்கும் முயற்சியில் சில இடையுறுகள் ஏற்படும் என்றாலும் சனி சாதகமாக இருப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். 02.08.2016 முதல் 02.09.2017 வரை குரு 4 இல் சஞ்சாரம் செய்யவிருப்பதால் குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் அவை சுப செலவுகளாகவே இருக்கும். 02.09.2017 முதல் 04.10.2018 வரை குரு 5 இல் சஞ்சாரம் செய்யவிருப்பதால் பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றிலும் சரளமான நிலை இருக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.

உடல் ஆரோக்கியம்
     உங்கள் ஜென்ம ராசிக்கு ருண ரோக ஸ்தானமான 6ஆம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் உங்களின் உடல் நிலையானது மிகவும் சிறப்பாக அமையும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் சுறுசுறுப்பாக செயல்படக் கூடிய வலிமையும் வல்லமையும் உண்டாகும். மனைவி பிள்ளைகளும் நலமாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களும் நலமாக இருப்பார்கள்.

குடும்பம்  பொருளாதார நிலை
     குடும்பத்தில் சுபிட்சமான நிலையும், மகிழ்ச்சியும் நிலவும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். விரோதிகளும் நண்பர்களாக மாறுவார்கள். பண வரவுகளும் தேவைக்கேற்றபடி இருக்கும். திருமண சுப காரியங்களும் நடைபெறும். சிலர் நினைத்தவரையே கைபிடித்து மகிழ்வர் காதல் கைகூடுமா என ஏங்குபவர்களுக்கும் பெற்றோர்களே திருமணம் முடித்து வைப்பார்கள். பொன், பொருள், ஆடை, அபரண சேர்க்கைகளும் அதிகரிக்கும். கடன்கள் குறையும். புதிய மனை, வண்டி வாகனங்கள் வாங்க கூடிய யோகமும் உண்டாகும். பொருளாதார நிலை உயரும்.

உத்தியோகம்
     உங்கள் ஜென்ம ராசிக்கு சனி பகவான் 6 இல் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். பணிபுரிபவர்கள் எதிர்பாராத வகையில் கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். இட மாற்றங்களால் குடும்பத்தை விட்டுப் பிரிந்து இருந்தவர்களும் குடும்பத்தோடு சேருவதற்கான இட மாற்றம் கிடைக்கும். ஊதிய உயர்வுகளும் நிலுவைத் தொகைகளும் தடையின்றிக் கிடைக்கும். பொருளாதார நிலையும் உயர்வடையும். உடன் பணிபுரிவர்களின்; ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும்.

தொழில் வியாபாரம்
     தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த நல்ல லாபத்தினைப் பெற முடியும். புதிய புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளிய+ர் வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும், நல்ல லாபம் கிட்டும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளிடையே இருந்து கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். வேலையாட்களின் ஒத்துழைப்புடன் மகிழ்ச்சியினை உண்டாக்குவதோடு அபிவிருத்தியையும் பெற முடியும். புதிய நவீன கருவிகளையும் வாங்கி சேர்க்க முடியும்.

பெண்கள்
     பெண்களுக்கு நினைத்த காரியங்களை நிறைவேற்றக் கூடிய பொற்காலமாக அமையும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பொன், பொருள், சேர்க்கைகளும் உண்டாகும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களும் தடபுடலாக நடைபெறும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத்தின் தேவைகளும் ப+ர்த்தியாகும். பணியில் உயர்பதவிகள் கிடைக்கும்.

கொடுக்கல் வாங்கல்
     பண வரவுகள் தாராளமாகவே இருக்கும். கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்போர் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தினை பெற முடியும்.

அரசியல்
     அரசியல்வாதிகள் மக்களின் அமோகமான ஆதரவினைப் பெற முடியும். எடுக்கும் முயற்சிகள்  அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி கிட்டும். எதிர்பார்த்த மாண்புமிகு பதவிகளைப் பெற முடியும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி நல்ல பெயரினை எடுக்க முடியும். வெளிய+ர் வெளிநாடுகளுக்கு சென்று வரக்கூடிய வாய்ப்பும் உண்டாகும்.

விவசாயிகள்
     விவசாயிகளுக்கு சிறப்பான மகசூல் உண்டாகும். மழை வளமும் மண் வளமும் விளைச்சலுக்கு கை கொடுக்கும். புதிய நவீனகரமான பொருட்களை வாங்கி விளைச்சலையும் பெருக்கிக் கொள்ள முடியும். புதிய பூமி நிலம் வாங்ககூடிய வாய்ப்பும் உண்டாகும். கால் நடைகளாலும் நல்ல லாபம் கிட்டும். சேமிப்பும் பெருகும்.

மாணவ மாணவியர்
     கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற்று பள்ளி, கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். கல்வி ரீதியாக மேற்கொள்ளும் சுற்றுலா பயணங்களாலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவும் மேலும் ஊக்கமளிப்பதாக அமையும். நண்பர்களின் ஆதரவு நற்பலன்களை உண்டாக்கும்.

சனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 16.12.2014 முதல் 24.01.2015 வரை
உங்கள் இராசிக்கு 7,10 இக்கு அதிபதியான குருவின் நட்சத்திரத்தில் சனி 6 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் 2 இல் குரு வக்ர கதியிலும். 4 இல் இராகுவும் இருப்பதால் எதிலும் நிதானமாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.  நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவினை உண்டாக்கும்.  கடந்த காலத்திலிருந்த சோதனைகள் அனைத்தும் விலகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்த வம்பு வழக்குகள் யாவும் விலகி நல்ல தீர்வு உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும்;. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளைப் பெற முடியும்.  புதிய வாய்ப்புகள் தேடி வரக்கூடிய யோகமும் உண்டாகும்;.

சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 14.03.2015 வரை
தனது சுய நட்சத்திரத்தில் சனி 6 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் நிங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும். 2 இல் குரு வக்ர கதியிலும் 4 இல் இராகு இருப்பதாலும் தேவையற்ற அலைச்சல்,டென்சன் ஏற்படுமே தவிர தொழில் உத்தியோக ரீதியாக வெற்றிகள் தொடர்ந்தபடி இருக்கும்.பணவரவுகளுக்குப் பஞ்சமிருக்காது. குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்களும் கைகூடும். கணவன் மனைவியிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். கடன்கள் குறையும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். இதனால் சாதகமான பலன்களைப் பெற முடியும். அசையும் அசையா சொத்துக்களை வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். பிறரை நம்பி வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்ப்பதும் நல்லது. நல்ல நட்புகளால் அனுகூலப்பலனையும் பெற முடியும். 

சனிபகவான் வக்ரகதியில் 15.03.2015 முதல் 30.07.2015 வரை
உங்கள் இராசிக்கு 6 இல்  சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியில் சஞ்சரித்தாலும் 05.07.2015 வரை குரு தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். புதிய பூமி மனை, வண்டி வாகனம் வாங்கக் கூடிய யோகமும் உண்டாகும். குடும்பத்தில் திருமண சுப காரியங்கள் தடையின்றி கைகூடும். உற்றார்  உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். பொன், பொருள் சேரும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்ததைவிட லாபங்கள் சிறப்பாகவே இருக்கும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும்.  பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கொடுக்கல் வாங்கலும் லாபம் தரும். மாணவர்கள் கல்வியில் சற்றே ஈடுபாட்டுடன் செயல்படுவதும் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்ப்பதும் நல்லது.

சனிபகவான் துலா இராசியில் விசாகம் நட்சத்திரத்தில் 31.07.2015 முதல் 05.09.2015 வரை
உங்கள் இராசிக்கு  6 இல் சஞ்சரித்த சனி இக்காலத்தில்  பின்னோக்கி 5 இல் சஞ்சரிக்க இருப்பதாலும். 3 இல் குரு சஞ்சரிப்பதாலும் உங்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். பொருளாதார நிலையில் ஏற்றத் தாழ்வுகள் நிலவக் கூடும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் திறமைக்கேற்ற பதவிகளைப் பெற முடியும். எதிர் பார்க்கும் இடமாற்றங்களும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது மூலம் மருத்துவ செலவுகள் குறையும். கணவன் மனைவியிடையே சிறு சிறு மன சஞ்சலங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களும் அனுகூலமாகவே அமைவார்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் ஓரளவுக்கு லாபம் கிட்டும். 

சனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 06.09.2015 முதல் 18.10.2015 வரை
உங்கள் இராசிக்கு 7.10 இக்கு அதிபதியான குருவின் நட்சத்திரத்தில் சனி 6 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் வெற்றி மேல் வெற்றி உண்டாகும்.குரு 3 இல் இருப்பதால் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தொழில், வியாபார ரீதியாக லாபங்கள் பெருகும். எந்தவித மறைமுக எதிர்ப்புகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். பயணங்களால் நல்ல அனுகூலங்கள் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றியினைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தடைக்கு பின் வெற்றி கிட்டும். உத்தியோகத்திலிருப்பவர்களும் எதிர்பார்த்த இடமாற்றத்தைப் பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள்.

சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 19.10.2015 முதல் 26.03.2016 வரை
சனிபகவான் தனது சுய நட்சத்திரத்தில் ருண ரோக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இக்காலத்தில்  குரு 3 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எடுக்கும் காரியங்களில் சிறு சிறு இடையூறுகளை சந்திக்க நேர்ந்தாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலும் உண்டாகும். பண வரவுகளில் சற்று நெருக்கடிகள் நிலவினாலும் தேவைகளைப் பூர்த்தி செய்யுமளவிற்கு பணவரவு இருக்கும்  நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். கணவன் மனைவியிடையே சிறந்த அன்யோன்னியமும் அதிகரிக்கும். திருமண சுபகாரியங்களும் சிறு தடைக்கு பின் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். தொழில் வியாபாரத்திலும் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற முடியும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மிகச்சிறப்பாக இருக்கும். எதிரிகள் உங்களை கண்டு ஓடி ஒளிவார்கள். உத்தியோகஸ்தர்களும் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். புத்திர வழியில் சிறு சிறு மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். 

சனிபகவான் வக்ரகதியில் 27.03.2016 முதல் 11.08.2016 வரை
உங்கள் இராசிக்கு 6 இல்  சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியிலும் குரு 3 லும் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடைகளும் புத்திர வழியில் சிறுசிறு மனசஞ்சலங்களும் உண்டாகும் என்றாலும் இராகு 3 ஆம் வீட்டில் வீட்டில் சஞ்சரிப்பதால்  பணவரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்ககள் கௌரவமான நிலையினைப் பெற முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் வேலைப் பளு குறையும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிட்டும்.உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமைவதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் நிம்மதியான நிலையினை பெற முடியும். கடன்களும் குறையும். அசையும் அசையா சொத்துக்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும்.

சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 12.08.2016 முதல் 18.11.2016 வரை
உங்கள் இராசிக்கு 6 இல் சனி வலுவாக சஞ்சரிப்பதும், இராகு 3 இல்; சஞ்சரிப்பதும்  உங்களின் பலத்தை அதிகரிக்கக் கூடிய அமைப்பாகும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை சில காலம் தள்ளி வைப்பது நல்லது. குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பொன் பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினை தடையின்றி பெற முடியும். தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. புதிய புதிய வாய்ப்புகளும் தேடிவரும். அரசு மூலம் எதிர்பார்த்த அனுகூலம் கிட்டும். குரு  4 இல் சஞ்சரிப்பதால் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல்பட்டால் அனுகூலப்பலனை அடைய முடியும். 

சனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 19.11.2016 முதல் 08.04.2017வரை
உங்கள் இராசியாதிபதியான புதனின் சாரத்தில் சனியும், 3 இல் இராகுவும் சஞ்சரிப்பதால் பொன் பொருள் சேர்க்கைகள் அதிகரிக்கும். கடந்த கால பிரச்சனைகள் சற்றே குறையும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுப காரியங்களில் தாமத நிலை ஏற்பட்டாலும் குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பூமி மனை வாங்கும் யோகம் உண்டாகும். குருபகவான் இக்காலங்களில் 4 இல் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல் வாங்கலில் மட்டும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. வெளிவட்டாரத் தொடர்புகளால் பெயர் புகழ் கூடும். சமுதாயத்தில் உங்களுக்கென தனி மரியாதையும் உயரும். 

சனிபகவான் வக்ரகதியில் 09.04.2017 முதல் 04.08.2017 வரை
உங்கள் இராசிக்கு 6 இல்  சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியில் சஞ்சரித்தாலும்  இராகு 3 இல் இருப்பதால்  பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் குடும்பத் தேவைகளும் ப+ர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பிறரை நம்பி வாக்குறுதிகள் கொடுத்தால் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து லாபம் காண்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம் பட செயல்பட்டு உயர்வுகளை பெற முடியும்.  வீடுமனை போன்றவை வாங்கக் கூடிய யோகம் போன்ற யாவும் அமையும். கடன்களும் படிப்படியாக குறைந்து விடும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது.

சனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 05.08.2017 முதல் 19.12.2017 வரை
சனி தனக்கு நட்பு கிரகமும் உங்கள் இராசிக்கு அதிபதியுமான புதனின் நட்சத்திரத்தில் 6 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் 02.09.2017 முதல் பொன்னவன் என போற்றப்படும் குரு பகவான் பஞ்சம ஸ்தானமான 5 இல் சஞ்சரிப்பதால்  நினைத்தது நிறைவேறும். தடைபட்டுக் கொண்டிருக்கும் சுபகாரியங்கள் யாவும் தடை விலகி கை கூடும். சிலருக்கு புத்திர பாக்கியமும் அமையும். பொன் பொருள் சேரும்.  ப+மி, மனை வாங்க கூடிய யோகமும் உண்டாகும். ப+ர்வீக சொத்துக்களாலும் லாபம் கிட்டும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனைகள் விலகி பெரிய தொகைகளை ஈடுபடுத்த முடியும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எந்த போட்டிகளோ, மறைமுக எதிர்ப்புகளோ இன்றி எதையும் சமாளிப்பார்கள். 

மிருகசீரிஷம் 3,4ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு
     தனக்குள்ள வேலைகளில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வெற்றியினைப் பெறும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு சனி பகவான் ருண ரோக ஸ்தானமான 6 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவுகளும் தாராளமாகவே இருக்கும். கடன்கள் குறையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். குடும்பத்திலும் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாவதோடு உற்றார் உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் விலகி புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியுர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பமும் நிறைவேறும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
     நல்ல புத்திக் கூர்மையுடன் காரியத்தில் கண்ணாக விளங்கும் உங்களுக்கு சனி பகவான் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்தைவிட அதிகமாகவே லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பாலும் வேலையாட்களின் ஆதரவாலும் அபிவிருத்தியைப் பெருக்கிக் கொள்ள முடியும். குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலவும். புதிய வீடு மனை, கார், பங்களா போன்றவை வாங்கும் யோகமும் உண்டாகும். பிரிந்த உறவினர்களும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும் பதவி உயர்வும் கிட்டும்.

புனர்பூசம் 1,2,3ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு
     எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடிய இளகிய மனம் கொண்ட உங்களுக்கு சனி பகவான் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். பண வரவுகளும் சிறப்பாக இருக்கும். பொன், பொருள் சேரும். குடும்பத்தில் ஒற்றுமை; நிலவும். கணவன் மனைவியிடையே  அன்யோன்னியமும் அதிகரிக்கும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களும் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். தொழில் வியாபாரத்திலும் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற முடியும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மிகச்சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கும் உயர்வுகள் கிட்டும்.

அதிர்ஷ்டம் தருபவை

தேதி : 5,6,7,8,14,15
கிழமை : புதன்,வெள்ளி
நிறம் : பச்சை, வெள்ளை
கல் : மரகதம்
திசை : வடக்கு
தெய்வம் : விஷ்ணு

1 comment:

  1. Contact kpj gems who helped thousands of people getting happiness in their life. Get 100% Solutions for all your problems from the Best astrologer in Chennai online / Online Astrology consultancy services in Chennai, Tamil nadu

    Online Astrologer in Tamilnadu

    ReplyDelete