மேஷம் :- அஸ்வினி பரணி கிருத்திகை-1ம் பாதம்
நிமிர்ந்த நடையும் கனிந்த பார்வையும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றலும் கொண்ட மேஷ ராசி அன்பர்களே !உங்கள் ஜென்ம இராசிக்கு 10,11 க்கு அதிபதியான சனிபகவான்; வரும் 16.12.2014 முதல் 19.12.2017 வரை அஷ்டம ஸ்தானத்தில சஞ்சாரம் செய்யவிருப்பதால் அஷ்டம சனி நடைபெறவுள்ளது. இது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் உண்டாவதுடன் உற்றார் உறவினர்களிடமும் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையும். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்படக் கூடிய காலம் என்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைப்பது மிகவும் நல்லது. குடும்பத்தில் எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படுவதால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இட மாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தை விட்டுப் பிரிந்து செல்ல வேண்டியிருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் கூட்டாளிகளால் மனசஞ்சலங்கள் ஏற்படும்.நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களாலும் வீண் பழிகளைச் சுமக்க வேண்டிவரும். தேவையற்ற கடன்களும் உண்டாகும்.
சனி 8 ல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் 05.07.2015 வரை உங்கள் இராசிக்கு 9,12க்கு அதிபதியான குரு பகவான் சுகஸ்தானமான 4 ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடையும் தேவையற்ற அலைச்சல்களும் உண்டாகும். 05.07.2015 முதல் 02.08.2016 வரை குரு பஞ்சம ஸ்தானமான 5 ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் சனியால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் சற்று குறைந்து குடும்பத்தில் ஒற்றுமை, சுப காரியங்கள் நடைபெறும் வாய்ப்பு, பொருளாதார உயர்வு, கடன்கள் குறைய கூடிய அமைப்பு உண்டாகும். 02.08.2016 முதல் 2.09.2017 வரை ருண ரோக ஸ்தானமான 6 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் தேவையற்ற வம்பு வழக்குகள், மறைமுக எதிர்ப்புகள் ஏற்படும் என்பதால் எதிலும் நிதானம் தேவை. 02.09.2017 முதல் 04.10.2018 வரை குரு சமசப்தம ஸ்தானமான 7 இல் சஞ்சாரம் செய்யவிருப்பதால் பொருளாதார நிலை மிக சிறப்பாக அமையும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபமும் அபிவிருத்தியும் பெருகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பிரிந்து சென்ற உறவினர்களும் தேடிவந்து நட்புகரம் நீட்டுவார்கள்.
உடல் ஆரோக்கியம்
உங்கள் ஜென்ம ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8 ஆம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கை, கால் மூட்டுகளில் வலி, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உடல் நிலையில் சோர்வு, எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியாத சூழ்நிலை உண்டாகும். ஏதாவது அறுவை சிகிச்சை மேற்கொள்ள கூடிய சூழ்நிலை உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும்.
குடும்பம் பொருளாதாரம்
கணவன் மனைவியிடையே உண்டாகக் கூடிய கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தின் ஒற்றுமை குறையும். தேவையற்ற வாக்குவாதங்களால் உற்றார் உறவினர்களிடையேயும் பகைமை உண்டாகும். முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து விடுவது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் எதையும் சமாளித்துவிட முடியும். ஆடம்பர செலவுகள் செய்தால் கண்டிப்பாக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளாவீர்கள். புதிய வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. குரு சாதகமாக சஞ்சரிக்கும் காலங்களில் திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று திருப்தியான மண வாழ்க்கையும் அமையும். பொன் பொருள் சேரும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.
உத்தியோகம்
பணியில் அவ்வளவாக நிம்மதியிருக்காது என்ன தான் பாடுபட்டாலும் திறமைகளை வெளிபடுத்த முடியாதபடி தடைகள் ஏற்படும். உங்களின் உழைப்பிற்கான பாராட்டுதல்களை பிறர் தட்டிச் செல்வார்கள். எதிர்பாராத இடமாற்றங்களால் குடும்பத்தை விட்டுப் பிரிந்து செல்ல வேண்டியிருக்கும். தேவையற்ற இட மாற்றங்களால் அலைச்சல்களும் உண்டாகும். உயரதிகாரிகளிடம் பேசும் போது நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. சிலருக்கு அடிக்கடி உடலில் பாதிப்புகள் உண்டாவதால் விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும். வரவேண்டிய நிலுவைத் தொகைகளும் இழுபறியிலிருக்கும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நிறைய மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும். எதிர்பார்க்கும் வங்கி கடனுதவிகளும் சற்று தாமதப்படுவதால் நவீன கருவிகளை வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு புதிய முயற்சிகளில் ஈடுபட முடியாது. வரும் வாய்ப்புகளையும் பிறர் தட்டிச் செல்வார்கள். நிறைய போட்டிகளை சமாளிக்க வேண்டியிருக்கும்;. வெளிய+ர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தாலும் அதனால் லாபங்கள் ஏற்படாது. பணவரவுகளிலும் நெருக்கடிகள் உண்டாகும்.
பெண்கள்
உடல் ஆரோக்கித்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டிய காலமாகும். தேவையற்ற வாக்குவாதங்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவதோடு உற்றார் உறவினர்களும் வீண் பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான பலன்களைப் பெற்றாலும் ஆடம்பர செலவுகளைச் குறைப்பதால் கடன்கள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். பணி புரிபவர்களுக்கு தேவையற்ற பிரச்சனைகள் உண்டாகும்.
கொடுக்கல் வாங்கல்
கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். கொடுத்த கடன்களையும் வசூலிக்க முடியாத சூழ்நிலைகள் உண்டாகும். பண விஷயத்தில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது பிறருக்கு முன் ஜாமீன் கொடுக்காமலிருப்பது நல்லது. கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்றவற்றில் சுமாரான லாபமே அமையும்.
அரசியல்
பெயர், புகழைக் காப்பாற்றிக் கொள்ள அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். எடுக்கும் காரியங்களையும் சரிவர செய்து முடிக்க விடாமல் உடனிருப்பவர்களே தடையாக இருப்பார்கள். மக்களின் தேவையறிந்து செயல்பட்டால் மட்டுமே அவர்களின் செல்வாக்கினைப் பெற முடியும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும்.
விவசாயிகள்
விளைச்சல் சிறப்பாக இருந்தாலும் அதற்காக அதிக நேரம் உழைக்க வேண்டியிருக்கும். புழு ப+ச்சிகளின் தொல்லைகளால் நிறைய வீண் செலவுகளும் உண்டாகும். உழைப்பிற்கான பலன்களை அடைய முடியாது. சந்தையிலும் விளை பொருள்களுக்கேற்ற விலைகள் சுமாராகத்தான் கிடைக்கும். கால்நடைகளால் மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் அதனால் ரளவுக்கு அனுகூலமான பலன்களைப் பெற முடியும். எதிர்பார்க்கும் கடனுதவிகள் தாமதப்படும்.
மாணவ மாணவியர்
மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். உடல் நல பாதிப்புகளால் அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாவதால் ஆசிரியர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். தேவையற்ற பொழுது போக்குகளைத் தவிர்ப்பதும் நல்ல நண்பர்களை தேர்ந்தெடுத்து பழகுவதும் நல்லது.
சனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 16.12.2014 முதல் 24.01.2015 வரை
உங்கள் இராசிக்கு நட்பு கிரகமான குருவின் நட்சத்திரத்தில் அஷ்டம ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் இக்காலத்தில் 4 இல் குரு சஞ்சாப்பதால் எதிலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வீண் பழிச் சொற்கள் உண்டாகும். தேவையற்ற இட மாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். சொகுசு வாழ்விலும் பாதிப்பு ஏற்படும். இராகு 6 இல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர் கொள்ளும் பலம் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்கள் ஏற்படும். பண வரவுகள் தாராளமாக இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகளும் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. குடும்பத்தில் சுப காரியங்களில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். குரு பார்வை சனிக்கு இருப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் சுமாரான லாபம் கிட்டும். பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல் குறையும்.
சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 14.03.2015 வரை
சனி தனது சொந்த நட்சத்திரத்தில் 8 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில், குரு வக்ர கதியிலும்,இராகு 6 லும் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்க பெற்று எதையும் சமாளிப்பிர்கள். எடுக்கும் முயற்சிகளில் சில தடை களுக்குப் பின் வெற்றி கிட்டும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் ஓரளவுக்கு நற்பலனை பெறமுடியும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்த நிலை ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சிறப்புடன் செயல்பட முடியும். பண விஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். வேலையாட்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். முன் கோபத்தை குறைத்து பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது..பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்க்கவும். தொழில் வியாபரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. கூட்டுத் தொழில் செய்பவர்களும் கூட்டாளிகளை அனுசரித்து செல்லவும்.
சனிபகவான் வக்ரகதியில் 15.03.2015 முதல் 30.07.2015 வரை
அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியில் சஞ்ரிப்பதாலும், இராகு 6 இல் இருப்பதாலும்; தேவையற்ற பிரச்சனைகள் விலகி அனுகூலமாக பலன்கள் கிடைக்கும். பண வரவிலிருந்த தடைகள் விலகி நல்ல முன்னேற்றம் உண்டாகும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண சுபகாரியங்களும் கைகூடும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முன் கோபத்தை குறைத்து பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் இருப்பதும் உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதும் நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே ஏமாற்றக்கூடிய காலம் என்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல் குறையும்.
சனிபகவான் துலா இராசியில் விசாகம் நட்சத்திரத்தில் 31.07.2015 முதல் 05.09.2015 வரை
உங்கள் இராசிக்கு 8 இல் சஞ்சரித்த சனி இக்காலத்தில் பின்னோக்கி 7 இல் சஞ்சரிக்க இருப்பதும் குரு பஞ்சம ஸ்தானமான 5 ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதும் அற்பதமான அமைப்பு ஆகும். உங்களுக்கு இருந்த எல்லாப் பிரச்சினைகளும் ஓரளவுக்கு முடிவுக்கு வரும்.. கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.;. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சிறப்பான வரன்கள் தேடி வரும். பணவரவுகளிலிருந்த பிரச்சனைகள் குறைந்து கடன்களும் படிப்படியாக நிவர்த்தியாகும். தொழில் வியாபாரத்திலிருந்த மந்த நிலை விலகும். கூட்டாளிகள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். ப+ர்வீக சொத்துகளால் ஒரளவுக்கு அனுகூலம் உண்டாகும். முன் கோபத்தை குறைத்து பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு கௌரவமான உயர்பதவிகள் தேடி வரும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும்.
சனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 06.09.2015 முதல் 18.10.2015 வரை
உங்கள் இராசிக்கு 9,12 இக்கு அதிபதியான குருவின் நட்சத்திரத்தில் சனி 8 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் சில சங்கடங்கள் ஏற்படும் என்றாலும் குரு 5 ம் வீட்டிலும், 6இல் இராகுவும் இருப்பதால் உறவுகளிடையே இருந்த பகைமை படிப்படியாக விலகும். பணம் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். திருமண சுப காரியங்கள் நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் தாமதப்பட்டாலும் ஊதிய உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். பொன் பொருள் சேரும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் சற்று குறையும். கூட்டாளிகளை அனுசரிப்பது நல்லது. பூர்வீக சொத்துக்களாலும் லாபங்கள் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனமுடனிருப்பது நல்லது.
சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 19.10.2015 முதல் 26.03.2016 வரை
சனிபகவான் தனது சுய நட்சத்திரத்தில் சஞ்சரித்து அஷ்டமசனி நடைபெற்றாலும் இக்காலத்தில் குரு 5 ம் வீட்டிலும், 6 இல் இராகுவும் இருப்பதால் பண வரவுகள் தாராளமாக இருக்கும். என்றாலும் எதிலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டி வரும். குடும்ப தேவைகள் பூர்த்தியாவதுடன் நினைத்ததை நிறைவேற்றக்கூடிய ஆற்றலையும் பெறுவீர்கள். கொடுக்கல் வாங்கலிலும் சிறப்பான லாபம் அமையும். உற்றார் உறவினர்களால் சிறுசிறு மன சஞ்சலங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பதும், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும் என்றாலும் கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். மற்றவர்களிடம் பேசும் போது நிதானத்தைக் கடைபிடிப்பது, முன்கோபத்தைக் குறைப்பது போன்றவற்றால் தேவையற்ற பிரச்சனைகள் குறையும்.
சனிபகவான் வக்ரகதியில் 27.03.2016 முதல் 11.08.2016 வரை
உங்கள் இராசிக்கு 8 இல் சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியிலும் குரு 5 லும், கேது 11 ஆம் வீட்டிலும், சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்களின் நிலை உயரும்.. எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றியினைப் பெறுவீர்கள். எதிர்பாராத திடீர் தன வரவுகளும் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதும் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் உத்தமம். பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் கடன்களும் படிப்படியாக நிவர்த்தியாகும். குடும்பத்தில் தடைப்பட்ட சுப காரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் நற்பலன் அமையும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களால் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் உடனே சரியாகி விடும்.
சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 12.08.2016 முதல் 18.11.2016 வரை
அஷ்டம ஸ்தானத்தில் சனியும் 6 இல் குருவும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் ஒரு முறைக்குப் பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகளை உண்டாக்கும். எடுக்கும் முயற்சிகளில் இடைய+றுகள் உண்டாகும். உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நிம்மதி குறையும். முடிந்தவரை பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். பணம் கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தொழில் வியாபாரத்தில் தேவையற்ற நெருக்கடிகளும் அலைச்சல் டென்ஷனும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன் படுத்தி கொள்ளவது நல்லது. பணவரவுகளில் இடையூறுகள் நிலவுவதால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்குவீர்கள்.
சனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 19.11.2016 முதல் 08.04.2017வரை
உங்கள் இராசிக்கு 3,6 இக்கு அதிபதியான புதன் சாரத்தில் சனியும், 6 இல் குருவும் சஞ்சரிக்கும் இக்காலத்தில் பண வரவுகளில் நெருக்கடிகள் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் கூட்டாளிகளால் வீண் பிரச்சனைகள் ஏற்படும். லாபங்கள் குறையும். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. 11இல் கேது இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களால் ஒற்றுமை குறையகூடும் என்பதால் எதிலும் விட்டு கொடுத்து நடப்பதும் நல்லது. புத்திரவழியில் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும்.
சனிபகவான் வக்ரகதியில் 09.04.2017 முதல் 04.08.2017 வரை
உங்கள் இராசிக்கு 8 இல் சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியிலும் கேது 11 ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் கடந்தகால பிரச்சனைகளிலிருந்து சற்றே விடுபடுவீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருந்தாலும் எதிர்பாராத விரயங்களும் ஏற்படும். பிறரை நம்பிவாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களால் ஒற்றுமை குறையகூடும் என்பதால் எதிலும் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்கு பின் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்த்து கையிலிருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது. கூட்டாளிகளால் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சிலருக்கு வேலைப்பளுவும் அலைச்சல், டென்ஷனும் அதிகரிப்பதால் உடல் நிலையில் சோர்வு ஏற்பட்டு அடிக்கடி விடுப்பு எடுக்க நேரிடும்.
சனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 05.08.2017 முதல் 19.12.2017 வரை
சனி தனக்கு நட்பு கிரகமான புதன் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலத்தில் உடல் ரீதியாக சில உபாதைகள் ஏற்படும் என்றாலும் பொன்னவன் என போற்றப்படும் குரு பகவான் 02.09.2017 முதல் சமசப்தம ஸ்தானமான 7ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் பணவரவுகளிலிருந்த நெருக்கடிகள் குறையும். கொடுக்கல் வாங்கலிருந்த பிரச்சனைகள் குறையும். எல்லா வகையிலும் ஏற்றங்களை ஏற்படுத்தும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகளும் மறைமுக எதிர்பார்ப்புகளும் விலகும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிட்டும். திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும்.
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
அமைதியான குணமும் நல்ல அறிவாற்றலும் கொண்ட உங்களுக்கு சனி பகவான் அஷ்டம ஸ்தானமான 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் அஷ்டமச் சனி நடைபெறுகிறது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் அதிக கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டி வரும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரிப்பதால் வாய்ப்புகள் கைநழுவும் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
மற்றவர்களை கவரக் கூடிய கவர்ச்சியான உடலமைப்பும், சிந்திக்கவைக்கும் பேச்சாற்றலும் கொண்ட உங்களுக்கு சனி பகவான் 8 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் அஷ்டமச் சனி நடைபெறுகிறது. இதனால் உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக் கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் தாமதப்படும். தேவையற்ற பயணங்களாலும் அலைச்சல்கள் அதிகரிக்கும். பணவரவில் நெருக்கடிகள் ஏற்படும்.
கிருத்திகை 1ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு
முன் கோபம் அதிகமிருந்தாலும் மிகவும் சாந்தமான குண அமைப்பு கொண்ட உங்களுக்கு சனி பகவான் 8 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் அஷ்டமச் சனி நடைபெறுகிறது. இதனால் எந்தவொரு காரியத்திலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். திருமண சுப முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை சமாளிக்க வேண்டி வரும். அனைவரையும் அனுசரித்து செல்ல பழகிக் கொள்வது, பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது மிகவும் நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்படவும்.
அதிர்ஷ்டம் தருபவை
தேதி : 1,2,3,9,10,11, 12
கிழமை : செவ்வாய், ஞாயிறு
நிறம் : சிவப்பு, மஞ்சள்
கல் : பவளம்
திசை : தெற்கு
தெய்வம் : முருகன்
No comments:
Post a Comment