Sunday, 12 October 2014

லெட்சுமியா அல்லது குபேரனா ?

செல்வம் வேண்டி வணங்குவதற்குரிய தெய்வம் லெட்சுமியா அல்லது குபேரனா என்ற ஒரு கேள்வி எழலாம். குபேரனைப் பற்றி பல கருத்துக்கள் உள்ளன.

     ஒருவருக்கு பொருளாதார அவசர தேவைகளுக்கு குபேரனை வணங்கலாம். செல்வம் பெருகும். ஆனால் ஒரு மங்களகரமான நிகழ்வாக இருக்காது. ஆகவே  குபேரனை அவசர தேவைக்கு உபயோகப்படுத்தும் தெய்வமாக வணங்கலாமே ஒழிய ஒரு சிறப்பான தெய்வமாக குபேரனை எடுத்துக் கொள்ளமுடியாது. ஆனால் லெட்சுமியோ சகல அம்சமும் கொண்ட தெய்வமாகும். குபேரேன் பணம், செல்வம் ஆகியவைகளுக்கு தெய்வம் ஆகும்.  லெட்சுமியோ எட்டு விதமான மங்கள காரியங்களுக்கு உரிய தெய்வமாகும் .லெட்சுமி அருளும் அருள் கொடை கடாச்சியமாகும்.
ஆனால் குபேரேன் அருளுவதோ பொருள் கொடையாகும்.

     சில நூல்கள் குபேரேன் லெட்சுமியின் கீழ் இருந்து லெட்சுமி சொல்லும் செயல்களை அருள் பாலிக்கும் ஒரு தெய்வமாக கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும் தற்சமய பொருளாதார உயர்வுக்கு குபேரனை வணங்கி பின்னர் லெட்சுமியின் அருளைப் பெற வேண்டுகிறோம். சீக்கிரத்தில் லெட்சுமியைப் பற்றியும் லெட்சுமியின் தத்துவார்த்தத்தையும், பூஜை முறைகளையும் சிறப்பாக விளக்கி ஒரு தொகுப்பு வெளியிட நினைத்துள்ளோம்.

     குபேரேன் விஸ்கரவாமுனிவரின் மூத மகன் ஆவார். அவருக்கு இரண்டு மனைவிகள். அதில் ஒரு மனைவி தெய்வீகப் பெண். அவர் குபேரேனைப் பெற்றெடுத்தார். அவருடைய இரண்டாவது மனைவி ஒரு  அரக்கி. அவள் இராவணனை பெற்றெடுத்தாள். குபேரன் இலங்கையை செல்வச் செழிப்புடன் ஆட்சி செய்து வந்தார். ஆனால் இராவணனின் தாய் அவர்கள் இருவருக்குள் பகையை உருவாக்கினார். அவள் தன் மகனாகிய இராவணனிடம் தனது அந்தஸ்தையும் உயர்த்திக் கொள்ளும்படி கூறினாள். இராவணன், குபகன், மற்றும் விபூஷன் ஆகியோர் காட்டிற்குச் சென்று கடுந்தவம் இருந்து இலங்கையை எல்லாவிதத்திலும் பெரிய நாடாக ஆக்க வரம் பெற்றார். அவ்வாறு வரம் பெற்றபின் தனது அண்ணனாகிய குபேரனை அடித்து விரட்டிவிட்டு இலங்கையில் ஆட்சி செய்தார். இதனால் வருத்தமடைந்த குபேரேன் சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்து செல்வங்களுக்கு எல்லாம் தெய்வமாக அந்தஸ்தைப் பெற்றான்..

No comments:

Post a Comment