Tuesday, 30 April 2019



சகலவிதமான செல்வங்களையும் ஈர்க்கும் 
தனாகர்ஷண சிதம்பர ரகசிய திருவம்புலி சக்கரம்

 சகலவிதமான செல்வங்களையும் வசீகரித்து, மோகித்து, ஆகர்ஷனித்து, தரும் அதிரகசிய சிதம்பர  சக்கரம், சித்தர்கள் காட்டிய முறையில் உருவாக்கப்பட்டு  சிவ மந்திரங்களால் ஆவாஹனம் செய்து வழங்கப்படுகிறது.

இதில்
 வசிய சக்கரம்,
 மோகன சக்கரம்,
 ஆகர்ஷண சக்கரம்,
 சாம்பவி சக்கரம் போன்றவை உள்ளது.

இந்த சிதம்பர ரகசிய சக்கரத்தை தன்வசம் வைத்து பூஜித்தால் உலகில் உள்ள சகல செல்வங்களையும் ஈர்த்து தரும், அழியா செல்வமும் அழியா புகழும், அழியா தெய்வசக்தியும், உண்டாகும்.
 சகல தெய்வ சக்தியையும் தன்பக்கம் இழுக்கும் சக்திகொண்டது, சகல விதமான தெய்வங்களும் இதற்குள் குடிகொள்ள ஓடிவரும் நிரந்தரமான தன வசியத்தையும் ஜன வசியத்தையும் பதினான்கு செல்வ வசியத்தையும் தரும் வியாபாரத்திலும் தொழிலிலும் அதிக பணத்தையும் அதிக வாடிக்கையாளர்களையும் இழுத்துத்தரும்

போட்டி பொறாமை தொழில் நஷ்டம் எதிரிகள் தொல்லை குடும்பத்தில் சதா சண்டை சச்சரவு வம்பு வழக்கு போன்ற ஆபத்துகளில் உள்ளவர்கள் இந்த சிதம்பர சக்கரத்தை தன்வசம் வைத்திருக்க பிரச்சனைகள் தூள் தூளாகும்
பாழடைந்த வீடு பாழடைந்த வியாபார ஸ்தலம் பாழடைந்த கோவில் போன்ற தரித்திர பீடைகள் சூழ்ந்த இடத்தில் இந்த சிதம்பர சக்கரத்தை வைக்க பாழான இடமும் விருத்தியாகி அஷ்ட லஷ்மி களும் குடிகொள்ளும்
ஜாதகத்தில் உண்டான சகல வித தோஷங்களும் தீரும் கிரகங்கள் தங்களுக்கு கட்டுப்படும் நவகிரகங்களும் உங்ககளுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் தீமை செய்ய அஞ்சும் 16 ஜென்மங்களிலும் உங்கள் 16 தலைமுறைகளில் செய்த பாப கர்மங்கள் தீரும்

இதற்க்கு முன் எந்த துஷ்ட மாந்திரீக பில்லி சூன்ய செய்வினை ஏவல் துர் ஆவிகள் என எந்த தீய சக்தியும் நெருங்காது அலறியடித்து ஓடும் பில்லி சூன்யம் வைத்தவர்களையே திருப்பி அடிக்கும் சக்திகொண்டது

இந்த சிதம்பர ரகசிய சக்கரத்தை பூஜிப்பவர்கள் பல கோடி சிவாலயம் கட்டிய பலனை அடைவார்கள் இதனின் பலன் எழுத்தில் சொல்லில் அடங்காதது.

Friday, 26 April 2019

சுக்கிர யோகத்தை அள்ளித் தரும் சுக்கிரன் மூல மந்திரம்

சிவ சிவ
🙏🏻💐🙏🏻💐🙏🏻💐🙏🏻💐
 மகாகணபதி : (பரிபூரண சித்தி)

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம்
கணபதயே வரவரத ஸர்வ ஜனம் மே
வசமானய ஸ்வாஹா

மந்திரம்
சுக்கிர யோகத்தை அள்ளித் தரும் சுக்கிரன் மூல மந்திரம்

வாழ்வில் ஒருவர் அனைத்து வகையான செல்வங்களையும் பெற்று இன்பமாக இருக்கிறாரென்றால் அவருக்கென்ன அவர் “குபேர வாழ்க்கை” வாழ்கிறாரெனவும், அவருக்கு “சுக்கிரத் திசை” எனவும் சிலர் கூற நாம் கேள்விப்பட்டிருப்போம். ஒரு மனிதனின் வாழ்வில் அனைத்து வகையான இன்பங்களை அனுபவிக்க அவனது ஜாதகத்தில் “சுக்கிரன்” கிரகம் ஆட்சியோ, உச்சமோ பெற்றிருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அவர் ஒரு சுமாரான வாழ்கையையே வாழ்வார். ஜாதகத்தில் அப்படிப்பட்ட நிலை இல்லாதவர்களும் செல்வ வளம் பெற உதவும் மந்திரம் தான் “சுக்கிரன் மூல மந்திரம்”.

மந்திரம்:
“ஹிமிகுந்த ம்ருணாலாபம் தைத்யானாம் பரமம் குரும்.
ஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரணமாம்யஹம்”

சுக்கிர மூர்த்தி சுபம் மிக ஈவாய்
வக்கிரமின்றி வரம்மிகத் தருவாய்!
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே!!

சுக்ர காயத்ரீ மந்திரம்

ஓம் அச்வ த்வஜாய வித்மஹே
தநுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்

சாப நிவர்த்தி தரும் மகாலட்சுமி மந்திரம்

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச,
மம மந்திரே திஷ்ட திஷ்ட ஸ்வாஹா

 மஹாலக்ஷ்மி மூல மந்திரம்!

ஓம் ஸ்ரீம் க்லீம் மஹாலக்ஷ்மி
மஹாலக்ஷ்மி ஏஹ்யேஹி
ஏஹ்யேஹி ஸர்வ
ஸௌபாக்யம் மே தேஹி ஸ்வாஹா

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம். கமலே
கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத.
ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஓம் மஹாலக்ஷ்ம்யை நம.

பீஜ மந்திரத்துடன் கூடியவை இந்த மஹா மந்திரங்கள் இதில் ஏதேனும் ஒரு மந்திரத்தை ஜபித்தால் போதுமானது. ஜபிக்கும் முன், லக்ஷ்மி படத்துக்கு பொட்டு வைத்து, பூ சூட்டி, நெய் தீபம் ஏற்றி வணங்க வேண்டும். அதன் பிறகே, ஜபிக்க ஆரம்பிக்க வேண்டும். நிவேதனமாக, சர்க்கரை சேர்ந்த பால் சமர்ப்பிக்கலாம். வெள்ளிக்கிழமைகளில் ஜபிக்க ஆரம்பிக்க வேண்டும். தினமும் 16 முறைக்குக் குறையாமல் ஜபிக்க வேண்டும். 108 முறை ஜபிப்பது உத்தமம். கோபப்படுவது. சத்தமாய் பேசுவது. வெறுப்பது... இவற்றை முக்கியமாகத் தவிர்க்க வேண்டும்.

கௌரி மந்திரம்:
ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே
ஸர்வார்த்த ஸாதகே
ஸரண்யே த்ரயம்பகே கௌரி
நாராயணி நமோஸ்துதே

:
ஸ்ரீ அபிராமி துதி



கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர் கபடுவாராத நட்பும்

கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணி இலாத உடலும்

சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும் தவறாத சந்தானமும்

தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு துன்பமிலாத வாழ்வும்

துய்ய நின்பாதத்தில் அன்பும் – உதவிப்பெரிய தொண்டரது கூட்டு கண்டாய்

அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே ஆதிகடவூரின் வாழ்வே

அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாய் நீ அபிராமியே🙏🏻🙏🏻🙏🏻

Thursday, 29 November 2018

தமிழ் மருத்துவ அறிவுரைப்பா

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் ,
இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்துகொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும்,
இப்பாடல்
அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது
சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்
மூளைக்கு வல்லாரை
முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
எலும்பிற்கு இளம்பிரண்டை
பல்லுக்கு வேலாலன்
பசிக்குசீ ரகமிஞ்சி
கல்லீரலுக்கு கரிசாலை
காமாலைக்கு கீழாநெல்லி
கண்ணுக்கு நந்தியாவட்டை
காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
தோலுக்கு அருகுவேம்பு
நரம்பிற்கு அமுக்குரான்
நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி
முகத்திற்கு சந்தனநெய்
மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு மருதம்பட்டை
அம்மைக்கு வேம்புமஞ்சள்
உடலுக்கு எள்ளெண்ணை
உணர்ச்சிக்கு நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே
கருப்பைக்கு அசோகுபட்டை
களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
குரலுக்கு தேன்மிளகே!
விந்திற்கு ஓரிதழ்தாமரை
வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு தாமரைப்பூ
சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை
கக்குவானுக்கு வசம்புத்தூள்
காய்ச்சலுக்கு நிலவேம்பு
விக்கலுக்கு மயிலிறகு
வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி
நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ
வெட்டைக்கு சிறுசெருப்படையே
தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
நஞ்செதிர்க்க அவரிஎட்டி
குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
பெருவயிறுக்கு மூக்கிரட்டை
கக்கலுக்கு எலுமிச்சைஏலம்
கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
ஆண்மைக்கு பூனைக்காலி
வெண்படைக்கு பூவரசு கார்போகி
விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு
கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே
உடல்பெருக்க உளுந்துஎள்ளு
உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
உடல் மறக்க இலங்கநெய்யே
அருந்தமிழர் வாழ்வியலில்
அன்றாடம்சிறுபிறணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
அறிந்தவரை உரைத்தேனே!!

Thursday, 8 November 2018

(நேத்ர) கண்கள் உள்ள நாட்கள்



1. புதன், வியாழன், வெள்ளி கிழமைகள்
இரண்டு (நேத்ர) கண்கள் உள்ள நாட்கள்.
அன்று செய்யும் சுப நிகழ்ச்சிகள் மிகுந்த நற்பலனை தரும்.

2. ஞாயிறு, திங்கள் கிழமைகள் ஒரு கண்ணுள்ள நாட்கள்.
ஒரு கண்ணுள்ள நாட்களில் சுப நிகழ்ச்சிகள் செய்யும் போது மத்திம பலன்கள் தான் கிடைக்கும்.

3. செவ்வாய், சனி கிழமைகள் (நேத்ரன் இல்லாத நாட்கள்) அதாவது குருட்டு நாட்கள் எனப்படும்.
குருட்டு நாட்களில் செய்யும் நிகழ்வுகள் தோல்வியில் முடியும்.

Saturday, 6 October 2018

ஹோரைகள்:

கண்டிப்பாக வெற்றியைத் தரும் ஹோரைகள்:
ஞாயிறு - சூரியன், புதன், குரு, சந்திரன்
திங்கள் - சந்திரன், குரு, சூரியன்
செவ்வாய் - குரு, சந்திரன், சுக்கிரன், சூரியன்
புதன் - சுக்கிரன், புதன், சூரியன்
வியாழன் - குரு, சனி, சந்திரன், சூரியன்
வெள்ளி - சுக்கிரன், புதன்
சனி - குரு, சுக்கிரன், புதன்
தோல்வி தரும் கிரக ஓரைகள்..
ஞாயிற்றுக் கிழமை சுக்கிர ஓரை தோல்வியை
தரும்.
திங்கள் கிழமை சுக்கிரன், புதன் ஓரைகள்
சரியாக செயல்படாது.
செவ்வாய் கிழமை புதன் ஓரை தோல்வி தரும்.
புதன் கிழமை குரு, சந்திர ஓரைகள் சரியாக
செயல்படாது.
குரு (வியாழன்) சுக்கிர, புதன் ஓரைகள்
கிழமை சரியாக செயல்படாது.
வெள்ளி கிழமை குரு, சந்திர ஓரைகள்
தோல்வி தரும்.
சனிக்கிழமை சந்திர ஓரை செயல்படாது..
கிரகங்களின் நட்புகள்
சூரியன் = குரு, செவ்வாய், சந்திரன்
சந்திரன் = குரு, செவ்வாய், சனி
செவ்வாய் = குரு, சூரியன், சந்திரன்
புதன் = சுக்கிரன், சனி
குரு = சூரியன், சந்திரன், செவ்வாய்
சுக்கிரன் = சனி, புதன்
சனி = சுக்கிரன், புதன்
கிரக பகை விவரம்
சூரியன் x சுக்கிரன், சனி
சந்திரன் x சுக்கிரன், சனி, புதன்
செவ்வாய் x புதன், சனி
புதன் x குரு, சந்திரன், செவ்வாய்
குரு x சுக்கிரன், புதன்
சுக்கிரன் x சூரியன், சந்திரன்
சனி x செவ்வாய், சூரியன், சந்திரன்
சனி ஓரை: (சோரம் தரும் ஹோரை)
1. சனி ஓரையில் எந்த ஒரு சுப காரியத்திலும் ஈடுபட கூடாது! மீறி செய்தால் அக்காரியத்தில் தடை, தாமதம், தோல்விகளே ஏற்படும்! 100% அசுபம் உண்டாக்கும்!
2. கண்டங்கள், விபத்துக்கள், பிடிபடுதல், தீயவிளைவுகளை வாரி வழங்குவது சனி ஓரையாகும்! பெரும்பாலான (Accident) வாகன விபத்துக்கள் சனி ஓரையில்தான் நிகழும்! உஷார்!
3. இந்த ஓரையில் ஒரு மூலையில் ஒதுங்கி உட்காருவதே சாலச்சிறந்தது!
4. Switch Off செய்யப்பட்ட மொபைல் மாதிரி ஆகிவிட வேண்டியதுதான்!
சுக்கிரன்: (சுகம் தரும் ஓரை)
1. சங்கீதம், ஆடல், பாடல், கற்க, கவி, கட்டுரை, கதை இயற்றுதல், காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபடல், பணம் வாங்குதல், கொடுத்த கடன் வசூல் செய்ய உகந்த ஓரை, பணம் கொடுக்கக் கூடாது!
2. ஆடை, ஆபரணங்கள் வாங்குதல், அணிதல், அலங்கார ஆடம்பர பொருட்கள் வாங்குதல், உல்லாச பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபடுதல், படப்பிடிப்பு தொடக்க விழா (பட பூஜை) செய்தல், கலை அரங்கேற்றம், வங்கிகளில் புதிய Account ஏற்படுத்துதல், (A/c Open பண்ணுதல்).
3. வீடு, வாகனம் கிரயம் பண்ணலாம்!
4. விருந்தினராக செல்லலாம்! பெண் பார்க்க சென்றால் வெற்றி உறுதி!
5. சகல சுபகாரியங்களுக்கு 100% உகந்த ஓரை சுக்கிர ஓரையாகும்!
புதன் ஹோரை: (லாபம் தரும் ஹோரை)
1. எழுத்து, பேச்சு, வித்தை ஆரம்பம், கல்வி, படிப்பு, கல்வி தொடர்பான அனைத்து காரியங்களும் இந்த ஓரையில் செய்யலாம்!
2. கதை, கட்டுரை, காவியம், கவி இயற்றுதல் நூல் ஆராய்ச்சி போன்றன்யாவும் புதன் ஓரையில் வெற்றிகரமாக செய்யலாம்!
3. வியாபாரம், தொழில், உத்தியோகம் தொடர்பான காரியங்களில் ஈடுபடலாம்!
4. திருமணம் சம்பந்தமான காரியத்தில் துணிந்து செயல்படலாம்!
5. எல்லா சுயகாரியங்களையும் புத ஓரையில் புஷ்டியாக வெற்றியாக செய்யலாம்!
6. பழம் நழுவி பாலில் விழுந்தது போல் வெற்றி தரும் ஓரை இது!
குரு ஹோரை: ( ஹோரை)
1. இது 100% சுப ஒரையாகும்! குரு ஓரையில் எல்லா வகையான சுபகாரியங்களையும் செய்யலாம்!
2. கல்வி, வித்யாரம்பம், ஆலயம் வழிபடுதல், திருமணம் செய்தல், ஆடை ஆபரணம் வாங்க, அணிய சிறந்த ஓரை.
3. எல்லா விதங்களிலும் சுபத்தையும், லாபத்தையும் அளிப்பது குரு ஓரையாகும்!
சந்திரன் ஹோரை.. (அமுத ஹோரை)
1. சந்திரன் துரித கிரகமாகையால் பயணங்களில் விரைவும், வெற்றியும் உண்டாகும் ஹோரையாகும்.
1)உணவு பொருட்கள் சம்பந்தமான செயல்கள் செய்தல், திருமண விசயம் பேசலாம், அம்பாள் வழிபாடு செய்தல், மனம் சம்பந்தமான விஷயங்களில் ஈடுபடலாம்.
"கற்பனையை" மூலதனமாக கொண்ட எந்த ஒரு செயலிலும் ஈடுபடலாம்
2. எல்லா சுப காரியங்களுக்கும் சந்திர ஹோரையை தேர்ந்தெடுக்கலாம்!
3. அம்மாவசையன்றும், மறுநாள் பிரதமை அன்றும் சந்திர ஹோரையை தவிர்க்கவும்! தேய்பிறை சந்திர ஹோரையை தவிர்ப்பது நலம்!
செவ்வாய் ஹோரை: (ரோகம் தரும் ஹோரை)
1. கடன் வாங்குதல் கூடாது. கடனை திருப்பி கொடுக்கலாம்! எந்த ஒரு காரியமும் செய்ய கூடாது. தடை, தாமதம், விபத்து, ரணகாயங்கள் உண்டாக்கும் ஓரையாகும்! இது ஒரு காரசாரமான சண்டை கலகமூட்டும் கிரக ஒரையாகும்!
2. அனைவரும் அனைத்திலும் உஷார் செவ்வாய் போர் கிரகம்!
3. புதிய முயற்சிகளை கட்டாயம் தவிர்க்கவும்

Monday, 30 July 2018

நவக்கிரகங்களை எப்படி வழிப்படுவது?


நம்முடைய வாழ்வில் வரும் அனைத்து இன்ப, துன்பங்களும் நவக்கிரகங்களின் செய்கையால் நடக்கிறது என்று இந்து சமயத்தினர் கருதுகின்றனர்.
இந்த நவக்கிரகங்களை வழிபடுவது நல்லது என்றாலும், எந்த ஒரு கோயிலிற்குச் சென்றாலும் மூலவரை வழிபடாமல் வெறும் நவக்கிரக வழிபாட்டை மட்டும் மேற்கொள்வது தவறானது. நவக்கிரகங்களை எப்படி வழிபடுவது? என்று தெரிந்து கொள்ளலாமா...?
முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபட்ட பின்னர், அந்தக் கோயிலின் மூலவரை வணங்கி விட்டு, இறுதியாகவே நவக்கிரக வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். இதுவே சிறந்த பலன்களை அளிக்கும். மூலவரை வழிபடாமல் நவக்கிரங்கங்களை மட்டும் வழிபடுவது எதிர்மறையான பலன்களையே கொடுக்கும்.
நவக்கிரகங்களில் ஒவ்வொரு கிரகமும் தரும் வளங்கள் இவைதான்;
1. சூரியன் – ஆரோக்கியம்
2. சந்திரன் – புகழ்
3. செவ்வாய் – செல்வச் செழிப்பு
4. புதன் – அறிவு வளர்ச்சி
5. வியாழன் – மதிப்பு
6. சுக்கிரன் – வசீகரத் தன்மை
7. சனீஸ்வரன் – மகிழ்வான வாழ்க்கை
8. ராகு – தைரியம்
9. கேது – பாரம்பரியப் பெருமை
நவகிரகங்களைப் சுற்றி வழிபடும் போது, அந்தந்தக் கிரகத்திற்கு உரித்தான எண்ணிக்கையில் சுற்றி வழிபட வேண்டும்.
அதாவது முதலில் ஒன்பது முறை சுற்றி வணங்கிய பின் அந்தக் கிரக அனுக்கிரகத்துக்காக மேலும் விசேஷமாகச் சுற்றி வந்து வழிபடுதல் வேண்டும்.
அது எத்தனை சுற்றுகள் என்பதைப் பின் வரும் செய்திகளின் வழி அறிந்து கொள்ளலாம்.
1. சூரியன் – 10 சுற்றுகள்
2. சுக்கிரன் – 6 சுற்றுகள்
3. சந்திரன் – 11 சுற்றுகள்
4. சனி – 8 சுற்றுகள்
5. செவ்வாய் – 9 சுற்றுகள்
6. ராகு – 4 சுற்றுகள் அடிப்பிரதட்சிணம்
7. புதன் – 5, 12, 23 சுற்றுகள்
8. கேது – 9 சுற்றுகள்
9. வியாழன் – 3, 12, 21 சுற்றுகள்
குறிப்பு: நவக்கிரகங்களை நேருக்கு நேராக நின்று வணங்குவது தவறான ஒன்றாகும். நவக்கிரகச் சிலைகளைத் தொட்டு வணங்குவது பாவம் தரும் செயல் ஆகும். எனவே அவ்வாறு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

எப்படி வலம் வந்து வழிபட வேண்டும்?....


* சிவனுக்கு இடமிருந்து வலமாக ஐந்து முறை சுற்றி வர வேண்டும்.
* அனைத்து வகையான சத்திகளுக்கும் ஐந்து முறை அல்லது ஒருமுறை இடமிருந்து வலமாகச் சுற்றி வர வேண்டும்.
* முருகன், பிள்ளையார், விநாயகர், கணபதி, ஐயனார், கருப்பு முதலியவர்களுக்கு இடமிருந்து வலமாக மூன்று முறை சுற்றி வர வேண்டும்.
* திருமால், பிறமண், குபேரன், இயமன் முதலியவர்களுக்கு இடமிருந்து வலமாக நான்கு முறை சுற்றி வர வேண்டும்.
* ஒன்பது கோள்கள், சனீசுவரன், சூரியன், சந்திரன், பைரவர், பலிபீடம், கொடிமரம் முதலியவர்களை இடமிருந்து வலமாக ஏழு முறை சுற்றி வர வேண்டும்.
* பறவை, விலங்கினங்கள் சமாது வலமிருந்து இடமாக நான்கு முறை சுற்றி வர வேண்டும்.
* துறவிகளின் சமாது வலமிருந்து இடமாக ஏழுமுறை சுற்ற வேண்டும்.
* இல்லறத்தார் சமாதை வலமிருந்து இடமாக ஒன்பது முறை சுற்றி வர வேண்டும்.
* உயிருள்ள கன்னிப் பெண்களை ஒன்பது முறை வலமிருந்து இடமாகச் சுற்றி வர வேண்டும்.
* வாவரசிகளை (வாழ்வு + அரசிகள் => இல்லறத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற சுமங்கலிப் பெண்கள்) வலமிருந்து இடமாக நான்கு அல்லது ஐந்து முறை சுற்றி வர வேண்டும்.
* பூசையில்லாத அல்லது பாழடைந்த ஆலயங்களை வலமிருந்து இடமாக இரண்டு முறை சுற்றி வர வேண்டும்.
* சித்தி வழங்கக் கூடிய குருவை, குருதேவரை, அருளை அநுபவப் பொருளாக வழங்கக் கூடிய அருளாளர்களை வலமிருந்து இடமாக பதினாறு அல்லது பதினெட்டு முறை சுற்றி வந்து ஒவ்வொரு முறையும் அவரது மெய்தொட்டு வணங்க வேண்டும்.
* வணங்குபவர் தனித்திருந்தால் அல்லது அறைக்குள் இருந்தால் அல்லது இருளில் இருந்தால் வணங்கப் படுபவரின் ஒப்புதல் பெற்று ஆரம்பத்திலும் முடிவிலும் முத்தங்கள் கொடுத்து வணங்க வேண்டும்.
குறிப்பு: வணங்குபவரின் இடது கை, வலது கை அடிப்படையில்தான் இடமிருந்து வலம் வருவது அல்லது வலமிருந்து இடம் வருவது கையாளப்பட வேண்டும்