Friday, 26 April 2019

சுக்கிர யோகத்தை அள்ளித் தரும் சுக்கிரன் மூல மந்திரம்

சிவ சிவ
🙏🏻💐🙏🏻💐🙏🏻💐🙏🏻💐
 மகாகணபதி : (பரிபூரண சித்தி)

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம்
கணபதயே வரவரத ஸர்வ ஜனம் மே
வசமானய ஸ்வாஹா

மந்திரம்
சுக்கிர யோகத்தை அள்ளித் தரும் சுக்கிரன் மூல மந்திரம்

வாழ்வில் ஒருவர் அனைத்து வகையான செல்வங்களையும் பெற்று இன்பமாக இருக்கிறாரென்றால் அவருக்கென்ன அவர் “குபேர வாழ்க்கை” வாழ்கிறாரெனவும், அவருக்கு “சுக்கிரத் திசை” எனவும் சிலர் கூற நாம் கேள்விப்பட்டிருப்போம். ஒரு மனிதனின் வாழ்வில் அனைத்து வகையான இன்பங்களை அனுபவிக்க அவனது ஜாதகத்தில் “சுக்கிரன்” கிரகம் ஆட்சியோ, உச்சமோ பெற்றிருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அவர் ஒரு சுமாரான வாழ்கையையே வாழ்வார். ஜாதகத்தில் அப்படிப்பட்ட நிலை இல்லாதவர்களும் செல்வ வளம் பெற உதவும் மந்திரம் தான் “சுக்கிரன் மூல மந்திரம்”.

மந்திரம்:
“ஹிமிகுந்த ம்ருணாலாபம் தைத்யானாம் பரமம் குரும்.
ஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரணமாம்யஹம்”

சுக்கிர மூர்த்தி சுபம் மிக ஈவாய்
வக்கிரமின்றி வரம்மிகத் தருவாய்!
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே!!

சுக்ர காயத்ரீ மந்திரம்

ஓம் அச்வ த்வஜாய வித்மஹே
தநுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்

சாப நிவர்த்தி தரும் மகாலட்சுமி மந்திரம்

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச,
மம மந்திரே திஷ்ட திஷ்ட ஸ்வாஹா

 மஹாலக்ஷ்மி மூல மந்திரம்!

ஓம் ஸ்ரீம் க்லீம் மஹாலக்ஷ்மி
மஹாலக்ஷ்மி ஏஹ்யேஹி
ஏஹ்யேஹி ஸர்வ
ஸௌபாக்யம் மே தேஹி ஸ்வாஹா

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம். கமலே
கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத.
ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஓம் மஹாலக்ஷ்ம்யை நம.

பீஜ மந்திரத்துடன் கூடியவை இந்த மஹா மந்திரங்கள் இதில் ஏதேனும் ஒரு மந்திரத்தை ஜபித்தால் போதுமானது. ஜபிக்கும் முன், லக்ஷ்மி படத்துக்கு பொட்டு வைத்து, பூ சூட்டி, நெய் தீபம் ஏற்றி வணங்க வேண்டும். அதன் பிறகே, ஜபிக்க ஆரம்பிக்க வேண்டும். நிவேதனமாக, சர்க்கரை சேர்ந்த பால் சமர்ப்பிக்கலாம். வெள்ளிக்கிழமைகளில் ஜபிக்க ஆரம்பிக்க வேண்டும். தினமும் 16 முறைக்குக் குறையாமல் ஜபிக்க வேண்டும். 108 முறை ஜபிப்பது உத்தமம். கோபப்படுவது. சத்தமாய் பேசுவது. வெறுப்பது... இவற்றை முக்கியமாகத் தவிர்க்க வேண்டும்.

கௌரி மந்திரம்:
ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே
ஸர்வார்த்த ஸாதகே
ஸரண்யே த்ரயம்பகே கௌரி
நாராயணி நமோஸ்துதே

:
ஸ்ரீ அபிராமி துதி



கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர் கபடுவாராத நட்பும்

கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணி இலாத உடலும்

சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும் தவறாத சந்தானமும்

தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு துன்பமிலாத வாழ்வும்

துய்ய நின்பாதத்தில் அன்பும் – உதவிப்பெரிய தொண்டரது கூட்டு கண்டாய்

அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே ஆதிகடவூரின் வாழ்வே

அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாய் நீ அபிராமியே🙏🏻🙏🏻🙏🏻

No comments:

Post a Comment