Monday, 30 July 2018

நவக்கிரகங்களை எப்படி வழிப்படுவது?


நம்முடைய வாழ்வில் வரும் அனைத்து இன்ப, துன்பங்களும் நவக்கிரகங்களின் செய்கையால் நடக்கிறது என்று இந்து சமயத்தினர் கருதுகின்றனர்.
இந்த நவக்கிரகங்களை வழிபடுவது நல்லது என்றாலும், எந்த ஒரு கோயிலிற்குச் சென்றாலும் மூலவரை வழிபடாமல் வெறும் நவக்கிரக வழிபாட்டை மட்டும் மேற்கொள்வது தவறானது. நவக்கிரகங்களை எப்படி வழிபடுவது? என்று தெரிந்து கொள்ளலாமா...?
முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபட்ட பின்னர், அந்தக் கோயிலின் மூலவரை வணங்கி விட்டு, இறுதியாகவே நவக்கிரக வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். இதுவே சிறந்த பலன்களை அளிக்கும். மூலவரை வழிபடாமல் நவக்கிரங்கங்களை மட்டும் வழிபடுவது எதிர்மறையான பலன்களையே கொடுக்கும்.
நவக்கிரகங்களில் ஒவ்வொரு கிரகமும் தரும் வளங்கள் இவைதான்;
1. சூரியன் – ஆரோக்கியம்
2. சந்திரன் – புகழ்
3. செவ்வாய் – செல்வச் செழிப்பு
4. புதன் – அறிவு வளர்ச்சி
5. வியாழன் – மதிப்பு
6. சுக்கிரன் – வசீகரத் தன்மை
7. சனீஸ்வரன் – மகிழ்வான வாழ்க்கை
8. ராகு – தைரியம்
9. கேது – பாரம்பரியப் பெருமை
நவகிரகங்களைப் சுற்றி வழிபடும் போது, அந்தந்தக் கிரகத்திற்கு உரித்தான எண்ணிக்கையில் சுற்றி வழிபட வேண்டும்.
அதாவது முதலில் ஒன்பது முறை சுற்றி வணங்கிய பின் அந்தக் கிரக அனுக்கிரகத்துக்காக மேலும் விசேஷமாகச் சுற்றி வந்து வழிபடுதல் வேண்டும்.
அது எத்தனை சுற்றுகள் என்பதைப் பின் வரும் செய்திகளின் வழி அறிந்து கொள்ளலாம்.
1. சூரியன் – 10 சுற்றுகள்
2. சுக்கிரன் – 6 சுற்றுகள்
3. சந்திரன் – 11 சுற்றுகள்
4. சனி – 8 சுற்றுகள்
5. செவ்வாய் – 9 சுற்றுகள்
6. ராகு – 4 சுற்றுகள் அடிப்பிரதட்சிணம்
7. புதன் – 5, 12, 23 சுற்றுகள்
8. கேது – 9 சுற்றுகள்
9. வியாழன் – 3, 12, 21 சுற்றுகள்
குறிப்பு: நவக்கிரகங்களை நேருக்கு நேராக நின்று வணங்குவது தவறான ஒன்றாகும். நவக்கிரகச் சிலைகளைத் தொட்டு வணங்குவது பாவம் தரும் செயல் ஆகும். எனவே அவ்வாறு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment