Monday, 21 March 2016

குலதெய்வத்தை கண்டுபிடிப்பது எப்படி?

குலதெய்வத்தை கண்டுபிடிப்பது எப்படி?

நம்மில் பலபேர்களுக்கு குலதெய்வம் யார், எங்கு இருகின்றார், அவரைவீட்டிற்கு அல்லது வாழுகின்ற இடத்திற்கு வரவழைக்கும் முறை என்ன என்பது தெரியாது. இந்தப்பதிவில் எளிமையான, அனுபவப்பூர்வமானமுறையை விளக்கியுள்ளோம். பயன்படுத்தி வெற்றி கொள்க.
1.நீங்கள் வாழக்கூடிய ஊரில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்று விநாயகர்,ஒன்பதுகோள்கள், பலிபீடம், கொடிமரம், நந்தி தேவர் இவர்களுக்கு ஒரு நெய் விளக்கு ஏற்றி வணங்கவும்.
2. சிவபெருமானுக்குஅவர் பெயருக்கே ஒரு அர்ச்சனை செய்யவும். பூசைசெய்கின்ற குருக்களிடம் 11 ரூபாய் பணத்தை கொடுத்து சிவபெருமான் பாதத்தில் வைக்கச் சொல்லுங்கள்.
3. " ஐயா சிவபெருமானே (தாத்தா பெயர்) அவர்களின் பேரனும், (அப்பா பெயர்) அவர்களின் புதல்வனுமாகிய (உங்கள் பெயர்) அடியேனுக்கு என்னுடைய குலதெய்வம் யார் என்பதும் அவர் எங்கு இருகின்ற்றர் என்பதும் தெரியவில்லை. என் சார்பிலும் என் வம்சாவளியின் சார்பிலும் இந்தக் கோரிக்கையையும்,காணிக்கையையும் பெற்றுக்கொண்டு என் குலதெய்வம் என் வீட்டிற்கு வரவும், எங்களுக்கு அருளாசிகள் வழங்கவும், எங்களை காத்துக்கொள்ளவும் அருளிடுக" என்று மனமுருகி வேண்டிக்கொள்க.
4. உங்கள் ஊரில் நல்ல செயல்பாட்டில் உள்ள முனீசுவரர், காளியம்மன்,கருப்பர் கோவிலுக்குச் சென்று அவர்களையும் மேற்சொன்னது போலவே வணங்க வேண்டும்.
5. உங்கள் ஊரில் ஊர்த்தெய்வமாக இருக்கும் (உதாரணம்: மதுரை- மீனாட்சி அம்மன், காஞ்சி- காமாட்சி, காரைக்குடி- முத்தாலம்மன், சென்னை- சென்னியம்மன், பட்டுக்கோட்டை- நாடியம்மன், திருச்சி- உறையூர் வெக்காளியம்மன்)தெய்வத்தையும் மேற்சொன்ன முறையில் வணங்க வேண்டும்.
6. உங்கள் வீட்டில் எந்தவிதமான எதிர்மறை சக்திகளை வணங்குபவர்களிடமிருந்து வாங்கிய எந்திரங்கள், தகடுகள், தாயத்துகள், எலுமிச்சை பழம், மை... போன்ற எந்த ஒரு பொருள் இருந்தாலும் அதை எல்லாம் அகற்றி எரித்து விடவும்.
7. அருவி நீர், ஊற்று நீர், கோவில் கிணற்று நீர் போன்ற ஏதாவது புனித தீர்த்தத்தை கொண்டு வீட்டை சுத்தம் செய்து குங்கிலியம், நாய்க்கடுகு, வெண்கடுகு, மருதாணி விதை, மிளகு முதலியவைகளை அரைத்து செய்யப்பட்ட சாம்பிராணி புகை காட்டவும்.
8. வீட்டு வாசலில் மஞ்சள் நீர் தெளித்து அழகான கோலம் போடவும். வீட்டு வாசலில் ஒரு எலுமிச்சை பழத்தை நறுக்கி குங்குமம் தடவி நிலையின் இருபுறமும் வைக்க வேண்டும்.
9. அன்றைய இரவு ஐந்து முகங்கள் கொண்ட குத்து விளக்கை சுத்தமான நல்லெண்ணெய், பசுவின் நெய் கொண்டு நிரப்பி, 5 திரிகள் இட்டு அலங்கரித்து வைக்கவும். குத்து விளக்கின் இருபுறமும் ஒரு எலுமிச்சை பழத்தை நறுக்கி குங்குமம் தடவி வைக்க வேண்டும்.
10. குத்து விளக்கின் முன்புறம் ஒரு தலைவாழை இலையில் நீங்கள் விரும்பி உண்ணும் உணவுகளை படையலாக இடவும். வாழைப்பழம், வெற்றிலை பாக்கு வைக்கவும். இந்த வெற்றிலை பாக்கில் சுண்ணாம்பு தடவி வைக்கவேண்டியது கட்டாயம்.
11. இலையில் 2 லட்டுகள் வைக்கவும், ஒரு சொம்பில் மஞ்சள் நீர், ஒரு சொம்பில் பானக்கம், ஒரு சொம்பில் பால், ஒரு சொம்பில் குடிநீர் வைக்கவும்.
12. குளித்துவிட்டு மஞ்சள், சிவப்பு, வெள்ளை, நீலம், பச்சை வண்ணங்களில் உள்ள உடையை அணிந்து கொள்ளவும். கறுப்பு கூடவேகூடாது.விபூதி, மஞ்சள், குங்குமம், நெற்றியில் முறைப்படி பூசிக்கொள்ள வேண்டும்.
13. பெண்களும் இதுபோல் தயாரான பின்பு கையில் ஆரத்தி தட்டு எடுத்துக் கொண்டு வாசலுக்கு செல்ல வேண்டும். ஆண்கள் கையில் ஒரு எலுமிச்சை பழத்தை நறுக்கி குங்குமம் தடவி, வாசலில் வாசலின் வெளிப்புறத்தை நோக்கியவாறு நின்று கொண்டு " எங்களுடைய குலதெய்வம் எங்கிருந்தாலும், எங்கள் மீது ஏதேனும் குற்றம் குறை இருந்தால் மன்னித்து ஏற்றுக்கொண்டு, அனைத்து கட்டுக்களையும் அறுத்துக் கொண்டு, எழுச்சி பெற்று, செழுச்சி பெற்று, எங்களையும் எங்கள் வம்சாவழிகளையும்காக்க எழுந்தருள்க" என்று சொல்லி பழத்தை பிழிந்து விடவும்.
14. வாசலின் முன் புறத்தில் 3 சூடங்களை ஏற்றி "எல்லோரும் வருக" என்று சொல்லி ஆரத்தி, கற்பூர தீபம் காட்டவும். அப்படியே சூடத்தட்டோடு குத்துவிளக்கின்முன்பாகச் சென்று அமர்ந்து குத்து விளக்கை ஏற்றவும்.
15. கருப்பர்களில் மூத்தவரான பதினெட்டாம்படிக் கருப்பரை மனதில்நினைத்துக் கொள்ளவும். அவரையே குருவாக நினைத்து கீழ்க்கண்ட குரு வாசகத்தை 24 நிமிடங்கள் மனமுருகச் சொல்லுங்கள்.
ஓம் குரு வாழ்க; ஓம் குருவே துணை;ஓம் குருவே எல்லாம்;ஓம் குருவே அனைத்தும்; ஓம் குருவே சரணம்.
"தாத்தா பதினெட்டாம்படிக் கருப்பர் அவர்களே (தாத்தா பெயர்) அவர்களின் பேரனும், (அப்பா பெயர்) அவர்களின் புதல்வனுமாகிய (உங்கள் பெயர்) அடியேனுக்கு என்னுடைய குலதெய்வம் யார் என்பதும் அவர் எங்கு இருகின்றார் என்பதும் தெரியவில்லை. நீங்களே என் குலத்திற்குரிய தெய்வத்தை இந்தப் பூசையின் மூலமாக வலிமை பெற்று, வளம் பெற்று, புத்துயிர் பெற்று, மீண்டும் ஆட்சி பீடத்தில் அமரச் செய்து அருளாட்சி செய்யச் செய்திடல் வேண்டும்
ஓம் குரு வாழ்க; ஓம் குருவே துணை;ஓம் குருவே எல்லாம்;ஓம் குருவே அனைத்தும்; ஓம் குருவே சரணம்
16, பூசையின் முடிவில் வணங்கப்பட்ட தெய்வங்கள் அனைவருக்கும் படைத்தது வைத்து இருக்கும் படையலை காணிக்கையாக்கி தூப தீபம் காட்டி பூசையை நிறைவு செய்யவும். அனைத்து தெய்வங்களுக்கும் நன்றி சொல்லுங்கள்.
17. பூசையின் முதல் நாளன்றே உங்கள் குலதெய்வம் உங்களைத்தேடி வந்துவிடும். நம்பிக்கையோடு 48 நாட்கள் இதே பூசையை செய்யும்போதுஉங்கள் குலதெய்வம் எப்படி இருந்தாலும் எங்கு இருந்தாலும் வந்துவிடுவது உறுதி.
18. 7 தலைமுறையாக வராத குலதெய்வம் இந்தப்பூசையால் அவர்களை தேடி வந்தது. நம்பிக்கையோடு செய்யுங்கள். வெற்றி உண்டாகட்டும்

சித்தர் அருள்வாக்கினால் உங்கள் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வேண்டுமா

உங்கள் குடும்பத்தில் ப்ரச்சினையா? கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதமாகும் நிலையா?  நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் வெற்றி வேண்டுமா? நீங்கள் செய்யும் தொழிலில் லாபம் பார்க்க வேண்டுமா? பதவி உயர்வு உடனடி வேண்டுமா? தீராத கடன் பிரச்சினையா? உடலில் ஏற்பட்ட நோய்களுக்கும் உடனடி தீர்வு வேண்டுமா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றி அடைய வேண்டுமா? இதற்கு எல்லாம் சித்தரின் அருளால் விடை உடனடியாக கிடைக்கும். உங்க்ளின் பிறந்த தேதியும், பிறந்த நேரத்தையும் வைத்து உங்களுக்கான தீர்வுகளையும், விடையும், உடனடியாக சித்தர் அருளால் கைகூடவும், உங்களுக்கு அனைத்து வெற்றிகளையும் பெறவும் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம்.

சித்தர் அருள் வாக்கு உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்க வழி செய்யும் வகையில், உங்கள் இட த்திற்கே வந்து விடையும், பரிகாரமும் செய்து தரப்படும்.  For Further Details contact pakshishastra@gmail.com

Tuesday, 28 April 2015

மோகினி ஏகாதசி.

நாளை (29.04.15) – மோகினி ஏகாதசி.
இந்த ஏகாதசி விரதத்தினால் ஒருவரின் மனதில் உள்ள ஆழ்ந்த வேதனைகளும், துன்பங்களும், தடைகளும் நீங்கி வாழ்வில்
சுகம் பெறுவர் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.
இந்நாளின் மகிமையைப் பற்றி பகவான் ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிர மகாராஜாவிற்கு அவருடைய வேண்டுதலின் பெயரில் எடுத்துரைக்கிறார். அதனை நாமும் காண்போம்.
ஹே யுதிஷ்டிரா !! ஒருமுறை மகரிஷி வசிஷ்டர் பிரபு ஸ்ரீராமனுக்கு கூறிய கதையினை இப்போது உனக்கு கூறுகிறேன். கவனமாகக் கேள் என்று கூறத் தொடங்கினார்.
ஒருசமயம் பிரபு ஸ்ரீராமர் மகரிஷி வசிஷ்டரிடம், குருதேவா !! ஜனகநந்தினி சீதையின் பிரிவினால் சொல்லவொணா துயரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். இதிலிருந்து விடுபடவும், அனைத்து பாவங்களையும் அழித்து மகிழ்ச்சியை அளிக்கவல்ல விரதம் ஏதேனும் இருந்தால் கூறுங்கள் என வேண்டினார்.
அதனைக் கேட்ட மகரிஷி வசிஷ்டர், ராமா !! ஆழ்ந்த அறிவாற்றலைக் கொண்டவனே !! ஜகத்தின் நன்மை கருதி நீ கேட்ட இந்த கேள்விக்கு விடையளிக்கிறேன். மோகினி ஏகாதசி விரத மகாத்மியத்தை உனக்கு கூறுகிறேன், கவனமாகக் கேள் என்று கூறத் தொடங்கினார்.
மோகினி ஏகாதசி விரத மகாத்மியத்தால் ஒரு மனிதனுடைய பாவங்களும், துக்கங்களும் அழிக்கப் படுகின்றன. மேலும் இந்த விரதத்தின் பிரபாவத்தினால் மனிதர்கள் மோகம் என்னும் மாயையிலிருந்து விடுதலை பெறுவர். துக்கம் மற்றும் வாழ்வில் மிகவும் துயரத்தில் அவதிப்படுபவர்கள் நிச்சயம் இந்த விரதத்தினை அனுஷ்டிக்க வேண்டும். அதன் மகாத்மிய கதையை கவனமாகக் கேள் !!
முன்னொரு காலத்தில், சரஸ்வதி நதிக்கரையில் பத்ராவதி என்னும் வளமான நகரை த்யுதிமான் என்னும் அரசன் சீரும், சிறப்புமாக ஆண்டு வந்தான். அங்கே தனபாலன் என்கிற வியாபாரி ஒருவன் பரம விஷ்ணுபக்தனாக, பக்தர்களுக்கு சேவை சாதித்து வாழ்ந்து வந்தான். அவனுக்கு சுமனா, சத்புத்தி, மேதாவி, சுக்ரீதி, திருஷ்டபுத்தி என 5 புதல்வர்கள் இருந்தனர்.
அவற்றுள் திருஷ்டபுத்தி பாவியாகவும், துஷ்டனாகவும் விளங்கினான்.தெய்வம், பித்ருக்கள் என்று எவரையும் நம்பாமல், மதிக்காமல் தந்தை ஈட்டும் செல்வத்தினை மது, மாது, சூது என பல தீய வழிகளில் செலவிட்டு வந்தான்.
ஒருமுறை அவன் சாலையில் அனைவரும் அறியும் வகையில் ஒரு விலைமாதுவுடன் தோளில் சாய்ந்து கட்டிக்கொண்டு போவதைக் கண்ட தனபாலன், மற்றும் அவனது சகோதரர்கள், உறவினர்கள் அனைவரும் அவனை வெறுத்து ஒதுக்கத் துவங்கினர். தனபாலன் அவனை வீட்டை விட்டே துரத்தியடித்தான்.
வீட்டை விட்டு வெளியேறிய திருஷ்டபுத்தி, அவனிடம் இருந்த விலையுயர்ந்த ஆடை, அணிகலன்களை விற்று வாழ்ந்து வந்தான். அவனது பணம் தீர்ந்தவுடன் அவனுடன் இருந்த துஷ்ட நண்பர்களும், வேசிகளும் அவனை விட்டு விலகினர்.
பசியில் வாடிய அவன், வேறு வழியின்றி, திருடுவது என்று முடிவுக்கு வந்தவனாக இரவு நேரங்களில் திருடி பிழைப்பு நடத்தி வந்தான். ஒருமுறை நகர காவலர்கள் அவனை பிடித்து விட்டனர். ஆனால் அவன் தந்தையின் நன்னடத்தை கருதி மன்னித்து விட்டு விட்டனர். ஆனால் இரண்டாவது முறை பிடிபட்ட போது அவனை அரசன் முன்னிலையில் நிறுத்தி அவனை நகரை விட்டே ஒதுக்கி வைத்து விட்டனர்.
மிகுந்த மனவருத்தம் அடைந்து, காட்டிலுள்ள விலங்குகளைக் கொன்று தின்று வாழ்ந்து வந்தான். ஒருநாள் எந்த விலங்குகளும் கிடைக்காமல் போகவே, பசியும், தாகமும் உடலை வருத்த அங்குமிங்கும் அலைந்து, திரிந்து இறுதியாக கௌண்டின்ய முனிவரின் ஆஸ்ரமத்தினை அடைந்தான்.
அப்போது தான் அவர் கங்கை நதியில் குளித்து முடித்து விட்டு வந்து கொண்டிருந்தார். அவரது ஈர உடையிலிருந்த நீர் துளிகள் அவன் மீது பட்ட மாத்திரத்தில் பாவியான அவனுக்கு நற்சிந்தனைகள் உருவாகியது. அவன் முனிவரின் அருகில் சென்று அவரை வணங்கி, மன்னிக்க முடியாத அளவிற்கு பாவம் செய்த எனக்கு அதிலிருந்து முக்தி பெற ஏதேனும் எளிய வழி இருந்தால் தயை கூர்ந்து கூறுங்கள் என்றான்.
அதைக் கேட்ட முனிவர், நான் கூறுவதை கவனமாகக் கேள் !! உனது நல்ல நேரம், இன்னும் சிறிது காலத்தில் மோகினி ஏகாதசி நன்னாள் வரவிருக்கிறது. அதனை கடைபிடிப்பதன் மூலம் உனது பாவ வினைகள் அனைத்தும் நீங்கி புதிய வாழ்வினைப் பெறுவாய் என்று அதனை கடைபிடிக்கும் வழிமுறைகளையும் அவனுக்கு கூறியருளினார்.
அதனை கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்த திருஷ்டபுத்தி, அவர் கூறியது போலவே, மோகினி ஏகாதசி விரதத்தினை விதிப்பூர்வமாக கடைபிடித்து நல்வாழ்வை பெற்றான். மேலும், இந்த விரதத்தின் பிரபாவத்தால் இறுதியில் கருடவாகனத்தில் விஷ்ணுலோகத்தை அடையும் பேறு பெற்றான் என மகரிஷி வசிஷ்டர் பிரபு ஸ்ரீராமரிடம் கூறி முடித்தார் என பகவான் ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிரனிடம் கூறினார்.
இவ்விரதத்தினால் மனிதர்கள் மோகம் என்னும் மாயத்திரை நீங்கி, முக்தியைப் பெறுவதோடு, அவர் வாழ்வில் துரதிர்ஷ்டங்கள், துயரங்கள், தடைகள் அனைத்தும் நீங்கி வாழ்வில் அனைத்து வளங்களையும் பெறுவர்.
மேலும், எவரொருவர் இந்த நன்னாளில் இந்த விரதத்தின் மகாத்மியத்தை உணர்த்தும் இந்தக் கதையை படிக்கிறாரோ / சொல்கிறாரோ / கேட்கிறாரோ அவர்கள் ஓராயிரம் கோ தானம் செய்த புண்ணியத்தினை அடைவர் என்று பகவான் யுதிஷ்டிரரிடம் கூறி முடித்தார்.
***ஓம் நமோ பகவதே வாசுதேவாய***

Sunday, 19 April 2015

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்?




பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த
கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்கு புறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி.
கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும்.
முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.
இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும்
பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.
நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும். அது எதற்கு தெரியுமா? அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.
அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும்
தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும்
ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும். இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. ரெகுலராய் கோயிலுக்கு செல்லும்
ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும்
என்று.
அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும்
காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான்
மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட
சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.
மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும்.. அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்).. அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.
அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும்
அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும்
கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம். இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு,
தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள்
செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும்
எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய்
போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம்
செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது..
அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த
எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள்,
கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்),
குங்குமப்பூ (சேஃப்ரான்), கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம்
ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல்
எங்கும் கிடைக்காது. இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட
அதில் உள்ள மகிமை மிக அதிகம்.
தை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை. இதை மூன்று தடவை கொடுக்கும்
காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த
உடம்பை புண்ணியமாக்க; மீதி இரண்டு சொட்டு உங்கள்
உடம்பை பரிசுத்தமாக்க. 
இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும்
இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அற்புதமான கலவை தான் இந்த தீர்த்தம்.
கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.
கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும்
போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக
எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த
ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள். அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும்
அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும்
போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம்
இது தான். கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில்
சேரும் என்பது ஐதீகம்.
பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.
நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய
நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட
கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார்
சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம்
இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன்
எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும். 
கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட்.
எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில்
ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும்
சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின்
மூலஸ்தானம்.
அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்கும் ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால்
அது மிகையாகது..
கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.
அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம்
கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட
லைட்னிங் அரெஸ்டர்ஸ்..
அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும்
இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும்
இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர். அது போக கோயில்
கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால்
எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம். இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும்
ஒரு இயற்கை விஷயம் தான். நல்ல மானிடர்..
இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும். சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான்..
கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும்
சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது.. சில கோயில்களில்
இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த
எனர்ஜி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற
மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் டெக்னாலஜி.

உண்மையில் நீங்கள் தினமும் குளிக்கிறீர்களா (அல்லது உடலை கழுவுகிறீர்களா)?

யாரை பார்த்து என்ன கேள்வி கேட்டீர்கள்? நான் ஒவ்வொரு நாளும் 2 முறை குளிக்கிறேன், நான் costly யான soap தான் போட்டு தினமும் இருவேளை குளிக்கிறேன், ...... இப்படி பல பதில்கள் உங்களிடம் இருந்து வரலாம். அதற்கு முன் குளியல் என்றால் என்ன? என்று தெரிந்து கொள்ளுங்கள்.
குளித்தல் என்பது குளிர்வித்தல் என்கிற சொல்லின் சுருக்கமே. குளிர்வித்தல் என்பது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உடல் முழுமைக்கும் நடைபெற வேண்டும். இதனையே ஔவையார் “சனி நீராடு” என்றார்.
உணவு உண்பதற்கு முன்பு கைகளைக் கழுவுவது, வெளியே சென்று வந்தால் முகம் கை, கால்களை கழுவுவது போன்றதே தலைக்கு தண்ணீர் ஊற்றாமல் கழுத்திற்குக் கீழே மட்டும் தண்ணீர் ஊற்றுவது என்பதும். கழுத்திற்கு கீழ் மட்டும் தண்ணீர் ஊற்றுவது என்பது குளித்தல் ஆகாது, உடலை கழுவுதலே ஆகும். தலைக்கு தண்ணீர் ஊற்றாமல் உடலின் பிற பகுதிகளுக்கு மட்டும் தண்ணீர் ஊற்றும்போது உடலில் உள்ள ஒட்டுமொத்த சூடும் தலைக்கு ஏறி கேடு விளைவிக்கும். (அதில் ஒன்று தான் தலையில் பொடுகு வைப்பதும், மற்றும் பிற உடல் உஷ்ணம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளும்).
தினமும் குளித்திராதவர்களுக்கு உறைந்த சளி, சுவாசத்தில் சிரமம், உடல் அசதி போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். நீண்ட காலமாக குளிர்வித்தலை புறக்கணித்ததன் விளைவாக புதிதாகக் குளிக்கும்போது கழிவு வெளியேற்றம் நடைபெறும்; இதனால் ஆரம்பத்தில் உடலில் சிரமம் ஏற்படலாம். தொடர்ந்து குளித்தால் சுகத்தைப் பெறலாம். மழை பெய்கின்ற போதெல்லாம் மழைநீரில் உடல் நடுங்கும் அளவிற்கு நனைவது (குளிப்பது) உடலை வலுவாக்கும்.
“கூழானாலும் குளித்து குடி” என்பது சான்றோரின் வாக்கு. குடிப்பது கூழே ஆனாலும் குளித்தப் பின்னரே குடிக்க வேண்டும். இவ்வாக்கு மூலம் உணவருந்தும் நாட்கள் எல்லாம் உணவருந்துவதற்கு முன்பு குளித்தல் அவசியம் என்பது புலனாகிறது. (குறிப்பு: விரதம் இருக்கும் நாட்கள் வேண்டுமானால் நீங்கள் குளிக்காமல் இருந்து கொள்ளுங்கள்). அப்படியானால் குளித்தல் என்பது தினசரி நடக்கவேண்டிய ஒன்று. தினசரி உடல் முழுக்க குளிப்பவர்கள் தங்களது உடலிலும் மனதிலும் புத்துணர்ச்சியை பெற்று சுகத்தை பெறமுடியும்.
குளிப்பதற்கு எவ்வாறு சாதாரண நீர் உகந்ததோ அதுபோன்றே பருகுவதற்கும் சாதாரண நீரே ஏற்றது. வெந்நீர், ரசாயனங்கள் கலக்கப்பட்ட மினரல் வாட்டர் போன்றவை உடலுக்கு நலம் தருபவை அல்ல. குடிப்பதற்கும் குளிப்பதற்கும் சாதாரண நீர் அல்லது மண்பானை நீர் பயன்படுத்தலாம். மண்பானை நீரில் உடலுக்கு தேவையான உயிராற்றல் நிலைபெற்று இருக்கும்.
ஆனால் இன்றோ தலையில் தண்ணீர் படாமல் உடலை மட்டும் நனைப்பதை "சாதாரன குளியல்" என்றும் தலை நனையுமாறு குளிப்பதை "தலைக்கு குளிப்பது" என்றும் பெயர் மாற்றி கூறுகிறார்கள். நம்மவர்கள் "தலைக்கு குளிப்பது" என்று கூறுவது தான் உண்மையான "சாதாரன குளியல்".
"எண்ணை குளியல்' என்று ஒரு வகை குளியல் உள்ளது. அதாவது உடல் முழுவதும் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணை தேய்த்து குறைந்தது அரை மணி நேரமாவது கழித்து குளிப்பது.
குளியலுக்கு எதை பயன்படுத்தலாம்?
சோப்பு, ஷாம்பூ – தவிர்க்க வேண்டியவை:
சோப்பு, ஷாம்பூ முதலிய ரசாயன விஷங்களை உடலில் மேல் பயன்படுத்தும்போது அவை கழிவுகள் வெளியேறுவதற்காக தோலின் மேற்பரப்பில் உள்ள மெல்லிய துளைகளை அடைத்துவிடும். அதனால் தோலின் வழியாக உடல் கழிவுகள் வெளியேறாமல் உடல் நலம் பாதிக்கும். நம் உடல் தோலின் மூலமாக கிரகிக்க கூடிய பிரபஞ்ச சக்தியை சரியாக கிரகிக்க முடியாமலும் பாதிப்புக்கு உள்ளாகும். சோப்பு, ஷாம்பூ மட்டும் அல்ல, உடலின் மேல் பயன்படுத்த கூடிய facepowder, facecream, body spray, cent, sun screen lotions, body lotion அனைத்தும் இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும்.
சியக்காய், அரப்பு, பச்சைபயறு, கடலைமாவு, அரிசிமாவு, கேழ்வரகு மாவு, என எதாவது ஒன்றையோ அல்லது சிலவற்றை சேர்த்தோ பயன்படுத்தலாம்.
(சோப்பு போல நுரைக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் இவற்றில் ஒன்றுடன் ஒரு கிலோவிற்கு 150 gram விதம் வெந்தயத்தை சேர்த்து பயன்படுத்தலாம்)

Tuesday, 14 April 2015

பளிச்சிடும் கண் பார்வைக்கு பஞ்ச கல்பம் - உங்களுக்காக...!



பளிச்சிடும் கண் பார்வைக்கு பஞ்ச கல்பம் - உங்களுக்காக...!
பகலிலும் நட்சத்திரங்களைப் பார்க்கும் கண்ணொளி வழங்கும் சித்தர்களின் பஞ்ச கல்பம்:-
இக்காலத்தில் பல இளம் குழந்தைகளும் கண்ணுக்கு கண்ணாடி அணிந்து கொண்டும், பல பெரியவர்கள் வயதானால் கண்ணாடி அணிந்து கொள்வதையும், கண்ணில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதையும் கண்டால் சித்தர் கண்ட தத்துவங்கள் எவ்வளவு வீணடிக்கப்படுகின்றன என்று வருந்தியிருக்கிறேன். கண்ணில் அறுவை சிகிச்சை செய்வதால் பிராணன் உலவும் இடமான கண்ணில் உள்ள பிராண சக்தி வீணடிக்கப்பட்டு ஆயுள் குறைகிறது. மாறாக கண்ணுக்கு வலிமை அளிக்கும் சித்த மருந்துகளைக் கையாள்வதால் கண்ணில் உள்ள பிராணன் வலுவாவதுடன் ஆயுளும் நீட்டிக்கப்படும்.
கண் பிராணன் நின்று உலவும் இடம், மேலும் இடது கண்ணில் தச(பத்து) நாடிகளில் ஒன்றான காந்தாரி என்ற நாடியும், வலது கண்ணில் புருடன் என்ற நாடியும் நின்றியங்குகிறது. நம் உடலை தச தேசம் என்று கூறுவார்கள். ஏனெனில் இது தச நாடிகளால் இயங்குவது. உயிர் இறப்பிற்கு பின்னும் இயங்கும் விதத்தைப் பற்றி வராகி மாலை, தச தேச விசால சுவடி இவற்றுள் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்,நம் உடலில் உள்ள எழுபத்திரண்டாயிரம் நாடிகளில், இரண்டு கண்களிலும் கண்ணுக்கு இரண்டாயிரம் நாடிகள் வீதம் நான்காயிரம் நாடிகள்
இந்த தகவல் பிடித்திருந்தால் அருகிலுள்ள விளம்பரங்களை ஒரு முறையேனும் க்ளிக்(Click) செய்யவும்…
ஓடுகின்றன. கண்களில் போடும் மருந்து கண்ணிலுள்ள நாடிகள் மூலம், தச நாடிகளிலும் வியாபித்து உடலெங்கும் சில வினாடிகளில் பரவி விஷம், வாதம், சன்னி, பல கர்ம வியாதிகள், தோல் வியாதிகள், மனோ வியாதிகள் இன்னும் பல வியாதிகள் முதலானவைகளைக் கூட கண்டித்து எறியும் தன்மை உள்ளது. இப்படிக் கண்களில் பிரயோகிக்கும் மருந்தை கலிக்கம் என்பார்கள்.
இப்படிக் கண்ணில் போடும் மருந்து கண்ணுக்கு பார்வை அளிப்பதுடன் மேலும் பற்பல வியாதிகளை குணமாக்கும் வல்லமையும் பெற்று விளங்குகின்றன. ஏனெனில் அவை அளப்பரிய காந்த சக்தியுடன் செயல்படுகின்றன.
இப்போது தலையில் போடும் மருந்தால் கண்ணுக்கு வல்லமை அளிப்பதைப் பார்ப்போம். பஞ்ச கல்பம் என்றழைக்கப்படும் இது சித்தர்கள் கண்ட மருந்து. சமீபத்தில் இருந்த சித்தர் இராமலிங்க வள்ளலாரும் இந்த மருந்தை மிகப் பெருமையாகக் கூறியுள்ளார். இது தலையில் உள்ள சஹஸ்ராரச் சக்கரத்திற்கு வலிமையளிப்பதுடன், நோய்கள் நம்மை அணுகாமல் காக்கும் வல்லமையுள்ளது.
பஞ்ச கல்பம் ஐந்து வகையான மூலப் பொருள்களைக் கலந்து தயாரிப்பதால் இந்தப் பெயரில் அழைக்கப்படுகிறது.
கீழ்க்கண்ட சரக்குகளை எடுத்துக் கொள்ளவும்.
1)வெள்ளை மிளகு (சுத்தி செய்தது)---150கிராம்
2)கடுக்காய்த் தோல் (சுத்தி செய்தது)-125கிராம்
3)வேப்பம் பருப்பு உலர்ந்தது---------100கிராம்
4)நெல்லி வற்றல்--------------------75கிராம்
5)கஸ்தூரி மஞ்சள்-------------------50கிராம்
மேற்கண்ட ஐந்து சரக்குகளையும் நன்றாகப் பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி பொடியை சிறிது பால் விட்டு அரைத்து 50 மிலி பசுவின் பாலில் கலந்து காய்ச்ச வேண்டும். பஞ்ச கல்பம் தேய்த்து குளித்து வந்தால் சிறிதும் நோய்களுக்கு இடமில்லாமல் வாழலாம்.

Wednesday, 25 February 2015

மூலிகைக் கீரை

மூலிகைக் கீரை

கரிசலாங்கண்ணி --  மருத்துவ டிப்ஸ்

கரிசலாங்கண்ணி மூலிகைக் கீரைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மருத்துவத்தில் மிகச் சிறப்பான இடம் இருந்தது. பல்லவர்கள் ஆண்ட காலத்தில் அரசு அனுமதி இல்லாமல் கரிசலாங்கண்ணியைப் பயிரிட முடியாது ஆண்டு தோறும் அரசுக்கு ‘‘கண்ணிக்காணம்’’ என்ற வரி செலுத்த வேண்டும். அந்தளவிற்கு அது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. கரிசலாங்கண்ணி கரிசாலை, அரிப்பான் பொற்கொடி போன்ற பெயர்களால் வழங்கப்படுகிறது. கரிசலாங்கண்ணியை எளிய முறையில் உபயோகித்தாலே பல நன்மைகளை அடையலாம். வாரத்துக்கு இரண்டு நாள், கீரையைச் சமையல் செய்து சாப்பிட்டாலும் இதன் சாற்றை 100 மில்லியளவு சாப்பிட்டு வந்தாலும், உடலுக்கு எந்த நோயும் வராமல் நோய் எதிர்ப்புத் தன்மை உண்டாகும். பல கொடிய வியாதிகளில் இருந்து பாது காத்துக் கொள்ளலாம். மஞ்சள் காமாலை முதல் அனைத்து வகையான காமாலை நோய்களுக்கும் மிக முக்கியமானது கரிசலாங் கண்ணிக் கீரையாகும். மஞ்சள் காமாலை குணமடையும் கல்லீரல் நச்சுத்தன்மையை நீக்கும் நன்மருந்து. கல்லீரல்,மண்ணீரல்,பெரிதாவதால் உள்ள அடைப்புகளைப் போக்கும். தோல்நோய்கள் மஞ்சள் காமாலையை குணப்படுத்தும். அனைத்து வகைக் காமாலைக்கும் இம்மருந்து நம்பகமானது. சிறுநீரகம் பாதிப்படைந்து வெள்ளை, வெட்டை நோய் ஏற்பட்டால், இந்நோய்க்கு கரிசலாங்கண்ணி தான் முதன்மையான மருந்தாகும். ஆஸ்துமா குணமடையும் கரிசலாங்கண்ணிச் சூரணத்தை நான்கு மாசத்துக்கு ஒரு பாகம் திப்பிலிச்சூரணம் சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து ஒரு மாத காலம் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாவின் தொல்லை குறையும். கல்லீரல் செயல்பாட்டின் குறைவினால் ஏற்படும் இரத்த சோகை நோய்க்கு கரிசலாங்கண்ணிச்சாற்றை 100 மில்லியளவு தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் சில தினங்களில் இரத்த சோகை நீங்கி விடும். இரத்தத்தில் உள்ள அமிலத்தன்மை சீராகச் செயல்படும். கரிசாலைச் சாற்றை காலை வேளையில் தினம் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குணமாகும். கஷாயம் கர்ப்பப்பை இரத்தப்போக்குக்குப் பயன்படும். பற்று தேள்கடிக்கு மருந்தாகும். வீக்கம் குறைக்கும். வாந்தி மருந்து, நன்மருந்து,தேனுடன் சாற்றைக் கலந்து குழந்தைகளுக்கு ஏற்படும் காற்றுக்குழாய் சார்ந்த அடைப்புகளை குணப்படுத்தலாம். விளக்கெண்ணெயோடு சேர்த்து பூச்சிகளை அகற்ற பயன்படும். குழந்தைகளின் சளி நீங்க குழந்தைகளுக்கு கரிசலாங்கண்ணிச்சாறு இரண்டு சொட்டில் எட்டு சொட்டு தேன் கலந்து கொடுத்தால் சளித்தொல்லை நீங்கிவிடும். அடிக்கடி சளி ஏற்படுவது குறைந்து குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தநோய், வயிறு பொருமல் உள்ளிட்ட நோய்களுக்கு கரிசலாங்கண்ணிச் சாற்றை சிறிதளவுக்கு கொடுத்து வந்தால் போதுமானது. மிக விரைவில் நோய் நீங்கி ஆச்சரியப்படும் படியான பலனைக் கொடுக்கும். மூச்சுத்திணறல் குணமடையும் கரிசலாங்கண்ணிச் சாறு 500 மில்லி, சுத்தமான கலப்படம் இல்லாத நல்லெண்ணெய் 500 மில்லி சேர்த்து தைலப் பதமாகக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி வீதம் தினம் இரண்டு வேளை உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் காசம், சுவாசம், சளியுடன் கூடிய இருமல் மூச்சுத்திணறல் ஆகிய நோய்கள் நீங்கிவிடும். இத்தைலத்தை மேல் உபயோகமாகவும் பயன்படுத்த வேண்டும். பொன்போல ஜொலிக்கும் கரிசாலை கிடைக்கும் போது சேகரித்துச் சுத்தம் செய்து, நன்றாகக் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு, தினம் ஐந்து கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல நிறத்தைப் பெறும். தலைமுடி நன்கு வளர கூந்தல் வளர 300 மில்லி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் 150 மில்லி கரிசலாங் கண்ணிச் சாற்றைக் கலந்து காய்ச்சி கைப் பதம் வந்ததும் வடிகட்டிவைத்துக் கொண்டு, தலைக்குத் தடவி வந்தால் தலைமுடி நன்றாக வளரும். கரிசலாங்கண்ணிப் பொடியை ஒரு பருத்தியினால் ஆன துணியில் முடிச்சாக கட்டி ஒரு பாத்திரத்தில் வைத்து நுனி முடிச்சு மூழ்கும் அளவிற்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி வெயிலில் சில தினங்கள் வைத்திருந்தால் எண்ணெய் நல்ல கருப்பு நிறமாக வரும். பிறகு எடுத்து வடிகட்டி இத் தைலத்தை தினமும் தலைக்குத் தடவி வந்தால் தலை முடி உதிராது, இளநீரை மாறிவிடும். பற்கள் உறுதியடையும் கரிசலாங்கண்ணி இலையை பல் துலக்கப் பயன்படுத்தினால், பற்கள் உறுதியாகும். ஈற்றில் உள்ள நோய்க் கிருமிகள் அழிந்து ஈறுகள் பலப்படும். தொண்டைச் சளி வெளியேறி விடும். கரிசலாங்கண்ணியின் வேரைக் கொண்டு பல் துலக்குங்கள். பல் துலக்கிய பின், கீரையை ஒரு பிடி எடுத்து மென்று தின்று ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தி வரவும். நாளடைவில் பற்களில் உள்ள மஞ்சள் கறை மறைந்து பற்களின் அழகு அதிகரிக்கும். நாள்பட்ட புண் ஆற... கரிசலாங்கண்ணி மிகச் சிறந்த கிருமி நாசினியாக இருப்பதால் அழுகும் நிலையில் உள்ள புண்கள், வெட்டுக் காயங்களுக்கு இலையை அரைத்து சாறு பூசினாலும், புண்கள் மேல் வைத்துக் கட்டினாலும் மிக விரைவில் புண்கள் ஆறிவிடும். கரிசலாங்கண்ணியை உணவாகவோ மருந்தாகவோ பயன்படுத்தினால், அறிவு விருத்தியாகும். பொன் போன்ற மேனி உண்டாகும்.