Sunday, 19 April 2015

உண்மையில் நீங்கள் தினமும் குளிக்கிறீர்களா (அல்லது உடலை கழுவுகிறீர்களா)?

யாரை பார்த்து என்ன கேள்வி கேட்டீர்கள்? நான் ஒவ்வொரு நாளும் 2 முறை குளிக்கிறேன், நான் costly யான soap தான் போட்டு தினமும் இருவேளை குளிக்கிறேன், ...... இப்படி பல பதில்கள் உங்களிடம் இருந்து வரலாம். அதற்கு முன் குளியல் என்றால் என்ன? என்று தெரிந்து கொள்ளுங்கள்.
குளித்தல் என்பது குளிர்வித்தல் என்கிற சொல்லின் சுருக்கமே. குளிர்வித்தல் என்பது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உடல் முழுமைக்கும் நடைபெற வேண்டும். இதனையே ஔவையார் “சனி நீராடு” என்றார்.
உணவு உண்பதற்கு முன்பு கைகளைக் கழுவுவது, வெளியே சென்று வந்தால் முகம் கை, கால்களை கழுவுவது போன்றதே தலைக்கு தண்ணீர் ஊற்றாமல் கழுத்திற்குக் கீழே மட்டும் தண்ணீர் ஊற்றுவது என்பதும். கழுத்திற்கு கீழ் மட்டும் தண்ணீர் ஊற்றுவது என்பது குளித்தல் ஆகாது, உடலை கழுவுதலே ஆகும். தலைக்கு தண்ணீர் ஊற்றாமல் உடலின் பிற பகுதிகளுக்கு மட்டும் தண்ணீர் ஊற்றும்போது உடலில் உள்ள ஒட்டுமொத்த சூடும் தலைக்கு ஏறி கேடு விளைவிக்கும். (அதில் ஒன்று தான் தலையில் பொடுகு வைப்பதும், மற்றும் பிற உடல் உஷ்ணம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளும்).
தினமும் குளித்திராதவர்களுக்கு உறைந்த சளி, சுவாசத்தில் சிரமம், உடல் அசதி போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். நீண்ட காலமாக குளிர்வித்தலை புறக்கணித்ததன் விளைவாக புதிதாகக் குளிக்கும்போது கழிவு வெளியேற்றம் நடைபெறும்; இதனால் ஆரம்பத்தில் உடலில் சிரமம் ஏற்படலாம். தொடர்ந்து குளித்தால் சுகத்தைப் பெறலாம். மழை பெய்கின்ற போதெல்லாம் மழைநீரில் உடல் நடுங்கும் அளவிற்கு நனைவது (குளிப்பது) உடலை வலுவாக்கும்.
“கூழானாலும் குளித்து குடி” என்பது சான்றோரின் வாக்கு. குடிப்பது கூழே ஆனாலும் குளித்தப் பின்னரே குடிக்க வேண்டும். இவ்வாக்கு மூலம் உணவருந்தும் நாட்கள் எல்லாம் உணவருந்துவதற்கு முன்பு குளித்தல் அவசியம் என்பது புலனாகிறது. (குறிப்பு: விரதம் இருக்கும் நாட்கள் வேண்டுமானால் நீங்கள் குளிக்காமல் இருந்து கொள்ளுங்கள்). அப்படியானால் குளித்தல் என்பது தினசரி நடக்கவேண்டிய ஒன்று. தினசரி உடல் முழுக்க குளிப்பவர்கள் தங்களது உடலிலும் மனதிலும் புத்துணர்ச்சியை பெற்று சுகத்தை பெறமுடியும்.
குளிப்பதற்கு எவ்வாறு சாதாரண நீர் உகந்ததோ அதுபோன்றே பருகுவதற்கும் சாதாரண நீரே ஏற்றது. வெந்நீர், ரசாயனங்கள் கலக்கப்பட்ட மினரல் வாட்டர் போன்றவை உடலுக்கு நலம் தருபவை அல்ல. குடிப்பதற்கும் குளிப்பதற்கும் சாதாரண நீர் அல்லது மண்பானை நீர் பயன்படுத்தலாம். மண்பானை நீரில் உடலுக்கு தேவையான உயிராற்றல் நிலைபெற்று இருக்கும்.
ஆனால் இன்றோ தலையில் தண்ணீர் படாமல் உடலை மட்டும் நனைப்பதை "சாதாரன குளியல்" என்றும் தலை நனையுமாறு குளிப்பதை "தலைக்கு குளிப்பது" என்றும் பெயர் மாற்றி கூறுகிறார்கள். நம்மவர்கள் "தலைக்கு குளிப்பது" என்று கூறுவது தான் உண்மையான "சாதாரன குளியல்".
"எண்ணை குளியல்' என்று ஒரு வகை குளியல் உள்ளது. அதாவது உடல் முழுவதும் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணை தேய்த்து குறைந்தது அரை மணி நேரமாவது கழித்து குளிப்பது.
குளியலுக்கு எதை பயன்படுத்தலாம்?
சோப்பு, ஷாம்பூ – தவிர்க்க வேண்டியவை:
சோப்பு, ஷாம்பூ முதலிய ரசாயன விஷங்களை உடலில் மேல் பயன்படுத்தும்போது அவை கழிவுகள் வெளியேறுவதற்காக தோலின் மேற்பரப்பில் உள்ள மெல்லிய துளைகளை அடைத்துவிடும். அதனால் தோலின் வழியாக உடல் கழிவுகள் வெளியேறாமல் உடல் நலம் பாதிக்கும். நம் உடல் தோலின் மூலமாக கிரகிக்க கூடிய பிரபஞ்ச சக்தியை சரியாக கிரகிக்க முடியாமலும் பாதிப்புக்கு உள்ளாகும். சோப்பு, ஷாம்பூ மட்டும் அல்ல, உடலின் மேல் பயன்படுத்த கூடிய facepowder, facecream, body spray, cent, sun screen lotions, body lotion அனைத்தும் இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும்.
சியக்காய், அரப்பு, பச்சைபயறு, கடலைமாவு, அரிசிமாவு, கேழ்வரகு மாவு, என எதாவது ஒன்றையோ அல்லது சிலவற்றை சேர்த்தோ பயன்படுத்தலாம்.
(சோப்பு போல நுரைக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் இவற்றில் ஒன்றுடன் ஒரு கிலோவிற்கு 150 gram விதம் வெந்தயத்தை சேர்த்து பயன்படுத்தலாம்)

No comments:

Post a Comment