Tuesday, 7 October 2014

புலிப்பாணி ஜோதிடம் - கேது மகாதிசை பலன்கள்

கேது மகாதிசைகேது புத்திப் பலன்கள்

கேது பகவானின் திசை வருடம் 7 ஆகும்இதில் இவரது சுய புத்தியானஆதிக்க காலம் 4 மாதம் 27 நாள்களாகும்இக்காலகட்டத்தில் இவர் நிகழ்த்தும்பலன்களாவன இவை தான் என்று சொல்வோம்நன்கு கவனித்துகேட்பாயாகபுகழ் மிக்க அரசரது படையாலும் ஆயுதங்களாலும் பீடைகள்ஏற்படும்வலிய பகைவரால் பலவகைத் தொந்தரவுகளும் அதனால்வியாதியும் நேரும்பெரும் பொருட்சேதமும் அங்கத்தில்குறையுண்டாதலும் தானாகவே வந்துசேரும்தான்வசிக்கும் நகரத்தில்பலவகைச் சூனியங்களும் உருவாகும்நாட்டுமக்கள் எல்லாரும் பகையாகித்துன்பம் தருவதால் நன்மை நேராது என்று போகர் அருளால் புலிப்பாணிகூறினேன்.இப்பாடலில் கேது மகாதிசையில் கேது புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


கேது மகாதிசைசுக்கிர புத்திப் பலன்கள்

கேது மகாதிசையில் சுக்கிரபகவானின் ஆதிக்க காலம் 1 வருடம் 2மாதங்களாகும்இக்கால கட்டத்தில் இவரால் நிகழ்த்தப்பெறும் பலன்களைக்கூறுகிறேன்கேட்பாயாககுறைதல் இல்லாத பகைவரால் விலங்குபூணுதல் நேரும்பலவகையான பொன்னாபரணங்களும் விரயங்களாகும்.மனைவிக்கும் இச்சாதகனுக்கும் அபமிருந்து தோடம் காணும்எனினும்தன்மையுள்ள அரச சகாயத்தால் மனத்தில் மகிழ்ச்சியுண்டாகி மனைவிமக்களுடன் சுகித்து வாழ்வான் என போகர் அருளால் புலிப்பாணி பாடினேன்.இப்பாடலில் கேது மகாதிசையில் சுக்கிர புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


கேது மகாதிசைசூரிய புத்திப் பலன்கள்

கேது மகாதிசையில் சூரிய பகவானின் ஆதிக்க காலம் 4 மாதம் 6நாள்களாகும்இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களைக் கூறுகிறேன்.கேட்பாயாகமனம் ஒவ்வாத பகைவரால் துன்பம் நேரும்அக்கினி பயமும்பேய்பிசாசுகளினால் மிகுந்த பயமும் சேர்ந்து இச்சாதகனைக் கொல்லும்.இவர்க்கு உறுதுணையாக நின்ற தந்தைக்கும்குருநாதர்க்கும் மரணம்ஏற்படும்வீணான தண்டச் செலவுகளால் இச்சாதகன் துறவு பூணுவான் எனப்போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.இப்பாடலில் கேது மகாதிசையில் சூரிய புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


கேது மகாதிசைசந்திர புத்திப் பலன்கள்


இக்கேது மகாதிசையில் சந்திர பகவானின் ஆதிக்க காலம் 7 மாதங்களாகும்.இக்கால கட்டத்தில் இவர் நிகழ்த்தும் பலன்களாவன இவைதான் எனக்கூறுவோம்கவனித்துக் கேட்பாயாகமனைவியானவள் , இச்சாதகனுடன்மனம் வேறுபட்டு விலகி நிற்பாள்அதர்மம் நேரும்மனைவி மக்கள்பாழடைவர்மிகப் பலவாகிப் பல்கி இருந்து பெரும் பொருள்கள்சேதமடைதலும் நேரும்தனது மனைவி தண்ணீரில் வீழ்ந்து தற்கொலைசெய்து கொள்ளும் நலமில்லாத துர்ப்பலன் நிகழும்இது கண்டு இச்சாதகன்நாணுவான் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.இப்பாடலில் கேது மகாதிசையில் சந்திர புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


கேது மகாதிசைசெவ்வாய் புத்திப் பலன்கள்

இனி இக்கேது பகவானின் திசையில் செவ்வாயின் ஆதிக்க காலம் 4 மாதம் 27நாள்களாகும்இக்காலகட்டத்தில் இவரால் நிகழ்த்தப் பெறும் பலன்களைக்கூறுவோம்கவனமாகக் கேட்பாயாகவலிமையுள்ள இனஜன பந்துக்களும்தாமறியாதவாறே சத்துருக்களாக மாறிப் போவர்மனையில் சிலர் கோள்சொல்லுதலால் குடும்பம் பாழாகும்பெண்களால் குல நாசம் ஏற்படும்.நிதானித்துத் திரட்டிய வெகுதனமும் விரயமாகிப்போகும்சகோதரவிரோதம் உண்டாகி அதனால் தீமை மிக்க பலனே நேரும் எனப் போகர்அருளால் புலிப்பாணி கூறினேன்.இப்பாடலில் கேது மகாதிசையில் செவ்வாய் புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


கேது மகாதிசைஇராகு புத்திப் பலன்கள்

கேது மகாதிசையில் இராகுபகவானின் ஆதிக்க காலம் 1 வருடம் 18நாள்களாகும்நன்மை தராத அக்கால கட்டத்தில் இவர் நிகழ்த்தும்பலன்களைக் கூறுவோம்கவனமாய்க் கேட்பாயாகபகைவராலும்,திருடர்களாலும் மிகு பயம் ஏற்படும்சந்தேகம் கொண்ட மனைவியினால்குடும்பத்தில் வீண் கலகம் ஏற்படும்தேகத்தில் வியாதி காணும்,இச்சாதகனின் குலதெய்வமானது இவன் மனையில் தங்காது குடியோடிப்போகும் என்று போகமா முனிவர் அருளால் புலிப்பாணி கூறினேன்.இப்பாடலில் கேது மகாதிசையில் இராகு புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


கேது மகாதிசைவியாழன் புத்திப் பலன்கள்

கேது மகாதிசையில் வியாழ பகவானின் ஆதிக்க காலம் 11 மாதம் 6 நாட்கள்ஆகும்இக்கால கட்டத்தில் புத்திரனால் வெகுதனம் உண்டாகும்மனம்விரும்பிய மனைவி மகிழ்ச்சிக் கூத்தாடும் வண்ணம் மனையில் மகிழ்ச்சிபொங்கும்பூமிதனில் விளைச்சல் மிகுந்து வெகு லாபம் தன்னிறைவாகவந்தடையும்வெகுவான அரசாங்க நன்மைகளும் உதவிகளும் சேர்ந்துமனச்சோர்வகற்றும்பலவகையிலும் சகாயங்கள் நேர்ந்து யோகத்தைச்செய்யும் என்று போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.இப்பாடலில் கேது மகாதிசையில் வியாழன் புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


கேது மகாதிசைசனி புத்திப் பலன்கள்

கேது மகாதிசையில் சனிபகவானின் ஆதிக்க காலம் 1 வருடம் 1 மாதம் 9நாள்களாகும்இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களைக் தெளிவாகக்கூறுவோம்கவனமாகக் கேட்பாயாகவானளாவிய செல்வமும்பெரும்பொருளும் சேதம் அடையும்நன்மையையே விரும்பிச் செய்யும் மனைவிமக்கள் கை விட்டுப் போதலும் நேரும்மூன்று மாத கால அளவில்மரணமும் நேரும்மிகுதியான மனக் கவலையால் பீடித்த இச்சாதகனுக்குமரணம் நேர்தலும் உண்டு என்று போகமா முனிவரின் பேரருளால்புலிப்பாணி கூறினேன்.இப்பாடலில் கேது மகாதிசையில் சனி புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


கேது மகாதிசைபுதன் புத்திப் பலன்கள்

கேது மகாதிசையில் புதன் பகவானின் ஆதிக்க காலம் 11 மாதம் 27நாள்களாகும்நன்மை தரும் இக்காலகட்டத்தில் நிகழும் பலன்களைக்கூறுகிறேன்கவனமாகக் கேட்பாய்இதுவரை பற்பல இன்பங்களில்வயப்பட்டு மயங்கிய நிலை மாறி இந்நிலவுலகில் இச்சாதகனை எல்லாரும்ஒரு சிறந்த மனிதன் என்று கூறத்தக்க நிலை உண்டாகும்திருமகள் இவன்மனையை விரும்பிச் சேர்வாள்எனவே தீங்கொன்றும் நேராது எவ்விதமனக்கவலையும் இல்லாதொழியும் எனப் போகமா முனிவர் பேரருளால்புலிப்பாணி பாடினேன்.இப்பாடலில் கேது மகாதிசையில் புதன் புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.

புலிப்பாணி ஜோதிடம் - சுக்கிர மகாதிசை பலன்கள்

சுக்கிர மகாதிசைசுக்கிர புத்திப் பலன்கள்
சுக்கிர மகாதிசை வருடம் மொத்தம் 20 ஆகும்இதில் சுக்கிர பகவானின்சுயபுத்தியான ஆதிக்க காலம் 3 வருடம் 4 மாதங்களாகும்இக்காலகட்டத்தில் இச்சாதகன் பூமியில் ஓர் அரசனைப்போல வெகு சிறப்புடன்வாழ்வான்பலவிதமான சுக போகங்களும் உண்டாகும்பெருமை தரத்தக்கஇலக்குமி தேவியானவள் இவனது மனையை விரும்பி ஒரு பொற்கொடிபோல வந்து அமைவாள்சுப சோபனங்களும் சுபயோகங்களும் உண்டாகும்.மனம் விரும்பிய மங்கையர் வாய்த்து பலவகையிலும் இன்பம் துய்த்துவாழ்வான் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.இப்பாடலில் சுக்கிர மகாதிசையில் சுக்கிர புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


சுக்கிர மகாதிசைசூரிய புத்திப் பலன்கள்
இச்சுக்கிர மகாதிசையில் சூரிய பகவானின் ஆதிக்க காலம் 1 வருடமாகும்.இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களைக் கூறுகிறேன்கேட்பாயாக!ஜுரத்தினால் பீடையுண்டாகும்நாய் கடித்தல் போன்ற பிணியும் உண்டாம்.பகைவர்கள் குடிகெட்டுப்போகும் வண்ணம் கேடு நினைத்து அதனைநிறைவேற்றவும் செய்வர்நல்ல குணம் பொருந்திய தாய்தந்தையின்மரணம் முதலியன சம்பவிக்கும்குறைவற வாழ்ந்த போதிலும் அறிவில்தெளிவின்றி வெகு கலக்கம் ஏற்படும்தன் துணைவியை விட்டுப்பிரிந்துஆண்டியாகி மலைப்பிரதேசங்களுக்குச் செல்வான் என்று போகர் அருளால்புலிப்பாணி கூறினேன்.இப்பாடலில் சுக்கிர மகாதிசையில் சூரிய புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


சுக்கிர மகாதிசைசந்திர புத்திப் பலன்கள்

சுக்கிர மகாதிசையில் சந்திர பகவானின் ஆதிக்க காலம் 1 வருடம் 8மாதங்களாகும்இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களாவனதிருமகளைப்போல் திகழ்ந்த அன்னை மரணமடைவாள்அவளது சாவுக்குப்பின் தேடிவைத்திருந்த திரவியங்கள் நாசமாகிப் போகும்பதர் போன்ற மனைவியைவிரும்பாது அவளிடமிருந்து விலகி இச்சாதகன் ஓடிப் போதலும் நேரும்.வியாதி தொடர்ந்து காண்பதால் வெகு வருத்தையும் அடைவான்சமயம்பார்த்து பழவினையானது தனது பணியைச் செய்வது எத்தனைஅதிசயமானது எனப் போகர் கருணையால் புலிப்பாணி கூறினேன்.இப்பாடலில் சுக்கிர மகாதிசையில் சந்திர புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


சுக்கிர மகாதிசைசெவ்வாய் புத்திப் பலன்கள்

சுக்கிர மகாதிசையில் செவ்வாயின் ஆதிக்க காலம் 1 வருடம் 2மாதங்களாகும்இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களாவனஎலி கடித்தலால்ஏற்படும் நெடுநாள் இருமல் முதலியனவும் வந்து பற்றிக் கொள்ளும்.வயிற்றில் உபாதை ஏற்படும்குதத்தில் கடுப்பு உண்டாகும்பெண்களால்தொல்லைகள் ஏற்படும்கொடுமையான பகைவனும் வந்து பற்றிக்கொள்வான் என்று போகரின் பேரருட் கருணையால் புலிப்பாணி கூறினேன்.இப்பாடலில் சுக்கிர மகாதிசையில் செவ்வாய் புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


சுக்கிர மகாதிசைஇராகு புத்திப் பலன்கள்
சுக்கிர மகாதிசையில் இராகு பகவானின் ஆதிக்க காலம் 3 வருடங்களாகும்.இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களாவனசிரரோகம்காமாலை,சயரோகம் முதலிய நோய்கள் ஏற்படுதலோடு அரசரது பகையும்அபமிருந்துதோஷமும் மனத்திற்கினிய தாய் தந்தை மடிந்து படுதலும் ஏற்படும்மேலும்மேக நோய் எனும் ரோகம் ஏற்பட்டு தேகமெங்கும் சிரங்குகுட்டம் போன்றநோயுற்று அவதிப்படுவான் எனப் போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.இப்பாடலில் சுக்கிர மகாதிசையில் இராகு புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


சுக்கிர மகாதிசைவியாழன் புத்திப் பலன்கள்
சுக்கிர மகாதிசையில் வியாழ பகவானின்ஆதிக்க காலம் 2 வருடம் 8மாதங்களாகும்இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களாவனமனம்விரும்பிய மங்கையரைச் சேர்தலும் அதனால் மங்களகரமான வாழ்வும்சுபயோகங்களும் நேரும்விரும்பிய வண்ணம் பெரும் பொருட் சேர்க்கைஏற்படும்அச்செல்வம் மேலும் மேலும் பெருகிக் காணும்நன்மை தரத்தக்கஆண் சந்தானமும் பெண் மக்களும் வாய்ப்பர்நாடு நகரங்கள் வசமாகும்.பலவிதத்திலும் நன்மையும் வாகன யோகமும் ஏற்பட்டு சிறந்தநண்பர்களையும் பெற்றுச் சுகித்து வாழ்வான் எனப் போகர் கருணையால்புலிப்பாணி புகன்றேன்.இப்பாடலில் சுக்கிர மகாதிசையில் வியாழன் புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


சுக்கிர மகாதிசைசனி புத்திப் பலன்கள்

சுக்கிர மகாதிசையில் சனிபகவானின் ஆதிக்க காலம் 3 வருடம் 2மாதங்களாகும்இக்கால கட்டத்தில் இவர் நிகழ்த்தும் பலன்களாவனவெகுதன லாபம் வாய்க்கும் பூமிமனை முதலியன நேரும்அரச சம்பத்துடன்வாழ்வது நேரும்குலமாதர்நன்மைந்தர் அமைதலோடு நாடு நகரங்களும்உண்டாகும்மிகப்பெரிய தனவந்தனாகி ஆளுமை மிகுந்து ஒருபெருமன்னன் என்று கூறக்கூடிய வகையில் அவனியில் பொலிவுறவாழ்வான் என்று போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.இப்பாடலில் சுக்கிர மகாதிசையில் சனி புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


சுக்கிர மகாதிசைபுதன் புத்திப் பலன்கள்

சுக்கிர மகாதிசையில் புதபகவானின் ஆதிக்க காலம் 2 வருடம் 10மாதஙகளும்இக்கால கட்டத்தில் விளையும் பலன்களைக் கூறுவோம்தெளிவாகக் கேட்பாயாகநாடு நகரம் வசமாகும்தன்னிகரில்லாதஅரசனெனஆட்சி புரியும் நிலை ஏற்படும்முடிவில் இந்நிலவுலகில் தவத்திற்சிறந்த தவசியாதலும் நேரும்கைவிட்டுப்போம் என்று சொல்லத்தகும்பொன் முதலாகிய பொருள்களையும் பூமி லாபத்தையும் பெற்று அரசசெல்வமெய்தி ஆண்டிருக்கும் நிலை ஏற்படும் எனப் போகர் அருளால்புலிப்பாணி கூறினேன்.இப்பாடலில் சுக்கிர மகாதிசையில் புதன் புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


சுக்கிர மகாதிசைகேது புத்திப் பலன்கள்

சுக்கிர மகாதிசையில் கேது பகவானின் ஆதிக்க காலம் 1 வருடம் 2மாதங்களாகும்இக்கால கட்டத்தில் இவர் நிகழ்த்தும் பலன்களாவன:வளருகின்ற கொடிபோலும் இடையுடைய மனையாள் மரணம் நேரும்.மிகுதியான திரவிய நாசம் ஏற்படும்ஒப்பாகும் மிக்காரும் இல்லாதுதனித்தரசாண்டிருந்த நிலைமை மாறும்நாடு நகரங்கள் இழப்பாகும்,சம்பத்து குறையும்தாய் தந்தை மரணமடைவர்கோள் வைக்கக் கூடியசத்துருக்களால் குடிக்குக் கேடு விளையும்மனைவி மனம் வெறுத்துவீட்டைவிட்டுப் போவாள்குடும்பமானது சிதையும் எனப் போகர் அருளால்புலிப்பாணி கூறினேன்.இப்பாடலில் சுக்கிர மகாதிசையில் கேது புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.