Monday, 10 November 2014

சனி பெயர்ச்சி பலன்கள் சிம்மம்: (2014 -2017)

சிம்மம்: மகம், பூசம், உத்திரம் - 1

பிறர் நலனுக்காக பாடுபடக்கூடிய குணமும் சூதுவாது அறியாத வெள்ளை உள்ளமும் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே! உங்களுக்கு இதுநாள் வரை 3 இல் சஞ்சரித்து பல நற்பலன்களை வாரி வழங்கிய சனிபகவான் வரும் 16.12.2014 முதல் 19.12.2017 வரை சுகஸ்தானமான 4 ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு அர்த்தாஷ்டம சனி நடைபெறவுள்ளது.  இது சாதகமற்று அமைப்பு என்பதால் தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகும். சுகவாழ்வு சொகுசு வாழ்விலும் இடைய+றுகள் ஏற்படும். உடல் ரீதியாகவும் சிறுசிறு பாதிப்புகள் உண்டாவதால் மருத்துவச் செலவுகளும் உண்டாகும். நேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழ்நிலையும், எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத நிலையும் ஏற்படும்.  வீடு, மனை, வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய நிலை உண்டாகும். சனி பார்வை ஜென்ம ராசிக்கு 6,10 ஆம் வீட்டிற்கும் உள்ளதால் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. பேச்சில் நிதானமுடனிருப்பது உத்தமம். அசையா சொத்துகளாலும் வண்டி வாகனங்களாலும் வீண் விரயங்கள் ஏற்படும். 
சனி 4 இல் சஞ்சரித்து அர்த்தாஷ்டம சனி  நடைபெறும் இக்காலங்களில் ஆண்டுக் கோளான குருபகவான் விரய  ஸ்தானமான 12 ஆம் வீட்டில்  05.07.2015 வரை சஞ்சரிக்க இருப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் பணம் கொடுக்கல் வாங்கலிலும் கவனமுடன் செயல்பட்டால் லாபத்தைப் பெறமுடியும். 05.07.2015 முதல் 02.08.2016 வரை ஜென்ம இராசியில் குரு சஞ்சரிக்க இருப்பதால் நீங்கள் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது, உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். 02.08.2016 முதல் 02.09.2017 வரை குரு தன ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்குள்ள பிரச்சினைகள் யாவும் படிப்படியாக விலகி பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்களும் கைகூடும். தொழில் உத்தியோக ரீதியாக ஏற்றமிகு பலன்கள் ஏற்படும். உற்றார் உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். கணவன் மனைவியிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும்.

தேக ஆரோக்கியம்
     உங்கள் ஜென்ம ராசிக்கு 4 இல் சனி சஞ்சரிப்பதால் உங்களுக்கு அர்த்தாஷ்டச் சனி நடைபெறுகிறது. இதனால் உடல் நிலையில் சோர்வு எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட இயலாத நிலை உண்டாகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாதபடி சுகவாழ்வு பாதிப்படையும். குடும்பத்திலுள்ளவர்களாலும் சிறுசிறு விரயங்களை சந்திப்பீர்கள்.

குடும்பம் பொருளாதார நிலை
     குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களால் மனநிம்மதி குறைய நேர்ந்தாலும் உடனடியாக சரியாகும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். எதையும் வாங்கி அனுபவிக்க தடைகள் உண்டாகும். நேரத்திற்கு சாப்பிட முடியாமல் அலைச்சல் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல பழகிக் கொள்வது நல்லது. சுகவாழ்வு, சொகுசு வாழ்வில் தடைகள் ஏற்படும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் நடை பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. புதிய கார், பங்களா வாங்கும் முயற்சிகளில் சிறுசிறு விரயங்கள் உண்டாகும். ப+ர்வீக சொத்து வழக்குகள் இழுபறி நிலையிலேயே இருக்கும். வீண் பிரச்சனைகளில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது.

உத்தியோகஸ்தர்களுக்கு
     உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வுகளை பிறர் எளிதில் தட்டிச் செல்வார்கள். எவ்வளவு தான் உழைத்தாலும் திறமைக்கேற்ற பலனை அடைய முடியாது. பிறர் செய்யும் தவறுகளுக்கும் சில நேரங்களில் வீண் பழியை சுமக்க வேண்டியிருக்கும். ஊதிய உயர்வுகள் கிடைத்தாலும் வேலைப் பளுவும் அதிகரிக்கும். உயரதிகாரிகள் ஒரளவுக்கு ஒத்துழைப்பாக நடந்து கொண்டால், உடன் பணிபுரிபவர்களால் வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.

தொழில் வியாபாரிகளுக்கு
     தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். எதிலும் சற்று மந்தமான நிலை  நிலவினாலும் பொருட் தேக்கம் ஏற்படாமல் சமாளிக்க முடியும். நிறைய போட்டி பொறாமைகள் ஏற்பட்டு வரவேண்டிய வாய்ப்புகளும் கைநழுவும். கூட்டாளிகளிடமும் வேலையாட்களிடமும் சற்று விட்டு கொடுத்து நடப்பது நல்லது. நவீனகரமான கருவிகள் பழுதடைவதால் அபிவிருத்தி குறைவதோடு வீண் செலவுகளும் ஏற்படும் என்றாலும் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றலும் உண்டாகும்.

பெண்களுக்கு
     உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவினாலும் உற்றார் உறவினர்களால் குடும்பத்தில் நிம்மதி குறையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். சிலருக்கு அழகான குழந்தை பாக்கியமும் கிட்டும். பணிபுரிவோர்க்கு எதிர் பாராத இட மாற்றங்கள் ஏற்படுவதோடு வேலைப் பளுவும் அதிகரிக்கும்.

கொடுக்கல் வாங்கல்
     பணம் கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருந்தாலும் சில நேரங்களில் பெரிய தொகைகளை கடனாகக்  கொடுப்பதைத் தவிர்க்கவும். பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதாலும் வீண் பிரச்சனைகளில் சிக்குவீர்கள். கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்றவற்றில் ஏற்றத் தாழ்வான நிலையிருக்கும். கொடுத்த கடன்கள் தடையின்றி வசூலாகும்.

அரசியல்வாதிகளுக்கு
     கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் சிறுசிறு இடைய+றுகள் நிலவினாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். உங்கள் பேச்சிற்கு மக்களிடையே மதிப்பிருக்கும். மக்களின் தேவைகளைப் ப+ர்த்தி செய்வதால் மட்டுமே அவர்களின் ஆதரவை தடையின்றி பெற முடியும். கட்சிப் பணிகளுக்காக செலவு செய்ய வேண்டிய சூழ்நிலையும் அலைச்சல்களும் உண்டாகும்.

விவசாயிகளுக்கு
     பயிர் விளைச்சல் சுமாராக இருந்தாலும் நஷ்டம் ஏற்படாது. சந்தையில் விளைப்பொருட்களை நல்ல விலைக்கு விற்க முடியும். புதிய நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் சற்று கவனம் தேவை. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும். கால் நடைகளுக்கு நோய்கள் தாக்குவதால் சிறுசிறு விரயங்கள் உண்டாகலாம்.

படிப்பு
     கல்வியில் முழு முயற்சியுடன் செயல் பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். ஞாபக மறதியால் எல்லா வகையிலும் பாதிப்படைவீர்கள். கல்விக்காக சிலர் குடும்பத்தை விட்டுப் பிரிய வேண்டிய நிலை உண்டாகும். சிலருக்கு தொலை தூரப் பயணம் மேற்கொள்ள வேண்டி வருவதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். தேவையற்ற நட்புகளைத் தவிர்த்தால் வீண் பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள்.

ஸ்பெகுலேஷன்: லாட்டரி ,ரேஸ், ஷேர் போன்றவற்றில் நன்மை தீமை கலந்த பலன்களே கிடைக்கும் என்பதால் பெரிய முதலீடுகளில் கவனம் தேவை.

சனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 16.12.2014 முதல் 24.01.2015 வரை
சனி பகவான் உங்கள் இராசிக்கு நட்பு கிரகமான குருவின் நட்சத்திரத்தில் சுக ஸ்தானமான 4 இல்  சஞ்சரிக்கும் இக்காலத்தில் 12 இல் குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும் என்பதால் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே வெற்றியினைப் பெறமுடியும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கடன் பிரச்சனைகள் சற்றே குறையும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருந்தாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. சர்ப்ப கிரகங்களான ராகு 2 ஆம் வீட்டிலும் கேது 8 ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் வீண் வாக்கு வாதங்கள் உறவினர்களிடையே  விரோதங்கள் ஏற்படும். எதிலும் சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலன் அடைய முடியும். தொழில் வியாபார நிலையில் ஏற்படக் கூடிய அதிகமான போட்டிகளால் லாபம் குறையும். உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டியிருக்கும். 

சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 14.03.2015 வரை
சனி தனது சுய நட்சத்திரத்தில்  4 இல் சஞ்சரிப்பதால்  அர்த்தாஷ்டம சனி நடக்கும் இக்காலத்தில்; 2 இல் இராகுவும், 8 இல் கேதுவும் இருப்பதால்  உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் திருமண சுபகாரியங்கள் சிறு சிறு தடைகளுக்கு பின் கை கூடும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். கணவன் மனைவியிடையேயும் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடன்கள் இன்றி வாழலாம். பணம் கொடுக்கல் வாங்கலிலும் கொடுத்த கடன்களை திரும்ப பெறுவதில் தடைகள் உண்டாகும். செய்யும் தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு லாபம் அமையும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம், விட்டு கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் சறறு நெருக்கடிகளை சந்தித்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மூலம் அலைச்சல் டென்ஷன் குறையும்.

சனிபகவான் வக்ரகதியில் 15.03.2015 முதல் 30.07.2015 வரை
சுக ஸ்தானத்தில்  சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் ஓரளவுக்கு ஏற்றமிகு பலன்களை அடைய முடியும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். சுபிட்சங்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களால் சில மனசஞ்சலங்கள் ஏற்பட்டாலும் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கடன் சுமைகள்  சற்று விலகும். குடும்பத் தேவைகளும் ப+ர்த்தியாகும். தொழில் வியாபார நிலையில் போட்டிகள் இருந்தாலும் அவற்றை சமாளிக்கும் வலிமை வல்லமை உண்டாகும். இக்காலங்களில் முன்கோபத்தை குறைப்பது பிறர் விஷயங்களில் தலையிடாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டியிருக்கும். வேலைப் பளுவும் அதிகரிக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை பிறரை நம்பி ஈடுபடுத்தாதிருப்பதும் நல்லது.

சனிபகவான் துலா இராசியில் விசாகம் நட்சத்திரத்தில் 31.07.2015 முதல் 05.09.2015 வரை
உங்கள் இராசிக்கு  4 இல் சஞ்சரித்த சனி இக்காலத்தில்  பின்னோக்கி 3 இல் சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பாகும். குரு ஜென்ம ராசியில்; சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். நல்ல நட்புகள் தேடி வரும். குடும்பத் தேவைகள் யாவும் ப+ர்த்தியாகும். பொருளாதார மேன்மையால் சுபிட்சமான வாழ்க்கை அமையும். 2 இல் இராகுவும், 8 இல் கேதுவும் இருப்பதால்  உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு வர வேண்டிய வாய்ப்புகளில் தடை இருக்காது. போட்டிகளை எதிர் கொண்டு வெற்றி பெற முடியும். கூட்டாளிகளையும். தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல் பட முடியும். உயர் பதவிகளை வகிக்கும் வாய்ப்பும் உண்டாகும்.

சனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 06.09.2015 முதல் 18.10.2015 வரை
உங்கள் இராசிக்கு 5,8 இக்கு அதிபதியான குருவின் நட்சத்திரத்தில் சனி 4 இல் சஞ்சரிப்பதால்  அர்த்தாஷ்டம சனி நடக்கும் இக்காலத்தில் ஜென்ம இராசியில் குரு சஞ்சரிப்பதால்; உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவினை உண்டாக்கும். குடும்பத்தில் தேவையற்ற வீண் பிரச்சனைகள் உண்டாகும். எதிர் பாராத பயணங்களாலும் அலைச்சல்கள் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களால் சிறுசிறு மனசஞ்சலங்கள் ஏற்படும். விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமான இருப்பதால் தேவைகளைப் ப+ர்த்தி செய்ய திண்டாட வேண்டி வரும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரிப்பதுடன் வரவேண்டிய வாய்ப்புகளும் கைநழுவிப் போகும். வீண் விரயங்கள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த பதவி உயர்வுகளை அடைய முடியும். 2 இல் இராகு இருப்பதால் முன் கோபத்தை குறைத்து பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 19.10.2015 முதல் 26.03.2016 வரை
சனிபகவான் தனது சுய நட்சத்திரத்தில் 4 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் ஜென்ம இராசியில் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுப்பது நல்லது. எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் டென்ஷன் போன்றவையும் அதிகரிக்கும். பணவரவுகள் தேவைக்கேற்ப இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். 2 இல் இராகு சஞ்சரிப்பதால் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் மன நிம்மதி குறையும். வண்டி வாகனங்களால் சிறுசிறு விரயங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியில்லை. ஆன்மீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். உற்றார் உறவினர்களால் சிறுசிறு மனசஞ்சலங்கள் ஏற்படும். பேச்சில் நிதானமுடன் இருப்பது மூலம் வீண் பிரச்சனைகள் குறையும்.

சனிபகவான் வக்ரகதியில் 27.03.2016 முதல் 11.08.2016 வரை
உங்கள் இராசிக்கு 4 இல்  சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியில் இருப்பதால்  நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினைப் பெறுவீர்கள். ஜென்ம இராசியில் குரு, இராகுவும், 7 இல்  கேதுவும்; சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின்  வெற்றி கிட்டும.; பண விஷயங்களில் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாகக் கொடுக்காதிருப்பது உத்தமம். குடும்பத்தில் ஒற்றுமை குறைய கூடும் என்பதால் அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களால் சிறுசிறு மனசஞ்சலங்கள் ஏற்படும்.கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைவும், எதிர்பாராத வீண் விரயங்களும்; ஏற்படும். தொழில் வியாபார நிலை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவினை ஏற்படுத்தும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறு சுறுப்பாகவே செயல்பட முடியும். உத்தியோகஸ்தர்கள் உடன்பணி புரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலை பளுவையும் குறைத்துக் கொள்ள முடியும்.சிலருக்கு எதிர் பாராத இடமாற்றங்கள்அலைச்சலை ஏற்படுத்தும். 

சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 12.08.2016 முதல் 18.11.2016 வரை
அர்த்தாஷ்டம  சனி நடைபெறும் இக்காலத்தில் 02.08.2016 முதல் குரு தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் ப+ர்த்தியாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று சுப காரியங்கள் தடபுடலாக நிறைவேறும். சிலருக்கு நினைத்தவரையே கைபிடிக்கும் யோகமும் கிட்டும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும், ப+ர்வீக சொத்துகளால் லாபமும் உண்டாகும்.தொழில் வியாபாரத்திலிருந்த  போட்டிகள் குறையும். உத்தியோகஸ்தர்கள் சிறப்பான உயர்வினைப் பெறுவார்கள். எதிர்பாராத திடீர் தனசேர்க்கையும் பெரிய மனிதர்களின் நட்பும் ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடும் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். ஜென்ம இராசியில்  இராகுவும், 7 இல்  கேதுவும்; சஞ்சரிப்பதால் கணவன் மனைவி இருவரும் விட்டு கொடுத்து செல்வது நல்லது.

சனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 19.11.2016 முதல் 08.04.2017வரை
உங்கள் இராசிக்கு 2.11 இக்கு அதிபதியான புதன் சாரத்தில் சனி 4 இல் சஞ்சரித்தாலும், 2 இல் குரு சஞ்சரிப்பதால்   மகிழ்ச்சிகரமான நிலையே இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். பணவரவுகளும் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் ப+ர்த்தியாகும். பொன், பொருள் சேரும். தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து லாபத்தினைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு சற்று அலைச்சல்கள் ஏற்பட்டாலும் பதவி உயர்வுகள் கிடைக்கும். எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கு நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். வெளி வட்டாரத் தொடர்புகளாலும் பெயர் புகழ் உயரும். கடன்களும் படிப்படியாக குறையும். ஜென்ம இராசியில்  இராகு, 7 இல் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் ஓரளவுக்கு நற்பலனை பெறமுடியும். திருமண சுப காரியங்கள் தடபுடலாக நிறைவேறும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாவதற்கான அறிகுறிகள் உண்டாகும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். உடல் ஆரோக்கியமும் அற்புதமாக அமைவதால் எடுக்கும் காரியங்களை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள்.

சனிபகவான் வக்ரகதியில் 09.04.2017 முதல் 04.08.2017 வரை
உங்கள் இராசிக்கு 4 இல்  சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியிலும்  குரு தன ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால்  பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலையே இருக்கும். திருமண சுபகாரியங்களும் தடபுடலாக நடைபெறும். ஆரோக்கியத்தில் ஏற்படக் கூடிய பாதிப்புகளால் சற்று மருத்துவ செலவுகளை சந்திப்பீர்கள். அசையும் அசையா சொத்துகளால் சில வீண் பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி எந்தவொரு காரியத்திலும் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை தடையின்றி அடைவார்கள். எதிர்பாராத வீண் விரயங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது. தெய்வீக பணி ஆன்மீக பணிகளில் ஈடுபடக் கூடிய வாய்ப்பு பிறருக்கு  உதவிகள் செய்யக்கூடிய பண்பு யாவும் உண்டாகும்.

சனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 05.08.2017 முதல் 19.12.2017 வரை
சனி தனக்கு நட்பு கிரகமான புதனின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலத்தில் 02.09.2017 முதல் குரு 3 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால்  இக்காலங்களில் ஏற்றத்தாழ்வான பலன்களையே பெறுவீர்கள். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்குப் பின் கிட்டும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டே முன்னேறுவீர்கள். பணவிஷயத்தில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுக்காமலிருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் சற்றே மந்த நிலை ஏற்பட்டாலும் பொருள் தேக்கம் உண்டாகாது. உத்தியோகஸ்தர்களுக்கு தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் வீண் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். முன்கோபத்தை குறைத்துக் கொண்டு பிறர் விஷயங்களில் தலையிடாதிருப்பதும் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதும் மிகவும் நல்லது. தேவையற்ற அலைச்சல் டென்ஷன் அதிகரிப்பதால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் பாதிப்படையும் இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படும். 

மக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

     பிறருக்கு எந்தக் காலத்திலும் அடிமையாக இருக்க விரும்பாத உங்களுக்கு சனி 4 இல் சஞ்சரித்து அர்த்தாஷ்டமச் சனி நடைபெறுவதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். பணவரவுகள் திருப்திகரமாக இருந்தாலும் சுகவாழ்வில் பாதிப்பு உண்டாகும். திருமண சுபகாரியங்கள் குடும்பத்தில் நடைபெறும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்படும்.
ப+ர நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

     பகைவரை வெல்லக்கூடிய வலிமையும் நல்ல அறிவாற்றலும் கொண்ட உங்களுக்கு சனி பகவான் 4 இல் சஞ்சரித்து அர்த்தாஷ்டமச் சனி நடைபெறுவதால் ஏற்ற இறக்கமான பலன்களே உண்டாகும். எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும். பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களையும் உற்றார் உறவினர்களையும் அனுசரித்துச் செல்வதன் மூலம் அனுகூலப் பலனை அடைய முடியும். தொழில், வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சற்றே அலைச்சல்களும் உண்டாகும்.

உத்திரம் 1 ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு

     பிறர் மனதைப் புண்படுத்;த தெரியாத குணம் கொண்ட உங்களுக்கு அர்த்தாஷ்டமச் சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கட்டுப் பாட்டுடன் இருப்பது அவசியம். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். பொன் பொருள் சேரும். சிலர் நினைத் தவரையே கை பிடிப்பர். கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்படுவது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாமல் போகும். உத்தியோகஸ்தர்களுக்கு அதிக நேரம் உழைக்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்டம் தருபவை

தேதி : 1,2,3,9,10,11, 12
கிழமை : ஞாயிறு, திங்கள்
நிறம் : சிவப்பு, மஞ்சள்
கல் : மாணிக்கம்
திசை : கிழக்கு
தெய்வம் : சிவன்

Saturday, 8 November 2014

சிவ புராணம்

நம சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழியாண்ட குருமணி தன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க!
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க!
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க!
புறத்தார்க்கு சேயோந்தன் பூங்கழல்கள் வெல்க!
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!
ஈசன் அடி போற்றி ! எந்தை அடி போற்றி!
தேசன் அடி போற்றி ! சிவன் சேவடி போற்றி!
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!
மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி!
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!
சிவன் அவனென் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன்தாள் வணங்கி
சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான் !
கண்ணுதலான் தன்கருணை கண் காட்ட வந்தெய்தி
என்னுதற்கெட்டா எழிலார் கழல் இறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும் சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்
புல்லாகி பூடாகி புழுவாய் மரமாகி
பல் விருகமாகி பறவையாய் பாம்பாகி
கல்லா மனிதராய் பேயாய் கனங்களாய்
வல்லசுரராகி முனிவராய் தேவராய்
செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே
வெய்யாய் தனியாய் இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞானமாகி மிளிர்கின்ற மெய் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்ப பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே
ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னை புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்ற மனங்கழிய நின்ற மறையோனே
கரந்த பால் கன்னலொடு நெய் கலந்தாற் போல
சிறந்தடியார் சிந்தனையுள் தேன் ஊறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓரைந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை
அறம் பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்தெங்கும் புழு அழுக்கு மூடி
மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்க புலன் ஐந்தும் வஞ்சனையை செய்ய
விலங்கு மனத்தால் விமலா உனக்கு
கலந்து அன்பாகி கசிந்துள் உருகும்
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன்மேல் வந்தருளி நீள் கழல்கள் காட்டி
நாயிற் கடையாய் கிடந்த அடியேற்கு
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதியே மலர்ந்த மலர் சுடரே
தேசனே தேனார் அமுதே சிவபுரானே
பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ஆரியனே
நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்
பேராது நின்ற பெரும் கருணை பேராறே
ஆராஅமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில்
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனையுள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக் குடம்பின் உட்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.

திருச்சிற்றம்பலம்

ஹோரை அட்டவணை :




நேரம்ஞாயிறுதிங்கள்செவ்வாய்புதன்வியாழன்வெள்ளிசனி
6-7 பகல் சூரியன் சந்திரன்செவ்வாய்புதன்குருசுக்கிரன்சனி
7-8சுக்கிரன்சனிசூரியன்சந்திரன்செவ்வாய்புதன்குரு
8-9புதன்குருசுக்கிரன்சனிசூரியன்சந்திரன்செவ்வாய்
9-10சந்திரன்செவ்வாய்புதன்குருசுக்கிரன்சனிசூரியன்
10-11சனிசூரியன்சந்திரன்செவ்வாய்புதன்குருசுக்கிரன்
11-12குருசுக்கிரன்சனிசூரியன்சந்திரன்செவ்வாய்புதன்
12-1செவ்வாய்புதன்குருசுக்கிரன்சனிசூரியன்சந்திரன்
1-2சூரியன்சந்திரன்செவ்வாய்புதன்குருசுக்கிரன்சனி
2-3சுக்கிரன்சனிசூரியன்சந்திரன்செவ்வாய்புதன்குரு
3-4புதன்குருசுக்கிரன்சனிசூரியன்சந்திரன்செவ்வாய்
4-5சந்திரன்செவ்வாய்புதன்குருசுக்கிரன்சனிசூரியன்
5-6சனிசூரியன்சந்திரன்செவ்வாய்புதன்குருசுக்கிரன்
6-7 இரவுகுரு சுக்கிரன்சனிசூரியன்சந்திரன்செவ்வாய்புதன்
7-8செவ்வாய்புதன்குருசுக்கிரன்சனிசூரியன்சந்திரன்
8-9சூரியன்சந்திரன்செவ்வாய்புதன்குருசுக்கிரன்சனி
9-10சுக்கிரன்சனிசூரியன்சந்திரன்செவ்வாய்புதன்குரு
10-11புதன்குருசுக்கிரன்சனிசூரியன்சந்திரன்செவ்வாய்
11-12சந்திரன்செவ்வாய்புதன்குருசுக்கிரன்சனிசூரியன்
12-1சனிசூரியன்சந்திரன்செவ்வாய்புதன்குருசுக்கிரன்
1-2குருசுக்கிரன்சனிசூரியன்சந்திரன்செவ்வாய்புதன்
2-3செவ்வாய்புதன்குருசுக்கிரன்சனிசூரியன்சந்திரன்
3-4சூரியன்சந்திரன்செவ்வாய்புதன்குருசுக்கிரன்சனி
4-5சுக்கிரன்சனிசூரியன்சந்திரன்செவ்வாய்புதன்குரு
5-6புதன்குருசுக்கிரன்சனிசூரியன்சந்திரன்செவ்வாய்
  

ஞாயிற்றுக் கிழமை சுக்கிர ஓரை தோல்வியை தரும்.
திங்கள் கிழமை சுக்கிரன், புதன் ஓரைகள் சரியாக செயல்படாது.
செவ்வாய் கிழமை புதன் ஓரை தோல்வி தரும்.

புதன் கிழமை குரு, சந்திர ஓரைகள் சரியாக செயல்படாது.
வியாழக் கிழமை சுக்கிர, புதன் ஓரைகள் சரியாக செயல்படாது.
வெள்ளி கிழமை குரு, சந்திர ஓரைகள் தோல்வி தரும்.
சனிக்கிழமை சந்திர ஓரை தவறை செய்யும்!


இந்த ஒரைகளில் சந்திரன், புதன், குரு, சுக்கிர ஓரைகள் சுபமானவை. நல்லது செய்ய உகந்தவை. சூரியன்,செவ்வாய், சனி ஓரைகள் நல்லவை அல்ல.

சூரிய ஓரை : இந்த நேரத்தில் புதிதாக எந்த அலுவல்களையோ உடன் பாடுகளையோ செய்வது நல்லதல்ல,சுபகாரியங்கள் செய்யயவும் இந்த ஓரை ஏற்றதல்ல. இந்த ஓரை நடக்கும் நேரத்தில் பொருள் ஏதேனும் காணாமல் போனால் கிடைப்பது அரிது. அப்படிக் கிடைக்குமானால் மிகவும் தாமதித்து அப்பொருளின் நினைவு மறைந்தபின் கிழக்கு திசையில் கிடைக்கலாம்.இந்த நேரத்தில் பெரியவர்களை சந்திக்க உயில் சாசனம் எழுத, நல்லது.

சந்திர ஓரை  : இந்த ஓரை காலத்தில் எல்லா சுபகாரியங்களையும் செய்யலாம். குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட காரியங்களையும் மிகவும் ஏற்றது. வியாபார விஷயமாகவோ அல்லது புனித யாத்திரையாகவோ பயணம் செய்ய ஏற்றது.பிறரைச் சந்தித்துப் பேசவும் செய்யலாம். இந்த ஓரையில் எந்தப்பொருள் காணாமல் போனாலும் கிடைக்காது.

செவ்வாய் ஓரை : எந்தவித நல்ல காரியங்களும் செய்ய உகந்த நேரமல்ல. இருப்பினும் தெய்வீகத் தொடர்பான விஷய்ங்களையோ, சண்டை சச்சரவுக்கான் விஷயங்களையோ பற்றிய் பேசலாம். இருப்பினும் இந்த ஓரையை தவிர்ப்பது நல்லது. இந்த ஓரை நேரத்தில் பொருள்கள் காணாமல் போனால் உடனே முயன்றால் தெற்கு திசையில் கிடைத்துவிடும். தாமதித்தால் கிடைக்காது.

புதன் ஓரை : கல்வி மற்றும் எழுத்துத் தொடர்பான வேலை தொடங்குவதற்கும் ஆலோசிப்பதற்கும் ஏற்ற நேரம். சுப காரியங்கள் செய்யலாம். நேர்மையான விஷயங்களைப் பற்றிப் பேசவும் முடிவெடுக்கவும் இந்த நேர உகந்தது. பயணங்கள் மேற்கொள்ளவும் செய்யலாம். இந்த ஓரையில் காணாமல் போகும் விரைவில் அதிக சிரமமின்றி கிடைத்து விடும்.

குரு ஓரை : எல்லாவகை சுப காரியங்களுக்கு மிகவும் ஏற்ற நேரம், வியாபாரம், விவசாயம் செய்ய நல்லது. ஆடை ஆபரணப் பொருள்கள் வாங்கவும், வீடு மனை வாங்கவோ,விற்கவோ ஏற்றது.எதுவும் சட்டத்திற்கும் நியாயத்திற்கும் புறம்பான காரியமாக இருக்கக்கூடாது. கப்பற்பயணம் செய்வதற்கு இந்த ஓரை சிலாக்கிய் மானது அல்ல. இந்த நேரத்தில் காணாமல் போனபொருள்களைப் பற்றி வெளியில் சொன்னலே போதும் உடனே கிடைத்துவிடும்.

சுக்கிர ஓரை : சகல சுப காரியங்களுக்கு வீடு, நிலம், வண்டி வாகனம், ஆடை ஆபரணம் வாங்கவும் மிகவும் ஏற்றது. குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட சகல காரியங்களிலும்  நன்மை ஏற்படும். விவசாய்த்திற்கும்,பயணங்கள் செய்யும் நல்லது. இந்த ஓரையில் காணாமல் போன பொருள் மேற்கு திசையில் சில நாள்களில் கிடைக்கும்.

சனி ஓரை : எந்தவித சுபகாரிய்ங்களும் செய்யக்கூடாது. புதிதாக எந்த வேலையும் செய்யக்கூடாது. இருப்பினும் நிலபுலங்கள் பற்றி பேசவோ சட்டபூர்வமான விஷயங்களைப்பற்றி முடிவெடுக்கவோ நல்லது.இந்த ஓரையில் காணாமல் போன பொருள் கிடைக்காது.ஒருவேளை இரண்டு மூன்று வருடம் கழித்து எதிர்பாராத விதமாகக் கிடைக்கலாம்.

"பட்சி தெரிந்தவனை பகைக்காதே என்பது பொதுமொழி"
பட்சியின் மூல மந்திரமும்,மூலிகைகளும் கிடைக்கும்

ஏழு கிரகங்களுக்கு மட்டுமே ஓரை உண்டு. ராகு, கேது சாயா கிரகங்கள் என்பதாலும், அவற்றிற்கு சுற்றுப்பாதை இல்லாத காரணத்தாலும் அவற்றிற்கு ஓரை கிடையாது.

பூமத்திய ரேகை, தீர்க்க ரேகை ஆகியவற்றை நமது முன்னோர்கள் எப்படி உருவாக்கி னார்களோ அதேபோல்தான் ஓரைகளும் உருவாக்கப்பட்டன. சூரியனின் சுற்றுப்பாதை, சூரியனுக்கு அருகில் இருக்கக் கூடிய கிரகங்கள், தொலைவில் இருக்கக் கூடிய கிரகங்கள், அதனுடைய ஈர்ப்பு சக்தி, அதன் ஒளிக்கற்றைகள் பூமியை அடைவதற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கான கால நேரம் இதை எல்லாம் அடிப்படையாக வைத்துதான் நமது முன்னோர்கள் ஓரைகளை கணக்கிட்டுள்ளனர்.

சூரியன் மற்றும் அதன் அருகே அல்லது தொலைவில் உள்ள கிரகங்களின் அமைப்பைக் கொண்டு வானவியல் அறிஞர்கள் ஓரைகளை உருவாக்கினர். இதன்படி வாரத்தின் முதல் நாளான ஞாயிறன்று முதல் ஓரையை சூரியனுக்கு அளித்தனர்.

சூரியனுக்கு அருகிலேயே சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் உள்ளன. இவற்றில் சூரியனுக்கு மிக அருகில் புதன் இருப்பதாலும், அது காற்று (வாயு) கிரகம் என்பதாலும் (ஓரை வரிசையில்) அதற்கு 2வது இடம் வழங்கினர். இதையடுத்து 3வது இடம் சுக்கிரனுக்கு, 4வது இடம் சந்திரனுக்கும், 5வது இடம் சனிக்கும், 6வது இடம் குருவுக்கும், 7வது இடம் செவ்வாய்க்கும் வழங்கினர். இதற்கு சுற்றுப்பாதை, கிரகங்களின் கதிர் வீச்சுதான் காரணம்.

இவற்றில் சுக்கிரன் ஓரை, புதன் ஓரை, குரு ஓரை ஆகிய மூன்றும் நல்ல ஓரைகள் எனப்படுகிறது. வளர்பிறை காலத்தில் சந்திரன் ஓரையும் நல்ல ஓரையாகவே கருதப்படுகிறது.

இந்த ஓரைகளில் திருமணம், சீமந்தம், குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துதல், பெண் பார்ப்பது,பதவியேற்பது, வேலைக்கு விண்ணப்பிப்பது, வங்கி கணக்கு துவங்குதல் ஆகியற்றைச் செய்யலாம். இதில் சனி ஓரை ஒரு சில விடயங்களுக்கு நன்றான பலனைத் தரும். கடனை அடைப்பதற்கு ஏற்ற ஓரையாக சனி ஓரை கருதப்படுகிறது.

உதாரணமாக சனி ஓரையில் ஒருவர் தனது கடனை அடைத்தால், அவர் மீண்டும் கடன் வாங்குவதற்கான சூழல் ஏற்படாது என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

இதேபோல் பழைய பாக்கி/கணக்குகளை தீர்ப்பது, ஊழ்வினை (பூர்வ ஜென்மப் பாவம்) தீர்ப்பது, நடைபயணம் துவங்குவது, மரக்கன்று நடுதல், விருட்சங்கள் அமைத்தல், அணைக்கட்டு நிர்மாணிக்கும் பணிகளை துவக்குவது போன்றவற்றிற்கு சனி ஓரை சிறப்பானது.

சூரியன் ஓரையில் அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள், வழக்கு தொடர்பான விடயங்கள் மேற்கொள்ள சிறப்பானதாக இருக்கும்.

செவ்வாய் ஓரை: நிலம் வாங்குவது, விற்பது, அக்ரிமென்ட் போடுவது, சகோதர / பங்காளி பிரச்சனைகள்,சொத்து பிரித்தல், உயில் எழுதுவது, ரத்த தானம், உறுப்பு தானம், மருத்துவ உதவிகள் செய்வது இவற்றையெல்லாம் மேற்கொள்ளலாம். இந்த ஓரையில் ஆயுதப் பிரயோகத்தை துவங்கினால் சக்தி வாய்ந்ததாக இருக்கும். (Starting a war) வளைகுடா போர் கூட செவ்வாய் ஓரையில்தான் துவங்கப்பட்டது. செவ்வாய் அழிவுக்கு உரிய கிரகம் என்பதாலும், அதிகாரத்தை பிரயோகம் செய்து ஒன்றை கட்டுக்குள் கொண்டு வரக் கூடியது செவ்வாய் என்பதாலும், வளைகுடாப் போர் நீண்ட காலம் நீடித்தது. இதன் காரணமாக பெரிய அழிவு ஏற்பட்டதற்கும் செவ்வாய்தான் காரணம்.

மனித வாழ்வில் ஓரைகளின் பங்களிப்பு முக்கியமானது. நம்மை அறியாமலேயே ஓரைகளின் கதிர்வீச்சை உணர முடியும். அதை உணர்ந்து நடந்தால் நலம் பெறுவீர்கள்.