சிம்மம்: மகம், பூசம், உத்திரம் - 1
பிறர் நலனுக்காக பாடுபடக்கூடிய குணமும் சூதுவாது அறியாத வெள்ளை உள்ளமும் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே! உங்களுக்கு இதுநாள் வரை 3 இல் சஞ்சரித்து பல நற்பலன்களை வாரி வழங்கிய சனிபகவான் வரும் 16.12.2014 முதல் 19.12.2017 வரை சுகஸ்தானமான 4 ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு அர்த்தாஷ்டம சனி நடைபெறவுள்ளது. இது சாதகமற்று அமைப்பு என்பதால் தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகும். சுகவாழ்வு சொகுசு வாழ்விலும் இடைய+றுகள் ஏற்படும். உடல் ரீதியாகவும் சிறுசிறு பாதிப்புகள் உண்டாவதால் மருத்துவச் செலவுகளும் உண்டாகும். நேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழ்நிலையும், எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத நிலையும் ஏற்படும். வீடு, மனை, வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய நிலை உண்டாகும். சனி பார்வை ஜென்ம ராசிக்கு 6,10 ஆம் வீட்டிற்கும் உள்ளதால் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. பேச்சில் நிதானமுடனிருப்பது உத்தமம். அசையா சொத்துகளாலும் வண்டி வாகனங்களாலும் வீண் விரயங்கள் ஏற்படும்.
சனி 4 இல் சஞ்சரித்து அர்த்தாஷ்டம சனி நடைபெறும் இக்காலங்களில் ஆண்டுக் கோளான குருபகவான் விரய ஸ்தானமான 12 ஆம் வீட்டில் 05.07.2015 வரை சஞ்சரிக்க இருப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் பணம் கொடுக்கல் வாங்கலிலும் கவனமுடன் செயல்பட்டால் லாபத்தைப் பெறமுடியும். 05.07.2015 முதல் 02.08.2016 வரை ஜென்ம இராசியில் குரு சஞ்சரிக்க இருப்பதால் நீங்கள் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது, உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். 02.08.2016 முதல் 02.09.2017 வரை குரு தன ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்குள்ள பிரச்சினைகள் யாவும் படிப்படியாக விலகி பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்களும் கைகூடும். தொழில் உத்தியோக ரீதியாக ஏற்றமிகு பலன்கள் ஏற்படும். உற்றார் உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். கணவன் மனைவியிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும்.
தேக ஆரோக்கியம்
உங்கள் ஜென்ம ராசிக்கு 4 இல் சனி சஞ்சரிப்பதால் உங்களுக்கு அர்த்தாஷ்டச் சனி நடைபெறுகிறது. இதனால் உடல் நிலையில் சோர்வு எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட இயலாத நிலை உண்டாகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாதபடி சுகவாழ்வு பாதிப்படையும். குடும்பத்திலுள்ளவர்களாலும் சிறுசிறு விரயங்களை சந்திப்பீர்கள்.
குடும்பம் பொருளாதார நிலை
குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களால் மனநிம்மதி குறைய நேர்ந்தாலும் உடனடியாக சரியாகும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். எதையும் வாங்கி அனுபவிக்க தடைகள் உண்டாகும். நேரத்திற்கு சாப்பிட முடியாமல் அலைச்சல் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல பழகிக் கொள்வது நல்லது. சுகவாழ்வு, சொகுசு வாழ்வில் தடைகள் ஏற்படும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் நடை பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. புதிய கார், பங்களா வாங்கும் முயற்சிகளில் சிறுசிறு விரயங்கள் உண்டாகும். ப+ர்வீக சொத்து வழக்குகள் இழுபறி நிலையிலேயே இருக்கும். வீண் பிரச்சனைகளில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது.
உத்தியோகஸ்தர்களுக்கு
உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வுகளை பிறர் எளிதில் தட்டிச் செல்வார்கள். எவ்வளவு தான் உழைத்தாலும் திறமைக்கேற்ற பலனை அடைய முடியாது. பிறர் செய்யும் தவறுகளுக்கும் சில நேரங்களில் வீண் பழியை சுமக்க வேண்டியிருக்கும். ஊதிய உயர்வுகள் கிடைத்தாலும் வேலைப் பளுவும் அதிகரிக்கும். உயரதிகாரிகள் ஒரளவுக்கு ஒத்துழைப்பாக நடந்து கொண்டால், உடன் பணிபுரிபவர்களால் வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.
தொழில் வியாபாரிகளுக்கு
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். எதிலும் சற்று மந்தமான நிலை நிலவினாலும் பொருட் தேக்கம் ஏற்படாமல் சமாளிக்க முடியும். நிறைய போட்டி பொறாமைகள் ஏற்பட்டு வரவேண்டிய வாய்ப்புகளும் கைநழுவும். கூட்டாளிகளிடமும் வேலையாட்களிடமும் சற்று விட்டு கொடுத்து நடப்பது நல்லது. நவீனகரமான கருவிகள் பழுதடைவதால் அபிவிருத்தி குறைவதோடு வீண் செலவுகளும் ஏற்படும் என்றாலும் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றலும் உண்டாகும்.
பெண்களுக்கு
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவினாலும் உற்றார் உறவினர்களால் குடும்பத்தில் நிம்மதி குறையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். சிலருக்கு அழகான குழந்தை பாக்கியமும் கிட்டும். பணிபுரிவோர்க்கு எதிர் பாராத இட மாற்றங்கள் ஏற்படுவதோடு வேலைப் பளுவும் அதிகரிக்கும்.
கொடுக்கல் வாங்கல்
பணம் கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருந்தாலும் சில நேரங்களில் பெரிய தொகைகளை கடனாகக் கொடுப்பதைத் தவிர்க்கவும். பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதாலும் வீண் பிரச்சனைகளில் சிக்குவீர்கள். கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்றவற்றில் ஏற்றத் தாழ்வான நிலையிருக்கும். கொடுத்த கடன்கள் தடையின்றி வசூலாகும்.
அரசியல்வாதிகளுக்கு
கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் சிறுசிறு இடைய+றுகள் நிலவினாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். உங்கள் பேச்சிற்கு மக்களிடையே மதிப்பிருக்கும். மக்களின் தேவைகளைப் ப+ர்த்தி செய்வதால் மட்டுமே அவர்களின் ஆதரவை தடையின்றி பெற முடியும். கட்சிப் பணிகளுக்காக செலவு செய்ய வேண்டிய சூழ்நிலையும் அலைச்சல்களும் உண்டாகும்.
விவசாயிகளுக்கு
பயிர் விளைச்சல் சுமாராக இருந்தாலும் நஷ்டம் ஏற்படாது. சந்தையில் விளைப்பொருட்களை நல்ல விலைக்கு விற்க முடியும். புதிய நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் சற்று கவனம் தேவை. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும். கால் நடைகளுக்கு நோய்கள் தாக்குவதால் சிறுசிறு விரயங்கள் உண்டாகலாம்.
படிப்பு
கல்வியில் முழு முயற்சியுடன் செயல் பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். ஞாபக மறதியால் எல்லா வகையிலும் பாதிப்படைவீர்கள். கல்விக்காக சிலர் குடும்பத்தை விட்டுப் பிரிய வேண்டிய நிலை உண்டாகும். சிலருக்கு தொலை தூரப் பயணம் மேற்கொள்ள வேண்டி வருவதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். தேவையற்ற நட்புகளைத் தவிர்த்தால் வீண் பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள்.
ஸ்பெகுலேஷன்: லாட்டரி ,ரேஸ், ஷேர் போன்றவற்றில் நன்மை தீமை கலந்த பலன்களே கிடைக்கும் என்பதால் பெரிய முதலீடுகளில் கவனம் தேவை.
சனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 16.12.2014 முதல் 24.01.2015 வரை
சனி பகவான் உங்கள் இராசிக்கு நட்பு கிரகமான குருவின் நட்சத்திரத்தில் சுக ஸ்தானமான 4 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் 12 இல் குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும் என்பதால் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே வெற்றியினைப் பெறமுடியும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கடன் பிரச்சனைகள் சற்றே குறையும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருந்தாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. சர்ப்ப கிரகங்களான ராகு 2 ஆம் வீட்டிலும் கேது 8 ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் வீண் வாக்கு வாதங்கள் உறவினர்களிடையே விரோதங்கள் ஏற்படும். எதிலும் சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலன் அடைய முடியும். தொழில் வியாபார நிலையில் ஏற்படக் கூடிய அதிகமான போட்டிகளால் லாபம் குறையும். உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.
சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 14.03.2015 வரை
சனி தனது சுய நட்சத்திரத்தில் 4 இல் சஞ்சரிப்பதால் அர்த்தாஷ்டம சனி நடக்கும் இக்காலத்தில்; 2 இல் இராகுவும், 8 இல் கேதுவும் இருப்பதால் உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் திருமண சுபகாரியங்கள் சிறு சிறு தடைகளுக்கு பின் கை கூடும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். கணவன் மனைவியிடையேயும் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடன்கள் இன்றி வாழலாம். பணம் கொடுக்கல் வாங்கலிலும் கொடுத்த கடன்களை திரும்ப பெறுவதில் தடைகள் உண்டாகும். செய்யும் தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு லாபம் அமையும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம், விட்டு கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் சறறு நெருக்கடிகளை சந்தித்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மூலம் அலைச்சல் டென்ஷன் குறையும்.
சனிபகவான் வக்ரகதியில் 15.03.2015 முதல் 30.07.2015 வரை
சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் ஓரளவுக்கு ஏற்றமிகு பலன்களை அடைய முடியும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். சுபிட்சங்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களால் சில மனசஞ்சலங்கள் ஏற்பட்டாலும் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கடன் சுமைகள் சற்று விலகும். குடும்பத் தேவைகளும் ப+ர்த்தியாகும். தொழில் வியாபார நிலையில் போட்டிகள் இருந்தாலும் அவற்றை சமாளிக்கும் வலிமை வல்லமை உண்டாகும். இக்காலங்களில் முன்கோபத்தை குறைப்பது பிறர் விஷயங்களில் தலையிடாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டியிருக்கும். வேலைப் பளுவும் அதிகரிக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை பிறரை நம்பி ஈடுபடுத்தாதிருப்பதும் நல்லது.
சனிபகவான் துலா இராசியில் விசாகம் நட்சத்திரத்தில் 31.07.2015 முதல் 05.09.2015 வரை
உங்கள் இராசிக்கு 4 இல் சஞ்சரித்த சனி இக்காலத்தில் பின்னோக்கி 3 இல் சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பாகும். குரு ஜென்ம ராசியில்; சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். நல்ல நட்புகள் தேடி வரும். குடும்பத் தேவைகள் யாவும் ப+ர்த்தியாகும். பொருளாதார மேன்மையால் சுபிட்சமான வாழ்க்கை அமையும். 2 இல் இராகுவும், 8 இல் கேதுவும் இருப்பதால் உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு வர வேண்டிய வாய்ப்புகளில் தடை இருக்காது. போட்டிகளை எதிர் கொண்டு வெற்றி பெற முடியும். கூட்டாளிகளையும். தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல் பட முடியும். உயர் பதவிகளை வகிக்கும் வாய்ப்பும் உண்டாகும்.
சனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 06.09.2015 முதல் 18.10.2015 வரை
உங்கள் இராசிக்கு 5,8 இக்கு அதிபதியான குருவின் நட்சத்திரத்தில் சனி 4 இல் சஞ்சரிப்பதால் அர்த்தாஷ்டம சனி நடக்கும் இக்காலத்தில் ஜென்ம இராசியில் குரு சஞ்சரிப்பதால்; உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவினை உண்டாக்கும். குடும்பத்தில் தேவையற்ற வீண் பிரச்சனைகள் உண்டாகும். எதிர் பாராத பயணங்களாலும் அலைச்சல்கள் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களால் சிறுசிறு மனசஞ்சலங்கள் ஏற்படும். விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமான இருப்பதால் தேவைகளைப் ப+ர்த்தி செய்ய திண்டாட வேண்டி வரும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரிப்பதுடன் வரவேண்டிய வாய்ப்புகளும் கைநழுவிப் போகும். வீண் விரயங்கள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த பதவி உயர்வுகளை அடைய முடியும். 2 இல் இராகு இருப்பதால் முன் கோபத்தை குறைத்து பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 19.10.2015 முதல் 26.03.2016 வரை
சனிபகவான் தனது சுய நட்சத்திரத்தில் 4 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் ஜென்ம இராசியில் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுப்பது நல்லது. எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் டென்ஷன் போன்றவையும் அதிகரிக்கும். பணவரவுகள் தேவைக்கேற்ப இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். 2 இல் இராகு சஞ்சரிப்பதால் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் மன நிம்மதி குறையும். வண்டி வாகனங்களால் சிறுசிறு விரயங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியில்லை. ஆன்மீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். உற்றார் உறவினர்களால் சிறுசிறு மனசஞ்சலங்கள் ஏற்படும். பேச்சில் நிதானமுடன் இருப்பது மூலம் வீண் பிரச்சனைகள் குறையும்.
சனிபகவான் வக்ரகதியில் 27.03.2016 முதல் 11.08.2016 வரை
உங்கள் இராசிக்கு 4 இல் சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியில் இருப்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினைப் பெறுவீர்கள். ஜென்ம இராசியில் குரு, இராகுவும், 7 இல் கேதுவும்; சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும.; பண விஷயங்களில் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாகக் கொடுக்காதிருப்பது உத்தமம். குடும்பத்தில் ஒற்றுமை குறைய கூடும் என்பதால் அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களால் சிறுசிறு மனசஞ்சலங்கள் ஏற்படும்.கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைவும், எதிர்பாராத வீண் விரயங்களும்; ஏற்படும். தொழில் வியாபார நிலை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவினை ஏற்படுத்தும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறு சுறுப்பாகவே செயல்பட முடியும். உத்தியோகஸ்தர்கள் உடன்பணி புரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலை பளுவையும் குறைத்துக் கொள்ள முடியும்.சிலருக்கு எதிர் பாராத இடமாற்றங்கள்அலைச்சலை ஏற்படுத்தும்.
சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 12.08.2016 முதல் 18.11.2016 வரை
அர்த்தாஷ்டம சனி நடைபெறும் இக்காலத்தில் 02.08.2016 முதல் குரு தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் ப+ர்த்தியாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று சுப காரியங்கள் தடபுடலாக நிறைவேறும். சிலருக்கு நினைத்தவரையே கைபிடிக்கும் யோகமும் கிட்டும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும், ப+ர்வீக சொத்துகளால் லாபமும் உண்டாகும்.தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறையும். உத்தியோகஸ்தர்கள் சிறப்பான உயர்வினைப் பெறுவார்கள். எதிர்பாராத திடீர் தனசேர்க்கையும் பெரிய மனிதர்களின் நட்பும் ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடும் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். ஜென்ம இராசியில் இராகுவும், 7 இல் கேதுவும்; சஞ்சரிப்பதால் கணவன் மனைவி இருவரும் விட்டு கொடுத்து செல்வது நல்லது.
சனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 19.11.2016 முதல் 08.04.2017வரை
உங்கள் இராசிக்கு 2.11 இக்கு அதிபதியான புதன் சாரத்தில் சனி 4 இல் சஞ்சரித்தாலும், 2 இல் குரு சஞ்சரிப்பதால் மகிழ்ச்சிகரமான நிலையே இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். பணவரவுகளும் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் ப+ர்த்தியாகும். பொன், பொருள் சேரும். தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து லாபத்தினைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு சற்று அலைச்சல்கள் ஏற்பட்டாலும் பதவி உயர்வுகள் கிடைக்கும். எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கு நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். வெளி வட்டாரத் தொடர்புகளாலும் பெயர் புகழ் உயரும். கடன்களும் படிப்படியாக குறையும். ஜென்ம இராசியில் இராகு, 7 இல் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் ஓரளவுக்கு நற்பலனை பெறமுடியும். திருமண சுப காரியங்கள் தடபுடலாக நிறைவேறும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாவதற்கான அறிகுறிகள் உண்டாகும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். உடல் ஆரோக்கியமும் அற்புதமாக அமைவதால் எடுக்கும் காரியங்களை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள்.
சனிபகவான் வக்ரகதியில் 09.04.2017 முதல் 04.08.2017 வரை
உங்கள் இராசிக்கு 4 இல் சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியிலும் குரு தன ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலையே இருக்கும். திருமண சுபகாரியங்களும் தடபுடலாக நடைபெறும். ஆரோக்கியத்தில் ஏற்படக் கூடிய பாதிப்புகளால் சற்று மருத்துவ செலவுகளை சந்திப்பீர்கள். அசையும் அசையா சொத்துகளால் சில வீண் பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி எந்தவொரு காரியத்திலும் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை தடையின்றி அடைவார்கள். எதிர்பாராத வீண் விரயங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது. தெய்வீக பணி ஆன்மீக பணிகளில் ஈடுபடக் கூடிய வாய்ப்பு பிறருக்கு உதவிகள் செய்யக்கூடிய பண்பு யாவும் உண்டாகும்.
சனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 05.08.2017 முதல் 19.12.2017 வரை
சனி தனக்கு நட்பு கிரகமான புதனின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலத்தில் 02.09.2017 முதல் குரு 3 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் இக்காலங்களில் ஏற்றத்தாழ்வான பலன்களையே பெறுவீர்கள். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்குப் பின் கிட்டும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டே முன்னேறுவீர்கள். பணவிஷயத்தில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுக்காமலிருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் சற்றே மந்த நிலை ஏற்பட்டாலும் பொருள் தேக்கம் உண்டாகாது. உத்தியோகஸ்தர்களுக்கு தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் வீண் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். முன்கோபத்தை குறைத்துக் கொண்டு பிறர் விஷயங்களில் தலையிடாதிருப்பதும் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதும் மிகவும் நல்லது. தேவையற்ற அலைச்சல் டென்ஷன் அதிகரிப்பதால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் பாதிப்படையும் இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படும்.
மக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
பிறருக்கு எந்தக் காலத்திலும் அடிமையாக இருக்க விரும்பாத உங்களுக்கு சனி 4 இல் சஞ்சரித்து அர்த்தாஷ்டமச் சனி நடைபெறுவதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். பணவரவுகள் திருப்திகரமாக இருந்தாலும் சுகவாழ்வில் பாதிப்பு உண்டாகும். திருமண சுபகாரியங்கள் குடும்பத்தில் நடைபெறும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்படும்.
ப+ர நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
பகைவரை வெல்லக்கூடிய வலிமையும் நல்ல அறிவாற்றலும் கொண்ட உங்களுக்கு சனி பகவான் 4 இல் சஞ்சரித்து அர்த்தாஷ்டமச் சனி நடைபெறுவதால் ஏற்ற இறக்கமான பலன்களே உண்டாகும். எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும். பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களையும் உற்றார் உறவினர்களையும் அனுசரித்துச் செல்வதன் மூலம் அனுகூலப் பலனை அடைய முடியும். தொழில், வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சற்றே அலைச்சல்களும் உண்டாகும்.
உத்திரம் 1 ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு
பிறர் மனதைப் புண்படுத்;த தெரியாத குணம் கொண்ட உங்களுக்கு அர்த்தாஷ்டமச் சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கட்டுப் பாட்டுடன் இருப்பது அவசியம். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். பொன் பொருள் சேரும். சிலர் நினைத் தவரையே கை பிடிப்பர். கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்படுவது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாமல் போகும். உத்தியோகஸ்தர்களுக்கு அதிக நேரம் உழைக்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்டம் தருபவை
தேதி : 1,2,3,9,10,11, 12
கிழமை : ஞாயிறு, திங்கள்
நிறம் : சிவப்பு, மஞ்சள்
கல் : மாணிக்கம்
திசை : கிழக்கு
தெய்வம் : சிவன்
No comments:
Post a Comment