Sunday 2 November 2014

மறைவு பெற்ற கிரகங்கள்

மூன்றாம் இடத்தில் மறைவு பெற்ற கிரகங்கள் எப்போதும் ஜாதகர்களுக்கு நன்மையே தரும் என்பது பழங்கால ஜோதிட நூல்களில் சித்தர்கள் எழுதிய முதல் காலம் சென்ற C.G.ராஜன் அவர்களும் சரி தற்போதைய ஜோதிஷ் ஆசான்களும் சரி
மூன்றாம் இடத்திலும்
பதினொன்றாம் இடத்திலும் இருக்கும் கோள்கள் தன்னுடைய திசா புக்தி காலகட்டத்தில் நற்பலனை தருவதாக சொல்லி இருக்கிறார்கள் ...இன்னும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் ...
ஆனால் புதியதாக ஜோதிடத்துறை உள்ளே கால்பதித்தோர்களும் சரி முன்னர் இருந்து இத்துறையில் இருப்போர்களும் சரி ஒரு சிலருக்கு ஏன் இந்த "மூன்றாம் இடத்திற்கு அதிமுக்கியத்துவம் "கொடுத்தார்கள் என்பது எல்லோரும் அறிந்திருக்க வாய்ப்புகள் இல்லை !!!
அதையும் கொஞ்சம் விளக்கம் செய்யவே இப்பதிவு
பொதுவாக எந்தவொரு லக்னமாக இருந்தாலும் பதினொன்றாம் இடத்தில் இருக்கும் கிரகம் (லாபஸ்தானம் ) நன்மைதான் தரும் .ஆனால் மூன்றாம் இடத்தில் இருப்பது எப்படி நன்மை தரும் ??
மேஷ சிம்ம தனுசு லக்னமாக இருந்து (நெருப்பு ராசி )
மூன்றாம் இடத்தில் மிதுனம் துலாம் கும்பம் ஆகிய இடங்களில் (காற்று ராசி ) கிரகங்கள் இருந்தால் அது அந்த லக்னத்தில் பிறந்தோர்களுக்கு நன்மையே தரும் நெருப்பு காற்று இரண்டும் சேர ஜாதகனுடைய வாழ்க்கையில் வெகு வசந்த காலமே !!
அதேபோல
ரிஷபம் கன்னி மகரம் எனும் ஸ்திர லக்னமாக (பூமி ராசி ) அமைந்து பிறந்தோர்களுக்கு
கடகம் விருச்சிகம் மீனம் ஆகிய (நீர் ராசிகளில் ) இடங்களில் அமையப்பெற்ற கிரகங்கள் நற்பலனையே தரும் .
மிதுனம் துலாம் கும்பம் (காற்று ராசி )
லக்னமாக அமையப்பெற்ற ஜாதகர்களின் வாழ்க்கையை முறையே சிம்மம் தனுசு மேஷம் ஆகிய (நெருப்பு ராசி ) இடங்களில் இருக்கும் கோள்களின் நன்மையே ஜாதகனுக்கு கிட்டும்
அதேபோல
கடகம் விருச்சிகம் மீனம் ஆகிய (நீர் ராசி ) லக்னமாக கொண்ட ஜாதகர்களுக்கு முறையே கன்னி மகரம் ரிஷபம் (ஸ்திர எனும் பூமி ராசி )ஆகிய இடங்களில் இருக்கும் கிரகங்கள் நற்பலனை மட்டுமே தரும் (தீமை இருக்காது )
பஞ்சபூதங்கள் நம் ராசி மண்டலத்தில் ஆதிக்கம் செலுத்தி கொண்டு இருக்கிறது ..
அதில் ராசிமண்டலமாக (ஆகாயம் ) அமையப்பெற்றதாலும் மீதம் இருக்கின்ற நான்கு பூதங்கள் (நெருப்பு &நிலம் +காற்று மற்றும் நீர் ராசி மண்டலத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது ..
இதில் சொல்லப்பட்டபடி இருக்கும் கிரகங்களின் நிலையை அறிந்து
மேஷலக்னமாக அமைந்தோர்கள்
தன்னுடைய ஜாதகத்தில் 3 மிதுனம் அல்லது 11 கும்பம் ஆகிய இடங்களில் இருக்கும் கிரகங்களின் திசாபுக்தி நடப்பில் இருக்கும்போது (இரண்டும் காற்று ராசி ) வாயு தத்துவ ஆலயம் ஆன "காளஹஸ்தி " சென்று வழிபாடு செய்வது மிகுந்த நன்மை ஆகும் ...
ரிஷபம் லக்னமாக கொண்டு பிறந்தோர் கடகம் மற்றும் மீனம் (நீர் ராசி ) ஆகிய இடங்களில் கிரகங்கள் அமையப்பெற்ற ஜாதகர் மேற்படி ராசியில் அமையப்பெற்ற அதன் திசா புக்தி வரும் காலகட்டத்தில் நீர் தத்துவ ஆலயமாக விளங்கி வரும் "திருவானைக்கா "(திருச்சி ) சென்று வழிபாடுகள் செய்ய மிகுந்த நன்மைகளை அடைவார்கள் !!!
மிதுனம் லக்னமாக அமைந்த ஜாதகர்கள் சிம்மம் மேஷம் (நெருப்பு ராசி ) ஆகிய இடங்களில் அமையப்பெற்ற திசாபுக்தி நடப்பில் உள்ளபோது நெருப்பு தத்துவ ஆலயமாக விளங்கி வரும் "திருவண்ணாமலை "தரிசனம் சாலச்சிறந்தது ...
கடகம் லக்னமாக அமையப்பெற்ற ஜாதகர்கள் கன்னி ரிஷபம் ஆகிய (பூமி ராசி ) இடங்களில் அமையப்பெற்ற கிரகங்களின் திசாபுக்தி காலகட்டத்தில் பூமிதத்துவ ஆலயமாக இருக்கின்ற "காஞ்சீபுரம் "சென்று வழிபாடு செய்வது மிகுந்த நன்மை பயக்கும் ...
ஆயிரம் ஆயிரம் செலவுகளை செய்து வெவ்வேறு திருத்தலங்கள் சென்றாலும் ஒவ்வொரு திசைக்கு லக்னத்தின் மூன்று /பதினொன்றாம் இடத்தில் இருக்கின்ற ராசிக்கு ஏற்ப ஆலய வழிபாடு செய்வதே சாலசிறந்தது ....
பொதுவாக பாரம்பரிய ஜோதிடத்தில் அதி நுட்பமான விஷயங்களை தன்னுள் அடங்கி கொண்டு இருக்கிறது .
மதி நுட்பங்களை கொண்டு நற்பலனை அடையுங்கள்

No comments:

Post a Comment