கன்னி :- உத்திரம் 2, 3, 4 அஸ்தம், சித்திரை 1, 2
சுகபோக வாழ்க்கையை விரும்புபவராகவும் எப்பொழுதுமே குஷியாக இருப்பவராகவும் விளங்கும் கன்னி ராசி நேயர்களே! இதுவரை உங்களுக்கு நடைபெற்று வந்த ஏழரை சனியால் பல வகையில் துன்பங்களையும் இன்னல்களையும் சந்தித்து வந்தீர்கள். வரும் 16.12.2014 இல் ஏற்படவிருக்கும் சனி மாற்றத்தின் மூலம் ஏழரை சனி முழுமையாக முடிவடைகிறது. சனி; பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3 ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் கடந்த கால பிரச்சனைகள் யாவும் சூரியனை கண்ட பனிப்போல மறையும் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பொருளாதார நிலையிலிருந்த நெருக்கடிகள் யாவும் குறைந்து கடன்களும் விலகும். பணம் பலவழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சிறப்பான வரன் தேடி வரும். சிலர் நினைத்தவரையே கைபிடிப்பர். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். 3 இல் சஞ்சரிக்கும் சனி 5,9,12 ஆகிய வீடுகளைப் பார்வை செய்வதால் சிறுசிறு பிரச்சனைகள் நேரிட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. சேமிப்பு பெருகும். சமுதாயத்தில் கௌவரமான நிலை உண்டாகும். பூமி மனை சேர்க்கை, பொன் பொருள் சேர்க்கை, கடன்கள் இல்லாத கன்னியமான வாழ்வு அமையும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் அற்புதமாக இருக்கும்.
சனி 3 இல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் 05.07.2015 வரை குருபகவானும் லாப ஸ்தானமான 11 ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது சாதகமான அமைப்பாகும். இதனால் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும் புத்திர வழியில் மகிழ்ச்சிதரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பூர்வீக சொத்துகளாலும் லாபம் கிட்டும். 05.07.2015 முதல் 02.08.2016 வரை குரு விரய ஸ்தானமான 12 ஆம் வீட்டிலும் 02.08.2016 முதல் 02.09.2017 வரை குரு ஜென்ம இராசியிலும் சஞ்சரிக்க இருப்பதால் பணவரவுகளில் சிறுசிறு நெருக்கடிகள் தோன்றினாலும் தேவைக்கேற்றபடி எதிர்பார்த்த நேரத்தில் பணவரவு உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக செயல்படுவது சிறப்பு. தொழில் உத்தியோக ரீதியாக சிறுசிறு நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் என்றாலும் சனி சாதகமாக இருப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். 02.9.2017 முதல் 04.10.2018 வரை குரு தன ஸ்தானமான 2 ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பாகும். இக்காலங்களில் நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். பணம் பல வழிகளில் தேடி வரும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் அனைத்தும் விலகி நல்ல லாபத்தை அடைவீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலும் சரளமாக நடைபெறும்.
தேக ஆரோக்கியம்
உங்கள் ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3 ஆம் வீட்டில் சனி சஞ்சாரம் செய்வதால் இதுவரை நடைபெற்ற ஏழரைசனி முழுவதும் முடிவடைகிறது. இதனால் உடல் ஆரோக்கியமானது அற்புதமாக அமையும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய வலிமை உண்டாகும். குடும்பத்தில் மனைவி, பிள்ளைகள் மற்றும் வயதில் மூத்தவர்களும் ஒரளவுக்கு மகிழ்ச்சிகரமாகவே இருப்பார்கள். கடந்த காலங்களிலிருந்து வந்த மருத்துவச் செலவுகள் குறையும்.
குடும்பம் பொருளாதார நிலை
கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். நீண்ட நாட்களாக திருமணம் தடைப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். சிலர் விரும்பியவரையே மணம் முடித்து மகிழ்வார்கள். அழகான புத்திர பாக்கியமும் கிடைக்கப் பெறும். சொந்த வீடு, மனை வண்டி வாகனங்கள் வாங்க வேண்டுமென்ற ஆசை நிறைவேறும். புதிய வீடு கட்டும் திட்டங்களும் புதிய வீடு மாறும் வாய்ப்பும் உண்டாகும். பொன், பொருள் சேரும். இதுவரை பகைமை பாராட்டிய உற்றார் உறவினர்களும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய அளவிற்கு பொருளாதார நிலை சிறப்பாக அமையும். புதிய நவீனகரமானப் பொருட்களையும் வாங்கிச் சேர்ப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு
பணியில் எதிர்பார்த்துக் காத்திருந்த உயர் பதவிகளைப் பெற முடியும். இது நாள் வரை இருந்த வந்த பணிக்சுமைகளும், வீண்பழிச் சொற்களும் விலகி நிம்மதியான நிலை உண்டாகும். உங்களின் திறமைகளை உயரதிகாரிகள் புரிந்து கொண்டு பாராட்டுவார்கள். உடன் பணிபுரிபவர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள் ஊதிய உயர்வுகளும் கிடைக்கப் பெறுவதால் பொருளாதார நிலையும் உயரும். வெளிய+ர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பமும் நிறைவேறும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும்.
தொழில் வியாபாரிகளுக்கு
தொழில் வியாபாரம் செய்வர்களுக்கு புதிய புதிய வாய்ப்புகள் தேடி வரும். போட்டி பொறாமைகள் யாவும் விலகும். மறைமுக எதிர்ப்புகளை வெல்லக் கூடிய அளவிற்கு வலிமையும் வல்லமையும் உண்டாகும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலம் ஏற்படும். கூட்டாளிகளிடமும் தொழிலாளர்களிடமும் இருந்த பிரச்சனைகள் விலகி சுமுகமான நிலை உண்டாகும். வெளிய+ர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் லாபம் கிட்டும். அரசு வழியிலும் கடனுதவிகள் கிடைக்கப் பெறுவதால் புதிய நவீனகரமான கருவிகளை வாங்கி அபிவிருத்தியைப் பெருக்குவீர்கள்.
பெண்களுக்கு
உடல் ஆரோக்கியத்திலிருந்த பிரச்சனைகள் விலகி முன்னேற்றமான நிலை ஏற்படும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் தீரும். பொன், பொருள், ஆடை ஆபரணம் சேரும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியங்கள் கைகூடும். புத்திர வழியில் ப+ரிப்பும் மகிழ்ச்சியும் ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்கு நல்ல கௌரவமான பதவிகள் கிடைக்கப் பெற்று மனமகிழ்ச்சி ஏற்படும்.
கொடுக்கல் வாங்கல்
பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கொடுக்கல் வாங்கலும் சரளமாகவே இருக்கும் என்றாலும் சில நேரங்களில் பணவிஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். பிறரை நம்பி பெரிய தொகைகளைக் கொடுக்கும் போதும் முன்ஜாமீன் கொடுக்கும் போதும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கமிஷன் ஏஜென்ஸி போன்றவற்றில் நல்ல லாபம் கிட்டும்.
அரசியல்வாதிகளுக்கு
அரசியல்வாதிகளுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் விலகி மாண்புமிகு பதவிகள் தேடி வரும். உங்கள் பேச்சிற்கு மக்களிடையே நல்ல கௌரவம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிமேல் வெற்றிகளைப் பெறுவீர்கள். வெளிய+ர் வெளிநாடுகளுக்குச் சென்று வரக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். மக்களின் தேவைகளைப் ப+ர்த்தி செய்வதால் அவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.
விவசாயிகளுக்கு
நல்ல விளைச்சல் பெருகுவதால் லாபமும் அதிகரிக்கும். உழைப்பை விட லாபத்தைப் பன்மடங்கு பெற முடியும். அரசு வழியில் உண்டாகக் கூடிய எதிர்பாராத உதவிகளால் கடன் சுமைகள் குறையும். புதிய ப+மி, வண்டி வாகனங்கள் வாங்க வேண்டும் என்ற நோக்கமும் நிறைவேறும். ஆடு மாடு போன்ற கால்நடைகளாலும் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும்.
படிப்பு
மாணவ மாணவியருக்கு கல்வியிலிருந்த மந்தநிலைகளும், தடைகளும் விலகுவதால் பல சாதனைகளைச் செய்யக்கூடிய வாய்ப்பு உண்டாகும். கல்விக்காக அரசு வழியில் உதவிகள் கிடைக்கும். நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி, கல்லூரிகளுக்குப் பெருமை சேர்ப்பீர்கள். நல்ல நண்பர்களின் சேர்க்கையும் கிடைக்கப் பெறும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சியினை உண்டாக்கும்.
ஸ்பெகுலேஷன்: லாட்டரி ,ரேஸ் போன்றவற்றில் எதிர்பாராத வகையில் பண வரவுகள் ஏற்பட்டு வாழ்க்கைத்தரமானது உயர்வடையும்.
சனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 16.12.2014 முதல் 24.01.2015 வரை
சனிபகவான் ஜென்ம ராசிக்கு 3 ஆம் வீட்டில் விசாக நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்திலிருந்த பிரச்சனைகள் யாவும் விலகி மருத்துவச் செலவுகள் குறையும். எடுக்கும் முயற்சிகள் யாவற்றிலும் வெற்றி கிட்டும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத்தின் தேவைகள் ப+ர்த்தியாவதுடன் உங்களுக்கிருந்த கடன் பிரச்சனைகளும் படிப்படியாக விலகும். தொழில் வியாபாரத்திலிருந்த மந்த நிலை போட்டி, பொறாமைகள் யாவும் மறையும். நீங்கள் பட்ட கஷ்டங்கள் துயரங்கள் அனைத்தும் பகலவனை கண்ட பனி போல மறையும். ஜென்ம இராசியில் இராகுவும், 7 இல் கேதுவும் இருப்பதால் கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைவு ஏற்படலாம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும்.
சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 14.03.2015 வரை
தனது சொந்த நட்சத்திரத்தில் சனி 3 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குரு 11 இல் இருப்பதால் குடும்பத்திலும் மங்களகரமான சுப காரியங்கள் அனைத்தும் கைகூடும். தொழில் வியாபாரரீதியாக நல்ல லாபங்கள் பெருகும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். செல்வம், செல்வாக்கு சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். ப+மி, மனை, வாங்கும் யோகம் அமையும். பண வரவுகளும் தாரளமாக இருப்பதால் கடன்கள் நிவர்த்தியாகி குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். ஜென்ம இராசியில் இராகுவும் 7 இல் கேதுவும் இருப்பதால் கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள், உற்றார் உறவினர்களிடம் விண் வாக்கு வாதங்கள் ஏற்படலாம் என்பதால் நிதானமாக செயல்படவும்.
சனிபகவான் வக்ரகதியில் 15.03.2015 முதல் 30.07.2015 வரை
முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியில் இருந்தாலும் 11 இல் குரு சஞ்சரிப்பதால் எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும்.தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். தொழில் வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி அபிவிருத்தியைப் பெருக்கிக் கொள்ள முடியும். புத்திரர்களால் சில நேரங்களில் மன சஞ்சலங்கள் ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து விட முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும்.
சனிபகவான் துலா இராசியில் விசாகம் நட்சத்திரத்தில் 31.07.2015 முதல் 05.09.2015 வரை
உங்கள் இராசிக்கு 3 இல் சஞ்சரித்த சனி இக்காலத்தில் பின்னோக்கி 2 இல் சஞ்சரிக்க இருப்பதால் மீண்;டும் ஏழரை சனியின் பாதிப்பு ஏற்படும். குருவும் 12 இல் இருப்பதால் பணவரவுகள்; ஏற்ற இறக்கமாக இருக்கும். அதனால் பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு வர வேண்டிய வாய்ப்புகள் தாமதப்படும். போட்டிகளை எதிர் கொண்டு வெற்றி பெற முடியும். கூட்டாளிகளையும். தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் சிலருக்கு தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும். முன்கோபத்தை குறைப்பது பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது போன்றவற்றால் வீண் குழப்பங்களை தவிர்க்கலாம்.
சனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 06.09.2015 முதல் 18.10.2015 வரை
உங்கள் இராசிக்கு 4,7 இக்கு அதிபதியான குருவின் நட்சத்திரத்தில் சனி 3 இல் சஞ்சரிப்தால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகளைப் பெறுவீர்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கும். கடந்த கால பிரச்சினைகள் படிப்படியாக குறைந்து பணவரவுகளும் தாரளமாக அமையும். குரு 12 இல் இருப்பதால் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் உங்களுக்கு எந்தப் பிரச்சினைகளும் உண்டாகாது. பொன், பொருள் சேரும். கடன் சுமைகளும் குறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். தொழில் வியாபார ரீதியாகவும் உயர்வுகள் ஏற்படும். வெளிய+ர் வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களும் ஒத்துழைப்பாக இருப்பார்கள். ஜென்ம இராசியில் இராகுவும், 7 இல் கேதுவும் சஞ்சரிப்பதால் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது நல்லது.
சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 19.10.2015 முதல் 26.03.2016 வரை
சனிபகவான் தனது சுய நட்சத்திரத்தில் 3 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் குருபகவான் 12 இல் சஞ்சரித்தாலும் சுபிட்சமான நிலையே தொடரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை உண்டாகும். ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வதும், கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்படுவதும் நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினைப் பெறமுடியும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல கௌரவமான உயர்பதவிகளும் கிடைக்கும். வெளிய+ர் வெளிநாடுகளுக்குச் சென்று வரக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். பொருளாதார நிலை உயர்வடையும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற முன்னேற்றமான வேலை வாய்ப்பு அமையும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படக்கூடும் என்றாலும் அதன் மூலம் அனுகூலமான பலனைப் பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவதன் மூலம் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும்.
சனிபகவான் வக்ரகதியில் 27.03.2016 முதல் 11.08.2016 வரை
உங்கள் இராசிக்கு 3 இல் சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் சற்று ஏற்ற இறக்கமான பலன்கள் ஏற்படும். சிறு சிறு வீண் விரயங்களை எதிர் கொள்ள நேரிட்டாலும் பெரிய கெடுதியில்லை. உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடன்கள் இன்றி வாழலாம். பணம் கொடுக்கல் வாங்கலிலும் கொடுத்த கடன்களை திரும்ப பெறுவதிலும் தடைகள் உண்டாகும். செய்யும் தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு லாபம் அமையும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடமும், விட்டு கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நெருக்கடிகளை சந்தித்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். குருபகவான்; 18.5.2016 வரை வக்ரகதியில் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். திருமண சுபகாரியங்கள் சிறு சிறு தடைகளுக்கு பின் கை கூடும். கேது 6 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும்;.
சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 12.08.2016 முதல் 18.11.2016 வரை
உங்கள் இராசிக்கு முயற்சி ஸ்தானமான 3 இல் சனியும் 6 இல் கேதுவும் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பாகும். குரு ஜென்ம இராசியில் சஞ்சாரம் செய்வதால் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. திருமண சுப காரியங்களில் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். சிலருக்கு வீடுமனை, வண்டி வாகனம் வாங்க கூடிய யோகமும் அமையும். நினைத்த காரியம் யாவும் வெற்றி பெற்று மன மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்திலும் மகிழ்ச்சி ஒற்றுமை, லட்சுமி கடாட்சமான நிலைகள் நிலவும். உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகத்திலும் உயர்வுகளும் அதிகாரிகளின் பாராட்டுதல்களும் உங்களுக்கு மேலும் மேலும் உற்சாகத்தை உண்டாக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சில போட்டிகளை சந்தித்தாலும் எதிர் பார்த்த லாபங்களை அடைய முடியும். அரசியல்வாதிகளுக்கு பெயர் புகழ் உயர கூடிய காலமாகும். மக்கள் ஆதரவும் தொண்டர்கள் ஆதரவும் உற்சாகத்தை உண்டாக்கும்.
சனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 19.11.2016 முதல் 08.04.2017வரை
உங்கள் இராசியாதிபதி புதன் சாரத்தில் சனியும், 6 இல் கேதுவும் சஞ்சரிப்பதால் உடல்நிலை மிக சிறப்பாக அமையும். உங்கள் செல்வம், செல்வாக்கு, புகழ் அந்தஸ்து யாவும் உயரும். வெளிவட்டார பழக்க வழக்கங்களால் உங்களுக்கு பெருமை உணடாகும். எடுக்கும் காரியங்களில் வெற்றியைப் பெறுவீர்கள். பண வரவுகள் ஓரளவுக்கு தாராளமாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த கூடிய சந்தர்பங்கள் அமையப்பெற்று அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள். தொழிலும் எதிர்பார்த்த லாபமும் முன்னேற்றமும் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி அனைவரின் நம்பிக்கைக்கும் பாத்திரமாவீர்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும்.
சனிபகவான் வக்ரகதியில் 09.04.2017 முதல் 04.08.2017 வரை
உங்கள் இராசிக்கு 3 இல் சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் உடல் நிலை சுமாராக அமையும். நிறைய தனவரவுகள் வந்தாலும் அதற்கேற்ற செலவுகளும் உண்டாகும். குடும்ப வாழ்வில் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. புத்திரவழியில் வீண் செலவுகள் உண்டாகும். வண்டி வாகனம் வாங்கும் முயற்சிகளில் கடன்கள் உண்டாகும். உத்தியோக நிலையில் பதவி உயர்வுகள் அமைந்தாலும் புதிய பொறுப்புகள் அதிகரிக்கும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பூர்வீக சொத்துகளால் சுபசெலவு உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் பழைய பாக்கிகளை வசூலிப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள். சில நெருக்கடிகள் உண்டாவதால் சங்கடங்கள் நேர்ந்தாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலும் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைப்பது மூலம் கடன்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். கேது 6 ஆம் வீட்டில்; சஞ்சரிப்பதால் நினைத்த காரியங்கள் யாவற்றையும் நிறைவேற்றிக் கொள்ள கூடிய அளவிற்கு பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும்.
சனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 05.08.2017 முதல் 19.12.2017 வரை
சனி தனக்கு நட்பு கிரகமும் உங்கள் இராசிக்கு அதிபதியுமான புதன் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலத்தில்; பொன்னவன் என போற்றப்படும் குரு பகவான் தன ஸ்தானமான 2 இல் 02.09.2017 முதல் சஞ்சரிக்கவிருப்பதால் உங்கள் ஆரோக்கியம் சிறப்பானதாக அமையும். கடந்த கால பிரச்சினைகளும் மனக்கவலைகளும் மறைந்து நிம்மதி உண்டாகும். பணவரவில் இருந்த தடைகள் விலகி நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். நீங்கள் திட்டமிட்ட காரியங்களை தெளிவாக செயல் படுத்த முடியும். கணவன் மனைவி உறவு மிகவும் திருப்திகரமாக அமையும். பெரியவர்களின் ஆசியும், மனதிற்கு சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும். தெய்வீக ஆன்மீக செயல்களில் ஈடுபாடு உண்டாகும். புத்திர வழியில் பூரிப்புகளும் உறவினர்களால் சாதகமான பலன்களும் அமையும். கொடுக்கல், வாங்கல்கள் சரளமாக இருக்கும். கொடுத்த பாக்கிகளை தடையின்றி வசூலிக்க முடியும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் அதிநவீன பொருட் சேர்க்கைகளும் சேரும். வீடுமனை வாங்கக் கூடிய யோகமும் உண்டாகும்.
உத்திரம் 2,3,4 ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு
நன்றி மறவாத தன்மையும், தர்ம நெறி தவறாது விளங்கும் பண்பும் கொண்ட உங்களுக்கு உங்களுக்கு சனி பகவான் 3 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நினைத்ததெல்லாம் நிறைவேறும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் கடன்கள் யாவும் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பிரிந்து உறவினர்களும் தேடி வந்து ஒற்றுமைக் கரம் நீட்டுவார்கள். கொடுக்கல் வாங்கலும் சரளமாக இருக்கும். பொன் பொருள் சேரும். உத்தியோகத்தில் கௌரவமான பதவிகள் கிட்டும். உங்கள் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் உயரும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.
அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
அனைவரிடமும், மரியாதையாக பழகும் குணமும் உயர்ந்த பண்பும் கொண்ட உங்களுக்கு உங்களுக்கு சனி பகவான் 3 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாக இருந்த எதிர்ப்புகள் மறையும். வெளிய+ர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பமும் நிறைவேறும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து அந்நியோன்னியம் அதிகரிக்கும். அழகான புத்திர பாக்கியமும் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். நினைத்தது நிறைவேறும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவீர்கள்.
சித்திரை 1,2 ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு
மனம் திறந்து பேசும் ஆற்றலும் நல்ல அறிவுக் கூர்மையும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3 இல் சனி பகவான் சாதகமாக சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். இதுவரை நீங்கள் பட்ட கஷ்டங்கள் யாவும் பனிபோல மறையும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். அசையும் அசையா சொத்துகள் சேரும். ஆடை ஆபரண சேர்க்கைகளும் உண்டாகும். தொட்டதெல்லாம் துலங்கும். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றங்களைப் பெறுவர். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் மறைந்து லாபங்கள் பெருகும்.
அதிர்ஷ்டம் அளிப்பவை
தேதி :- 4, 5, 6, 7, 8, 13, 14
கிழமை :- புதன், வெள்ளி;
நிறம் :- வெள்ளை, பச்சை
கல் :- மரகதம்
தெய்வம் :- விஷ்ணு
No comments:
Post a Comment