Tuesday, 11 November 2014

சனி பெயர்ச்சி பலன்கள் விருச்சிகம் (2014 -2017)

விருச்சிகம் (விசாகம் 4ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

   



  எதையும் திறமையாகச் செய்து முடிக்கும் ஆற்றலும் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவராகவும் விளங்கும் விருச்சிக ராசி அன்பர்களே! 16.12.2014 இல் ஏற்பட்டவிருக்கும்  சனி பெயர்ச்சியின் மூலம் உங்களுக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஏழரை சனியில் விரய சனி  முடிவடைந்து ஜென்ம சனியானது தொடங்குகிறது. இக்காலங்களில் உடன் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வதால் மருத்துவ செலவுகளைக் குறைக்க முடியும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தையும் ப+ர்த்தி செய்ய முடியும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைக்கவும்.நெருங்கியவரிடையே  கருத்து வேறுபாடுகள் பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. நிறைய போட்டிகளை சந்தித்தாலும் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றலும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்களை தவறவிடாமல் பயன்படுத்தவும்.

உங்களுக்கு ஏழரை சனியில் ஜென்ம சனியானது நடைபெறும் இக்காலங்களில் 05.07.2015 வரை ஆண்டு கோளான குருபகவான் பாக்கிய ஸ்தானமான 9 இல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும். பொருளாதார நிலை உயரும். 05.07.2015 முதல் 02.08.2016 வரை குரு தொழில் ஸ்தானமான 10 ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்த்து கையிலிருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது.  பண விஷயங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. 02.08.2016 முதல் 02.09.2017 வரை குரு லாப ஸ்தானமான 11 ம் வீட்டில் சஞ்சரிக்க இருக்கும் காலங்களில் தொழில் வியாபாரரீதியாக இருந்த போட்டிகளும் மறைமுக எதிர்பார்ப்புகளும் மறையும். உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிட்டும். பணவரவுகளும் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடும்.

தேக ஆரோக்கியம்
     உங்கள் ஜென்ம ராசியிலேயே சனி பகவான் சஞ்சாரம் செய்வதால் உங்களுக்கு ஏழுரைச் சனியில் ஜென்ம சனி நடைபெறுகிறது. இதனால் உடல் நிலையில் சோர்வு, கை, கால் மூட்டுகளில் வலி, எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியாத சூழ்நிலை உண்டாகும். வயிறு சம்மந்தப்பட்ட கோளாறு, மற்றும் ஜீரணமின்மை போன்றவற்றாலும் மருத்துவச் செலவுகள் உண்டாகும். மனைவி பிள்ளைகளாலும், குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்வீர்கள்.

குடும்பம் பொருளாதார நிலை
     கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையக் கூடிய காலம் என்பதால் மிகவும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களும் வீண் பிரச்சனைகளை ஏற்படுத்துவதால் மனநிம்மதி குறையும். பண வரவுகள் சிறகப்பாக இருந்தாகுறையும். பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகளும் உண்டாகும். அசையும் அசையா சொத்துகளால் வம்பு வழக்குகளை சந்திப்பீர்கள். குரு சாதகமாக சஞ்சரிக்கும் காலங்களில் திருமண சுபகாரியங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது.

உத்தியோகஸ்தர்களுக்கு
     பணியில் கௌரவமான பதவிகளில் இருப்பவர்கள் கூட சில நேரங்களில் வீண் பழிச் சொற்களுக்கு ஆளாக நேரிடும். பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிவரும். உடல் நிலை பாதிப்புகளால் அடிக்கடி விடுப்பு எடுப்பதால் உயரதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். பணிச்சுமை கூடும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு மிகவும் அவசியம் என்பதால் அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும் என்றாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலும் உண்டாகும்.

தொழில் வியாபாரிகளுக்கு
     தொழில் வியாபாரத்தில் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும் என்றாலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டி வரும். கூட்டாளிகளாலும் தொழிலாளர்களாலும் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. வரவேண்டிய வாய்ப்புகளை போட்டிகளால் பிறர் தட்டிச் சென்றாலும் இருக்கும் வாய்ப்புகளை வைத்தே மேன்மையடைவீர்கள். வெளிய+ர் வெளிநாட்டுத் தொடர்புடையவற்றால் லாபம் கிட்டும்.  முடிந்தவரை தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்.

பெண்களுக்கு
     உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது அவசியமாகும். வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் மாதவிடாய்க் கோளாறுகள் போன்றவை தோன்றி மருத்துவச் செலவுகளை உண்டாக்கும். குடும்பத்தில் குழப்பமும் நிம்மதியற்ற நிலையும் ஏற்படும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்படுவது நன்மையளிக்கும் பணவரவுகள் சுமாராக இருக்கும்.

கொடுக்கல் வாங்கல்
     பொருளாதார நிலை ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். கொடுக்கல் வாங்கலும் லாபமளிக்கும். கொடுத்த கடன்களை திரும்பப் பெறுவதில் சிறுசிறு சிக்கல்கள் ஏற்பட்டாலும் எதையும் சமாளிக்கும் வசூலித்து விடுவீர்கள். கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளிலிருப்போர்க்கு லாபங்கள் எதிர்பார்த்தபடி அமையும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை.

அரசியல்வாதிகளுக்கு
     தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ள சற்று பாடுபட வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கிய பாதிப்புகளால் பதவிகளை சரிவர நிர்விக்க முடியாத சூழ்நிலை உண்டாகும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற நிறைய இடைய+றுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். உடனிருப்பவர்களே உங்களுக்கு துரோகம் செய்வார்கள்.

விவசாயிகளுக்கு
     பயிர் விளைச்சல் நன்றாக இருக்கும் என்றாலும் சந்தையில் விளை பொருளுக்கேற்ற விலையினைப் பெறுவதில் இடைய+றுகள் உண்டாகும். அரசு வழியில் கிடைக்கும் உதவிகளால் கடன்களை ஒரளவுக்கு நிவர்த்தி செய்ய முடியும். வாய்க்கால் வரப்பு சம்பந்தப்பட்டவைகளால் பங்காளிகள் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தினாலும் நீங்கள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

படிப்பு
     மாணவ மாணவியர் கல்வியில் சற்று கவனம் செலுத்தி படிப்பது நல்லது. உடல்நிலையில் சோர்வும், ஞாபக மறதியும் உண்டாவதால் கல்வியில் ஈடுபாடு குறையும். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை உங்கள் வாழ்வின் திசையையே மாற்றிவிடும் என்பதால் எதிலும் கவனம் தேவை. தேவையற்ற பொழுது போக்குகளில் மனதைக் செலுத்தநேரிடும். விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளைப் பெறுவீர்கள். பயணங்களில் நிதானம் தேவை.
ஸ்பெகுலேஷன்:- லாட்டி, ரேஸ், போன்றவற்றால் எதிர்பார்க்கப்படும் அளவிற்கு லாபத்தினை அடைய முடியாது. எனவே எதிலும் சிந்தித்து செயல்படவும். 

சனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 16.12.2014 முதல் 24.01.2015 வரை
உங்கள் இராசிக்கு நட்பு கிரகமான குருவின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியில் சனி சஞ்சரிக்கும் இக்காலத்தில் 9இல் குருவும், 11 இல் இராகுவும் இருப்பதால் எதையும் எதிர் கொள்ளும் பலம் உண்டாகும்.  பணவரவுகள் சுமாராக இருக்கும். எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றியும் அனுகூலமும் இருக்கும். நண்பர்களின் ஆலோசனைகள் நல்ல பலனை உண்டாக்கும். கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை தவிர்த்து விடுவது நல்லது. எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகள் நிலவினாலும் சாதகப்பலன் உண்டாகும். வண்டி வாகனம் வாங்கும் யோகம் அமைந்தாலும் சிறிது கடன்களும் உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூட்டு தொழிலில் சுமாரான லாபத்தை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமைகளை வெளிபடுத்த கூடிய சந்தர்பங்கள் அமையும். 

சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 14.03.2015 வரை
தனது நட்சத்திரத்தில் ஜென்ம ராசியில் சனி சஞ்சரிக்கும் இக்காலத்தில் குரு 9 லும்,  இராகு 11 லும் இருப்பதால் எந்த பிரச்சனைகளையும் சமாளித்துவிடக்கூடிய ஆற்றல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக் கூடிய பிரச்சனைகளால் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். எந்தவொரு காரியத்திலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படவும் உறவினர்களை அனுசரித்துச் செல்வதால் வீண் பிரச்சனைகளை தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கப் பெற்றாலும் வேறு இடங்களுக்கு இடமாற்றங்களும் உண்டாகி அலைச்சல் ஏற்படும். எடுக்கும் காரியங்களை செய்து முடிப்பதற்கு அரும்பாடுபட வேண்டியிருக்கும். கணவன் மனைவியிடையே அவ்வளவாக  ஒற்றுமை  இருக்காது. என்றாலும் எதிர்பாராத உதவிகளால் எதையும் சமாளிப்பிர்கள் குடும்பத்திலும் சுப காரியங்கள் கை கூடும். 

சனிபகவான் வக்ரகதியில் 15.03.2015 முதல் 30.07.2015 வரை
ஜென்ம இராசியில் சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியிலும், 11 இல் இராகுவும், 9 இல் குருவும் இருப்பதால் பிரச்சனைகள் விலகி அனுகூலமாக பலன்கள் கிடைக்கும். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். எந்த காரியத்திலும் வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படுவீர்கள். பொருளாதாரம் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்கடங்கியே காணப்படும். கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில்  வெற்றி கிட்டும். உடன் பிறப்புகளால் சுமாரான அனுகூலப்பலனைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தாங்கள் விரும்பிய இடமாற்றம் கிடைக்கப்பெற்றாலும் உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்காமல் பாடுபட வேண்டியிருக்கும். அதிகாரிகளின் ஆதரவு சற்றே மனஅமைதியை உண்டாக்கும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் அமையும். நண்பர்களின் உதவியும் தக்க சமயத்தில் அமையும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் திறமைக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைக்கும்.

சனிபகவான் துலா இராசியில் விசாகம் நட்சத்திரத்தில் 31.07.2015 முதல் 05.09.2015 வரை
உங்கள் ஜென்ம இராசியில் சஞ்சரித்த சனி இக்காலத்தில்  பின்னோக்கி 12 இல் சஞ்சரிக்க இருப்பதாலும், குரு 10 இல் இருப்பதாலும்; தொழில் வியாபாரம் செய்பவர்கள் மிகவும் நிதானித்து செயல்படுவது நல்லது. புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று கவனமுடன் செய்ல்படுவது நல்லது. உடல் நிலையில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனமாக செயல்படுவது நல்லது. வாக்குறுதிகளை காப்பாற்றுவதில் சிரமம் உண்டாகும். குடும்பத்திலும் ஒற்றுமை குறையும். உறவினர்கள் சாதகமாக செயல்படுவதால் சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற இடமாற்றத்தை சந்தித்தாலும், கௌரவப்பதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பார்க்கும் உதவிகள் தடையுடன் அமையும். இராகு லாப ஸ்தானமான 11 ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் எதையும் எதிர் கொள்ளும்  ஆற்றல் ஏற்படும்.

சனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 06.09.2015 முதல் 19.10.2015 வரை
உங்கள் இராசிக்கு 2,5 இக்கு அதிபதியான குருவின் நட்சத்திரத்தில் சனி ஜென்ம இராசியில்  சஞ்சரிக்கும் இக்காலத்தில் சில சங்கடங்கள் ஏற்படும். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பதும் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை சுமாராகத்தான் இருக்கும். எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். சுமாரான பணவரவுகளால் குடும்பத் தேவைகளைப் ப+ர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டி வரும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராத இடமாற்றங்களால் குடும்பத்தை விட்டுப் பிரிய வேண்டிய நிலை உண்டாகும்; எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. குரு ஜென்ம ராசிக்கு 10 ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளாலும் தொழிலாளர்களாலும் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாத நிலையும் உண்டாகும்.

சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 19.10.2015 முதல் 26.03.2016 வரை
சனிபகவான் தனது சுய நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலத்தில் 10 இல் குரு சஞ்சரிப்பதால்  சற்று சோதனையான பலன்களையே எதிர்கொள்ள நேரிடும். பணவரவுகளில் தடைகளும் நண்பர்களே எதிரிகளாக மாறக்கூடிய சூழ்நிலைகளும் உண்டாகும். பண விஷயத்திலும் மற்றவர்கள் விஷயத்திலும்  தலையீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எவ்வளவு தான் பாடுபட்டாலும் அதன் முழு பலனை அடைய முடியாது. எதிர்பார்த்த உயர்வுகள் தாமதப் படுவதால் எதிலும் முழுமையாக ஈடுபட முடியாத நிலை உண்டாகும். எடுக்கும் காரியங்களில் வீண் விரயமும், தடை தாமதங்களும் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் அலைச்சல் அதிகரிக்கும். எதிரிகளின் பலம் கூடி உங்கள் பலம் குறைய கூடிய காலமாக அமையும். தெய்வகாரியங்களில் ஈடுபடுவதும் குலதெய்வ வழிபாடுகள் மேற்கொள்வதும் குடும்பத்தில் ஏற்பட கூடிய பிரச்சினைகளை குறைக்கும். 11 இல் இராகு  08.01.2016 வரை சஞ்சரிப்பதால் கடந்த கால பிரச்சனைகளிலிருந்து சற்றே விடுபடுவீர்கள். 

சனிபகவான் வக்ரகதியில் 27.03.2016 முதல் 11.08.2016 வரை
உங்கள் ஜென்ம இராசியில் சனி இக்காலத்தில் வக்ர கதியிலும்  குரு 10 இல் வக்ர கதியிலும் சஞ்சரிப்பதால் பணவரவுகளில் நெருக்கடிகள் உண்டாகும். குடும்பத் தேவைகளைப் ப+ர்த்தி செய்வதற்காக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகளும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக் கூடிய பிரச்சனைகளால் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் முயற்சிகளில் தடைகளும் வீண் அலைச்சல்களும் உண்டாகும். எடுக்கும் காரியங்களில் தடை தாமங்கள், எதிர்பார்க்கும் உதவிகளில் இழுபறியான நிலை நீடிக்கும். உற்றார் உறவினர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். உத்தியோகத்தர்கள் பிறர் செய்யும் தவறு;களுக்கும் பொறுப்பேற்கவேண்டிய சூழ்நிலை உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடைக்கு பின் வெற்றி கிட்டும்.

சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 12.08.2016 முதல் 18.11.2016 வரை
ஜென்ம இராசியில் சனி சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. கணவனும் மனைவியும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் சில இடைய+றுகளுக்குப் பின் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகளால் வர வேண்டிய வாய்ப்புகள் கைநழுவிப் போகும். பொருளாதார நிலையில் நெருக்கடிகள் ஏற்படக்கூடிய காலம் என்றாலும்; ஆண்டு கோள் என வர்ணிக்கப்படும் குரு லாப ஸ்தானத்தில் வலுவாக சஞ்சரிப்பதால் ஓரளவுக்கு அனுகூலத்தை உண்டாக்கும். குடும்பத்திலும் சுப காரியங்கள் கை கூடும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் திறமைகளுக்கேற்ற உயர்வுகளை அடைவார்கள். பூர்வீக சொத்துக்களால் ஓரளவுக்கு அனுகூலத்தைப் பெறுவீர்கள். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும்.

சனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 19.11.2016 முதல் 08.04.2017வரை
உங்கள் இராசிக்கு 8,11 இக்கு அதிபதியான புதன் சாரத்தில் சனி சஞ்சரிப்பது நெருக்கடிகளை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் தன, பஞ்சமாதிபதியான  குரு லாப ஸ்தானத்தில் வலுவாக சஞ்சரிப்பதால்  தடைபட்ட காரியங்கள் தடையின்றி நிறைவேறி மகிழ்ச்சி அளிக்கும். எதிர் பாராத திடீர் தன வரவுகளால் குடும்பத்தேவைகள் பூர்;த்தியாகும். பழைய கடன்கள் குறையும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடு மறையும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். உடன் பிறப்புகளால் சாதகமான பலனை அடைவீர்கள். அண்டை அயலாரின் உறவு சிறப்பாக அமையும். புதிய பொருட்கள் சேரும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் தொழிலை அபிவிருத்தி செய்ய பெரிய மனிதர்களின் ஆதரவுகளைப் பெறுவார்கள். எதிர்பார்த்த லாபங்களும் கிடைக்கப்பெறும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று மன மகிழ்ச்சி அடைவார்கள். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவதால் அதிக மதிப்பெண்களை பெறுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

சனிபகவான் வக்ரகதியில் 09.04.2017 முதல் 04.08.2017 வரை
உங்கள் ஜென்ம இராசியில்  சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியில சஞ்சரிப்பதும் குரு 11 இல் இருப்பதும் அற்புதமான அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் தெம்பும் உற்சாகமும் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன்கள் கிடைக்கும். வெளியூர் வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கப் பெறும். பண வரவில் தாராளமான சூழ்நிலைகளே இருக்கும். கொடுக்கல் வாங்கலும் சரளமாக அமையும். சிலருக்கு வண்டி வாகனம் வாங்க கூடிய யோகங்களும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கப்பெற்று மன மகிழ்ச்சி அடைவர்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபமும் முன்னேற்றமும் அடைவார்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட கடன்கள் வெகுவாக குறையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு தாங்கள் விரும்பிய வரையே கைபிடிக்கும் யோகம் அமையும். மாணவர்கள் கல்வி மற்றும் விளையாட்டு துறையிலும் பாராட்டுகளையும், பரிசுகளையும் பெறுவார்கள். 

சனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 05.08.2017 முதல் 19.12.2017 வரை
சனி தனது நட்பு நட்சத்திரமான புதன் சாரத்தில் ஜென்ம இராசியில்   சஞ்சரித்து ஏழரைச் சனி நடப்பதாலும், குரு 12 ல் சஞ்சரிப்பதாலும் உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வது நல்லது. பண வரவுகளில் சிறுசிறு நெருக்கடிகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் இக்காலத்திலும் தடைகளையே சந்திப்பீர்;கள். குடும்பத்திலும் பொருளாதார தட்டுபாட்டினாலும் வீண் சஞ்சலங்கள் உண்டாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் குறையும் என்றாலும் புத்திர வழியில் வீண் செலவுகளும் நிம்மதியற்ற நிலையும் உண்டாகும். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷனை சந்திப்பீர்;கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளிடமும், தொழிலாளிகளிடமும் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. எந்தவொரு காரியத்தையும் சிந்தித்து செயல்படுத்தினால் மட்டுமே லாபங்களை எதிர்பார்க்க முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதத்துடன் அமையும்.

விசாகம் 4 ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு
     அனைவரிடமும் விசுவாசத்துடனும் அன்புடனும் பழகும் குணம் கொண்ட உங்களுக்கு சனி பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் ஏழரைச் சனியில் ஜென்மச் சனி நடைபெறுகிறது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் தேவையற்ற பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாகத் தானிருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் செலுத்தினால் மட்டுமே லாபத்தினைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வேலைப்பளு அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு ஒரளவுக்கு உதவியாக இருக்கும்.

அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
     மிகவும் கூச்சசுபாவம் மிக்கவராகவும் தாராள மனப்பான்மை கொண்டவராகவும் விளங்கும் உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்மச் சனி நடைபெறுவதால் எதிலும் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. பொருளாதார நிலை சுமாராக இருக்கும். உடல் நிலையில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். தொழில் வியாபாரத்தில் நம்பிய கூட்டாளிகளே துரோகம் செய்வார்கள். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்களும் அதிகரிக்கும். பண விஷயத்தில்  பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடன்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
    எடுக்கும் காரியங்களை தளர்ச்சியடையாமல் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்மச் சனி நடைபெறுவதால் குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும். பணவரவுகள் ஏற்றத் தாழ்வுடன் இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படவும். தேவையற்ற பயணங்களாலும் அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தாமதமடையும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

தேதி :-   1, 2, 3, 9, 10, 11, 12
கிழமை :-   செவ்வாய், ஞாயிறு
நிறம் :-   சிவப்பு, மஞ்சள்
கல் :-   பவளம்
தெய்வம் :-   முருகன்

No comments:

Post a Comment