Tuesday, 18 July 2017

ஜோதிட ரகசியங்கள் பாகம் 1

1, புதன் புதியன  விரும்பிசூரியனுடன் இருக்கும் போது பல பெண்களை விரும்புவார்கள்....ஆசைகள் மாறிக்கொண்டே இருக்கும் ..தொழிலில் கெட்டிக்காரர்கள் படிப்பில் சுட்டி..                                                       

2,
குரு கெட்டிருக்க கணவன் மனைவிக்குள் சண்டை வரும்.                                                

3,
சனி கர்மா சம்பந்தமில்லாமல் உடல் இணையாது. சனி  - லக்னம், லக்னாதிபதி, 7-மிடம், 7-ம் அதிபதிகளை பார்க்க திருமணம் விரும்பி சூரியன் + புதன் சம்பந்தம் மதன கோபாலயோகம் பல பெண்கள் தொடர்ப.<         டைபெறும்.                                         

4,
சந் + ராகு திருட்டு கிரகம்

5,
சந்திரனுடன் எத்தனை கிரகம் சம்பந்தப்பட்டிருக்கின்றதோ காமத்தில் அதனுடைய தாக்கம் இருக்கும் சந் + சுக் காமம் அதிகம்.                                                   

6,
பிரிந்து போக நினைப்பது ராகு, பிரித்து வைப்பது  கேது.                                       

7,
குருவிற்கு 1-படை ராசியில் 3-5-7-9-11 ல் சுக்கிரன் இருக்க நன்றாக இருக்கும.                                                                        

8, 2,11-
ல் தொடர்பு வைப்பாட்டி வைத்துக் கொள்வார்கள்.                                   

9,
திருமணத்தன்று 5,12-ன் கிழமை, நடசத்திரங்கள் வரக் கூடாது.                    

10,
சூரி + சனி பெண் வீட்டுடன் மாப்பிள்ளையாக இருக்க நேரிடும். அப்பா பெண் மேல் அதிக பாசமாக இருப்பார்.                                                     

11,
பெண் சந்திரனுக்கு ஆண் சந்திரன் 11-ல் இருக்க சுபம். சந்திரனுக்கு 11-ல் லக்னம், லக்னத்திற்கு 11-ல் சந்திரன் இருக்க இனிய திருமணம்.                               

12, 1,2,8-
க்குடையவர்கள் திருமணத்தை நிர்மாணிக்கிறார்கள்

13,
சனி + ராகு + சந் சேர சிறுநீரக கல் பிரச்சனை வரும். மூவரும் சேர்ந்தோ அல்லது மூவரும் நீர் ராசிகளiல் இருந்தாலும் சிறுநீரக கல் பிரச்சனை வரும். எப்போது? மூவரும் இணையும் காலம் நீர் வீடு மீனம், கடகம், விருச்சிகம்.

14,
ஒரு ஜாதகத்தில் திசாநாதன் இன்னொரு ஜாதகத்தில் அஸ்தமனம் ஆனால், பிரிவினையை இழப்பை தரும். நல்ல யோக நிலையில் இருக்க மிக்க யோகம்.

15, 5-
ம் அதிபதி குருவாகி சூரியன், ராகு, கேது, நட்சத்திரத்தில் இருக்க குழந்தை பிறக்காது.

16,
சனி 5,7-ல் அமர்வது சனி தோஷம் சந் + சனி சேர்க்கை பார்வை புனர்பூ யோகம்.                                                                         

17,
இரு ஆதிபத்தியமுள்ள கிரகங்கள் பரிவர்த்தனை ஆகும் போது, பரிவர்த்தனை ஆகாத பாவங்கள் பலி வாங்கும். அல்லது பலி எடுக்கும். பரிவர்த்தனை ஆகாத பாவத்தில் ராகு அமரக் கூடாது.                                           

18,
நிலம் வாங்க பிறந்த கால செவ்வாய்க்கு கோட்சார செவ்வாய் 2-12, 6-8, ஆக இருக்க கூடாது. குரு, செவ்வாய் சம்பந்தம் ராசி அல்லது அம்சம் ஆகியவைகளiல் இருப்பவர் மட்டுமே வீடு வாங்க இயலும், செவ்வாய் கட்டிய வீடு, புதன் காலி இடம்.                                                              

19,
நீண்ட கால பலனுக்கு திசாநாதன் சம்மதிக்க வேண்டும் குறுகிய கால பலனுக்கு புத்திநாதன் சம்மதிக்க வேண்டும்.                                                  

20,
சந்திரன் 6,8-ல் உள்ள ஜாதகம் உடல் ரீதியான தொந்தரவு கொடுக்கும்.

21,
ரேவதி குறுகிய நட்சத்திரம் குளiர்ந்த மொட்டு விசாகம் அதிக காம நட்சத்திரம் நெருப்பு குழம்பு உஷ்ணம்.                                                  

22
வக்கிர கிரககங்கள் தன் காரகத்துவத்தின் தனித் தன்மையை தக்க வைத்துக் கொள்வதில்லை.                                                                 

23,
சிம்மம், கும்பம், லக்னம் உள்ளவர்கள் தத்து போக கூடிய லக்னம். குழந்தை வெளiயே வாழம்f.                                                                  

24, 7-
ம் அதிபதி 3-ல், 3-அதிபதி -7 ல் இருக்க மணப் பெண் தானே தேர்ந்தெடுப்பர்கள்.

25, 9-
கிரகத்தில் எது குறைந்த பாகையில உள்ளதோ அதுவே மனைவியின் ராசியாக அமையும்.                                                                   

26,
அதிக பாகை, கலை, எந்த கிரகம் பெற்றுள்ளதோ அதன் காரகத்துவ வேலையை செய்வார்.                                                                

27,
உச்ச வீடுகளை பரிமாறிக்கொள்ளும் கிரகம் திடீர் முடிவுகளை எடுக்கும். விபரிதம் என்று தெரிந்தும் செய்வார்கள். வாழ்க்கையை புரட்டிப் போட்டு விடும்.

28,
அங்காளi, பங்காளi, குறிக்கும் கிரகம்  புதன். புதன் நீச்சத்தில் இருக்க, அங்காளi, பங்காளi, ஆகாது.                                                                 

29,
சனி மகரம் செவ்வாய் துலாம் இருக்க காரகத்துவ ரீதியான முடிவுகளை எடுக்கும். இவர் உடன் பிறந்த அக்காவை கற்பழித்தார். ( சனியும் செவ்வாயும் உச்ச பரிவர்த்தனை ஆகியுள்ளது. )                                     

30,
உச்ச வீடுகளை பரிமாறிக் கொள்ளும் கிரகம் விபரிதம், என்று தெரிந்தும், திடீர் முடிவுகளை எடுக்க வைக்கும்.

31,
ஒரு கிரகம் தன் நின்ற வீட்டின் 8-ஆம் அதிபதியோடு தொடர்பு கொண்டால் தனது காரகத்துவத்தின்f மூலம் அவமானம் அடையும்.

32,
ஒரு கிரகம் தான் நின்ற வீட்டின் 12- ம் அதிபதியோடு தொடர்பு கொண்டால் தனது காரகத்துவத்தினை இழக்கிறது.                                        

33,
ராகு கேது அச்சை விட்டு வெளiயேறிய கிரகம் தனது காரகத்துவ அடிப்படையில் தனித்து நிற்கிறது.                                                    

34,
மேசம் லக்னம் சூரி + சந் 7-ல் குரு சூரியனுக்கு 12-ம் அதிபதி குருவின் தொடர்பு எனவே 3-மகன்களும் இறந்து விட்டார்கள் லக்னத்திற்கு 5-வீடு சூரியன் எனவே மகனைக் குறிக்கும்.                                                      

35,
ஸ்திர லக்னத்தில்  மூத்த பையன் பிறக்க பாதிப்பையும் பெண் பிறக்க யோகத்தினையும் செய்யும் 12-வருட காலம் மட்டும் செய்யும்.                                  

36,
நல்லதையோ கெட்டதையோ செய்ய வேண்டுமானால் அந்த கிரகம் நடப்பில் உள்ள கிரகங்கள் சேர பார்க்க வேண்டும்.                                                

37, 
சனி கேது பிறப்பில் உள்ள ஜாதகருக்கு சனி மகத்தில் வரும் காலம் தொந்தரவு செய்யும். கண் பாதிப்படையும்.                                           

38,
வீட்டை விட்டு ஓடிப் போபவர்கள் வக்கிர கிரக திசையில் போனால், திரும்பி வருவார்கள். வக்கிரம் ஆகி அஸ்தமனமும் ஆகி அந்த திசையில் போனால் திரும்ப வர மாட்டார்கள்.                                                              

39, 
சனி கேது தொடர்பு எந்த வகையில் வந்தாலும், அதிர்ஷடத்தை நம்பி செய்யும் ரேஸ், லாட்டரி, கிளப், சூதாட்டம், தொழில் வீழ்ச்சி அடையும்.                                                  

40,
கோட்சார சந்திரன் சுக்கிரனை தொடும் காலம் பணம் வரும்.                                        

41,
சனி பிறந்த ஜாதகத்தில் அசுபதி 1,2,3-ஆம் பாதத்தில் உள்ளவர்களுக்கு கோர்ட் கேஸ் வரும். சனி பிறந்த ஜாதகத்தில் மகம் 1,2,3-ஆம் பாதத்தில் உள்ளவர்களுக்கு வீடு aIதியான வழக்கு வரும். கோட்சார சனி அசுபதி 1,2,3- பாதத்திலும் மகம் 1,2,3- பாதத்திலும் வரும் போது இச்சம்பவம் நடைபெறும்.

42,
கோட்சார சந்திரனை எத்தனை கிரகம் பார்க்கின்றதோ அதன் காரகத்துவத்தை செய்யலாம் என்று சொல்லலாம்                                                       

43,
தொழிலைப் பற்றி கேட்கும் போது சனியை சந்திரன் தொடர்பு இருக்க வேண்டும் அப்போது தான் வேலை கிடைக்கும.                                        

44,
குரு சந்திர யோகத்தில் தான் ஒருவர் வீட்டை விட்டு ஓடுவார்.                                             

45,
பிறந்த கால சந்திரன், கோட்சார புதனை பார்த்தாலும், கோட்சார சந்திரன் பிறந்த கால புதனை பார்த்தாலும் படிப்பு மந்தம்.                                          

46,
குழந்தை உண்டா என்ற கேள்விக்கு, கோட்சார சந்திரன், குருவை பார்க்க வேண்டும். இருவர் ஜாதகத்திலும் பார்க்க வேண்டும்.                                        

47,
உச்ச கிரக காரகத்துவத்தை மதிக்க வேண்டும்.                                   

48,
புதன் உச்சம் பெற, கடன் காரரை கண்டு பயப்படுவார்கள். காலச்சக்கர விதிப்படி புதன் 6-க்குரியவர். லகனத்திற்கு 6-க்குயைவருடன் புதன் சேர பெருத்த கடன் காரராக இருப்பார்.                                                            

49,
ஒரு ஜாதகத்தில் ஒரு கிரகம் நீச்சமாக இருக்கும் பட்சத்தில், அவர் கால புருஷனுக்கு எத்தனையாவது ஆதிபத்தியம் உள்ளவரோ, அப்பாவக காரகத்துவம் வழியாக தொந்திரவு இருக்கும். தொந்தரவுக்கு பயப்படமாட்டார்.      

50. லக்னத்திற்கு 4,7 ஆகிய கேந்திரங்களில் சுபக் கிரகங்கள் சேர்ந்து நிற்கப் பிறந்த ஜாதகன் பொன் பொருள் மற்றும் கோடி ரூபாய் சம்பாதிக்கும் திறம் பெற்று சிறப்புடன் வாழ்வான். பலவித வாகனம் பெற்று பெருமை அடைவான்                       

Wednesday, 12 July 2017

ஜோதிட ரகசியங்கள் பாகம் 2

இராஜ யோகம் :
கிரகங்கள் கூட்டு யோகமாகும் .யோகம் என்பது சுப/அசுப பலன்களைத் தர வல்லது .ஒருவன் பிச்சை எடுப்பதிற்கு ஒரு யோகம் (கிரக கூட்டு) வேண்டும் . இதுவும் ஒரு வகை யோகமே .
இராஜ யோகம் என்பது சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்துவது ,அனுபவிப்பது ,பணப்புழக்கம் அதிகம் இருப்பது ,உயர் நிலையில் இருப்பது மேலும் கலெக்டர் ,பெரிய வர்த்தகம் செய்பவர் ,டாக்டர் ,எஞ்சினியர் ,உலகமறிந்த விளையாட்டு வீரர் ,விரும்பப்படுகிற சினிமா நடிகர் / நடிகை ,மதத் தலைவர் போன்றவர்களுக்கு எல்லாம் சுப பலனை தரக்கூடிய கிரக கூட்டு இருப்பதே காரணம் .
இராஜ யோகங்களை தரக்கூடிய சில கிரக கூட்டுகள் பற்றி காண்போம் .
1. 5,9 ம் வீட்டு அதிபதிகளுடன் 1,4,7,10 ம் வீட்டு அதிபதிகள் சொந்த வீட்டில் அமர்வது சுப யோகம் ஆகும் . அது மேலும் லக்னமாகி சூரியன் ,சந்திரன் சேர்ந்து தங்களது சொந்த வீட்டில் அமர்வது அல்லது இருவரும் 1,4,5,9,10 ல் அமர்வது இராஜயோகம் ஆகும் .இந்த அமைவு பெற்று ஜாதகர்க்கு இராஜயோகத்துடன் இருப்பார் .
2. ரிஷபம் லக்னமாகி 9,10 ம் ஆதியாகிய சனி 5 ம் வீட்டதிபதி புதனோடு கேந்திரத்திலே ,திரிகோணத்திலே இருப்பது .
3. மிதுனம் லக்னமாகி 1,4 க்குடைய புதன் 10 ம் ஆதி குரு அல்லது 5 ம் ஆதி சுக்கிரனோடு இணைவது .
4. கடகம் லக்னமாகி சந்திரன் 5,10 ம் ஆதி செவ்வாயோடு 11,5,9 அல்லது 1,4,7,10 ல் இணைவது .
5. சிம்மம் லக்னமாகி சூரியன் 4,9 ம் ஆதி செவ்வாயோடு 1,5,9 அல்லது 1,4,7,10 ல் இணைவது .
6. கன்னி லக்னமாகி 1,10 ம் ஆதி புதன் , 4,7 க்குரிய குரு அல்லது 2 , 9 க்குரிய சுக்கிரனோடு 1,5,9 அல்லது 1,4,7,10 ல் இணைவது .
மேலும் புதன் ,சுக்கிரன் 3 ல் இணைந்து 9 ம் வீட்டைப் பார்ப்பதும் இராஜயோகமாகும்.
7. துலாம் லக்னமாகி 4, 5 க்குடைய சனி, 2 ,7 க்குரிய செவ்வாய் அல்லது 9 க்குரிய புதன் அல்லது 10 க்குரிய சந்திரனோடு 1,5,9 அல்லது 1,4,7,10 ல் இணைவது .
8. விருச்சகம் லக்னமாகி 5 க்குரிய சந்திரன் அல்லது 10 க்குரிய சூரியனோடு 1,5,9 அல்லது 1,4,7,10 ல் இணைவது .
9. தனுசு லக்னமாகி 1 ,4 க்குரிய குரு 5 க்குரிய செவ்வாய் அல்லது 10 க்குரிய புதன் அல்லது 9 க்குரிய சூரியனோடு 1,5,9 அல்லது 1,4,7,10 ல் இணைவது .
10. மகரம் லக்னமாகி சனி 5,10 க்குரிய சுக்கிரனோடு இணைவது .
11. கும்பம் லக்னமாகி சனி 4,9 க்குரிய சுக்கிரனோடு இணைவது .
12. மீனம் லக்னமாகி 1,10 க்குரிய குரு 4,7 க்குரிய புதனோடு அல்லது 9 க்குரிய செவ்வாயோடு இணைவது
மேலும் 4 வகையான இராஜயோகம் கிழ்க்கண்ட வழிவகைகளில் உருவாகிறது
1. 1,5,9 ம் ஆதிகள் இணைவது
2. 2,6,10 ம் ஆதிகள் இணைவது
3. 3,7,11 ம் ஆதிகள் இணைவது
4. 4,8,12 ம் ஆதிகள் இணைவது
1, 5, 9 :
1. இந்த வகை இணைவு ஜாதகரை சமுதாயத்தில் பெரிய மனிதராகவும் தலைவராகவும் அல்லது விஞ்ஞானி ,மகான் நிலைக்கு கொண்டு செல்லும் .
2, 6,10:
2. இவர்கள் வெளிநாடு சென்று அதிக வருவாய் ஈட்டும் நிலைக்குக் கொண்டு செல்லும் .இவர்கள் குடும்பமே பெரிய வர்த்தகர்களாகவும் ,அரசாங்கத்தால் மதிக்கப்படுபவராகவும் இருப்பார்கள் .
3, 6,11:
3. மிகவும் தைரியசாலிகளாகவும் தன் உழைப்பால் முன்னேறுபவர்களாகவும் இருப்பார்கள் .
4, 8,12:
4. இவர்கள் மறைமுக நடவடிக்கை மூலம் பொருள் ஈட்டுபவர்களாகவும்,கொலை பாதகங்களுக்கு அஞ்சாதவர்களாகவும் சொத்தின் மேல் பற்றுடையவர்களாகவும் இருப்பார்கள் .
2. கால சர்ப்ப யோகம் .
ராகு,கேதுகளுக்கும் இடையில் அனைத்து கிரகங்களும் அமைவது .பெரும்பாலான ஜோதிடர்கள் இந்த அமைவு கெடு பலனைத் தரும் என்று கூறுகிறார்கள் .ஆனால் இது அப்படியல்ல .இவ்வமைப்பு உள்ளவர்கள் இயற்கையிலேயே தைரியசாலிகளாகவும் ,தன்னை வெளிக்கொணர்வதில் ,நிலை நாட்டுவதில் குறிக்கோள் உடையவர்களாகவும் ,மிக விரைவில் பிரபலம் அடைபவர்களாகவும் இருப்பவர்கள் .குறிப்பாக 10 ம் அதிபதி ரகுவுடன் தொடர்பு அல்லது ராகு 3 அல்லது 5 ல் அமைவது இத்தகைய யோகத்தைத் கண்டிப்பாக கொடுக்கும் .
3. திருமணப் பொருத்ததில் சில நுணுக்கங்கள் .
ஒரு ஆணின் ஜாதகமும் ,பல பெண்களின் ஜாதகமும் ஒரே நேரத்தில் பொருத்தம் பார்க்க வந்தால் எப்படிப் பொருத்தம் பார்ப்பது ?
1. ஆணின் ஜாதகத்தில் 10 மிடம் அல்லது 10 ம் அதிபதி அமர்ந்த இராசி எதுவோ அதுவே அவர் மனைவின் ராசியாகும் .
உதாரணமாக ஒரு சிம்ம லக்னம் ஆணிற்கு 10 மிடம் ரிஷபம் .அந்த சுக்கிரன் கடகத்தில் .இந்த அமைப்பில் உள்ள ஒரு வரனுக்கு 50 பெண்களின் ஜாதகம் பொருத்தம் பார்க்க வருமானால் அந்த 50 ஜாதகங்களில் ரிஷபம்,கடகம் ,துலாம் இந்த ராசியுடைய பெண்களின் ஜாதகம் மட்டும் எடுத்து பொருத்தம் பார்ப்பது நலம் .
2. மற்றொரு வகை .வரணின் ஜாதகத்தில் ராகு அமர்ந்த ராசி அல்லது அந்த ராகுக்கு இடம் கொடுத்தவர் அமர்ந்த ராசி எதுவோ அது பெண்ணின் ராசியாக இருக்கும் .
3. ஆணின் ஜாதகத்தில் உள்ள ராகு ,கேதுகளுக்கு ,1,5,9, ல் பெண்ணின் ராகு ,கேதுவோ அல்லது கேது,ராகுவோ அமைந்து இருக்கும் ஜாதகம் பொருந்தும் .
4. காணாமல் போன பொருள் கிடைக்க .
ஆருடம் :
ஜாதகர் ஒரு பொருளை இழந்து விட்டு வந்து நம்மிடம் ஆருடம் கேட்க வந்தால் :
அன்றைய கோச்சார கிரகத்தை ராசிக்கட்டத்தில் அமைத்து வந்த நேரத்தில் உதய லக்னம் பிடிக்கவும் .
1. இந்த லக்னத்திற்கு 6 ல் பாவ கிரகங்கள் இருந்து 6 ம் அதிபதி லக்னத்தையையோ,லக்னாதிபதியையோ பார்த்தல் பொருள் களவு போயிற்று.மேலும் லக்னாதிபதி 6 ல் இருந்தால் களவு போனது உறுதி .
2. லக்னாதிபதி12 ல் இருந்தால் பொருளை மறதியாக எங்கோ வைத்து விட்டார் .
தீர்வு :
1. லக்னத்தையையோ,லக்னாதிபதியையோ சுப கிரகங்கள் பார்த்தால் பறிபோன பொருள் ,கை நழுவிய பொருள் ,மறதியாக வைத்த பொருள் ,திரும்பக் கிடைக்கும் .
2. லக்னத்தையையோ,லக்னாதிபதியையோ பாவ கிரகங்கள் மட்டும் பார்த்தால் பொருள் திரும்பக் கிடைக்க வாய்ப்பில்லை .
5. மற்றும் சில
1. ஜெனன காலத்தில் சனியை குரு பார்த்திருந்தாலும் சனியுடன் குரு சேர்ந்திருந்தாலும் வாழ்க்கையில் இரண்டொரு முறை கடல் கடந்து வெளிநாடு சென்று தொழில் துறையில் பெரும் பணத்தை சம்பாதிப்பதுடன் எதிர்காலத்திலும் உயர்வான வாழ்க்கை அமைந்திடும் .
2. 9 ல் புதன் இருந்தாலும் அல்லது 9 க்குடையவர் 8 ல் இருந்தாலும் ,அல்லது ராகு 9 லிலோ அல்லது 5 லோ இருந்தால் அடிக்கடி செலவும் ,பொருளாதாரத்தில் சரிவும் ஏற்படும் .
3. திக் பலம் :
புதன் ,குரு -கிழக்கிலும் -அது லக்னத்திலும்
சூரியன் ,செவ்வாய் ,தெற்கிலும் -அது 10 லும்
சனி -மேற்கில் -அது 7 ல் ,
சந்திரன் ,சுக்கிரன் -வடக்கிலும் -அது 4 லும் ,
திக் பலம் உள்ளவர்கள் .
4 . (1) லக்னாதிபதிக்கு 10 ல் புதன் பலன் பெற்றிருந்து ,7 ம் அதிபதிக்கு 3 ல் சந்திரன் இருப்பதால் ஜாதகர் பலரோடு சரீர சம்பந்தப்படுவார் .
(2) 2,12 க்குடையார் 3 லிருந்து குருவினால் பார்க்கப்பட்டோ அல்லது 9 க்குடையரால் பார்க்கபட்டாலோ மேற்கூறிய பலனே .
(3) 3,7,11 க்குடையவர்கள் சேர்ந்திருந்தாலும் ,ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டாலும் ,பலம் பெற்று திரிகோணத்திலிந்தாலும்,மேற்கூறிய பலனே .
(4) பிறந்த கால சுக்கிரனை கோச்சார குரு தொடும் காலக் கட்டம் -வீடு ,வண்டி ,வாகனம் வாங்கும் கால கட்டமாகும் .
(5)அட்டமாதிபதிக்கு 1,5,9 ல் சனி வரும் கால கட்டம் ஜாதகருக்கு கண்டம் அல்லது கண்டத்திற்கு ஒப்பான கால கட்டம் .
(6) 2,4,12 ம் ஆதிகளில் எத்தனை பேர் கோந்திரங்களில் இருக்கிறார்களோ அத்தனை வீடு ஜாதகருக்கு அமையும் .
4. கடன் :
(1) 2 க்குடையவர் திசையில் 6,8,12 க்குடையவர்கள் புத்தியில் கடன்பட வேண்டும் .
(2) 11 க்குடையவர் திசையில் 6,8,12 க்குடையவர் புத்தியில் கடன்பட வேண்டும் .
(3) 6 க்குடையவர் திசையில் 8,12 க்குடையவர் புத்தி ,
(4) 12 க்குரியவர் திசை 6,12 க்குரியவர் புத்தி ,
(5) 12 க்குரியவர் திசை 6,8 க்குரியவர் புத்தி ,
(6) எந்த வீட்டுக்குரிய கிரகமாக இருந்தாலும் , 6,8,12 க்குடைய வீட்டில் இருந்தால் அந்த தசா புத்தி காலங்களில் கடன்பட வேண்டும் .
6.கடன் தீர்வு :
(1) 5,9 க்குடைய புத்திகள் நடைமுறையில் இருந்தால் (இவர்கள் 6,8,12 ல் இருந்தாலும் ) இவர்களே கடனை ஏற்படுத்தினாலும் அவர்கள் புத்திலேயே கடன் பிரச்னைகளுக்குத் தீர்வு ஏற்படும் .
(2) ஆட்சி பெற்ற 2, 11 க்குடையவர்கள் புத்தி நடைமுறையில் கடன் பிரச்சனை தீரும் . 7. 7 ல் சுக்கிரனும் ,செவ்வாயும் இருந்தால் விதவையை மணம் புரிவார் .
8. சுக்கிரன் ,செவ்வாய் ,சனி மூவரும் 7 ல் இருந்து இவர்களில் ஒருவர் ஆட்சி பெற்றிருந்தாலும் வாழ்வில் வழி தவறிய பெண்களுக்கு வாழ்வு கொடுப்பார் .
9. ராகு காலம் நன்மை :
ஒருவர் ஜாதகத்தில் ராகு 3,6,11 ல் இருந்து சுபரால் பார்க்கப்பட்டால் , ஜாதகர் இராகு காலத்தில் எதைச் செய்தாலும் நன்மையாகும் .
10. எமகண்டம் நன்மை :
சனி 3,6,11 ல் இருந்து சுபரால் பார்க்கபட்டால் இவர்கள் செய்யும் காரியம் எமகண்டமாக இருந்தாலும் வெற்றிகரமாக முடியும் .காரணம் சனிக்கு அதிதேவதை எமன் .
11. 7 க்குடையவர் 7 மிடதிற்கு 3,6,10,11 ல் சுக்கிரன் இருந்தால் விவாஹ்த்திற்கு பிறகு பாக்ய விருத்தி உண்டாகும் .
12. சனி ,சூரியனைப் பார்த்தால் (தொடர்பு)ஜாதகர் பரம்பரத் தொழிலைச் செய்வார்.

13. லக்னத்திற்கு 4ம் இடம் சர ராசியாக அமைய அதில் ஒரு கிரகம் நின்றால் அந்த ஜாதகன் அரசனுக்குரிய ஆடம்பர வாழ்க்கை பெற்று யோகவானாக விளங்குவான். பெரியவர்களின் தொடர்பு பெற்று அரசாங்கத்தால் விருது மற்றும் பொருள் பெறுவான். இனிய மனைவி அமைந்து சுக ஜீவனம் செய்வான். 

14    செவ்வாய், சனி, ராகு இவர்கள் ஒரே வீட்டில் கூடி நின்றால் பெண்களால் தன லாபம் உண்டாகும். வீடு கட்டை சுகத்துடன் வாழ்வான். எனினும் தீய தசைகள் நடக்கும் போது இந்த சேர்க்கையினால் சிற்சில துன்பங்களும் உண்டாகும். 

15    பத்தாம் இடத்தில் 3 கிரகங்கள் இருக்கப்பெற்ற ஜாதகன் உலகம் புகழும் சன்னியாசியாக விளங்குவான். இரண்டு கிரகங்கள் இருந்தால் அந்த ஜாதகன் தபசியாகவும் ஞானியாகவும் யோகியாகவும் இருந்து மக்களுக்கு அருள் புரிவான். 

16    4ம் வீட்டிற்கு அதிபதியும் சந்திரனுக்கு நான்கிற்குடையோனும் எந்த ராசியில் கூடி நின்றாலும் மேலும் சுக்கிரன் பலம் பெற அந்த ஜாதகன் தேவி பராசக்தியாகிய துர்கையின் மீது பற்று கொண்டு பூஜை செய்து தேவி அனுக்கிரகம் பெறுவான். கொடியவர்களில் சூழ்ச்சிகள் இவனிடம் பலிக்காமல் இவன் வெற்றி கொள்வான். 

17    ஒரு ராசியில் சுபக்கிரகத்துடன் 4 கோள்கள் நிற்க அதற்கு 4லில் இன்னொருவன் இருக்க அந்த ஜாதகன் தீர்க்க ஆயுளுடன் சுகமாக வாழ்வான். குதிரை, யானை பெற்ற அரசனைப் போல அனேகர் புகழ பொன் பொருள் பெற்று சிறப்பான். 

18   8க்குடையவன் 12க்குடையவன் செவ்வாய் ஆகிய மூவரும் எந்த இடத்தில் கூடி நின்றாலும் அந்த ஜாதகன் அன்னிய தேசம் செல்வான். அதே சமயத்தில் இவர்களை சந்திரன் பார்த்தால் சில காலம் வெளிநாட்டில் அதிக பணம் ஈட்டி பின்னர் சொந்த தேசத்திற்கு வந்து சுகமுடன் வாழ்வான். 

19     சனி, செவ்வாய், ராகு இவர்கள் லக்னத்திற்கு இரண்டாம் இடத்தோனுடன் கூடி நின்றால் அந்த ஜாதகன் சிவ பூஜையில் பிரசித்தி பெற்றவனாவான். மேலும் ஐயனார், காளி, வீரபத்திரன் போன்ற தெய்வங்களை வணங்கி தேவதை அருள் பெற்று வசியம் செய்யும் வித்தையும் அறிந்தவனாவான். 

20    குருவும் சனியும் ராகுவும் சரம் மற்றும் உபய ராசிகளில் நின்றால் அந்த ஜாதகன் சொந்த இருப்பிடத்தை விட்டு தேச சஞ்சாரம் செய்வான். அதே சமயத்தில் லக்னாதிபதி வலுப்பெற்று இருந்தால் சொந்த ஊரிலேயே பலகாலம் வசிப்பான். 

21   சிம்ம ராசியில் அசுர குருவான சுக்கிரனும் செவ்வாயும் கூடியிருந்தால் அந்த ஜாதகன் வித்தைகளில் தேர்ச்சி பெற்று சிற்ப சாஸ்திரத்தில் வல்லமையும் புத்தக ஆராய்ச்சியில் ஈடுபடுபவனாகவும் இருந்து அதிக பொருள் சேர்ப்பான். அன்றியும் அவன் விதவைக்கு வாழ்வளிப்பவனாய் விளங்குவான். 

22   குருவுடன் செவ்வாயும் சுக்கிரனும் சேர அந்த ஜாதகன் நிறைந்த தனங்கள் பெற்று அரசாங்க மரியாதையும் புகழும் அடைவான். செவ்வாயும் புதனும் இணைந்தால் அவன் செல்வச் செழிப்பு மிக்க பண்டிதனாக விளங்குவான். ஆனால் செவ்வாய் புதன் இவர்களுடன் சுக்கிரன் செர்ந்து எங்கு இருந்தாலும் அவனுக்கு அங்க குறைபாடு ஏற்படும். 

23    குரு, சந்திரன், புதன் இவர்கள் சேர்ந்து எங்கு இருந்தாலும் நல்ல அழகும் ஆயுளும் பெற்று செல்வந்தனாகத் திகழ்வான். சுக்கிரன், சந்திரன், புதன் ஆகியோர் சேர துஷ்டனாகவும் காமியாகவும் விளங்குவான். 

24    இரண்டாம் இடத்தில் விரய ஸ்தானதிபதி நின்றால் அந்த ஜாதகன் மாட மாளிகை ஆகிய வீடுகள் கட்டி சிறந்து விளங்குவான். மேலும் லக்னாதிபதியாக குரு, சந்திரன், புதன், சுக்கிரன் இவர்கள் சுபஸ்தானங்களில் நிற்க பொன், பொருள் சேரும். இவர்கள் தசா, புக்தியில் நற்பலன்கள் தருவார்கள். 

25    சூரியனும் சந்திரனும் சேர்ந்து ஓரிடத்தில் நிற்க அவன் தனவானாகவும் மனைவியிடம் அன்பு கொண்டவனாகவும் இருப்பான். சூரியனும் குருவும் சேர அரசாங்க செல்வாக்கு பெற்று ஐஸ்வர்யத்துடன் வாழ்வான். சூரியனும் சுக்கிரனும் சேர நல்ல மனைவி அமையப்பெற்று தாம்பத்தியம் அனுபவிப்பதில் சிறந்து விளங்குவான். சனியுடன் சுக்கிரன் கூடினால் கணவன் பேச்சை கேட்காத மனைவி வாய்ப்பாள். 

26    சந்திரன், செவ்வாய், புதன், சூரியன், குரு ஆகியோர் சேர்ந்து இருந்தால் தீய பலன்களே உண்டாகும். அவன் பிறரையும் கெடுப்பான். மேலும் சூரியன், செவ்வாய், சனி, சுக்கிரன் ஒரே வீட்டில் கூடினாலும் ஜாதகன் வறுமையில் உழன்று பிச்சை எடுத்து உண்ணும் கதிக்கு ஆளாவான். 

27    புதன், குரு இவர்களுடன் சந்திரன், சுக்கிரன் இவர்கள் பலம் பெற்று சேர்ந்து நிற்க அதிக செல்வமும் பூமியும் பொன்னும் பொருளும் பெற்று சுகமுடன் வாழ்வான். மேற்கண்ட கிரகங்களுடன் சனி சேர அங்க குறைவு ஏற்படும். 

28    குரு, சுக்கிரன், சூரியன், புதன் இவர்கள் இணைந்து நின்றவன் அதிக திரவியங்கள் பெற்று சுக போகங்களை அனுபவிப்பான். குரு, சுக்கிரன், சூரியன், செவ்வாய் இவர்கள் சேர அவனும் செல்வாக்கு படைத்த தலைவனாகவும் தீர்க்க தரிசியாகவும் செல்வம் மிகுந்து வாழ்வான். 

29    செவ்வாய்க்கு 4, 7 ஆகிய இடங்களில் சுக்கிரன் நின்றாலோ அல்லது சுக்கிரனுக்கு 5,7,11 ஆகியவற்றில் செவ்வாய் நின்றாலோ அந்த ஜாதகன் பூமியில் சிறந்து விளங்குவான். மேலும் லக்னாதிபதி கேந்திர, கோணத்தில் இருக்க வாகன சேர்க்கையும் சொந்தத் தொழில் மூலம் அனைத்து பாக்கியங்கள் அடைதலும் உண்டாகும். விளை நிலங்களும் சேரும். இதனை இவர்களின் தசா, புக்தி காலங்களில் கொடுப்பார்கள். 

30    குரு, சனி, செவ்வாய், புதன் சேர்ந்து நிற்க சந்திரன், சுக்கிரன் இவர்கள் இணையப்பெற்ற ஜாதகன் புவியியல் சாஸ்திரங்கள் அறிந்தவனாக விளங்குவான்.

31    சந்திரன், சுக்கிரன் ஒன்றுசேர குரு, புதன், செவ்வாய் ஒரிடத்தில் நிற்க அந்த ஜாதகன் பாக்கியசாலி ஆவான். அனேக திரவியமும் செல்வாக்கும் அடைவான். பலரை ஆதரித்து எல்லோராலும் புகழப்படுவான். 

32    குரு, புதன், சனி, செவ்வாய், சந்திரன் ஆகியோர் ஒரே இடத்தில் நிற்கப் பிறந்தவன் துன்பங்களை அனுபவித்து கஷ்ட ஜீவனம் செய்வான்.



Friday, 7 July 2017

மாந்தி கிரகத்தால் ஏற்படும் தீய பலன்கள் மாற

மாந்தி கிரகம் நவகிரகத்திற்கு அடுத்த ஒன்று நாம் இதனைப் பெரிதாக நினைப்பதில்லை சிற்றெறும்பு நறுக்கென கடுப்பது போல மாந்தி கிரகமும் சில நேரங்களில் தீய பலனைக் கொடுத்துவிடும் பிறந்த ஜாதகத்தில் மாந்திகிரகம் சந்திரனுடன் கூடி4,10 ஆம் இடங்களில் அமர்ந்தால் தாய்க்கு பீடைதரும் சூரியனுடன் கூடி 3,9, ஆகிய இடங்களில் அமர்ந்தால் தந்தைக்குப் பீடை தரும்
ஒருவருடைய லக்னத்தில் மாந்திகிரகம் இருந்து அதனோடு சனி ராகு அல்து கேது கூடியிருந்து லக்னாதிபதி 8 ஆம் இடத்திலோ 12ஆம் இடத்திலோ அமர்ந்தால் அந்த ஜாதகர் தீராத நோயாளியாக இருப்பார் இப்படிப்பட்ட ஜாதகம் அமையப் பெற்றவர்களின் தாய் தந்தை நோய் ஆபத்தின்றி வாழவும் ஜாதகரின் தீராத நோய் தீரவும் பரிகாரம் செய்து கொண்டால் மாந்தி கிரகத்தின் தாக்கம் குறையும் அதேபோல ஒருவரது ஜாதகத்தில் மாந்தி கிரகம் லக்னம் அல்லது சந்திரன் நின்ற ராசிக்கு 11ல் யோக பலன்களைத் தரும் சூரியன் சந்திரன் புதன்,குரு சுக்கிரன் சனி ஆகிய கிரகங்களில் எந்த கிரகத்தோடாவது கூடிநின்றால் அந்த ஆறு தசா புக்திகளிலும் இரண்டு மடங்கு யோகப் பலன்களைத் தரும் எனவே மாந்தி கிரகத்துகுரிய பரிகாரத்தை செய்து கொண்டால் மாந்தியினால் வரும் தீய பலனையும் விலக்கிக் கொள்ளலாம் மாந்தி கிரகத்தினால் வரவுள்ள யோகப்பலனையும் அடைந்து விடலாம்
எல்லா ஜாதகர்களுக்குமே மாந்தி கிரகம் வரும் எனவே ஜாதகர்கள் அனைவரும் கீழ்க்கண்ட எளிய பரிகாரத்தை செய்து நன்மை அடையலாம்
பரிகாரம்-1
மாந்தி கிரக தோஷத்தை விலக்கும் சக்திபடைத்தவர் சிவபெருமான் ஒருவரே அதேபோல மாந்தி கிரகத்தால் வரும் யோகப் பலனையும் இரட்டிப்பாகத் தருபவரும் சிவபெருமான்தான் சிவபெருமானின் நட்சத்திரம் உத்திரம் உத்திர நட்சத்திரம் வரும் நாளன்று அதிகாலையில் கோவிலுக்கு சென்று சிவனுக்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டும் இதேபோல் ஒன்பது மாதங்களில் வரும் உத்திர நட்சத்திரத்தன்றும் சிவபெருமானுக்கு பாலபிஷேகம் செய்ய வேண்டும் இவ்வாறு தொடர்ந்து ஒன்பது உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு பாலாபிஷேகம் செய்பவர்களுக்கு மாந்தியால் வரும்தோஷம் விலகும் யோகப் பலனும் இரட்டிப்பாக்க் கிடைக்கும்
பரிகாரம்-2
ஆலயம் சென்று உத்திர நட்சத்திரத்தில் சிவனுக்கு பாலாபிஷேகம் செய்யமுடியாதவர்கள் அவர்கள் வீட்டில் இருந்தபடியே ஒன்பதுபேருக்கு வெளிஆட்களுக்கு காலை உணவு வழங்கிவர வேண்டும் இதேபோல தொடர்ந்து ஒன்பது உத்திர நட்சத்திரத்திற்கும் ஒன்பது பேருக்கும் காலைஉணவு வழங்கி மாந்தி பரிகாரம் செய்து கொள்ளலாம் தோஷம் விலகும் யோகப் பலனும் இரட்டிப்பாகக் கூடும்.

சனிப்பெயர்ச்சி என்றால் என்ன

ஒரு கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்தலை பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள ராசி அட்டவணைப்படி பெயர்ச்சி நிகழ்ந்து வருகிறது. எல்லா கிரகங்களுக்கும் பெயர்ச்சி உள்ளது என்ற போதிலும், சனிப்பெயர்ச்சி மற்றும் குருப்பெயர்ச்சி முக்கியமானதாக கருதப்படுகிறது. சனிக்கிரகம் சூரியனை சுற்றி வர 30 ஆண்டுகள் ஆகும். மொத்தம் 12 ராசிகள் உள்ளதால், ஒவ்வொரு ராசியில் இருந்து இடம் பெயர இரண்டரை ஆண்டுகள் ஆகும். இதைத் தான் சனிப்பெயர்ச்சி என்கிறோம். 


மீனம்
 12
 மேஷம்
 1
ரிஷபம்
 2
மிதுனம்
 3
கும்பம்
 11

ராசிக்கட்டம்
கடகம்
 4
மகரம்
 10
சிம்மம்
 5
தனுசு
 9
விருச்சிகம்
 8
துலாம்
 7
கன்னி
 6

சனி சஞ்சாரம்

ஏழரைச் சனி என்பது ஒரு ராசியிலும் அதற்கு முந்தைய ராசியிலும், பிந்தைய ராசியிலும், சனி சஞ்சரிக்கும் காலம் ஆகும். அதாவது, முந்தைய ராசியில் 2.5 வருடம், அந்த ராசியில் 2.5 வருடம், பிந்தைய ராசியில் 2.5 வருடம், ஆக மொத்தம் 7.5 வருட காலத்தை ஏழரைச் சனி என அழைக்கிறார்கள். ஒவ்வொருவருடைய 30 ஆண்டு கால வாழ்க்கையிலும் 7.5 சனி ஆதிக்கம் இருந்து கொண்டே இருக்கும்.
12, 1, 2 ஆகிய ஸ்தானங்களில் சஞ்சாரம் செய்கின்ற காலம் ஏழரை சனி ஆகும்.
அஷ்டம ஸ்தானமான 8ல் சஞ்சரிக்கும்போது அஷ்டம சனியாகும்.
4ல் சஞ்சரிப்பதை அர்த்தாஷ்டம சனி என்றும் 7ல் சஞ்சரிப்பதை கண்ட சனி என்றும் கூறுவார்கள்.
2ம் வீட்டில் இருந்தால் குடும்பத்தில் பிரச்சினை, வீண் வாக்குவாதம், சொத்து நாசம், பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும்.
3ல் இருந்தால் எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி தைரியம் துணிவு தாராள பண வரவு உண்டாகும்.
4ல் இருந்தால் கல்வியில் இடையூறு, தாய்க்கு தோஷம், அசையா சொத்து அமைய இடையூறுகள், சுக வாழ்வு பாதிப்பு உண்டாகும்.
5ல் இருந்தால் புத்திர தோஷம் பூர்வீக தோஷம் தத்து புத்திர யோகம் உறவினர்களிடம் கருத்து வேறுபாடு உண்டாகும்.
6ல் இருந்தால் எதிரிகளை பந்தாடும் பலம் வலிமையான வாழ்க்கை வாழும் அமைப்பு எதிர்பாராத பண வரவுகள், தைரியம், துணிவுடன் வாழும் அமைப்பு உண்டாகும்.
7ல் சனி இருந்தால் திருமணம் தாமதம், அமையும் வரன், வயதான தோற்றம், நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடு கூட்டாளிகளால் நஷ்டம் உண்டாகும்.
8ல் இருந்தால் நீண்ட ஆயுள் உண்டாகும் என்றாலும் பொருளாதார கஷ்டம், ஏழை குடும்பத்தில் திருமணம் எதிரிகளால் கண்டம் கண்களில் பாதிப்பு உண்டாகும்.
9ல் இருந்தால் பொதுப்பணியில் ஈடுபடும் அமைப்பு, தந்தை மற்றும் பூர்வீக வழியில் அனுகூலமற்ற அமைப்பு, பூர்வீக சொத்து இழப்பு உண்டாகும்.
10ல் சனி இருந்தால் எதிர் நீச்சல் போட்டு முன்னேறும் அமைப்பு, அடிமைத் தொழில், பொதுப் பணியில் ஈடுபடும் அமைப்பு, மற்றவர்களை வழி நடத்தும் வலிமை உண்டாகும். 10ல் சனி இருந்தால் பதவிகளில் திடீர் இழப்பு உண்டாகும். கோட்சாரத்தில் 10ல் சனி வந்தால் கூட ஜீவனத்தில் பிரச்சனைகள் உண்டாகும்.
11ல் இருந்தால் நோயற்ற வாழ்வு எதிர்பாராத லாபங்கள், அசையா சொத்து சேர்க்கை, தன சேர்க்கை உண்டாகும். மூத்த சகோதர தோஷம் உண்டு.
12ல் சனி அமையப் பெற்றால் கண்களில் பாதிப்பு, எதிரிகளால் தொல்லை, வீண் விரயங்கள், கட்டில் சுக வாழ்வு பாதிப்பு ஏற்படும்.

சனி வகைகள்

ஏழரைச் சனி:பொதுவாக ஒருவரது வாழ்நாளில் நான்கு முறை ஏழரைச் சனி வரும். ஒரு மனிதனுடைய வாழ்நாள் 120 ஆண்டுகள் என கணக்கிடப்பட்டுள்ளது. ஜென்ம சனியின் காலத்தில் பிறந்தவர்கள், 60 வயதில் மூன்றாவது சுற்றை கடந்து விடுவார்கள். இதில் சிலர் மரணத்தையும், சிலர் நீண்ட ஆயுளையும் பெறுவார்கள்
மங்கு சனி:இளம் பருவத்தில் நிகழும் முதன் சுற்று சனிக்கு மங்கு சனி என்று பெயர். இதில் அவ்வளவு பாதிப்பு இருக்காது.
பொங்கு சனி:வாலிப பருவத்தின் மத்தியில் ஏற்படும் சுற்று பொங்கு சனியாகும். இதில் சனியின் பாதிப்பு அவ்வளவு கடுமையாக இருக்காது. ஒரு சிலருக்கு சனி விடுபடும் காலத்தில் மங்காத செல்வத்தையும், மகிழ்ச்சியையும் அள்ளி கொடுத்துவிட்டு செல்லும்
தங்கு சனி:பொதுவாக 60 வயதை கடந்தவர்கள் தங்கு சனியை சந்திப்பார்கள். இந்த தங்கு சனி தகுந்த செல்வம், உற்றார், உறவினர், பேரன், பேத்திகள், நண்பர்களுடன் மகிழ்ந்திருக்க வேண்டிய காலம். ஆயுள்காரகனின் அருள் இருந்தால் ஆனந்தமாக தங்கு சனியை கடந்து விடலாம்.
மரணச் சனி:நான்காவது சுற்றான இறுதி சனி, ஒருவரது 90வது வயதிற்கு மேல் ஏற்படும். இந்த மரணச்சனியுடன் பூலோக வாழ்க்கை முடிந்து இறைவனை அடைவார்கள்

சனிபகவான் குறித்த சில தகவல்கள்

  • புதுச்சேரி மாநிலத்தில் காரைக்காலிலிருந்து ஐந்து கி. மீ. தொலைவிலுள்ள திருநள்ளாறு திருத்தலத்தில் சனி கிரகத்தின் கதிர்வீச்சு அதிகமாக இருப்பதாக கூறப்படுகின்றது. இதனாலேயே சனிப் பெயர்ச்சியின் சமயம் இவ்வாலயம் சென்று ஒரு நாளாவது தங்க வேண்டும் என்று ஜோதிட நூல்கள் உரைக்கின்றன. சனிப் பெயர்ச்சி சமயம் செல்ல முடியாதோர், அதற்கு பதினைந்து நாள் முன்போ, பின்போ சென்று தரிசித்தால் கடுமையான சோதனையும் கடுகாக மாறிவிடும் என்பது ஜோதிடர்கள் கூற்று. இங்குள்ள சனி பகவான் கிழக்கு திசை நோக்கி, அனுக்கிரக மூர்த்தியாக அபய வரத முத்திரையுடன், அருளாட்சி செய்கிறார்.
  • மதுரை மாவட்டம், தேனியிலிருந்து இருபது கி.மீ. தூரத்தில் உள்ள குச்சனூரில் சனீசுவரர் கல்தூண் போன்ற உருவத்தில் பூமி வெடித்து சுயம்புவாக எழுந்தருளியுள்ளார்.நாமக்கல் அருகிலுள்ள தத்தகிரி முருகன் ஆலயத்தில் அமர்ந்த நிலையில் எட்டடி உயரமான சனீஸ்வரர் மேற்கு நோக்கி ஆலயம் கொண்டுள்ளார். எதிரில் பஞ்சமுக ஆஞ்சநேயர் சன்னிதி உள்ளது. ஆஞ்சநேயரை வழிபட சனியின் துன்பங்கள் குறையும்.
  • சென்னை மேற்கு மாம்பலம் வெங்கடாசலம் தெருவில் 'வட திருநள்ளாறு' என்ற பெயரில் மனைவியுடன் அற்புதக் காட்சி தரும் சனீஸ்வரருடன், பஞ்சமுக ஆஞ்சநேயரும், விநாயகப் பெருமானும் இணைந்து அருளாட்சி செய்கின்றனர்.
  • மும்பையில் சனீஸ்வரனுக்கு சிறிய தனிக் கோயில்கள் நிறைய உண்டு. நாசிக் அருகிலுள்ள சனி சிங்கணாப்பூரில் சனி பகவான் நான்கடிக்கு மேற்பட்ட உயரத்தில் பாறை வடிவில் சுயம்புவாகக் காட்சி தருகிறார். இந்த சனி பகவானை ஆண்கள் மட்டுமே சுத்தமாகக் குளித்து ஆலயத்திலேயே கிடைக்கும் ஆடை அணிந்து பூசிக்கலாம். பெண்கள் விலகி நின்றே தரிசிக்கலாம். மேற்கூரையும் கிடையாது. சனி பகவான் அனுக்கிரகத்தினால் இவ்வூரிலுள்ள வீடுகள், கடைகள், குளியலறைகளுக்குக் கூட கதவு கிடையாது. இங்கு திருட்டே நடக்காதாம். அவ்வூரில் திருடிக் கொண்டு எவரும் அவ்வூரை விட்டு வெளியேற முடியாதது இன்று வரை நடக்கும் அதிசயமாம்
  • சனிக்கு உகந்த தானியம் எள்ளானதால் எள் சாதம், நல்லெண்ணெய் தீபம் ஏற்றது. சனிக்கு உகந்தவர் ஆஞ்சநேயர், விநாயகர், திருப்பதி பெருமாள்.
  • ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சார்த்தி, உளுந்து வடை மாலை சாற்றி, உள்ளன்போடு துதிக்க சனியின் துன்பங்கள் குறையும். புரட்டாசி சனி விரதம் இருப்போர் எள்ளு சாத நிவேதனம் செய்து, விநியோகம் செய்ய வேண்டும். "உன் பக்தர்களை அண்டமாட்டேன்" என்று சனி பகவான் பெருமாளிடம் வாக்குக் கொடுத்துள்ளதாக புராண வரலாறு!
  • சனிக்கிழமை வரும் பிரதோஷம் மிக்க மகிமை வாய்ந்தது. சிவபெருமான் பாற்கடலில் பொங்கிய விஷத்தைப் பருகிய நாள் சனியாதலால், அன்று விரதம் இருந்து பிரதோஷ நேரத்தில் சிவாலயம் சென்று வழிபட்டு, சனி பகவானுக்கு நல்லெண்ணெய் விளக்கேற்றி, எள் நைவேத்யம் செய்து வழி பட்டால் சனியின் அருள் பெறலாம்.
  • சனி பகவானின் வாகனம் காக்கை. அது இறந்து போன முன்னோரின் பிரதி நிதியாகக் கருதப்படுவதால், தினமும் காக்கைக்கு அன்னமிடுவதால் சனியின் பாதிப்பு குறையும். இந்து மதம் தவிர புத்த, ஜைன மதங்களிலும் சனி வழிபாடு உள்ளது. புத்த மதத்தில் சனி தண்டம் ஏந்தியவராய், ஆமை வாகனம் கொண்டவராகவும், ஒன்பது கிரகங்களில் ஏழாம் இடத்தை உடையவராயும் வணங்கப்படுகிறார்.

சனி பகவான் கிரகஸ்துதி

நீலாஞ்சன ஸமா பாஸம்
ரவி புத்ரம், யமா க்ரஜம்
ச்சாய மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நமாமி ஸனைச்சரம்

சனி காயத்ரி

காகத் வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி| தந்நோ மந்த: ப்ரசொதயாத்||