மாந்தி கிரகம் நவகிரகத்திற்கு அடுத்த ஒன்று நாம் இதனைப் பெரிதாக நினைப்பதில்லை சிற்றெறும்பு நறுக்கென கடுப்பது போல மாந்தி கிரகமும் சில நேரங்களில் தீய பலனைக் கொடுத்துவிடும் பிறந்த ஜாதகத்தில் மாந்திகிரகம் சந்திரனுடன் கூடி4,10 ஆம் இடங்களில் அமர்ந்தால் தாய்க்கு பீடைதரும் சூரியனுடன் கூடி 3,9, ஆகிய இடங்களில் அமர்ந்தால் தந்தைக்குப் பீடை தரும்
ஒருவருடைய லக்னத்தில் மாந்திகிரகம் இருந்து அதனோடு சனி ராகு அல்து கேது கூடியிருந்து லக்னாதிபதி 8 ஆம் இடத்திலோ 12ஆம் இடத்திலோ அமர்ந்தால் அந்த ஜாதகர் தீராத நோயாளியாக இருப்பார் இப்படிப்பட்ட ஜாதகம் அமையப் பெற்றவர்களின் தாய் தந்தை நோய் ஆபத்தின்றி வாழவும் ஜாதகரின் தீராத நோய் தீரவும் பரிகாரம் செய்து கொண்டால் மாந்தி கிரகத்தின் தாக்கம் குறையும் அதேபோல ஒருவரது ஜாதகத்தில் மாந்தி கிரகம் லக்னம் அல்லது சந்திரன் நின்ற ராசிக்கு 11ல் யோக பலன்களைத் தரும் சூரியன் சந்திரன் புதன்,குரு சுக்கிரன் சனி ஆகிய கிரகங்களில் எந்த கிரகத்தோடாவது கூடிநின்றால் அந்த ஆறு தசா புக்திகளிலும் இரண்டு மடங்கு யோகப் பலன்களைத் தரும் எனவே மாந்தி கிரகத்துகுரிய பரிகாரத்தை செய்து கொண்டால் மாந்தியினால் வரும் தீய பலனையும் விலக்கிக் கொள்ளலாம் மாந்தி கிரகத்தினால் வரவுள்ள யோகப்பலனையும் அடைந்து விடலாம்
எல்லா ஜாதகர்களுக்குமே மாந்தி கிரகம் வரும் எனவே ஜாதகர்கள் அனைவரும் கீழ்க்கண்ட எளிய பரிகாரத்தை செய்து நன்மை அடையலாம்
பரிகாரம்-1
மாந்தி கிரக தோஷத்தை விலக்கும் சக்திபடைத்தவர் சிவபெருமான் ஒருவரே அதேபோல மாந்தி கிரகத்தால் வரும் யோகப் பலனையும் இரட்டிப்பாகத் தருபவரும் சிவபெருமான்தான் சிவபெருமானின் நட்சத்திரம் உத்திரம் உத்திர நட்சத்திரம் வரும் நாளன்று அதிகாலையில் கோவிலுக்கு சென்று சிவனுக்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டும் இதேபோல் ஒன்பது மாதங்களில் வரும் உத்திர நட்சத்திரத்தன்றும் சிவபெருமானுக்கு பாலபிஷேகம் செய்ய வேண்டும் இவ்வாறு தொடர்ந்து ஒன்பது உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு பாலாபிஷேகம் செய்பவர்களுக்கு மாந்தியால் வரும்தோஷம் விலகும் யோகப் பலனும் இரட்டிப்பாக்க் கிடைக்கும்
பரிகாரம்-2
ஆலயம் சென்று உத்திர நட்சத்திரத்தில் சிவனுக்கு பாலாபிஷேகம் செய்யமுடியாதவர்கள் அவர்கள் வீட்டில் இருந்தபடியே ஒன்பதுபேருக்கு வெளிஆட்களுக்கு காலை உணவு வழங்கிவர வேண்டும் இதேபோல தொடர்ந்து ஒன்பது உத்திர நட்சத்திரத்திற்கும் ஒன்பது பேருக்கும் காலைஉணவு வழங்கி மாந்தி பரிகாரம் செய்து கொள்ளலாம் தோஷம் விலகும் யோகப் பலனும் இரட்டிப்பாகக் கூடும்.
No comments:
Post a Comment