Saturday, 8 November 2014

சிவ புராணம்

நம சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழியாண்ட குருமணி தன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க!
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க!
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க!
புறத்தார்க்கு சேயோந்தன் பூங்கழல்கள் வெல்க!
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!
ஈசன் அடி போற்றி ! எந்தை அடி போற்றி!
தேசன் அடி போற்றி ! சிவன் சேவடி போற்றி!
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!
மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி!
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!
சிவன் அவனென் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன்தாள் வணங்கி
சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான் !
கண்ணுதலான் தன்கருணை கண் காட்ட வந்தெய்தி
என்னுதற்கெட்டா எழிலார் கழல் இறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும் சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்
புல்லாகி பூடாகி புழுவாய் மரமாகி
பல் விருகமாகி பறவையாய் பாம்பாகி
கல்லா மனிதராய் பேயாய் கனங்களாய்
வல்லசுரராகி முனிவராய் தேவராய்
செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே
வெய்யாய் தனியாய் இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞானமாகி மிளிர்கின்ற மெய் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்ப பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே
ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னை புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்ற மனங்கழிய நின்ற மறையோனே
கரந்த பால் கன்னலொடு நெய் கலந்தாற் போல
சிறந்தடியார் சிந்தனையுள் தேன் ஊறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓரைந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை
அறம் பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்தெங்கும் புழு அழுக்கு மூடி
மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்க புலன் ஐந்தும் வஞ்சனையை செய்ய
விலங்கு மனத்தால் விமலா உனக்கு
கலந்து அன்பாகி கசிந்துள் உருகும்
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன்மேல் வந்தருளி நீள் கழல்கள் காட்டி
நாயிற் கடையாய் கிடந்த அடியேற்கு
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதியே மலர்ந்த மலர் சுடரே
தேசனே தேனார் அமுதே சிவபுரானே
பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ஆரியனே
நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்
பேராது நின்ற பெரும் கருணை பேராறே
ஆராஅமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில்
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனையுள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக் குடம்பின் உட்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.

திருச்சிற்றம்பலம்

ஹோரை அட்டவணை :




நேரம்ஞாயிறுதிங்கள்செவ்வாய்புதன்வியாழன்வெள்ளிசனி
6-7 பகல் சூரியன் சந்திரன்செவ்வாய்புதன்குருசுக்கிரன்சனி
7-8சுக்கிரன்சனிசூரியன்சந்திரன்செவ்வாய்புதன்குரு
8-9புதன்குருசுக்கிரன்சனிசூரியன்சந்திரன்செவ்வாய்
9-10சந்திரன்செவ்வாய்புதன்குருசுக்கிரன்சனிசூரியன்
10-11சனிசூரியன்சந்திரன்செவ்வாய்புதன்குருசுக்கிரன்
11-12குருசுக்கிரன்சனிசூரியன்சந்திரன்செவ்வாய்புதன்
12-1செவ்வாய்புதன்குருசுக்கிரன்சனிசூரியன்சந்திரன்
1-2சூரியன்சந்திரன்செவ்வாய்புதன்குருசுக்கிரன்சனி
2-3சுக்கிரன்சனிசூரியன்சந்திரன்செவ்வாய்புதன்குரு
3-4புதன்குருசுக்கிரன்சனிசூரியன்சந்திரன்செவ்வாய்
4-5சந்திரன்செவ்வாய்புதன்குருசுக்கிரன்சனிசூரியன்
5-6சனிசூரியன்சந்திரன்செவ்வாய்புதன்குருசுக்கிரன்
6-7 இரவுகுரு சுக்கிரன்சனிசூரியன்சந்திரன்செவ்வாய்புதன்
7-8செவ்வாய்புதன்குருசுக்கிரன்சனிசூரியன்சந்திரன்
8-9சூரியன்சந்திரன்செவ்வாய்புதன்குருசுக்கிரன்சனி
9-10சுக்கிரன்சனிசூரியன்சந்திரன்செவ்வாய்புதன்குரு
10-11புதன்குருசுக்கிரன்சனிசூரியன்சந்திரன்செவ்வாய்
11-12சந்திரன்செவ்வாய்புதன்குருசுக்கிரன்சனிசூரியன்
12-1சனிசூரியன்சந்திரன்செவ்வாய்புதன்குருசுக்கிரன்
1-2குருசுக்கிரன்சனிசூரியன்சந்திரன்செவ்வாய்புதன்
2-3செவ்வாய்புதன்குருசுக்கிரன்சனிசூரியன்சந்திரன்
3-4சூரியன்சந்திரன்செவ்வாய்புதன்குருசுக்கிரன்சனி
4-5சுக்கிரன்சனிசூரியன்சந்திரன்செவ்வாய்புதன்குரு
5-6புதன்குருசுக்கிரன்சனிசூரியன்சந்திரன்செவ்வாய்
  

ஞாயிற்றுக் கிழமை சுக்கிர ஓரை தோல்வியை தரும்.
திங்கள் கிழமை சுக்கிரன், புதன் ஓரைகள் சரியாக செயல்படாது.
செவ்வாய் கிழமை புதன் ஓரை தோல்வி தரும்.

புதன் கிழமை குரு, சந்திர ஓரைகள் சரியாக செயல்படாது.
வியாழக் கிழமை சுக்கிர, புதன் ஓரைகள் சரியாக செயல்படாது.
வெள்ளி கிழமை குரு, சந்திர ஓரைகள் தோல்வி தரும்.
சனிக்கிழமை சந்திர ஓரை தவறை செய்யும்!


இந்த ஒரைகளில் சந்திரன்புதன்குருசுக்கிர ஓரைகள் சுபமானவை. நல்லது செய்ய உகந்தவை. சூரியன்,செவ்வாய்சனி ஓரைகள் நல்லவை அல்ல.

சூரிய ஓரை : இந்த நேரத்தில் புதிதாக எந்த அலுவல்களையோ உடன் பாடுகளையோ செய்வது நல்லதல்ல,சுபகாரியங்கள் செய்யயவும் இந்த ஓரை ஏற்றதல்ல. இந்த ஓரை நடக்கும் நேரத்தில் பொருள் ஏதேனும் காணாமல் போனால் கிடைப்பது அரிது. அப்படிக் கிடைக்குமானால் மிகவும் தாமதித்து அப்பொருளின் நினைவு மறைந்தபின் கிழக்கு திசையில் கிடைக்கலாம்.இந்த நேரத்தில் பெரியவர்களை சந்திக்க உயில் சாசனம் எழுத, நல்லது.

சந்திர ஓரை  : இந்த ஓரை காலத்தில் எல்லா சுபகாரியங்களையும் செய்யலாம். குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட காரியங்களையும் மிகவும் ஏற்றது. வியாபார விஷயமாகவோ அல்லது புனித யாத்திரையாகவோ பயணம் செய்ய ஏற்றது.பிறரைச் சந்தித்துப் பேசவும் செய்யலாம். இந்த ஓரையில் எந்தப்பொருள் காணாமல் போனாலும் கிடைக்காது.

செவ்வாய் ஓரை : எந்தவித நல்ல காரியங்களும் செய்ய உகந்த நேரமல்ல. இருப்பினும் தெய்வீகத் தொடர்பான விஷய்ங்களையோசண்டை சச்சரவுக்கான் விஷயங்களையோ பற்றிய் பேசலாம். இருப்பினும் இந்த ஓரையை தவிர்ப்பது நல்லது. இந்த ஓரை நேரத்தில் பொருள்கள் காணாமல் போனால் உடனே முயன்றால் தெற்கு திசையில் கிடைத்துவிடும். தாமதித்தால் கிடைக்காது.

புதன் ஓரை : கல்வி மற்றும் எழுத்துத் தொடர்பான வேலை தொடங்குவதற்கும் ஆலோசிப்பதற்கும் ஏற்ற நேரம். சுப காரியங்கள் செய்யலாம். நேர்மையான விஷயங்களைப் பற்றிப் பேசவும் முடிவெடுக்கவும் இந்த நேர உகந்தது. பயணங்கள் மேற்கொள்ளவும் செய்யலாம். இந்த ஓரையில் காணாமல் போகும் விரைவில் அதிக சிரமமின்றி கிடைத்து விடும்.

குரு ஓரை : எல்லாவகை சுப காரியங்களுக்கு மிகவும் ஏற்ற நேரம்வியாபாரம்விவசாயம் செய்ய நல்லது. ஆடை ஆபரணப் பொருள்கள் வாங்கவும்வீடு மனை வாங்கவோ,விற்கவோ ஏற்றது.எதுவும் சட்டத்திற்கும் நியாயத்திற்கும் புறம்பான காரியமாக இருக்கக்கூடாது. கப்பற்பயணம் செய்வதற்கு இந்த ஓரை சிலாக்கிய் மானது அல்ல. இந்த நேரத்தில் காணாமல் போனபொருள்களைப் பற்றி வெளியில் சொன்னலே போதும் உடனே கிடைத்துவிடும்.

சுக்கிர ஓரை : சகல சுப காரியங்களுக்கு வீடுநிலம்வண்டி வாகனம்ஆடை ஆபரணம் வாங்கவும் மிகவும் ஏற்றது. குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட சகல காரியங்களிலும்  நன்மை ஏற்படும். விவசாய்த்திற்கும்,பயணங்கள் செய்யும் நல்லது. இந்த ஓரையில் காணாமல் போன பொருள் மேற்கு திசையில் சில நாள்களில் கிடைக்கும்.

சனி ஓரை : எந்தவித சுபகாரிய்ங்களும் செய்யக்கூடாது. புதிதாக எந்த வேலையும் செய்யக்கூடாது. இருப்பினும் நிலபுலங்கள் பற்றி பேசவோ சட்டபூர்வமான விஷயங்களைப்பற்றி முடிவெடுக்கவோ நல்லது.இந்த ஓரையில் காணாமல் போன பொருள் கிடைக்காது.ஒருவேளை இரண்டு மூன்று வருடம் கழித்து எதிர்பாராத விதமாகக் கிடைக்கலாம்.

"பட்சி தெரிந்தவனை பகைக்காதே என்பது பொதுமொழி"
பட்சியின் மூல மந்திரமும்,மூலிகைகளும் கிடைக்கும்

ஏழு கிரகங்களுக்கு மட்டுமே ஓரை உண்டு. ராகுகேது சாயா கிரகங்கள் என்பதாலும்அவற்றிற்கு சுற்றுப்பாதை இல்லாத காரணத்தாலும் அவற்றிற்கு ஓரை கிடையாது.

பூமத்திய ரேகைதீர்க்க ரேகை ஆகியவற்றை நமது முன்னோர்கள் எப்படி உருவாக்கி னார்களோ அதேபோல்தான் ஓரைகளும் உருவாக்கப்பட்டன. சூரியனின் சுற்றுப்பாதைசூரியனுக்கு அருகில் இருக்கக் கூடிய கிரகங்கள்தொலைவில் இருக்கக் கூடிய கிரகங்கள்அதனுடைய ஈர்ப்பு சக்திஅதன் ஒளிக்கற்றைகள் பூமியை அடைவதற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கான கால நேரம் இதை எல்லாம் அடிப்படையாக வைத்துதான் நமது முன்னோர்கள் ஓரைகளை கணக்கிட்டுள்ளனர்.

சூரியன் மற்றும் அதன் அருகே அல்லது தொலைவில் உள்ள கிரகங்களின் அமைப்பைக் கொண்டு வானவியல் அறிஞர்கள் ஓரைகளை உருவாக்கினர். இதன்படி வாரத்தின் முதல் நாளான ஞாயிறன்று முதல் ஓரையை சூரியனுக்கு அளித்தனர்.

சூரியனுக்கு அருகிலேயே சுக்கிரன்புதன் ஆகிய கிரகங்கள் உள்ளன. இவற்றில் சூரியனுக்கு மிக அருகில் புதன் இருப்பதாலும்அது காற்று (வாயு) கிரகம் என்பதாலும் (ஓரை வரிசையில்) அதற்கு 2வது இடம் வழங்கினர். இதையடுத்து 3வது இடம் சுக்கிரனுக்கு, 4வது இடம் சந்திரனுக்கும், 5வது இடம் சனிக்கும், 6வது இடம் குருவுக்கும், 7வது இடம் செவ்வாய்க்கும் வழங்கினர். இதற்கு சுற்றுப்பாதைகிரகங்களின் கதிர் வீச்சுதான் காரணம்.

இவற்றில் சுக்கிரன் ஓரைபுதன் ஓரைகுரு ஓரை ஆகிய மூன்றும் நல்ல ஓரைகள் எனப்படுகிறது. வளர்பிறை காலத்தில் சந்திரன் ஓரையும் நல்ல ஓரையாகவே கருதப்படுகிறது.

இந்த ஓரைகளில் திருமணம்சீமந்தம்குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துதல்பெண் பார்ப்பது,பதவியேற்பதுவேலைக்கு விண்ணப்பிப்பதுவங்கி கணக்கு துவங்குதல் ஆகியற்றைச் செய்யலாம். இதில் சனி ஓரை ஒரு சில விடயங்களுக்கு நன்றான பலனைத் தரும். கடனை அடைப்பதற்கு ஏற்ற ஓரையாக சனி ஓரை கருதப்படுகிறது.

உதாரணமாக சனி ஓரையில் ஒருவர் தனது கடனை அடைத்தால்அவர் மீண்டும் கடன் வாங்குவதற்கான சூழல் ஏற்படாது என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

இதேபோல் பழைய பாக்கி/கணக்குகளை தீர்ப்பதுஊழ்வினை (பூர்வ ஜென்மப் பாவம்) தீர்ப்பதுநடைபயணம் துவங்குவதுமரக்கன்று நடுதல்விருட்சங்கள் அமைத்தல்அணைக்கட்டு நிர்மாணிக்கும் பணிகளை துவக்குவது போன்றவற்றிற்கு சனி ஓரை சிறப்பானது.

சூரியன் ஓரையில் அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள்வழக்கு தொடர்பான விடயங்கள் மேற்கொள்ள சிறப்பானதாக இருக்கும்.

செவ்வாய் ஓரைநிலம் வாங்குவதுவிற்பதுஅக்ரிமென்ட் போடுவதுசகோதர / பங்காளி பிரச்சனைகள்,சொத்து பிரித்தல்உயில் எழுதுவதுரத்த தானம்உறுப்பு தானம்மருத்துவ உதவிகள் செய்வது இவற்றையெல்லாம் மேற்கொள்ளலாம். இந்த ஓரையில் ஆயுதப் பிரயோகத்தை துவங்கினால் சக்தி வாய்ந்ததாக இருக்கும். (Starting a war) வளைகுடா போர் கூட செவ்வாய் ஓரையில்தான் துவங்கப்பட்டது. செவ்வாய் அழிவுக்கு உரிய கிரகம் என்பதாலும்அதிகாரத்தை பிரயோகம் செய்து ஒன்றை கட்டுக்குள் கொண்டு வரக் கூடியது செவ்வாய் என்பதாலும்வளைகுடாப் போர் நீண்ட காலம் நீடித்தது. இதன் காரணமாக பெரிய அழிவு ஏற்பட்டதற்கும் செவ்வாய்தான் காரணம்.

மனித வாழ்வில் ஓரைகளின் பங்களிப்பு முக்கியமானது. நம்மை அறியாமலேயே ஓரைகளின் கதிர்வீச்சை உணர முடியும். அதை உணர்ந்து நடந்தால் நலம் பெறுவீர்கள்.

Sunday, 2 November 2014

மறைவு பெற்ற கிரகங்கள்

மூன்றாம் இடத்தில் மறைவு பெற்ற கிரகங்கள் எப்போதும் ஜாதகர்களுக்கு நன்மையே தரும் என்பது பழங்கால ஜோதிட நூல்களில் சித்தர்கள் எழுதிய முதல் காலம் சென்ற C.G.ராஜன் அவர்களும் சரி தற்போதைய ஜோதிஷ் ஆசான்களும் சரி
மூன்றாம் இடத்திலும்
பதினொன்றாம் இடத்திலும் இருக்கும் கோள்கள் தன்னுடைய திசா புக்தி காலகட்டத்தில் நற்பலனை தருவதாக சொல்லி இருக்கிறார்கள் ...இன்னும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் ...
ஆனால் புதியதாக ஜோதிடத்துறை உள்ளே கால்பதித்தோர்களும் சரி முன்னர் இருந்து இத்துறையில் இருப்போர்களும் சரி ஒரு சிலருக்கு ஏன் இந்த "மூன்றாம் இடத்திற்கு அதிமுக்கியத்துவம் "கொடுத்தார்கள் என்பது எல்லோரும் அறிந்திருக்க வாய்ப்புகள் இல்லை !!!
அதையும் கொஞ்சம் விளக்கம் செய்யவே இப்பதிவு
பொதுவாக எந்தவொரு லக்னமாக இருந்தாலும் பதினொன்றாம் இடத்தில் இருக்கும் கிரகம் (லாபஸ்தானம் ) நன்மைதான் தரும் .ஆனால் மூன்றாம் இடத்தில் இருப்பது எப்படி நன்மை தரும் ??
மேஷ சிம்ம தனுசு லக்னமாக இருந்து (நெருப்பு ராசி )
மூன்றாம் இடத்தில் மிதுனம் துலாம் கும்பம் ஆகிய இடங்களில் (காற்று ராசி ) கிரகங்கள் இருந்தால் அது அந்த லக்னத்தில் பிறந்தோர்களுக்கு நன்மையே தரும் நெருப்பு காற்று இரண்டும் சேர ஜாதகனுடைய வாழ்க்கையில் வெகு வசந்த காலமே !!
அதேபோல
ரிஷபம் கன்னி மகரம் எனும் ஸ்திர லக்னமாக (பூமி ராசி ) அமைந்து பிறந்தோர்களுக்கு
கடகம் விருச்சிகம் மீனம் ஆகிய (நீர் ராசிகளில் ) இடங்களில் அமையப்பெற்ற கிரகங்கள் நற்பலனையே தரும் .
மிதுனம் துலாம் கும்பம் (காற்று ராசி )
லக்னமாக அமையப்பெற்ற ஜாதகர்களின் வாழ்க்கையை முறையே சிம்மம் தனுசு மேஷம் ஆகிய (நெருப்பு ராசி ) இடங்களில் இருக்கும் கோள்களின் நன்மையே ஜாதகனுக்கு கிட்டும்
அதேபோல
கடகம் விருச்சிகம் மீனம் ஆகிய (நீர் ராசி ) லக்னமாக கொண்ட ஜாதகர்களுக்கு முறையே கன்னி மகரம் ரிஷபம் (ஸ்திர எனும் பூமி ராசி )ஆகிய இடங்களில் இருக்கும் கிரகங்கள் நற்பலனை மட்டுமே தரும் (தீமை இருக்காது )
பஞ்சபூதங்கள் நம் ராசி மண்டலத்தில் ஆதிக்கம் செலுத்தி கொண்டு இருக்கிறது ..
அதில் ராசிமண்டலமாக (ஆகாயம் ) அமையப்பெற்றதாலும் மீதம் இருக்கின்ற நான்கு பூதங்கள் (நெருப்பு &நிலம் +காற்று மற்றும் நீர் ராசி மண்டலத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது ..
இதில் சொல்லப்பட்டபடி இருக்கும் கிரகங்களின் நிலையை அறிந்து
மேஷலக்னமாக அமைந்தோர்கள்
தன்னுடைய ஜாதகத்தில் 3 மிதுனம் அல்லது 11 கும்பம் ஆகிய இடங்களில் இருக்கும் கிரகங்களின் திசாபுக்தி நடப்பில் இருக்கும்போது (இரண்டும் காற்று ராசி ) வாயு தத்துவ ஆலயம் ஆன "காளஹஸ்தி " சென்று வழிபாடு செய்வது மிகுந்த நன்மை ஆகும் ...
ரிஷபம் லக்னமாக கொண்டு பிறந்தோர் கடகம் மற்றும் மீனம் (நீர் ராசி ) ஆகிய இடங்களில் கிரகங்கள் அமையப்பெற்ற ஜாதகர் மேற்படி ராசியில் அமையப்பெற்ற அதன் திசா புக்தி வரும் காலகட்டத்தில் நீர் தத்துவ ஆலயமாக விளங்கி வரும் "திருவானைக்கா "(திருச்சி ) சென்று வழிபாடுகள் செய்ய மிகுந்த நன்மைகளை அடைவார்கள் !!!
மிதுனம் லக்னமாக அமைந்த ஜாதகர்கள் சிம்மம் மேஷம் (நெருப்பு ராசி ) ஆகிய இடங்களில் அமையப்பெற்ற திசாபுக்தி நடப்பில் உள்ளபோது நெருப்பு தத்துவ ஆலயமாக விளங்கி வரும் "திருவண்ணாமலை "தரிசனம் சாலச்சிறந்தது ...
கடகம் லக்னமாக அமையப்பெற்ற ஜாதகர்கள் கன்னி ரிஷபம் ஆகிய (பூமி ராசி ) இடங்களில் அமையப்பெற்ற கிரகங்களின் திசாபுக்தி காலகட்டத்தில் பூமிதத்துவ ஆலயமாக இருக்கின்ற "காஞ்சீபுரம் "சென்று வழிபாடு செய்வது மிகுந்த நன்மை பயக்கும் ...
ஆயிரம் ஆயிரம் செலவுகளை செய்து வெவ்வேறு திருத்தலங்கள் சென்றாலும் ஒவ்வொரு திசைக்கு லக்னத்தின் மூன்று /பதினொன்றாம் இடத்தில் இருக்கின்ற ராசிக்கு ஏற்ப ஆலய வழிபாடு செய்வதே சாலசிறந்தது ....
பொதுவாக பாரம்பரிய ஜோதிடத்தில் அதி நுட்பமான விஷயங்களை தன்னுள் அடங்கி கொண்டு இருக்கிறது .
மதி நுட்பங்களை கொண்டு நற்பலனை அடையுங்கள்