முருகனின் திருக்கோயில்களில் ஒன்று சுருளிமலை. இது கம்பம் அருகில் உள்ளது. இம்மலைக்கு சுருளிப்பட்டியிலிருந்து செல்ல வேண்டும். சுருளிமலையிலிருந்து ஏராளமான மூலிகைகளுடன் கலந்து அருவியாக விழும் இந்த சுருளி தீர்த்தத்தில் நீராடினால் பல நோய்கள் குணமாகின்றனவாம். கோவைக்கு வட கிழக்கே 42 கி.மீ. தூரத்தில் ஆலத்தூர் என்ற ஊர் இருக்கிறது. இங்குள்ள வெங்கடேசப்பெருமாள் கோயிலுக்கு மேற்கே உள்ள குளத்தில் நீராடி பயபக்தியுடன் துளசி, வேப்பங்கொழுந்து, மாங்கொழுந்து, அரளிப்பூ, எலுமிச்சம்பழச்சாறு முதலான பொருட்களைச் சேர்த்து தீமூட்டுகிறார்கள். அதிலிருந்து வரும் புகையை பிடிக்கிறார்கள். அதில் கிடைக்கும் கரித்தூளை சொரி சிரங்குகளின் மீது பூசுகிறார்கள். இதனால் தோல் நோய்கள் குணமாகின்றன.
Thursday, 13 November 2014
மூன்று வேளை வணங்க வேண்டிய தேவியர் !
காயத்ரி காலை வணக்கத்துக்குரியவள். இவள் ரிக் வேதத்தின் தலைவியாவாள். வீட்டில் வளர்க்கும் ஹோமத் தீக்கு இவளே அதிபதி. நான்கு முகங்கள், எட்டுக் கரங்களுடன் அன்ன வாகனத்தில் காட்சி தருபவள்.
நண்பகல் பிரார்த்தனைக்குரியவள் சாவித்ரி. யஜுர் வேதம் இவளுக்குரியது, இவள் நான்கு முகங்களையும் அதில் பன்னிரு விழிகளையும், நான்கு கரங்களையும் கொண்டவள். இவளது வாகனம் எருது.
அந்தி வேளை வணக்கத்துக்குரியவள் சரஸ்வதி. சாமவேதம் இவளுக்குரியது. ஆஹ்வனீய தீயின் ஒளி இவள். ஒற்றை முகமும் நான்கு கரங்களும் கொண்டு அருள்பாலிப்பவள். இவளது வாகனம் கருடன்.
நண்பகல் பிரார்த்தனைக்குரியவள் சாவித்ரி. யஜுர் வேதம் இவளுக்குரியது, இவள் நான்கு முகங்களையும் அதில் பன்னிரு விழிகளையும், நான்கு கரங்களையும் கொண்டவள். இவளது வாகனம் எருது.
அந்தி வேளை வணக்கத்துக்குரியவள் சரஸ்வதி. சாமவேதம் இவளுக்குரியது. ஆஹ்வனீய தீயின் ஒளி இவள். ஒற்றை முகமும் நான்கு கரங்களும் கொண்டு அருள்பாலிப்பவள். இவளது வாகனம் கருடன்.
ராகு வேளையில் துர்க்கை, காளியை வழிபடுவது ஏன்?
ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு அதிதேவதை உண்டு. அதன்படி ராகுவிற்கு துர்க்கை அதிதேவதை. ராகுதோஷம், திருமணத்தடை, புத்திரப்பேறின்மை நீங்க காளி, துர்க்கை வழிபாட்டை ராகுகாலத்தில் மேற்கொள்வது நல்லது
Tuesday, 11 November 2014
சனி பெயர்ச்சி பலன்கள் விருச்சிகம் (2014 -2017)
விருச்சிகம் (விசாகம் 4ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
எதையும் திறமையாகச் செய்து முடிக்கும் ஆற்றலும் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவராகவும் விளங்கும் விருச்சிக ராசி அன்பர்களே! 16.12.2014 இல் ஏற்பட்டவிருக்கும் சனி பெயர்ச்சியின் மூலம் உங்களுக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஏழரை சனியில் விரய சனி முடிவடைந்து ஜென்ம சனியானது தொடங்குகிறது. இக்காலங்களில் உடன் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வதால் மருத்துவ செலவுகளைக் குறைக்க முடியும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தையும் ப+ர்த்தி செய்ய முடியும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைக்கவும்.நெருங்கியவரிடையே கருத்து வேறுபாடுகள் பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. நிறைய போட்டிகளை சந்தித்தாலும் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றலும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்களை தவறவிடாமல் பயன்படுத்தவும்.
உங்களுக்கு ஏழரை சனியில் ஜென்ம சனியானது நடைபெறும் இக்காலங்களில் 05.07.2015 வரை ஆண்டு கோளான குருபகவான் பாக்கிய ஸ்தானமான 9 இல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும். பொருளாதார நிலை உயரும். 05.07.2015 முதல் 02.08.2016 வரை குரு தொழில் ஸ்தானமான 10 ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்த்து கையிலிருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது. பண விஷயங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. 02.08.2016 முதல் 02.09.2017 வரை குரு லாப ஸ்தானமான 11 ம் வீட்டில் சஞ்சரிக்க இருக்கும் காலங்களில் தொழில் வியாபாரரீதியாக இருந்த போட்டிகளும் மறைமுக எதிர்பார்ப்புகளும் மறையும். உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிட்டும். பணவரவுகளும் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடும்.
தேக ஆரோக்கியம்
உங்கள் ஜென்ம ராசியிலேயே சனி பகவான் சஞ்சாரம் செய்வதால் உங்களுக்கு ஏழுரைச் சனியில் ஜென்ம சனி நடைபெறுகிறது. இதனால் உடல் நிலையில் சோர்வு, கை, கால் மூட்டுகளில் வலி, எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியாத சூழ்நிலை உண்டாகும். வயிறு சம்மந்தப்பட்ட கோளாறு, மற்றும் ஜீரணமின்மை போன்றவற்றாலும் மருத்துவச் செலவுகள் உண்டாகும். மனைவி பிள்ளைகளாலும், குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்வீர்கள்.
குடும்பம் பொருளாதார நிலை
கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையக் கூடிய காலம் என்பதால் மிகவும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களும் வீண் பிரச்சனைகளை ஏற்படுத்துவதால் மனநிம்மதி குறையும். பண வரவுகள் சிறகப்பாக இருந்தாகுறையும். பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகளும் உண்டாகும். அசையும் அசையா சொத்துகளால் வம்பு வழக்குகளை சந்திப்பீர்கள். குரு சாதகமாக சஞ்சரிக்கும் காலங்களில் திருமண சுபகாரியங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது.
உத்தியோகஸ்தர்களுக்கு
பணியில் கௌரவமான பதவிகளில் இருப்பவர்கள் கூட சில நேரங்களில் வீண் பழிச் சொற்களுக்கு ஆளாக நேரிடும். பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிவரும். உடல் நிலை பாதிப்புகளால் அடிக்கடி விடுப்பு எடுப்பதால் உயரதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். பணிச்சுமை கூடும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு மிகவும் அவசியம் என்பதால் அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும் என்றாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலும் உண்டாகும்.
தொழில் வியாபாரிகளுக்கு
தொழில் வியாபாரத்தில் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும் என்றாலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டி வரும். கூட்டாளிகளாலும் தொழிலாளர்களாலும் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. வரவேண்டிய வாய்ப்புகளை போட்டிகளால் பிறர் தட்டிச் சென்றாலும் இருக்கும் வாய்ப்புகளை வைத்தே மேன்மையடைவீர்கள். வெளிய+ர் வெளிநாட்டுத் தொடர்புடையவற்றால் லாபம் கிட்டும். முடிந்தவரை தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்.
பெண்களுக்கு
உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது அவசியமாகும். வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் மாதவிடாய்க் கோளாறுகள் போன்றவை தோன்றி மருத்துவச் செலவுகளை உண்டாக்கும். குடும்பத்தில் குழப்பமும் நிம்மதியற்ற நிலையும் ஏற்படும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்படுவது நன்மையளிக்கும் பணவரவுகள் சுமாராக இருக்கும்.
கொடுக்கல் வாங்கல்
பொருளாதார நிலை ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். கொடுக்கல் வாங்கலும் லாபமளிக்கும். கொடுத்த கடன்களை திரும்பப் பெறுவதில் சிறுசிறு சிக்கல்கள் ஏற்பட்டாலும் எதையும் சமாளிக்கும் வசூலித்து விடுவீர்கள். கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளிலிருப்போர்க்கு லாபங்கள் எதிர்பார்த்தபடி அமையும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை.
அரசியல்வாதிகளுக்கு
தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ள சற்று பாடுபட வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கிய பாதிப்புகளால் பதவிகளை சரிவர நிர்விக்க முடியாத சூழ்நிலை உண்டாகும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற நிறைய இடைய+றுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். உடனிருப்பவர்களே உங்களுக்கு துரோகம் செய்வார்கள்.
விவசாயிகளுக்கு
பயிர் விளைச்சல் நன்றாக இருக்கும் என்றாலும் சந்தையில் விளை பொருளுக்கேற்ற விலையினைப் பெறுவதில் இடைய+றுகள் உண்டாகும். அரசு வழியில் கிடைக்கும் உதவிகளால் கடன்களை ஒரளவுக்கு நிவர்த்தி செய்ய முடியும். வாய்க்கால் வரப்பு சம்பந்தப்பட்டவைகளால் பங்காளிகள் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தினாலும் நீங்கள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
படிப்பு
மாணவ மாணவியர் கல்வியில் சற்று கவனம் செலுத்தி படிப்பது நல்லது. உடல்நிலையில் சோர்வும், ஞாபக மறதியும் உண்டாவதால் கல்வியில் ஈடுபாடு குறையும். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை உங்கள் வாழ்வின் திசையையே மாற்றிவிடும் என்பதால் எதிலும் கவனம் தேவை. தேவையற்ற பொழுது போக்குகளில் மனதைக் செலுத்தநேரிடும். விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளைப் பெறுவீர்கள். பயணங்களில் நிதானம் தேவை.
ஸ்பெகுலேஷன்:- லாட்டி, ரேஸ், போன்றவற்றால் எதிர்பார்க்கப்படும் அளவிற்கு லாபத்தினை அடைய முடியாது. எனவே எதிலும் சிந்தித்து செயல்படவும்.
சனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 16.12.2014 முதல் 24.01.2015 வரை
உங்கள் இராசிக்கு நட்பு கிரகமான குருவின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியில் சனி சஞ்சரிக்கும் இக்காலத்தில் 9இல் குருவும், 11 இல் இராகுவும் இருப்பதால் எதையும் எதிர் கொள்ளும் பலம் உண்டாகும். பணவரவுகள் சுமாராக இருக்கும். எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றியும் அனுகூலமும் இருக்கும். நண்பர்களின் ஆலோசனைகள் நல்ல பலனை உண்டாக்கும். கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை தவிர்த்து விடுவது நல்லது. எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகள் நிலவினாலும் சாதகப்பலன் உண்டாகும். வண்டி வாகனம் வாங்கும் யோகம் அமைந்தாலும் சிறிது கடன்களும் உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூட்டு தொழிலில் சுமாரான லாபத்தை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமைகளை வெளிபடுத்த கூடிய சந்தர்பங்கள் அமையும்.
சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 14.03.2015 வரை
தனது நட்சத்திரத்தில் ஜென்ம ராசியில் சனி சஞ்சரிக்கும் இக்காலத்தில் குரு 9 லும், இராகு 11 லும் இருப்பதால் எந்த பிரச்சனைகளையும் சமாளித்துவிடக்கூடிய ஆற்றல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக் கூடிய பிரச்சனைகளால் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். எந்தவொரு காரியத்திலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படவும் உறவினர்களை அனுசரித்துச் செல்வதால் வீண் பிரச்சனைகளை தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கப் பெற்றாலும் வேறு இடங்களுக்கு இடமாற்றங்களும் உண்டாகி அலைச்சல் ஏற்படும். எடுக்கும் காரியங்களை செய்து முடிப்பதற்கு அரும்பாடுபட வேண்டியிருக்கும். கணவன் மனைவியிடையே அவ்வளவாக ஒற்றுமை இருக்காது. என்றாலும் எதிர்பாராத உதவிகளால் எதையும் சமாளிப்பிர்கள் குடும்பத்திலும் சுப காரியங்கள் கை கூடும்.
சனிபகவான் வக்ரகதியில் 15.03.2015 முதல் 30.07.2015 வரை
ஜென்ம இராசியில் சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியிலும், 11 இல் இராகுவும், 9 இல் குருவும் இருப்பதால் பிரச்சனைகள் விலகி அனுகூலமாக பலன்கள் கிடைக்கும். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். எந்த காரியத்திலும் வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படுவீர்கள். பொருளாதாரம் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்கடங்கியே காணப்படும். கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் வெற்றி கிட்டும். உடன் பிறப்புகளால் சுமாரான அனுகூலப்பலனைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தாங்கள் விரும்பிய இடமாற்றம் கிடைக்கப்பெற்றாலும் உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்காமல் பாடுபட வேண்டியிருக்கும். அதிகாரிகளின் ஆதரவு சற்றே மனஅமைதியை உண்டாக்கும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் அமையும். நண்பர்களின் உதவியும் தக்க சமயத்தில் அமையும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் திறமைக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைக்கும்.
சனிபகவான் துலா இராசியில் விசாகம் நட்சத்திரத்தில் 31.07.2015 முதல் 05.09.2015 வரை
உங்கள் ஜென்ம இராசியில் சஞ்சரித்த சனி இக்காலத்தில் பின்னோக்கி 12 இல் சஞ்சரிக்க இருப்பதாலும், குரு 10 இல் இருப்பதாலும்; தொழில் வியாபாரம் செய்பவர்கள் மிகவும் நிதானித்து செயல்படுவது நல்லது. புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று கவனமுடன் செய்ல்படுவது நல்லது. உடல் நிலையில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனமாக செயல்படுவது நல்லது. வாக்குறுதிகளை காப்பாற்றுவதில் சிரமம் உண்டாகும். குடும்பத்திலும் ஒற்றுமை குறையும். உறவினர்கள் சாதகமாக செயல்படுவதால் சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற இடமாற்றத்தை சந்தித்தாலும், கௌரவப்பதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பார்க்கும் உதவிகள் தடையுடன் அமையும். இராகு லாப ஸ்தானமான 11 ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் எதையும் எதிர் கொள்ளும் ஆற்றல் ஏற்படும்.
சனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 06.09.2015 முதல் 19.10.2015 வரை
உங்கள் இராசிக்கு 2,5 இக்கு அதிபதியான குருவின் நட்சத்திரத்தில் சனி ஜென்ம இராசியில் சஞ்சரிக்கும் இக்காலத்தில் சில சங்கடங்கள் ஏற்படும். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பதும் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை சுமாராகத்தான் இருக்கும். எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். சுமாரான பணவரவுகளால் குடும்பத் தேவைகளைப் ப+ர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டி வரும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராத இடமாற்றங்களால் குடும்பத்தை விட்டுப் பிரிய வேண்டிய நிலை உண்டாகும்; எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. குரு ஜென்ம ராசிக்கு 10 ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளாலும் தொழிலாளர்களாலும் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாத நிலையும் உண்டாகும்.
சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 19.10.2015 முதல் 26.03.2016 வரை
சனிபகவான் தனது சுய நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலத்தில் 10 இல் குரு சஞ்சரிப்பதால் சற்று சோதனையான பலன்களையே எதிர்கொள்ள நேரிடும். பணவரவுகளில் தடைகளும் நண்பர்களே எதிரிகளாக மாறக்கூடிய சூழ்நிலைகளும் உண்டாகும். பண விஷயத்திலும் மற்றவர்கள் விஷயத்திலும் தலையீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எவ்வளவு தான் பாடுபட்டாலும் அதன் முழு பலனை அடைய முடியாது. எதிர்பார்த்த உயர்வுகள் தாமதப் படுவதால் எதிலும் முழுமையாக ஈடுபட முடியாத நிலை உண்டாகும். எடுக்கும் காரியங்களில் வீண் விரயமும், தடை தாமதங்களும் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் அலைச்சல் அதிகரிக்கும். எதிரிகளின் பலம் கூடி உங்கள் பலம் குறைய கூடிய காலமாக அமையும். தெய்வகாரியங்களில் ஈடுபடுவதும் குலதெய்வ வழிபாடுகள் மேற்கொள்வதும் குடும்பத்தில் ஏற்பட கூடிய பிரச்சினைகளை குறைக்கும். 11 இல் இராகு 08.01.2016 வரை சஞ்சரிப்பதால் கடந்த கால பிரச்சனைகளிலிருந்து சற்றே விடுபடுவீர்கள்.
சனிபகவான் வக்ரகதியில் 27.03.2016 முதல் 11.08.2016 வரை
உங்கள் ஜென்ம இராசியில் சனி இக்காலத்தில் வக்ர கதியிலும் குரு 10 இல் வக்ர கதியிலும் சஞ்சரிப்பதால் பணவரவுகளில் நெருக்கடிகள் உண்டாகும். குடும்பத் தேவைகளைப் ப+ர்த்தி செய்வதற்காக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகளும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக் கூடிய பிரச்சனைகளால் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் முயற்சிகளில் தடைகளும் வீண் அலைச்சல்களும் உண்டாகும். எடுக்கும் காரியங்களில் தடை தாமங்கள், எதிர்பார்க்கும் உதவிகளில் இழுபறியான நிலை நீடிக்கும். உற்றார் உறவினர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். உத்தியோகத்தர்கள் பிறர் செய்யும் தவறு;களுக்கும் பொறுப்பேற்கவேண்டிய சூழ்நிலை உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடைக்கு பின் வெற்றி கிட்டும்.
சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 12.08.2016 முதல் 18.11.2016 வரை
ஜென்ம இராசியில் சனி சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. கணவனும் மனைவியும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் சில இடைய+றுகளுக்குப் பின் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகளால் வர வேண்டிய வாய்ப்புகள் கைநழுவிப் போகும். பொருளாதார நிலையில் நெருக்கடிகள் ஏற்படக்கூடிய காலம் என்றாலும்; ஆண்டு கோள் என வர்ணிக்கப்படும் குரு லாப ஸ்தானத்தில் வலுவாக சஞ்சரிப்பதால் ஓரளவுக்கு அனுகூலத்தை உண்டாக்கும். குடும்பத்திலும் சுப காரியங்கள் கை கூடும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் திறமைகளுக்கேற்ற உயர்வுகளை அடைவார்கள். பூர்வீக சொத்துக்களால் ஓரளவுக்கு அனுகூலத்தைப் பெறுவீர்கள். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும்.
சனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 19.11.2016 முதல் 08.04.2017வரை
உங்கள் இராசிக்கு 8,11 இக்கு அதிபதியான புதன் சாரத்தில் சனி சஞ்சரிப்பது நெருக்கடிகளை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் தன, பஞ்சமாதிபதியான குரு லாப ஸ்தானத்தில் வலுவாக சஞ்சரிப்பதால் தடைபட்ட காரியங்கள் தடையின்றி நிறைவேறி மகிழ்ச்சி அளிக்கும். எதிர் பாராத திடீர் தன வரவுகளால் குடும்பத்தேவைகள் பூர்;த்தியாகும். பழைய கடன்கள் குறையும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடு மறையும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். உடன் பிறப்புகளால் சாதகமான பலனை அடைவீர்கள். அண்டை அயலாரின் உறவு சிறப்பாக அமையும். புதிய பொருட்கள் சேரும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் தொழிலை அபிவிருத்தி செய்ய பெரிய மனிதர்களின் ஆதரவுகளைப் பெறுவார்கள். எதிர்பார்த்த லாபங்களும் கிடைக்கப்பெறும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று மன மகிழ்ச்சி அடைவார்கள். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவதால் அதிக மதிப்பெண்களை பெறுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
சனிபகவான் வக்ரகதியில் 09.04.2017 முதல் 04.08.2017 வரை
உங்கள் ஜென்ம இராசியில் சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியில சஞ்சரிப்பதும் குரு 11 இல் இருப்பதும் அற்புதமான அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் தெம்பும் உற்சாகமும் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன்கள் கிடைக்கும். வெளியூர் வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கப் பெறும். பண வரவில் தாராளமான சூழ்நிலைகளே இருக்கும். கொடுக்கல் வாங்கலும் சரளமாக அமையும். சிலருக்கு வண்டி வாகனம் வாங்க கூடிய யோகங்களும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கப்பெற்று மன மகிழ்ச்சி அடைவர்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபமும் முன்னேற்றமும் அடைவார்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட கடன்கள் வெகுவாக குறையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு தாங்கள் விரும்பிய வரையே கைபிடிக்கும் யோகம் அமையும். மாணவர்கள் கல்வி மற்றும் விளையாட்டு துறையிலும் பாராட்டுகளையும், பரிசுகளையும் பெறுவார்கள்.
சனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 05.08.2017 முதல் 19.12.2017 வரை
சனி தனது நட்பு நட்சத்திரமான புதன் சாரத்தில் ஜென்ம இராசியில் சஞ்சரித்து ஏழரைச் சனி நடப்பதாலும், குரு 12 ல் சஞ்சரிப்பதாலும் உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வது நல்லது. பண வரவுகளில் சிறுசிறு நெருக்கடிகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் இக்காலத்திலும் தடைகளையே சந்திப்பீர்;கள். குடும்பத்திலும் பொருளாதார தட்டுபாட்டினாலும் வீண் சஞ்சலங்கள் உண்டாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் குறையும் என்றாலும் புத்திர வழியில் வீண் செலவுகளும் நிம்மதியற்ற நிலையும் உண்டாகும். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷனை சந்திப்பீர்;கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளிடமும், தொழிலாளிகளிடமும் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. எந்தவொரு காரியத்தையும் சிந்தித்து செயல்படுத்தினால் மட்டுமே லாபங்களை எதிர்பார்க்க முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதத்துடன் அமையும்.
விசாகம் 4 ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு
அனைவரிடமும் விசுவாசத்துடனும் அன்புடனும் பழகும் குணம் கொண்ட உங்களுக்கு சனி பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் ஏழரைச் சனியில் ஜென்மச் சனி நடைபெறுகிறது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் தேவையற்ற பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாகத் தானிருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் செலுத்தினால் மட்டுமே லாபத்தினைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வேலைப்பளு அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு ஒரளவுக்கு உதவியாக இருக்கும்.
அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
மிகவும் கூச்சசுபாவம் மிக்கவராகவும் தாராள மனப்பான்மை கொண்டவராகவும் விளங்கும் உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்மச் சனி நடைபெறுவதால் எதிலும் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. பொருளாதார நிலை சுமாராக இருக்கும். உடல் நிலையில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். தொழில் வியாபாரத்தில் நம்பிய கூட்டாளிகளே துரோகம் செய்வார்கள். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்களும் அதிகரிக்கும். பண விஷயத்தில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடன்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
எடுக்கும் காரியங்களை தளர்ச்சியடையாமல் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்மச் சனி நடைபெறுவதால் குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும். பணவரவுகள் ஏற்றத் தாழ்வுடன் இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படவும். தேவையற்ற பயணங்களாலும் அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தாமதமடையும்.
அதிர்ஷ்டம் அளிப்பவை
தேதி :- 1, 2, 3, 9, 10, 11, 12
கிழமை :- செவ்வாய், ஞாயிறு
நிறம் :- சிவப்பு, மஞ்சள்
கல் :- பவளம்
தெய்வம் :- முருகன்
சனி பெயர்ச்சி பலன்கள் துலாம்;: (2014 -2017)
துலாம் (சித்திரை 3,4 ஆம் பாதம்;, சுவாதி, விசாகம் 1,2,3ஆம் பாதம்)
மற்றவர்களை எளிதில் புரிந்து கொள்ள கூடிய சாமர்த்தியம் கொண்ட துலா ராசி அன்பர்களே!
வரும் 16.12.2014 இல் ஏற்படவிருக்கும் சனி பெயர்ச்சியின் மூலம் உங்களுக்கு குடும்ப ஸ்தானமான 2 ஆம் வீட்டில் சனி சஞ்சாரம் செய்யவுள்ளதால் ஏழரைச்சனியில் பாதச்சனி நடைபெறவுள்ளது. என்றாலும் உங்களுக்கு ஏழரைச் சனி காலங்களில் முக்கால் வாசி கடந்து விட்டதால் இந்த இரண்டரை ஆண்டு காலங்களிலும் எதிலும் சற்று கவனமுடன் செயல்பட்டால் ஒரளவுக்கு சாதகப்பலனை அடைவீர்கள். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக் கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புக்கள் ஏற்படக்கூடும் என்றாலும் சனி உங்கள் இராசிக்கு 4,5 இக்கு அதிபதியாகி யோககாரகன் என்பதால் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். இதுவரை இருந்து வந்த கடன் பிரச்சினைகள் யாவும் படிப்படியாக குறையும். தொழில் வியாபார ரீதியாக போட்டிகள் நிலவினாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். பேச்சை எவ்வளவுக்கு எவ்வளவு குறைத்துக் கொள்கிறீர்களோ அந்த அளவிற்கு வீண் பிரச்சினைகளும் குறையும்.
பாதசனி நடைபெறக்கூடிய இக்காலங்களில் ஆண்டு கோளான குரு பகவான் 05.07.2015 வரை 10 ல் சஞ்சரிப்பதால் தொழில் உத்தியோக ரீதியாக சிறுசிறு சங்கடங்கள் ஏற்படும். 05.07.2015 முதல் 02.08.2016 வரை லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் தன சேர்க்கைகள் ஏற்பட்டு உங்களது கஷ்டங்கள் குறையும். கணவன் மனைவியரிடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்திலும் மங்கள கரமான சுப காரியங்கள் கை கூடும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். பொருளாதார நிலை உயர்ந்து கடன்கள் குறையும். 02.08.2016 முதல் 02.09.2017 வரை குரு 12 இல் சஞ்சாரம் செய்கின்ற காலங்களில் பண விஷயத்தில் கவனம் தேவை.
தேக ஆரோக்கியம்
உங்கள் ஜென்ம ராசிக்கு 2 ஆம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் ஏழரைச் சனியில் பாதச் சனி நடைபெறுகிறது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். சில நேரங்களில் நெருங்கியவர்களை இழக்கக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஏற்படுத்தும் பிரச்சனைகளால் மனநிம்மதி குறையும். எந்தக் காரியத்தையும் சரிவரச் செய்ய இயலாது.
குடும்பம் பொருளாதார நிலை
குடும்ப ஸ்தானமான 2 ஆம் வீட்டில் சனி பகவான் சஞ்சரிப்பதால் கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களிடமும் உற்றார் உறவினர்களிடமும் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் குடும்பத்தில் வீண் பிரச்சனைகளை உண்டாகும். திருமண சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் கவனமுடன் செயல்பட்டால் நற்பலனை அடையமுடியும். பணவரவுகள் தாரளமாகவே இருக்கும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது மிகவும் நல்லது.
உத்தியோகஸ்தர்களுக்கு
உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சற்று வேலைப்பளு அதிகரித்தாலும் உயர்வுகள் தடைப்படாது. தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்தால் பெயர் புகழுக்கு கௌரவத்திற்கு பங்கம் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும். ஊதிய உயர்வுகள் உண்டாவதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இட மாற்றங்களால் குடும்பத்தை விட்டுப் பிரிய வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். உடன் பணி புரிவர்களை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சனைகள் உண்டாவதைத் தவிர்க்க முடியும். அதிக நேரம் பணிபுரிவதைத் தவிர்க்கவும்.
தொழில் வியாபாரிகளுக்கு
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிப் பொறாமைகள் நிறைய உண்டாகும். மறைமுக எதிர்ப்புகளும் ஏற்படும் என்றாலும் எதிலும் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள் வரவேண்டிய வாய்ப்புகள் கை நழுவினாலும் இருக்கும் வாய்ப்புகளைக் கொண்டே முன்னேற்றத்தினைப் பெற்று விடுவீர்கள். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சலைக் குறைத்துக் கொள்ள முடியும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களால் சிறுசிறு மன சஞ்சலங்களை சந்திப்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடனுதவிகள் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும். அபிவிருத்தி பெருகும்.
பெண்களுக்கு
உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். கணவன் மனைவியிடையே உண்டாகக் கூடிய மனசஞ்சலங்களால் நிம்மதி குறையும். எவ்வளவு தான் நீங்கள் மற்றவர்களுக்கு உதவிகள் செய்தாலும் பிறர் உங்களைக் குறை கூறிக்கொண்டே தான் இருப்பார்கள். எதிலும் சிந்தித்து செயல்படுவது, அனைவரையும் அனுசரித்து நடப்பது போன்றவற்றால் ஒரளவுக்கு சாதகப்பலனைப் பெற முடியும். வேலைப்பளு கூடும்.
கொடுக்கல் வாங்கல்
பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் கொடுக்கல் வாங்கல் ஏற்ற இறக்கமாகத் தான் இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று நிதானித்துச் செயல்படுவது நல்லது. நம்பியவர்களே துரோகம் செய்யத் துணியக்கூடிய காலம் என்பதால் உடனிருப்பவர்களிடம் கவனம் தேவை. கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்றவற்றில் சுமாரான லாபம் கிட்டும்.
அரசியல்வாதிகளுக்கு
அரசியல்வாதிகளுக்கு மக்களின் செல்வாக்கு குறையக் கூடிய காலமாகும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, உயர்பதவிகள் இருப்பவர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. பத்திரிகை நண்பர்களைப் பகைத்துக் கொள்வதால் வீண் சிக்கலில் மாட்டுவீர்கள். சிலருக்கு உடல்ரீதியாக உண்டாகக் கூடிய பிரச்சனைகளால் கட்சிப் பணிகளைத் தொடர முடியாமல் போகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
விவசாயிகளுக்கு
பயிர் விளைச்சல்கள் சிறப்பாக இருந்தாலும் புழு ப+ச்சிகளின் தொல்லைகளால் மகசூல் குறையும். பட்ட பாட்டிற்கு பலனின்றிப் போகும்.விளை பொருட்கள் சந்தையில் சுமாரான விலைக்கே போகும் என்றாலும் நஷ்டம் ஏற்படாது. கால்நடைகளால் ஒரளவுக்கு அனுகூலத்தை அடைய முடியும். அரசு வழியில் கிடைக்கும் எதிர்பாராத உதவிகளால் கடன்கள் நிவர்த்தியாகும். மழைவளம் சிறப்பாக அமையும்.
படிப்பு
கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. குடும்ப சூழ்நிலைகளை மனதில் வைத்துக் குழப்பிக் கொள்ளாமல் படிப்பில் நாட்டம் செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். தேவையற்ற நட்புகளால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள் என்பதால் உடன்பழகுபவர்களிடம் சற்று கவனமுடனிருப்பது நல்லது.
சனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 16.12.2014 முதல் 24.01.2015 வரை
உங்கள் இராசிக்கு 3,6 இக்கு அதிபதியான குருவின் நட்சத்திரத்தில் சனி 2 இல் சஞ்சரிப்பதால் ஏழரைச்சனியில் பாதசனி நடைபெறும் இக்காலத்தில் 6 இல் கேது இருப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைவு உண்டாகும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளைக் குறைத்தால் கடன்களைத் தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும். கூட்டாளிகளால் பிரச்சனைகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் வீண்பழிச் செலவுகள் சொற்கள் ஏற்படும். பேச்சில் நிதானத்தை கடைப்படிப்பது மிகவும் அவசியம். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள்; சிறுசிறு தடைகளுக்குப் பின் கைகூடும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது.
சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 14.03.2015 வரை
தனது சொந்த நட்சத்திரத்தில் சனி 2 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் குரு வக்ர கதியில் இருப்பதாலும் கேது 6 இல் இருப்பதாலும் பணம் கொடுக்கல் சரளமாக இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். என்றாலும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பற்ற நிலையால் மன நிம்மதி குறையும். எதிர் பார்க்கும் உதவிகளும் சற்று தாமதத்துடன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரிப்பதால் அதிக நேரம் உழைக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, பேச்சில் நிதானத்தை கடை பிடிப்பது, உற்றார் உறவினர்களையும், குடும்பத்திலுள்ளவர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதால் வீண் பிரச்சனைகளில் சிக்குவீர்கள்.
சனிபகவான் வக்ரகதியில் 15.03.2015 முதல் 30.07.2015 வரை
குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியிலும் 6 இல் கேது இருப்பதாலும் பிரச்சனைகள் விலகி அனுகூலமாக பலன்கள் கிடைக்கும். குரு 05.07.2015 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருப்பது நல்ல அமைப்பாகும். உடல் நிலையில் சிறு சிறு மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. குடும்பத்தில் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் நிம்மதி உண்டாகும். தனவரவு சிறப்பாகவே அமையும். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் நிலவினாலும் இறுதியில் வெற்றி கிட்டும். உடன் பிறப்புக்களால் அனுகூல பலன்களை எதிர்பார்க்க முடியாது. உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது. வேலை பளு அதிகரித்தாலும் அனுகூலப்பலனையும் அடைவீர்கள். மங்கள கரமான சுப காரியங்கள் தடபுடலாக நிறைவேறும். பண வரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. பொன் பொருள் சேரும். வீடு, பூமி மனை வாங்க கூடிய யோகமும் அமையும். தொழில் வியாபாரத்திலிருந்த மந்த நிலை படிப்படியாக விலகும்.
சனிபகவான் துலா இராசியில் விசாகம் நட்சத்திரத்தில் 31.07.2015 முதல் 05.09.2015 வரை
உங்கள் இராசிக்கு 2 இல் சஞ்சரித்த சனி இக்காலத்தில் பின்னோக்கி ஜென்ம இராசியில் சஞ்சரிக்க இருப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் குரு லாப ஸ்தானமான 11 ஆம் வீட்டிலும், கேது 6 லும் இருப்பதால் பண வரவு சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. நிறைய தனவரவுகள் வந்தாலும் அதற்கேற்ற செலவுகளும் உண்டாகும். குடும்ப வாழ்வில் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. வண்டி வாகனம் வாங்கும் முயற்சிகளில் கடன்கள் உண்டாகும். உத்தியோக நிலையில் பதவி உயர்வுகள் அமைந்தாலும் புதிய பொறுப்புகள் அதிகரிக்கும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்கனால் அலைச்சல் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் பழைய பாக்கிகளை வசூலிப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் மறைமுக எதிர்ப்புக்களை சமாளிக்க வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களைக் தவிர்ப்பது மூலம் வீண் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும்.
சனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 06.09.2015 முதல் 18.10.2015 வரை
உங்கள் இராசிக்கு 3,6 இக்கு அதிபதியான குருவின் நட்சத்திரத்தில் சனி 2 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் சில சங்கடங்கள் ஏற்படும் என்றாலும் குரு 11 ஆம் வீட்டிலும்,கேது 6 லும் இருப்பதால் குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் கைகூடும். குடும்பத்திலும் பொருளாதார நிலை மிக சிறப்பாக அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குருபகவான் சாதகமாக சஞ்சரிப்பதால் சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். குடும்பத்திலும் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் ஏற்படும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் ரிதியாக சிறுசிறு பாதிப்புக்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியில்லை. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உடன் பிறப்புகளால் ஓரளவு சாதகமான பலன்கள் கிடைக்கும். தொழில் ரீதியாக முன்னேற்றமான பலன்களைப் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தை அபிவிருத்தி செய்ய எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும் பொருளாதாரமும் மேம்படும்.
சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 19.10.2015 முதல் 26.03.2016 வரை
சனிபகவான் தனது சுய நட்சத்திரத்தில் 2 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் குரு 11 ம் வீட்டில் இருப்பதால் பொருளாதார ரீதியாக சிறப்பான பலன்கள் இருந்தாலும், பணம் தண்ணீர் போல செலவழியும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலமான பலன்களைப் பெற முடியும். எதிர் பார்த்த உதவிகள் சற்று தாமதப்படும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். எந்த காரியத்தையும் கஷ்டப்பட்டே முடிக்க வேண்டி வரும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளையும், முன்ஜாமீனையும் தவிர்த்து விடுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் சுமாரான லாபத்தை தான் பெறமுடியும். கூட்டு தொழிலில் ஏற்றமான பலன்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றி நல்ல பெயரை எடுப்பீர்கள். உற்றார் உறவினர்களை அனுசரித்து சொல்வதும் நல்லது.
சனிபகவான் வக்ரகதியில் 27.03.2016 முதல் 11.08.2016 வரை
தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியிலும், குரு 11 இல் 02.08.2016 வரையிலும், இராகு 11 ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. தேவையற்ற செலவுகளை குறைத்து சிக்கனமாக செயல்பட்டால் சேமிக்க முடியும். உடல் ஆரோக்கியம் சுமாராக அமையும். கணவன் மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமை குறைவு உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளை சந்தித்தாலும் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற முடியும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சாதக பலனை தரும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைத்தாலும் கூடுதல் பொறுப்புகளும் அதிகரிக்கும். உடனிருப்பவர்களிடம் அனுசரனையாக நடந்து கொண்டால் உங்கள் வேலை பளுவை குறைத்துக் கொள்ளலாம். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை தவிர்த்து விடுதல் மூலம் வீண் விரயங்களை குறைக்கலாம்.
சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 12.08.2016 முதல் 18.11.2016 வரை
குடும்ப ஸ்தானத்தில் சனியும் 12 இல் குருவும் சஞ்சரிப்பதால் எதிர் நீச்சல் போட்டு முன்னேற கூடிய காலமாகும். குடும்ப ஒற்றுமை சுமாராக அமையும். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் வீண் பிரச்சனைகள் ஏற்படாது. உறவினர் வருகை மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உடல் நிலை சற்று சோர்வு அடைந்தாலும் எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிக்க கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றம் கிடைக்கப்பெற்று அலைச்சலை குறைத்து கொள்வார்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாமல் போகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் தாங்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைவார்கள். எந்த காரியத்தை முடிப்பது என்றாலும் அதிக சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். மனதை ஒருநிலைப் படுத்துவது கோபத்தைக் குறைப்பது. எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. ராகு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து அனுகூலங்கள் ஏற்படும்.
சனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 19.11.2016 முதல் 08.04.2017வரை
உங்கள் இராசிக்கு நட்பு கிரகமான புதன் சாரத்தில் சனியும், 12 இல் குருவும் சஞ்சரிப்பதால் உங்களின் ஆரோக்கியம் அவ்வளவு திருப்திகரமாக அமையாது. குடும்பத்தில் பொருளாதார ரீதியாக தட்டுபாடுகள் உண்டாகும். எடுக்கும் எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிக்க முடியாது. உற்றார் உறவினர்களின் வருகை வரவுக்கு மீறிய செலவுகளை உண்டாக்கும். உங்;கள் முன்கோபத்தை குறைத்து கொண்டு பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எந்த வேலையையும் சிரமப்பட்டே முடிப்பீர்கள். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலிலும் பிரச்சினைகள் உண்டாகும். கொடுத்த கடன்களை வசூலிக்க முடியாது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர் பார்த்த கடனுதவிகள் தாமதப்படுவதால் அபிவிருத்தி செய்ய முடியாத நிலை உண்டாகும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனம் தேவை. பிறரை நம்பி வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்ப்பதும் நல்லது.
சனிபகவான் வக்ரகதியில் 09.04.2017 முதல் 04.08.2017 வரை
உங்கள் இராசிக்கு 2 இல் சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியிலும் குரு 12 லும் சஞ்சரிப்பதால்; நீங்கள் கவனமாக செயல்படுவதே நல்லது. கடந்த கால பிரச்சினைகள் இன்னும் தீரவில்லையே என்ற கவலைகளே மேலோங்கும். குடும்பத்திலும் ஒற்றுமை குறைவு, தேவையற்ற வாக்குவாதங்கள் என மனநிம்மதி குறைய கூடிய சூழ்நிலைகளே நிலவும். நண்பர்களே விரோதிகளாக மாறுவார்கள். பண விஷயத்தில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்த்து விடுதல் உத்தமம். திருமண சுப காரிய முயற்சிகளில் எதிர்பார்த்த சாதகபலனை அடைய தாமதம் உண்டாகும். உடல்நிலை குறைவுகளால் உத்தியோகஸ்தர்கள் அடிக்கடி விடுப்பு எடுக்க நேரிடும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். உடன் இருப்பவர்களிடம் எச்சரிக்கையாக பேசுவது உத்தமம். இராகு 11 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நீங்கள் உண்டு உங்கள் வேலையுண்டு என இருந்து கொண்டால் எந்த கஷ்டங்களும் உங்களை நெருங்காது.
சனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 05.08.2017 முதல் 19.12.2017 வரை
உங்கள் இராசிக்கு 9,12 இக்கு அதிபதியான புதன் சாரத்தில் சனியும், 02.09.2017 முதல் ஜென்ம இராசியில் குருவும் சஞ்சரிக்கும் இக்காலத்தில் எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். குடும்ப வாழ்வில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றாலும் விட்டு கொடுத்து நடந்து கொள்வதால் மகிழ்ச்சியான பலன்களே உண்டாகும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளால் அபிரிமிதமான லாபம் கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஏற்படக்கூடிய போட்டிகளால் லாபம் குறைந்து மந்த நிலை நிலவும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. புதிய தொழில் தொடங்குபவர்களுக்கும் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க இடையூறு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் உயரதிகாரிகளை அனுசரித்து செல்வது மூலம் வீண் பழிகளிலிருந்து தப்பிக்க முடியும்.
சித்திரை 3,4 ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு
கட்டான கம்பீரமான உடலமைப்பும் சிறப்பான ஒழுக்கமும் கொண்ட உங்களுக்கு ஏழரைச் சனியில் குடும்பச் சனி நடைபெறுவதால் கணவன் மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது அனைவரையும் அனுசரித்து நடப்பது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். ஆடம்பரமாக செலவுகள் செய்வது, பெரிய தொகைகளை பிறருக்கு கடனாகக் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டாகும். உடன் பணிபுரிபவர்களிடம் வீண் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
பிறர் துன்பம் கண்டு வருத்தப்பட்டு உதவிகள் செய்யக் கூடிய நற்குணம் கொண்ட உங்களுக்கு கொண்ட உங்களுக்கு ஏழரைச் சனியில் பாதச் சனி தொடருவதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களால் மருத்துவ செலவுகள் உண்டாகும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டி வரும். உற்றார் உறவினர்கள் தங்கள் பங்கிற்கு வீண் பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் உண்டாகி வரவேண்டிய வாய்ப்புகள் கை நழுவிப் போகும்.
விசாகம் 1,2,3 ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு
பண விஷயத்தில் எப்பொழுதும் ஜாக்கிரதையாக செயல்படக் கூடிய குணம் கொண்ட உங்களுக்கு ஏழரைச் சனியில் பாதச் சனி நடைபெறுவதால் குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் அதிக கவனம் தேவை. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் செலவுகளைக் கட்டுக்குள் வைப்பது நல்லது. உற்றார் உறவினர்களால் தேவையற்ற மனசஞ்சலங்கள் ஏற்படக் கூடும். நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைக் தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனமுடனிருப்பது நற்பலனைத் தரும்.
அதிர்ஷ்டம் அளிப்பவை
தேதி :- 4, 5, 6, 7, 8, 14, 15
கிழமை :- வெள்ளி, புதன்
நிறம் :- வெள்ளை, பச்சை
கல் :- வைரம்
தெய்வம் :- லட்சுமி
Monday, 10 November 2014
சனி பெயர்ச்சி பலன்கள் கன்னி 2014 -2017
கன்னி :- உத்திரம் 2, 3, 4 அஸ்தம், சித்திரை 1, 2
சுகபோக வாழ்க்கையை விரும்புபவராகவும் எப்பொழுதுமே குஷியாக இருப்பவராகவும் விளங்கும் கன்னி ராசி நேயர்களே! இதுவரை உங்களுக்கு நடைபெற்று வந்த ஏழரை சனியால் பல வகையில் துன்பங்களையும் இன்னல்களையும் சந்தித்து வந்தீர்கள். வரும் 16.12.2014 இல் ஏற்படவிருக்கும் சனி மாற்றத்தின் மூலம் ஏழரை சனி முழுமையாக முடிவடைகிறது. சனி; பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3 ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் கடந்த கால பிரச்சனைகள் யாவும் சூரியனை கண்ட பனிப்போல மறையும் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பொருளாதார நிலையிலிருந்த நெருக்கடிகள் யாவும் குறைந்து கடன்களும் விலகும். பணம் பலவழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சிறப்பான வரன் தேடி வரும். சிலர் நினைத்தவரையே கைபிடிப்பர். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். 3 இல் சஞ்சரிக்கும் சனி 5,9,12 ஆகிய வீடுகளைப் பார்வை செய்வதால் சிறுசிறு பிரச்சனைகள் நேரிட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. சேமிப்பு பெருகும். சமுதாயத்தில் கௌவரமான நிலை உண்டாகும். பூமி மனை சேர்க்கை, பொன் பொருள் சேர்க்கை, கடன்கள் இல்லாத கன்னியமான வாழ்வு அமையும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் அற்புதமாக இருக்கும்.
சனி 3 இல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் 05.07.2015 வரை குருபகவானும் லாப ஸ்தானமான 11 ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது சாதகமான அமைப்பாகும். இதனால் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும் புத்திர வழியில் மகிழ்ச்சிதரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பூர்வீக சொத்துகளாலும் லாபம் கிட்டும். 05.07.2015 முதல் 02.08.2016 வரை குரு விரய ஸ்தானமான 12 ஆம் வீட்டிலும் 02.08.2016 முதல் 02.09.2017 வரை குரு ஜென்ம இராசியிலும் சஞ்சரிக்க இருப்பதால் பணவரவுகளில் சிறுசிறு நெருக்கடிகள் தோன்றினாலும் தேவைக்கேற்றபடி எதிர்பார்த்த நேரத்தில் பணவரவு உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக செயல்படுவது சிறப்பு. தொழில் உத்தியோக ரீதியாக சிறுசிறு நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் என்றாலும் சனி சாதகமாக இருப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். 02.9.2017 முதல் 04.10.2018 வரை குரு தன ஸ்தானமான 2 ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பாகும். இக்காலங்களில் நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். பணம் பல வழிகளில் தேடி வரும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் அனைத்தும் விலகி நல்ல லாபத்தை அடைவீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலும் சரளமாக நடைபெறும்.
தேக ஆரோக்கியம்
உங்கள் ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3 ஆம் வீட்டில் சனி சஞ்சாரம் செய்வதால் இதுவரை நடைபெற்ற ஏழரைசனி முழுவதும் முடிவடைகிறது. இதனால் உடல் ஆரோக்கியமானது அற்புதமாக அமையும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய வலிமை உண்டாகும். குடும்பத்தில் மனைவி, பிள்ளைகள் மற்றும் வயதில் மூத்தவர்களும் ஒரளவுக்கு மகிழ்ச்சிகரமாகவே இருப்பார்கள். கடந்த காலங்களிலிருந்து வந்த மருத்துவச் செலவுகள் குறையும்.
குடும்பம் பொருளாதார நிலை
கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். நீண்ட நாட்களாக திருமணம் தடைப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். சிலர் விரும்பியவரையே மணம் முடித்து மகிழ்வார்கள். அழகான புத்திர பாக்கியமும் கிடைக்கப் பெறும். சொந்த வீடு, மனை வண்டி வாகனங்கள் வாங்க வேண்டுமென்ற ஆசை நிறைவேறும். புதிய வீடு கட்டும் திட்டங்களும் புதிய வீடு மாறும் வாய்ப்பும் உண்டாகும். பொன், பொருள் சேரும். இதுவரை பகைமை பாராட்டிய உற்றார் உறவினர்களும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய அளவிற்கு பொருளாதார நிலை சிறப்பாக அமையும். புதிய நவீனகரமானப் பொருட்களையும் வாங்கிச் சேர்ப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு
பணியில் எதிர்பார்த்துக் காத்திருந்த உயர் பதவிகளைப் பெற முடியும். இது நாள் வரை இருந்த வந்த பணிக்சுமைகளும், வீண்பழிச் சொற்களும் விலகி நிம்மதியான நிலை உண்டாகும். உங்களின் திறமைகளை உயரதிகாரிகள் புரிந்து கொண்டு பாராட்டுவார்கள். உடன் பணிபுரிபவர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள் ஊதிய உயர்வுகளும் கிடைக்கப் பெறுவதால் பொருளாதார நிலையும் உயரும். வெளிய+ர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பமும் நிறைவேறும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும்.
தொழில் வியாபாரிகளுக்கு
தொழில் வியாபாரம் செய்வர்களுக்கு புதிய புதிய வாய்ப்புகள் தேடி வரும். போட்டி பொறாமைகள் யாவும் விலகும். மறைமுக எதிர்ப்புகளை வெல்லக் கூடிய அளவிற்கு வலிமையும் வல்லமையும் உண்டாகும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலம் ஏற்படும். கூட்டாளிகளிடமும் தொழிலாளர்களிடமும் இருந்த பிரச்சனைகள் விலகி சுமுகமான நிலை உண்டாகும். வெளிய+ர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் லாபம் கிட்டும். அரசு வழியிலும் கடனுதவிகள் கிடைக்கப் பெறுவதால் புதிய நவீனகரமான கருவிகளை வாங்கி அபிவிருத்தியைப் பெருக்குவீர்கள்.
பெண்களுக்கு
உடல் ஆரோக்கியத்திலிருந்த பிரச்சனைகள் விலகி முன்னேற்றமான நிலை ஏற்படும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் தீரும். பொன், பொருள், ஆடை ஆபரணம் சேரும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியங்கள் கைகூடும். புத்திர வழியில் ப+ரிப்பும் மகிழ்ச்சியும் ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்கு நல்ல கௌரவமான பதவிகள் கிடைக்கப் பெற்று மனமகிழ்ச்சி ஏற்படும்.
கொடுக்கல் வாங்கல்
பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கொடுக்கல் வாங்கலும் சரளமாகவே இருக்கும் என்றாலும் சில நேரங்களில் பணவிஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். பிறரை நம்பி பெரிய தொகைகளைக் கொடுக்கும் போதும் முன்ஜாமீன் கொடுக்கும் போதும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கமிஷன் ஏஜென்ஸி போன்றவற்றில் நல்ல லாபம் கிட்டும்.
அரசியல்வாதிகளுக்கு
அரசியல்வாதிகளுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் விலகி மாண்புமிகு பதவிகள் தேடி வரும். உங்கள் பேச்சிற்கு மக்களிடையே நல்ல கௌரவம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிமேல் வெற்றிகளைப் பெறுவீர்கள். வெளிய+ர் வெளிநாடுகளுக்குச் சென்று வரக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். மக்களின் தேவைகளைப் ப+ர்த்தி செய்வதால் அவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.
விவசாயிகளுக்கு
நல்ல விளைச்சல் பெருகுவதால் லாபமும் அதிகரிக்கும். உழைப்பை விட லாபத்தைப் பன்மடங்கு பெற முடியும். அரசு வழியில் உண்டாகக் கூடிய எதிர்பாராத உதவிகளால் கடன் சுமைகள் குறையும். புதிய ப+மி, வண்டி வாகனங்கள் வாங்க வேண்டும் என்ற நோக்கமும் நிறைவேறும். ஆடு மாடு போன்ற கால்நடைகளாலும் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும்.
படிப்பு
மாணவ மாணவியருக்கு கல்வியிலிருந்த மந்தநிலைகளும், தடைகளும் விலகுவதால் பல சாதனைகளைச் செய்யக்கூடிய வாய்ப்பு உண்டாகும். கல்விக்காக அரசு வழியில் உதவிகள் கிடைக்கும். நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி, கல்லூரிகளுக்குப் பெருமை சேர்ப்பீர்கள். நல்ல நண்பர்களின் சேர்க்கையும் கிடைக்கப் பெறும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சியினை உண்டாக்கும்.
ஸ்பெகுலேஷன்: லாட்டரி ,ரேஸ் போன்றவற்றில் எதிர்பாராத வகையில் பண வரவுகள் ஏற்பட்டு வாழ்க்கைத்தரமானது உயர்வடையும்.
சனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 16.12.2014 முதல் 24.01.2015 வரை
சனிபகவான் ஜென்ம ராசிக்கு 3 ஆம் வீட்டில் விசாக நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்திலிருந்த பிரச்சனைகள் யாவும் விலகி மருத்துவச் செலவுகள் குறையும். எடுக்கும் முயற்சிகள் யாவற்றிலும் வெற்றி கிட்டும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத்தின் தேவைகள் ப+ர்த்தியாவதுடன் உங்களுக்கிருந்த கடன் பிரச்சனைகளும் படிப்படியாக விலகும். தொழில் வியாபாரத்திலிருந்த மந்த நிலை போட்டி, பொறாமைகள் யாவும் மறையும். நீங்கள் பட்ட கஷ்டங்கள் துயரங்கள் அனைத்தும் பகலவனை கண்ட பனி போல மறையும். ஜென்ம இராசியில் இராகுவும், 7 இல் கேதுவும் இருப்பதால் கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைவு ஏற்படலாம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும்.
சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 14.03.2015 வரை
தனது சொந்த நட்சத்திரத்தில் சனி 3 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குரு 11 இல் இருப்பதால் குடும்பத்திலும் மங்களகரமான சுப காரியங்கள் அனைத்தும் கைகூடும். தொழில் வியாபாரரீதியாக நல்ல லாபங்கள் பெருகும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். செல்வம், செல்வாக்கு சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். ப+மி, மனை, வாங்கும் யோகம் அமையும். பண வரவுகளும் தாரளமாக இருப்பதால் கடன்கள் நிவர்த்தியாகி குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். ஜென்ம இராசியில் இராகுவும் 7 இல் கேதுவும் இருப்பதால் கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள், உற்றார் உறவினர்களிடம் விண் வாக்கு வாதங்கள் ஏற்படலாம் என்பதால் நிதானமாக செயல்படவும்.
சனிபகவான் வக்ரகதியில் 15.03.2015 முதல் 30.07.2015 வரை
முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியில் இருந்தாலும் 11 இல் குரு சஞ்சரிப்பதால் எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும்.தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். தொழில் வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி அபிவிருத்தியைப் பெருக்கிக் கொள்ள முடியும். புத்திரர்களால் சில நேரங்களில் மன சஞ்சலங்கள் ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து விட முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும்.
சனிபகவான் துலா இராசியில் விசாகம் நட்சத்திரத்தில் 31.07.2015 முதல் 05.09.2015 வரை
உங்கள் இராசிக்கு 3 இல் சஞ்சரித்த சனி இக்காலத்தில் பின்னோக்கி 2 இல் சஞ்சரிக்க இருப்பதால் மீண்;டும் ஏழரை சனியின் பாதிப்பு ஏற்படும். குருவும் 12 இல் இருப்பதால் பணவரவுகள்; ஏற்ற இறக்கமாக இருக்கும். அதனால் பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு வர வேண்டிய வாய்ப்புகள் தாமதப்படும். போட்டிகளை எதிர் கொண்டு வெற்றி பெற முடியும். கூட்டாளிகளையும். தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் சிலருக்கு தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும். முன்கோபத்தை குறைப்பது பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது போன்றவற்றால் வீண் குழப்பங்களை தவிர்க்கலாம்.
சனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 06.09.2015 முதல் 18.10.2015 வரை
உங்கள் இராசிக்கு 4,7 இக்கு அதிபதியான குருவின் நட்சத்திரத்தில் சனி 3 இல் சஞ்சரிப்தால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகளைப் பெறுவீர்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கும். கடந்த கால பிரச்சினைகள் படிப்படியாக குறைந்து பணவரவுகளும் தாரளமாக அமையும். குரு 12 இல் இருப்பதால் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் உங்களுக்கு எந்தப் பிரச்சினைகளும் உண்டாகாது. பொன், பொருள் சேரும். கடன் சுமைகளும் குறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். தொழில் வியாபார ரீதியாகவும் உயர்வுகள் ஏற்படும். வெளிய+ர் வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களும் ஒத்துழைப்பாக இருப்பார்கள். ஜென்ம இராசியில் இராகுவும், 7 இல் கேதுவும் சஞ்சரிப்பதால் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது நல்லது.
சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 19.10.2015 முதல் 26.03.2016 வரை
சனிபகவான் தனது சுய நட்சத்திரத்தில் 3 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் குருபகவான் 12 இல் சஞ்சரித்தாலும் சுபிட்சமான நிலையே தொடரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை உண்டாகும். ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வதும், கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்படுவதும் நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினைப் பெறமுடியும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல கௌரவமான உயர்பதவிகளும் கிடைக்கும். வெளிய+ர் வெளிநாடுகளுக்குச் சென்று வரக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். பொருளாதார நிலை உயர்வடையும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற முன்னேற்றமான வேலை வாய்ப்பு அமையும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படக்கூடும் என்றாலும் அதன் மூலம் அனுகூலமான பலனைப் பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவதன் மூலம் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும்.
சனிபகவான் வக்ரகதியில் 27.03.2016 முதல் 11.08.2016 வரை
உங்கள் இராசிக்கு 3 இல் சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் சற்று ஏற்ற இறக்கமான பலன்கள் ஏற்படும். சிறு சிறு வீண் விரயங்களை எதிர் கொள்ள நேரிட்டாலும் பெரிய கெடுதியில்லை. உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடன்கள் இன்றி வாழலாம். பணம் கொடுக்கல் வாங்கலிலும் கொடுத்த கடன்களை திரும்ப பெறுவதிலும் தடைகள் உண்டாகும். செய்யும் தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு லாபம் அமையும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடமும், விட்டு கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நெருக்கடிகளை சந்தித்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். குருபகவான்; 18.5.2016 வரை வக்ரகதியில் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். திருமண சுபகாரியங்கள் சிறு சிறு தடைகளுக்கு பின் கை கூடும். கேது 6 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும்;.
சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 12.08.2016 முதல் 18.11.2016 வரை
உங்கள் இராசிக்கு முயற்சி ஸ்தானமான 3 இல் சனியும் 6 இல் கேதுவும் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பாகும். குரு ஜென்ம இராசியில் சஞ்சாரம் செய்வதால் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. திருமண சுப காரியங்களில் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். சிலருக்கு வீடுமனை, வண்டி வாகனம் வாங்க கூடிய யோகமும் அமையும். நினைத்த காரியம் யாவும் வெற்றி பெற்று மன மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்திலும் மகிழ்ச்சி ஒற்றுமை, லட்சுமி கடாட்சமான நிலைகள் நிலவும். உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகத்திலும் உயர்வுகளும் அதிகாரிகளின் பாராட்டுதல்களும் உங்களுக்கு மேலும் மேலும் உற்சாகத்தை உண்டாக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சில போட்டிகளை சந்தித்தாலும் எதிர் பார்த்த லாபங்களை அடைய முடியும். அரசியல்வாதிகளுக்கு பெயர் புகழ் உயர கூடிய காலமாகும். மக்கள் ஆதரவும் தொண்டர்கள் ஆதரவும் உற்சாகத்தை உண்டாக்கும்.
சனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 19.11.2016 முதல் 08.04.2017வரை
உங்கள் இராசியாதிபதி புதன் சாரத்தில் சனியும், 6 இல் கேதுவும் சஞ்சரிப்பதால் உடல்நிலை மிக சிறப்பாக அமையும். உங்கள் செல்வம், செல்வாக்கு, புகழ் அந்தஸ்து யாவும் உயரும். வெளிவட்டார பழக்க வழக்கங்களால் உங்களுக்கு பெருமை உணடாகும். எடுக்கும் காரியங்களில் வெற்றியைப் பெறுவீர்கள். பண வரவுகள் ஓரளவுக்கு தாராளமாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த கூடிய சந்தர்பங்கள் அமையப்பெற்று அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள். தொழிலும் எதிர்பார்த்த லாபமும் முன்னேற்றமும் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி அனைவரின் நம்பிக்கைக்கும் பாத்திரமாவீர்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும்.
சனிபகவான் வக்ரகதியில் 09.04.2017 முதல் 04.08.2017 வரை
உங்கள் இராசிக்கு 3 இல் சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் உடல் நிலை சுமாராக அமையும். நிறைய தனவரவுகள் வந்தாலும் அதற்கேற்ற செலவுகளும் உண்டாகும். குடும்ப வாழ்வில் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. புத்திரவழியில் வீண் செலவுகள் உண்டாகும். வண்டி வாகனம் வாங்கும் முயற்சிகளில் கடன்கள் உண்டாகும். உத்தியோக நிலையில் பதவி உயர்வுகள் அமைந்தாலும் புதிய பொறுப்புகள் அதிகரிக்கும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பூர்வீக சொத்துகளால் சுபசெலவு உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் பழைய பாக்கிகளை வசூலிப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள். சில நெருக்கடிகள் உண்டாவதால் சங்கடங்கள் நேர்ந்தாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலும் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைப்பது மூலம் கடன்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். கேது 6 ஆம் வீட்டில்; சஞ்சரிப்பதால் நினைத்த காரியங்கள் யாவற்றையும் நிறைவேற்றிக் கொள்ள கூடிய அளவிற்கு பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும்.
சனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 05.08.2017 முதல் 19.12.2017 வரை
சனி தனக்கு நட்பு கிரகமும் உங்கள் இராசிக்கு அதிபதியுமான புதன் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலத்தில்; பொன்னவன் என போற்றப்படும் குரு பகவான் தன ஸ்தானமான 2 இல் 02.09.2017 முதல் சஞ்சரிக்கவிருப்பதால் உங்கள் ஆரோக்கியம் சிறப்பானதாக அமையும். கடந்த கால பிரச்சினைகளும் மனக்கவலைகளும் மறைந்து நிம்மதி உண்டாகும். பணவரவில் இருந்த தடைகள் விலகி நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். நீங்கள் திட்டமிட்ட காரியங்களை தெளிவாக செயல் படுத்த முடியும். கணவன் மனைவி உறவு மிகவும் திருப்திகரமாக அமையும். பெரியவர்களின் ஆசியும், மனதிற்கு சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும். தெய்வீக ஆன்மீக செயல்களில் ஈடுபாடு உண்டாகும். புத்திர வழியில் பூரிப்புகளும் உறவினர்களால் சாதகமான பலன்களும் அமையும். கொடுக்கல், வாங்கல்கள் சரளமாக இருக்கும். கொடுத்த பாக்கிகளை தடையின்றி வசூலிக்க முடியும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் அதிநவீன பொருட் சேர்க்கைகளும் சேரும். வீடுமனை வாங்கக் கூடிய யோகமும் உண்டாகும்.
உத்திரம் 2,3,4 ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு
நன்றி மறவாத தன்மையும், தர்ம நெறி தவறாது விளங்கும் பண்பும் கொண்ட உங்களுக்கு உங்களுக்கு சனி பகவான் 3 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நினைத்ததெல்லாம் நிறைவேறும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் கடன்கள் யாவும் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பிரிந்து உறவினர்களும் தேடி வந்து ஒற்றுமைக் கரம் நீட்டுவார்கள். கொடுக்கல் வாங்கலும் சரளமாக இருக்கும். பொன் பொருள் சேரும். உத்தியோகத்தில் கௌரவமான பதவிகள் கிட்டும். உங்கள் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் உயரும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.
அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
அனைவரிடமும், மரியாதையாக பழகும் குணமும் உயர்ந்த பண்பும் கொண்ட உங்களுக்கு உங்களுக்கு சனி பகவான் 3 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாக இருந்த எதிர்ப்புகள் மறையும். வெளிய+ர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பமும் நிறைவேறும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து அந்நியோன்னியம் அதிகரிக்கும். அழகான புத்திர பாக்கியமும் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். நினைத்தது நிறைவேறும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவீர்கள்.
சித்திரை 1,2 ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு
மனம் திறந்து பேசும் ஆற்றலும் நல்ல அறிவுக் கூர்மையும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3 இல் சனி பகவான் சாதகமாக சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். இதுவரை நீங்கள் பட்ட கஷ்டங்கள் யாவும் பனிபோல மறையும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். அசையும் அசையா சொத்துகள் சேரும். ஆடை ஆபரண சேர்க்கைகளும் உண்டாகும். தொட்டதெல்லாம் துலங்கும். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றங்களைப் பெறுவர். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் மறைந்து லாபங்கள் பெருகும்.
அதிர்ஷ்டம் அளிப்பவை
தேதி :- 4, 5, 6, 7, 8, 13, 14
கிழமை :- புதன், வெள்ளி;
நிறம் :- வெள்ளை, பச்சை
கல் :- மரகதம்
தெய்வம் :- விஷ்ணு
Subscribe to:
Posts (Atom)