Monday, 25 September 2017

நமக்கு தெரியாமல் நம்முடைய தோஷத்தை அழித்து விடும் ரகசியங்கள்



நம்முடைய சில செயல்கள் நமக்கு எவ்வாறு தோசமாகி நம்முடைய வளர்ச்சியை கெடுக்கிறது என்று நமக்கு தெரியாது
அதுபோல சில நல்ல செயல்கள் நம்முடைய தோஷத்தை விளக்கி நமக்கு நம்மை செய்யும் ......

1.படுக்கை அறையில் தலை அருகே நீரை வைத்து உறங்கிவிட்டு அந்த நீரை காலையில் செடிகளுக்கு விட சுக்ர தோஷம் படி படியாக குறையும் .

இந்த விவரத்தை மாற்றி சொல்லலாம் ,படுக்கைக்கு நாம் எடுத்து செல்லும்
குடி நீர் காலையில் மிதம் இருந்தால் செடிகளுக்கு குறிப்பாக துளசி அல்லது தொட்ட சினிக்கி செடிகளுக்கு விட்டு விட வேண்டும் ....

2.அடிக்கடி பசுவிற்கு வாழை பழம்,கற்கண்டு பொங்கல் கொடுப்பது சந்திரனின் ஆசிகளை நமக்கு கொடுத்து புகழை பெற்று தரும் .

3.வசதி இல்லாத குடும்பத்தினருக்குப் ஈமச் சடங்குகள் செய்ய
பணம் ,பொருள் கொடுத்து உதவி செய்தல் சனியின் ஆசிகளை கொடுத்து
ஆயுளை விருத்தி செய்யும் .

4.ஆசான் ,வேதம் படித்தவர் ,நம் முன்னோர்கள் மற்றும் சாதுக்களை விழுந்து வணங்கிட, புண்ணிய யாத்திரைக்கு இல்லாதவருக்கு பொருள் கொடுத்து உதவுது ,குழந்தை பெற்ற ஏழை தம்பதியருக்கு பொருள் கொடுத்து உதவுவது , குருவின் ஆசிகள் கிடைக்கும் .

5.சிதலம் அடைந்த கோவில்களுக்கு நீர்நிலை உண்டாக்குதல் /தண்ணீர் தொட்டி /குளம் சரி செய்தல் அல்லது செய்பவருக்கு உதவுதல்
தேவதைகளின் ஆசிகளை கொடுத்து நமக்கு வசியமும் கவர்ச்சியும் கொடுத்துவிடும் .

6.சிவ பெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வதும் பசித்து தவிக்கும் உயிர்களுக்கு உணவு அளிப்பதும்,கோவிலுக்கு சொர்ணத்தை தானமாக அல்லது கலசத்திற்கு தருவது ,தொழு நோய் /குஷ்டம் கண்டவர்களுக்கு வைத்திய செலவு அல்லது அவர்களுக்கு நல்ல உணவு அளிப்பது சூரியனின் ஆசிகளை கொடுத்து நல்ல ஆரோக்கியம் மற்றும் வம்ச விருத்தி செய்யும் .

7.திருமணம் செய்ய ஏழை பெண்களுக்கு பொருள் கொடுத்து உதவுதல் ,
நம் வாழும் மனை ,தொழில் செய்யும் மனை கைகளால் தொட்டு வணங்குதல் ,மேலும் பூமிக்கு மரியாதை செய்தல்,பல உயிர்களை வளர்த்தல் (விலங்கு ,பறவைகள் ),உயிர் பலிகளை நாம் தவிர்த்தல் ,இல்லாதவர்களுக்கு மருத்துவ செலவிற்கு பணம் கொடுத்தல் செவ்வாயின் ஆசிகளை கொடுத்து அஷ்ட சுகம்களையும் தரும் .

8.ஏழை குழந்தைகளுக்கு கல்விக்கு பொருள் உதவி செய்தல் ,புதன் கிழமை
தோறும் அன்னதானம் செய்தல் ,புதிய உடைகளை தானம் செய்தல் (குறிப்பாக குளிர் காலத்தில் செய்வது ) புதனின் ஆசிகளை நமக்கு கொடுத்து சண்டை ,பொறாமையினால் வரும் நோய் (திருஷ்டி )
நீதிமன்ற சோதனை போன்ற தொல்லைகளை விலக்கி நல்ல தொழில் ,
மென்மையான வாழ்க்கையை கொடுக்கும் .

9.நாகங்க்ளை கண்டதும் அடிக்காமல் இருப்பது ,இறந்த நாகத்தின் உடலை
கண்டதும் தீயிட்டு கொளுத்துவது ,
குடி கெடுத்தவன் ,குடிகாரன் ,குரு துரோகி ,பசுவை கொன்றவன் ,சண்டாளன் -- இவர்களிடம் நட்பு கொள்ளாமல் தவிர்ப்பது ராகு -கேது ஆசிகளை கொடுத்து அதிர்ஷ்டம் ,போகம்,மற்றும் சகல பாக்கியத்தை அனுபவிக்கும் ஆசிகளை தரும் .
( இந்த பஞ்ச மஹா பாவிகளை அடையாளம் கண்டு கொள்வது சற்று சிரமும் தான் ,தெரிந்து சேர்வது நமக்கு தரித்தரம் )

10.பாழடைந்த சிவன் கோவிலில் விளக்கு ஏற்றுவது ,பிரதோஷ நாளில் சிவ ஸ்தலங்களுக்கு முடிந்த வரையிலான அபிஷேகத்திற்கு தேவையிலான பொருட்களை வாங்கி கொடுப்பது,
வெள்ளத்துடன் பச்சரிசி துளை கலந்து அந்த கோவிலின் சுற்று பிரகாரத்தில் தூவி விடுவது தேவர்களை சாந்தி படுத்திவிடும் ,இவர்கள் நம் முன்னோர்களுக்கு மோட்ச பதவி அளிப்பார்கள் ....

இவைகள் பொதுவானவை
ஒரு முறை செய்யும் பரிகாரம் அல்ல
வழக்கமாக செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை
புரிந்து செய்தாலும் ,தெரியாமல் செய்தாலும் பலன் ஒன்று தான் .....

Friday, 8 September 2017

தாசி சக்கரம்


பெண் வேலைக்காரர்களை சேர்க்கும் எஜமானர்கள் வேலைக்கு சேர்க்கும் பெண் வேலையாட்களின் நட்சத்திரத்தில் இருந்து எஜமானரின் நட்சத்திரம் வரை எண்ணிவர,
1,2,3 ஆக இருந்தால் லாபம் உண்டு.
4,5,6 ஆகின் நஷ்டம் தான்.
7,8. ஆகின் எஜமான் மரணமடைவார்.
9,10,11,12,13 ஆகின் தொழில் விருத்தி உண்டு.
14லிருந்து 20க்குள் இருப்பின் நஷ்டம் தான்.
21ஆகின் அவமானப்படுவார்.
22லிருந்து 27க்குள் இருப்பின் செல்வங்களை எல்லாம் இழப்பார்.
இவையாவும் பெண் வேலைக்காரர்களை சேர்ப்பதனால் எஜமானருக்கு ஏற்படும் பலன்களாகும்.

Tuesday, 1 August 2017

முன்னோர் வழிபாட்டாலருக்கு மகிழ்ச்சியான செய்தி.....
நடக்கபோகிற ஆகஸ்ட் மாதம் நம் வரலாற்றில் மாற்றமுடியாத மாதமாக இருக்க போகிறது இந்த உலகத்தை ஆளும் அந்த சூரியவழிபாட்டுகுடும்பம் தனது மொத்தபலத்தையும் சிறிது நேரம் இழந்து நிற்கும் நேரம் வரப்போகிறது...
ஆம் ...99 வருடத்திற்கு ஒரு முறை நிகழும் ஒரு சூரியக்கிரகணம் நிகழப்போகிறது...
மிகச்சரியாக
ஆகஸ்டு 7 அன்று 3/4 பங்கும்
ஆகஸ்டு 21 அன்று முழுவதும்
சூரியன் மறையப்போகிறது
அன்று சூரியவழிபாடு
செய்யும் அத்தனை கோவில்களையும் இழுத்து பூட்டிவிட்டு  ஓடுவதை நீங்கள் கண்டிப்பாக பார்ப்பீர்கள்...
அன்று நமது குலதெய்வங்களான கருப்பசாமிகள் மற்றும் நமது முன்னோர்களின் நினைவலைகள் மிகவும் வீரியம் கொள்ளும் அந்த நேரம் பலிகொடுத்து அவர்களுடன் நமக்கு ஒரு உடன்படிக்கை செய்துகொள்ளலாம்...
கருப்புகள் எப்போதும் உடன்படிக்கைக்கு கட்டுப்படும்...
இந்த நேரம் எதிரியின் கட்டுகள் பலம் இழந்துவிடும்...
தயவு செய்து நமது பழங்குடிகளின் வழிபாடான குலதெய்வ பலிகொடுத்தலுக்கு திரும்புங்கள்...
உலகத்தை ஆளுபவன் சூரியனின் சக்தியை தவறாக பயன்படுத்தியே ஆளுகிறான்...
அன்று குலதெய்வத்திற்கு பலிகொடுக்க முடியாதவர்கள் வீட்டில் அசைவமாவது சமைத்து உண்ணுங்கள்...
ஓரளவு முடிந்தவர்கள் சேவலை பலிகொடுத்து குலதெய்வத்திடம் உடன்படிக்கை செய்துகொள்ளுங்கள்.
என்னால் முடியும் நான் வெற்றிபெற விரும்புகிறேன் என்பவர்கள் சரியாக சூரியகிரகணம் நிகழும் நேரத்தில் துல்லியமாக பலிகொடுங்கள்...
இதுவரை நாகரீகம் என உருவாக்கப்பட்ட தீமைகள் அனைத்தும் இந்த கிரகணத்தில் தான் அழிக்கப்பட்டது என்பது கூடுதல் தகவல்
எ:கா துவாரகா....
அடுத்தமாதம் வரலாற்றில் பல மாறுதல்கள் நடக்க வாய்ப்புகள் உண்டு
இதே போல ஒரே ஆண்டில் தொடர்ந்து 4 கிரகணங்கள் வருவது வரலாற்றில் பழங்குடிகளுக்கு சிறப்பு வெற்றி நன்மை...
சூரியவழிபாட்டாளனுக்கு தீமை...
இறந்த உங்கள் தாய் தந்தைக்கும் கூட இந்த நாளின் குறிப்பிட்ட நேரத்தில் அசைவப்படையல் போடலாம்...
(சிவகுமார் கோன்)

Thursday, 27 July 2017

மந்திர சாஸ்திரத்தின் உதவியுடன் பட்சியை சாதகமாக்கிக்கொள்ளும் முறை

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒருவருடைய பட்சி எந்த தொழிலை செய்துகொண்டிருந்தாலும், அது பற்றி கவலைப்படத்தேவையில்லை. பட்சம்,கிழமை,பொழுது அறிந்து அதற்கு தகுந்தவாறு பஞ்சாட்சரம் என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை முறைப்படி அட்சர மாறல்(எழுத்து மாற்றம்) செய்து ஜெபித்து வந்தால் எப்பொழுதும் வெற்றியடையலாம் எனக்கூறப்படுகிறது. “நமசிவய” என்பது பஞ்சாட்சரம் என்னும் ஐந்தெழுத்து மந்திரமாகும்.
1. பூர்வபட்சம் பகலில் வெற்றி பெற “நமசிவய” என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தில் உள்ள கடைசி எழுத்தான “ய” வை முதலெழுத்தாக்கிக்கொண்டு,அதாவது “நமசிவய” என்பதை “யநமசிவ” என மாற்றிக்கொண்டு ஜெபித்தால் வெற்றி உண்டாகும்.
2. பூர்வபட்சம் இரவில் வெற்றி பெற “நமசிவய” என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தில் உள்ள நான்காவது எழுத்தான “வ” வை முதலெழுத்தாக்கிக்கொண்டு,அதாவது “நமசிவய” என்பதை “வயநமசி” என மாற்றிக்கொண்டு ஜெபித்தால் வெற்றி உண்டாகும்.
3. அமரபட்சம் பகலில் வெற்றி பெற “நமசிவய” என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தில் உள்ள இரண்டாவது எழுத்தான “ம” வை முதலெழுத்தாக்கிக்கொண்டு,அதாவது “நமசிவய” என்பதை “மசிவயந” என மாற்றிக்கொண்டு ஜெபித்தால் வெற்றி உண்டாகும்.
4. அமரபட்சம் இரவில் வெற்றி பெற “நமசிவய” என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தில் உள்ள மூன்றாவது எழுத்தான “சி” வை முதலெழுத்தாக்கிக்கொண்டு,அதாவது “நமசிவய” என்பதை “சிவயநம” என மாற்றிக்கொண்டு ஜெபித்தால் வெற்றி உண்டாகும்.
5. பஞ்சாட்சரத்திற்கு முன் “ஓம்” எனவும், பஞ்சாட்சரத்திற்கு பின் “சுவாஹா”எனவும் சேர்த்துக்கொண்டு ஜெபிக்கவேண்டும்.

Tuesday, 18 July 2017

ஜோதிட ரகசியங்கள் பாகம் 1

1, புதன் புதியன  விரும்பிசூரியனுடன் இருக்கும் போது பல பெண்களை விரும்புவார்கள்....ஆசைகள் மாறிக்கொண்டே இருக்கும் ..தொழிலில் கெட்டிக்காரர்கள் படிப்பில் சுட்டி..                                                       

2,
குரு கெட்டிருக்க கணவன் மனைவிக்குள் சண்டை வரும்.                                                

3,
சனி கர்மா சம்பந்தமில்லாமல் உடல் இணையாது. சனி  - லக்னம், லக்னாதிபதி, 7-மிடம், 7-ம் அதிபதிகளை பார்க்க திருமணம் விரும்பி சூரியன் + புதன் சம்பந்தம் மதன கோபாலயோகம் பல பெண்கள் தொடர்ப.<         டைபெறும்.                                         

4,
சந் + ராகு திருட்டு கிரகம்

5,
சந்திரனுடன் எத்தனை கிரகம் சம்பந்தப்பட்டிருக்கின்றதோ காமத்தில் அதனுடைய தாக்கம் இருக்கும் சந் + சுக் காமம் அதிகம்.                                                   

6,
பிரிந்து போக நினைப்பது ராகு, பிரித்து வைப்பது  கேது.                                       

7,
குருவிற்கு 1-படை ராசியில் 3-5-7-9-11 ல் சுக்கிரன் இருக்க நன்றாக இருக்கும.                                                                        

8, 2,11-
ல் தொடர்பு வைப்பாட்டி வைத்துக் கொள்வார்கள்.                                   

9,
திருமணத்தன்று 5,12-ன் கிழமை, நடசத்திரங்கள் வரக் கூடாது.                    

10,
சூரி + சனி பெண் வீட்டுடன் மாப்பிள்ளையாக இருக்க நேரிடும். அப்பா பெண் மேல் அதிக பாசமாக இருப்பார்.                                                     

11,
பெண் சந்திரனுக்கு ஆண் சந்திரன் 11-ல் இருக்க சுபம். சந்திரனுக்கு 11-ல் லக்னம், லக்னத்திற்கு 11-ல் சந்திரன் இருக்க இனிய திருமணம்.                               

12, 1,2,8-
க்குடையவர்கள் திருமணத்தை நிர்மாணிக்கிறார்கள்

13,
சனி + ராகு + சந் சேர சிறுநீரக கல் பிரச்சனை வரும். மூவரும் சேர்ந்தோ அல்லது மூவரும் நீர் ராசிகளiல் இருந்தாலும் சிறுநீரக கல் பிரச்சனை வரும். எப்போது? மூவரும் இணையும் காலம் நீர் வீடு மீனம், கடகம், விருச்சிகம்.

14,
ஒரு ஜாதகத்தில் திசாநாதன் இன்னொரு ஜாதகத்தில் அஸ்தமனம் ஆனால், பிரிவினையை இழப்பை தரும். நல்ல யோக நிலையில் இருக்க மிக்க யோகம்.

15, 5-
ம் அதிபதி குருவாகி சூரியன், ராகு, கேது, நட்சத்திரத்தில் இருக்க குழந்தை பிறக்காது.

16,
சனி 5,7-ல் அமர்வது சனி தோஷம் சந் + சனி சேர்க்கை பார்வை புனர்பூ யோகம்.                                                                         

17,
இரு ஆதிபத்தியமுள்ள கிரகங்கள் பரிவர்த்தனை ஆகும் போது, பரிவர்த்தனை ஆகாத பாவங்கள் பலி வாங்கும். அல்லது பலி எடுக்கும். பரிவர்த்தனை ஆகாத பாவத்தில் ராகு அமரக் கூடாது.                                           

18,
நிலம் வாங்க பிறந்த கால செவ்வாய்க்கு கோட்சார செவ்வாய் 2-12, 6-8, ஆக இருக்க கூடாது. குரு, செவ்வாய் சம்பந்தம் ராசி அல்லது அம்சம் ஆகியவைகளiல் இருப்பவர் மட்டுமே வீடு வாங்க இயலும், செவ்வாய் கட்டிய வீடு, புதன் காலி இடம்.                                                              

19,
நீண்ட கால பலனுக்கு திசாநாதன் சம்மதிக்க வேண்டும் குறுகிய கால பலனுக்கு புத்திநாதன் சம்மதிக்க வேண்டும்.                                                  

20,
சந்திரன் 6,8-ல் உள்ள ஜாதகம் உடல் ரீதியான தொந்தரவு கொடுக்கும்.

21,
ரேவதி குறுகிய நட்சத்திரம் குளiர்ந்த மொட்டு விசாகம் அதிக காம நட்சத்திரம் நெருப்பு குழம்பு உஷ்ணம்.                                                  

22
வக்கிர கிரககங்கள் தன் காரகத்துவத்தின் தனித் தன்மையை தக்க வைத்துக் கொள்வதில்லை.                                                                 

23,
சிம்மம், கும்பம், லக்னம் உள்ளவர்கள் தத்து போக கூடிய லக்னம். குழந்தை வெளiயே வாழம்f.                                                                  

24, 7-
ம் அதிபதி 3-ல், 3-அதிபதி -7 ல் இருக்க மணப் பெண் தானே தேர்ந்தெடுப்பர்கள்.

25, 9-
கிரகத்தில் எது குறைந்த பாகையில உள்ளதோ அதுவே மனைவியின் ராசியாக அமையும்.                                                                   

26,
அதிக பாகை, கலை, எந்த கிரகம் பெற்றுள்ளதோ அதன் காரகத்துவ வேலையை செய்வார்.                                                                

27,
உச்ச வீடுகளை பரிமாறிக்கொள்ளும் கிரகம் திடீர் முடிவுகளை எடுக்கும். விபரிதம் என்று தெரிந்தும் செய்வார்கள். வாழ்க்கையை புரட்டிப் போட்டு விடும்.

28,
அங்காளi, பங்காளi, குறிக்கும் கிரகம்  புதன். புதன் நீச்சத்தில் இருக்க, அங்காளi, பங்காளi, ஆகாது.                                                                 

29,
சனி மகரம் செவ்வாய் துலாம் இருக்க காரகத்துவ ரீதியான முடிவுகளை எடுக்கும். இவர் உடன் பிறந்த அக்காவை கற்பழித்தார். ( சனியும் செவ்வாயும் உச்ச பரிவர்த்தனை ஆகியுள்ளது. )                                     

30,
உச்ச வீடுகளை பரிமாறிக் கொள்ளும் கிரகம் விபரிதம், என்று தெரிந்தும், திடீர் முடிவுகளை எடுக்க வைக்கும்.

31,
ஒரு கிரகம் தன் நின்ற வீட்டின் 8-ஆம் அதிபதியோடு தொடர்பு கொண்டால் தனது காரகத்துவத்தின்f மூலம் அவமானம் அடையும்.

32,
ஒரு கிரகம் தான் நின்ற வீட்டின் 12- ம் அதிபதியோடு தொடர்பு கொண்டால் தனது காரகத்துவத்தினை இழக்கிறது.                                        

33,
ராகு கேது அச்சை விட்டு வெளiயேறிய கிரகம் தனது காரகத்துவ அடிப்படையில் தனித்து நிற்கிறது.                                                    

34,
மேசம் லக்னம் சூரி + சந் 7-ல் குரு சூரியனுக்கு 12-ம் அதிபதி குருவின் தொடர்பு எனவே 3-மகன்களும் இறந்து விட்டார்கள் லக்னத்திற்கு 5-வீடு சூரியன் எனவே மகனைக் குறிக்கும்.                                                      

35,
ஸ்திர லக்னத்தில்  மூத்த பையன் பிறக்க பாதிப்பையும் பெண் பிறக்க யோகத்தினையும் செய்யும் 12-வருட காலம் மட்டும் செய்யும்.                                  

36,
நல்லதையோ கெட்டதையோ செய்ய வேண்டுமானால் அந்த கிரகம் நடப்பில் உள்ள கிரகங்கள் சேர பார்க்க வேண்டும்.                                                

37, 
சனி கேது பிறப்பில் உள்ள ஜாதகருக்கு சனி மகத்தில் வரும் காலம் தொந்தரவு செய்யும். கண் பாதிப்படையும்.                                           

38,
வீட்டை விட்டு ஓடிப் போபவர்கள் வக்கிர கிரக திசையில் போனால், திரும்பி வருவார்கள். வக்கிரம் ஆகி அஸ்தமனமும் ஆகி அந்த திசையில் போனால் திரும்ப வர மாட்டார்கள்.                                                              

39, 
சனி கேது தொடர்பு எந்த வகையில் வந்தாலும், அதிர்ஷடத்தை நம்பி செய்யும் ரேஸ், லாட்டரி, கிளப், சூதாட்டம், தொழில் வீழ்ச்சி அடையும்.                                                  

40,
கோட்சார சந்திரன் சுக்கிரனை தொடும் காலம் பணம் வரும்.                                        

41,
சனி பிறந்த ஜாதகத்தில் அசுபதி 1,2,3-ஆம் பாதத்தில் உள்ளவர்களுக்கு கோர்ட் கேஸ் வரும். சனி பிறந்த ஜாதகத்தில் மகம் 1,2,3-ஆம் பாதத்தில் உள்ளவர்களுக்கு வீடு aIதியான வழக்கு வரும். கோட்சார சனி அசுபதி 1,2,3- பாதத்திலும் மகம் 1,2,3- பாதத்திலும் வரும் போது இச்சம்பவம் நடைபெறும்.

42,
கோட்சார சந்திரனை எத்தனை கிரகம் பார்க்கின்றதோ அதன் காரகத்துவத்தை செய்யலாம் என்று சொல்லலாம்                                                       

43,
தொழிலைப் பற்றி கேட்கும் போது சனியை சந்திரன் தொடர்பு இருக்க வேண்டும் அப்போது தான் வேலை கிடைக்கும.                                        

44,
குரு சந்திர யோகத்தில் தான் ஒருவர் வீட்டை விட்டு ஓடுவார்.                                             

45,
பிறந்த கால சந்திரன், கோட்சார புதனை பார்த்தாலும், கோட்சார சந்திரன் பிறந்த கால புதனை பார்த்தாலும் படிப்பு மந்தம்.                                          

46,
குழந்தை உண்டா என்ற கேள்விக்கு, கோட்சார சந்திரன், குருவை பார்க்க வேண்டும். இருவர் ஜாதகத்திலும் பார்க்க வேண்டும்.                                        

47,
உச்ச கிரக காரகத்துவத்தை மதிக்க வேண்டும்.                                   

48,
புதன் உச்சம் பெற, கடன் காரரை கண்டு பயப்படுவார்கள். காலச்சக்கர விதிப்படி புதன் 6-க்குரியவர். லகனத்திற்கு 6-க்குயைவருடன் புதன் சேர பெருத்த கடன் காரராக இருப்பார்.                                                            

49,
ஒரு ஜாதகத்தில் ஒரு கிரகம் நீச்சமாக இருக்கும் பட்சத்தில், அவர் கால புருஷனுக்கு எத்தனையாவது ஆதிபத்தியம் உள்ளவரோ, அப்பாவக காரகத்துவம் வழியாக தொந்திரவு இருக்கும். தொந்தரவுக்கு பயப்படமாட்டார்.      

50. லக்னத்திற்கு 4,7 ஆகிய கேந்திரங்களில் சுபக் கிரகங்கள் சேர்ந்து நிற்கப் பிறந்த ஜாதகன் பொன் பொருள் மற்றும் கோடி ரூபாய் சம்பாதிக்கும் திறம் பெற்று சிறப்புடன் வாழ்வான். பலவித வாகனம் பெற்று பெருமை அடைவான்