Thursday, 12 October 2017

உணவில் சில ரகசியங்கள்

• சனிக்கிழமையன்று நவதானிய அடைதோசை நல்லெண்ணெய் விட்டுச்சாப்பிட்டால் நவக்கிரகங்கள் திருப்தியடையும். இதனால், அஷ்டமச்சனி,கண்டகச்சனி, ஏழரைச்சனி முதலியவற்றின் தாக்கம் குறையும்.

•தினமும் ஏதாவது மந்திர ஜபம் செய்துவிட்டு நமது தினசரிக் கடமைகளைத் துவக்க வேண்டும். அப்படி மந்திர ஜபம் முடிந்த வுடனே ஒரு தம்ளர் இளநீர்அருந்தினால் நாம் ஜபித்த மந்திர அலைகள் நம் உடலுக்கு உள்ளேயே பதிவாகிவிடும்.

• கடலை எண்ணெய் குடும்பத்தில் கலகத்தை உண்டாக்கும். எனவே, குடும்பத்தில் கடலை எண்ணெயைப் பயன்படுத்துவதை பெருமளவு குறைப்பது நல்லது. ஏனெனில், இந்தக் கலகம் குடும்பங்கிளிடையே பரவி, நாடு முழுக்க கலகத்தை உருவாக்கும்.

• பாமாயில் (பனை மர எண்ணெய்) சமையலில் கலந்து சாப்பிட்டால் துர்தேவதைகள் உடலுக்குள் புகுந்துவிடும். தொடர்ந்து பாமாயில் பயன்படுத்தினால், நாளாவட்டத்தில் நமது கை கால்களை முடக்கிவிடும்.

• தேங்காய் தொடர்ந்து உண்டால் ( இளமுறி எனப்படும் இளம் தேங்காய்) தாது விளையும்.ஈரலுக்கு வலிமை கொடுக்கும். குடலிலும், வாயிலும் உள்ள புண்களை ஆற்றும்.

• நம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு,வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.

• வீடு மற்றும் தொழிற்சாலைகளில் மற்றவர்கள் விட்ட பெருமூச்சுநீங்க வேண்டுமானால் சாம்பிராணிப்புகை அல்லது 60 வகை மூலிகை சேர்க்கையால் செய்யப்பட்ட மூலிகைப்புகை போடுவது நல்லது.

•காலில் அணியும் மிஞ்சி பெண்ணின் காமத்தைக் குறைக்கும்.

*மூக்குத்தியும் மோதிரமும் சுவாசக்காற்றிலுள்ள விஷகலையை நீக்கும்.

• கோதுமை உணவு சாப்பிடுபவர்கள் வெண்ணெய் அல்லது நெய் சேர்த்துக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் கோதுமை உணவினால்தீமையே (கண் எரிச்சல், மலச்சிக்கல்) ஏற்படும்.

• கறுப்புத் துணிப் பக்கம் காகம் வருவதில்லை.வெள்ளைத் துணி மற்றும் நீல வெளிச்சத்திற்கு கொசுக்கள் வருவதில்லை. தூய ஆடைகள் பக்கம் கொசு அண்டுவதில்லை.

•புதன் கிழமைகளில் நீங்கள் எவருக்கும் ஆடை, ஆபரணங்கள்,பொன்,பொன் ஆபரணங்கள் இரவலாகக் கூடத் தரக்கூடாது.அப்படித் தந்தால்,உங்களது செல்வ வளம் உங்களை விட்டு நீங்கத் துவங்கும். ஆனால்,பிறரிடமிருந்து வாங்கலாம்.அப்படி வாங்கினால், நீங்கள் செல்வச் செழிப்பை அடைவீர்கள்.

• வெள்ளி,செவ்வாய்க் கிழமைகளில் யாருக்கேனும் நீங்கள் நெல், அரிசி, கோதுமை மற்றும் உணவுப்பொருட்கள், பதார்த்தங்கள் தரக்கூடாது.பணம், முன்ஜாமீன் கொடுக்கக் கூடாது. அப்படிக்கொடுத்தால்,வாங்கியவர் வளமடைவார்.

. கார்த்திகை, மகம், உத்திரம், சித்திரை, மூலம், ரேவதி நட்சத்திரங்களில் எவருக்கும் எதையும் கொடுக்கவும் வாங்கவும்கூடாது. அப்படிச்செய்தால் வறுமை உங்களை வந்தடையும் என்பது ஐதீகம்.

•வேப்பமரத்தின் கீழ் உட்கார்ந்தால் அந்தக் காற்றில் அயோடின் இருக்கிறது. அது நமது உடலை சுத்தப்படுத்துகிறது. அரச மரத்தை எடுத்துக்கொண்டால் அதனுடைய குச்சி இருக்கிறதல்லவா சுள்ளி,அதில் மின் காந்த அலைகளே இருக்கிறது என்று ஆராய்ச்சியில்கண்டுபிடித்திருக்கிறார்கள். அதனால்தான் அரச மரத்தை சுற்றிவந்தால்ஆண்மைத் திறன் வளரும். கர்ப்பப்பை பலவீனமாக இருந்தால் பலமடையும். ஏனென்றால் அந்தக் காற்றிற்கு அவ்வளவு சக்தி இருக்கிறது.

பயனுள்ள தகவல். அனைவருக்கும் பகிருங்கள்

Friday, 6 October 2017

ஹோமங்களில் போடும் பொருட்களின் பயன்கள்!





நாம் நடத்தும் ஹோமங்களில் பலவித சமித்துக்களை அக்னியில் போட்டு ஆகுதி செய்கிறோம்.
அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதப் பலன் உண்டு.
சமித்து என்பது ஹோமகுண்டத்தில் சேர்க்கப்படும் குச்சிகள்.
ஒவ்வொரு சமித்து குச்சிக்கும் ஒவ்வொரு வேண்டுதல்களும் பலன்களும் உள்ளன.
வில்வம் : சிவனுக்கும் மஹாலட்சுமிக்கும் பிடித்தமானது
துளசி சமித்து : நாராயணனுக்குப் பிடித்தது
அத்தி சமித்து : சுக்கிரனுக்குப் பிடித்தது
நாயுருவி சமித்து : புதனுக்குப் பிடித்தது
பலாமர சமித்து : சந்திரனுக்குப் பிடித்தது
அரசரமர சமித்து : குருவிற்குப் பிடித்தது
வன்னிமர சமித்து : சனீஸ்வரனுக்குப் பிடித்தது
அருகம் புல் : விநாயகருக்கும்,ராகுவுக்கும் பிடித்தது
மாமர சமித்து : சர்வமங்களங்களையும் சித்திக்கும்
பாலுள்ள மரத்தின் சமித்துக்கள் : வியாதி நாசினி
தாமரை புஷ்பம் : லஷ்மிக்கும் சரஸ்வதிக்கும் பிடித்தமானது
மாதுளை மரம் : அழகான் வடிவமும்,வசீகரமும் கிடைக்கும்.
சமித்து குச்சிகளும் பலன்களும்:
அத்திக் குச்சி : மக்கட்பேறு.
நாயுருவி குச்சி : மகாலட்சுமி கடாட்சம்
எருக்கன் குச்சி : எதிரிகள் இல்லாத நிலை
அரசங் குச்சி : அரசாங்க நன்மை
கருங்காலிக் கட்டை: ஏவல் ,பில்லி ,சூனியம் அகலும் .
வன்னிக் குச்சி : கிரகக் கோளாறுகள் நீங்கிவிடும்.
புரசங் குச்சி : குழந்தைகளின் கல்வி வளர்ச்சி
வில்வக் குச்சி : செல்வம் சேரும்
அருகம்புல் : விஷபயம் நீங்கும்.
ஆலங் குச்சி :புகழைச் சேர்க்கும்.
நொச்சி : காரியத்தடை விலகும்.
வில்வம் : வில்வ சமித்தினைக் கொண்டு ஹோமம் செய்தால் ராஜ யோகம் கிட்டும்.
வில்வப்பழ ஹோமத்தால் சக்தி செல்வங்களையும் பெறலாம். சிவசக்தி சம்பந்தமான சண்டி ஹோமம் போன்ற யாகங்களில் வில்வம் சமித்தாகப் பயன்படுத்தினால் பலன்கள் நிறைய உண்டு.
துளசி : துளசி சமித்தினால் ஹோமம் செய்தால் நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி நடைபெறும். எண்ணிய காரியம் கைகூடும்.
சோமவல்லிக் கொடி : கொடிக்கள்ளி எனப்படும் இதன் ரசத்தைப் பிழிந்து ’சோமாம்ருதம்’ ம்ருத்யுஜய மந்திரத்தினால் ஹோமம் செய்தால் சகல நோய்களும் நீங்கி, தேகத்தில் அமிர்தம் உண்டாகி பிரம்மதேஜஸ் பெறலாம். கொடியை கணுக்கள் தோறும் ஒடித்து பாலில் தோய்த்து சூர்ய மந்திரம் கூறி அக்னியிடம் இட வேண்டும். இதனால் காச நோய் அகலும்.
பலாசு சமித்து : இது சந்திர கிரக சமித்தாகும். இதனால் சந்திரகிரக பிரீதியாகும். பலாசு புஷ்பத்தால் எல்லா இஷ்ட காரியங்களும், பலாசு ரஸத்தால் ஞான விருத்தியும், சிறந்த புத்தியும் பெறலாம். பலாசு குச்சிகளை அக்னி ஹோத்திரம் செ¢ய்து அதனால் ஸ்நாபானம் செய்யின் ப்ரம்ம ஞானம் அடைந்து பரப்பிரம்ம சொரூபம் அடையலாம்.
அரசு சமித்து : அரசு சமித்து குரு கிரகத்தின் சமித்தாகும். அரச மரத்தின் சமித்தால் தலைமைப் பதவி வரும். போரில் ஜெயம் அடைந்து அரச தன்மை கிடைக்கும்.
வெள்ளை எருக்கு : இது சூரிய கிரகத்தின் சமித்தாகும். இம்மூலிகை சர்வசக்தி பொருந்தியது. வசியம், மோகனம் ஆகிய அஷ்டாமித்துகளையும் அடையலாம். இச்சமித்து களால் ராஜ வசியம், ஸ்திரீ வசியம், மிருக வசியம், சர்ப்ப வசியம், லோக வசியம், சத்ரு வசியம், தேவ வசியம் ஆக சர்வ வசியங்களையும் அடையலாம். எடுத்த வேலை இனிதே முடியும்.
செம்மர சமித்து : இது அங்காரக கிரக சமித்தாகும். இதனால் ரண ரோகங்கள் நீங்கும். தைரியம் பெருகும்
நாயுருவி சமித்து : இது புது கிரக சமித்தாகும். இதனால் லட்சுமி சுடா¢ட்சம் ஏற்படும். சுதர்சன ஹோமத்திற்கு இதுவே சிறந்தது.
அத்தி சமித்து : இது சுக்கிர கிரகத்தின் சமித்தாகும். பித்ரு ப்ரீதி பெற்று விரும்பிய பொருள் கைகூடும். பில்லி, சூனியம், பிசாசு பயங்களிலிருந்து விடுவித்து சத்ருக்களை வெல்லும். பைத்தியமும் மேக ரோகங்களும் அகலும். வாக்கு சித்தியும் ஏற்படும். பசு, யானை, குதிரை நோய் நீங்கும்.
வன்னி சமித்து : வன்னி சமித்து சனிக் கிரகத்தின் சமித்தாகும். இதில் அக்னிப் பகவான் இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. வன்னி சமித்து யாக பஸ்மாவைத் தரித்தால் அது நெற்றியில் எழுதியிருக்கும் யம சம்பந்தமான எழுத்தைத் தொலைத்து விடும். இந்த சமித்து பஸ்பம் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும் மூவுலகினையும் மூன்று அக்னிகளையும் முக்குணங்களையும் குறிப்பதாக இருக்கிறது. சகல தெய்வ, தேவாதி களும் இச்சமித்தால் மகிழ்ச்சி அடைகிறார்கள். பூகம்பங்களால் உண்டாகிற பயங்கள் நீங்கும். சகல தோஷங் களும் நிவர்த்தியாகும்.
தர்ப்பை சமித்து : கேது பகவானுக்கு தர்ப்பை சமித்து மிகவும் பிடித்தமானதாகும். இது ஞான விருத்தியைத் தரும்.
அருகம்புல் : இது ராகு பகவானுக்குப் பிடித்தமானது. இதனால் பூர்வ ஜென்ம வினைகளும் சர்வ இடையூறுகளும் நீங்கி காரியம் சித்தியடையும். கீர்த்தியும், புகழும் பெறலாம். அறிவும், அழகும், வசீகரமும் உண்டாகும். கணபதி ஹோமத்தில் இதைப் பயன்படுத்துவார்கள்.
கரும்பு : கரும்புத் துண்டுகளையாவது அல்லது கருப்பஞ்சாறையாவது கொண்டு ஹோமம் செய்தால் வரனுக்கு விரும்பிய கன்னிகையும், கன்னிகைக்கு விரும்பிய வரனும் கிடைப்பர். இதையும் கணபதி ஹோமத்தில் பயன்படுத்துவார்கள்.
ஆலசமித்து : இது ம்ருத்யஞ்சய வேள்வியின் முக்கிய சமித்து. யமனுக்குப் பிடித்தமானது. இதனால் நோய்கள் நீங்கும். ஆயுள் நீடிக்கும்.
எள் : ஹோமத்தில் எள் போட்டு யாகம் செய்ய பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கும். தீராத கடன் தொல்லை தீரும்.
புங்க மரம் : இதன் சமித்து வெற்றியைத் தரும்.
இலந்தை : இந்த சமித்தினால் ஹோமம் செய்ய குடும்பம் இனிது வாழ வழி உண்டாகும்.
தேவதாரு : இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் சகல தெய்வங்களும் வேண்டிய வரங்களைக் கொடுப்பார்கள்.
வல்லாரைக் கொடி : இதை ஆகுதி செய்தால் கல்வி சிறப்பாக வரும். ஞாபக சக்தி அதிகரிக்கும் சரஸ்வதி கடாட்சமும் ஏற்படுத்தும்.
சந்தன மரம் : இதன் சமித்தால் ஹேமம் செய்தால் மூதேவி முதலிய சகல பீடைகளையும் விலக்கி லட்சுமி கடாட்சம் ஏற்படும். சகல சம்பத்துடன் வாழ்வார்கள்.
வேங்கை மரம் : இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் பில்லி சூன்யம், ஏவல், பிசாசு, பயம் ஓழியும்.
மகிழம்பூ : இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் சகல துக்கங்களும் நிவர்த்தியடைந்து சிக்கல்கள் அனைத்தும் தீரும். மனம் அமைதி பெறும்.
பூவரசு : இந்த சமித்து பூலோக அரச மரம் என்று வழங்கப்படுகிறது. அரசு சமித்து இல்லாத குறையை இந்த சமித் அரசு சமித்தினால் செய்யப்படும் ஹோமம் தரும் பலன் இதற்கும் உண்டு.
நவதானியங்கள் : அந்தந்த கிரகங்களுக்குரிய தானியத்தால் நவக்கிரக ஹோமம் செய்தால் கிரக தோஷங்கள் விலகும். சுபிட்சம் நிலவும்.
மஞ்சள் : முழு மஞ்சள் ஸ்ரீ வித்யா ஹோமத்துக்குச் சிறந்தது. சகல வியாதிகளை நீக்கும். அதோடு கல்வியும், செல்வமும் தரும்.

திருப்பதி ஏழுமலையான் தரிசன முறை







திருமலை திருப்பதியில் இறைவன் சிலை வடிவமாக நின்ற திருக்கோலத்தில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள் செய்கிறார்.
நமது பாரத தேசத்தில் உள்ள எட்டு சுயம்பு மூர்த்த திருத்தலங்களில் ‘வேங்கடாத்ரி’ எனப்படும் திருமலை திருப்பதியும் ஒன்றாகும்.
இங்கு இறைவன் சிலை வடிவமாக நின்ற திருக்கோலத்தில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள் செய்கிறார்.
‘திருப்பதிக்கு இணையான க்ஷேத்திரம் வேறொன்று இல்லை..’
என்பது பிரபல சொல்வழக்காக இருந்து வருகிறது.
பொதுவாக, திருமலை செல்பவர்கள் சென்றவுடன், திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக வரிசையில் நின்று கொள்வதும், அவரை தரிசித்துவிட்டு உடனடியாக வீடு திரும்புவதும் சாஸ்திர சம்மதமானதாக கருதப்படவில்லை.
அதற்காக ஒரு தனிப்பட்ட மரபு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அவற்றை பற்றிய குறிப்பை இங்கே காணலாம்.
1. முதலில் கீழ் திருப்பதியில் வீற்றிருக்கும் கோவிந்தராஜ பெருமாளை வணங்க வேண்டும்.
2. அதன் பிறகு, அலர்மேல்மங்காபுரம் சென்று பத்மாவதி தாயாரை தரிசித்து மனமும், இதயமும் ஒருங்கே இணைத்து வணங்க வேண்டும்.
3. அதன் பிறகு, திருமலையின் மீது ஏறிய பிறகு ‘வராக தீர்த்த கரையில்’ கோவில் கொண்டிருக்கும் ‘வராக மூர்த்தியை’ தரிசித்து வணங்க வேண்டும்.
4. அதற்கு பிறகுதான் மலையப்பன் என்று சொல்லப்படும், ஏழுமலை வாசனை, கோவிந்தனை, திருவேங்கடவனை பூஜிக்க வேண்டும்... உளமாற சேவிக்க வேண்டும்..
மேற்கண்ட வழிமுறையானது ராமானுஜர் காலத்தில் அவரால் தொடங்கப்பட்டு, அதன் பிறகு வந்த அனைத்து ஆச்சார்யர்களும் கடைபிடித்து வந்த சம்பிரதாயம் ஆகும்.

Monday, 25 September 2017

நமக்கு தெரியாமல் நம்முடைய தோஷத்தை அழித்து விடும் ரகசியங்கள்



நம்முடைய சில செயல்கள் நமக்கு எவ்வாறு தோசமாகி நம்முடைய வளர்ச்சியை கெடுக்கிறது என்று நமக்கு தெரியாது
அதுபோல சில நல்ல செயல்கள் நம்முடைய தோஷத்தை விளக்கி நமக்கு நம்மை செய்யும் ......

1.படுக்கை அறையில் தலை அருகே நீரை வைத்து உறங்கிவிட்டு அந்த நீரை காலையில் செடிகளுக்கு விட சுக்ர தோஷம் படி படியாக குறையும் .

இந்த விவரத்தை மாற்றி சொல்லலாம் ,படுக்கைக்கு நாம் எடுத்து செல்லும்
குடி நீர் காலையில் மிதம் இருந்தால் செடிகளுக்கு குறிப்பாக துளசி அல்லது தொட்ட சினிக்கி செடிகளுக்கு விட்டு விட வேண்டும் ....

2.அடிக்கடி பசுவிற்கு வாழை பழம்,கற்கண்டு பொங்கல் கொடுப்பது சந்திரனின் ஆசிகளை நமக்கு கொடுத்து புகழை பெற்று தரும் .

3.வசதி இல்லாத குடும்பத்தினருக்குப் ஈமச் சடங்குகள் செய்ய
பணம் ,பொருள் கொடுத்து உதவி செய்தல் சனியின் ஆசிகளை கொடுத்து
ஆயுளை விருத்தி செய்யும் .

4.ஆசான் ,வேதம் படித்தவர் ,நம் முன்னோர்கள் மற்றும் சாதுக்களை விழுந்து வணங்கிட, புண்ணிய யாத்திரைக்கு இல்லாதவருக்கு பொருள் கொடுத்து உதவுது ,குழந்தை பெற்ற ஏழை தம்பதியருக்கு பொருள் கொடுத்து உதவுவது , குருவின் ஆசிகள் கிடைக்கும் .

5.சிதலம் அடைந்த கோவில்களுக்கு நீர்நிலை உண்டாக்குதல் /தண்ணீர் தொட்டி /குளம் சரி செய்தல் அல்லது செய்பவருக்கு உதவுதல்
தேவதைகளின் ஆசிகளை கொடுத்து நமக்கு வசியமும் கவர்ச்சியும் கொடுத்துவிடும் .

6.சிவ பெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வதும் பசித்து தவிக்கும் உயிர்களுக்கு உணவு அளிப்பதும்,கோவிலுக்கு சொர்ணத்தை தானமாக அல்லது கலசத்திற்கு தருவது ,தொழு நோய் /குஷ்டம் கண்டவர்களுக்கு வைத்திய செலவு அல்லது அவர்களுக்கு நல்ல உணவு அளிப்பது சூரியனின் ஆசிகளை கொடுத்து நல்ல ஆரோக்கியம் மற்றும் வம்ச விருத்தி செய்யும் .

7.திருமணம் செய்ய ஏழை பெண்களுக்கு பொருள் கொடுத்து உதவுதல் ,
நம் வாழும் மனை ,தொழில் செய்யும் மனை கைகளால் தொட்டு வணங்குதல் ,மேலும் பூமிக்கு மரியாதை செய்தல்,பல உயிர்களை வளர்த்தல் (விலங்கு ,பறவைகள் ),உயிர் பலிகளை நாம் தவிர்த்தல் ,இல்லாதவர்களுக்கு மருத்துவ செலவிற்கு பணம் கொடுத்தல் செவ்வாயின் ஆசிகளை கொடுத்து அஷ்ட சுகம்களையும் தரும் .

8.ஏழை குழந்தைகளுக்கு கல்விக்கு பொருள் உதவி செய்தல் ,புதன் கிழமை
தோறும் அன்னதானம் செய்தல் ,புதிய உடைகளை தானம் செய்தல் (குறிப்பாக குளிர் காலத்தில் செய்வது ) புதனின் ஆசிகளை நமக்கு கொடுத்து சண்டை ,பொறாமையினால் வரும் நோய் (திருஷ்டி )
நீதிமன்ற சோதனை போன்ற தொல்லைகளை விலக்கி நல்ல தொழில் ,
மென்மையான வாழ்க்கையை கொடுக்கும் .

9.நாகங்க்ளை கண்டதும் அடிக்காமல் இருப்பது ,இறந்த நாகத்தின் உடலை
கண்டதும் தீயிட்டு கொளுத்துவது ,
குடி கெடுத்தவன் ,குடிகாரன் ,குரு துரோகி ,பசுவை கொன்றவன் ,சண்டாளன் -- இவர்களிடம் நட்பு கொள்ளாமல் தவிர்ப்பது ராகு -கேது ஆசிகளை கொடுத்து அதிர்ஷ்டம் ,போகம்,மற்றும் சகல பாக்கியத்தை அனுபவிக்கும் ஆசிகளை தரும் .
( இந்த பஞ்ச மஹா பாவிகளை அடையாளம் கண்டு கொள்வது சற்று சிரமும் தான் ,தெரிந்து சேர்வது நமக்கு தரித்தரம் )

10.பாழடைந்த சிவன் கோவிலில் விளக்கு ஏற்றுவது ,பிரதோஷ நாளில் சிவ ஸ்தலங்களுக்கு முடிந்த வரையிலான அபிஷேகத்திற்கு தேவையிலான பொருட்களை வாங்கி கொடுப்பது,
வெள்ளத்துடன் பச்சரிசி துளை கலந்து அந்த கோவிலின் சுற்று பிரகாரத்தில் தூவி விடுவது தேவர்களை சாந்தி படுத்திவிடும் ,இவர்கள் நம் முன்னோர்களுக்கு மோட்ச பதவி அளிப்பார்கள் ....

இவைகள் பொதுவானவை
ஒரு முறை செய்யும் பரிகாரம் அல்ல
வழக்கமாக செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை
புரிந்து செய்தாலும் ,தெரியாமல் செய்தாலும் பலன் ஒன்று தான் .....

Friday, 8 September 2017

தாசி சக்கரம்


பெண் வேலைக்காரர்களை சேர்க்கும் எஜமானர்கள் வேலைக்கு சேர்க்கும் பெண் வேலையாட்களின் நட்சத்திரத்தில் இருந்து எஜமானரின் நட்சத்திரம் வரை எண்ணிவர,
1,2,3 ஆக இருந்தால் லாபம் உண்டு.
4,5,6 ஆகின் நஷ்டம் தான்.
7,8. ஆகின் எஜமான் மரணமடைவார்.
9,10,11,12,13 ஆகின் தொழில் விருத்தி உண்டு.
14லிருந்து 20க்குள் இருப்பின் நஷ்டம் தான்.
21ஆகின் அவமானப்படுவார்.
22லிருந்து 27க்குள் இருப்பின் செல்வங்களை எல்லாம் இழப்பார்.
இவையாவும் பெண் வேலைக்காரர்களை சேர்ப்பதனால் எஜமானருக்கு ஏற்படும் பலன்களாகும்.

Tuesday, 1 August 2017

முன்னோர் வழிபாட்டாலருக்கு மகிழ்ச்சியான செய்தி.....
நடக்கபோகிற ஆகஸ்ட் மாதம் நம் வரலாற்றில் மாற்றமுடியாத மாதமாக இருக்க போகிறது இந்த உலகத்தை ஆளும் அந்த சூரியவழிபாட்டுகுடும்பம் தனது மொத்தபலத்தையும் சிறிது நேரம் இழந்து நிற்கும் நேரம் வரப்போகிறது...
ஆம் ...99 வருடத்திற்கு ஒரு முறை நிகழும் ஒரு சூரியக்கிரகணம் நிகழப்போகிறது...
மிகச்சரியாக
ஆகஸ்டு 7 அன்று 3/4 பங்கும்
ஆகஸ்டு 21 அன்று முழுவதும்
சூரியன் மறையப்போகிறது
அன்று சூரியவழிபாடு
செய்யும் அத்தனை கோவில்களையும் இழுத்து பூட்டிவிட்டு  ஓடுவதை நீங்கள் கண்டிப்பாக பார்ப்பீர்கள்...
அன்று நமது குலதெய்வங்களான கருப்பசாமிகள் மற்றும் நமது முன்னோர்களின் நினைவலைகள் மிகவும் வீரியம் கொள்ளும் அந்த நேரம் பலிகொடுத்து அவர்களுடன் நமக்கு ஒரு உடன்படிக்கை செய்துகொள்ளலாம்...
கருப்புகள் எப்போதும் உடன்படிக்கைக்கு கட்டுப்படும்...
இந்த நேரம் எதிரியின் கட்டுகள் பலம் இழந்துவிடும்...
தயவு செய்து நமது பழங்குடிகளின் வழிபாடான குலதெய்வ பலிகொடுத்தலுக்கு திரும்புங்கள்...
உலகத்தை ஆளுபவன் சூரியனின் சக்தியை தவறாக பயன்படுத்தியே ஆளுகிறான்...
அன்று குலதெய்வத்திற்கு பலிகொடுக்க முடியாதவர்கள் வீட்டில் அசைவமாவது சமைத்து உண்ணுங்கள்...
ஓரளவு முடிந்தவர்கள் சேவலை பலிகொடுத்து குலதெய்வத்திடம் உடன்படிக்கை செய்துகொள்ளுங்கள்.
என்னால் முடியும் நான் வெற்றிபெற விரும்புகிறேன் என்பவர்கள் சரியாக சூரியகிரகணம் நிகழும் நேரத்தில் துல்லியமாக பலிகொடுங்கள்...
இதுவரை நாகரீகம் என உருவாக்கப்பட்ட தீமைகள் அனைத்தும் இந்த கிரகணத்தில் தான் அழிக்கப்பட்டது என்பது கூடுதல் தகவல்
எ:கா துவாரகா....
அடுத்தமாதம் வரலாற்றில் பல மாறுதல்கள் நடக்க வாய்ப்புகள் உண்டு
இதே போல ஒரே ஆண்டில் தொடர்ந்து 4 கிரகணங்கள் வருவது வரலாற்றில் பழங்குடிகளுக்கு சிறப்பு வெற்றி நன்மை...
சூரியவழிபாட்டாளனுக்கு தீமை...
இறந்த உங்கள் தாய் தந்தைக்கும் கூட இந்த நாளின் குறிப்பிட்ட நேரத்தில் அசைவப்படையல் போடலாம்...
(சிவகுமார் கோன்)

Thursday, 27 July 2017

மந்திர சாஸ்திரத்தின் உதவியுடன் பட்சியை சாதகமாக்கிக்கொள்ளும் முறை

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒருவருடைய பட்சி எந்த தொழிலை செய்துகொண்டிருந்தாலும், அது பற்றி கவலைப்படத்தேவையில்லை. பட்சம்,கிழமை,பொழுது அறிந்து அதற்கு தகுந்தவாறு பஞ்சாட்சரம் என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை முறைப்படி அட்சர மாறல்(எழுத்து மாற்றம்) செய்து ஜெபித்து வந்தால் எப்பொழுதும் வெற்றியடையலாம் எனக்கூறப்படுகிறது. “நமசிவய” என்பது பஞ்சாட்சரம் என்னும் ஐந்தெழுத்து மந்திரமாகும்.
1. பூர்வபட்சம் பகலில் வெற்றி பெற “நமசிவய” என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தில் உள்ள கடைசி எழுத்தான “ய” வை முதலெழுத்தாக்கிக்கொண்டு,அதாவது “நமசிவய” என்பதை “யநமசிவ” என மாற்றிக்கொண்டு ஜெபித்தால் வெற்றி உண்டாகும்.
2. பூர்வபட்சம் இரவில் வெற்றி பெற “நமசிவய” என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தில் உள்ள நான்காவது எழுத்தான “வ” வை முதலெழுத்தாக்கிக்கொண்டு,அதாவது “நமசிவய” என்பதை “வயநமசி” என மாற்றிக்கொண்டு ஜெபித்தால் வெற்றி உண்டாகும்.
3. அமரபட்சம் பகலில் வெற்றி பெற “நமசிவய” என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தில் உள்ள இரண்டாவது எழுத்தான “ம” வை முதலெழுத்தாக்கிக்கொண்டு,அதாவது “நமசிவய” என்பதை “மசிவயந” என மாற்றிக்கொண்டு ஜெபித்தால் வெற்றி உண்டாகும்.
4. அமரபட்சம் இரவில் வெற்றி பெற “நமசிவய” என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தில் உள்ள மூன்றாவது எழுத்தான “சி” வை முதலெழுத்தாக்கிக்கொண்டு,அதாவது “நமசிவய” என்பதை “சிவயநம” என மாற்றிக்கொண்டு ஜெபித்தால் வெற்றி உண்டாகும்.
5. பஞ்சாட்சரத்திற்கு முன் “ஓம்” எனவும், பஞ்சாட்சரத்திற்கு பின் “சுவாஹா”எனவும் சேர்த்துக்கொண்டு ஜெபிக்கவேண்டும்.