Tuesday, 7 October 2014

புலிப்பாணி ஜோதிடம் - சனி மகாதிசை பலன்கள்

சனி மகாதிசை,சனி புத்திப் பலன்கள்

சனிமகாதிசை வருடம் 19-காக்கை வாகனனான அச்சனிபகவானின்பொசிப்புக்காலம் இதில் 3 வருடம் 3 நாள்களாகும்இக்காலகட்டத்தில்துன்பம் தரத்தக்க பலன்களே விளையும்அவையாவனமனம் விரும்பியபாவையரும் பாலகரும் மடிவார்கள்வெகுவான அலைச்சல் திரிச்சல்உண்டாகும்வெகுதன விரயம் ஏற்படும் என்று போகர் பேரருளால்புலிப்பாணி கூறினேன்.இப்பாடலில் சனி மகாதிசையில் சனி புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.



சனி மகாதிசை,புதன் புத்திப் பலன்கள்

காரியென்னும் சனி திசையில் புதபகவானின் பொசிப்புக்காலம் 2 வருடம் 8மாதங்களும் 9 நாள்களுமாகும்அதன் பலனை விரிவாகச் சொல்வேன்.கேட்பாயாகஅரசர் முதலோராலும் மற்றும் தாய்இன ஜன பந்துக்களாலும்மகிழ்வே உண்டாகும்ஞான மார்க்கமும்யோகமார்க்கமும் தேக சித்தியும்(நல்லுடல் வாய்ப்பும்கருவளரும் காலம் தொட்டே உளவாகும் என்றுபோகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.இப்பாடலில் சனி மகாதிசையில் புதன் புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


சனி மகாதிசை,கேது புத்திப் பலன்கள்
சனி திசையில் கேது பகவானின் பொசிப்புக்காலம் அருளற்றதேஇது 1வருடம் 1 மாதம் 9 நாள்கள் நடைபெறும்இக்காலகட்டத்தில் ஜாதகனுக்குநிகழும் பலன்களாவனசிரரோகம் ஏற்படும்கண்ணோய் வரும்மேலும்வயிறு பெருத்துக் காணும்பாண்டு போன்ற நோய் உபாதை உண்டாகும்.வெகுதனமும் பெரும்பொருளும் சேதமாகும்சத்துருக்களால் மூவகையில்விரயம் உண்டாகும்நன்மையே தரும் மனைவிக்கு கெர்ப்ப நஷ்டம் ஏற்படும்என்று போகரது பேரருளால் புலிப்பாணி கூறினேன்.இப்பாடலில் சனி மகாதிசையில் கேது புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


சனி மகாதிசை,சுக்கிர புத்திப் பலன்கள்
மேலும் இக்காரியென்னும் சனிபகவானின் திசையில் சுக்கிர பகவானின்பொசிப்புக்காலம் 3 வருடம் 3 மாதங்களாகும்இக்காலகட்டத்தில்பெண்களால் மனமகிழ்வு உண்டாகும்இப்புத்தி வந்த நாள் தொட்டுவெகுவான தனப்ராப்ட்தி யோகம் உண்டாகும்எப்பொழுதும் அரசரோடுஇணங்கி தினம்தோறும் மகிழ்வுடன் இச்சாதகன் வாழ்வதோடு வரும்பொருள் உரைக்கும் மந்திரிமார்களோடு அவருக்குச் சமமானஅணியலங்காரங்களும் ஏற்படும்கோள் சொல்லிக் கொள்ளி வைக்கும்பலவாகிய பகைவர்களும் இல்லாதொழிவர்பொன் மகள் என்னும் இலக்குமிதேவி இச்செல்வ நலங்களைத் தருவாள் என போகர்அருளால் புலிப்பாணிகூறினேன்.இப்பாடலில் சனி மகாதிசையில் சுக்கிர புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.



சனி மகாதிசை,சூரிய புத்திப் பலன்கள்
இனி இச்சனி திசையில் கதிரவனாகிய சூரியனது பொசிப்புக்காலம் 11 மாதம்12 நாள்களாகும்இந்தக் கால கட்டத்தில் விளையும் பலன்களாவன:தேகத்தில் சுர உபாதை காணுதலும் ரத்த சம்பந்தமான நோயும்வயிறுபாதையால் வாடச் செய்யும்சூலை நோயும் உடன் காணும்.அதுமட்டுமல்லாமல் மனம் விரும்பும் மனைவிக்கும் மக்களுக்கும்நோயுபாதை ஏற்பட்டு வெகு வருத்தத்தை நல்கும் என்பதை உணர்க என்றுபோகர் அருளால் புலிப்பாணி பாடினேன்.இப்பாடலில் சனி மகாதிசையில் சூரிய புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.



சனி மகாதிசைசந்திர புத்திப் பலன்கள்
காரி எனும் சனி திசையில் சந்திரபகவானின் பொசிப்புக்காலம் 1 வருடம் 7மாதங்களாகும்இக்காலகட்டத்தில் நிகழும் பலன்களைக் கூறுகிறேன்கேட்பாயாகபெண்களுடன் மனம் வேறுபட்டுச் சண்டையிடுவதால் துன்பம்நேரும்ஆண்டிருந்த பூமியும் அணிந்திருந்த ஆபரணங்களும் வெகுதனமும்விரயமாகும்மேலும் வெகுபேய்களும் வந்து கூடி மரணத்தைத் தரும் எனபோகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.இப்பாடலில் சனி மகாதிசையில் சந்திர புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


சனி மகாதிசைசெவ்வாய் புத்திப் பலன்கள்

சனி மகாதிசையில் செவ்வாய் தன் பொசிப்புக் காலம் 1 வருடம் 2 மாதம் 9நாள்களாகும்இக்காலகட்டத்தில் விளையும் பலன்களாவனமனம்விரும்பும் பாவையர் நாசமாவதுடன் பகைவரும் பலவாகிப் பெருகுவார்கள்.இதனால் பெருந்தனம் விரயமடையும்தேசமெங்கும் வாடித்திரிந்திடும்நிலையுண்டாகும்நன்மை செய்யும் தேவதைகள் மாறுபட்டு நிற்பதால்பிழைகள் பலவாகப் பெருகிக் காணும் எனப் போகர் அருளால் புலிப்பாணிபுகன்றேன்.இப்பாடலில் சனி மகாதிசையில் செவ்வாய் புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


சனி மகாதிசைஇராகு புத்திப் பலன்கள்
இச்சனி பகவானின் திசையில் ராகுபகவானின் பொசிப்புக் காலம் 2 வருடம் 10மாதம் 6 நாள்களாகும்கொடுமை செய்யும் இக்காலகட்டத்தின் பலன்களைக்குறித்துச் சொல்வேன் கேட்பாயாகசொல்ல முடியாத நோய் வந்து பற்றும்.வாந்தி காணும்தேகத்தில் ரணம் ஏற்படும்அங்கக்குறைவு ஏற்படும்.அதனால் மரணமும் நேரும் எனப் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.இப்பாடலில் சனி மகாதிசையில் இராகு புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.



சனி மகாதிசைவியாழன் புத்திப் பலன்கள்

இனி இச்சனிபகவானின் திசையில் வியாழ பகவானின் பொசிப்புக் காலம் 2வருடம் 6 மாதம் 12 நாள்களாகும்நன்மை தரத்தக்க இக்கால கட்டத்தில்விளையும் பலன்களாவனதிருமணம் நடந்தேறும்மனத்திற்கேற்ப மனைவிஅமைவாள்முதாதையர் பெரும் தனம் வகையாக வந்து சேரும்.வாகனயோகம் அமையும்புதையல் தனம் கிடைக்கும்ஈனகுணம் மிக்கசத்துருக்களும் இச்சாதகனின் காலடியில் வீழ்ந்து அடிமைப் படுவர் எனப்போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.இப்பாடலில் சனி மகாதிசையில் வியாழன் புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.

புலிப்பாணி ஜோதிடம் - புதன் மகாதிசை பலன்கள்

புதன் மகாதிசைபுதன் புத்திப் பலன்கள்

புதமகாதிசை மொத்தம் 17 ஆண்டுகளாகும்இதில் புதனது சுயபுத்தி 2 வருடம்மாதம் 27 நாள்களாகும்இக்காலகட்டத்தில் நிகழும் பலன்களாவன:மூதாதையரின் கூட்டும் அதனால் மகிழ்ச்சியும் இன்பமும் நேரும்.குலதெய்வம் மனமொன்றி இருந்து குடும்ப நலத்தைக் காக்கும்அதோடுகுடும்பப் பொறுப்புணர்ந்து புத்திரனும் நற்குணம் நற்புகழ் பெற்று வாழ்வான்என்று போகர் அருளால் புலிப்பாணி பாடினேன்.இப்பாடலில் புதன் மகாதிசையில் புதன் புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


புதன் மகாதிசைகேது புத்திப் பலன்கள்


புதமகாதிசையில் கேது பகவானின் ஆதிக்க காலம் 11 மாதம் 27 நாள்களாகும்இக்கால கட்டத்தில் நிகவும் பலன்களாவனமாண்டு போகலாம் என்றஎண்ணத்தை அளிக்கும்வலியபகை வந்து சேர்தலோடு செய்தொழில் நாசம்அடையும்விரும்பத்தகாத வியாதிகளும் வந்தடையும்., அதனால் மரணமும்நேரும்நிறைந்த செல்வங்கள் தேடிப் பெற்றாலும் அவை அழிவுறும்.ஒவ்வொரு நாளூம் புதுப்புதுப் பகைவர் தோன்றுவர்இதனை நீ அறிவாயாகஎன்று போகர் அருளால் புலிப்பாணி பாடினேன்.இப்பாடலில் புதன் மகாதிசையில் கேது புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


புதன் மகாதிசைசுக்கிர புத்திப் பலன்கள்

புதமகா திசையில் சுக்கிர பகவான் புத்தி 2 வருடம் 10 மாதங்களாகும்தனதுஆதிக்க காலத்தில் சுக்கிரபகவான் நிகழ்த்தும் பலன்களைக் கூறுகிறேன்.கேட்பாயாகதேவதை கோபத்தால் குடும்பத்தில் தர்க்கம் ஏற்படும்இதுதீமையானதே எனினும் மனைவி மக்களுடன் அன்யோன்யமானவசியமுடன் இச்சாதகன் அலங்காரமுடன் வாழ்ந்திருப்பான்.பொன்னாபரணச் சேர்க்கை உண்டாகும்வாகனயோகம் ஏற்படும்.பெருமைமிக்க அரசரின் கருணையும் உண்டாகும் என்று போகர் அருளால்புலிப்பாணி கூறும் இக்கருத்தைக் கவனமாகக் கேட்பாயாக!இப்பாடலில் புதன் மகாதிசையில் சுக்கிர புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.

புதன் மகாதிசைசூரிய புத்திப் பலன்கள்


புதமகா திசையில் சூரியனின் ஆதிக்க காலம் 10 மாதம் 6 நாள்கள்.இக்காலத்தில் நிகழ்த்தும் பலன்களைக் கூறுகிறேன்கேட்பாயாக!இச்சாதகன் இக்கால கட்டத்தில் சிவார்ச்சனை செய்வதோடு ஹோம சாந்திமுதலியன நிகழ்த்தி நிறையருள் பெறுவான்இவன் பூமியில் பரதேசியாகஆகித்திரிவான்பின்னர் மடாதிபதியாகி இல்லறத்தினைத தொடர்வான்எனப் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.இப்பாடலில் புதன் மகாதிசையில் சூரிய புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


புதன் மகாதிசைசந்திர புத்திப் பலன்கள்

புதமகா திசையில் சந்திர புத்திக்காலம் 1 வருடம் 5 மாதங்களும்இவன் தன்ஆதிக்க காலத்தில் நிகழ்த்தும் பலன்களைக் கூறுகிறேன்கவனமாகக்கேட்பாயாகபெண்களால் கலகமும் ,இளைப்புநோய்சயரோகம் முதலியநோய் உபாதைகளும் ஏற்படும்அரசனின் தொல்லையால் குடும்பத்திற்கேகேடு உண்டாகும்அதேபோல் பெண்களாலும் குடும்பமும் பாழாகும்.அளவில்லாத செல்வமும் எதிர்பாரா வண்ணம் அழியும்தீதியை நினையாதவேசையரைச் சேர்ந்தின்புறம் சந்தர்ப்பம் ஏற்படும் என்று போகர் அருளால்புலிப்பாணி கூறினேன்.இப்பாடலில் புதன் மகாதிசையில் சந்திர புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


புதன் மகாதிசைசெவ்வாய் புத்திப் பலன்கள்

இந்த புதமகா திசையில் செவ்வாயின் ஆதிக்க காலம் வெற்றியினைத் தராத11 மாதம் 27 நாள்களாகும்இக்கால கட்டத்தில் இச்சாதகன் பெண்களால்கிரந்தி முதலிய ரோகங்களைப் பெறுவான்சத்துரு உபாதையுண்டாகும்,அதனால் மனத்தில் பீடியும் மயக்கமும் உண்டாகும்நோயுபாதையால்மனமுடைய சகோதரமும் நஷ்டமடையும்பலவகைச் செல்வமும்பங்கப்படும்வெகுதனம் நல்கும் பூமியும் விளைச்சல் குன்றி துர்ப்பலனேதரும் என்று போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.இப்பாடலில் புதன் மகாதிசையில் செவ்வாய் புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.

புதன் மகாதிசைஇராகு புத்திப் பலன்கள்

புதமகா திசையில் இராகு புத்தி தீங்கு தருகின்ற 2 வருடம் 6 மாதம் 18நாள்களாகும்இவ்விராகு பகவான் இவரது ஆதிக்ககாலத்தில் நிகழ்த்தும்பலன்களாவனதேக பலத்தைச சிதைக்கும்பலவித நோய்களும் மயக்கமும்ஏற்பட்டு அதனால் பெரும் பொருட் சேதம் உண்டாகும்முரண்பட்டுப் பேசக்கூடிய பகைவர்களால் அறிவற்றவர் நேசம் ஏற்படும்இடையீடில்லாதவியாதிகளால் பெரும் பொருள் சேதமாவதுடன் நல்ல கட்டுக்கோப்போடுவீடு முதலாக விளைவயலும் பெருநிதியும் அழியும் என்று போகர் அருளால்புலிப்பாணி கூறினேன்.இப்பாடலில் புதன் மகாதிசையில் இராகு புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.

புதன் மகாதிசைவியாழன் புத்திப் பலன்கள்

புதமா திசையில் வியாழ பகவான் புத்திக் காலம் பெரும் புகழ் தருவதான 2வருடம் 3 மாதம் 6 நாள்களாகும்இவர் தன் ஆதிக்க காலத்தில் அளிக்கும்பலன்களைக் கூறுகிறேன்கேட்பாயாகசத்துரு உபாதையும்நோயும்,மனபயமும் நீங்கி சகலவிதமான செல்வ நலங்களும் பெருகி இப்பூமியில்பெரும் புகழுடன் வாழ்வான்சகலவிதமான யோகங்களும் சித்திக்கும்.அனேக புத்திரர்களும் இச்சாதகனுக்கு உண்டாம் என்று போகர் பேரருளால்புலிப்பாணி கூறினேன்.இப்பாடலில் புதன் மகாதிசையில் வியாழன் புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.

புதன் மகாதிசைசனி புத்திப் பலன்கள்


புதமகா திசையில் சனிபகவான் புத்திக்காலம் 2 வருடம் 8 மாதம் 9நாள்களாகும்இவர் ஆதிக்க காலத்தில் நிகழ்த்தும் பலன்களாவனபலமுள்ளசத்துருக்கள் இச்சென்மனுக்குச் சூன்யம் வைப்பர்உயிர்கொல்லி நோயைப்போல இருந்த நிலை சிதைந்து கேடுற நேரிடும்மனைவியும் புத்திரரும்மரணமடைவதுடன் சாதகனும் மடிய நேரிடும்மனைவியும் புத்திரரும்மரணமடைவதுடன் சாதகனும் மடிய நேரிடும்மனைவியும் புத்திரரும்மரணமடைவதுடன் சாதகனும் மடிய நேரிடும் என்று போகரதுஅருட்கருணையால்புலிப்பாணி கூறினேன்.இப்பாடலில் புதன் மகாதிசையில் சனி புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.