ராகு - கேது என்பவை நிழல் கிரகங்கள் என்று ஜோதிடத்தில் சொல்லப்படுகின்றன. நிழல் கிரகங்களாக இருந்தாலும் மிகவும் வலிமை வாய்ந்தவை ஆகும். பொதுவாக ஒருவருடைய ஜாதகத்தில் ராகு - கேது எந்த கிரகங்களுடன் சேர்ந்து இருக்கிறதோ, அந்த கிரகத்தின் அடிப்படை குணத்தை பிரதிபலிக்கும் தன்மை கொண்டவை. ராகுவும், கேதுவும் நல்ல கிரகங்களுடன் சேர்ந்தால், நல்ல பலனும், தீய கிரகங்களுடன் சேர்ந்தால் தீய பலனும் அளிக்கும் குணமுடையவை ஆகும்.
🍀 ஒருவரது ஜாதகத்தில் ராகு - கேது தோஷம் இருந்தால் திருமணம் தாமதமாகும். தொழிலில் திடீர் முடக்கம் ஏற்படும். தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் தொந்தரவு தரும். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் தள்ளிப்போகும். ராகு - கேது தோஷத்தை பரிகாரம் மூலம் நிவர்த்தி செய்ய ராகு - கேதுவிற்கு எப்போது பரிகாரம் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்.
------------------------
ராகு - கேதுக்கு எப்போது பரிகாரம் செய்ய வேண்டும்?
------------------------
ராகு - கேதுக்கு எப்போது பரிகாரம் செய்ய வேண்டும்?
🌹 செவ்வாய் திசையில் ராகு புத்தி, கேது அந்தரம் நடக்கும் பொழுதும் பரிகாரம் செய்யலாம்.
🌹 ராகு திசையில் ராகு புத்தி, கேது புத்தி நடக்கும் பொழுதும் பரிகாரம் செய்யலாம்.
🌹 சந்திரதிசையில் ராகு புத்தி, ராகு அந்தரம் கேது புத்தி, கேது அந்தரம் நடக்கும் பொழுதும் பரிகாரம் செய்யலாம்.
🌹 குரு திசையில், கேது புத்தி ராகு புத்தி நடக்கும் பொழுதும் பரிகாரம் செய்யலாம்.
🌹 சூரிய திசையில், எந்த புத்தி நடந்து கொண்டிருந்தாலும், அதில் ராகு அல்லது கேது அந்தரம் நடக்கும் பொழுதும் பரிகாரம் செய்யலாம்.
🌹 சனி திசையில் ராகு, கேது புத்தி-சூரிய புத்தியில் ராகு, கேது அந்தரம் நடக்கும் பொழுதும் பரிகாரம் செய்யலாம்.
🌹 கேது திசையில் சந்திர புத்தி, சூரிய புத்தி, புதன் புத்தியில் ராகு-கேது அந்தரம் நடக்கும் பொழுதும் பரிகாரம் செய்யலாம்.
🌹 புதன் திசையில் சந்திர - புத்தி, ராகு - கேது அந்தரம் நடக்கும் பொழுதும் பரிகாரம் செய்யலாம்.
🌹 சுக்கிர திசையில் குருபத்தி-கேது ராகு அந்தரம் நடக்கும் பொழுதும் பரிகாரம் செய்யலாம்.
🌹 மேலும் ராகு ஆங்கில எண்.4 - க்கு அதிபதியாவார் 4,13,22 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ராகு ஆதிக்கம் உடையவர்கள் ஆவர்.
🌹 ராகு ஒவ்வொரு நாளிலும் வலிமைபெறும் காலம் 1.30 மணி ஆகும். இக்காலத்தில் சுபகாரியம் செய்வதை தவிர்ப்பது நல்லது.
No comments:
Post a Comment