Tuesday 27 March 2018

உண்மை நிகழ்வு. கதையல்ல நிஜம்.

நாட்டுக் கோட்டை பணக்கார செட்டியார் ஒருத்தர் அவருடைய 60 ம் கல்யாண விழாவுக்கு சுகி சிவம் அவர்களை பேச அழைத்திருந்தார். 

சுகி சிவமும் போக ஒத்துக்கிட்டார். 

எவ்வளவு சன்மானம் தரனும்னு செட்டியார் அவர்கள் சுகி சிவம் அவர்களிடம் கேட்டார். 

உங்க தகுதிக்கு தகுந்த மாதிரி தாங்கலேன்னு சுகி சிவம் சொன்னார். 

நிகழ்ச்சியில் சுகி சிவம் பேசி முடித்ததும், 
அவரின் பேச்சை மிகவும் பாராட்டியதுடன், 
ஒரு கவரையும் கொடுத்தார் செட்டியார். 
(கவரில் ரூ 10,000/- இருந்தது)

மேலும் மறு வாரம்  ஒரு பாட்டு கச்சேரி நடத்த இருப்பதாகவும்,
நல்ல பாடத் தெரிந்த ஒருவரை சொல்லுங்கன்னு சுகி சிவத்திடம் செட்டியார் கேட்டார். 

சுகி சிவமும் தனக்கு தெரிந்த,
நல்ல பாடக் கூடிய,
ஆனால் பிரபலமாகாத ஒரு பாடகரை பற்றி சொன்னார். 

அவருக்கு எவ்வளவு சன்மானம் கொடுக்கணும்னு செட்டியார் கேட்க,
 
"உங்க தகுதிக்கு தக்கபடி கொடுங்க" ன்னு சுகி சிவம் வழமை போல சொன்னார். 

இல்ல இல்ல. 
தொகையை சொல்லுங்கன்னு செட்டியார் வற்புறுத்தி கேட்கிறார். 

சுகி சிவமும் சரி ஒரு 2000/- ரூபாய் கொடுங்கலேன்னு சொன்னார். 

செட்டியாரும் நேரடியாக பாடகரிடம் தொடர்பு கொண்டு அவரையே பாட ஏற்பாடு செய்தார்.  

அடுத்த வாரம், விழா சிறப்பாக முடிந்ததும் செட்டியார் 2 கவர்களில் பணம் போட்டு ஒட்டி பாடகரிடம் எடுத்து வந்தார். 

ஒரு கவர்ல பாடகராகிய நீங்கள் என்னிடம் நிகழ்ச்சிக்குப் கேட்ட பணம் இருக்கு.

இன்னொரு கவர்ல சுகி சிவம் உங்களுக்காக தரச் சொன்ன பணம் இருக்கு. 

உங்களுக்கு எந்த கவர் வேணுமோ அதை எடுத்துக்கோங்க என்றாராம்.

பாடகர் திகைச்சுப் போயி முழிச்சாராம்.

நாம கேட்ட பணத்தைவிட, 
சுகி சிவம் சொன்ன தொகை குறைவா இருந்தா,
சிக்கலாயிடுமேன்னு யோசிக்கிறார். 

தன் கவரை விட, நம்மை சிபாரிசு செய்த சுகி சிவத்தை மதிக்க எண்ணி,
கடைசில சுகி சிவம் சொன்ன கவரையே வாங்கிகிட்டாராம்.

கவரை திறப்பதற்கு முன்னால் சுகி சிவம் பாடகரிடம் கேட்டார்:

நீங்கள் எவ்வளவு பணம் செட்டியார் கிட்ட கேட்டீங்க?

நான் முதலில் ஆயிரம் ரூவா கேட்டேன்.

அதற்கு அவர் ஆயிரமான்னு? கேட்டாரு. 

பயந்து போய் நான் ஐநூறு தந்தா கூட போதும்னு சொன்னேன். 
என்றார் பாடகர். 

சரி, இப்போ கவரை திறந்து பாருங்க என்றார்  சுகி சிவம். 

கவரின் உள் ரூ:5,500/- இருந்ததைப் பார்த்து பாடகர் அசந்துட்டார். 
(2 கவரிலும் செட்டியார் அய்யா அதே தொகையை தான் வைத்திருந்தார்)

பாடகர் கேட்ட ஐநூறையும் + சுகி சிவம் சொன்ன 2,000/- ஐயும் + செட்டியார் தன் தகுதிக்காக ரூ:3,000/- சேர்த்தே செட்டியார் கொடுத்திருந்தார்.  

சுகி சிவம் சொல்ல வந்த நீதி என்னன்னா:

இறைவன் கிட்ட நாம கேக்கறப்போ, 
நம்ம தகுதிக்கு தகுந்த மாதிரி கேட்கிறோம்.

அது தப்பு. 

இறைவனுடைய தகுதிக்கு தகுந்த மாதிரி கேட்கணும்.  

அப்படிக் கேட்டா,
நாம கேட்பதைவிட, 
அவன் தருவது அதிகமாக இருக்கும்.

எப்போவுமே நம்மை மட்டுமல்ல,
இந்த உலகையே படைத்து,
பரிபாளிக்கும் இறைவனிடம் நாம கேட்கும் போது, 
நமது தேவை குறைவாகவே இருந்தாலும்,
பெருசு,பெருசா கேட்கனும்.  

அவனுக்கு தெரியும் நம் தேவை. 
நமக்கு தெரியும் அவனின் தாராள குணம்.  

பின்ன எதுக்கு கொரச்சி கேட்டுக்கிட்டு?

அதுபோலவே,
நம் தேவை அறிந்து நமக்கு அவன் கொடுத்ததை,
நம்முடைய தேவைக்கு போக மீதத்தை, 
அவன் சொல்லிய வகையில் செலவு செய்வதும்,

அடுத்தவர்களுக்கு உதவுவதும்,

மென் மேலும் அவன் அள்ளி அள்ளி நமக்கு தருவதற்கு ஏதுவாகும்.

No comments:

Post a Comment