Tuesday, 27 March 2018

க, உ, ங,ச, ரு, சா, எ, அ, கூ, ய′

“க’ டுகு,                    1

“உ’ ளுந்து,               2

“ங’ னைச்சு,.            3

 “ச’  மைச்சு,              4

“ரு’ சிச்சு,                   5

“சா’ ப்பிட்டேன்,.       6

“எ’ ன, “.                     7

அ’ வன்,                     8

“கூ’ றினான்;           9

“ய’  என்றேன்      0

மறக்காமல் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கவும்👏

*தமிழை வளர்ப்போம்...*

உண்மை நிகழ்வு. கதையல்ல நிஜம்.

நாட்டுக் கோட்டை பணக்கார செட்டியார் ஒருத்தர் அவருடைய 60 ம் கல்யாண விழாவுக்கு சுகி சிவம் அவர்களை பேச அழைத்திருந்தார். 

சுகி சிவமும் போக ஒத்துக்கிட்டார். 

எவ்வளவு சன்மானம் தரனும்னு செட்டியார் அவர்கள் சுகி சிவம் அவர்களிடம் கேட்டார். 

உங்க தகுதிக்கு தகுந்த மாதிரி தாங்கலேன்னு சுகி சிவம் சொன்னார். 

நிகழ்ச்சியில் சுகி சிவம் பேசி முடித்ததும், 
அவரின் பேச்சை மிகவும் பாராட்டியதுடன், 
ஒரு கவரையும் கொடுத்தார் செட்டியார். 
(கவரில் ரூ 10,000/- இருந்தது)

மேலும் மறு வாரம்  ஒரு பாட்டு கச்சேரி நடத்த இருப்பதாகவும்,
நல்ல பாடத் தெரிந்த ஒருவரை சொல்லுங்கன்னு சுகி சிவத்திடம் செட்டியார் கேட்டார். 

சுகி சிவமும் தனக்கு தெரிந்த,
நல்ல பாடக் கூடிய,
ஆனால் பிரபலமாகாத ஒரு பாடகரை பற்றி சொன்னார். 

அவருக்கு எவ்வளவு சன்மானம் கொடுக்கணும்னு செட்டியார் கேட்க,
 
"உங்க தகுதிக்கு தக்கபடி கொடுங்க" ன்னு சுகி சிவம் வழமை போல சொன்னார். 

இல்ல இல்ல. 
தொகையை சொல்லுங்கன்னு செட்டியார் வற்புறுத்தி கேட்கிறார். 

சுகி சிவமும் சரி ஒரு 2000/- ரூபாய் கொடுங்கலேன்னு சொன்னார். 

செட்டியாரும் நேரடியாக பாடகரிடம் தொடர்பு கொண்டு அவரையே பாட ஏற்பாடு செய்தார்.  

அடுத்த வாரம், விழா சிறப்பாக முடிந்ததும் செட்டியார் 2 கவர்களில் பணம் போட்டு ஒட்டி பாடகரிடம் எடுத்து வந்தார். 

ஒரு கவர்ல பாடகராகிய நீங்கள் என்னிடம் நிகழ்ச்சிக்குப் கேட்ட பணம் இருக்கு.

இன்னொரு கவர்ல சுகி சிவம் உங்களுக்காக தரச் சொன்ன பணம் இருக்கு. 

உங்களுக்கு எந்த கவர் வேணுமோ அதை எடுத்துக்கோங்க என்றாராம்.

பாடகர் திகைச்சுப் போயி முழிச்சாராம்.

நாம கேட்ட பணத்தைவிட, 
சுகி சிவம் சொன்ன தொகை குறைவா இருந்தா,
சிக்கலாயிடுமேன்னு யோசிக்கிறார். 

தன் கவரை விட, நம்மை சிபாரிசு செய்த சுகி சிவத்தை மதிக்க எண்ணி,
கடைசில சுகி சிவம் சொன்ன கவரையே வாங்கிகிட்டாராம்.

கவரை திறப்பதற்கு முன்னால் சுகி சிவம் பாடகரிடம் கேட்டார்:

நீங்கள் எவ்வளவு பணம் செட்டியார் கிட்ட கேட்டீங்க?

நான் முதலில் ஆயிரம் ரூவா கேட்டேன்.

அதற்கு அவர் ஆயிரமான்னு? கேட்டாரு. 

பயந்து போய் நான் ஐநூறு தந்தா கூட போதும்னு சொன்னேன். 
என்றார் பாடகர். 

சரி, இப்போ கவரை திறந்து பாருங்க என்றார்  சுகி சிவம். 

கவரின் உள் ரூ:5,500/- இருந்ததைப் பார்த்து பாடகர் அசந்துட்டார். 
(2 கவரிலும் செட்டியார் அய்யா அதே தொகையை தான் வைத்திருந்தார்)

பாடகர் கேட்ட ஐநூறையும் + சுகி சிவம் சொன்ன 2,000/- ஐயும் + செட்டியார் தன் தகுதிக்காக ரூ:3,000/- சேர்த்தே செட்டியார் கொடுத்திருந்தார்.  

சுகி சிவம் சொல்ல வந்த நீதி என்னன்னா:

இறைவன் கிட்ட நாம கேக்கறப்போ, 
நம்ம தகுதிக்கு தகுந்த மாதிரி கேட்கிறோம்.

அது தப்பு. 

இறைவனுடைய தகுதிக்கு தகுந்த மாதிரி கேட்கணும்.  

அப்படிக் கேட்டா,
நாம கேட்பதைவிட, 
அவன் தருவது அதிகமாக இருக்கும்.

எப்போவுமே நம்மை மட்டுமல்ல,
இந்த உலகையே படைத்து,
பரிபாளிக்கும் இறைவனிடம் நாம கேட்கும் போது, 
நமது தேவை குறைவாகவே இருந்தாலும்,
பெருசு,பெருசா கேட்கனும்.  

அவனுக்கு தெரியும் நம் தேவை. 
நமக்கு தெரியும் அவனின் தாராள குணம்.  

பின்ன எதுக்கு கொரச்சி கேட்டுக்கிட்டு?

அதுபோலவே,
நம் தேவை அறிந்து நமக்கு அவன் கொடுத்ததை,
நம்முடைய தேவைக்கு போக மீதத்தை, 
அவன் சொல்லிய வகையில் செலவு செய்வதும்,

அடுத்தவர்களுக்கு உதவுவதும்,

மென் மேலும் அவன் அள்ளி அள்ளி நமக்கு தருவதற்கு ஏதுவாகும்.

பச்சை மாங்காயை உப்பு ,தூள் தொட்டு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா…?

பலருக்கும் மாங்காயைக் கண்டால் நாவில் இருந்து எச்சில் ஊறும். 

ஆனால் மாங்காய் சாப்பிட்டால் உடல் வெப்பம் அதிகரிக்கும், பருக்கள் வரும் என்று பலரும் அதை வாங்கி சாப்பிடமாட்டார்கள். 

உங்களுக்கு ஒன்று தெரியுமா?

மாங்காயில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உண்மையில் இதனை சாப்பிட்டால் நாம் சந்திக்கும் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இங்கு ஒருவர் மாங்காயை சாப்பிட்டால் பெறும் நன்மைகள் என்னவென்று பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் மாங்காயை வேண்டாம் என்று தவிர்க்காதீர்கள்.

கோடையில் அதிகப்படியான வெப்பத்தால் உடலின் நீர்ச்சத்தை இழந்து, அதனால் உடல் வெப்பமடைந்து காய்ச்சல் அல்லது சில நேரங்களில் சுய நினைவை இழக்க நேரிடும். ஆனால் மாங்காயை உட்கொண்டு வருவதன் மூலம், அதில் உள்ள சக்தி வாய்ந்த குளிர்மிக்க உட்பொருள், உடலில் நீர்ச்சத்தை சீராக பராமரித்து, இப்பிரச்சனையைத் தடுக்கும்.

மாங்காயில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது உடலில் எலக்ட்ரோலைட் அளவை பராமரிக்க உதவி, அதனால் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்து, இதய நோயின் அபாயத்தில் இருந்து பாதுகாக்கும்.

பச்சை மாங்காயில் ஆவியாகக் கூடிய உட்பொருட்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இது செரிமான திரவத்தின் உற்பத்தியைத் தூண்டி, செரிமான பிரச்சனைகளில் இருந்து தடுத்து, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆகவே கோடையில் வயிற்று பிரச்சனைகளை சந்திக்காமல் இருக்க வேண்டுமானால், மாங்காய் துண்டுகளை சாப்பிடுங்கள்.

பருவ நிலை மாற்றம் அல்லது ஏதேனும் வைரஸ் தொற்றுக்களால் நீங்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுபவராயின், பச்சை மாங்காயை சாப்பிடுங்கள். ஏனெனில் பச்சை மாங்காயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது.

இது நோயெர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்த்தொற்றுக்களின் அபாயத்தில் இருந்து தடுக்கும். நீங்கள் அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சலால் அவஸ்தைப்பட்டு வந்தால், பச்சை மாங்காயை சாப்பிடுங்கள். இதனால் அசிடிட்டி பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

மாங்காய் உடலின் ஆற்றலை அதிகரிக்கும் என்பது தெரியுமா? மேலும் பச்சை மாங்காயை மதிய வேளையில் ஒரு துண்டு சாப்பிட்டால், மதிய வேளையில் வரும் தூக்கத்தைத் தவிர்க்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.பச்சை மாங்காய் கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைகளைத் தடுக்கும்.

ஏனெனில் மாங்காய் பித்தநீரின் சுரப்பை அதிகரிக்கும் மற்றும் குடலை பாக்டீரியா தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கும். பச்சை மாங்காய் இரத்தம் சம்பந்தமான பிரச்சனையில் இருந்து விடுதலை தரும். ஏனெனில் மாங்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. அதிலும் மாங்காயை உட்கொண்டு வந்தால், இரத்த நாளங்களின் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும் மற்றும் புதிய இரத்த செல்கள் உருவாகும்.

நிறைய பேருக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் மாங்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் கொலாஜனின் கூட்டுச்சேர்க்கையில் முக்கிய பங்கை வகிக்கிறது. ஆகவே மாங்காயை உட்கொண்டால் சருமத்தின் பொலிவு அதிகரிப்பதோடு, முதுமையும் தள்ளிப் போகும்.

மாங்காயில் உள்ள உட்பொருட்கள், சருமத்துளைகளில் எண்ணெய் மற்றும் அழுக்குகள் தேங்குவதைத் தடுக்கும்.

அதற்கு பச்சை மாங்காயை துண்டுகளாக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து, பின் அந்த நீரைக் கொண்டு இரவில் படுக்கும் முன் முகத்தைக் கழுவி, மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ, முகப்பரு பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

ஏழு கோடி மந்திரங்களில் உள்ள ரகசியங்கள்!

சைவ சமய நூல்களைச் சான்றோர் தோத்திரம், சாத்திரம் என இருவகையாகப் பகுத்துள்ளனர். 
தோத்திரம் அன்பின் அடிப்படையில் எழுவது. சாத்திரம் அறிவின் அடிப்படையில் எழுவது.

மந்திரங்கள் ஏழுகோடி ஆதலினால் மன்னும் அவர் இந்த வகை திருமுறைகள் ஏழாக எடுத்தமைத்து என்பது திருமுறை கண்ட புராணக் கூற்று. 

ஏழுகோடி என்றால் ஏழு கோடி மந்திரங்கள் என்பது பொருள் அல்ல. 
ஏழு முடிவுகளை உடைய மந்திரங்கள் என்பதே பொருளாகும்.

அவையாவன- நமஹா, சுவாஹா, சுவதா, பட், உம்பட், வௌஷட், வஷட் என்பனவாகும். 

நமஹா - ஐஸ்வர்யம் அளிப்பது. 

சுவாஹா - தேவதைகளைத் திருப்தி செய்வது. 

சுவதா - தைரியம், வசீகரம் கொடுப்பது.

பட் - விக்கினங்களைத் துரத்துவது. 

உம்பட் - காமாதிகளைப் போக்குவது. 

வௌஷட் - தேவதைகளை இழுப்பது. 

வஷட் - தேவதைகளை வசம் செய்வது. 

நமசிவய, சிவயநம, வயநமசி, சிவாய தத்புருட

சிவமந்திரமும் - பலன்களும் 

நங்சிவயநம – திருமணம் நிறைவேறும்

அங்சிவயநம – தேக நோய் நீங்கும்

வங்சிவயநம – யோக சித்திகள் பெறலாம்.

அங்சிவயநம – ஆயுள் வளரும், விருத்தியாகம்

ஓம்அங்சிவாய – எதற்கும் நிவாரணம் கிட்டும்.

கிலிநமசிவய – வசிய சக்தி வந்தடையும்

ஹிரீநமசிவய – விரும்பியது நிறைவேறும்

ஐயும்நமசிவய – புத்தி வித்தை மேம்படும்.

நமசிவய – பேரருள், அமுதம் கிட்டும்.

உங்யுநமசிவய – வியாதிகள் விலகும்.

கிலியுநமசிவய – நாடியது சித்திக்கும்

சிங்வங்நமசிவய – கடன்கள் தீரும்.

நமசிவயவங் – பூமி கிடைக்கும்.

சவ்வுஞ்சிவாய – சந்தான பாக்யம் ஏற்படும்.

சிங்றீங் – வேதானந்த ஞானியாவார் உங்றீம்

சிவயநம – மோட்சத்திற்கு வழி வகுக்கும்.

அங்நங் சிவாய – தேக வளம் ஏற்படும்.

அவ்வுஞ் சிவயநம – சிவ தரிசனம் காணலாம்

ஓம் நமசிவாய – காலனை வெல்லலாம்.

லங்ஸ்ரீறியுங் நமசிவாய – விளைச்சல் மேம்படும்

ஓம் நமசிவய – வாணிபங்கள் மேன்மையுறும்

ஓம் அங்உங்சிவயநம – வாழ்வு உயரும், வளம் பெருகும்.

ஓம் ஸ்ரீறியும் சிவயநம – அரச போகம் பெறலாம்.

ஓம் நமசிவய – சிரரோகம் நீங்கும்.

ஓங் அங்சிவாய நம – அக்னி குளிர்ச்சியைத் தரும்.

திருமுறைகள் அனைத்துமே மந்திரங்கள் ஆகையினால் ஏழு முடிபுகளை வைத்தே மூவர் தேவாரங்களை 7 திருமுறைகளாக வகுத்தனர்.

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

*சாக்தஸ்ரீ  சோமசுந்தரம்*

நவக்கிரக தோஷம் போக்கும் குளியல்.(நீராடுதல்)

செவ்வாய் தோஷம் :
திருமணத் தடை ஏற்படுவதற்கு செவ்வாய் முக்கிய காரணமாக இருக்கிறது. செவ்வாய் தோஷத்தால் திருமணத்திற்கு பிறகும் கூட ஒரு சிலருக்கு நிறைய பிரச்சினைகள் வந்து சேரலாம். இதற்கு சிறந்த குளியல் பரிகாரம் ஒன்று இருக்கிறது. வில்வம் பழக் கொட்டையை நன்கு பொடி செய்து, குளிக்கும் நீரில் கலந்து குளிக்க வேண்டும். நான்கைந்து குவளை நீரை இதுபோல் குளித்துவிட்டு, பிறகு சாதாரண தண்ணீரில் நீராடலாம். இதனால் செவ்வாய் தோஷம் அகலும்.
புதன் தோஷம் :
இந்த தோஷம் நீங்குவதற்கு கடல் நீரோ அல்லது கங்கை நீரோ தேவைப்படும். மஞ்சள் மற்றும் கடுகு ஆகிய இரண்டையும் கொஞ்சமாக எடுத்துக் கொண்டு, அதில் தேனை கலக்க வேண்டும். தொடர்ந்து இந்தக் கலவையை சிறிதளவு கடல் நீர் அல்லது கங்கை நீரில் கலந்து கொள்ள வேண்டும். பிறகு நாம் குளிக்கும் நீரில் இதனை கலந்துவிட்டு நீராட வேண்டும்.
குரு தோஷம் :
கருப்பு ஏலக்காயை நீரில் நன்கு கொதிக்க வைத்து, அதனை குளிக்கும் நீரில் கலந்து குளித்து வருவதன் மூலமாக வியாழ பகவான் என்று அழைக்கப்படும் குருவால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.
சுக்ர தோஷம் :
பச்சை ஏலக்காயை நீரில் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அந்த நீரை, நாம் அன்றாடம் குளிக்கும் நீரில் கலந்து நீராட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமாக சுக்ர தோஷம் விலகும்.
சனி தோஷம் :

கருப்பு எள் வாங்கி அதனை நீரில் நன்கு கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதை குளிக்கும் நீரில் கலந்து குளித்து வந்தால் சனி தோஷம் நீங்கப்பெறலாம்.
ராகு-கேது தோஷம் :
அருகம்புல்லை, நீரில் நன்றாக கொதிக்கவைத்து, பின்னர் அதை குளிக்கும் தண்ணீரில் கலந்து நீராட வேண்டும். இவ்வாறு செய்வதால் ராகு-கேது தோஷம் அகலும்.