Thursday, 18 January 2018

கிரகம் - உச்சத்தில் இருக்கும் பலன்கள்


சூரியன் மேஷத்தில் உச்சம் அடைகிறார். சூரியன் உச்சமாகப் பிறந்தவன் அரசாள்பவனாகவும் மிகுந்த பராகிரமம் நோய் இல்லாமையும் அங்கவீனம் இல்லாதவனாகவும் தனலாபமும் பலவித வாகனங்களையும் உடையவனாக விளங்குவான்.
-
சந்திரன் ரிஷபத்தில் உச்சம் அடைகிறார். சந்திரன் உச்சமாகப் பிறந்தவன் நல்ல மனமும் புத்திர விருத்தியும் சகலமான பேர்களிடத்தில் நட்பு பாராட்டுபவனாகவும் இருப்பான். அதிக யோகமும் தனலாபமும் உண்டாகும்.
-
செவ்வாய் மகரத்தில் உச்சம் அடைகிறார். செவ்வாய் உச்சமாகப் பிறந்தவன் மிகுந்த ஆயுள் விருத்தியும் அந்நியரிடத்தில் தயவும் பராகிரமமும் பெற்றவனாவான். பிதுர் பாக்கியமும் விவேகமுள்ளவனாகவும் இருப்பான். பித்த தேகமுடையவனாய் இருப்பான்
-
.புதன் கன்னியில் உச்சம் அடைகிறார். புதன் உச்சமாகப் பிறந்தவன் பல கலைகளை அறிபவனாகவும் மிகுந்த நற்குணம், நற்புத்தி உடையவனாகவும் விளங்குவான். பந்துக்களிடத்தில் விசுவாசமும் கணக்கில் தேர்ச்சியும் பெற்றவனாகவும் ஒப்பற்ற அரசனைப் போல நூறு வயது வரை வாழ்பவனாக இருப்பான்.
-
குரு கடகத்தில் உச்சம் அடைகிறார். குரு உச்சமாகப் பிறந்தவன் ராஜனைப் போல் அதிக ஐஸ்வரியமும் ஆடை ஆபரணமும் மிகுந்த யோகமும் உடையவனாக விளங்குவான். மிகுந்த கல்வியும் சகல வாகனங்களும் புத்திரர்களும் உடையவனாவான்.
-
சுக்கிரன் மீனத்தில் உச்சம் அடைகிறார். சுக்கிரன் உச்சமாகப் பிறந்தவன் அதிக் பொன் பொருள் உடையவனாகவும் படிப்பில் சிறந்தவனாகவும் சுகபோகங்களை அனுபவிப்பவனாகவும் இருப்பான்.
-
சனி துலாத்தில் உச்சம் அடைகிறார். சனி உச்சமாகப் பிறந்தவன் நீண்ட ஆயுளும் தேக சௌக்கியமும் நினைத்ததை அடைபவனுமாய் இருப்பான். பொன், பொருள் பெற்று இன்பம் அடைபவனாய் இருப்பான்
-
.ராகு விருச்சிகத்தில் உச்சம் அடைகிறார். ராகு உச்சமாகப் பிறந்தவன் மிகுந்த வல்லவையும் வருங்காலத்தைப் பற்றி சொல்லும்படியான விவேகமான புத்தியும் அஞ்சா நெஞ்சமும் கொண்டவனாக இருப்பான்.
-
கேது விருச்சிகத்தில் உச்சம் அடைகிறார். கேது உச்சமாகப் பிறந்தவன் வேதங்கள் வேதாந்தங்கள் நன்கு அறிந்து ஞானிகள் சந்தோஷிக்கும்படி நடந்து கொள்ளும் தன்மை பெற்றவனாவான்.
-
ஒரு கிரகம் உச்சமாகப் பிறந்தவன் துன்பம் இல்லாமல் நல் வாழ்க்கை அடைவான்.
-
இரண்டு கிரகம் உச்சம் பெற்றவன் அரசனாகவோ அவனைப் போன்ற செல்வந்தனாகவோ விளங்குவான்.
-
மூன்று கிரகம் உச்சம் பெற்றவன் சிறந்த தலைவனாகவும்.,
-
நான்கு கிரகம் உச்சம் பெற்றவன் லட்சுமி தாண்டவம் பெற்று செல்வந்தனாகவும் விளங்குவான்.
=
 உச்சமாக இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தால் யோகம் குறையும்.
-

 6, 8, 12 இல் உச்சமானாலும் பூரண யோகம் உண்டாகாது.

1 comment:

  1. My name is Dr. Ashutosh Chauhan A Phrenologist in Kokilaben Hospital,We are urgently in need of kidney donors in Kokilaben Hospital India for the sum of $500,000,00 USD, (3 Crore INDIA RUPEES) All donors are to reply via Email only: hospitalcarecenter@gmail.com or Email: kokilabendhirubhaihospital@gmail.com
    WhatsApp +91 7795833215

    ReplyDelete