Thursday 29 November 2018

தமிழ் மருத்துவ அறிவுரைப்பா

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் ,
இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்துகொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும்,
இப்பாடல்
அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது
சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்
மூளைக்கு வல்லாரை
முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
எலும்பிற்கு இளம்பிரண்டை
பல்லுக்கு வேலாலன்
பசிக்குசீ ரகமிஞ்சி
கல்லீரலுக்கு கரிசாலை
காமாலைக்கு கீழாநெல்லி
கண்ணுக்கு நந்தியாவட்டை
காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
தோலுக்கு அருகுவேம்பு
நரம்பிற்கு அமுக்குரான்
நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி
முகத்திற்கு சந்தனநெய்
மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு மருதம்பட்டை
அம்மைக்கு வேம்புமஞ்சள்
உடலுக்கு எள்ளெண்ணை
உணர்ச்சிக்கு நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே
கருப்பைக்கு அசோகுபட்டை
களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
குரலுக்கு தேன்மிளகே!
விந்திற்கு ஓரிதழ்தாமரை
வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு தாமரைப்பூ
சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை
கக்குவானுக்கு வசம்புத்தூள்
காய்ச்சலுக்கு நிலவேம்பு
விக்கலுக்கு மயிலிறகு
வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி
நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ
வெட்டைக்கு சிறுசெருப்படையே
தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
நஞ்செதிர்க்க அவரிஎட்டி
குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
பெருவயிறுக்கு மூக்கிரட்டை
கக்கலுக்கு எலுமிச்சைஏலம்
கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
ஆண்மைக்கு பூனைக்காலி
வெண்படைக்கு பூவரசு கார்போகி
விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு
கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே
உடல்பெருக்க உளுந்துஎள்ளு
உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
உடல் மறக்க இலங்கநெய்யே
அருந்தமிழர் வாழ்வியலில்
அன்றாடம்சிறுபிறணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
அறிந்தவரை உரைத்தேனே!!

Thursday 8 November 2018

(நேத்ர) கண்கள் உள்ள நாட்கள்



1. புதன், வியாழன், வெள்ளி கிழமைகள்
இரண்டு (நேத்ர) கண்கள் உள்ள நாட்கள்.
அன்று செய்யும் சுப நிகழ்ச்சிகள் மிகுந்த நற்பலனை தரும்.

2. ஞாயிறு, திங்கள் கிழமைகள் ஒரு கண்ணுள்ள நாட்கள்.
ஒரு கண்ணுள்ள நாட்களில் சுப நிகழ்ச்சிகள் செய்யும் போது மத்திம பலன்கள் தான் கிடைக்கும்.

3. செவ்வாய், சனி கிழமைகள் (நேத்ரன் இல்லாத நாட்கள்) அதாவது குருட்டு நாட்கள் எனப்படும்.
குருட்டு நாட்களில் செய்யும் நிகழ்வுகள் தோல்வியில் முடியும்.

Saturday 6 October 2018

ஹோரைகள்:

கண்டிப்பாக வெற்றியைத் தரும் ஹோரைகள்:
ஞாயிறு - சூரியன், புதன், குரு, சந்திரன்
திங்கள் - சந்திரன், குரு, சூரியன்
செவ்வாய் - குரு, சந்திரன், சுக்கிரன், சூரியன்
புதன் - சுக்கிரன், புதன், சூரியன்
வியாழன் - குரு, சனி, சந்திரன், சூரியன்
வெள்ளி - சுக்கிரன், புதன்
சனி - குரு, சுக்கிரன், புதன்
தோல்வி தரும் கிரக ஓரைகள்..
ஞாயிற்றுக் கிழமை சுக்கிர ஓரை தோல்வியை
தரும்.
திங்கள் கிழமை சுக்கிரன், புதன் ஓரைகள்
சரியாக செயல்படாது.
செவ்வாய் கிழமை புதன் ஓரை தோல்வி தரும்.
புதன் கிழமை குரு, சந்திர ஓரைகள் சரியாக
செயல்படாது.
குரு (வியாழன்) சுக்கிர, புதன் ஓரைகள்
கிழமை சரியாக செயல்படாது.
வெள்ளி கிழமை குரு, சந்திர ஓரைகள்
தோல்வி தரும்.
சனிக்கிழமை சந்திர ஓரை செயல்படாது..
கிரகங்களின் நட்புகள்
சூரியன் = குரு, செவ்வாய், சந்திரன்
சந்திரன் = குரு, செவ்வாய், சனி
செவ்வாய் = குரு, சூரியன், சந்திரன்
புதன் = சுக்கிரன், சனி
குரு = சூரியன், சந்திரன், செவ்வாய்
சுக்கிரன் = சனி, புதன்
சனி = சுக்கிரன், புதன்
கிரக பகை விவரம்
சூரியன் x சுக்கிரன், சனி
சந்திரன் x சுக்கிரன், சனி, புதன்
செவ்வாய் x புதன், சனி
புதன் x குரு, சந்திரன், செவ்வாய்
குரு x சுக்கிரன், புதன்
சுக்கிரன் x சூரியன், சந்திரன்
சனி x செவ்வாய், சூரியன், சந்திரன்
சனி ஓரை: (சோரம் தரும் ஹோரை)
1. சனி ஓரையில் எந்த ஒரு சுப காரியத்திலும் ஈடுபட கூடாது! மீறி செய்தால் அக்காரியத்தில் தடை, தாமதம், தோல்விகளே ஏற்படும்! 100% அசுபம் உண்டாக்கும்!
2. கண்டங்கள், விபத்துக்கள், பிடிபடுதல், தீயவிளைவுகளை வாரி வழங்குவது சனி ஓரையாகும்! பெரும்பாலான (Accident) வாகன விபத்துக்கள் சனி ஓரையில்தான் நிகழும்! உஷார்!
3. இந்த ஓரையில் ஒரு மூலையில் ஒதுங்கி உட்காருவதே சாலச்சிறந்தது!
4. Switch Off செய்யப்பட்ட மொபைல் மாதிரி ஆகிவிட வேண்டியதுதான்!
சுக்கிரன்: (சுகம் தரும் ஓரை)
1. சங்கீதம், ஆடல், பாடல், கற்க, கவி, கட்டுரை, கதை இயற்றுதல், காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபடல், பணம் வாங்குதல், கொடுத்த கடன் வசூல் செய்ய உகந்த ஓரை, பணம் கொடுக்கக் கூடாது!
2. ஆடை, ஆபரணங்கள் வாங்குதல், அணிதல், அலங்கார ஆடம்பர பொருட்கள் வாங்குதல், உல்லாச பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபடுதல், படப்பிடிப்பு தொடக்க விழா (பட பூஜை) செய்தல், கலை அரங்கேற்றம், வங்கிகளில் புதிய Account ஏற்படுத்துதல், (A/c Open பண்ணுதல்).
3. வீடு, வாகனம் கிரயம் பண்ணலாம்!
4. விருந்தினராக செல்லலாம்! பெண் பார்க்க சென்றால் வெற்றி உறுதி!
5. சகல சுபகாரியங்களுக்கு 100% உகந்த ஓரை சுக்கிர ஓரையாகும்!
புதன் ஹோரை: (லாபம் தரும் ஹோரை)
1. எழுத்து, பேச்சு, வித்தை ஆரம்பம், கல்வி, படிப்பு, கல்வி தொடர்பான அனைத்து காரியங்களும் இந்த ஓரையில் செய்யலாம்!
2. கதை, கட்டுரை, காவியம், கவி இயற்றுதல் நூல் ஆராய்ச்சி போன்றன்யாவும் புதன் ஓரையில் வெற்றிகரமாக செய்யலாம்!
3. வியாபாரம், தொழில், உத்தியோகம் தொடர்பான காரியங்களில் ஈடுபடலாம்!
4. திருமணம் சம்பந்தமான காரியத்தில் துணிந்து செயல்படலாம்!
5. எல்லா சுயகாரியங்களையும் புத ஓரையில் புஷ்டியாக வெற்றியாக செய்யலாம்!
6. பழம் நழுவி பாலில் விழுந்தது போல் வெற்றி தரும் ஓரை இது!
குரு ஹோரை: ( ஹோரை)
1. இது 100% சுப ஒரையாகும்! குரு ஓரையில் எல்லா வகையான சுபகாரியங்களையும் செய்யலாம்!
2. கல்வி, வித்யாரம்பம், ஆலயம் வழிபடுதல், திருமணம் செய்தல், ஆடை ஆபரணம் வாங்க, அணிய சிறந்த ஓரை.
3. எல்லா விதங்களிலும் சுபத்தையும், லாபத்தையும் அளிப்பது குரு ஓரையாகும்!
சந்திரன் ஹோரை.. (அமுத ஹோரை)
1. சந்திரன் துரித கிரகமாகையால் பயணங்களில் விரைவும், வெற்றியும் உண்டாகும் ஹோரையாகும்.
1)உணவு பொருட்கள் சம்பந்தமான செயல்கள் செய்தல், திருமண விசயம் பேசலாம், அம்பாள் வழிபாடு செய்தல், மனம் சம்பந்தமான விஷயங்களில் ஈடுபடலாம்.
"கற்பனையை" மூலதனமாக கொண்ட எந்த ஒரு செயலிலும் ஈடுபடலாம்
2. எல்லா சுப காரியங்களுக்கும் சந்திர ஹோரையை தேர்ந்தெடுக்கலாம்!
3. அம்மாவசையன்றும், மறுநாள் பிரதமை அன்றும் சந்திர ஹோரையை தவிர்க்கவும்! தேய்பிறை சந்திர ஹோரையை தவிர்ப்பது நலம்!
செவ்வாய் ஹோரை: (ரோகம் தரும் ஹோரை)
1. கடன் வாங்குதல் கூடாது. கடனை திருப்பி கொடுக்கலாம்! எந்த ஒரு காரியமும் செய்ய கூடாது. தடை, தாமதம், விபத்து, ரணகாயங்கள் உண்டாக்கும் ஓரையாகும்! இது ஒரு காரசாரமான சண்டை கலகமூட்டும் கிரக ஒரையாகும்!
2. அனைவரும் அனைத்திலும் உஷார் செவ்வாய் போர் கிரகம்!
3. புதிய முயற்சிகளை கட்டாயம் தவிர்க்கவும்

Monday 30 July 2018

நவக்கிரகங்களை எப்படி வழிப்படுவது?


நம்முடைய வாழ்வில் வரும் அனைத்து இன்ப, துன்பங்களும் நவக்கிரகங்களின் செய்கையால் நடக்கிறது என்று இந்து சமயத்தினர் கருதுகின்றனர்.
இந்த நவக்கிரகங்களை வழிபடுவது நல்லது என்றாலும், எந்த ஒரு கோயிலிற்குச் சென்றாலும் மூலவரை வழிபடாமல் வெறும் நவக்கிரக வழிபாட்டை மட்டும் மேற்கொள்வது தவறானது. நவக்கிரகங்களை எப்படி வழிபடுவது? என்று தெரிந்து கொள்ளலாமா...?
முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபட்ட பின்னர், அந்தக் கோயிலின் மூலவரை வணங்கி விட்டு, இறுதியாகவே நவக்கிரக வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். இதுவே சிறந்த பலன்களை அளிக்கும். மூலவரை வழிபடாமல் நவக்கிரங்கங்களை மட்டும் வழிபடுவது எதிர்மறையான பலன்களையே கொடுக்கும்.
நவக்கிரகங்களில் ஒவ்வொரு கிரகமும் தரும் வளங்கள் இவைதான்;
1. சூரியன் – ஆரோக்கியம்
2. சந்திரன் – புகழ்
3. செவ்வாய் – செல்வச் செழிப்பு
4. புதன் – அறிவு வளர்ச்சி
5. வியாழன் – மதிப்பு
6. சுக்கிரன் – வசீகரத் தன்மை
7. சனீஸ்வரன் – மகிழ்வான வாழ்க்கை
8. ராகு – தைரியம்
9. கேது – பாரம்பரியப் பெருமை
நவகிரகங்களைப் சுற்றி வழிபடும் போது, அந்தந்தக் கிரகத்திற்கு உரித்தான எண்ணிக்கையில் சுற்றி வழிபட வேண்டும்.
அதாவது முதலில் ஒன்பது முறை சுற்றி வணங்கிய பின் அந்தக் கிரக அனுக்கிரகத்துக்காக மேலும் விசேஷமாகச் சுற்றி வந்து வழிபடுதல் வேண்டும்.
அது எத்தனை சுற்றுகள் என்பதைப் பின் வரும் செய்திகளின் வழி அறிந்து கொள்ளலாம்.
1. சூரியன் – 10 சுற்றுகள்
2. சுக்கிரன் – 6 சுற்றுகள்
3. சந்திரன் – 11 சுற்றுகள்
4. சனி – 8 சுற்றுகள்
5. செவ்வாய் – 9 சுற்றுகள்
6. ராகு – 4 சுற்றுகள் அடிப்பிரதட்சிணம்
7. புதன் – 5, 12, 23 சுற்றுகள்
8. கேது – 9 சுற்றுகள்
9. வியாழன் – 3, 12, 21 சுற்றுகள்
குறிப்பு: நவக்கிரகங்களை நேருக்கு நேராக நின்று வணங்குவது தவறான ஒன்றாகும். நவக்கிரகச் சிலைகளைத் தொட்டு வணங்குவது பாவம் தரும் செயல் ஆகும். எனவே அவ்வாறு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

எப்படி வலம் வந்து வழிபட வேண்டும்?....


* சிவனுக்கு இடமிருந்து வலமாக ஐந்து முறை சுற்றி வர வேண்டும்.
* அனைத்து வகையான சத்திகளுக்கும் ஐந்து முறை அல்லது ஒருமுறை இடமிருந்து வலமாகச் சுற்றி வர வேண்டும்.
* முருகன், பிள்ளையார், விநாயகர், கணபதி, ஐயனார், கருப்பு முதலியவர்களுக்கு இடமிருந்து வலமாக மூன்று முறை சுற்றி வர வேண்டும்.
* திருமால், பிறமண், குபேரன், இயமன் முதலியவர்களுக்கு இடமிருந்து வலமாக நான்கு முறை சுற்றி வர வேண்டும்.
* ஒன்பது கோள்கள், சனீசுவரன், சூரியன், சந்திரன், பைரவர், பலிபீடம், கொடிமரம் முதலியவர்களை இடமிருந்து வலமாக ஏழு முறை சுற்றி வர வேண்டும்.
* பறவை, விலங்கினங்கள் சமாது வலமிருந்து இடமாக நான்கு முறை சுற்றி வர வேண்டும்.
* துறவிகளின் சமாது வலமிருந்து இடமாக ஏழுமுறை சுற்ற வேண்டும்.
* இல்லறத்தார் சமாதை வலமிருந்து இடமாக ஒன்பது முறை சுற்றி வர வேண்டும்.
* உயிருள்ள கன்னிப் பெண்களை ஒன்பது முறை வலமிருந்து இடமாகச் சுற்றி வர வேண்டும்.
* வாவரசிகளை (வாழ்வு + அரசிகள் => இல்லறத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற சுமங்கலிப் பெண்கள்) வலமிருந்து இடமாக நான்கு அல்லது ஐந்து முறை சுற்றி வர வேண்டும்.
* பூசையில்லாத அல்லது பாழடைந்த ஆலயங்களை வலமிருந்து இடமாக இரண்டு முறை சுற்றி வர வேண்டும்.
* சித்தி வழங்கக் கூடிய குருவை, குருதேவரை, அருளை அநுபவப் பொருளாக வழங்கக் கூடிய அருளாளர்களை வலமிருந்து இடமாக பதினாறு அல்லது பதினெட்டு முறை சுற்றி வந்து ஒவ்வொரு முறையும் அவரது மெய்தொட்டு வணங்க வேண்டும்.
* வணங்குபவர் தனித்திருந்தால் அல்லது அறைக்குள் இருந்தால் அல்லது இருளில் இருந்தால் வணங்கப் படுபவரின் ஒப்புதல் பெற்று ஆரம்பத்திலும் முடிவிலும் முத்தங்கள் கொடுத்து வணங்க வேண்டும்.
குறிப்பு: வணங்குபவரின் இடது கை, வலது கை அடிப்படையில்தான் இடமிருந்து வலம் வருவது அல்லது வலமிருந்து இடம் வருவது கையாளப்பட வேண்டும்

Monday 18 June 2018

சப்த கன்னியர் பக்தி ஸ்பெஷல்


சப்த கன்னியர் பக்தி ஸ்பெஷல்
செட்டியப்பர், மலையாள தேசத்து மந்திரவாதி. ஆனாலும், இவர் தனது மந்திரத்தை யாருக்கு எதிராகவும் பிரயோகித்தது கிடையாது.
மஞ்சள் வியாபாரத்தையே பிரதான தொழிலாகச் செய்து வந்தவர் அவர். ஒருமுறை வியாபார விஷயமாக அவர் மணக்கால் கிராமத்திற்கு வந்தார். வழியில் ஓர் ஆலயம் இருப்பதையும், அந்த ஆலயத்தின் எதிரில் உள்ள திருக்குளத்தில் ப்ராம்மி, வைஷ்ணவி, மாகேஸ்வரி, கவுமாரி, சாமுண்டி, ஐந்த்ரீ, வராகி ஆகிய சப்தமாதர்கள் ஆனந்தமாக நீராடிக்கொண்டு இருப்பதையும் பார்த்தார்.
தெய்வீக அழகு நிரம்பிய அவர்களின் அருகில் சென்ற செட்டியப்பர்,
உங்களுக்கு மஞ்சள் வேண்டுமா?’ என்று கேட்டார். விளையாடியபடியே நீராடிக்கொண்டு இருந்த கன்னியர்கள், செட்டியப்பரிடம் தங்களுக்கு மஞ்சள் வேண்டாம் என்று கூறினார்கள்.
அதைக் கேட்டதும் அவருக்கு, தேவகன்னியர்கள்போல் தோற்றமளித்த அவர்களிடம் தனது வியாபாரம் நடக்கவில்லையே என்ற வருத்தம் மேலோங்கியது.
அந்தப் பெண்களை மிரட்டியாவது தன்னிடம் உள்ள மஞ்சளில் சிறிதளவேனும் வாங்க வைக்க வேண்டும் என்று அவர் எண்ணினார்.
இதனையடுத்து அவர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டார். நீராடிக்கொண்டு இருந்த சப்த கன்னியர்கள் தாங்கள் அணிந்து வந்து இருந்த ஆடைகளை திருக்குள கரையில் வைத்திருந்தனர்.
அந்த ஆடைகள் அனைத்தையும் செட்டியப்பர் எடுக்க ஆரம்பித்தார். முருகனின் சக்தியான கவுமாரி அதை பார்த்து விட்டாள். உடனே செட்டியப்பரை அழைத்தாள். எனக்குகொஞ்சம் மஞ்சள் வேண்டும்என்றாள்.
அதைக்கேட்டதும் மனம் மகிழ்ந்த செட்டியப்பர்எவ்வளவு மஞ்சள் வேண்டும்? என்று கேட்டார். அவர் அவ்வாறு கேட்டதும் கவுமாரி,
இதோ, இதன் எடைக்கு எடை மஞ்சள் கொடுத்து விட்டு பணத்தை வாங்கிக்கொண்டு போஎன்று கூறியதோடு, தனது தலையில் இருந்த ஒரு மலரை தூக்கி அந்த வியாபாரியை நோக்கி வீசினாள்.
உடனே வியாபாரி அலட்சியமாக அந்த மலரை எடுத்து தன்னிடம் இருந்த தராசுத் தட்டின் ஒரு பகுதியில் வைத்தார். அதன் எடைக்கு சரியாக மஞ்சளைப் போட்டார். பூ இருந்த தராசு தட்டு கீழே இறங்கியது. இதையடுத்து வியாபாரி மேலும் மஞ்சளைப் போட்டார். தட்டு மேலும் கீழே இறங்கியது.
என்ன இது, ஆச்சரியமாக உள்ளதே!’ என்று வியந்த செட்டியப்பர் தான் மூட்டையில் கொண்டுவந்திருந்த மொத்த மஞ்சளையும் தராசுத் தட்டில் வைத்தபோதும், பூ இருந்த தட்டு தாழ்ந்தே இருந்தது. சிறிதுகூட மேலே வரவேயில்லை.
மந்திரவாதியான தன்னிடமே இந்த கன்னியர்கள் மாயவித்தை செய்கிறார்களோஎன்று யோசித்தார். அப்போதுதான் அவருக்கு உண்மை தெரிந்தது.
அந்த பெண்கள் அனைவரும் சாதாரண பெண்கள் அல்ல, தெய்வீகப் பெண்கள் என்பதை உணர்ந்தார். உடனே அவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். அங்கேயே சிறியதொரு ஆலயம் அமைத்து சப்தமாதர்களை வழிபட்டார்.
திருச்சி மாவட்டம் லால்குடிக்கருகே உள்ள மணக்கால் கிராமத்தில் அமைந்துள்ளது செட்டியப்பர் எழுப்பிய கவுமாரி மற்றும் சப்தமார்கள் ஆலயம். இந்த ஆலயத்திற்கு நங்கையாரம்மன் என்ற புராணப் பெயரும் உண்டு.
ஆலயத்திற்குள் நுழைந்ததும் இடதுபுறம் மதுரைவீரன் சந்நதி உள்ளது. அதை அடுத்துள்ள மகாமண்டபத்தில் வலதுபுறம் செட்டியப்பரின் வடிவம் உள்ளது. அர்த்த மண்டப நுழைவாயிலின் இரண்டு புறங்களிலும் திருமேனிகள் அமைந்துள்ளன.
கருவறையில் சப்தமார்கள் அழகுற அமைந்து பக்தர்களுக்கு ஆசியளிக்கின்றனர். இங்குள்ள சப்தமாதர்களை வணங்கினால் மாங்கல்ய பலம் அளித்து மஞ்சள், குங்குமம் நிலைக்கச் செய்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பிராகாரத்தில் யானை சிலையும்,
குதிரை சிலையும் சுதை வடிவில் காட்சி தருகின்றன. யானையின் மேல் ஐயனாரும், குதிரையின் மேல் கருப்பண்ணசாமியும் அமர்ந்திருக்கின்றனர்.
சாமிக்கும், அவர் சவாரி செய்யும் குதிரைக்கும் மாலை போட்டு பிரார்த்தனை செய்தால் கடன் தொகை வசூலாகும், திருமணம் இனிதே நடை பெறும் என்று சொல்லப்படுவதால் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து கருப்பண்ண சாமியை வழிபட்டுச் செல்கிறார்கள்.
இந்தக் கோயிலின் தல விருட்சமான நருவளி மரம் தெற்குப் பிராகாரத்தில் பிரமாண்டமாக பரந்து விரிந்து காணப்படுகிறது.
இந்த மரத்தை வலம் வந்து பிரார்த்தனை செய்து வழிபடுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என்பது பல பெண்களின் அனுபவ நம்பிக்கை. மேற்குப் பிராகாரத்தில் ஐயனார் சந்நதியும், எதிரில் யானை சிலையும் உள்ளன. மிகவும் பழமை வாய்ந்த இந்த ஆலயம் பல நூற்றுக்கணக்கான குடும்பங்களின்
குலதெய்வமாக திகழ்கிறது. இத்தலத்தில் ஆட்சிசெய்யும் கவுமாரி மற்றும் சப்தமாதர்கள் தன்னை வேண்டி வரும் பக்தர்களை தனது குழந்தைகளாக நினைத்து அருள்புரிந்து வருகிறார்கள்.
குழந்தை வரம், கடன் வசூலாகுதல், வியாபார விருத்தி ஆகிய கோரிக்கைகளுக்காக வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிரசித்தி பெற்ற இந்த ஆலயம்,
காலை 6 முதல் 10 மணிவரையும், மாலை 5 முதல் இரவு 8 மணிவரையும் திறந்திருக்கும்.மாசி மாத அமாவாசையை தொடர்ந்து நடைபெறும் கரக திருவிழா இங்கு வெகு சிறப்பானது.
பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த திருவிழாவில் கலந்துகொண்டு சப்த மாதர்களை வழிபடுகிறார்கள்.
இந்த ஐந்து நாள் திருவிழாவில் குட்டி குடித்தல் என்ற நிகழ்ச்சியும் நடைபெறும். ஆயிரக்கணக்கான மக்கள் இந்தத் திருவிழாவில் கலந்து கொண்டு மகிழ்கின்றனர்.
நவராத்திரி விழா 10 நாட்களும் இறைவிக்கு லட்சார்ச்சனை நடைபெறுகிறது. பத்தாம் நாள் நடைபெறும் தயிர் பாவாடை எனும் வழிபாடு வித்தியாசமானது.
அர்த்த மண்டபம் முழுவதும் சாதத்தில் தயிரைக் கலந்து தயிர்சாதமாகக் கொட்டி வைத்து நிரவி விடுவார்கள். பார்க்கும்போது அர்த்த மண்டபம் வெள்ளை வெளேர் என மல்லிகை மலர்களால் நிறைக்கப்பட்டதுபோல் இருக்கும்.
பின்னர் அந்த தயிர் சாதத்தை பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்குவார்கள். ஆடி, தை, மாத வெள்ளிக்கிழமைகளில் மாவிளக்கு பூஜை கோலாகலமாக இங்கு நடைபெறுகிறது.
சித்திரை மாதப் பிறப்பு, விஜயதசமி நாட்களில் அம்மன் சிம்ம வாகனத்தில் வீதியுலா வருவாள்.
இந்த ஆலயத்தில் ஒருகால பூஜை மட்டுமே நடந்தாலும் ஆலயம் பகல் நேரம் முழுவதும் திறந்திருப்பதை பக்தர்கள் அனைவரும் பாராட்டி மகிழ்கிறார்கள்.
அகந்தையுடன் வந்த செட்டியப்பரின் கொட்டத்தை அடக்கிய கௌமாரியும், பிற மாதர்களும் தம்மை வணங்கும் பக்தர்களின் அகந்தையை,
அவர்களுடைய எதிரிகளை அழித்து, பக்தர்களை மகிழ்வோடு வாழ வைப்பது சத்தியமான நிஜம். பொதுவாக அனைத்து ஆலயங்களிலும் சப்த கன்னிமார்களின் சந்நதி வடக்கு நோக்கியே அமைந்திருக்கும்.
ஆனால் இங்கு கிழக்கு திசை நோக்கி அமைந்து இருப்பதும் தனிச்சிறப்பாகும். திருச்சி - அன்பில் பேருந்து சாலையில் லால்குடியில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது மணக்கால்