Tuesday, 12 December 2017

'முன்னோர்கள் அருளும் ,ஆசீர்வாதமும், நமக்கு கிடைக்க'! மந்திரம் .

ஓம் நமசிவய சிவய நம ஓம்.
ஓம் சரவணபவ ஓம் சக்தி ஓம்.
எங்கள் குலதெய்வம் முதலாக,
தந்தை / அத்தை /
பாட்டன் / பாட்டி /
பூட்டன் / பூட்டி
ஓட்டன் / ஓட்டி
சேயோன் / சேயோள்
பரன் / பறை
ஈறாக உள்ள பிதுர்கள்,மூதாதையர்கள்/,நண்பர்கள்.
அனைவரும் மேல்நிலை அடைய.
ஏக ப்ரம்மமே திருவருள் புரிவாயாக.
ஓம் நமசிவய சிவாய நம ஓம்.
ஓம் சரவணபவ ஓம் சக்தி ஓம்.
.பிதுர் ப்ரிதி யந்திரம்.
-----------------------------

இந்த அட்சரத்தை செம்பு தகட்டிலோ. அல்லது பேப்பரிலோ ,எழுதி பிரேம் செய்து வீட்டில் வைத்து தீபம் ஏற்றி கீழ்கண்ட முறைப்படி வணங்கிவர ஆண்டவன் அருளும் மூதாதையர்கள் வழிகாட்டுதலும் உதவியும் என்றும் கிடைக்கும்.
வருடாந்திர திதி.மாத அமாவாசை நாட்களில் மேட்படி அட்சரத்திற்கு அலங்காரம் செய்து விளக்கேற்றி, தேங்காய் ,பழம் தாம்பூழம் ,நெய்வேத்தியம், சிறிதளவு இனிப்பு, பலகாரம் ,தண்ணீர் வைதது ,வடக்கு முகமாக அமர்ந்து இறந்துபோன நமது மூதாதையர், உறவினர்கள்,தாய்,தந்தை,நண்பர்கள்,இவர்களை நினைத்து,அவர்கள் ஆன்மா நல்ல நிலைக்கு உயரவும் ,இறைஅருள் கிடைக்கவும் ,முக்தி அடையவும், இவர்களின் ஆசீர்வாதமும் வழி காட்டுதழும் நமக்கு கிடைக்கவும்,வேண்டுதல் வைத்து மனதை ஒரு நிலையில் நிறுத்தி மேற்கண்ட மந்திரத்தை 108 முறை கூறிவர அளவிடமுடியாத நன்மைகள் கிடைக்கும் .கஷ்டங்கள் விலகி நமக்கு ஆண்டவன் அருளும்,முன்னோர்கள் ஆசீர்வாதமும் நமக்கு நிச்சய் கிடைககும்.
இதன் பயனகள்
-------------------------
1.
இந்த பிதுர் கடன்[ ப்ரிதி] யந்திரம் சமாதி நிலையில் இருந்த ஒரு மகாயோகியால் அருளப்பட்டு பெறப்பட்டது.
2.இது மகா சக்தி வாய்தது. இதை அனைவரும் வீட்டு பூஐை அறையில் வைத்து வழிபடலாம்.
3.நமது முன்னோர்,மூதாதையர் அனைவரும் பாவம் நீங்கி நற்கதி அடையவும்,முக்தி கிடைக்கவும் வழி வகுக்கும்
4.மாதா மாதம் அமாவாசை அன்றும் இதன்படி செய்ய மிக்க நன்று. சந்ததி செழிக்கும்.
5வழிபாடு செய்தபின் பிரசாதத்தை சிறிது காகத்திற்கு வைத்து விட்டு,பின் மற்றவர்களும் நாமும் உண்ணலாம்.

வாழ்கஅறமுடன்!.வளர்க சித்தர் அருளுடன்!

No comments:

Post a Comment