Saturday, 2 December 2017

குபேர கிரிவலம்

இந்த ஆண்டின் குபேர கிரிவலம் 17.11.2017 அன்று!
ஒரே ஒரு நாள் கிரிவலம் சென்றால் அடுத்த ஒரு வருடத்திற்கு நமது வருமானம் நியாயமான விதத்தில் அதிகரிக்கும்;
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த ஜோதிட ஆசிரியர் திரு.பி எஸ் பி ஐயா அவர்கள் பல ஜோதிட மாத இதழ்கள் மூலமாக இதை பொதுமக்களுக்குத் தெரிவித்தார்';
அதுதான் குபேர கிரிவலம்!
இந்த வருடம் 17.11.2017 வெள்ளிக்கிழமை அன்று வர இருக்கின்றது;
இந்த நாளில் காலை 10 மணி முதல் 11 மணி வரை குபேர லிங்கம் இருக்கும் இடத்தில் வேண்டிக் கொள்ள வேண்டும்
(போன வருடமே ரொம்ப கூட்டமாக இருந்தது)
இந்த ஒரு மணி நேரத்தில் குபேர லிங்கத்தை தரிசிக்க இயலாவிட்டால் வருத்தப்பட வேண்டாம்;மானசீகமாக குபேர லிங்கம் இருக்கும் இடத்தை நோக்கி வேண்டிக் கொண்டால் போதும்;
காலை 11 மணி ஆனதும் குபேர லிங்கத்தில் இருந்து புறப்பட்டு குபேரலிங்கத்தில் கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும்;
கிரிவலம் செல்லும் போதே அருணாச்சலேஸ்வரரை தரிசித்துவிட்டு செல்லலாம் அல்லது கிரிவலம் முடித்த பிறகும் தரிசித்துவிட்டு செல்லலாம்;
ஏதாவது ஒரு சூழ்நிலையால் அருணாச்சலேஸ்வரரை தரிசிக்க முடியாமல் போனாலும் தப்பில்லை;
கிரிவலம் முடித்ததும் வேறு எந்த கோவிலுக்கும் செல்லாமலும்,பிறர் வீடுகளுக்குச் செல்லாமலும் நேராக அவரவர் வீடு திரும்ப வேண்டும்;
கடந்த ஆண்டுகளில் குபேர கிரிவலம் வந்தவர்களில் பலருக்கு
நிரந்தர வேலை கிடைத்திருக்கின்றது.
பூர்வீக சொத்து பிரச்சினை முடிவுக்கு வந்திருக்கின்றது;
அரசுப்பணி கிடைத்திருக்கின்றது;
அவரவர் பூர்வ ஜன்ம புண்ணியப்படி நீண்டகால ஏக்கங்களில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு நிறைவேறி இருக்கின்றது;
மழைக்காலம் என்பதால் தகுந்த முன் ஏற்பாட்டுடன் வருக!!!
குபேரலிங்கத்தின் ஆசிகளோடு உண்ணாமலை சமேத அண்ணாமலை அருள் பெறுக!!!

No comments:

Post a Comment