Wednesday, 25 February 2015

திருவோடு தத்துவம்

கெளதம புத்தர் தனது சிஷ்சியரான ஆனந்தாவுடன் பிட்ஷை எடுக்கபோனார். ஒரு வீட்டில் பிட்ஷை கேட்ட போது ஒரு பெண் "முட்டாளே உனக்கு பிட்ஷை எடுக்க வெட்கமாக இல்லையா..?" என்று பலவாறு திட்ட தொடங்கினாள். ஆனந்தருவுக்கு மிகவும் கோபம் வந்தது. அந்த பெண்ணை திட்ட முயன்றார். புத்தர் ஆனந்தாவை தடுத்து அவ்விடத்தில் இருந்து எதுவும் பேசாது விலகி வந்த பிறகு, தனது திருவோட்டை ஆனந்தாவிடம் கொடுத்து "இதை மாலைப்பொழுதில் திருப்பி கொடு..!" என்றார்.
மாலைபொழுது வந்ததும் ஆனந்தா புத்தர் கொடுத்த திருவோட்டை திருப்பி கொடுத்தார். அதற்கு புத்தர் "இல்லை இதை நீயே எடுத்து கொள்..!"என்றார்.
இரவானதும் தூங்கச்செல்லும் முன் ஆனந்தாவை பார்த்து "இந்த திருவோடு யாருடையது..?" என்று கேட்டார் . "என்னுடையது..!" என்றார் ஆனந்தர். "ஆனந்தா.. அது எப்படி எனது திருவோடு உனது ஆனது..? எனகேட்டார். "நான் திருப்பி தரும்போது நீங்கள் ஏற்கமறுத்து விட்டீர்கள் அதனால் என்னுடையது ஆனது..!" என்றார் ஆனந்தர்.
"இதே போல் தான்.. அந்த பெண் திட்டிய வார்த்தைளை நான் வாங்கி கொள்ளவில்லை.. அதனால் அந்த வார்த்தைகள் அவளிடமே போய் சேர்ந்தது..!" என்றார் புத்தர். சொல்லால்மட்டும் மல்லாமல் செயலாலும் புரியவைத்தார் புத்த பெருமான்.
யாராவது நம்மை முட்டாள் எனகூறினால் அதை ஏற்றுகொண்டு தான் கோபப்பட்டு அதை உறுதிசெய்வதற்கு வாதம் செய்து கொண்டிருப்பதை நாம் உணர்வதே இல்லை.

No comments:

Post a Comment