Wednesday, 25 February 2015

மூலிகைக் கீரை

மூலிகைக் கீரை

கரிசலாங்கண்ணி --  மருத்துவ டிப்ஸ்

கரிசலாங்கண்ணி மூலிகைக் கீரைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மருத்துவத்தில் மிகச் சிறப்பான இடம் இருந்தது. பல்லவர்கள் ஆண்ட காலத்தில் அரசு அனுமதி இல்லாமல் கரிசலாங்கண்ணியைப் பயிரிட முடியாது ஆண்டு தோறும் அரசுக்கு ‘‘கண்ணிக்காணம்’’ என்ற வரி செலுத்த வேண்டும். அந்தளவிற்கு அது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. கரிசலாங்கண்ணி கரிசாலை, அரிப்பான் பொற்கொடி போன்ற பெயர்களால் வழங்கப்படுகிறது. கரிசலாங்கண்ணியை எளிய முறையில் உபயோகித்தாலே பல நன்மைகளை அடையலாம். வாரத்துக்கு இரண்டு நாள், கீரையைச் சமையல் செய்து சாப்பிட்டாலும் இதன் சாற்றை 100 மில்லியளவு சாப்பிட்டு வந்தாலும், உடலுக்கு எந்த நோயும் வராமல் நோய் எதிர்ப்புத் தன்மை உண்டாகும். பல கொடிய வியாதிகளில் இருந்து பாது காத்துக் கொள்ளலாம். மஞ்சள் காமாலை முதல் அனைத்து வகையான காமாலை நோய்களுக்கும் மிக முக்கியமானது கரிசலாங் கண்ணிக் கீரையாகும். மஞ்சள் காமாலை குணமடையும் கல்லீரல் நச்சுத்தன்மையை நீக்கும் நன்மருந்து. கல்லீரல்,மண்ணீரல்,பெரிதாவதால் உள்ள அடைப்புகளைப் போக்கும். தோல்நோய்கள் மஞ்சள் காமாலையை குணப்படுத்தும். அனைத்து வகைக் காமாலைக்கும் இம்மருந்து நம்பகமானது. சிறுநீரகம் பாதிப்படைந்து வெள்ளை, வெட்டை நோய் ஏற்பட்டால், இந்நோய்க்கு கரிசலாங்கண்ணி தான் முதன்மையான மருந்தாகும். ஆஸ்துமா குணமடையும் கரிசலாங்கண்ணிச் சூரணத்தை நான்கு மாசத்துக்கு ஒரு பாகம் திப்பிலிச்சூரணம் சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து ஒரு மாத காலம் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாவின் தொல்லை குறையும். கல்லீரல் செயல்பாட்டின் குறைவினால் ஏற்படும் இரத்த சோகை நோய்க்கு கரிசலாங்கண்ணிச்சாற்றை 100 மில்லியளவு தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் சில தினங்களில் இரத்த சோகை நீங்கி விடும். இரத்தத்தில் உள்ள அமிலத்தன்மை சீராகச் செயல்படும். கரிசாலைச் சாற்றை காலை வேளையில் தினம் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குணமாகும். கஷாயம் கர்ப்பப்பை இரத்தப்போக்குக்குப் பயன்படும். பற்று தேள்கடிக்கு மருந்தாகும். வீக்கம் குறைக்கும். வாந்தி மருந்து, நன்மருந்து,தேனுடன் சாற்றைக் கலந்து குழந்தைகளுக்கு ஏற்படும் காற்றுக்குழாய் சார்ந்த அடைப்புகளை குணப்படுத்தலாம். விளக்கெண்ணெயோடு சேர்த்து பூச்சிகளை அகற்ற பயன்படும். குழந்தைகளின் சளி நீங்க குழந்தைகளுக்கு கரிசலாங்கண்ணிச்சாறு இரண்டு சொட்டில் எட்டு சொட்டு தேன் கலந்து கொடுத்தால் சளித்தொல்லை நீங்கிவிடும். அடிக்கடி சளி ஏற்படுவது குறைந்து குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தநோய், வயிறு பொருமல் உள்ளிட்ட நோய்களுக்கு கரிசலாங்கண்ணிச் சாற்றை சிறிதளவுக்கு கொடுத்து வந்தால் போதுமானது. மிக விரைவில் நோய் நீங்கி ஆச்சரியப்படும் படியான பலனைக் கொடுக்கும். மூச்சுத்திணறல் குணமடையும் கரிசலாங்கண்ணிச் சாறு 500 மில்லி, சுத்தமான கலப்படம் இல்லாத நல்லெண்ணெய் 500 மில்லி சேர்த்து தைலப் பதமாகக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி வீதம் தினம் இரண்டு வேளை உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் காசம், சுவாசம், சளியுடன் கூடிய இருமல் மூச்சுத்திணறல் ஆகிய நோய்கள் நீங்கிவிடும். இத்தைலத்தை மேல் உபயோகமாகவும் பயன்படுத்த வேண்டும். பொன்போல ஜொலிக்கும் கரிசாலை கிடைக்கும் போது சேகரித்துச் சுத்தம் செய்து, நன்றாகக் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு, தினம் ஐந்து கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல நிறத்தைப் பெறும். தலைமுடி நன்கு வளர கூந்தல் வளர 300 மில்லி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் 150 மில்லி கரிசலாங் கண்ணிச் சாற்றைக் கலந்து காய்ச்சி கைப் பதம் வந்ததும் வடிகட்டிவைத்துக் கொண்டு, தலைக்குத் தடவி வந்தால் தலைமுடி நன்றாக வளரும். கரிசலாங்கண்ணிப் பொடியை ஒரு பருத்தியினால் ஆன துணியில் முடிச்சாக கட்டி ஒரு பாத்திரத்தில் வைத்து நுனி முடிச்சு மூழ்கும் அளவிற்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி வெயிலில் சில தினங்கள் வைத்திருந்தால் எண்ணெய் நல்ல கருப்பு நிறமாக வரும். பிறகு எடுத்து வடிகட்டி இத் தைலத்தை தினமும் தலைக்குத் தடவி வந்தால் தலை முடி உதிராது, இளநீரை மாறிவிடும். பற்கள் உறுதியடையும் கரிசலாங்கண்ணி இலையை பல் துலக்கப் பயன்படுத்தினால், பற்கள் உறுதியாகும். ஈற்றில் உள்ள நோய்க் கிருமிகள் அழிந்து ஈறுகள் பலப்படும். தொண்டைச் சளி வெளியேறி விடும். கரிசலாங்கண்ணியின் வேரைக் கொண்டு பல் துலக்குங்கள். பல் துலக்கிய பின், கீரையை ஒரு பிடி எடுத்து மென்று தின்று ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தி வரவும். நாளடைவில் பற்களில் உள்ள மஞ்சள் கறை மறைந்து பற்களின் அழகு அதிகரிக்கும். நாள்பட்ட புண் ஆற... கரிசலாங்கண்ணி மிகச் சிறந்த கிருமி நாசினியாக இருப்பதால் அழுகும் நிலையில் உள்ள புண்கள், வெட்டுக் காயங்களுக்கு இலையை அரைத்து சாறு பூசினாலும், புண்கள் மேல் வைத்துக் கட்டினாலும் மிக விரைவில் புண்கள் ஆறிவிடும். கரிசலாங்கண்ணியை உணவாகவோ மருந்தாகவோ பயன்படுத்தினால், அறிவு விருத்தியாகும். பொன் போன்ற மேனி உண்டாகும்.

திருவோடு தத்துவம்

கெளதம புத்தர் தனது சிஷ்சியரான ஆனந்தாவுடன் பிட்ஷை எடுக்கபோனார். ஒரு வீட்டில் பிட்ஷை கேட்ட போது ஒரு பெண் "முட்டாளே உனக்கு பிட்ஷை எடுக்க வெட்கமாக இல்லையா..?" என்று பலவாறு திட்ட தொடங்கினாள். ஆனந்தருவுக்கு மிகவும் கோபம் வந்தது. அந்த பெண்ணை திட்ட முயன்றார். புத்தர் ஆனந்தாவை தடுத்து அவ்விடத்தில் இருந்து எதுவும் பேசாது விலகி வந்த பிறகு, தனது திருவோட்டை ஆனந்தாவிடம் கொடுத்து "இதை மாலைப்பொழுதில் திருப்பி கொடு..!" என்றார்.
மாலைபொழுது வந்ததும் ஆனந்தா புத்தர் கொடுத்த திருவோட்டை திருப்பி கொடுத்தார். அதற்கு புத்தர் "இல்லை இதை நீயே எடுத்து கொள்..!"என்றார்.
இரவானதும் தூங்கச்செல்லும் முன் ஆனந்தாவை பார்த்து "இந்த திருவோடு யாருடையது..?" என்று கேட்டார் . "என்னுடையது..!" என்றார் ஆனந்தர். "ஆனந்தா.. அது எப்படி எனது திருவோடு உனது ஆனது..? எனகேட்டார். "நான் திருப்பி தரும்போது நீங்கள் ஏற்கமறுத்து விட்டீர்கள் அதனால் என்னுடையது ஆனது..!" என்றார் ஆனந்தர்.
"இதே போல் தான்.. அந்த பெண் திட்டிய வார்த்தைளை நான் வாங்கி கொள்ளவில்லை.. அதனால் அந்த வார்த்தைகள் அவளிடமே போய் சேர்ந்தது..!" என்றார் புத்தர். சொல்லால்மட்டும் மல்லாமல் செயலாலும் புரியவைத்தார் புத்த பெருமான்.
யாராவது நம்மை முட்டாள் எனகூறினால் அதை ஏற்றுகொண்டு தான் கோபப்பட்டு அதை உறுதிசெய்வதற்கு வாதம் செய்து கொண்டிருப்பதை நாம் உணர்வதே இல்லை.

வீட்டிற்குள் தெய்வ சக்தி நுழைய...........

* வீட்டிற்குள் தெய்வ சக்தி நுழைய வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஏனென்றால், சாதாரணமாக மனிதன் மண் மீது ஒரு வீடு கட்டி குடி போகிறார். ஆனால், ஏற்கனவே அவன் வீடு கட்டுவதற்கு முன்பு அந்த மண் மீது என்ன இருந்தது, அந்த மண் மீது எது வாழ்ந்தது, மண்ணிற்கு அடியில் என்ன புதைந்து கிடந்தது என்பதை அறிந்துகொள்ளக் கூடிய ஞானம் மனிதனுக்கு இல்லை. ஆனால், சில பறவைகளுக்கு அதுபோன்ற ஞானம் நிறைய உண்டு.
* குறிப்பாக சிட்டுக்குருவி, புறா, அதற்கடுத்தது அணில் இவைகளுக்கெல்லாம் சூசகமான, சூட்சமமான சக்தியையெல்லாம் உணரக்கூடிய ஆற்றல் உண்டு.
. அதனால், இயற்கை‌யி‌ல் நம்மை விட நான்கறிவு, மூன்றறிவு உயிரினங்களுக்கு சில சூட்சும சக்தியை இறைவன் கொடுத்திருக்கிறார்.
* ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் ஏதாவது ஒரு ஜீவ சக்தியை நாம் கொண்டுவர வேண்டும். ஜீவன் என்றால், மனிதனும் உயிருடன் இருக்கிறான், ஜீவனுடன் இருக்கிறான் என்று பார்க்கக் கூடாது. மனிதனைத் தாண்டி சிட்டுக்குருவி போன்றவற்றிற்கெல்லாம் ஜீவாதார சக்தி அதிகமாக இருக்கிறது. நெற்கதிர்களை வீட்டிற்குள் கட்டித் தொங்கவிடுவார். அதைச் சாப்பிட குருவி இரண்டு வரும், கத்தும், கொறித்துவிட்டு பறக்கும், மீண்டும் வரும். அதேபோல, அணிலுக்கும் கூடு கட்டிக் கொடுப்பார். தூக்கனாங் குருவி கூடு இரண்டு மூன்று எடுத்து வந்து போட்டு வைப்பார். அதை இழுத்துக்கொண்டு போய் ஜன்னல் பக்கத்தில் அது கட்டி வைக்கும்.
* இதெல்லாம் என்னவென்றால், ஜீவாதார சக்தியை வீட்டிற்குள் கொண்டு வருவதற்கான அமைப்பு.
வீட்டில் சிட்டுக்குருவி, அனில் போன்றவை கூடு கட்டி குஞ்சு பொரி க்கின்றன, குட்டி போடுகின்றன. இதை சிலர் கலைத்துவிடுகிறார்கள்.
ஆனால், இதுபோன்று இவைகள் வருவது, கூடு கட்டுவது, குஞ்சு பொரி ப்பதுநல்லதா
கழுதை படத்தை வைப்பது, நரி முகத்தில் முழிப்பது என்று சிலர் சொல்வார்கள். ஆனால், படங்களை வைப்பதை விட இதுபோன்று செய்தால் நல்ல பலன் இருக்கும். புறா கூடு கட்ட வழி செய்வது, அணில் கூடு கட்டினால் கலைக்காமல் இருப்பது, சிட்டுக்குருவி வீடு கட்டுவது போன்றதெல்லாம் சாதமான சக்திகளை கொண்டுவருவதற்கான ஆத்மாக்கள் இவைகளெல்லாம். இதுபோன்ற சாதகமான சக்தியைக் கொண்டு வருவனவற்றை நாம் விரட்டக் கூடாது. இதெல்லாம் வந்துவிட்டுப் போனாலே நமக்கு நல்லது நடக்கும்.......................................


Sunday, 8 February 2015

குறைகள் தீர்க்கும் குலதெய்வ வழிபாடு

குலதெய்வம் – குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும்.  குலதெய்வத்தினை குலதேவதை என்று அழைப்பர்.  தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும்.  குலதெய்வ அருள் இல்லாமல் நமது வாழ்க்கையில் ஒரு நொடி கூட வாழ இயலாது.  எத்தனை தெய்வங்கள் இருப்பினும் எல்லா வித பூசைகள் மற்றும் வழிபாடுகளிலும் குலதெய்வத்திற்கே முதலிடம்.

குலதெய்வம் என்பது நமது குலத்தில் அதாவது பரம்பரை பரம்பரையாக வழிபாடு செய்து வரும் தெய்வம் ஆகும்.  இத்தகைய தெய்வமே நமக்கு எளிதில் அருளினைத் தரும்.  மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும்.  குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும்.  ஆனால் அதன் சக்தியை அளவிட முடியாது.  சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது.  எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்க முடியும்.

நம்மில் பலர் பல தெய்வங்களை வழிபாடு செய்து வருவார்கள்.  அவ்வாறு செய்வது தவறில்லை.  குலதெய்வ வழிபாடு செய்யும் பலர் வேறொரு தெய்வத்தையோ அல்லது தெய்வங்களையோ வழிபாடு செய்வார்கள்.  அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் ஆகாது.  அவை இஷ்ட தெய்வங்கள் அல்லது இஷ்ட தேவதைகள் எனப்படும்.  இஷ்ட தெய்வமும் குலதெய்வத்திற்கு கீழே தான்.  மற்ற தெய்வங்களும் கூட குலதெய்வத்திற்கு கீழே தான்.  மற்ற தெய்வங்களும் குலதெய்வத்தின் அனுமதி பெற்றே அருளினை வழங்க முடியும்.

இதை உணர்ந்த மந்திரவாதிகள் ஒருவருக்கு செய்வினை செய்யும் காலத்தில் யாருக்கு செய்வினை செய்ய இருக்கிறாரோ அவரது குலதெய்வத்தினை மந்திர கட்டு மூலம் கட்டுப்படுத்தி விட்ட பின்பே தான் செய்வினை செய்வார்.  மந்திரவாதிகள் தாங்கள் வசப்படுத்திய தேவதைகளின் மூலம் மற்றவர்களின் குலதெய்வத்தின் விபரங்களை எளிதில் பெற்று விடுகிறார்கள்.  மந்திர கட்டுகளுக்கு கட்டுப்படாத குலதெய்வங்களும் உண்டு.  அவை அந்த மந்திரவாதிகளை அழித்த வரலாறும் உண்டு.

குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.  அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை.  எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன.  குலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவை.  யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு.

ஒருவர் எந்த வழிபாடு செய்யாவிட்டாலும் பரவாயில்லை.  ஆனால் குலதெய்வ வழிபாடு மட்டும் செய்யாமல் இருக்கவே கூடாது.  அது நமது குலத்திற்கே கேடு விளைவிக்கும்.  குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பது பழமொழி.  ஆம் யார் தம்மை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்களோ அவர்களிடம் தான் குழந்தைகளும் தெய்வங்களும் சென்று சேர்ந்து விடும்.  தங்களுக்கு வசதியான நாட்களில் குலதெய்வ வழிபாடு செய்கிறார்கள்.  இது மிகவும் தவறு.

குலதெய்வமே தெரியாமல் பல குடும்பங்கள் பலவித இன்னல்களை அனுபவித்து வருகின்றன.  குலம் தெரியாமல் கூட இருக்கலாம்.  ஆனால் குலதெய்வம் தெரியாமல் ஒருவர் இருக்கக்கூடாது.  குலதெய்வம் தெரியாமல் எந்த பூசைகள், வழிபாடுகள், பரிகாரங்கள் மற்றும் மந்திர செபங்கள் செய்தாலும் பலனில்லை என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.  எனவே எப்பாடுபட்டாவது குலதெய்வத்தினை கண்டறிந்து அதற்குரிய வழிபாட்டினை செய்து வரவேண்டும்.

நமது முன்னோர்கள் நமது குலதெய்வத்தினை வருடத்தின் ஒரு குறிப்பிட்ட நாளில் அவரவர் சொந்த பந்தங்கள், உறவினர்கள் மற்றும் பங்காளிகள் இவர்களுடன் ஒன்று சேர்ந்து கூட்டு வழிபாடு நடத்தி நிம்மதியாக வாழ்ந்திருக்கிறார்கள்.  அவர்களின் வாழ்க்கையின் இன்னல்கள் வந்தாலும் அவை வெகு நாட்கள் நீடிப்பதில்லை.  குலதெய்வத்தின் அருளால் அவை சூரியனைக் கண்ட பனி போல் விலகி விடும்.

ஆனால் தற்காலத்தில் இத்தகைய கூட்டு வழிபாடு குறைந்து போய் விட்டது.  மக்களும் அவரவர் சொந்த பந்தங்கள் மற்றும் பூர்வீக வசிப்பிடத்தினை விட்டு புலம் பெயர்ந்து போய்விட்டார்கள்.  பலர் தங்களின் செல்வ செழிப்பில் குலதெய்வத்தினை மறந்து விட்டார்கள்.  விளைவு வாழ்க்கையில் கண்டங்கள் மற்றும் கஷ்டங்கள்.  அது மட்டுமல்லாமல் குலமே தழைக்காமல் போனதும் உண்டு.

எனவே குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.  குலதெய்வ வழிபாடு செய்பவர்கள் தங்களின் முன்னோர்கள் எந்த நாளில் வழிபாடு செய்தார்களோ அதே நாளில் வழிபாடு செய்வது நன்று.  உதாரணமாக நம் முன்னோர்கள் வெள்ளிக்கிழமை குலதெய்வ வழிபாடு செய்திருப்பார்கள்.  ஆனால் நாமோ வெள்ளிக்கிழமை செய்யாமல் ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாள் என்பதால் அந்த நாளில் வழிபாட்டினை மாற்றி வைத்துக்கொள்வது மிகவும் தவறு.

குலதெய்வ வழிபாடு புதிதாக செய்ய தொடங்குபவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு ஓரையில் வழிபாடு செய்து வருவது நல்லது.  ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு ஓரை காலை சூரிய உதயம் ஆன நேரத்திலிருந்து 1 மணி நேரம் வரை இருக்கும்.  அத்தகைய நேரத்தில் குலதெய்வ வழிபாடு செய்து வருவது மிகுந்த நற்பலன்களை கொடுக்கும்.  காலையில் செல்ல இயலாதவர்கள் இரவு 8 மணி முதல் 9 மணிக்குள் வழிபாடு செய்யலாம்.  இந்த நேரம் அவரவர் இருப்பிடத்தின் சூரிய உதய நேரத்தினைப் அனுசரித்து மாறுபடும்.

குலதெய்வமே தெரியாதவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு ஓரையில் கால பைரவர் சந்நிதிக்கு சென்று அர்ச்சனை செய்து தங்களின் குலதெய்வத்தினை காட்டும் படி காலபைரவ பெருமானிடம் வேண்டிக்கொள்ள வேண்டும்.  அந்த சமயத்தில் வேறு எந்த கோரிக்கைகளையும் காலபைரவ பெருமானிடம் முன் வைக்கக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.  இவ்வாறு 9 வாரங்கள் வியாழக்கிழமையில் குரு ஓரையில் காலபைரவ பெருமானுக்கு அர்ச்சனை செய்து வர வேண்டும்.

மேலும் அர்ச்சனை முடிந்தவுடன் பசுவிற்கு ஒரு கட்டு அகத்தி கீரை உணவாக அளிக்க வேண்டும்.  இவ்வாறு 9 வாரங்கள் செய்து வரும் போது 9 வியாழக்கிழமைகளில் கண்டிப்பாக உடலுறவு கூடாது.  இவ்வாறு செய்து வரும் காலத்தில் காலபைரவர் தங்களின் குலதெய்வம் பற்றி அறிய வைப்பார்.  யாராவது குலதெய்வம் பற்றி தங்களுக்கு தகவல் தரலாம்  அல்லது கனவில் தங்களின் குலதெய்வம் பற்றி விபரம் கிடைக்கும்.

மேற்கண்ட வழிபாட்டினை அசைவ உணவை நிரந்தரமாக நிறுத்திய பின்பே செய்து வரவும்.  அசைவத்தினை நிறுத்தாமல் செய்தால் விபரீத விளைவுகள் ஏற்படும்.  அசைவ உணவு, மது பழக்கம், முறையற்ற உறவு இவற்றை தவிர்த்து வழிபாடு செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும்.

நவதுர்க்கையின் வடிவங்கள்

maa-durga-wallppaer

வ.எண்துர்க்கையின் பெயர்வடிவத்தின் விளக்கம்
1.வன துர்க்கைவனங்களில் உறைந்திருப்பவள்
2.ஜல துர்க்கைநீரில் உறைந்திருப்பவள்
3.வன்னி துர்க்கைமரத்தினில் உறைந்திருப்பவள்
4.தூல துர்க்கைமண்ணில் உறைந்திருப்பவள்
5.விஷ்ணு துர்க்கைஆகாயத்தில் உறைந்திருப்பவள்
6.பிரம்ம துர்க்கைபடைப்பு தொழிலுக்கு துணை செய்பவள்
7.சிவ துர்க்கைஅழிக்கும் தொழிலுக்கு துணை செய்பவள்
8.மகா துர்க்கைசகல பாக்கியங்களைத் தருபவள்
9.சூலினி துர்க்கைசூலம் ஏந்தி போர் புரிந்து தீமையை அழிப்பவள்

எந்தெந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்கலாம்?

Ganesha-Gives-Blessings

பொதுவாக கடவுள் வழிபாட்டில் உருவ வழிபாடு மிக முக்கியமானது.  உருவ வழிபாடே மக்களின் மனதை கடவுளிடம் ஒன்றுமாறு செய்யக்கூடியதாகும்.  இத்தகைய உருவ வழிபாட்டில் பிம்பங்களை அதாவது படங்களை வைத்து வழிபாடு செய்வதும் அடங்கும்.  அவ்வாறு படங்களை வைத்து வழிபாடு செய்வதில் சில விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.  இல்லையேல் நமது வாழ்வில் குழப்பங்கள் உண்டாகும்.  எனவே குழப்பங்களை தவிர்த்து இறை வழிபாடு தழைக்கவே இப்பதிவு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

வீட்டில் வைத்து வணங்க வேண்டிய கடவுள்கள் / தெய்வங்கள் /  தேவதைகள்:-

அவரவர் குல தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம்.  இது மிகவும் நன்மை பயக்கும்.  குல தெய்வம் நம்மை கண்ணின் இமை போல் காத்து நிற்கும்.  குல தெய்வத்தினை விட உயர்ந்த தெய்வம் உலகில் இல்லை.  குல தெய்வத்தின் அருள் இல்லாமல் நாம் வாழவே இயலாது.
அவரவர் இஷ்ட தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம்.  இதுவும் நன்மை பயக்கும்.  நமது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி நம்மை காப்பாற்றும் தெய்வம் இஷ்ட தெய்வமே.  குல தெய்வத்திற்கு அடுத்தபடியாக நமக்கு அருள் பாலிக்கும் தெய்வம் இஷ்ட தெய்வமே.
எந்த ஒரு விநாயகர் படத்தினையும் வைத்து வணங்கி வரலாம்.  முழு முதற் கடவுள் இவரே.  இவரை வழிபடுவதால் நம் வாழ்வில் அனைத்து நலங்களையும் பெறலாம்.  காரியசித்தி உண்டாக்குபவர் இவரே.  விக்கினங்களையும், வினைகளை களைபவரும் இவரே.  நல்வழி காட்டுபவரும் இவரே.
குழந்தை கடவுளரின் படம் எதுவாக இருந்தாலும் வைத்து வணங்கி வரலாம்.  இது குழந்தை வரம் தரும்.  குழந்தை இல்லாதவர்கள் வழிபாடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.  நல்ல குழந்தைகள் பிறக்கும்.  பிறந்த குழந்தைகளின் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
ராஜ அலங்கார முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம்.  அரசாங்க காரியங்களில் வெற்றி பெறவும், அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களும்,  அரசியலில் முன்னேற துடிப்பவர்களும் வணங்க வேண்டிய கடவுள் இவரே.  இவரின் அருள் இல்லாமல் அரசியலும் இல்லை, அரசாங்கமும் இல்லை.
மணக்கோலத்தில் இருக்கும் முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம்.  திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணத்தடையை போக்கும் வடிவம் ஆகும்.  திருமணம் ஆனவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை பொங்க செய்யும் வடிவம் இதுவே ஆகும்.  இல்லறம் நல்லறமாக நடக்கும்.
அர்த்தநாரீஸ்வரின் படம் வைத்து வணங்கி வரலாம்.  நாம்  அனைவரும் வணங்க வேண்டிய கடவுள் இவரே.  பிரிந்த தம்பதியர் வணங்கி வந்தால் விரைவில் ஒன்று சேருவர்.  தம்பதியரின் திருமண வாழ்வில் ஒற்றுமை, அன்பு, காதல், பாசம் உண்டாகும்.  தம்பதியரின் கருத்து வேற்றுமை நீங்கும்.
சக்தியுடன் இருக்கும் சிவபெருமானின் படத்தினை வணங்கி வரலாம்.   சிவசக்தி கலப்பே உலகம்.  சிவசக்தி கலப்பில்லாமல் உலகில்லை.  சக்தியுடன் இருக்கும் சிவபெருமானுக்கே மிகவும் வலிமை அதிகம்.  எப்போதும் எல்லோருக்கும் எல்லாவற்றையும் வழங்கும் வடிவம் சிவசக்தி வடிவம் ஆகும்.
ராதையுடன் இருக்கும் குழலூதும் கிருஷ்ணரின் படம் வைத்து வணங்கி வரலாம்.  இது திருமணத்தடையை நீக்கும் வடிவம் ஆகும்.  இந்த வடிவம் தம்பதியர் இடையே அன்பு, பாசம், காதல், நேசம் இவற்றை உருவாக்கும் வடிவம் ஆகும்.  தம்பதியரின் கருத்து வேற்றுமையை நீக்கும் வடிவம் ஆகும்.
குடும்பத்துடன் இருக்கும் சிவபெருமானின் படம் வைத்து வணங்கி வரலாம்.  இதுவே எல்லா வடிவங்களைக் காட்டிலும் மிகவும் சிறந்தது.  இதனை வைத்து வணங்கி வர குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் உண்டாகும்.  குடும்பம் ஒற்றுமையுடன் செழித்து வளரும்.
தனது மனைவியான சொர்ணதாதேவியை அணைத்தவாறு தன் மடியில் அமர்த்தி அருள்பாலிக்கும் சொர்ணபைரவரின் படமும் வீடுகளில் வைத்து வணங்கத் தக்கதே.  பைரவ வடிவங்களிலேயே சிறந்த இவ்வடிவத்தினை வணங்கி வர அறம், பொருள் மற்றும் இன்பம் அனைத்தும் பெருகும்.
ராமர், சீதை, லட்சுமணன் இவர்களுடன் கூடிய அனுமனின் படமும் சிறப்பானதே.  பஞ்சமுக அனுமன் கேட்ட வரங்களை எல்லாம் அள்ளித் தருபவர்.  அனுமனின் படம் வைத்தால் அதனுடன் ராமனின் படத்தையும் கட்டாயம் வைக்க வேண்டும்.
லட்சுமியுடன் கூடிய நாராயணனின் எந்த ஒரு அவதாரத்தையும் தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம்.  இதனால் திருமகளின் அருள் கிட்டும்.  நிம்மதியான வாழ்க்கையும் 16 வகை பேறுகளும் கிட்டும்.
சிவகாமசுந்தரியுடன் நடனமாடும் நடராசரை தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம்.  இது சிவசக்தி அருளைத் தரும்.  16 பேறுகளும் கிட்டும்.  நடனம், இசை முதலான நுண்கலைகளில் புலமை உண்டாகும்.  கர்மவினைகள் தொலையும்.  மாயை விலகும்.  முக்தி கிட்டும்.
ஞானத்தினை போதிக்கும் தட்சணாமூர்த்தியின் படம் வீட்டில் வைத்து வணங்கி வழிபாடு செய்வது நன்று.  இதனால் அறிவும், ஞாபக சக்தியும் உண்டாகும்.  கல்வி ஞானம் கிட்டும்.  ஞாபக மறதி உடைய குழந்தைகள் வணங்க வேண்டிய வடிவம் இதுவே.  கல்வி, செல்வம், வீரம் மூன்றும் கிட்டும்.
கலைமகளின் படமும் வீட்டில் வைத்து வணங்கத் தக்கதே.  இதனால் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் பேச்சுத்திறமையும், எழுத்துத்திறமையும் உண்டாகும்.  நமது வளமான வாழ்விற்கு வாணி வழிகாட்டுவாள்.  போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டாகும்.
லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம்.  குபேரனுக்கு அருள் பாலிக்கும் லட்சுமி படமும், லட்சுமி மற்றும் குபேரன் இவர்கட்கு அருள் பாலிக்கும் சிவபெருமானின் படமும் மிகவும் சிறந்தவை.  இத்தகைய படங்களை வைத்து வணங்கி வர 16 பேறுகளும் கிட்டும். 8 ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.
அலர்மேல்மங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படம் வீட்டில் வைத்து வணங்கி வரலாம்.  இதனால் செய்தொழிலில் நல்ல வருமானமும், சுகமான வாழ்க்கையும் அமையும்.  மேற்கண்ட படத்துடன் லட்சுமியின் படமும் இருப்பது மிகவும் சிறப்பானது.
துர்க்கையின் படம் வீட்டில் வைத்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது.  இதனால் தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும்.  கணவன் மற்றும் மனைவி இடையே ஒற்றுமை உண்டாகும்.  செய்யும் தொழிலில் மேன்மை உண்டாகும்.  வியாபாரம் பெருகும்.
அன்னம் பாலிக்கும் அன்னபூரணியின் படம் நாம் அவசியம் வீட்டில் வைத்து வழிபாடு செய்தல் மிகவும் சிறப்பானது.  இதன் மூலம் வறுமை அகலும்.  பசி, பட்டினி, பஞ்சம் தீரும்.  வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும்.
சித்தர்கள், மகான்கள், முனிவர்கள், யோகிகள், ரிஷிகள் இவர்களின் படங்களையும் வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம்.  இதனால் குருவருள் வந்து சேரும்.  தோஷங்கள் விலகும்.  கர்மவினைகள் நீங்கி புண்ணியம் சேரும்.  வளமான, நிம்மதியான வாழ்க்கை கிட்டும்.
எமக்கு தெரிந்தவரை மேலே பட்டியலிட்டிருக்கிறேன்.  இதனை படிக்கும் ஆன்மீக அன்பர்களுக்கு வேறு தகவல்கள் தெரிந்திருப்பின் தவறாது கருத்துரையிலோ அல்லது மின்னஞ்சலிலோ தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.  நீங்கள் தெரிவிக்கும் தகவல்கள் இப்பதிவினை மேலும் மேம்படுத்த உதவும்.  நன்றி…!



தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

பரிகார பைரவர் - அசிதாங்க பைரவர் + பிராம்ஹி - வியாழன்

imageimage

பரிகார முறை:

அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திய பின்பு தான் பரிகார முறைகளை செய்ய வேண்டும். அனைத்து விலங்குகளின் கறி மற்றும் முட்டை மற்றும் மைதா மாவில் செய்யப்பட்ட பரோட்டா மற்றும் மைதாவினால் செய்யப்பட்ட இனிப்புகளும் அசைவம் ஆகும். மைதா மாவில் முட்டையில் வெண்கரு சேர்க்கப்படுவதாலும் மேலும் கரும்பு சர்க்கரையில் எலும்புச் சாம்பல் சேர்க்கப்படுவதாலும் இவையிரண்டும் அசைவ பொருட்களே ஆகும்.

அசைவத்தினை நிறுத்தாமல் பைரவ வழிபாடு செய்தால் எதிர்மறை விளைவுகள் உண்டாகும். முழுமையான பலன் கிடைக்காது. நாய் வந்து கடிக்கும். பைரவரே அசைவத்தினை நிறுத்த வைப்பார். தண்டித்து திருத்துவார்.

அருகிலுள்ள சிவத்தலத்தில் உள்ள பைரவர் சந்நிதிக்கு புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரம் வரும் நாளில் குரு ஓரையில் அல்லது வியாழக்கிழமை குரு ஓரையில் வழிபாடு செய்ய வேண்டும்.

ஒரு வாழையிலையில் கொண்டைக்கடலை பரப்பி அதன் மேல் 3 புது மண் அகல்கள் வைத்து ஒவ்வொன்றிலும் 3 கொண்டைக்கடலைகள் போட்டு 5 எண்ணெய் (விளக்கெண்ணை + இலுப்பை எண்ணெய் + நெய் + நல்லெண்ணை + தேங்காய் எண்ணெய்) ஊற்ற வேண்டும். மஞ்சள் நிற துணியில் 27 மிளகுகள் வைத்து முடிச்சு போட்டு திரியாக செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு 3 திரிகள் செய்து ஒவ்வொரு அகலிலும் வைத்து மொத்தம் 3 தீபங்கள் ஏற்ற வேண்டும்.

அவரவர் வீட்டில் கொண்டைக்கடலை சுண்டல் செய்து படையலாக வைக்க வேண்டும்.

பைரவர் பெருமானுக்கு முல்லைப்பூ மாலை சாற்றி அவரவர் பிறந்த கோத்திரம், நட்சத்திரம், ராசி, பெயரில் மற்றும் குலதெய்வத்தின் பெயர் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சகருக்கு காணிக்கையாக தங்களில் வயதுக்குரிய எண்ணிக்கையின் பணத்தினை தர வேண்டும். அதாவது 30 வயது எனில் 30 ரூபாய்கள் தர வேண்டும்.

பின்பு கீழ்க்காணும் மந்திரங்களை 3 ன் மடங்குகளில் (3, 12, 21, 30, 39, …) செபம் செய்ய வேண்டும்.



ஓம் ஞான தேவாய வித்மஹே
வித்யா ராஜாய தீமஹி
தந்நோ:அசிதாங்க பைரவ ப்ரசோதயாத்


ஓம் ஹம்சத் வஜாய வித்மஹே
கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி
தந்நோ: பிராம்ஹி ப்ரசோதயாத்



மந்திர செபம் செய்த பின்பு வேறு எந்த கோவிலுக்கோ அல்லது மற்றவர்களின் இல்லங்களுக்கோ செல்லாமல் அவரவர் வீட்டிற்கு செல்ல வேண்டும்.

இந்த பரிகார முறை 9 தடவைகள் செய்யப்பட வேண்டும். அதாவது 9 வியாழக்கிழமைகளோ அல்லது மேற்குறிப்பிட்ட நட்சத்திரங்கள் வரும் நாளில் 9 நாட்கள் வழிபாடு செய்ய வேண்டும். அதற்குள் நல்ல பலன் கிட்டும்.

வழிபாடு செய்யும் நாட்களில் கண்டிப்பாக உடலுறவு கூடாது.

பரிகாரத்தின் பலன்:-

பிறந்த ஜாதகத்தில் குருவின் பலம் குறைந்தவர்கள், குரு திசை நடப்பவர்கள் மற்றும் குரு தோஷம் உள்ளவர்கள் இந்த பரிகாரத்தினை செய்ய வேண்டும். இதன் மூலம் குருவினால் ஏற்படும் கெடு பலன்கள் குறையும். தோஷங்கள் விலகும். பீடைகள் விலகும். நினைத்தவை நடக்கும். செய்யும் செயல்களில் வெற்றி உண்டாகும்.  சுபகாரியத்தடைகள் விலகும்.  புத்திர தோஷம் விலகும்.  குருவருள் உண்டாகும்.  படிப்பிலும் தேர்வுகளிலும் வெற்றி உண்டாகும்.  இறையருள் பூரணமாக கிட்டும்.

குறிப்பு:-

இந்த பரிகார வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்தது. இது வழிபடுபவர்களின் ஜாதக தோஷங்களை முழுமையாக போக்கக்கூடியது. அசைவத்தினை நிரந்தரமாக நிறுத்தாதவர்கள், மது அருந்துபவர்கள் மற்றும் முறையற்ற உறவு உள்ளவர்கள் மேற்கண்ட பரிகார வழிபாட்டினை செய்ய வேண்டாம். மீறி செய்தால் பைரவ தண்டனை உண்டு. மேற்கண்ட ஒழுங்கீனங்களை நிறுத்தினால் மட்டுமே முழுமையான பலன் உண்டு மற்றும் பரிகார வழிபாடு வெகு விரைவில் பலனளிக்கும்.

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் ஹ்ரீம் அசிதாங்க பைரவாய நமஹ

ஓம் ஹ்ரீம் பிராம்ஹியை நமஹ

குழந்தை வரம் தரும் வேற்குழவி வேட்கை



1.     பதினே ழொன்றும்விழை செய்ய பாத மோலிட நன்
மதிபோன் மாமைமுக மண்ட லம்ப குக்கநகுங்
கதியே வேற்குழவீ நின்னைக் காத லாற்றழுவ
நிதியே வாராயோ கைக ணீளு கின்றனவே


2.     சீவி முடித்தசிகை செம்பொற் சுட்டி நன் குழைகள்
மேவு முறுப்புநிழல் செய்ய வாடும் வேற்குழவீ
ஏவல் கொடுத்தருள வெண்ணி யென்முன் வாராயோ
கூவை வெறுத்த கண்க ளிச்சை கொள்ளு கின்றனவே


3.     பாவே றுஞ்சவையர் மெச்சிப் பாடும் வேற்குழவீ
சேவே றுன்பவளத் தெய்வ வாயை யேதிறந்து
தூவே றின்கரைக ளிங்குச் சொல்ல வாராயோ
கோவே யென்செவிக ளிச்சை கொள்ளு கின்றனவே


4.     பொன்னார் கண்டசர நன்கு பூண்ட தங்கவொளிக்
கொன்னார் வேற்குழவீ நல்ல கொவ்வை நின்னிதழை
என்னார் வந்தீர விங்கு நல்க வாராயோ
உன்னா ருண்ணிலையும் வாயு மூறு கின்றனவே


5.     எண்ணே றும்பலயி லென்ற வேல்பி டித்தசையுங்
கண்யே செங்குழவீ யென்றன் கண்க ணாடழகே
தண்ணே றும்வதன முத்தந் தாரா யோபிறிது
நண்ணா வென்னுளந்தா னின்னை நாடு கின்றதரோ


6.     முத்தே மாமணியே முல்லை வெட்சி நன்கடம்பு
வைத்தா ரம்புனைந்தென் முன்னர் வாரா யோவுழலுஞ்
சித்தார் வேற்குழவீ யுச்சி செவ்வன் மோந்துகொள்ள
வித்தே யென்மூக்கி னிச்சை மீறு கின்றதரோ


7.     ஐயார் நல்லரையிற் பொன்வ டங்க ளாடவுழல்
வையார் வேற்குழவீ யிங்கு வாரா யோகால்கள்
மையார் கண்மலர்க ளின்பு மல்க மோந்து கொள்ள
மெய்யா யென்மூக்கி னிச்சை மீறு கின்றதரோ


8.     பொன்போன் மேனியிலே நல்ல பூம ணங்கமழும்
இன்பே வேற்குழவீ யிங்கு வாரா யோவிரியா
அன்பார் புன்முறுவல் செய்யு மார்விற் பல்லழகென்
துன்பீ ரம்பெனவே னெஞ்சந் துள்ளு கின்றதரோ


9.     கள்ளார் செங்கரும்பே கண்டு தேனே யின்னமுதுண்
கிள்ளாய் வேற்குழவீ யன்பர் கேளே மாதுமையாள்
பிள்ளாய் கண்ணியொன்று நல்ல பெட்பி னான்றருவேன்
தள்ளா தேகொளற்கென் முன்னர் வாரா யோதகையே


          10.     மாண்பார் சந்தமுனி யின்ப வாழ்வே நின்னெழிலைக்
காண்பார் வேறழகு மிங்குக் காண்பார் கொல்லோநான்
ஊண்பா டஞ்சியுனை நன்கு காண்பா னின்றுவந்தேன்
வீண்போ காதபடி யிங்ஙன் வாராய் வேற்குழவீ



நீங்கள் மேலே காண்பது வேற்குழவி வேட்கை பதிகம் ஆகும்.  இதை  நீங்கள் முன்னரே பார்த்தும் படித்தும்  இருக்கலாம்.   ஆனால் இதன் அருமை பெருமைகளை அறிந்தவர்கள் வெகு சிலர் மட்டுமே.


குழந்தையில்லா தம்பதிகள் இருவரும் அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, மேற்கண்ட துதியை தினமும் பாராயணம் செய்து வரவும்.  முதன் முதலில் ஆரம்பிக்கும் போது செவ்வாய் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் அல்லது விசாகம் நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அன்று வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் தலத்தில் 1 முறை பாராயணம் செய்யவும்.  முருகன் தலம் இல்லாவிடில் சிவத்தலத்தில் உள்ள முருகன் சந்நிதியில் 1 முறை பாராயணம் செய்யவும்.


பின்பு வீட்டில் வந்து முருகனின் படம் முன்போ அல்லது சிலை முன்போ 9 முறை பாராயணம் செய்யவும்.  அதன் பின்பு தினமும் 1 முறை பாராயணம் செய்து வரவும்.  முருகனின் படம் அல்லது சிலை இல்லாத நிலையில் பித்தளையில் ஒரு வேல் வாங்கிக் கொள்ளவும்.  அதனை முருகனாக பாவித்து மேற்கண்ட துதியை பாராயணம் செய்யவும்.





நீங்கள் வாங்கும் வேல் உங்களின் கட்டைவிரலின் உயரத்தை விட 21 மடங்கிற்கு மேல் இருக்கக்கூடாது.  ஒரு சாண் அளவை விட குறைவாக இருப்பது நலம்.  அதனை தினமும் கழுவி விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வணங்கி வருதல் நன்று.  அவ்வாறு தினமும் அபிசேகம் செய்ய இயலவில்லை என்றாலும் பரவாயில்லை.


ஐந்து எண்ணெய் ஊற்றி தாமரை தண்டு நூல் போட்டு இரண்டு தீபங்கள் ஏற்றி பாராயணம் செய்யவும்.  மந்திர சக்தி உண்டாகும்.  பாராயணம் வெகு விரைவில் பலனளிக்கும்.  எங்கு சென்றாலும் பூசை செய்த வேலை கூடவே எடுத்து செல்லாம்.  முருகன் அருள் கூடவே வந்து நிற்கும்.



தினமும் 1 முறை பாராயணம் செய்யவும்.  புத்திர தோஷம் நீங்கி குலம் தழைக்கும்.  குலத்திற்கே பெருமை சேர்க்கும் புத்திரர்கள் தோன்றுவார்கள்.  நல்ல மக்கட்பேறு பெற்று நிம்மதியாக வாழ முருகனருள் என்றும் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை.



ஓம் சரவணபவ
ஓம் சிவ சிவ ஓம்

கனகதாரா ஸ்தோத்திரம்

கனகதாரா ஸ்தோத்திரம்
ஆதிசங்கரர் அருளியது
அங்கம்ஹரே: புலகபூஷணமாஸ்ரயந்தீ
ப்ருங்காங்கநேவ முகுலாபரணம் தமாலம்
அங்கீக்ராதாகில விபூதிரபாங்கலீலா
மாங்கல்யதாஸ்து மம மங்களதேவதாய:
அங்கம் புளகமுற ஹரிமேனி தன்னை
அனுபவித்து அணி செய்நின்,ஒளிநிறைந்த,பார்வை
துங்கமுறும்,தம்மால,முகை தமையே,சார்ந்து
சுடரும்பெண் வண்டுகள் தாம் சூழ்ந்திருப்ப தொக்கும்
மங்களம்சேர் மகாலட்சுமி அனைத்து நல மெல்லாம்
வழங்கு திறல் நின் கண்படைத்து விளங்கு கின்றதம்மா
பொங்கு நலன் அத்தனையும் பொழிவது வேயாகப்
பொருந்துக நின் பார்வையது என்மீது தாயே
முக்தாமுஹுர்விதததி வதநே முராரே:
பிரேமத்ரபாப்ரணிஹிதாநி கதாகதாநி
மாலா த்ருஸோர் மதுகரீவ மஹோத்பலே யா
ஸா மே ஸ்ரியம் திஸது ஸாகரஸம்பவாயா:
நீலோத்பல மலருள் போய்வந்து மீண்டும்
நிறைகாணா தவிக்கின்ற பெண் வண்டைப் போல
மாலின்முக மண்டலத்தே நோக்கும் நின் விழிகள்
மயங்குவதும் ரசிப்பதுவும் ஆசை வெட்கம் துள்ள
பாலித்துத் தியங்குவதாய் பார்வையது கொண்டாய்
பாற்கடலின் திருமகளே நினது கடைப் பார்வை
சால்புடைய என்மீது தவழவிட வேண்டும்
சகல நலன் அப்பார்வை தந்துவிடும் தாயே
ஆமீலிதாக்ஷமதிகம்ய முதா முகுந்தம்
ஆநந்தகந்தமநிமேஷமநங்க தந்த்ரம்
ஆகேகரச்திதகநீநிகபக்ஷ?மநேத்ரம்
பூத்யை பவேந் மம புஜங்க ஸயாங்கநாயா:
அரிதுயிலும் முகுந்தனையே இமையால் நோக்கி
ஆனந்தப் பெருமிதப்பில் ஆழ்த்துகின்றாய் தாயே
வரிகாமன் வசம்பட்டு நின்கரு விழிகள் இரண்டும்
வட்டாடி நிலை புரண்டு இமையோடு சேர்ந்து
புரிசெவியின் அருகுவரை போய்வந்து மீண்டு
பூரித்து நீண்டு விட்டதென விளங்கும்
விரிவிழியின் கருணை நிறை ஒளி நிறைந்த பார்வை
வீழ்ந்தென்மேல் இன்பத்தில் ஆழ்த்துக என்னாளும்
பாஹ்வந்தரே மதுஜித: ஸ்ரிதகௌஸ்துபே யா
ஹாராவலீவ ஹரிநீலமயீ விபாதி
காமப்ரதா பகவதோ(அ)பி கடாக்ஷமாலா
கல்யாணமாவஹது மே கமலாலயாயா:
திருமாலின் திருமார்பில் திகழ் துளபமாலை
தேவி நீ நோக்க இந்திர நீலமதாய் மாறும்
பெருமானின் விருப்பமதை நிறைவேற்றும் வலிமை
பெற்றுத் திகழ்கின்றது நின் ஒளி நிறைந்த பார்வை
திருமகளே கடைக் கண்ணால் எனை நோக்கு வாயேல்
திருவுடனே மங்கலங்கள் எனைச் சரணம் செய்யும்
பெருமனது கொண்டு கடைக்கண் அதனால் நோக்காய்
பேரின்பச் சுகமெல்லாம் எனைச் சாரட்டும் தாயே
காலாம்புதாலி லலிதொரஸி கைடபாரே:
தாராதரே ஸ்புரதி யா தடிதங்கநேவ
மாது ஸமஸ்தஜகதாம் மஹநீயமூர்த்தி:
பத்ராணி மே திஸது பார்க்கவ நந்தநாயா:
நீருண்ட மேகமெனத் திகழும் திருமாலின்
நெடிய திருமார்பதனில் கொடி மின்னலென்ன
சீருடனே விளங்கும் நின் திருவுருவம் தாயே
செய்தவத்தால் பிருகுமுனி நினைமகளாய்ப் பெற்றான்
பாருலக மெலாம் நின்னைத் தாயெனவே வாழ்த்தி
பக்தியுடன் தொழுகின்றார் நினது திருவுருவை
சார்ந்திட்டேன் நின்னடியைச் சகல நலமருள்
தாயே என்மீது கடைக் கண் வைப்பாய் நீயே
ப்ராப்தம் பதம் ப்ரதமத: கலு யத்ப்ரபாவாத்
மாங்கல்யபாஜி மதுமாதிநி மந்மதேந
மய்யாபதேத் ததிஹ மந்த்ரமீக்ஷணார்த்தம்
மந்தாலஸம் ஸ மகராலய கந்யகாயா:
மங்களங்கள் அத்தனையும் தங்குமிடம் எதுவோ
மாலுக்கே வலிமைதரும் பார்வையது எதுவோ
சிங்கநிகர் மதுவென்னும் தீயவனைச் செருக்கத்
திறம்படைத்த திருமாலின் சௌலப்யம் எதுவோ
பொங்குமதன் மாலிடமே புகுந்ததுறை எதுவோ
பேரலை கொட்டும் சாகரத்தின் தவமகளே நின்றன்
தங்குமுக மண்டலத்தில் தவழும் திருப்பார்வை
தமியேன் என்மீது சிறுதுளி படட்டு மம்மா
விஷ்வாமரேந்த்ரபத விப்ரமதாநதக்ஷம்
ஆநந்தஹேதுரதிகம் முரவித்வி÷ஷா(அ)பி
ஈஷந்நிஷீதது மயி க்ஷணமீக்ஷணார்த்த
மிந்தீவரோதர ஸஹோதர மிந்திராயா:
விளையாட்டாய் நின்பார்வை எவர்மீது படினும்
வியனுலக இன்ப நுகர் அமரேந்திரனு மாவான்
முளைமுரன் தனைசெகுத்த முகுந்தனும் நின்பார்வை
முழுவிழியின் திருஷ்டியினால் ஆனந்தத் துயிலாழ்ந்தான்
துளக்கமுறு நீலோத்பல மலர் மகுடம் போன்று
தூயநின் திருமுகத்தில் தோன்றும் கடைப் பார்வை
விளக்கமதாய் அரைப் பார்வை க்ஷண நேரமேனும்
வீழட்டும் என்மீது கருணை நிறை தாயே
இஷ்டாவிஷிஷ்டமதயோபி யாயா தயார்த்த
ஸ்ருஷ்ட்யா த்ரிவிஷ்டபபதம் சுலபம் லபந்தே
திருஷ்டி: ப்ரஹ்ருஷ்ட கமலோதர தீப்திரிஷ்டாம்
புஷ்டிம் க்ருஷீஷ்ட மம புஷ்கர விஷ்டராயா:
அஸ்வமேத யாகம் செய்தும் அகலாத பாபம்
அத்தனையும் அழிய மனச் சுத்திசெய்வ தெதுவோ!
இச்சகத்தில் எவர் தயவால் இந்திரனார் பதமும்
இனை சுகமும் சுலபத்தில் பெறுவதெவர் அருளோ
உச்சிட்ட தாமரையின் நடுப்பாகம் ஒப்ப
ஒளிர்கின்ற திருமகளே நின் கருணை நிறை பார்வை
விச்சையுள்ள யெளியேனின் விருப்பமெலாம் நல்க
வியன் கருணையென என்மேல் பொழிந்திடுவாய் தாயே
தத்யாத் தயாநுவபநோ த்ரவிணாம்பு தாரா
மஸ்மிந்நகிஞ்சந விஹங்கஸிஸௌ விஷண்ணே
துஷ்கர்ம கர்ம மபநீய சிராய தூரம்
நாராயண ப்ரணயிநி நயநாம்புவாஹ:
சாதகப் புள்ளென நாளெல்லாம் தவித்தேன்
தரித்திரம் விஞ்சவே வாடினேன் பலநாள்
பாதகம் தாபம் தரித்திரம் துக்கமெல்லாமும்
பற்றிய எனைவிட்டு வெகுதூரமே ஓட
ஆதரவாம் கருணைக் காற்றினால் அசைய
அருள்பொழி மேகமாய் நின்கண்களெ விளங்கி
போதனை போல் பொன்மலை என்மீது நீ
பொழிந்திடு தாயே நின் கருணையாம் விழியால்
கீர்தேவதேதி கருடத்வஜ ஸுந்தரீதி
ஸாகம்பரீதி ஸஸிஸேகர வல்லபேதி
ஸ்ருஷ்டிஸ்திதி ப்ரளயகேளிஷு ஸம்ஸ்திதா யா
தஸ்யை நமஸ்த்ரிபுவநைக குரோஸ்தருண்யை
சிருஷ்டியிலே கலைமகளாய்த் திகழ்கின்றாய் தாயே
சீவர்களைக் காப்பதற்குத் திருமகளே யாவாய்
மருட்டுகின்ற அரக்கர்களை அழிக்கின்ற போது
மகா துர்க்காயென விளங்கும் வல்லபையும் நீயே
பெருகு பிறைச் சந்திரனைச் சூடுகின்ற பெம்மான்
பிரியபத்தினி பார்வதியாய் விளங்குபவள் நீயே
குரு விஷ்ணு பத்தினியே மூவுலக மெல்லாம்
கொண்டாடும் மகாலட்சுமி திருவடிக்கே சரணம்
ஸ்ருத்யை நமோஸ்து ஸுபகர்மபலப்ரஸுத்யை
ரத்யை நமோஸ்து ரமணீய குணார்ணவாயை
சக்த்யை நமோஸ்து சதபத்ரநிகேதநாயை
புஷ்ட்யை நமோஸ்து புரு÷ஷாத்தம வல்லபாயை
வேதப்பிரம சொரூபமாக விளங்கும் தாயே சரணம்
விணையின் பயனை பகிர்ந்தளிக்கும் ஆதித்தாயே சரணம்
சோதி அழகுவடிவாம் ரதியே சுடரே தாயே சரணம்
தூயமங்கள குணங்கள் அமைந்த கருணைத் தாயே சரணம்
இதயத் தாமரை இருப்பிடமாக ஏற்கும் தாயே சரணம்
இதயசுத்தி வடிவாய்த் திகழும் சக்தித்தாயே சரணம்
உத்தமோ உத்தமன் பத்னியான லட்சுமித்தாயே சரணம்
உயர்ந்த பூரண சொரூபியான புஷ்டித் தாயே சரணம்
நமோஸ்து நாளீகநிபாநநாயை
நமோஸ்து துக்தோததி ஜந்ம பூம்யை
நமோஸ்து ஸோமாம்ருத ஸோதராயை
நமோஸ்து நாராயண வல்லபாயை
பங்கயத்தை யொத்த திருமுக முடையாய் சரணம்
பாற்கடலில் உதித்த திரு லட்சுமியே சரணம்
மங்களம் சேர்மதி அமுதம் உடன்பிறப்பாய் பெற்றாய்
மகிமை மிக்க நாராயணன் மனையரசி லட்சுமி சரணம்
நமோஸ்து ஹேமாம்புஜ பீடிகாயை
நமோஸ்து பூமண்டலநாயிகாயை
நமோஸ்து தேவாதிதயாபராயை
நமோஸ்து ஸார்ங்காயுதவல்லபாயை
தங்கத் தாமரை தன்னில் அமர்ந்த தாயே லட்சுமி சரணம்
தரணிக் கெல்லாம் தலைவியான தாயே திருவே சரணம்
மங்கள தயவே தேவர்க்கருளும் மகாலட்சுமி சரணம்
மகிமை மிக்க சாரங்கபாணி மனையரசி லட்சுமி சரணம்
நமோஸ்து தேவ்யை ப்ருகுநந்தநாயை
நமோஸ்து விஷ்ணோருரஸி ஸ்தியயை
நமோஸ்து லக்ஷ?ம்யை கமலாலயாயை
நமோஸ்து தாமோதரவல்லபாயை
மகரிஷி ப்ருகு முனியின் திருமகளே சரணம் சரணம்
மகாவிஷ்ணு மார்பில் திகழும் மகாலட்சுமி சரணம்
தங்க ஆசனம் தாமரை மீதில் தங்கும் தாயே சரணம்
தாமோதரனின் தர்மபத்னி லட்சுமித் தாயே சரணம்
நமோஸ்து காந்த்யை கமலேக்ஷணாயை
நமோஸ்து பூத்யை புவநப்ரஸூத்யை
நமோஸ்து தேவாதிபி ரர்ச்சிதாயை
நமோஸ்து நந்தாத்மஜவல்லபாயை
சோதிவடிவே கமல நயனம் துலங்கும் தாயே சரணம்
செல்வம் சிருஷ்டி தலைவியான திருவே தாயே சரணம்
ஆதிதேவர் அனையர் போற்றும் அன்னை லட்சுமி சரணம்
ஆயர்நந்த குமரன் துணைவி அருளும் லட்சுமி சரணம்
சம்பத்கராணி சகலேந்த்ரிய நந்தநாதி
சாம்ராஜ்யதாநவிபவாநி ஸரோருஹாக்ஷ?
த்வத்வந்தநாதி துரிதாஹரணோத்யதாநி
மாமேவ மாதரநிஸம் கலயந்து மாந்யே
தாமரைக் கண்கள் படைத்த தாயே சௌபாக்ய நல்கும் தேவி
சகல மாந்தர் போற்றும் தாயே சாம்ராஜ்யம் நல்கும் தேவி
நேம புலன்கள் ஆனந்தம் பெறவே நெடிய பாபம் தீர்ப்பாய்
நிந்தன் திருவடி துதிக்கும் பாக்யம் நீயே எனக்குத் தருவாய்
யத்கடாக்ஷஸமுபாஸநாவிதி:
ஸேவகஸ்ய ஸகலார்த்தஸம்பத:
ஸந்தநோதி வசநாங்க மாநஸை:
த்வாம் முராரிஹ்ருதயேஸ்வரீம் பஜே
கடைக்கண் பார்வை வேண்டியே நாளும் கைதொழுது பூசனை
புரிவோர்க்கு தமக்கு தடையிலாச் செல்வம் தருபவள் எவளோ
தயையே மிக்க தயாபரி எவளோ மடை திறந்தென்ன நல்வரங்கள்
நல்கும் மாயன் முராரியின் இதயத் தலைவி அடைந் திடற்கரிய
அன்னைநின் திருவடி அடைக்கலம் அம்மா அடக்கலம் போற்றி
ஸரஸிஜநிலயே ஸரோஜஹஸ்தே
தவள தமாம்ஸுக கந்தமால்யஸோபே
பகவதி ஹரிவல்லபே மநோக்ஞே
த்ரிபுவநபூதிகரி ப்ரஸீத மஹ்யம்
கமல வாசினி கரக் கமலம் உடையாய் களப சந்தன மாலையும்
தரித்து நிமலவெண் துகில் மேனியில் தவள நிர்மல ஜோதியாய்
திகழ்பவள் நீயே அமல முகுந்தன் இன்னுயிர்த் தலைவி அலகில்
கீர்த்திகொள் மனங்கவர் செல்வி விமலையே நலன்கள்
எங்களுக் கருள்வாய் வேண்டினேன் தாயே அருள்புரி நீயே
திக்கஸ்திபி: கனககும்பமுகாவஸ்ருஷ்ட
ஸ்வர்வாஹிநீ விமலசாரு ஜலாப்லுதாங்கீம்
ப்ராதர்நமாமி ஜகதாம் ஜநநீ மஸேஷ
லோகாதிநாத க்ருஹிணீ மம்ருதாதிபுத்ரீம்
தெய்வக் கங்கை நன்னீர் எடுத்து திசையானைகள் தங்கக்
குடத்தில் ஏந்தி உய்ய நீராட்டும் உடலே உடையாய் உலகத்
தாயே உலகைப் புரக்கும் தெய்வத் திருமால் மார்பில் திகழும்
திருவே பாற்கடல் தோன்றிய செல்வி மெய்யாம் நின்றன்
திருவடிச் சார்ந்தே வைகறை தொழுதேன் வாழ்வளிப் பாயே
கமலே கமலாக்ஷவல்லபே த்வம்
கருணாபுர தரங்கிதைரபாங்கை:
அவலோகய மாமகிஞ்சநாநாம்
ப்ரதமம் பாத்ரமக்ருத்ரிமம் தயாயா:
கமலிநீயே கமலக் கண்ணன் காதலீ கருணை வெள்ளமே
பொழிந்திடும் திருவே கமலக் கண் பார்வைக் கேங்கி
இளைத்துக் கதறும் என்றன் துதியினைக் கேட்டு தமியேன்
நின்றன் தயையினுக் கேங்கும் தரித்திரன் தக்கான்
எனநீ கனிந்து சமயமறிந்து என்றனுக் கருள நின் தவளும்
கடைக்கண் வைப்பாய் என்மீதே
ஸ்துவந்தி யே ஸ்துதிபிரமீபிரந்வஹம்
த்ரயீமயீம் த்ரிபுவநமாதரம் ரமாம்
குணாதிகா குருதரபாக்யபாகிந:
பவந்தி தே புவி புதபாவிதாஸயா:
மறைகள் மூன்றின் வடிவாய்த் திகழும் வையகம் மூன்றுமே தொழுதிட
நின்றாய் முறையாய் இந்தத் தோத்திரம் தன்னைநின் முன்றில்
துதித்துப் போற்றுவோர் தமக்கு நிறைசெல்வம் கீர்த்தி, கல்வி
ஆரோக்யம் நிறைஆயுள் புத்தி சக்தியும் தந்து துறையெனப்
புலவோர் போற்றிடச் செய்யும் துணிவும் சக்தியும் தருவாய் தாயே
(ஆதிசங்கரர் அருளிய இந்த ஸ்லோகத்தை தினமும்அல்லது செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் படித்து மகாலட்சுமியை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்)

Saturday, 7 February 2015

மந்திர செபத்தில் வெற்றி பெற செய்ய வேண்டியவை !!!

நாம் காரிய சித்தி பெற நிறைய மந்திரங்களை செபிக்க ஆரம்பித்திருப்போம். மந்திர செபத்தில் ஒரு சிலரே வெற்றி பெறுகின்றனர். ஒரு சிலருக்கு தாமதமாக பலன்கள் கிடைக்கின்றன. பலருக்கு பலன் கிடைக்க வெகு நாட்கள் ஆகின்றன. சிலருக்கு பலன்கள் கிடைப்பதே இல்லை. இதற்கு காரணம் விதிமுறைகளை பின்பற்றாமல் போவது தான். மந்திர செபத்தில் வெற்றி அடைய பல விதிமுறைகள் உள்ளன. அவற்றில் எல்லாவற்றையும் பின்பற்ற இயலாது. ஒரு சில விதிமுறைகளை நாம் கண்டிப்பாக பின்பற்றியே ஆக வேண்டும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
மந்திர செபத்தில் வெற்றி பெற எமக்கு தெரிந்த விதிமுறைகளை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். மந்திர செபம் வெற்றி அடைய நாம் செய்ய வேண்டியவை:-
மந்திர செபத்தினை குறிப்பிட்ட திதி மற்றும் நட்சத்திரத்தில் தான் ஆரம்பிக்க வேண்டும்.
மந்திரம் செபம் செய்யும் போது நமது கவனம் மந்திர செபத்திலேயே தான் இருக்க வேண்டும்.
மந்திர செபம் செய்யும் போது நமது உடல், மனம், வாக்கு மூன்றும் சுத்தமாக இருக்க வேண்டும்.
மந்திர செபம் செய்யும் காலத்தில் அசைவத்தினை நிரந்தரமாக நிறுத்த வேண்டும்.
மந்திர செபம் செய்யும் காலத்தில் மது பழக்கத்தினை நிரந்தரமாக நிறுத்த வேண்டும்.
மந்திர செபம் செய்யும் காலத்தில் புகை பழக்கம் இருப்பின் நிரந்தரமாக நிறுத்த வேண்டும்.
மந்திர செபம் செய்யும் காலத்தில் முறையற்ற உறவு இருப்பின் அதனை நிரந்தரமாக கைவிட வேண்டும்.
மந்திர செபம் செய்யும் காலத்தில் தினமும் பசுவிற்கு உணவளிக்க வேண்டும்.
மந்திர செபம் செய்யும் காலத்தில் தினமும் எறும்புகளுக்கு உணவளிக்க வேண்டும்.
மந்திர செபம் செய்யும் காலத்தில் தினமும் காக்கைக்கு உணவளிக்க வேண்டும்.
மந்திர செபம் செய்யும் காலத்தில் தினமும் பைரவரின் வாகனத்திற்கு உணவளிக்க வேண்டும்.
மந்திர செபம் செய்யும் காலத்தில் தினமும் மீன்களுக்கு உணவளிக்க வேண்டும்.
மந்திர செபம் செய்யும் காலத்தில் தினமும் ஏதேனும் ஒரு வறியவருக்கு உணவளிக்க வேண்டும்.
பால், மோர், வெண்ணெய் மற்றும் நெய் இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளல் வேண்டும்.
உணவில் தயிர் சேர்க்கக்கூடாது. தயிர் மந்திர செபத்திற்கு தடைகளை உருவாக்கும்.
உணவில் பிரண்டையை சேர்த்திடல் வேண்டும். இது மந்திர செபத்திற்கு உண்டாகும் தடைகளை நீக்கும்.
செபம் செய்யும் முன்பு குவளையில் நீர், எலுமிச்சை சாறு, பனை வெல்லம் கலந்து வைக்க வேண்டும்.
ஒரு வெள்ளிக் கிண்ணத்தில் ஒரு சங்கினை வைத்து அதில் இளநீரினை ஊற்ற வேண்டும்.
மற்றொரு சங்கினை எடுத்து ஊத வேண்டும்.
மந்திர செபம் செய்வதற்கு முன் பால் அருந்த வேண்டும்.
பால் அருந்திய பின்பு சங்கல்பம் என்னும் உறுதிமொழியை ஏற்க வேண்டும்.
சங்கல்பம் செய்த பின்பு 6 – 12 சுற்றுகள் பிராணாயாமம் செய்திடல் வேண்டும்.
12 சுற்றுகளுக்கு அதிகமாக பிராணாயாமம் அதிகமாக செய்தால் பெரும் தடைகள் உண்டாகும்.
பிராணாயாமம் செய்த பின்பு மந்திர செபம் செய்திடல் வேண்டும்.
மந்திர செபம் முடிந்தவுடன் சங்கினை ஊதி மேற்கண்ட எலுமிச்சை பானத்தினை அருந்த வேண்டும்.
அதன் பின்னர் மற்றொரு சங்கில் வைத்த இளநீரினை பருக வேண்டும்.
மந்திர செபம் செய்வதை யாரிடமும் கூறக்கூடாது.
முதல் நாளிலேயே அதிகமாக செபம் செய்ய கூடாது.
படிப்படியாக செபம் செய்யும் நேரத்தினை அதிகரிக்க வேண்டும்.
ஒரே இடத்தில் தான் செபத்தினை செய்ய வேண்டும். அடிக்கடி இடத்தினை மாற்றுதல் கூடாது.
வெறும் தரையில் உட்கார்ந்து செபம் செய்தல் கூடாது.
உயரமான இடங்கள், கோவில்கள், பசு இருக்கும் இடங்களில் செபம் செய்ய வேண்டும்.
கால சந்திகளில் செபம் செய்தல் மிகுந்த பலனை கொடுக்கும்.

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!