Monday, 30 July 2018

நவக்கிரகங்களை எப்படி வழிப்படுவது?


நம்முடைய வாழ்வில் வரும் அனைத்து இன்ப, துன்பங்களும் நவக்கிரகங்களின் செய்கையால் நடக்கிறது என்று இந்து சமயத்தினர் கருதுகின்றனர்.
இந்த நவக்கிரகங்களை வழிபடுவது நல்லது என்றாலும், எந்த ஒரு கோயிலிற்குச் சென்றாலும் மூலவரை வழிபடாமல் வெறும் நவக்கிரக வழிபாட்டை மட்டும் மேற்கொள்வது தவறானது. நவக்கிரகங்களை எப்படி வழிபடுவது? என்று தெரிந்து கொள்ளலாமா...?
முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபட்ட பின்னர், அந்தக் கோயிலின் மூலவரை வணங்கி விட்டு, இறுதியாகவே நவக்கிரக வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். இதுவே சிறந்த பலன்களை அளிக்கும். மூலவரை வழிபடாமல் நவக்கிரங்கங்களை மட்டும் வழிபடுவது எதிர்மறையான பலன்களையே கொடுக்கும்.
நவக்கிரகங்களில் ஒவ்வொரு கிரகமும் தரும் வளங்கள் இவைதான்;
1. சூரியன் – ஆரோக்கியம்
2. சந்திரன் – புகழ்
3. செவ்வாய் – செல்வச் செழிப்பு
4. புதன் – அறிவு வளர்ச்சி
5. வியாழன் – மதிப்பு
6. சுக்கிரன் – வசீகரத் தன்மை
7. சனீஸ்வரன் – மகிழ்வான வாழ்க்கை
8. ராகு – தைரியம்
9. கேது – பாரம்பரியப் பெருமை
நவகிரகங்களைப் சுற்றி வழிபடும் போது, அந்தந்தக் கிரகத்திற்கு உரித்தான எண்ணிக்கையில் சுற்றி வழிபட வேண்டும்.
அதாவது முதலில் ஒன்பது முறை சுற்றி வணங்கிய பின் அந்தக் கிரக அனுக்கிரகத்துக்காக மேலும் விசேஷமாகச் சுற்றி வந்து வழிபடுதல் வேண்டும்.
அது எத்தனை சுற்றுகள் என்பதைப் பின் வரும் செய்திகளின் வழி அறிந்து கொள்ளலாம்.
1. சூரியன் – 10 சுற்றுகள்
2. சுக்கிரன் – 6 சுற்றுகள்
3. சந்திரன் – 11 சுற்றுகள்
4. சனி – 8 சுற்றுகள்
5. செவ்வாய் – 9 சுற்றுகள்
6. ராகு – 4 சுற்றுகள் அடிப்பிரதட்சிணம்
7. புதன் – 5, 12, 23 சுற்றுகள்
8. கேது – 9 சுற்றுகள்
9. வியாழன் – 3, 12, 21 சுற்றுகள்
குறிப்பு: நவக்கிரகங்களை நேருக்கு நேராக நின்று வணங்குவது தவறான ஒன்றாகும். நவக்கிரகச் சிலைகளைத் தொட்டு வணங்குவது பாவம் தரும் செயல் ஆகும். எனவே அவ்வாறு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

எப்படி வலம் வந்து வழிபட வேண்டும்?....


* சிவனுக்கு இடமிருந்து வலமாக ஐந்து முறை சுற்றி வர வேண்டும்.
* அனைத்து வகையான சத்திகளுக்கும் ஐந்து முறை அல்லது ஒருமுறை இடமிருந்து வலமாகச் சுற்றி வர வேண்டும்.
* முருகன், பிள்ளையார், விநாயகர், கணபதி, ஐயனார், கருப்பு முதலியவர்களுக்கு இடமிருந்து வலமாக மூன்று முறை சுற்றி வர வேண்டும்.
* திருமால், பிறமண், குபேரன், இயமன் முதலியவர்களுக்கு இடமிருந்து வலமாக நான்கு முறை சுற்றி வர வேண்டும்.
* ஒன்பது கோள்கள், சனீசுவரன், சூரியன், சந்திரன், பைரவர், பலிபீடம், கொடிமரம் முதலியவர்களை இடமிருந்து வலமாக ஏழு முறை சுற்றி வர வேண்டும்.
* பறவை, விலங்கினங்கள் சமாது வலமிருந்து இடமாக நான்கு முறை சுற்றி வர வேண்டும்.
* துறவிகளின் சமாது வலமிருந்து இடமாக ஏழுமுறை சுற்ற வேண்டும்.
* இல்லறத்தார் சமாதை வலமிருந்து இடமாக ஒன்பது முறை சுற்றி வர வேண்டும்.
* உயிருள்ள கன்னிப் பெண்களை ஒன்பது முறை வலமிருந்து இடமாகச் சுற்றி வர வேண்டும்.
* வாவரசிகளை (வாழ்வு + அரசிகள் => இல்லறத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற சுமங்கலிப் பெண்கள்) வலமிருந்து இடமாக நான்கு அல்லது ஐந்து முறை சுற்றி வர வேண்டும்.
* பூசையில்லாத அல்லது பாழடைந்த ஆலயங்களை வலமிருந்து இடமாக இரண்டு முறை சுற்றி வர வேண்டும்.
* சித்தி வழங்கக் கூடிய குருவை, குருதேவரை, அருளை அநுபவப் பொருளாக வழங்கக் கூடிய அருளாளர்களை வலமிருந்து இடமாக பதினாறு அல்லது பதினெட்டு முறை சுற்றி வந்து ஒவ்வொரு முறையும் அவரது மெய்தொட்டு வணங்க வேண்டும்.
* வணங்குபவர் தனித்திருந்தால் அல்லது அறைக்குள் இருந்தால் அல்லது இருளில் இருந்தால் வணங்கப் படுபவரின் ஒப்புதல் பெற்று ஆரம்பத்திலும் முடிவிலும் முத்தங்கள் கொடுத்து வணங்க வேண்டும்.
குறிப்பு: வணங்குபவரின் இடது கை, வலது கை அடிப்படையில்தான் இடமிருந்து வலம் வருவது அல்லது வலமிருந்து இடம் வருவது கையாளப்பட வேண்டும்