1. தேவராஜ - ஸேவ்யமான - பாவனாங்க்ரி பங்கஜம்
வ்யாலயஜ்ஞஸூத்ர - மிந்துசேகரம் - க்ருபாகரம்
நாரதாதியோகிப்ருந்த - வந்தினம் திகம்பரம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே.
2. பானுகோடி - பாஸ்வரம் பவாப்திகாரகம் பரம்
நீலகண்ட - மீப்ஸிதார்த்த - தாயகம் த்ரிலோசனம்
காலகால - மம்புஜாக்ஷ - மக்ஷசூல - மக்ஷரம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே.
3. சூலடங்க - பாச - தண்ட - பாணி - மாதிகாரணம்
ச்யாமகாய - மாதிதேவ - மக்ஷரம் நிராமயம்
பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ர - தாண்டவப்ரியம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே.
4. புக்திமுக்திதாயகம் ப்ரசஸ்த - சாரு விக்ரஹம்
பக்தவத்ஸலம் ஸ்திதம் ஸமஸ்தலோக - விக்ரஹம்
நிக்வணன் - மனோஜ்ஞஹேம - கிங்கிணீலஸத்கடிம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே.
5. தர்மஸேபாலகம் த்வதர்மமார்க்க நாசகம்
கர்மபாசமோசகம் ஸுசர்மதாயகம் விபும்
ஸ்வர்ண வர்ணசேஷபாச - சோபிதாங்கமண்டலம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே.
6. ரத்னபாதுகா - ப்ரபாபிரமபாத - யுக்மகம்
நித்யமத்வீதிய -மிஷ்டதைவதம் நிரஞ்ஜனம்
ம்ருத்யுதர்ப்ப - நாசனம் கராலதம்ஷ்ட்ர - மோக்ஷணம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே.
7. அட்டஹாஸ - பின்னபத்மஜாண்ட - கோசஸந்ததிம்
த்ருஷ்டிபாத - நஷ்டபாப - ஜாலமுக்ரசாஸனம்
அஷ்டஸித்தி - தாயகம் கபாலிமாலிகந்தரம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே.
8. பூதஸங்க - நாயகம் விசாலகீர்த்திதாயகம்
காசிவாஸ - லோகபுண்ய - பாபசோதகம் விபும்
நீதிமார்க்ககோவிதம் புராதனம் ஜகத்பதிம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே.
9. காலபைரவாஷ்டகம் படந்தி யே மனோஹரம்
ஜ்ஞானமுக்திஸாதனம் விசித்ர - புண்ய - வர்த்தனம்
சோகமோ ஹதைன்யலோப - கோபதாபநாசனம்
தே ப்ரயாந்தி காலபைரவாங்க்ரி ஸந்நிதிம் த்ருவம்.
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே.
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே.
காலபைரவம் பஜே.
காலபைரவம் பஜே.
ஓம்.
ஆக்கம்: ஆதிசங்கரர்
மேற்கண்ட பாடல் காலபைரவர் அஷ்டகம் ஆகும். இதை நம்மில் பலர் அறிந்திருப்பார்கள். இது ஆதிசங்கரரால் காசி மாநகரின் காவல் தெய்வமான காலபைரவர் மேல் பாடிய அஷ்டகம் ஆகும். இன்றும் காசியில் இதைக் கொண்டு தான் காலபைரவருக்கு வழிபாடுகள் நடக்கின்றன. இந்த அஷ்டகம் மூலம் தான் காசி காலபைரவர் கயிறு தயாரிக்கப்படுகிறது. அதனை தயாரிக்கும் முறையைப் பற்றி தனியாக ஒரு பதிவு வெளிவரும்.
இதில் மொத்தம் 9 பாடல்கள் உள்ளன. முதல் 8 பாடல்கள் அஷ்டகம் ஆகும். கடைசி 1 பாடல் அஷ்டகத்தின் பலனை கூறுகிறது. காலபைரவர் அஷ்டகத்தினை பாராயணம் செய்யும் முறைகளைப் பற்றி காண்போம்.
அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்தி விட்டு மேற்கண்ட காலபைரவர் அஷ்டகத்தை காலபைரவர் சந்நிதியில் தினமும் 1 முறை பாராயணம் செய்து வரவும். அவ்வாறு செய்து வந்தால் கர்ம வினைகள் நீங்கி நிம்மதியான வாழ்வு கிட்டும்.
தினமும் ஆலயம் சென்று பாராயணம் செய்ய இயலாதவர்கள் ஒவ்வொரு செவ்வாய் கிழமையன்றும் காலபைரவர் சந்நிதியில் 8 முறை செபித்த பின்பு வீட்டிற்கு வந்து இரண்டு இலுப்பை எண்ணெய் விளக்குகள் ஏற்றி அதன் முன்பாக 1 முறை பாராயணம் செய்து வரவும்.
தினமும் ஆலயம் சென்று பாராயணம் செய்ய இயலாதவர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை ராகுகால வேளையில் காலபைரவர் சந்நிதியில் 8 முறை செபித்த பின்பு வீட்டிற்கு வந்து இரண்டு இலுப்பை எண்ணெய் விளக்குகள் ஏற்றி அதன் முன்பாக 1 முறை பாராயணம் செய்து வரவும்.
மேற்கண்ட முறையில் செய்ய இயலாதவர்கள் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் காலபைரவர் சந்நிதியில் 8 முறை செபித்த பின்பு வீட்டிற்கு வந்து இரண்டு இலுப்பை எண்ணெய் விளக்குகள் ஏற்றி அதன் முன்பாக 1 முறை பாராயணம் செய்து வரவும்.
மேற்கண்ட முறையில் செய்ய இயலாதவர்கள் ஒவ்வொரு தேய்பிறை சஷ்டியன்று காலபைரவர் சந்நிதியில் 8 முறை செபித்த பின்பு வீட்டிற்கு வந்து இரண்டு இலுப்பை எண்ணெய் விளக்குகள் ஏற்றி அதன் முன்பாக 1 முறை பாராயணம் செய்து வரவும்.
மேற்கண்ட முறையில் செய்ய இயலாதவர்கள் ஒவ்வொரு பௌர்ணமியன்றும் காலபைரவர் சந்நிதியில் 8 முறை செபித்த பின்பு வீட்டிற்கு வந்து இரண்டு இலுப்பை எண்ணெய் விளக்குகள் ஏற்றி அதன் முன்பாக 1 முறை பாராயணம் செய்து வரவும்.
மேற்கண்ட எந்த முறையையும் கடைபிடிக்க இயலாதவர்கள் தங்கள் வீட்டு பூசையறையில் மனதில் காலபைரவரை நினைத்து இரண்டு இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி தினமும் 1 முறை பாராயணம் செய்து வரவும்.
அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு பாராயணம் செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும். அசைவத்தை நிறுத்தாமல் பாராயணம் செய்தால் நாய் கடிக்கும். அசைவத்தை காலபைரவரே நிறுத்த வைப்பார். அசைவத்தை நிறுத்தாமல் பாராயணம் செய்தால் தண்டனை உண்டு. தண்டித்து திருத்துவார். என்றென்றும் கண்ணின் இமைபோல காப்பார். கர்மவினைகளை அழிப்பார் (எல்லா தோஷங்களும் இதில் அடக்கம்). மனதிற்கு நிம்மதியை அளிப்பார். ஞானத்தையும், முக்தியையும் அளிப்பார். பாவங்களை அழித்து புண்ணியத்தினை தருவார். வருத்தம், சோகம், மயக்கம், ஏழ்மை, கோபம், தாபம் இவற்றை அழித்து பிறவியில்லா பெருநிலையை அளிப்பார்.
காலபைரவரை வழிபாடு செய்வதில் எத்தனையோ முறைகள் இருப்பினும் மனதில் ஒரு முறை அவரை அன்புடன் துதித்து வேண்டினாலே போதுமானது. காலபைரவர் ஓடோடி வருவார். கண்ணின் இமை போல் காத்து நிற்பார். இவரின் அருளில்லாமல் முக்தி கிட்டாது என்பதே உண்மையாகும்.
எங்கு செபித்தாலும் இரண்டு இலுப்பை எண்ணெய் விளக்குகள் மட்டுமே போதுமானது. வேறு எதுவும் தேவையில்லை. வசதி படைத்தவர்கள் அவல் பாயசம், வெற்றிலைப்பாக்கு, வாழைப்பழம், பானகம், செவ்வரளி பூ, மரிக்கொழுந்து இவற்றை வைத்தும் வழிபடலாம்.
ஆலயம் சென்று வழிபாடு செய்வதாக இருந்தால் வழிபாடு செய்யும் நாளுக்கு முந்தைய நாளும், வழிபாடு செய்யும் நாளன்றும் கண்டிப்பாக உடலுறவு கூடாது.
நீங்கள் காலபைரவரை வழிபடுவதை வெளியில் காட்டிக்கொள்ளவோ அல்லது சொல்லவோ வேண்டாம். அவ்வாறு யாரிடமேனும் வெளிப்படுத்திக்கொண்டால் வழிபாடு தடைபடும் என்பதை நினைவில் கொள்ளவும்.
தினமும் வழிபடுபவர்கள் முக்தியை அடையும் புண்ணியசாலிகளே...!
மேற்கண்ட அஷ்டகத்தை மேற்கண்ட முறைகளில் பாராயணம் செய்ய இயலாதவர்கள், மேற்கண்ட நாட்களில் அல்லது தினமும் 108 முறை “ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ” என்று செபித்து வந்தாலே போதுமானது. மேற்கண்ட மந்திரத்திற்கு அசைவம் மட்டுமே கட்டுப்பாடு ஆகும்.
அன்பு சகோதரருக்கு,வணக்கம்! தங்களின் பதிவு மிகவும் முக்கியமானது.இது போல் எண்ணற்ற விஷயங்கள் பாரதம் முழுவதும் நிறைந்து உள்ளது.உங்களை போன்றோர் இதை பதிவிடுவதால் எண்ணற்றோர் பயனடைகிறோம்.முயற்சி தொடரட்டும்.நன்றி!!!
ReplyDeleteநன்றி
ReplyDelete