Sunday 31 August 2014

காலபைரவர் அஷ்டகம் --- மூலம்





1.   தேவராஜ - ஸேவ்யமான - பாவனாங்க்ரி பங்கஜம்
வ்யாலயஜ்ஞஸூத்ர - மிந்துசேகரம் - க்ருபாகரம்
நாரதாதியோகிப்ருந்த - வந்தினம் திகம்பரம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே.



2.   பானுகோடி - பாஸ்வரம் பவாப்திகாரகம் பரம்
நீலகண்ட - மீப்ஸிதார்த்த - தாயகம் த்ரிலோசனம்
காலகால - மம்புஜாக்ஷ - மக்ஷசூல - மக்ஷரம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே.



3.   சூலடங்க - பாச - தண்ட - பாணி - மாதிகாரணம்
ச்யாமகாய - மாதிதேவ - மக்ஷரம் நிராமயம்
பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ர - தாண்டவப்ரியம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே.



4.   புக்திமுக்திதாயகம் ப்ரசஸ்த - சாரு விக்ரஹம்
பக்தவத்ஸலம் ஸ்திதம் ஸமஸ்தலோக - விக்ரஹம்
நிக்வணன் - மனோஜ்ஞஹேம - கிங்கிணீலஸத்கடிம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே.



5.   தர்மஸேபாலகம் த்வதர்மமார்க்க நாசகம்
கர்மபாசமோசகம் ஸுசர்மதாயகம் விபும்
ஸ்வர்ண வர்ணசேஷபாச - சோபிதாங்கமண்டலம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே.



6.   ரத்னபாதுகா - ப்ரபாபிரமபாத - யுக்மகம்
நித்யமத்வீதிய -மிஷ்டதைவதம் நிரஞ்ஜனம்
ம்ருத்யுதர்ப்ப - நாசனம் கராலதம்ஷ்ட்ர - மோக்ஷணம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே.



7.   அட்டஹாஸ - பின்னபத்மஜாண்ட - கோசஸந்ததிம்
த்ருஷ்டிபாத - நஷ்டபாப - ஜாலமுக்ரசாஸனம்
அஷ்டஸித்தி - தாயகம் கபாலிமாலிகந்தரம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே.



8.   பூதஸங்க - நாயகம் விசாலகீர்த்திதாயகம்
காசிவாஸ - லோகபுண்ய - பாபசோதகம் விபும்
நீதிமார்க்ககோவிதம் புராதனம் ஜகத்பதிம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே.



9.   காலபைரவாஷ்டகம் படந்தி யே மனோஹரம்
ஜ்ஞானமுக்திஸாதனம் விசித்ர - புண்ய - வர்த்தனம்
சோகமோ ஹதைன்யலோப - கோபதாபநாசனம்
தே ப்ரயாந்தி காலபைரவாங்க்ரி ஸந்நிதிம் த்ருவம்.



காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே.

காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே.



காலபைரவம் பஜே.

காலபைரவம் பஜே.



ஓம்.



ஆக்கம்: ஆதிசங்கரர்


மேற்கண்ட பாடல் காலபைரவர் அஷ்டகம் ஆகும்.  இதை நம்மில் பலர் அறிந்திருப்பார்கள்.  இது ஆதிசங்கரரால் காசி மாநகரின் காவல் தெய்வமான காலபைரவர் மேல் பாடிய அஷ்டகம் ஆகும்.  இன்றும் காசியில் இதைக் கொண்டு தான் காலபைரவருக்கு வழிபாடுகள் நடக்கின்றன.  இந்த அஷ்டகம் மூலம் தான் காசி காலபைரவர் கயிறு தயாரிக்கப்படுகிறது.  அதனை தயாரிக்கும் முறையைப் பற்றி தனியாக ஒரு பதிவு வெளிவரும்.


இதில் மொத்தம் 9 பாடல்கள் உள்ளன.  முதல் 8 பாடல்கள் அஷ்டகம் ஆகும்.  கடைசி 1 பாடல் அஷ்டகத்தின் பலனை கூறுகிறது.  காலபைரவர் அஷ்டகத்தினை பாராயணம் செய்யும் முறைகளைப் பற்றி காண்போம்.


அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்தி விட்டு மேற்கண்ட காலபைரவர் அஷ்டகத்தை காலபைரவர் சந்நிதியில் தினமும் 1 முறை பாராயணம் செய்து வரவும்.  அவ்வாறு செய்து  வந்தால் கர்ம வினைகள் நீங்கி நிம்மதியான வாழ்வு கிட்டும்.

தினமும் ஆலயம் சென்று பாராயணம் செய்ய இயலாதவர்கள் ஒவ்வொரு செவ்வாய் கிழமையன்றும் காலபைரவர் சந்நிதியில் 8 முறை செபித்த பின்பு வீட்டிற்கு வந்து இரண்டு இலுப்பை எண்ணெய் விளக்குகள் ஏற்றி அதன் முன்பாக 1 முறை பாராயணம் செய்து வரவும்.

தினமும் ஆலயம் சென்று பாராயணம் செய்ய இயலாதவர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை ராகுகால வேளையில் காலபைரவர் சந்நிதியில் 8 முறை செபித்த பின்பு வீட்டிற்கு வந்து இரண்டு இலுப்பை எண்ணெய் விளக்குகள் ஏற்றி அதன் முன்பாக 1 முறை பாராயணம் செய்து வரவும்.

மேற்கண்ட முறையில் செய்ய இயலாதவர்கள் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் காலபைரவர் சந்நிதியில் 8 முறை செபித்த பின்பு வீட்டிற்கு வந்து இரண்டு இலுப்பை எண்ணெய் விளக்குகள் ஏற்றி அதன் முன்பாக 1 முறை பாராயணம் செய்து வரவும்.

மேற்கண்ட முறையில் செய்ய இயலாதவர்கள் ஒவ்வொரு தேய்பிறை சஷ்டியன்று காலபைரவர் சந்நிதியில் 8 முறை செபித்த பின்பு வீட்டிற்கு வந்து இரண்டு இலுப்பை எண்ணெய் விளக்குகள் ஏற்றி அதன் முன்பாக 1 முறை பாராயணம் செய்து வரவும்.

மேற்கண்ட முறையில் செய்ய இயலாதவர்கள் ஒவ்வொரு பௌர்ணமியன்றும் காலபைரவர் சந்நிதியில் 8 முறை செபித்த பின்பு வீட்டிற்கு வந்து இரண்டு இலுப்பை எண்ணெய் விளக்குகள் ஏற்றி அதன் முன்பாக 1 முறை பாராயணம் செய்து வரவும்.

மேற்கண்ட எந்த முறையையும் கடைபிடிக்க இயலாதவர்கள் தங்கள் வீட்டு பூசையறையில் மனதில் காலபைரவரை நினைத்து இரண்டு இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி தினமும் 1 முறை பாராயணம் செய்து வரவும்.

அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு பாராயணம் செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும்.  அசைவத்தை நிறுத்தாமல் பாராயணம் செய்தால் நாய் கடிக்கும்.  அசைவத்தை காலபைரவரே நிறுத்த வைப்பார்.  அசைவத்தை நிறுத்தாமல் பாராயணம் செய்தால் தண்டனை உண்டு.  தண்டித்து திருத்துவார்.  என்றென்றும் கண்ணின் இமைபோல காப்பார்.  கர்மவினைகளை அழிப்பார் (எல்லா தோஷங்களும் இதில் அடக்கம்).  மனதிற்கு நிம்மதியை அளிப்பார்.  ஞானத்தையும், முக்தியையும் அளிப்பார்.  பாவங்களை அழித்து புண்ணியத்தினை தருவார்.  வருத்தம், சோகம், மயக்கம், ஏழ்மை, கோபம், தாபம் இவற்றை அழித்து பிறவியில்லா பெருநிலையை அளிப்பார்.


காலபைரவரை வழிபாடு செய்வதில் எத்தனையோ முறைகள் இருப்பினும் மனதில் ஒரு முறை அவரை அன்புடன் துதித்து வேண்டினாலே போதுமானது.  காலபைரவர் ஓடோடி வருவார்.  கண்ணின் இமை போல் காத்து நிற்பார்.  இவரின் அருளில்லாமல் முக்தி கிட்டாது என்பதே உண்மையாகும்.


எங்கு செபித்தாலும் இரண்டு இலுப்பை எண்ணெய் விளக்குகள் மட்டுமே போதுமானது.  வேறு எதுவும் தேவையில்லை.  வசதி படைத்தவர்கள் அவல் பாயசம், வெற்றிலைப்பாக்கு, வாழைப்பழம், பானகம், செவ்வரளி பூ, மரிக்கொழுந்து இவற்றை வைத்தும் வழிபடலாம்.


ஆலயம் சென்று வழிபாடு செய்வதாக இருந்தால் வழிபாடு செய்யும் நாளுக்கு முந்தைய நாளும், வழிபாடு செய்யும் நாளன்றும் கண்டிப்பாக உடலுறவு கூடாது.

நீங்கள் காலபைரவரை வழிபடுவதை வெளியில் காட்டிக்கொள்ளவோ அல்லது சொல்லவோ வேண்டாம்.  அவ்வாறு யாரிடமேனும் வெளிப்படுத்திக்கொண்டால் வழிபாடு தடைபடும் என்பதை நினைவில் கொள்ளவும்.

தினமும் வழிபடுபவர்கள் முக்தியை அடையும் புண்ணியசாலிகளே...!

மேற்கண்ட அஷ்டகத்தை மேற்கண்ட முறைகளில் பாராயணம் செய்ய இயலாதவர்கள், மேற்கண்ட நாட்களில் அல்லது தினமும் 108 முறை “ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ” என்று செபித்து வந்தாலே போதுமானது. மேற்கண்ட மந்திரத்திற்கு அசைவம் மட்டுமே கட்டுப்பாடு ஆகும்.

திருவாதிரை சொர்ண பைரவர் வழிபாடு





பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகம் இல்லை, அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகம் இல்லை.  அதாவது பணம் இல்லாமல் இந்த உலகில் வாழ்க்கை என்பது சிரமம்.  அதே போல் அருள் இல்லாதவர்கட்கு விண்ணுலகம் இல்லை என்பதே இதன் பொருள்.  அருளும், பொருளும் ஒருங்கே கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி தான்.  இரண்டையும் ஒரே நேரத்தில் அடைய வழி இருக்கிறதா?  ஆம்.  இருக்கிறது.  அது தான் நம் சொர்ண பைரவர் வழிபாடு ஆகும்.



பொதுவாக எல்லோரும் கடவுள் வழிபாடு செய்வார்கள்.  ஆனால் அவர்களுக்கு வழிபாட்டின் பலன் வந்து சேருவது தாமதமாகும் அல்லது பலன் கிடைக்கமலேயே போய் விடும்.  இதற்கு காரணம் அசைவம் சாப்பிடுவது தான்.  அசைவத்தை நிரந்தரமாக நிறுத்தாமல் வழிபாடு செய்வதன் பலன் கிடைக்காது.  வழிபாடு செய்வதற்கென்றே சில நியமங்கள் உள்ளன.  மேலும் வழிபாட்டை துவக்கும் நாள், கிழமை, நேரம் ஆகியன மிகவும் முக்கியமானது.



நாம் இங்கே பார்க்கப் போவது மிக மிக மிக சிறப்பான, எளிமையான, மிக மிக மிக சக்தி வாய்ந்த சொர்ண பைரவர் வழிபாடு ஆகும்.  அதாவது திருவாதிரை நாள் சொர்ண பைரவர் வழிபாடு ஆகும்.  பொதுவாக ஒருவர் வழிபாடு செய்ய உகந்த காலம் என்று பார்க்கும் போது அவரவர் பிறந்த நட்சத்திரம், திதி, கிழமை இவற்றில் வழிபாடு செய்யலாம்.



நம்மில் சிலருக்கு பிறந்த ஜாதகம் இருக்காது.  அவர்களின் நட்சத்திரம், திதி, கிழமை தெரியாது.  எனவே நாம் எல்லோருக்கும் பொதுவாக சொர்ண பைரவர் வழிபாடு நடத்த ஒரு அற்புதமான நாள் உண்டு.  அது தான் திருவாதிரை நட்சத்திரம் வரும் நாள் ஆகும்.  திருவாதிரை நட்சத்திரம் நம் ஆதி சிவன் அண்ணாமலையார் அவதாரம் செய்த நட்சத்திரம் ஆகும்.



திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளில் நாம் செய்யும் தானம், செபம், வழிபாடு இவற்றிற்கு கோடி மடங்கு பலன் உண்டு.  அப்படியென்றால் பைரவர் வழிபாட்டை தேய்பிறை சஷ்டி, தேய்பிறை அஷ்டமி, பரணி நட்சத்திரம், செவ்வாய் கிழமை, ராகு காலம் இவற்றில் செய்யக்கூடாதா?  கண்டிப்பாக செய்ய வேண்டும்.  இதில் மாற்று கருத்தே இல்லை.  ஆனால் இவற்றையும் விட சக்தி வாய்ந்த நாள் தான் திருவாதிரை நாள் ஆகும்.



இத்தகைய சிறப்பு வாய்ந்த திருவாதிரை திருநாளில் தேய்பிறை சஷ்டியோ அல்லது தேய்பிறை அஷ்டமியோ அல்லது செவ்வாய் கிழமையோ வந்தால் இன்னும் சிறப்பு தான்.  சரி திருவாதிரை வரும் நாட்களை எப்படி கண்டு கொள்வது?  அதற்கான விளக்கம் நமது வலைப்பூவில் திருவாதிரை கிரிவல நாட்கள் தலைப்பில் ஒரு பதிவு வந்துள்ளது.  அதில் திருவாதிரை நட்சத்திரம் வரும் நாட்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.  அதனை பின்பற்றி வழிபாடு செய்ய வேண்டியது தான்.



வழிபாடு செய்ய நாம் முதலில் அசைவத்தை நிரந்தரமாக நிறுத்த வேண்டும்.  அசைவத்தை நிரந்தரமாக நிறுத்திய பின்பே வழிபாடு செய்ய வேண்டும்.  அசைவத்தை நிறுத்தாமல் வழிபாடு செய்தால் நாய் வந்து கடிக்கும்.  சொர்ண பைரவரே அசைவத்தை நிறுத்த செய்வார்.   வழிபாடு செய்யும் முறை பின்வருமாறு:-



முதன் முதலில் ஆரம்பிக்கும் போது சொர்ண பைரவர் சந்நிதியில் ஆரம்பிக்க வேண்டும்.  அவ்வாறு இயலவில்லையெனில் சொர்ண பைரவர் படத்தினை அச்சிட்டு பூசையறையில் வைத்துக் கொள்ளவும் அல்லது தங்கள் வீட்டு பூசையறையின் தெற்கு பக்க சுவற்றில் சந்தனத்தால் சூலம் வரைந்து, சூலத்தையே பைரவராக பாவித்து இரண்டு இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வரவேண்டும்.



இவ்வாறு 9 திருவாதிரை நாட்கள் ராகு காலத்தில் வழிபாடு செய்ய வேண்டும்.  வழிபாடு செய்யும் போது சொர்ண பைரவர் அஷ்டகம்  33 முறை பாராயணம் செய்ய வேண்டும்.  சொர்ண பைரவர் அஷ்டகம் 33 முறை பாராயணம் செய்த பின்பு “ஓம் ஸ்ரீம் சொர்ண பைரவாய நமஹ“ என்று 108 முறை செபம் செய்யவும். கடைசியாக சொர்ண பைரவர் போற்றி - 33 ஒரு முறை பாராயணம் செய்து முடிக்க வேண்டும்.  அவல் பாயசம், வெற்றிலைப்பாக்கு, வாழைப்பழம், பானகம், செவ்வரளி பூ, மரிக்கொழுந்து இவற்றை வைத்து வழிபட வேண்டும்.



தொடர்ச்சியாக 9 திருவாதிரை நாட்கள் சொர்ண பைரவர் வழிபாடு செய்ய வேண்டும்.  இவ்வாறு தொடர்ந்து செய்ய இயலாவிடிலும் பரவாயில்லை.  விட்டுவிட்டாவது 9 திருவாதிரை நாட்கள் சொர்ண பைரவர் வழிபாடு செய்ய வேண்டும்.  இந்த வழிபாடு செய்யும் நாளில் விரதம் இருப்பதும் கன்றுடன் கூடிய பசுவிற்கு உணவளித்தலும் மிக்க சிறப்பு. இவ்வாறு விரதம் இருத்தலும் கன்றுடன் கூடிய பசுவிற்கு உணவளித்தால் பலன்கள் வெகு விரைவில் தேடிவரும்.  இவ்வாறு 9 திருவாதிரை நாட்கள் சொர்ண பைரவர் வழிபாடு செய்தால் ஏற்படும் பலன்கள் பின்வருமாறு:-



கர்ம வினைகள் அனைத்தும் கரைந்து போகும்
சொர்ண பைரவரின் அருள் நிரந்தரமாக வந்து சேரும்
எல்லா விதமான தோஷங்களும் நீங்கும்
எல்லா கடன்களும் தீரும்
குன்றாத செல்வம் வந்து சேரும்
வராத கடன்களும் வசூல் ஆகும்
தொழில் பெரிய வளர்ச்சியை அடையும்
நியாயமான பதவி உயர்வுகள் வந்து சேரும்
நியாயமான சம்பள உயர்வு கிடைக்கும்
நியாயமான முறையில் பண வரவு உண்டாகும்
வேலையில்லாதவர்கட்கு வேலை கிடைக்கும்
மறைமுக எதிரிகள் விலகுவர்
செய்வினை கோளாறுகள் நீங்கும்
அனைத்து வித செல்வங்களும் உண்டாகும்
மிகுந்த புண்ணியம் சேரும்
அட்டமா சித்துக்களும் உண்டாகும்
நிரந்தரமான மனநிம்மதி கிட்டும்
பிறவியில்லா பெருநிலை உண்டாகும்
குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்
கணவன், மனைவி இடையே ஒற்றுமை உண்டாகும்
சாபங்கள் அனைத்தும் நீங்கும்
எல்லா வித நோய்களும் தீரும்
நல்ல மக்கட் பேறு உண்டாகும்
அட்ட லட்சுமிகளின் வாசம் இல்லங்களில் உண்டாகும்
லட்சுமி மற்றும் குபேரன் இவர்கட்கு இணையான செல்வம் உண்டாகும்
வீட்டில் கால்நடைகளின் விருத்தி உண்டாகும்
விவசாயத்தில் நல்ல விளைச்சல் உண்டாகும்
சித்தர்களின் அருள் கிட்டும்
எல்லா பிரச்சனைகளும் தீரும்
வழக்குகள் அனைத்தும் தீரும்
தவறான பழக்கங்கள் நீங்கும்
அனைத்து கிரகங்களும் நன்மையே செய்யும்
அனைத்து யோகங்களும் உண்டாகும்




தென்னாடுடைய சிவனே போற்றி…!


எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!


ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ

ஓம் ஸ்ரீம் சொர்ண பைரவாய நமஹ


ஓம் சிவ சிவ ஓம்

செல்வம் கொழிக்க செய்யும் சொர்ண பைரவர் அஷ்டகம் - தமிழில்




தனம் தரும் வயிரவன் தளரடி பணிந்திடின் தளர்வுகள் தீர்ந்து விடும்
மனம் திறந்து அவன் பதம் மலரிட்டு வாழ்த்திடின் மகிழ்வுகள் வந்து விடும்
சினம் தவிர்த்து அன்னையின் சின்மயப்புன்னகை சிந்தையில் ஏற்றவனே
தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்


வாழ்வினில் வளந்தர வையகம் நடந்தான் வாரியே வழங்கிடுவான்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட தானென வந்திடுவான்
காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான் காவலாய் வந்திடுவான்
தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்


முழுநிலவதனில் முறையோடு பூசைகள் முடித்திட அருளிடுவான்
உழுதவன் விதைப்பான் உடமைகள் காப்பான் உயர்வுறச் செய்திடுவான்
முழுமலர்த் தாமரை மாலையை செபித்து முடியினில் சூடிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தன மழை பெய்திடுவான்


நான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பான் நான்முகன் நானென்பான்
தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான் தேவைகள் நிறைத்திடுவான்
வான்மழை எனவே வளங்களைப் பொழிவான் வாழ்ந்திட வாழ்த்திடுவான்
தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்


பூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பான் பூரணன் நானென்பான்
நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை நாணினில் பூட்டிடுவான்
காதங்கள் கடந்து கட்டிடும் மாயம் யாவையும் போக்கிடுவான்
தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்


பொழில்களில் மணப்பான் பூசைகள் ஏற்பான் பொற்குடம் ஏந்திடுவான்
கழல்களில் தண்டை கைகளில் மணியணிகலனாய் இருந்திடுவான்
நிழல்தரும் கற்பகம் நினைத்திடப் பொழுந்திடும் நின்மலன் நானென்பான்
தனக்கில்லை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்


சதுர்முகன் ஆணவத்தலையினைக் கொய்தான் சத்தோடு சித்தானான்
புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான் புண்ணியம் செய்யென்றான்
பதரினைக் குவித்து செம்பினை எரித்தான் பசும்பொன் இதுவென்றான்
தனக்கில்லை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்


ஜெய ஜெய வடுகநாதனே சரணம் வந்தருள் செய்திடுவாய்
ஜெய ஜெய சேத்திர பாலனே சரணம் ஜெயங்களைத் தந்திடுவாய்
ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா செல்வங்களைத் தந்திடுவாய்
தனக்கில்லை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்.


ஆக்கம்: உபாசனா குலபதி ஸ்ரீ துர்க்கை சித்தர்



அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்தி விட்டு மேற்கண்ட சொர்ண பைரவர் அஷ்டகத்தை சொர்ண பைரவர் சந்நிதியில் தினமும் 1 முறை பாராயணம் செய்து வரவும்.  அவ்வாறு செய்து  வந்தால் என்றும் பணத்திற்கு குறைவிருக்காது.


தினமும் ஆலயம் சென்று பாராயணம் செய்ய இயலாதவர்கள் ஒவ்வொரு செவ்வாய் கிழமையன்றும் சொர்ண பைரவர் சந்நிதியில் 1 முறை செபித்த பின்பு வீட்டிற்கு வந்து சொர்ண பைரவர் படத்தின் முன்பாக 8 முறை பாராயணம் செய்து வரவும்.


தினமும் ஆலயம் சென்று பாராயணம் செய்ய இயலாதவர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை ராகுகால வேளையில் சொர்ண பைரவர் சந்நிதியில் 1 முறை செபித்த பின்பு வீட்டிற்கு வந்து சொர்ண பைரவர் படத்தின் முன்பாக 8 முறை பாராயணம் செய்து வரவும்.


மேற்கண்ட முறையில் செய்ய இயலாதவர்கள் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் சொர்ண பைரவர் சந்நிதியில் 1 முறை செபித்த பின்பு வீட்டிற்கு வந்து சொர்ண பைரவர் படத்தின் முன்பாக 8 முறை பாராயணம் செய்து வரவும்.


மேற்கண்ட முறையில் செய்ய இயலாதவர்கள் ஒவ்வொரு தேய்பிறை சஷ்டியன்று சொர்ண பைரவர் சந்நிதியில் 1 முறை செபித்த பின்பு வீட்டிற்கு வந்து சொர்ண பைரவர் படத்தின் முன்பாக 8 முறை பாராயணம் செய்து வரவும்.


மேற்கண்ட முறையில் செய்ய இயலாதவர்கள் ஒவ்வொரு பௌர்ணமியன்றும் சொர்ண பைரவர் சந்நிதியில் 1 முறை செபித்த பின்பு வீட்டிற்கு வந்து சொர்ண பைரவர் படத்தின் முன்பாக 8 முறை பாராயணம் செய்து வரவும்.


மேற்கண்ட எந்த முறையையும் கடைபிடிக்க இயலாதவர்கள் தங்கள் வீட்டு பூசையறையின் தெற்கு பக்க சுவற்றில் சந்தனத்தால் சூலம் வரைந்து, சூலத்தையே பைரவராக பாவித்து இரண்டு இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி தினமும் 1 முறை பாராயணம் செய்து வரவும்.


அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு பாராயணம் செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும்.  அசைவத்தை நிறுத்தாமல் பாராயணம் செய்தால் நாய் கடிக்கும்.


எங்கு செபித்தாலும் இரண்டு இலுப்பை எண்ணெய் விளக்குகள் மட்டுமே போதுமானது.  வேறு எதுவும் தேவையில்லை.  வசதி படைத்தவர்கள் அவல் பாயசம், வெற்றிலைப்பாக்கு, வாழைப்பழம், பானகம், செவ்வரளி பூ, மரிக்கொழுந்து இவற்றை வைத்தும் வழிபடலாம்.


நீங்கள் சொர்ண பைரவரை வழிபடுவதை வெளியில் காட்டிக்கொள்ளவோ அல்லது சொல்லவோ வேண்டாம்.  அவ்வாறு யாரிடமேனும் வெளிப்படுத்திக்கொண்டால் வழிபாடு தடைபடும் என்பதை நினைவில் கொள்ளவும்.


தினமும் வழிபடுபவர்கள் மிகுந்த புண்ணியசாலிகளே...!


மேற்கண்ட அஷ்டகத்தை மேற்கண்ட முறைகளில் பாராயணம் செய்ய இயலாதவர்கள், மேற்கண்ட நாட்களில் அல்லது தினமும் 108 முறை “ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ” என்று செபித்து வந்தாலே போதுமானது.



தென்னாடுடைய சிவனே போற்றி...!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!!
ஓம் சிவ சிவ ஓம்
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ

மங்களம் அருளும் மஹா லட்சுமி அஷ்டகம்






1. நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
    சங்க சக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

2. நமஸ்தே கருடாரூட கோலாஸுர பயங்கரி
    ஸர்வ பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

3. ஸர்வ ஜ்ஞே ஸர்வ வரதே ஸர்வ துஷ்ட பயங்கரி
    ஸர்வ துக்கஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

4. ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி
    மந்திர மூர்த்தே ஸதா தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

5. ஆதியந்த்ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி
    யோகஜே யோகஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

6. ஸ்தூல ஸூக்ஷ்ம மஹாரௌத்ரே மஹாசக்தி மஹோதரே
    மஹா பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

7. பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரும்ம ஸ்வரூபிணி
    பரமேசி ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

8. ச்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே.
    ஜகத்ஸ்திதே ஜகந்மாத மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

9. மஹாலக்ஷ்மிம் யஷ்டகஸ்தோத்ரம்ய: படேத் பக்திமான்நர
    ஸர்வஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா

10. ஏககாலே படேந்நித்யம் மஹாபாப வினாஸநம்
      த்விகாலே ய: படேந்நித்தியம் தனதாந்ய ஸமந்வித:

11. த்ரிகாலம் ய: படேந்நித்யம் மஹாஸத்ரு: விநாஸனம்
      மஹாலக்ஷ்மீர் பவேந்நித்யம் ப்ரஸன்னா வரதா ஸுபா



நாம் மேலே காண்பது மஹா லட்சுமி அஷ்டகம் ஆகும்.  இது மஹா லட்சுமியின் அருள் வேண்டி இந்திரனால் இயற்றப்பட்டது.  இது மஹா லட்சுமியின் அருளினை வாரி வழங்க வல்லது.  மஹா லட்சுமியின் அருள் இருந்தாலே போதும் நம் வாழ்வில் அனைத்து பேறுகளும் தானே வந்தடையும்.

இதனை தினமும் பக்தியுடன் பாராயணம் செய்து வந்தால் சகல காரிய சித்தியும், நினைத்தவைகள் கைகூடுதலும், அரச போகமும் உண்டாகும்.

இதனை தினமும் 1 வேளை பாராயணம் செய்து வந்தால் அனைத்து பாவங்களும் அழிந்து போகும்.

இதனை தினமும் 2 வேளை பாராயணம் செய்து வந்தால் இல்லத்தில் செல்வமும், தானிய விருத்தியும் உண்டாகும்.

இதனை தினமும் 3 வேளை பாராயணம் செய்து வந்தால் அனைத்து எதிரிகளும் அழிந்து நிம்மதியான வாழ்வு கிட்டும்.

இதனை தொடர்ந்து பாராயணம் செய்து வந்தால் மகா லட்சுமியின் காட்சியும் வரமும் கிட்டும்.

Mahalakshmi Ashtakam - A Detailed Explanation




The mantra / ashtakam of goddess Mahalakshmi is a time tested remedy or a tool for the mankind to accomplish all material desires and fulfil financial goals. I have practically seen the benefits manifest in less than few hours and at some time takes a few days depending upon the goal one has... before reading further here are a few instances to quote…

-          A friend of mine was a micro financer, he had lend money to few folks and was unable to recover the principle nor the interest. I suggested him to chant the Mahalakshmi ashtakam and after a couple of weeks he saw the people coming back to him and repaying the interest to start with and in a span of 4 months all his money was recovered

-          Another instance, she was a sr. manager who lost her job and was desperate to find one to ensure all her EMIs  and other commitments are met. With repeated attempts she was unable to settle down in a good job, every 2-3 months some or the other issues kept her of the work, she resumed to chant the Mahalakshmi Ashtakam and in a less than a months’ time found a high paying job.

-          A Client of mine  was laid off from Jet Airways due to downsizing, he too chanted the mantra and in less than 3 days he was called back to resume his work, while a 1000+ employees were laid off he was the lucky one, he now has complete faith in the ashtakam and chants 11 times daily

-          A stock broker was in a very bad shape, although he had a lot of people opening an account with him, there were a countable few who use to trade and the brokerage earned was more like a students pocket money, he resumed chanting the ashtakam and in less than three months he had more than 1000 clients who are regular traders

-          A couple approached me and they had got themselves into a lot of issues, financial loans, raising credit card bills, frequent hospitalization and loss of money in the business. It was a Diwali night when they started chanting the Ashtakam …. all that she did from morning to evening except when she used to prepare food/perform household activities for almost 8-10 hours a day she used to chant the mantra with full devotion, her husband after reaching home in the evening from 6:00 to the time he used to have his dinner and go to bed chanted the mantra, miracles started to happen at their end, business expended, he moved out form retail to wholesale… in a span of 6 months he started an import export business, the shop which was a rented one where he did business… now in less than 2 years time he owns 3 shops, they have begeted a daughter and have two maids at home doing all the household activities. She and her husband as a practice in the evening chant the ashtakam for atleast 21 times daily and perform aarti and when ever they get time chant as long as they can…

-          I have seen benefit of this mantra myself, just before going to the interview I chanted this mantra for an hour and odd while I was driving down from home to office to attend the interview, the interview was first time right, very comforatable salary negotiation and I landed in a high paying job…

There are lot many such instance I can,  quote about me, my family members, my friends, my clients who have fetched a lot of benefits just by chanting the ashtakam.
The secret behind all material existence is found in the feminine principle, personified in the Goddess Archetype, Lakshmi is a very important Goddess, more people know about her than any other Goddess because Lakshmi is the Goddess of Wealth and the whole world is run by wealth. I will run short of words if I start writing about the goddess… instead I’m sharing the Ashtakam and the meaning of each of the couplet such that it benefits the reader.

You may wish to chant minimum 8 times a day as written in PadmaPuran for continuous 41 days to see fortune unfold your way .
What I have experienced is a chant of this ashtakam for 108 times is more powerful. 108 as a number in astrology and Vedas carry a lot of importance. There are 9 planets as per Vedic astrology and 12 zodiac houses the product of 9 x 12 = 108 and any chant for 108 times is said to overcome all the ill effects of planets and will open ways for energy to flow in.

Namstestu mahamaye shripithe surapujite
Sankhachakra gada haste mahalakshmi namostu te ..1

Namaste garudarudhe kolasura bhayankari
Sarva papahare devi mahalakshmi namostu te ..2

Sarvajne sarvavarade sarvadushtabhayankari
Sarvadukha hare devi mahalakshmi namostu te ..3

Sidhi budhi prade devi bhukti mukti pradayini
Mantramurte sada devi mahalakshmi namostu te ..4

Adyantarahite devi adishakti maheswari
Yogagye yogasambhute mahalakshmi namostu te ..5

Stula Sukshma maharoudre mahashakti mahodare
Maha papahare devi mahalakshmi namostu te ..6

Padmasana sthite devi parabhrahma swarupini
Paramesi janmata rmahalakshmi namostu te ..7

Swetambara dhare devi nanalamkara bhushite
Janthsthite janmata rmahalakshmi ramostu te ..8


Meaning / Explanation:


Namstestu mahamaye shripithe surapujite
Sankhachakra gada haste mahalakshmi namostu te ..1


Salutations to the Mahamaya, the great Enchantress, goddess mahalakshmi in the very first word of the Ashtakam is called as great Enchantress, she has the ability to enchant the whole universe with unimaginable pleasures and fortunes she can shed upon her devotee who resides in Shri Pitha which is her abode and is worshiped by demi gods leave alone human… and the form which is mentioned in the first couple to of the ashtakam is Godess Mahalkakshmi holding Shanka, Chakra and Gada in her hands.

A devotee who is chanting this couplet of the ashtakam has to visualize or imagine goddess in this form, there is significance to each of these elements. Shankha in the texts of Hinduism is considered as a sacred emblem often used to blow as a bugle during the war and inviting VIJAYA LAKSHMI, or inviting goddess Lakshmi to come down and be with the warrior to grant him/her victory. There are two types of Shankha often seen, they are Dakshinavarta (Right Turned) and Vamavarta(Left Turned.) A Hindu legend in Brahma Vaivarta Purana recalls the creation of conchs: god Shiva flung a trident towards the demons, burning them instantaneously. Their ashes flew in the sea creating conchs. Shankha is believed to be a brother of Lakshmi as both of them were born from the sea.

The Chakra, is another most important emblem often seen in hindu mythology, in the metaphysical world the Chakra is closely associated with the Energy Chakras i.e. major plexuses of arteries, veins and nerves, that are centers of life force (prana), or vital energy. Blocked energy in our 7 Chakras can often lead to illness … the chakra in the hands of Goddess Lakshmi is an emblem which reminds the devotee that Goddess has the powers to revitalize the chakras and energize one to accomplish the goal and desire one carries.

The Gada or Mace at the metaphysical level represents the power of time. Just as nothing can conquer time, the mace too is unconquerable and destroys those who oppose it. Often Goddess Lakshmi is referred in many texts as a fortune finder and the devotee who worships Goddess in this form holding the Gada is sure to see good times unfolding his way…

So in a nutshell, when reciting the first couplet of the Mahalakshmi Ashtakam  the devotee should visualize Goddess as Mahamaya the great enchantress seated at her abode or Sri Peetha also sometime in some texts referred as the Heart of Lord Vishnu  is worshiped by demi gods in the from where she holds a Conch, Chakra and Mace in her hands…


Namaste garudarudhe kolasura bhayankari
Sarva papahare devi mahalakshmi namostu te ..2

In this verse / couplet goddess Mahalakshmi is worshiped as Riding the Garuda. The Garuda is one of the most powerful demigods and is given an important place in Indian mythology. This can be gauged by the very fact that there is a complete Upanishad and Purana (Garudopanishad and Garuda Purana respectively) on him. Owl is the carrier or vahana of Goddess Lakshmi, but in this verse the devotee is worshiping Goddess who is riding the Garuda, Hindu philosophy firmly believes that spiritualism is the true human endeavour and the goal of life is the union with Creator. The pursuits of material gains is looked down upon as a stupid act of a person who has not seen the light of the spiritual wisdom to know that the real treasure is love for God, the devotee chanting the ashtakam is not only looking for material wealth but also the true divine treasure.

In this couplet the devotee is worshiping Goddess who was able to put the fear of god in Kolasura the terrorized the demon, the devotee is confirmed that with blessings of Goddess Lakshmi will also carry equal valor and sees her in the form of Dhairya or Veera Lakshmi and prays her to overcome all the sins created knowingly or unknowingly.


Sarvajne sarvavarade sarvadushtabhayankari
Sarvadukha hare devi mahalakshmi namostu te ..3

Goddess in this verse is refered as Sarvajne… the one who know all, and the devotee also prays her calling Sava varade, the granter of all boons and similar to the previous verse where the demon was terrorized by the goddess, the devotee now goes ahead and addresses her as the goddess who is capable of terrorizing all the ill and bad elements also is capable to release one from the clutches of sorrows … the devote offers salutations to the goddess and imagines himself / herself to get all the boons from the goddess to get the desires fulfilled, become knowledgeable and overcome the sorrows if he/she is facing.


Sidhi budhi prade devi bhukti mukti pradayini
Mantramurte sada devi mahalakshmi namostu te ..4

The devotee chanting this verse visualizes goddess granting him Success (Siddhi) and Intelligence (Buddhi), Worldly enjoyment and pleasures (Bhukti) and finally requests to grant Mukti (Liberation) and reiterates that goddess mahalakshim Always abides as the Embodiment of Mantra.

The very reason one is chanting this mantra is for both material and spiritual gains, in this world if only sorrows and pains exist one will not be able to accomplish the salvation, contented life on this earth needs both materialistic and spiritual development, if one is in need and that is not being fulfilled then where does one have time for spiritualism, you will not take the path of god unless you have enjoyed the pleasures of earthly world and realized them of not giving you enough satisfaction and look for higher satisfaction of the soul thru spiritual means, Goddess in this verse is requested to grant the devotee Success in his endeavours, could be business, job, exams etc… and Intelligence to ensure not to fall prey to the success and build a false ego, also at the same time the devotee goes ahead and request the goddess to grant him/her enjoyment from the success gained to fulfil the desires of this body made of flesh and blood and live thru the pleasures of this world and meanwhile enough spirituality to finally reach the goal of liberation.


Adyantarahite devi adishakti maheswari
Yogajye yogasambhute mahalakshmi namostu te ..5

 Goddess Mahalakshmi by the devotee is worshiped in this verse as the energy which has not end and no one know the beginning, the devotee looks at the goddess as the Supreme intelligence who has lovingly moulded and guided Creation, just as a caring parent would guide her child through the travails and challenges of life. The First Energy, out of whom the entire Creation manifested and expressed itself in all diversity, goddess here is referred to Adi Shakti who does all the work of creation and destroys the evil, the devotee in this verse asks goddess to give him/her the creative power and walk a path to destroy the evil within. The reciter of this verse seeks Comforting, Counselling, Redeeming and Awakening of the Kundalini, who is beyond all these powers, goddess in this verse is offered salutations as the one born of yoga united with yoga.


Stula Sukshma maharoudre mahashakti mahodare
Maha papahare devi mahalakshmi namostu te ..6

Reciting this couplet the devotee sees goddess mahalakshmi in all the forms Gross and subtle and most terrible who is capable of granting great power and prosperity is capable to remove all sins. The importance of this verse goes beyond requesting the Goddess to fulfil the desires in this life and also requests the goddess to fulfil the desires as long as the universe and the soul exists in all the forms known and unknown.


Padmasana sthite devi parabhrahma swarupini
Paramesi janmata rmahalakshmi namostu te ..7

Reciting this couplet one visualizes goddess Mahalakshmi seated on the Lotus in the form of Para Brahma and is supreme mother / guardian of this universe. Goddess in this couplet is refered as Para Brahma Sawaroop which is beyond Brahma. The self-enduring, eternal, self-sufficient cause of all causes, the essence of everything in the cosmos, and the reciter affirms with devotion to such an absolute power all the desires get fulfilled.


Swetambara dhare devi nanalamkara bhushite
Janthsthite janmata rmahalakshmi ramostu te ..8

The final verse of this couplet where the devotee marks a blueprint of the goddess in his/her third eye, he visualizes the goddess Dressed in White Garments and Adorned with Various Ornaments encompassing the entire universe. The devote see the goddess as a mother and sees himself in her arms an infant cared and nurtured by the goddess thus fulfilling all his desires.



There is no slightest of the doubts in my mind and I’m recommending one and all to personally see the miracles of this powerful ashtakam. Chant for 108 times daily and in very less time see your goals and desires fulfilling. Could be business, career, job, money, trading, progeny, winning law suites, peace, harmony, family happiness, bliss etc…

நவராத்திரியில் சிவனின் நவ தாண்டவம்!



நவராத்திரி என்றால் அம்பிகைக்கு உகந்த சிறப்பான ஒன்பது நாட்கள் என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால் நவராத்திரியில் சிவ தாண்டவங்களும் நிகழ்கின்றன என்ற செய்தி வியப்பை அளிக்கிறதல்லவா? கயிலைநாதனாகிய பரமேஸ்வரன் அமாவாசை, பவுர்ணமி தினங்களிலிருந்து பதின்மூன்றாவது நாளாகிய திரயோதசியில், மாலை 4.00 மணிக்குமேல் பிரதோஷ காலத்தில் தாண்டவம் ஆடுவதாகவும், இச்சமயத்தில் சிவன் கோயிலில் சுவாமி வலம் வருவதும்; தேவாரம், திருவாசகம், வேதபாராயணம் ஆகியவற்றுடன் திருச்சுற்று வழிபாடும் மிக நன்மையை அளிக்கும் என்றும் புராணங்கள் கூறுகின்றன. இந்த மாலை நேர ஆட்டத்தில் பரமனின் ஆடலுக்கு நந்தி மத்தளம் முழங்க, நாரதர் யாழிசைக்க, வாணி வீணைமீட்ட, வானும் புவியும் வணங்கி மகிழ்ந்திட, ஓம் ஓம் என ஒலிக்கும் ஞானவேளையில் அடியார் பணிகின்ற போது, ஈஸ்வரன் ஒரு குழந்தையைப்போல ஆடி மகிழ்கின்றாராம். பரமேஸ்வரன், உலகமே நீரில் மூழ்கும் பிரளய காலத்தில் பிரளய தாண்டவம் அல்லது ஊழிக்கூத்து என்ற நடனத்தை ஆடுவதாகவும்; இதை அம்பிகை மட்டுமே பார்த்து ரசிக்கிறாள் என்றும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இதை தேவியின் துதியான லலிதா ஸஹஸ்ர நாமத்தில் மஹாப்ரளய ஸாக்ஷினி என்ற நாமம் தெளிவுபடுத்துகிறது. இந்த தாண்டவங்களைத் தவிர பரமேஸ்வரன் ஒன்பது வகையான தாண்டவங்களை ஆடுவதாகவும்,அவற்றின் பெயர்களுக்கு ஏற்ப உடலை வளைத்தும், கால்களை மாற்றியும், கால் விரல்களால் கோலமிட்டும் ஆடுவதாகவும் புராணங்கள் கூறுகின்றன. ஆண்கள் ஆடும்போது தாண்டவம் என்றும், பெண்கள் ஆடும்போது லாஸ்யம் என்றும் அழைக்கப்படுகின்ற இந்த ஆடல்களை பரமேஸ்வரன் நவராத்திரி ஒன்பது நாட்களிலும் ஒன்பது வகையாக ஆடுகிறார். இவரது ஆட்டத்தின்போது வரையப்படும் கோலங்களிலிருந்து ஒவ்வொரு தேவியாக வெவ்வேறு பெயருடன் நவதுர்க்கையாக வெளிப்படுகிறாள் அம்பிகை. இனி ஒன்பது வகை தாண்டவங்களையும் அதற்குரிய தேவிகளையும் அறியலாம். நவராத்திரியின் முதல் நாள் : ஆனந்த தாண்டவம். வலது காலைத் தரையில் ஊன்றி இடது காலைத் தூக்கி ஆடும் கோலம். இதில் வரையப்பட்ட கோலம் ரிஷி மண்டல கோலம் எனப்படுகிறது. இதிலிருந்துதான் எழுத்துகள் வெளிப்பட்டன. நவதுர்க்கைகளில் சைலபுத்ரி அல்லது சைலஜா என்ற தேவி முதல் நாளுக்குரிய தேவியாகிறாள். இரண்டாம் நாள் : ஸந்தியா தாண்டவம். பகலும் மாலையும் கூடும்வேளையில் இடதுகால் விரலால் பரமசிவன் இடும் கோலத்தின் பெயர் ஸப்த ஒலிக்கோலம். இக்கோலத்திலிருந்து வெளிப்பட்ட கூஷ்மாண்டாதேவி இரண்டாள் நாள் வழிபாட்டுக்குரியவள். மூன்றாம் நாள் : திரிபுரதாண்டவம். பரமேஸ்வரன் இடது கால் பெருவிரலால் வரைந்த கோலம் அஷ்டவசுக் கோலம். இந்த மூன்றாம் நாளுக்குரிய தேவி ப்ரம்மச்சாரிணி என்ற பெயருடன் விளங்குகிறாள். நான்காம் நாள் : ஊர்த்துவ தாண்டவம். ஈஸ்வரன் திருவாலங்காடு என்ற இடத்தில் தனக்குச் சரியாக ஆடிய காளியை இந்தத் தாண்டவத்தின் மூலம்தான் தோற்கச் செய்தார். ஒரு காலைத் தரையில் ஊன்றி மற்றொரு காலை தோளுக்கு இணையாக உயர்த்தி ஆடும் நடனம். இந்த ஆட்டத்தில் வரையப்பட்ட பிரணவ ஒலிக்கோலத்திலிருந்து தோன்றிய சந்த்ரகாந்தா தேவி நான்காம் நாளுக்குரிய தேவியாவாள். ஐந்தாள் நாள் : புஜங்க தாண்டவம். பாற்கடலைக் கடைந்து அமிர்தம் பெற தேவர்களும் அசுரர்களும் முயற்சித்தபோது ஆலகால விஷம் வெளிப்பட்டது. அதன் வீரியத்தை தேவர்களால் தாங்கமுடியாமல் தவித்திருந்த நிலையில் ஈசன் அக்கொடிய நஞ்சை விழுங்கி நீலகண்டன், நஞ்சுண்டேஸ்வரன் என்ற பெயர்களைப் பெற்றார். அப்போது ஆடிய தாண்டவம் புஜங்க தாண்டவம் எனப்படும். ஈசன் புஜங்க தாண்டவக் கோலம் வரைந்தார். இதிலிருந்து ஸ்கந்தமாதா என்ற பெயருள்ள தேவி ஐந்தாவது நாளுக்குரிய தேவியாகத் தோன்றினாள். ஆறாவது நாள் : முனி தாண்டவம். சிறந்த சிவபக்தரான பதஞ்சலி முனிவர் மிருதங்கம் வாசித்தபோது, அதற்கேற்ப சிவன் ஆடி முனிவரை மகிழ்வுறச் செய்தார். அதனால் இதற்கு முனி தாண்டவமென்ற பெயர் ஏற்பட்டது. சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து வெளிப்பட்ட முனி தாண்டவக் கோலத்திலிருந்து தோன்றிய காத்யாயனி தேவி ஆறாவது நாளின் தேவியானாள். ஏழாவது நாள் : பூத தாண்டவம். பரமேஸ்வரன் யானை உருவில் வந்த அசுரனைக் கொன்று, அந்த யானைத் தோலைப் போர்த்திய உடலுடன், கைகளில் பல வகை ஆயுதங்களை ஏந்தி பூத தாண்டவக் கோலம் வரைந்தபடி ஆடுகிறார். இந்தக் கோலத்தில் உருவான தேவி ஏழாவது நாளுக்குரிய காலராத்ரி தேவி எனப்படுகிறாள். எட்டாவது நாள் : சுத்த தாண்டவம். தண்டகாரண்யத்தில் வாழ்ந்த முனிவர்கள், அசுரர்களினால் அல்லல் அடைந்து சிவனை வேண்ட, பரமசிவன் தீய சக்திகளை அழித்து ஆடிய தாண்டவம் சுத்த தாண்டவம் எனப்படும். இந்தக் கோலத்திலிருந்து உருவான தேவி மஹாகவுரி என்ற பெயர் கொண்டவள். நவராத்திரியின் எட்டாவது நாளில் வழிபட வேண்டிய தேவியாவாள். ஒன்பதாம் நாள் : சிருங்காரத் தாண்டவம். நவரசங்களையும் மிக அழகாக வெளிப்படுத்திய நவரசக் கோலத்திலிருந்து, சிவன் மகிழ சித்திதாத்திரி என்ற தேவி தோன்றினாள். இவளே ஒன்பதாம் நாள் வழிபாட்டுக்குரிய தேவியாவாள். நவராத்திரியில் ஒன்பது நாட்களிலும் முறைப்படி இந்த தேவிகளை வழிபட்டு பல நன்மைகளை அடையலாம். முதல் நாள் - ஆஸ்துமா சர்க்கரை வியாதி நிவாரணம்.இரண்டாம் நாள் - கடன் தொல்லையிலிருந்து விடுதலை.மூன்றாம் நாள் - வயிறு, வாய்வுத் தொலை நீங்கிவிடும்.நான்காம் நாள் - திருமணம் நடைபெறும்.ஐந்தாம் நாள் - அன்போடுகூடிய மகிழ்வான இல்லறம்.ஆறாம் நாள் - விஷமுறிவு, நோய் குணமடையும்.ஏழாம் நாள் - கண்கள் தொடர்பான நோய் தீரும்.எட்டாம் நாள் - நோயற்ற வலுவான தேகம் பெறலாம்.ஒன்பதாம் நாள் - வாழ்க்கைக்கு வேண்டிய நலன்கள் சேரும். ஸ்ரீராமருக்கு பரசுராமர் இந்த நவராத்திரி வழிபாட்டினைக் கூறியதாகவும், ஸ்ரீராமர் வழிபட்டு நலன்களடைந்ததாகவும் புராணம் கூறுகிறது. சும்பன், நிசும்பன், சண்டன், முண்டன், மஹிஷாசுரன் போன்ற தீயசக்தி கொண்ட அசுரர்களை வதம்செய்த அன்னை பராசக்தி, நாட்டைப் பிடித்துள்ள தீய சக்திகளையும், நம் மனதிற்குள் தாண்டவமாடும் தீய எண்ணங்களையும் அழித்து, துணைபுரிந்து, எல்லா நலன்களையும் அளிக்க வேண்டுமென்று அம்பிகையை இந்த ஒன்பது நாட்களும் வழிபடுவோம். மிகத் தீவிரமான பக்தி நெறியைக் கடைப்பிடிக்க இயலாதவர்களும் பிரார்த்தனை மூலம் நற்பயனைப் பெறமுடியும். அன்னை கருணையே உருவானவள். நல்லதை நாட்டி, தீயதை ஓட்டி நம்மைக் காத்தருள்வாள்.

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கக்கூடாது என்பது ஏன்?


அந்த காலத்தில், ஒரு ஊரை உருவாக்குவதற்கு முன், கோயிலை உருவாக்கினர். அதற்கு முன்,நீரோட்டம் பார்த்து, மண்ணின் தன்மை அறிந்து, சாலை  அமைத்து, அதன் பின்னரே கோயில் கட்டினர். இதனால் தான் கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கக்கூடாது என்பர். இதற்கு உதாரணம் தேட வேண்டுமென்றால், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மன்னாரு கோட்டைக்கு செல்லலாம். விருதுநகருக்கும், சாத்தூருக்கும் நடுவே, சிமென்ட் ஆலைக்கு நேர் கிழக்கே பயணித்தால், துலுக்கபட்டியை கடந்து, மன்னாரு கோட்டையை அடையலாம். இதன் அடையாளமாக தியாகராஜசுவாமி கோயில் என்ற சிவன் கோயில் உள்ளது. இது கி.பி. 10ம் நூற்றாண்டில், பிற்கால பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. இக்கோயிலையொட்டி, கட்டப்பட்ட கற்கோயில் தூர்ந்து போன நிலையில் பாழடைந்து கிடக்கிறது. சிலைகள் ஏதுமில்லை. தியாகராஜசுவாமி கோயிலின் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் போன்றவை, பிற்கால பாண்டியர்களால் கட்டப்பட்டிருந்தாலும், பின்னாளில், நாயக்க மன்னர்களின் ஆட்சிக்காலத்தில், இப்பகுதி பாளையக்காரர் ஒருவரால் புதுப்பிக்கப்பட்டது. அவரது சிலை கோயில் மண்டப தூணில் உள்ளது. கோயில் அருகில், கி.பி. 10ம் நூற்றாண்டில் வெட்டப்பட்ட கல்வெட்டு ஒன்றில் உள்ள வாசகம் நம்மை உறைய வைக்கும்.  சூரங்குடி நாட்டில் உள்ள ஆத்தனூர் என்ற ஊரில் வாழ்ந்த காயமுற் கிழவன் ஸ்ரீவேலன் சிவப்பு கழன் என்பவன், தன் எஜமானன் கலியுக கண்டாடி தான்மா செட்டி என்பவரின் நலனுக்காக, விரதம் இருந்து, தன் தலையை தானே வெட்டி பலியானான் என்ற செய்திதான் அது. இதன்மூலம், அந்த வேலையாளின் விசுவாசம் தெரிய வருகிறது. மன்னாருகோட்டை பகுதியில் கிடைத்த கருப்பு, சிவப்பு பானை ஓடுகளை கொண்டு, 2000 ஆண்டுகளுக்கு முன்பே, இங்கு மனிதர்கள் வாழ்ந்துள்ளனர் என்பதும் தெரிகிறது.

நவராத்திரியில் சர்வ சவுபாக்கியம் அருளும் ஒன்பது கர உலக நாயகி!




கிருதயுகத்திலும் திரேதாயுகத்திலும் வீட்டுக்கு வீடு பூஜிக்கப்பட்டு வந்த ஆயுர்தேவியை சித்தபுருஷர்கள் வழிபடும் அன்னையை நவராத்திரியில் வணங்குவது மிகவும் விசேஷம். ஒன்பது கரங்களைத் தாங்கிய பராசக்தியானவள் சித்தர்களையும், மஹரிஷிகளையும் தம் எண் கரங்களிலேந்தி, ஒன்பதாவது கரம் அபயஹஸ்தமாகக் கொண்டு அருள்பாலிக்கின்றாள். இந்த தேவி வழிபாடு மனித குலத்தின் அனைத்துத் துன்பங்களுக்கும் நிவாரணமளிக்கும் ஒரு முழுமையான வழிபாடாகும். ஆயுர்தேவியின் ஒன்பது கரங்களும் நவகிரக தத்துவங்களை விளக்குகின்றன. அன்னவாகனத்தைக் கொண்டவள் ஆயுர்தேவி. அவள் திருவடியில் இரண்டு சிம்மங்கள் பீடங்களாக அமரும் பேறு பெற்றுள்ளன. மனிதனுடைய தேகத்திலும் நவகிரகங்கள் ஆட்சி கொண்டுள்ளன. ஆத்மா இதயக்கமலத்தில் சர்வேஸ்வரனாக வீற்றிருக்கிறது. இதனால் உடலைக் கோயில் என்கிறோம். சித்திர குப்தர் இந்த தேவியின் ஆக்ஞைப்படி, கர்மவினைகளையும், ஆயுளையும் நிர்ணயிப்பவர். இவர் இறைவனின் அற்புதப் படைப்பு. ஒவ்வொரு மனிதனும் தினமும் இரவில் உறங்கும்முன் அன்றைய செயல்களை சித்திரகுப்தரிடம் சமர்ப்பித்து தவறுகளுக்கு வருந்தி, நற்செயலுக்கு நன்றி கூறி, பிறகே உறங்கவேண்டும். சித்திரகுப்தர் வெறும் கர்மக் கணக்கு எழுதுபவர் என நினைப்பது கூடாது. மனிதனின் ஆத்மவிசாரத்திற்கு வித்திடுபவர் இவரே. ஆயுர்தேவியின் திருவடிக்கருகே இவர் அமர்ந்திருக்கிறார். தலைப்பாகையுடன் கையில் ஏடு, எழுத்தாணியோடு. ஆயுர்தேவி தனது வலது முதல் கரத்தில் கயாசுர மகரிஷியைத் தாங்கியிருக்கிறாள். இந்த தேவியை உபாசனை செய்து உன்னத நிலையை அடைந்தவர் கயாசுர மகரிஷி. நவராத்திரியில் வரும் பிரதமை திதியில், இரண்டு வயது நிறைந்த பெண் குழந்தையை அலங்கரித்து, ஆபரணம் இட்டு, ஸ்ரீமாதேவியாக வரித்து வணங்கவேண்டும். இப்படிச் செய்வதால் தேவியின் அருட்தன்மை பன்மடங்காகப் பெருகும். ஸ்ரீமாதேவியை மனதால் தியானித்து பிரதமை திதியன்று ஏதேனும் ஒரு கோயிலில் மாக்கோலமிட்டு, மல்லிகைப் பூவை பெண்களுக்கு அளித்து வழிபட்டால் வேண்டும் வரம் பெறலாம். இமயமலைப் பகுதியிலும், மஹா அவதூத பாபா த்ரைலிங்க சுவாமி போன்ற அற்புத மகான்கள் தினமும் வழிபடுகின்ற பனிமலைக் குகையிலுள்ள தாராதேவி ஆலயத்திலும் ஆயுர்தேவிக்கு சன்னதி அமைந்துள்ளது என்றும்; குரு அருள் பெற்றவர்களால் மட்டுமே காண இயலும் என்றும் உபதேசித்திருக்கிறார் அகத்திய மகரிஷி. ஆயுர்தேவியை சாதாரணமாகவும், கலசம் வைத்தும் வழிபடலாம். நவராத்திரியில் கலச பூஜை மிகவும் விசேஷமானதாகும். வெள்ளிக் கலசம், வெண்கலக் கலசம், செப்புக் கலசம், மா அல்லது பலா மரத்திலான மரக்கலசம் ஆகியவையே பூஜைக்கு உகந்தவையாகும். கலசத்தை தூய்மைப்படுத்தி மஞ்சள், சந்தனம், குங்குமமிட்ட முழுத்தேங்காயை மேலே வைத்து, மாவிலை, பூ சேர்த்து, பூர்ணகும்பக் கலசமாய் அமைக்கவேண்டும். சுத்தமான நீர் அல்லது கங்காநீர், புனித நதி நீரை, மூன்று முறை கொதி வந்ததும் ஆறவைத்து கலசத்தில் ஊற்றவும். வெட்டிவேர், துளசி இவற்றுடன் சிறிதளவு (பொடி செய்த) கடுக்காய், ஏலக்காய், சுக்கு ஆகியவற்றை கலச நீரில் சேர்க்கவும். நுனி வாழை இலையை கிழக்கு நோக்கி வைத்து பச்சரிசி பரப்பி, அதில் வலது மோதிர விரலால் உ ஓம் என எழுதி பின் அரிசிமேல் கலசத்தை வைக்க வேண்டும். கலசத்திற்கு பட்டு அல்லாத மஞ்சள் வஸ்திரம் சாற்றலாம் (நார்ப்பட்டு). நைவேத்தியமாக பொன்நிற (மஞ்சள்) பதார்த்தங்கள், சர்க்கரைப்பொங்கல், குங்குமப்பூ சேர்த்த பால் கலந்த கேசரி (கேசரி பவுடர் தவிர்க்கவும்) மஞ்சள் நிற வாழைப்பழங்கள், மஞ்சள் பிள்ளையார் வைத்து விநாயக பூஜையுடன் தேவி பூஜை தொடங்குகிறது. இதுமுறைப்படி கொஞ்சம் விரிவாக இருப்பதால், எல்லாருமே செய்ய வேண்டுமென்கிற நோக்கத்தில் எளிய நாமாவளிகள் மட்டும் வழங்கப்பட்டுள்ளன. ஆயுர்தேவியை நினைத்து தியானிக்க : ஜயாம்ப ஜய ஸர்வாணி ஜயகௌரீ ஆயுர்தேவிநமோ நமஸ்தே சிவகாம ஸுந்தரிநமோ நமஸ்தே அருணாசலேச்வரிநமோ மஹாகௌரீ நமோ நமஸ்தே. ஆயுர்தேவியின் மூல மந்திரம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்சுபாயை தேவ சேனாயைஆயுர்தேவ்யை ஸ்வாஹா.- 24,36,64,108 முறை ஜெபிக்கவும். ஆயுர்தேவி காயத்ரி ஓம் மஹாதேவ்யை ச வித்மஹேபராசக்த்யை ச தீமஹிதந்தோ ஆயுர் தேவ்யை ப்ரசோதயாத். இந்த மந்திரத்தை 24,36,64,108 முறை ஜெபிக்கவும். ஆயுர்தேவியின் படம் கிடைத்தால் வைத்துப் பூஜிக்கவும். அல்லது தேவியை மனதில் நினைத்து மேற்கண்டவற்றைத் துதிக்கவும். அனைவரும் வழிபடலாம். அவரவர்களுக்குத் தெரிந்த சுலோகம் அல்லது பாடல் சொல்லியும் வழிபடலாம். இயன்றவர் அன்னதானம் செய்யலாம். ஒருவருக்கேனும் செய்வதும் தவறில்லை. அன்னதானத்தால் பலன் பன்மடங்காகிறது. ஆயுர்தேவியை எம்முறையில் பூஜித்தாலும் உண்மையான மனதுடன் வழிபட்டால் ஆயுர்தேவி மகிழ்ச்சியுடன் அருள்புரிகின்றாள். ஆயுர்தேவி நாமாவளிகள் ஓம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வர்யை நம:ஓம் ஸ்ரீ அன்னவாஹின்யை நம:ஓம் ஸ்ரீ அத்புதசாரித்ராயை நம:ஓம் ஸ்ரீ ஆதிதேவ்யை நம:ஓம் ஸ்ரீ ஆதிபராசக்த்யை நம:ஓம் ஸ்ரீ ஈஸ்வர்யை நம:ஓம் ஸ்ரீ ஏகாந்த பூஜிதாயை நம:ஓம் ஸ்ரீ ஓங்கார ரூபிண்யை நம:ஓம் ஸ்ரீ காலபைரவ்யை நம:ஓம் ஸ்ரீ கிருதயுக சித் சக்தியை நம:ஓம் ஸ்ரீ சக்ரவாஸின்யை நம:ஓம் ஸ்ரீ சித்புருஷ தத்வாயை நம:ஓம் ஸ்ரீ சிவசக்தி ஐக்யஸ்வரூபிண்யை நம:ஓம் ஸ்ரீ லலிதா பரமேஸ்வர்யை நம:ஓம் ஸ்ரீ திரிமூர்த்தி ஸ்வரூபிண்யை நம:ஓம் ஸ்ரீ நவகர ரூபிண்யை நம:ஓம் ஸ்ரீ நவமுத்ரா ஸமாராத்யாயை நம:ஓம் ஸ்ரீ பத்மாஸனஸ்தாயை நம:ஓம் ஸ்ரீ யோகாம்பிகாயை நம:ஓம் ஸ்ரீ துர்க்கா, லக்ஷ்மி, சரஸ்வதி நிஷேவிதாயை நம:ஓம் ஸ்ரீ விஷ்ணு ரூபிண்யை நம:ஓம் ஸ்ரீ வேதமந்திர, யந்த்ர சக்த்யை நம:ஓம் ஸ்ரீம் ஹ்ரீம், ஐம், அபாயை நம:ஓம் ஸ்ரீ சிவகுடும்பின்யை நம:ஓம் ஸ்ரீ அருணாசல மேருஸ்தாயை நம:ஓம் ஸ்ரீ கரபீட வரப்ரசாதின்யை நம:ஓம் ஸ்ரீ ஆயுர்தேவ்யை நம: ஆயுர்தேவியை அற்புதமான இந்த நாமாவளிகளால் மஞ்சள்நிற மலர்களைக் கொண்டு அர்ச்சித்திட, சர்வமங்கள சவுபாக்கியங்களும் கிட்டும்.

பணம் காசு செழிக்க 5 எளிய வழிகள்!



இறைவனை வழிபடும் ஒருமுறையை உபசாரம் என்பர். வீட்டில் இறைவனை வழிபடும் முறைகளில் பஞ்சோபசாரம் எளிமையானது. 

1. இறைவனின் திருவுருவ படங்களுக்குச் சந்தனம் இடுவது
2. இறைவனின் திருப்பெயரைச் சொல்லி, மலர் தூவி அர்ச்சிப்பது.
3. சாம்பிராணி, பத்தி தூபம் இடுவது.
4. நெய்தீபம், சூடம் தீபாராதனை செய்வது.
5. நைவேத்யமாக பிரசாதம் படைப்பது. 

இந்த ஐந்து முறைகளில் இறைவனை வழிபடுவதை பஞ்சோபசாரம் என்று சொல்வர். இந்த எளிய முறைகளில் ஏதேனும் ஒன்றையாவது தினமும் கடைபிடித்து, பயபக்தியோடு இறைவனை வணங்கி, நியாயமான வழியில் வாழ்பவர்கள் நிறைந்த செல்வமும், தீர்க்காயுளும், வாழ்வுக்குப் பின் பிறப்பற்ற நிலையும் அடைவர்.

அஷ்டலட்சுமிகளின் அருள் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?



குபேர சம்பத்துக்கள் மட்டுமின்றி... தனம், தான்யம், சந்தானம், சௌபாக்யம், தைர்யம், வைராக்யம், வெற்றி, மனச்சாந்தி அனைத்தையும் வழங்குபவள் மகாலட்சுமி. பொதுவாக, மகாலட்சுமி என்று சொன்னதுமே  அவள் உலகியல் செல்வங்களை மட்டும் அருளும் தேவி என்றுதான் அனைவரும் நினைக்கிறோம். காலம் காலமாக இதை நம்பியே மகாலட்சுமியை வழிபடுகிறோம். வசதி படைத்து வாழ்கின்ற செல்வந்தர்களை லட்சுமி கடாட்சம் பெற்றவர்கள் என்று பாராட்டுகிறோம். அதனால்தான் மகாலட்சுமியை பூஜிக்கும்போது காசு, பணம், பொன் மற்றும் வெள்ளியை வைத்து வழிபடுகிறோம். அப்படிச் செய்தால் செல்வம் வளரும் என்றும் ஒரு நம்பிக்கை பலருக்கும் உள்ளது. இது சரிதானா? மகாலட்சுமிக்கு செல்வத்தை அள்ளித் தரும் சக்தி மட்டும்தான் உண்டா? இதைத் தெரிந்துகொள்ள மகாலட்சுமி அவதாரம் செய்த சம்பவத்தை இங்கே பார்ப்போம். தேவி பாகவதம் 9-வது காண்டத்தில், மகாலட்சுமியின் தோற்றம் பற்றிய விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதிபராசக்தி தன்னிலிருந்து தன்னைப் போலவே சக்திகள் கொண்ட இரு தேவிகளை உருவாக்கினார். அவரது இட பாகத்திலிருந்து தோன்றியவள் ரமாதேவி; வல பாகத்திலிருந்து தோன்றியவள் ராதாதேவி. ரமா என்றாள் மிகவும் அழகானவள் என்று பொருள். ரமாதேவியை ஆதிபராசக்தி மகாலட்சுமி என்று பெயரிட்டு அழைத்து, அவளை மகாவிஷ்ணுவிடம் மனைவியாக ஒப்படைத்தார். மகாலட்சுமி அப்போது செல்வத்தின் நாயகியாகச் செயல்படுவாள் என்று தேவி பாகவதத்தில் குறிப்பிடப்படவில்லை. அவள் அன்பின் வடிவம் என்றும், விஷ்ணு பத்னி என்றும், விஷ்ணுவுக்கு சேவை செய்யும் தேவி என்றும்தான் தேவி பாகவதம் கூறுகிறது. மகாலட்சுமியின் தோற்றம் பற்றி ஸ்ரீமத் பாகவதத்தில் வேறு விதமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. துர்வாச மகரிஷியின் சாபத்தால் தேவேந்திரன் முதலான தேவர்கள் தங்கள் பதவிகளை இழந்தனர். தேவலோகச் செல்வங்கள் யாவும் மறைந்தன. தேவலோக ஐஸ்வர்யங்களுக்கு ஆதாரமான ஸ்வர்க்க லட்சுமியும் தேவலோகத்தைத் துறந்து மகாலட்சுமியுடன் ஐக்கியமானாள். பாதிக்கப்பட்ட தேவர்கள் அனைவரும் வைகுண்டம் சென்று, காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவைக் குறித்துத் தவமியற்றினார். தங்கள் இளமை, ஆயுள், இழந்த அனைத்துச் செல்வங்கள் ஆகியவற்றை மீட்டுத்தந்து, மீண்டும் தேவலோகம் உருவாக அருள்புரியுமாறு பிரார்த்தனை செய்தனர். காக்கும் கடவுளான விஷ்ணு மனமிரங்கி வரமளித்தார். நீங்கள் இழந்த செல்வங்களைப் பெற மகாலட்சுமி ஒரு அவதாரம் எடுப்பாள். அதற்கு வழிகோல நீங்கள் பாற்கடலைக் கடைய வேண்டும். அதிலே தோன்றும் அமிர்தம் உங்களுக்கு நிரந்தர இளமையையும், மரணமில்லாப் பெருவாழ்வையும் கொடுக்கும். பாற்கடலில் தோன்றும் மகாலட்சுமி, நீங்கள் இழந்த சௌபாக்யங்களையும், செல்வங்களையும் பெற அருள்புரிவாள் என்று மகாவிஷ்ணு தேவர்களுக்கு வாக்களித்து ஆசி கூறினார். பாற்கடலைக் கடைவது அத்தனை எளிதா? அதற்கும் மகாவிஷ்ணுவே வழி கூறினார். மந்தார மலையை மத்தாக்கி, வாசுகி எனும் பாம்பைக் கயிறாக்கி, தேவர்கள் ஒருபுறமும், அசுரர்கள் மறுபுறமும் கயிறை இழுத்துப் பாற்கடலைக் கடைந்தால், மகாலட்சுமி தோன்றி அருள்பாலிப்பாள் என்று உறுதி கூறினார். பாற்கடலைக் கடையும் பணி தொடங்கியது. முதலில், ஆலகால விஷம் தோன்றியது. அனைவரும் என்ன செய்வதென்று புரியாமல் திகைத்து சிவனாரை வேண்ட, சிவபெருமான் தோன்றி விஷத்தை அருந்தி, தேவர்களையும் அசுரர்களையும் காப்பாற்றினார். பாற்கடலைக் கடையும் பணி மீண்டும் தொடர்ந்தது. பாற்கடலிலிருந்து அபூர்வமான பல வஸ்துக்களும் ஜந்துக்களும் தோன்றின. முடிவில், ஒளிமயமான ரூப லாவண்யத்துடன் தேவி மகாலட்சுமி தோன்றினாள். தேவியைக் கண்டதுமே அனைத்து தேவர்களும் அசுரர்களும் அவள் அழகைக் கண்டு மயங்கி, அவளை அடைய வரும்பினார்கள். அப்போது மகாலட்சுமி, என்னை அடைய வேண்டும்  என்று விரும்பும் எவரையும் நான் தேர்ந்தெடுக்கப்போவதில்லை. என் தோறற்த்தைக் கண்டு எந்தச் சலனமும் இல்லாமல் இருக்கும் ஒருவரையே நான் சரணடைவேன் என்று கூறினாள். அதன்படி, எதனாலும் பாதிக்கப்படாமல் யோக நித்திரையில் இருந்த மகாவிஷ்ணுவின் பாதங்களைச் சரணடைந்தாள். பிரம்ம வைவர்த்த புராணத்தில் மகாலட்சுமியின் பெருமை விளக்கப்படுகிறது. அவளைப் பற்றி பிரம்மதேவனே தேவர்களுக்கு இப்படிக் கூறுகிறார்... எந்தெந்த இடங்களில் தர்மம், நியாயம், நீதி, நேர்மை, நல்லொழுக்கம் ஆகியவை நிலைத்திருக்கிறதோ, அங்கேல்லாம் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். எனவே, தேவர்கள் தர்மத்தையும், ஒழுக்கத்தையும் நிலைநாட்டி வாழ உறுதி பூண்டால், மகாலட்சுமி தேவலோகச் செல்வங்கள் அனைத்தையும் மீண்டும் அளிப்பாள் என்பது பிரம்மதேவனின் வாக்கு. மகாலட்சுமி திருப்தியையும், மனச்சாந்தியையும் வழங்கும். கருணைமிக்க தேவியாவாள். வெறும் பொருட்செல்வங்களை மட்டும் விரும்பி அவளை வழிபடுபவர்கள் ஏமாற்றம்தான் அடைவார்கள் என்று பிரம்மதேவன் தேவர்களிடம் கூறினார். மகாலட்சுமியின் பெருமையை அறிந்த தேவர்கள், அவளை பக்தியோடு சரணடைந்தார்கள். அப்போது, அவளிடமிருந்து வெளிப்பட்ட ஸ்வர்க்க வட்சுமி தேவலோகத்தை மீண்டும் தெய்வீகச் செல்வங்களோடு ஒளிவீசியது. தேவர்கள் அவள் துதிப் பாடி மகிழ்ந்தனர். திசைக் காவல் புரியும் அஷ்டதிக் பாலகர்களில் ஒருவர் குபேரன். அவர் வடதிசைக் காவலன். சிறந்த சிவபக்தரும்கூட! தேவலோகச் செல்வங்கள் அனைத்தையும் பாதுகாத்து, தகுதியானவர்களுக்குச் சரியான தருணத்தில் அந்தச் செல்வங்களை வழங்கும் அதிகாரம் அவருக்கு தரப்பட்டது. மகாலட்சுமி கடாட்சம் பெற்றவர்களுக்கு நவநிதியையும் வழங்குகிறார் குபேரன். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள் வழங்கும் செல்வங்கள் நவநிதியில் அடங்கும். மகாலட்சுமியின் அருட்பார்வை பெற்றவர்களுக்கு உலகியல் செல்வங்களோடு நிம்மதியும், சாந்தியும் கிடைக்க குபேரன் வழிசெய்கிறார். பேராசையும் அதர்மமும் மிக்க மனிதர்கள் சிலருக்கு உலகியல் செல்வங்கள் இருக்கலாம். அது, அவர்கள் பூர்வ ஜென்ம புண்ணியத்தின் பலனாக இருக்கலாம். ஆனால், சத்யமும் நேர்மையும் இல்லாதவர்கள் பெற்ற செல்வத்தால் அவர்களுக்கு நிம்மதி கிடைப்பதில்லை. மகாலட்சுமி என்பவள் உலகியல் செல்வத்தை மட்டும் தருபவள் அல்ல; மனித வாழ்க்கைக்குத் தேவையான எட்டுவகைச் செல்வங்களையும் அளிப்பவள். அஷ்டலட்சுமியாக அருள்பாலிக்கும் மகாலட்சுமியின் பல்வேறு பரிமாணங்களையும், அவள் வழங்கும் செல்வங்களையும் தெரிந்துகொள்வோமா? ஆதி லட்சுமி: இவளுக்கு ரமணா என்ற பெயரும் உண்டு. மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் தரக்கூடியவள் இவள். தான்ய லட்சுமி: உயிர் வாழும் ஜந்துக்கள் அனைத்துக்கும் உணவு அவசியம். அந்த உணவை வழங்கும் பூமித்தாய்தான் இவள். விவசாயத்தை வளப்படுத்தும் இவளே, பசித்தவனுக்கு உணவு கிடைக்கச் செய்யும் கருணைத் தாயாகவும் திகழ்கிறாள். தனலட்சுமி: உணவுக்கு அடுத்தபடியாக மனித வாழ்க்கைக்குத் தேவையானது உடை, இருப்பிடம். இவற்றை அடைய வழி செய்வது தனம் எனப்படுகிறது. அந்த தனத்தைத் தந்தருளுபவள் இவள். சந்தான லட்சுமி: நல்ல குடும்பமும் நல்ல குழந்தைகளும் ஒருவனது வாழ்க்கையை வளமாக்கும் செல்வங்கள். எத்தனை பொருட்செல்வம் இருந்தாலும், குழந்தைச் செல்வம் இல்லையே என்று ஏங்கித் தவிப்பவர்கள் எத்தனையோ பேர் உண்டு. அந்த ஏக்கத்தைத் தீர்த்து, குழந்தைச் செல்வத்தை அருளுபவள்  இவள். கஜ லட்சுமி: லட்சுமிக்கு க்ஷீராப்தி தனயை என்ற பெயருண்டு. பாற்கடலில் தோன்றியவள் என்பது இதன் பொருள். பாற்கடலில் மகாலட்சுமி தோன்றியபோது இரண்டு யானைகள் தோன்றி, தங்கள் தும்பிக்கையில் தாங்கிய பொற்குடத்தால் தேவிக்குப் பாலாபிஷேகம் செய்தன. இருபுறங்களிலும் யானைகள் நின்றதால், அவள் கஜலட்சுமி எனப்பட்டாள். இன்றும் ஆலயங்களில் கர்ப்பக்கிரஹ வாயிலிலும், வீடுகளின் வாசற்படி நிலையிலும் கஜலட்சுமி சிற்பம் வைக்கப்படுவதைக் காணலாம். மனத் தூய்மையையும், மன அமைதியையும் தருபவள் இவள். வித்யாலட்சுமி: அறிவாற்றல் இல்லையென்றால், எத்தனைச் செல்வங்கள் இருந்தாலும் பயனிருக்காது. அறிவாற்றல் வளர ஆதாரமாக விளங்குபவள் வித்யாலட்சுமி. உயரிய ஞானத்தை அடைய வழி செய்பவளும் இவளே! இவள் சரஸ்வதியின் அம்சம். விஜய  லட்சுமி: கடுமையான முயற்சியும் உழைப்பும் நிச்சயமாக வெற்றி தரும். அந்த உழைப்புக்குரிய சக்தியைத் தந்து வெற்றியோடு வாழ அருள்புரிபவள் விஜயலட்சுமி. தைரிய லட்சுமி: கல்வியும் செல்வமும் இருந்துவிட்டால் போதுமா? தர்மநெறியில் நினைத்ததைச் செய்து முடிக்க மனோபலமும், உடல் பலமும், வைராக்யமும், தைரியமும் அவசியம் அல்லவா? அதைத் தருள்கின்றவள் தைரியலட்சுமி. அஷ்ட லட்சுமிகளில் யாருடைய அனுக்ரஹம் மிகவும் முக்கியமானது என்பதை விளக்க ஒரு கதை உண்டு. பணக்காரனான ஒருவனது வாழ்வில் திடீரெனத் துன்பங்கள் சூழ ஆரம்பித்தன. கிரகங்கள் பலமின்றி, அவன் கெட்ட காலம் நடந்துக்கொண்டிருந்தது. பணம், வீடு, வாசல், குடும்பம் ஆகியவற்றை அவன் ஒவ்வொன்றாய் இழக்க நேரிட்டது. நொந்துபோன அவன், தனது பிரமாண்டமான வீட்டின் வெளிவாசல் அருகே சிறிது நேரம் உட்கார்ந்தான். ஒவ்வொரு லட்சுமியாக அவன் வீட்டைவிட்டு வெளியேறிக்கொண்டிருந்தனர். தான்ய தான்ய வட்சுமி வெளியேறினாள். வீட்டில் சாப்பிட ஏதுமில்லாமல் ஆயிற்று. அதன்பின், தனலட்சுமி வெளியேறினாள். வீட்டில் உள்ள பணமும், பொன்னும், பொருளும் போயின. சந்தானலட்சுமி வெளியேறியயதும் அவன் மனைவி மக்கள் அவனைத் தனியே விட்டுச் சென்றனர். தொடர்ந்து கஜலட்சுமி, விஜயலட்சுமி, ஆதிலட்சுமி ஆகியோரும் வெளியேறினர். அவர்கள் தன்னை விட்டுப் போவதை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான் அந்தப் பணக்காரன். கடைசியாக தைரியலட்சுமி அவனை விட்டுக் கிளம்ப முற்பட்டாள். அவள் வெளியேறும்போது அவன் ஓடிச்சென்று அவள் பாதங்களில் விழுந்து, தாயே! தயவுசெய்து நீங்கள் மட்டும் என்னை விட்டுப் போய்விடாதீர்கள்! என்று கதறினான். அவனது வேண்டுகோளுக்கு இணங்க தைரியலட்சுமி வெளியேறாமல் மீண்டும் அவன் வீட்டுக்குள் சென்றாள். அதன்பின், வெளியே சென்ற மற்ற லட்சுமிகளும் ஒவ்வொருவராக வீட்டுக்குள் வந்தனர். இழந்த செல்வங்கள் அனைத்தையும் மீண்டும் பெற்றான் பணக்காரன். தர்மத்தைக் கடைபிடித்து ஒழுக்கத்துடன் வாழ்பவர்கள் வீட்டில் அஷ்டலட்சுமிகளும் வீற்றிருந்து அருள்புரிபவார்கள் என்பது சாஸ்திரம் கூறும் உண்மை!

காஞ்சி காமாட்சி விஸ்வரூப தரிசனம்: கோயிலில் நடந்த அதிசய சம்பவம்!





காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் பிரம்மோற்ஸவம் நடந்து வருகிறது. விழாவின் கடைசிநாளன்று, அம்பாள் விஸ்வரூப காட்சி தருவாள். இதையொட்டி, அக்கோயிலில் நடந்த அதிசய சம்பவம் ஒன்றைக் கேளுங்கள்.காஞ்சி மகாப்பெரியவர் பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்த போது, ஒரு பெண் பெரியவரிடம் வந்து, சுவாமி! என் மகளுக்கு திருமணம். ஆனால், திருமாங்கல்யம் வாங்கக்கூட வசதியில்லை, என்று சொல்லி அழுதார்.பெரியவர் அந்தப் பெண்ணிடம்,நீ போய் காமாட்சியம்மனை தரிசனம் செய்துவிட்டு இங்கே வா, என்றார்.அந்தப் பெண்ணும் கோயிலுக்குச் சென்று அம்பாளைத் தரிசித்து விட்டு, பிரகார வலம் வரும்போது, கீழே ஒரு திருமாங்கல்யம் கிடப்பதைக் கண்டார். மகிழ்ச்சியுடன் அதை எடுத்துக் கொண்டு மடத்திற்கு வந்து பெரியவரிடம் காட்டி, அது தனக்கு கிடைத்த விதம் பற்றி சொன்னார்.பெரியவர், அதை என் முன்னால் வைத்துவிடு, உனக்கு வேறு மாங்கல்யம் தருகிறேன், என்றார். அந்த சமயத்தில் ஒரு பக்தர் வந்தார். அவர் இரண்டு திருமாங்கல்யங்களை பெரியவர் முன் வைத்தார்.பெரியவா! என் மகளுக்கு திருமணம். திருமாங்கல்யத்தை உங்களிடம் கொடுத்து ஆசி பெற வந்தேன், என்றார்.அது சரி! உன் மகளுக்கு ஒரு மாங்கல்யம் தானே தேவை. இன்னொன்று எதற்கு? என்றார்.அது இங்கு வரும் ஏழை பக்தர்களில் யாராவது ஒருவருக்கு உங்கள் மூலமாக கொடுக்க! என்றார் பக்தர்.அப்படியா! என்ற பெரியவர், கூடுதலாக இருந்த மாங்கல்யத்தை அந்தப் பெண்ணிடம் கொடுத்து, உன் மகள் கல்யாணத்தை சிறப்பாக நடத்து, என்றார்.அவர்கள் சென்ற சிறிது நேரத்திற்குள் இன்னொரு பெண் ஓடி வந்தார். சுவாமி! நான் காமாட்சியம்மன் கோயிலுக்குச் சென்றிருந்தேன். என் மாங்கல்யம் எங்கோ தவறி விழுந்து விட்டது. ஐயோ! கோயிலுக்கு வந்த இடத்தில் இப்படி ஆகி விட்டதே! தாங்கள் தான் என்னை சுமங்கலியாக இருக்க வாழ்த்த வேண்டும்! என்று அழுதார்.அழாதே! இதோ! நீ தொலைத்தது இந்த திருமாங்கல்யம் தானா சொல்! என்று ஏழைப்பெண்மணி தன்னிடம் ஒப்படைத்ததைக் காட்டினார். இதுதான்! என்று ஆனந்தமாக வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டார் அந்தப் பெண்.மூன்று பேருக்கு ஒரே நேரத்தில் மாங்கல்ய பாக்கியம் அருளியவள் காஞ்சி காமாட்சி. குருவருளும், திருவருளும் ஒரு சேர கிடைக்கும் இடம் காஞ்சி என்றால் அது மிகையல்ல!