Saturday 14 October 2017

திடீர் பண வரவை தரும் அற்புதமான மந்திரம்


சிலர் கடுமையாக உழைத்து சிறுக சிறுக பணத்தை சேமித்து வைத்திருப்பார்கள். தன் நண்பர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று அவருக்கு தன் பணத்தை கடனாக கொத்துருப்பார்கள் ஆனால் அந்த நண்பனோ வாங்கிய கடனை கொடுக்க இதோ அதோ என இழுத்தபடிப்பார். சிலர் சீட்டு கம்பெனியிலும் பணத்தை ஏமாறுவதுண்டு. இது போன்ற ஏமார்ந்த பணத்தை திரும்ப பெறவும், அதிஷ்டத்தால் திடீர் பணவரவை பெறவும் ஒரு அற்புதமான மந்திரம் இருக்கிறது. வாருங்கள் அது பற்றி பார்ப்போம்.
மந்திரம்:

“ஓம் ரீங் வசி வசி
தனம் பணம் தினம் தினம்”
இந்த மந்திரத்தை செய்வாய் கிழமைகளில் மாலை 3.30 – 4.30 மணிக்குள் வடக்கு திசை பார்த்து அமர்ந்து, இறைவா என் பணக்கஷ்டம் அனைத்தும் விரைவில் தீர் வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு மந்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும்

Thursday 12 October 2017

உணவில் சில ரகசியங்கள்

• சனிக்கிழமையன்று நவதானிய அடைதோசை நல்லெண்ணெய் விட்டுச்சாப்பிட்டால் நவக்கிரகங்கள் திருப்தியடையும். இதனால், அஷ்டமச்சனி,கண்டகச்சனி, ஏழரைச்சனி முதலியவற்றின் தாக்கம் குறையும்.

•தினமும் ஏதாவது மந்திர ஜபம் செய்துவிட்டு நமது தினசரிக் கடமைகளைத் துவக்க வேண்டும். அப்படி மந்திர ஜபம் முடிந்த வுடனே ஒரு தம்ளர் இளநீர்அருந்தினால் நாம் ஜபித்த மந்திர அலைகள் நம் உடலுக்கு உள்ளேயே பதிவாகிவிடும்.

• கடலை எண்ணெய் குடும்பத்தில் கலகத்தை உண்டாக்கும். எனவே, குடும்பத்தில் கடலை எண்ணெயைப் பயன்படுத்துவதை பெருமளவு குறைப்பது நல்லது. ஏனெனில், இந்தக் கலகம் குடும்பங்கிளிடையே பரவி, நாடு முழுக்க கலகத்தை உருவாக்கும்.

• பாமாயில் (பனை மர எண்ணெய்) சமையலில் கலந்து சாப்பிட்டால் துர்தேவதைகள் உடலுக்குள் புகுந்துவிடும். தொடர்ந்து பாமாயில் பயன்படுத்தினால், நாளாவட்டத்தில் நமது கை கால்களை முடக்கிவிடும்.

• தேங்காய் தொடர்ந்து உண்டால் ( இளமுறி எனப்படும் இளம் தேங்காய்) தாது விளையும்.ஈரலுக்கு வலிமை கொடுக்கும். குடலிலும், வாயிலும் உள்ள புண்களை ஆற்றும்.

• நம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு,வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.

• வீடு மற்றும் தொழிற்சாலைகளில் மற்றவர்கள் விட்ட பெருமூச்சுநீங்க வேண்டுமானால் சாம்பிராணிப்புகை அல்லது 60 வகை மூலிகை சேர்க்கையால் செய்யப்பட்ட மூலிகைப்புகை போடுவது நல்லது.

•காலில் அணியும் மிஞ்சி பெண்ணின் காமத்தைக் குறைக்கும்.

*மூக்குத்தியும் மோதிரமும் சுவாசக்காற்றிலுள்ள விஷகலையை நீக்கும்.

• கோதுமை உணவு சாப்பிடுபவர்கள் வெண்ணெய் அல்லது நெய் சேர்த்துக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் கோதுமை உணவினால்தீமையே (கண் எரிச்சல், மலச்சிக்கல்) ஏற்படும்.

• கறுப்புத் துணிப் பக்கம் காகம் வருவதில்லை.வெள்ளைத் துணி மற்றும் நீல வெளிச்சத்திற்கு கொசுக்கள் வருவதில்லை. தூய ஆடைகள் பக்கம் கொசு அண்டுவதில்லை.

•புதன் கிழமைகளில் நீங்கள் எவருக்கும் ஆடை, ஆபரணங்கள்,பொன்,பொன் ஆபரணங்கள் இரவலாகக் கூடத் தரக்கூடாது.அப்படித் தந்தால்,உங்களது செல்வ வளம் உங்களை விட்டு நீங்கத் துவங்கும். ஆனால்,பிறரிடமிருந்து வாங்கலாம்.அப்படி வாங்கினால், நீங்கள் செல்வச் செழிப்பை அடைவீர்கள்.

• வெள்ளி,செவ்வாய்க் கிழமைகளில் யாருக்கேனும் நீங்கள் நெல், அரிசி, கோதுமை மற்றும் உணவுப்பொருட்கள், பதார்த்தங்கள் தரக்கூடாது.பணம், முன்ஜாமீன் கொடுக்கக் கூடாது. அப்படிக்கொடுத்தால்,வாங்கியவர் வளமடைவார்.

. கார்த்திகை, மகம், உத்திரம், சித்திரை, மூலம், ரேவதி நட்சத்திரங்களில் எவருக்கும் எதையும் கொடுக்கவும் வாங்கவும்கூடாது. அப்படிச்செய்தால் வறுமை உங்களை வந்தடையும் என்பது ஐதீகம்.

•வேப்பமரத்தின் கீழ் உட்கார்ந்தால் அந்தக் காற்றில் அயோடின் இருக்கிறது. அது நமது உடலை சுத்தப்படுத்துகிறது. அரச மரத்தை எடுத்துக்கொண்டால் அதனுடைய குச்சி இருக்கிறதல்லவா சுள்ளி,அதில் மின் காந்த அலைகளே இருக்கிறது என்று ஆராய்ச்சியில்கண்டுபிடித்திருக்கிறார்கள். அதனால்தான் அரச மரத்தை சுற்றிவந்தால்ஆண்மைத் திறன் வளரும். கர்ப்பப்பை பலவீனமாக இருந்தால் பலமடையும். ஏனென்றால் அந்தக் காற்றிற்கு அவ்வளவு சக்தி இருக்கிறது.

பயனுள்ள தகவல். அனைவருக்கும் பகிருங்கள்

Friday 6 October 2017

ஹோமங்களில் போடும் பொருட்களின் பயன்கள்!





நாம் நடத்தும் ஹோமங்களில் பலவித சமித்துக்களை அக்னியில் போட்டு ஆகுதி செய்கிறோம்.
அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதப் பலன் உண்டு.
சமித்து என்பது ஹோமகுண்டத்தில் சேர்க்கப்படும் குச்சிகள்.
ஒவ்வொரு சமித்து குச்சிக்கும் ஒவ்வொரு வேண்டுதல்களும் பலன்களும் உள்ளன.
வில்வம் : சிவனுக்கும் மஹாலட்சுமிக்கும் பிடித்தமானது
துளசி சமித்து : நாராயணனுக்குப் பிடித்தது
அத்தி சமித்து : சுக்கிரனுக்குப் பிடித்தது
நாயுருவி சமித்து : புதனுக்குப் பிடித்தது
பலாமர சமித்து : சந்திரனுக்குப் பிடித்தது
அரசரமர சமித்து : குருவிற்குப் பிடித்தது
வன்னிமர சமித்து : சனீஸ்வரனுக்குப் பிடித்தது
அருகம் புல் : விநாயகருக்கும்,ராகுவுக்கும் பிடித்தது
மாமர சமித்து : சர்வமங்களங்களையும் சித்திக்கும்
பாலுள்ள மரத்தின் சமித்துக்கள் : வியாதி நாசினி
தாமரை புஷ்பம் : லஷ்மிக்கும் சரஸ்வதிக்கும் பிடித்தமானது
மாதுளை மரம் : அழகான் வடிவமும்,வசீகரமும் கிடைக்கும்.
சமித்து குச்சிகளும் பலன்களும்:
அத்திக் குச்சி : மக்கட்பேறு.
நாயுருவி குச்சி : மகாலட்சுமி கடாட்சம்
எருக்கன் குச்சி : எதிரிகள் இல்லாத நிலை
அரசங் குச்சி : அரசாங்க நன்மை
கருங்காலிக் கட்டை: ஏவல் ,பில்லி ,சூனியம் அகலும் .
வன்னிக் குச்சி : கிரகக் கோளாறுகள் நீங்கிவிடும்.
புரசங் குச்சி : குழந்தைகளின் கல்வி வளர்ச்சி
வில்வக் குச்சி : செல்வம் சேரும்
அருகம்புல் : விஷபயம் நீங்கும்.
ஆலங் குச்சி :புகழைச் சேர்க்கும்.
நொச்சி : காரியத்தடை விலகும்.
வில்வம் : வில்வ சமித்தினைக் கொண்டு ஹோமம் செய்தால் ராஜ யோகம் கிட்டும்.
வில்வப்பழ ஹோமத்தால் சக்தி செல்வங்களையும் பெறலாம். சிவசக்தி சம்பந்தமான சண்டி ஹோமம் போன்ற யாகங்களில் வில்வம் சமித்தாகப் பயன்படுத்தினால் பலன்கள் நிறைய உண்டு.
துளசி : துளசி சமித்தினால் ஹோமம் செய்தால் நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி நடைபெறும். எண்ணிய காரியம் கைகூடும்.
சோமவல்லிக் கொடி : கொடிக்கள்ளி எனப்படும் இதன் ரசத்தைப் பிழிந்து ’சோமாம்ருதம்’ ம்ருத்யுஜய மந்திரத்தினால் ஹோமம் செய்தால் சகல நோய்களும் நீங்கி, தேகத்தில் அமிர்தம் உண்டாகி பிரம்மதேஜஸ் பெறலாம். கொடியை கணுக்கள் தோறும் ஒடித்து பாலில் தோய்த்து சூர்ய மந்திரம் கூறி அக்னியிடம் இட வேண்டும். இதனால் காச நோய் அகலும்.
பலாசு சமித்து : இது சந்திர கிரக சமித்தாகும். இதனால் சந்திரகிரக பிரீதியாகும். பலாசு புஷ்பத்தால் எல்லா இஷ்ட காரியங்களும், பலாசு ரஸத்தால் ஞான விருத்தியும், சிறந்த புத்தியும் பெறலாம். பலாசு குச்சிகளை அக்னி ஹோத்திரம் செ¢ய்து அதனால் ஸ்நாபானம் செய்யின் ப்ரம்ம ஞானம் அடைந்து பரப்பிரம்ம சொரூபம் அடையலாம்.
அரசு சமித்து : அரசு சமித்து குரு கிரகத்தின் சமித்தாகும். அரச மரத்தின் சமித்தால் தலைமைப் பதவி வரும். போரில் ஜெயம் அடைந்து அரச தன்மை கிடைக்கும்.
வெள்ளை எருக்கு : இது சூரிய கிரகத்தின் சமித்தாகும். இம்மூலிகை சர்வசக்தி பொருந்தியது. வசியம், மோகனம் ஆகிய அஷ்டாமித்துகளையும் அடையலாம். இச்சமித்து களால் ராஜ வசியம், ஸ்திரீ வசியம், மிருக வசியம், சர்ப்ப வசியம், லோக வசியம், சத்ரு வசியம், தேவ வசியம் ஆக சர்வ வசியங்களையும் அடையலாம். எடுத்த வேலை இனிதே முடியும்.
செம்மர சமித்து : இது அங்காரக கிரக சமித்தாகும். இதனால் ரண ரோகங்கள் நீங்கும். தைரியம் பெருகும்
நாயுருவி சமித்து : இது புது கிரக சமித்தாகும். இதனால் லட்சுமி சுடா¢ட்சம் ஏற்படும். சுதர்சன ஹோமத்திற்கு இதுவே சிறந்தது.
அத்தி சமித்து : இது சுக்கிர கிரகத்தின் சமித்தாகும். பித்ரு ப்ரீதி பெற்று விரும்பிய பொருள் கைகூடும். பில்லி, சூனியம், பிசாசு பயங்களிலிருந்து விடுவித்து சத்ருக்களை வெல்லும். பைத்தியமும் மேக ரோகங்களும் அகலும். வாக்கு சித்தியும் ஏற்படும். பசு, யானை, குதிரை நோய் நீங்கும்.
வன்னி சமித்து : வன்னி சமித்து சனிக் கிரகத்தின் சமித்தாகும். இதில் அக்னிப் பகவான் இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. வன்னி சமித்து யாக பஸ்மாவைத் தரித்தால் அது நெற்றியில் எழுதியிருக்கும் யம சம்பந்தமான எழுத்தைத் தொலைத்து விடும். இந்த சமித்து பஸ்பம் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும் மூவுலகினையும் மூன்று அக்னிகளையும் முக்குணங்களையும் குறிப்பதாக இருக்கிறது. சகல தெய்வ, தேவாதி களும் இச்சமித்தால் மகிழ்ச்சி அடைகிறார்கள். பூகம்பங்களால் உண்டாகிற பயங்கள் நீங்கும். சகல தோஷங் களும் நிவர்த்தியாகும்.
தர்ப்பை சமித்து : கேது பகவானுக்கு தர்ப்பை சமித்து மிகவும் பிடித்தமானதாகும். இது ஞான விருத்தியைத் தரும்.
அருகம்புல் : இது ராகு பகவானுக்குப் பிடித்தமானது. இதனால் பூர்வ ஜென்ம வினைகளும் சர்வ இடையூறுகளும் நீங்கி காரியம் சித்தியடையும். கீர்த்தியும், புகழும் பெறலாம். அறிவும், அழகும், வசீகரமும் உண்டாகும். கணபதி ஹோமத்தில் இதைப் பயன்படுத்துவார்கள்.
கரும்பு : கரும்புத் துண்டுகளையாவது அல்லது கருப்பஞ்சாறையாவது கொண்டு ஹோமம் செய்தால் வரனுக்கு விரும்பிய கன்னிகையும், கன்னிகைக்கு விரும்பிய வரனும் கிடைப்பர். இதையும் கணபதி ஹோமத்தில் பயன்படுத்துவார்கள்.
ஆலசமித்து : இது ம்ருத்யஞ்சய வேள்வியின் முக்கிய சமித்து. யமனுக்குப் பிடித்தமானது. இதனால் நோய்கள் நீங்கும். ஆயுள் நீடிக்கும்.
எள் : ஹோமத்தில் எள் போட்டு யாகம் செய்ய பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கும். தீராத கடன் தொல்லை தீரும்.
புங்க மரம் : இதன் சமித்து வெற்றியைத் தரும்.
இலந்தை : இந்த சமித்தினால் ஹோமம் செய்ய குடும்பம் இனிது வாழ வழி உண்டாகும்.
தேவதாரு : இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் சகல தெய்வங்களும் வேண்டிய வரங்களைக் கொடுப்பார்கள்.
வல்லாரைக் கொடி : இதை ஆகுதி செய்தால் கல்வி சிறப்பாக வரும். ஞாபக சக்தி அதிகரிக்கும் சரஸ்வதி கடாட்சமும் ஏற்படுத்தும்.
சந்தன மரம் : இதன் சமித்தால் ஹேமம் செய்தால் மூதேவி முதலிய சகல பீடைகளையும் விலக்கி லட்சுமி கடாட்சம் ஏற்படும். சகல சம்பத்துடன் வாழ்வார்கள்.
வேங்கை மரம் : இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் பில்லி சூன்யம், ஏவல், பிசாசு, பயம் ஓழியும்.
மகிழம்பூ : இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் சகல துக்கங்களும் நிவர்த்தியடைந்து சிக்கல்கள் அனைத்தும் தீரும். மனம் அமைதி பெறும்.
பூவரசு : இந்த சமித்து பூலோக அரச மரம் என்று வழங்கப்படுகிறது. அரசு சமித்து இல்லாத குறையை இந்த சமித் அரசு சமித்தினால் செய்யப்படும் ஹோமம் தரும் பலன் இதற்கும் உண்டு.
நவதானியங்கள் : அந்தந்த கிரகங்களுக்குரிய தானியத்தால் நவக்கிரக ஹோமம் செய்தால் கிரக தோஷங்கள் விலகும். சுபிட்சம் நிலவும்.
மஞ்சள் : முழு மஞ்சள் ஸ்ரீ வித்யா ஹோமத்துக்குச் சிறந்தது. சகல வியாதிகளை நீக்கும். அதோடு கல்வியும், செல்வமும் தரும்.

திருப்பதி ஏழுமலையான் தரிசன முறை







திருமலை திருப்பதியில் இறைவன் சிலை வடிவமாக நின்ற திருக்கோலத்தில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள் செய்கிறார்.
நமது பாரத தேசத்தில் உள்ள எட்டு சுயம்பு மூர்த்த திருத்தலங்களில் ‘வேங்கடாத்ரி’ எனப்படும் திருமலை திருப்பதியும் ஒன்றாகும்.
இங்கு இறைவன் சிலை வடிவமாக நின்ற திருக்கோலத்தில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள் செய்கிறார்.
‘திருப்பதிக்கு இணையான க்ஷேத்திரம் வேறொன்று இல்லை..’
என்பது பிரபல சொல்வழக்காக இருந்து வருகிறது.
பொதுவாக, திருமலை செல்பவர்கள் சென்றவுடன், திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக வரிசையில் நின்று கொள்வதும், அவரை தரிசித்துவிட்டு உடனடியாக வீடு திரும்புவதும் சாஸ்திர சம்மதமானதாக கருதப்படவில்லை.
அதற்காக ஒரு தனிப்பட்ட மரபு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அவற்றை பற்றிய குறிப்பை இங்கே காணலாம்.
1. முதலில் கீழ் திருப்பதியில் வீற்றிருக்கும் கோவிந்தராஜ பெருமாளை வணங்க வேண்டும்.
2. அதன் பிறகு, அலர்மேல்மங்காபுரம் சென்று பத்மாவதி தாயாரை தரிசித்து மனமும், இதயமும் ஒருங்கே இணைத்து வணங்க வேண்டும்.
3. அதன் பிறகு, திருமலையின் மீது ஏறிய பிறகு ‘வராக தீர்த்த கரையில்’ கோவில் கொண்டிருக்கும் ‘வராக மூர்த்தியை’ தரிசித்து வணங்க வேண்டும்.
4. அதற்கு பிறகுதான் மலையப்பன் என்று சொல்லப்படும், ஏழுமலை வாசனை, கோவிந்தனை, திருவேங்கடவனை பூஜிக்க வேண்டும்... உளமாற சேவிக்க வேண்டும்..
மேற்கண்ட வழிமுறையானது ராமானுஜர் காலத்தில் அவரால் தொடங்கப்பட்டு, அதன் பிறகு வந்த அனைத்து ஆச்சார்யர்களும் கடைபிடித்து வந்த சம்பிரதாயம் ஆகும்.